11TH ECONOMICS STUDY NOTES | ஊரக பொருளாதாரம்| TNPSC GROUP EXAMS


TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST99/-:CLICK HERE

  1. இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என கூறியவர் யார் ?

 மகாத்மா காந்தி

  1. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் எத்தனை கிராமங்கள் உள்ளன ?

6,40,867

  1. 121 கோடி உள்ள மக்கள் தொகையில் எத்தனை சதவீத மக்கள் ஊரகங்களில் வசிக்கின்றனர்?

68.84%

  1. ஊரக மக்களின் முக்கிய தொழில் எது?

வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த செயல்கள்

  1. ஒரு சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் வாழும் மக்களின் எண்ணிக்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

மக்கள் தொகை அடர்த்தி

  1. வேலையின்மையில் எந்தவகை வேலையின்மை கிராமப்புறங்களில் நிலவுகின்றன?

பருவகால வேலையின்மை மற்றும் குறை வேலையுடமை

  1. குறை வேலையுடைமை என்பது எதனைக் குறிக்கின்றது?

மறைமுக வேலையின்மை

  1. தேவைக்கதிகமான மிகுதியான தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது என்ன வேலையின்மை?

மறைமுக வேலையின்மை

  1. தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டாலும் உற்பத்தி அளவு அதிகரிக்காத நிலையைக் குறிப்பது எது?

மறைமுக வேலையின்மை

  1. அடிப்படைத் தேவைகளான உணவு உடை இருப்பிடம் போன்றவற்றைப் பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு பெயர் என்ன ?

வறுமை

  1. “ஓர் இந்திய உழவன் கடனிலே பிறந்து கடனிலே வாழ்ந்து கடனிலே இறந்து அவன் சந்ததிக்கும் கடனையே விட்டு செல்கிறான்” என கூறியவர் யார் ?

 ஆங்கில எழுத்தாளர் மால்கம் டார்லிங்

  1. ஒருபுறம் கிராமங்கள் காலியாகவும் மறுபுறம் நகரங்கள் நெரிசலாகவும் இருப்பதற்கு பெயர் ” இரட்டை நஞ்சாக்கல்” நீ எனக் கூறுபவர் யார்?

 சுமாசர் (schumacher)

  1. “சிறியது அழகு”என்ற நூலை எழுதியவர் யார்?

சுமாசர் (schumacher)

  1. “ஊரக மேம்பாடு என்பது குறிப்பிட்ட ஊரக மக்களின் பொருளாதார மற்றும் சமூக வாழ்க்கை முறையை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட உத்தி” என்பது யாருடைய கூற்று?

உலகவங்கி

  1. கிராமப்புறங்களில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த PURA என்ற திட்டத்தை அறிமுகப் படுத்தியவர் யார்?

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்

  1. கிராமப்புறங்களில் காணப்படும் வறுமை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

ஊரக வறுமை

  1. கிராமங்களில் வாழும் மக்கள் நாளொன்றுக்கு எவ்வளவு கலோரி அளவு மற்றும் அதற்கு குறைவாக எடுத்துக் கொள்பவர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என அழைக்கப்படுகின்றனர்?

 2400 கலோரி

  1. இந்தியாவில் 2015ஆம் ஆண்டில் எத்தனை கோடி மக்கள் கிராமங்களில் வாழ்கின்றனர்?

80 கோடி

  1. இந்தியாவில் உள்ள கிராமங்களில் எவ்வளவு கிராம மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கின்றனர் ?

 22 கோடி பேர்

  1. உலக ஏழை மக்களின் தொகையில் இந்தியா எத்தனை சதவீதம் கொண்டுள்ளது?
SEE ALSO  12TH TAMIL IYAL 08 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

 22%

  1. 20 அம்ச திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

 1975

  1. ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?

 1978

  1. ஊரக இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு பயிற்சி

 

தொடங்கப்பட்ட ஆண்டு?

