இங்கு குறிப்பிடப்பட்டுள்ள எண்கள், தர வரிசைகள்& புள்ளி விவரங்கள் அனைத்தும் 2018ம் ஆண்டிற்கான புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உள்ளது.தேர்வுக்கு செல்வதற்குமுன் அப்போதைய நிலவரத்தை (current affairs) படித்துக் கொள்ளவது நன்மை பயக்கும்.
- இந்தியாவின் பூகோள ரீதியாக தமிழ்நாடு எத்தனையாவது பெரிய மாநிலம்?
பதினோராவது
- மக்கள் தொகை அடிப்படையில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தில் உள்ளது?
6வது இடம்
- இந்திய அளவில் பொருளாதாரத்தில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தில் உள்ளது ?
மூன்றாவது
- தமிழ்நாடு மொத்த உள்நாட்டு உற்பத்தி பங்களிப்பு எத்தனாவது இடத்தில் உள்ளது?
இரண்டாவது இடம்
- தமிழ்நாடு தலா வருமான முதலீடு ,நேரடி அன்னிய முதலீடு மற்றும் தொழில்துறை உற்பத்தி ஆகியவற்றில் எத்தனாவது இடத்தில் உள்ளது ?
மூன்றாவது இடம்
- மனித வளர்ச்சி குறியீட்டில் தமிழகம் எத்தனாவது இடத்தில் உள்ளது?
மூன்றாவது இடம்
- தமிழகம் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை எத்தனை சதவீத பங்களிப்புடன் முதலிடம் வகிக்கிறது?
17%
- தமழகம் நிதி ஆயோக் அறிக்கையின்படி சுகாதார குறியீட்டில் எத்தனையாவது இடம் வகிக்கிறது?
3வது இடம்
- தமிழகத்தில் பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம் எவ்வளவு?
14
- தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தை இறப்பு விகிதம் 2015ல் எவ்வளவு ஆக குறைந்துள்ளது?
20
- தமிழகம் நீர் வளத்தில் எத்தனை சதவீதம் கொண்டுள்ளது?
3 சதவீதம்
- தமிழகம் நிலப் பரப்பளவில் எத்தனை சதவீதம் கொண்டுள்ளது ?
4 சதவீதம்
- தமிழ்நாட்டில் எத்தனை ஆறுகள் உள்ளன ?
17
- தமிழகத்தில் எந்த பாசனம் அதிகளவில் உள்ளது கிணற்றுப்பாசனம்?
56%
- மாங்கனீசு சுரங்கம் தமிழகத்தில் எங்கு உள்ளது?
சேலம்
- பாக்ஸைட் சுரங்கம் தமிழகத்தில் எங்கு உள்ளது?
ஏற்காடு
- கஞ்ச மலையில் அமைந்துள்ள சுரங்கம் எது?
இரும்புத்தாது
- இந்தியாவிலேயே மதுரை மாவட்டத்தில் உள்ள கரடிக்குட்டம் என்ற ஊரில் மட்டும் கிடைக்கும் இரசாயனத்தாது என்ன?
மாலிப்டினம்
- லிக்னைட் கனிமத்தில் நாட்டின் இருப்பின் தமிழகத்தின் பங்கு எவ்வளவு?
87%
- வேர்மிகுலைட் கனிமத்தில் நாட்டின் இருப்பின் தமிழகத்தின் பங்கு எவ்வளவு?
66%
- கார்னெட் கனிமத்தில் நாட்டின் இருப்பின் தமிழகத்தின் பங்கு எவ்வளவு?
42%
- ஜேர்கான் கனிமத்தில் நாட்டின் இருப்பின் தமிழகத்தின் பங்கு எவ்வளவு?
38%
- கிராபைட் கனிமத்தில் நாட்டின் இருப்பின் தமிழகத்தின் பங்கு எவ்வளவு?
33%
- லெமனைட் கனிமத்தில் நாட்டின் இருப்பின் தமிழகத்தின் பங்கு எவ்வளவு?
28%
- ரூட்டைல் கனிமத்தில் நாட்டின் இருப்பின் தமிழகத்தின் பங்கு எவ்வளவு?
27%
- மோனசைட் கனிமத்தில் நாட்டின் இருப்பின் தமிழகத்தின் பங்கு எவ்வளவு?
25%
- மேக்னசைட் கனிமத்தில் நாட்டின் இருப்பின் தமிழகத்தின் பங்கு எவ்வளவு?
17%
- 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் எவ்வளவு மக்கள் தொகை உள்ளது?
7.21 கோடி
- தமிழகத்தின் மக்கள் தொகை அடர்த்தி எவ்வளவு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு?
555
- இந்திய மாநிலங்களில் மக்கள் தொகை அடர்த்தியில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தில் உள்ளது?
12வது இடம்
- மக்கள் தொகை அடர்த்தி இன் தேசிய சராசரி எவ்வளவு?
382
- இந்திய அளவில் நகரமயமாதலின் சராசரி அளவு என்ன ?
31.5%
- தமிழகத்தின் நகரமயமாதலின் சராசரி அளவு என்ன?
48.4%சதவீதம்
- தமிழகம் நகரமக்கள் மொத்த மக்கள் தொகையில் எத்தனை சதவீதமாக உள்ளது?
9.61 சதவீதம்
- தமிழ்நாட்டின் பாலின விகிதம் எவ்வளவு?
995
- பாலின விகிதத்தில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தில் உள்ளது?
மூன்றாவது இடம்
- IMR குறியீட்டில் தமிழ்நாடு பெற்றுள்ள எண்?
17
- IMR குறியீட்டில் இந்தியா பெற்றுள்ள எண்?
34
- MMR குறியீட்டில் தமிழ்நாடு பெற்றுள்ள எண்?
79
- MMR குறியீட்டில் இந்தியா பெற்றுள்ள எண்?
159
- தமிழகத்தின் வாழ்நாள் எதிர்பார்ப்பு எவ்வளவு ஆண்டுகள்?
70.6
- இந்தியாவின் வாழ்நாள் எதிர்பார்ப்பு எவ்வளவு ஆண்டுகள்?
67.9
- தமிழகத்தின் ஆண்கள் வாழ்நாள் எதிர்பார்ப்பு எவ்வளவு ஆண்டுகள்?
68.6
- தமிழகத்தின் பெண்கள் வாழ்நாள் எதிர்பார்ப்பு எவ்வளவு ஆண்டுகள்?
72.7
- இந்தியாவின் ஆண்கள் வாழ்நாள் எதிர்பார்ப்பு எவ்வளவு ஆண்டுகள்?
66.4
- இந்தியாவின் பெண்கள் வாழ்நாள் எதிர்பார்ப்பு எவ்வளவு ஆண்டுகள்?
69.6
- தமிழ்நாட்டின் கல்வி அறிவு வீதம் எவ்வளவு?
80.33%
- இந்தியாவின் கல்வியறிவு விகிதம் எவ்வளவு?
74.04 சதவீதம்
- தமிழ்நாட்டின் ஆண்கள் கல்வியறிவு சதவீதம் எவ்வளவு?
86.81%
- தமிழ்நாட்டின் பெண்கள் கல்வியறிவு சதவீதம் எவ்வளவு?
82.14%
- இந்தியாவின் ஆண்கள் கல்வியறிவு சதவீதம் எவ்வளவு?
82.14%
- இந்தியாவின் பெண்கள் கல்வியறிவு சதவீதம் எவ்வளவு?
65.46%
- இந்தியாவின் பாலின விகிதம் எவ்வளவு?
940
- சராசரியாக ஒரு நபரின் எதிர்பார்க்கப்படும் வாழ்நாள் அளவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஆயுட்காலம்
- ஒரு மாநிலத்தின் ஓராண்டில் உற்பத்தி செய்யப்படும் பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த பண மதிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மாநில உள்நாட்டு உற்பத்தி
- தமிழ்நாட்டின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2016 -17 ஆம் நிதியாண்டில் எவ்வளவாக இருந்தது?
207.8 பில்லியன் டாலர்
- தமிழ்நாட்டில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள துறை எது ?
சேவைத்துறை
- மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத்துறை எத்தனை சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது?
63.70%
- தொழில்துறை 28.5 சதவீத பங்களிப்புடன் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
இரண்டாவது இடம்
- தமிழ்நாட்டின் தலா வருமானம் 2018 இல் உள்ள புள்ளிவிவரங்களின் படி இந்திய சராசரி அளவை விட எத்தனை மடங்கு அதிகமாக உள்ளது?
1.75
- 2017 -18 கணக்கின்படி தலா வருமானம் எவ்வளவாக உயர்ந்துள்ளது?
2200 டாலர் / 1,88,492 ரூபாய்
- தமிழகத்தில் எத்தனை வேளாண் காலநிலை மண்டலங்கள் உள்ளன?
7 மண்டலம்
- தமிழகம் நாட்டு அளவில் உதிரிப்பூக்கள் மற்றும் பழங்கள் உற்பத்தியில் எத்தனாவது இடத்தில் உள்ளது?
மூன்றாமிடம்
- இந்தியாவின் நெல் உற்பத்தியில் தமிழ்நாடு எத்தனையாவது பெரிய உற்பத்தியாளராக உள்ளது?
இரண்டாவது
- தமிழகம் தோட்டக்கலை பயிர் வாழை தேங்காய் உற்பத்தியில் எத்தனாவது இடத்தில் உள்ளது ?
முதலிடம்
- தமிழகம் ரப்பர் உற்பத்தியில் எத்தனாவது இடத்தில் உள்ளது ?
இரண்டாவது இடம்
- தமிழகம் மிளகு உற்பத்தியில் எத்தனாவது இடத்தில் உள்ளது ?
மூன்றாவது இடம்
- தமிழகம் கரும்பு உற்பத்தியில் எத்தனாவது இடத்தில் உள்ளது?
4-வது இடம்
- தமிழகத்தில் உணவு தானிய உற்பத்தி பரப்பு எவ்வளவு ஆக உள்ளது?
72.9%
- 2017-18 ஆம் ஆண்டின் தமிழக அரசின் வேளாண்மை துறை அறிக்கையின்படி எந்த தானிய வகையில் தமிழகம் தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளது?
மக்காச்சோளம், கம்பு, கடலை ,எண்ணெய் வித்துக்கள், பருத்தி
- 2017-18 ஆம் ஆண்டின் தமிழக அரசின் வேளாண்மை துறை அறிக்கையின்படி எந்த தானிய வகையில் தமிழகம் தேசிய அளவில் இரண்டாமிடத்தில் உள்ளது?
தேங்காய், நெல்
- 2017-18 ஆம் ஆண்டின் தமிழக அரசின் வேளாண்மை துறை அறிக்கையின்படி எந்த தானிய வகையில் தமிழகம் தேசிய அளவில் மூன்றாம் இடத்தில் உள்ளது?
கரும்பு, சூரியகாந்தி ,சோளம்
- 2017-18 ஆம் ஆண்டின் தமிழக அரசின் வேளாண்மை துறை அறிக்கையின்படி எந்த தானிய வகையில் தமிழகம் தேசிய அளவில் நான்காமிடத்தில் உள்ளது?
திடமான தானியங்கள்
- மொத்த தானியங்கள் உற்பத்தியில் தேசிய அளவில் தமிழகம் எத்தனாவது இடத்தில் உள்ளது?
8வது இடம்
- இந்தியாவின் மருத்துவ தலை நகரம் என அழைக்கப்படுவது எது?
சென்னை
- இந்தியாவின் வங்கி தலை நகரம் என அழைக்கப்படுவது எது?
சென்னை
- ஆசியாவின் டெட்ராய்ட் என அழைக்கப்படும் நகரம் எது ?
சென்னை
- தமிழ்நாட்டில் எத்தனை தொழில் பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன ?
110
- பேருந்து கட்டுமான தொழிலுக்கு பெயர் பெற்ற ஊர் எது?
கரூர்
- பேருந்து கட்டுமானத் தொழிலில் கரூரின் பங்களிப்பு எத்தனை சதவீதமாக உள்ளது ?
80%
- எங்கு உள்ள காகித உற்பத்தி நிறுவனம் ஆசியாவிலேயே மிகப்பெரிய சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத காகித நிறுவனங்களுள் ஒன்றாக செயல்பட்டு வருகிறது?
கரூர்
- எஃகு நகரம் என அழைக்கப்படும் ஊர் எது?
சேலம்
- எந்த நகரம் அச்சுத்தொழில் பட்டாசு நிறுவனங்கள் தீப்பெட்டி தயாரிப்பில் முன்னோடியாக உள்ளது?
சிவகாசி
- இந்தியாவின் மொத்த தீப்பெட்டி உற்பத்தியில் சிவகாசியின் பங்கு எவ்வளவு?
90%
- தமிழகத்தின் நுழைவாயில் என அழைக்கப்படும் நகரம் எது?
தூத்துக்குடி
- வேதிப் பொருட்கள் உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ள நகரம் எது?
தூத்துக்குடி
- இந்தியாவின் மிகப்பெரிய ஜவுளி உற்பத்தி மையம் எது ?
தமிழ்நாடு
- இந்தியாவின் நூல் கிண்ணம் என அழைக்கப்படும் மாநிலம் எது?
தமிழ்நாடு
- இந்திய அளவில் மொத்த நூல் உற்பத்தியில் எத்தனை சதவீதம் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது ?
41 சதவீதம்
- இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜவுளித் துறையின் பங்களிப்பு எவ்வளவு?
4%
- மொத்த ஏற்றுமதி வருவாயில் ஜவுளித் துறையின் பங்களிப்பு எவ்வளவு?
35%
- உற்பத்தித் துறையில் எத்தனை சதவீத பங்களிப்பு ஜவுளித் துறை மூலமாக கிடைக்கப்பெறுகிறது?
14%
- பின்னலாடைகளின் நகரம் என அழைக்கப்படும் ஊர் எது ?
திருப்பூர்
- இந்தியாவின் தோல் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகம் எத்தனை சதவீதத்தைக் கொண்டுள்ளது?
30%
- இந்தியாவின் தோல் பொருட்கள் தயாரிப்பில் எத்தனை சதவீதத்தை தமிழகம் கொண்டுள்ளது?
70%
- தோல் பொருட்கள் மற்றும் பதனிடும் தொழிற்சாலைகள் எந்த மாவட்டங்களில் அமைந்துள்ளன ?
வேலூர் ,திண்டுக்கல் மற்றும் ஈரோடு
- ஒவ்வொரு ஆண்டும் பன்னாட்டு தோல் பொருட்கள் கண்காட்சி எங்கு நடைபெறுகிறது?
சென்னை
- தமிழகம் இந்திய அளவில் வாகன மற்றும் வாகன உதிரிப்பாகங்கள் உற்பத்தியிலும் எத்தனை சதவீதத்தைக் கொண்டுள்ளது?
28%
- தமிழகம் இந்திய அளவில் லாரிகளுக்கான உற்பத்தியில் எத்தனை சதவீதத்தைக் கொண்டுள்ளது?
19%
- தமிழகம் இந்திய அளவில் பயணியர் கார் மற்றும் இரு சக்கர வாகன உற்பத்தியில் எத்தனை சதவீதத்தைக் கொண்டுள்ளது?
18%
- சிமெண்ட் உற்பத்தியில் தமிழ்நாடு இந்திய அளவில் எத்தனாவது இடத்தில் உள்ளது?
மூன்றாமிடம்
- மொத்த சிமெண்ட் தொழிற்சாலைகள் எண்ணிக்கையில் 21 அலகுகளுடன் தமிழ்நாடு எத்தனாவது இடத்தில் உள்ளது?
இரண்டாவது இடம்
- சிவகாசி யாரால் குட்டி ஜப்பான் என அழைக்கப்பட்டது?
ஜவஹர்லால் நேரு
- இந்தியாவின் பட்டாசு உற்பத்தியில் சிவகாசியில் எத்தனை சதவீதம் தயாரிக்கப்படுகிறது?
80 சதவீதம்
- இந்தியாவின் அச்சுத்துறை தீர்வுகள் சிவகாசியில் இருந்து எத்தனை சதவீதம் பெறப்படுகிறது?
60%
- இந்தியாவின் மிகப்பெரிய எஃகு உருக்காலை நிறுவனமான SAIL தனது எஃகு ஆலயை எங்கு நிறுவியுள்ளது?
சேலம்
- காற்றழுத்த விசை குழாய் நகரம் என அழைக்கப்படும் நகரம் எது ?
கோயம்புத்தூர்
- மாவு அரைப்பான் இயந்திரத்திற்கான புவிசார் குறியீடு பெற்ற நகரம் எது?
கோயம்புத்தூர்
- இந்திய உப்பு உற்பத்தியில் 30 சதவீதமும் மாநிலத்தின் உப்பு உற்பத்தியில் 70 சதவீதமும் எங்கு உற்பத்தி ஆகிறது?
தூத்துக்குடி
- குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் தமிழ்நாடு 15.07 சதவீதத்துடன் தேசிய அளவில் எத்தனாவது இடத்தில் உள்ளது?
முதலிடம்
- தமிழகத்தில் எத்தனை பதிவு செய்யப்பட்ட குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளன?
6.89 லட்சம்
- தமிழகத்தில் எங்கு காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன ?
கோயம்புத்தூர் ,பொள்ளாச்சி ,தாராபுரம், உடுமலைப்பேட்டை ,நாகர்கோவில் ,தூத்துக்குடி
- தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அணுமின் நிலையங்கள் எங்கும் அமைந்து உள்ளன?
கல்பாக்கம் ,கூடங்குளம்
- கூடங்குளம் அணு மின் நிலையத் திறன் அளவு என்ன?
1834 MW
- கல்பாக்கம் அணு மின் நிலையத் திறன் அளவு என்ன?
470 MW
- தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் வெப்ப ஆற்றல் அதிக அளவு எந்த இடங்களில் இருந்து பெறப்படுகிறது?
அத்திப்பட்டு ,எண்ணூர் ,மேட்டூர் ,நெய்வேலி மற்றும் தூத்துக்குடி
- டீசலை அடிப்படையாகக் கொண்ட அனல் மின் உற்பத்தியில் தமிழ்நாடு தேசிய உற்பத்தியில் 34 சதவீதத்துக்கும் மேலாக உற்பத்தி செய்து எத்தனையாவது இடம் வகிக்கிறது?
முதலிடம்
- தமிழ்நாட்டில் எத்தனைக்கும் மேற்பட்ட புனல் மின் நிலையங்கள் உள்ளன?
20க்கும் மேற்பட்ட
- புனல் மின்சாரம் தயாரிக்கும் முக்கியமான இடங்கள் என்னென்ன ?
குந்தா ,மேட்டூர் ,மரவகண்டி ,பார்சன் வேலி
- தமிழ்நாடு சூரிய சக்தியில் இருந்து பெறப்படும் மின் சக்தியின் மொத்த திறன் 2017 இன் படி எத்தனை மெகாவாட்?
1590.97
- தமிழகத்தில் காற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்க ஏதுவான இடமாக உள்ள இடங்கள் என்னென்ன?
திருநெல்வேலி ,தூத்துக்குடி தெற்கு பகுதி மற்றும் ராமேஸ்வரம்
- தமிழ்நாட்டில் உள்ள மொத்த வங்கி சேவையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் எத்தனை சதவீத பங்குகளுடன் பணியாற்றுகின்றன?
52%
- 2015 -16 இன் படி துவக்கநிலை அளவில் நிகர மாணவர் சேர்க்கை விகிதம் தமிழ்நாட்டில் எவ்வளவு ?
89.24%
- தமிழ் நாட்டின் உயர் கல்விக்கான மொத்த சேர்க்கை விகிதம் எவ்வளவு ?
46.9 சதவீதம்
- தமிழ்நாட்டில் எத்தனை பல்கலைக்கழகங்கள் உள்ளன ?
59
- தமிழ்நாட்டில் எத்தனை மருத்துவ கல்லூரிகள் உள்ளன ?
40
- தமிழ்நாட்டில் எத்தனை பொறியியல் கல்லூரிகள் உள்ளன?
517
- தமிழ்நாட்டில் எத்தனை கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன?
2260
- தமிழகத்தில் எத்தனை பல் தொழில்நுட்ப கல்லூரிகள் உள்ளன?
447
- தமிழகத்தில் எத்தனை பல் மருத்துவக் கல்லூரி உள்ளது?
20
- மார்ச் 2015 இன் படி தமிழகத்தில் எத்தனை மாவட்ட மருத்துவமனைகள் உள்ளன?
34 மாவட்ட மருத்துவமனைகள்
- இந்தியாவில் இணையத்தின் பயன்பாட்டின் படி எந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது ?
மகாராஷ்டிரா
- இணைய பயன்பாட்டில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தில் உள்ளது ?
இரண்டாவது இடம்
- தமிழகத்தில் எத்தனை தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன?
28
- தமிழகத்தின் மிகப்பெரிய பேருந்து நிலையம் எது ?
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம்
- தமிழ்நாட்டின் மொத்த சாலை நீளம் எவ்வளவு ?
167000.கி.மீ
- சாலைப் போக்குவரத்தில் நாட்டிலேயே தமிழ்நாடு எத்தனையாவது இடத்தில் உள்ளது?
இரண்டாவது இடம்
- தமிழ்நாட்டில் உள்ள இருப்பு பாதையின் மொத்த நீளம்
6693 கிலோமீட்டர்
- இந்தியாவின் மூன்றாவது பெரிய சர்வதேச விமான நிலையமாக எது விளங்குகிறது?
சென்னை விமான நிலையம்
- தமிழ்நாட்டின் மிகப் பெரிய துறைமுகங்கள் என்னென்ன?
சென்னை, எண்ணூர் மற்றும் தூத்துக்குடி
- தமிழகத்தின் நடுத்தர துறைமுகம் எது?
நாகப்பட்டினம்
- தமிழகத்தில் எத்தனை சிறு துறைமுகங்கள் உள்ளன?
23
- இந்திய மாநிலங்களில் 25 கோடி சுற்றுலா பயணிகளுடன் 2013 இன் படி தமிழ்நாடு எத்தனையாவது இடம் வகிக்கிறது?
முதலிடம்
- தமிழகத்தில் 1000 பேருக்கு எத்தனை பேர் வேலையில்லாமல் உள்ளனர்?
42
- தமிழகம் வேலைவாய்ப்பின்மை யில் தேசிய அளவில் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
22
- 2011 கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு ?
72138958
- 2011 கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் உள்ள ஆண்களின் எண்ணிக்கை எவ்வளவு?
36158871
- தமிழ் நாட்டில் பெண்களின் எண்ணிக்கை எவ்வளவு? 35980087
- தமிழ்நாட்டின் தோராய பிறப்பு விகிதம் எவ்வளவு?
15.7
- தமிழ்நாட்டின் தோராய இறப்பு விகிதம் எவ்வளவு?
7.4
- தமிழ் நாட்டின் வளர்ச்சி விகிதம் எவ்வளவு?
8.3
- தமிழ்நாட்டின் அதிக மக்கள் தொகை உடைய மாவட்டங்கள்?
சென்னை ,காஞ்சிபுரம், வேலூர் ,திருவாரூர்
- தமிழ்நாட்டின் குறைவான மக்கள்தொகை உடைய மாவட்டங்கள் ?
பெரம்பலூர் ,நீலகிரி ,அறியலூர்
- தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி எவ்வளவு?
555
- தமிழகத்தின் மிக அடர்த்தியான மாவட்டம் எது?
சென்னை 26901
- தமிழகத்தின் மிக குறைவான அடர்த்தி உள்ள மாவட்டம்?
நீலகிரி 288
- தமிழகத்தின் பாலின விகிதம் எவ்வளவு?
995
- அதிக பாலின விகிதம் கொண்ட மாவட்டங்கள் எது ?
நீலகிரி 1041
- குறைவான பாலின விகிதம் உடைய மாவட்டங்கள்?
தேனி 900
- தமிழகத்தின் குழந்தை பாலின விகிதம் ?
946 பெண் குழந்தைகள்
- அதிக குழந்தை பாலின விகிதம் கொண்ட மாவட்டம்?
நீலகிரி 985
- குறைவான குழந்தை பாலின விகிதம் கொண்ட மாவட்டங்கள்?
கடலூர் 896
- அதிக எழுத்தறிவு விகிதம் கொண்ட மாவட்டங்கள்?
கன்னியாகுமரி 92.14 சதவீதம்
- குறைந்த எழுத்தறிவு விகிதம் கொண்ட மாவட்டங்கள்?
தர்மபுரி 64.7 1%
11TH ECONOMICS STUDY NOTES | தமிழ்நாட்டுப் பொருளாதாரம்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services