 1979

  1. வேலைக்கு உணவு திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு ?

 1977

  1. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு?

1980

  1. ஊரக நிலமற்றோர் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?

 1983

  1. ஜவகர் வேலைவாய்ப்பு திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?

 1989

  1. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு?

 2006

  1. பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் சதக் யோஜனா தொடங்கப்பட்ட ஆண்டு?

2010

  1. பாரத் நிர்மாண் யோஜனா தொடங்கப்பட்ட ஆண்டு?

2005

  1. இந்திரா ஆவாஸ் யோஜனா தொடங்கப்பட்ட ஆண்டு?

 1985 -1986

  1. ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற மறுசீரமைப்பு திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு?

 2005

  1. ராஜீவ் ஆவாஸ் யோஜனா தொடங்கப்பட்ட ஆண்டு?

 2009

  1. தேசிய ஊரக நலத் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு?

 2005

  1. தேசிய ஊரக வாழ்வாதார திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு?

 2011

  1. தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு?

 2011

  1. நடைமுறையில் உள்ள ஊதிய விகிதத்தில் தனி நபர் வேலை செய்ய விருப்பப்பட்டும் வேலை கிடைக்கப் பெறாத நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

வேலையின்மை

  1. பணிக்கான படிப்பு என்ற ஆய்விற்காக பீட்டர் டயமண்ட், டேல்மார்ட்டின் கண் மற்றும் கிறிஸ்டோர் பிசாரிட்ஸ் எந்த ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டனர்?

2010

  1. பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் ஒழுங்கு முறைகள் எப்படி வேலையின்மை, வேலைக்கான காலியிடங்கள் மற்றும் கூலி ஆகியவற்றை பாதிக்கிறது என அறிந்துகொள்ள எந்த முறை உதவுகின்றது?

 DMP முறை

  1. 2016 அக்டோபர் 4 நிலவரப்படி ஊரக வேலையின்மை எத்தனை சதவீதம் ஆகும்?

 7.8 சதவீதம்

  1. இந்திய மொத்த வேலையின்மை எவ்வளவு சதவீதம்?

8.5%

  1. ஊரக வேலையின்மை என்பது எத்தனை வகைப்படும்?

 மூன்று

  1. ஊரக வேலையின்மையின் வகைகள் என்னென்ன?

வெளிப்படையான வேலையின்மை ,மறைமுக வேலையின்மை அல்லது குறை வேலையுடமை, பருவகால வேலையின்மை

  1. வேலைக்கு தயாராக இருந்தும் எந்த வேலையும் கிடைக்காமல் வேலை இல்லாத நிலையில் இருப்பது எது?

வெளிப்படையான வேலையின்மை

  1. சிறு மற்றும் குறு விவசாயிகள் ,கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் கிராமப்புற கைவினைஞர்கள் ஆகியோர் இடையே காணப்படும் வேலையின்மை எது?

 குறை வேலையுடமை

  1. ஊரக பகுதிகளில் மறைமுக வேலையின்மை எத்தனை விழுக்காடு வரை காணப்படுகிறது?

 25 முதல் 30 விழுக்காடு

  1. ஊரகப் பகுதிகளில் ஊரக மக்களால் நடத்தப்படும் அனைத்து தொழிற்சாலைகளும் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
SEE ALSO  9TH CHEMISTRY STUDY NOTES |அமிலங்கள் காரங்கள் மற்றும் உப்புகள்| TNPSC GROUP EXAMS

 ஊரக தொழிற்சாலைகள்

  1. ஊரக தொழிற்சாலைகளின் வகைகள் என்னென்ன?

குடிசைத் தொழில்கள் ,ஊரகத் தொழில்கள், சிறு தொழில்கள் ,குறுந்தொழில்கள் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்கள்

  1. குறு,சிறு  மற்றும் நடுத்தர நிறுவனங்கள் எந்த சட்டத்தின்படி வகைப்படுத்தப்படுகின்றன?

 குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி சட்டம் , 2006

  1. தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு ( 2002 -2003) புள்ளிவிவரப்படி எத்தனை சதவீத ஏழைகள் மட்டுமே அரசுடைமை வங்கிகளில் கடன் பெறுகின்றனர்?

 30%

  1. இந்தியாவில் 2015ஆம் ஆண்டு சமூக பொருளாதார மற்றும் சாதி ரீதியான கணக்கீட்டின்படி எத்தனை சதவீத மக்கள் ஊரக பகுதிகளில் வசிக்கின்றனர்?

 73% (18.5 சதவீத மக்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் 11% மக்கள் பழங்குடியினர்)

  1. இந்தியாவில் ஏறக்குறைய எத்தனை ஊரக குடும்பங்கள் கடனில் மூழ்கி உள்ளனர் ?

 4ல் 3 பகுதி ஊரக குடும்பங்கள்

  1. எந்த ஆண்டு ஊரக வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து ஆராய ஊரக வங்கிகளில் பணிபுரிந்தவர்களைக் கொண்டு இந்திய அரசாங்கத்தால் குழு அமைக்கப்பட்டது?

1975

  1. இந்தியாவில் எத்தனை வட்டார ஊரக வங்கிகள் உள்ளன?

 64

  1. சுய உதவிக் குழுக்கள் வங்கி இணைப்பு திட்டத்தில் சேர்க்கப்படுவது எப்போது ஆரம்பிக்கப்பட்டது ?

 1992

  1. NABARD வங்கியின் கணக்கீட்டின்படி எத்தனை சுய உதவிக்குழுக்கள் இந்தியாவில் உள்ளன?

2.2 மில்லியன்

  1. சிறிய அலகு முன்னேற்றும் மற்றும் மறு நிதியளிக்கும் முகவர் வங்கி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

ஏப்ரல் 8, 2015

  1. தேசிய ஊரக நல அமைப்பு எப்போது ஆரம்பிக்கப்பட்டது ?

ஏப்ரல் 12 ,2005

  1. நலிவடைந்த ஊரக மக்களுக்காக குறைந்த விலையில் எளிதில் பெறக் கூடிய தரமான ஆரோக்கிய வசதிகளை ஏற்படுத்தித் தருவது எதனுடைய நோக்கம்?

 தேசிய ஊரக நல அமைப்பு

  1. NSSO புள்ளி விவரத்தின் படி எத்தனை சதவீத குடும்பங்கள் ஓர் அறையையே வீடாக கொண்டு வாழ்கின்றனர் ?

 38 சதவீத குடும்பங்கள்

  1. இந்தியாவின் ஊரக சாலை பகுதி எவ்வளவு நீளமுடையது ?

26.50 லட்சம் கிலோமீட்டர்

  1. எந்த ஆண்டின் முடிவில் இந்தியாவின் 99.25% கிராமங்கள் முழுமையாக மின் தொடர்பை பெற்றிருந்தன?

2017 ,மார்ச்

  1. ஊரக பகுதிகளுக்கு மின் அனுப்புகையில் ஏற்படும் இழப்பானது எத்தனை சதவீதம் ?

 25%

  1. சென்னை பல்கலைக்கழகத்தின் முதல் பொருளாதார பேராசிரியர் யார்?

 கில்பெர்ட் ஸ்லேட்டர்

  1. தமிழ்நாட்டில் சில கிராமங்களை ஆராய்ந்து தென்னிந்திய கிராமங்கள் என்ற புத்தகத்தை எந்த ஆண்டு கில்பர்ட் வெளியிட்டார்?

1918


11TH ECONOMICS STUDY NOTES | ஊரக பொருளாதாரம்| TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

SEE ALSO  11TH ECONOMICS STUDY NOTES | தமிழ்நாட்டுப் பொருளாதாரம்| TNPSC GROUP EXAMS

 

 

Leave a Comment

error: