- “சுதந்திரம் எந்த விலைக்கும் ஈடாகாது .சுதந்திரம் வாழ்வின் சுவாசம் .வாழ்வதற்காக மனிதன் எதைக் கொடுக்க மாட்டான்” எனக் கூறியவர் யார்?
டெய்லர் கோவன்
- இரண்டு நாடுகளுக்கிடையேயான சமூக மற்றும் பொருளாதார தொடர்புகளில் ஒரு நாடு அதிகாரம் செலுத்தும் நிலையிலும் மற்றொரு நாடு அடிமையாக இருப்பதையும் குறிப்பது எது?
காலனித்துவம்
- வாஸ்கோடகாமா இந்தியாவில் உள்ள கோழிக்கோட்டிற்கு எப்போது வருகை தந்தார்?
மே 20 , 1498
- போர்த்துக்கீசியர்கள் எப்போதிலிருந்து கோவாவுடன் வணிகம் செய்து வந்தனர்?
1510
- எப்போது கிழக்கிந்திய கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது?
1601
- எப்போது சர் தாமஸ் ரோ ஜஹாங்கீரிடமிருந்து தொழிற்சாலைகள் அமைக்க அனுமதி பெற்றார்?
1614
- எந்த ஆண்டு ஆங்கில பாராளுமன்றம் இந்தியாவை ஆளும் அதிகாரத்தை கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து ஆங்கிலேயருக்கு மாற்றி ஒரு சட்டம் இயற்றியது?
1858
- காலனி ஆதிக்கச் சிதைப்பின் அடிப்படையில் முழு காலத்தையும் வரலாற்று பொருளியல் வல்லுநர்கள் எத்தனை கட்டங்களாக பிரித்தனர்?
3 வணிக மூலதன காலம் ,தொழில் மூலதன காலம் ,நிதி மூலதன காலம்
- எந்த காலம் மனித மூலதன காலமாகும்?
1757 முதல் 1813 வரை
- எந்தக் காலம் தொழில் மூலதன காலமாகும்?
1813 முதல் 1858 வரை
- பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வருடங்களில் இருந்து சுதந்திரம்
அமைந்த வரையிலான காலம் என்ன ?
மூன்றாவது கட்டமான நிதி மூலதன காலம்
- எந்த ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி தனது அரசியல் அதிகாரத்தை பிரிட்டிஷ் அரசிடம் ஒப்படைத்தது?
1858
- எந்த முறை நிலங்களுக்கான உரிமை மற்றும் நிர்வகித்தல் பற்றியது?
நில உடமை முறை
- சுதந்திரத்திற்கு முன்னர் எத்தனை விதமான நிலவுடமை முறைகள் இருந்தன?
மூன்று: ஜமீன்தாரி முறை ,மகல்வாரி முறை மற்றும் இரயத்துவாரி முறை
- எப்போது நிரந்தர சொத்துரிமை சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது ?
1793
- 1793 இல் நிரந்தர சொத்துரிமை சட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?
லார்டு காரன்வாலிஸ்
- நிரந்திர சொத்துரிமை சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு என்ன நிலவுடைமை முறையை ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி உருவாக்கியது?
ஜமீன்தாரி முறை
- ஜமீன்தாரி முறையில் வசூலிக்கப்பட்ட நில வருவாயில் எத்தனை பங்கு அரசுக்கு செலுத்தப்பட வேண்டும்?
11ல் 10 பங்கு
- எந்த முறையில் கிராம மக்களாலான குழுவினர் நிலச் சொந்தக்காரர்களாக இருந்து நிர்வாகம் செய்தனர்?
மகல்வாரி முறை அல்லது இனவாரி முறை
- இரயத்துவாரி முறை அல்லது சொந்த சாகுபடி முறை முதன் முதலில் எங்கு அறிமுகம் செய்யப்பட்டது?
தமிழ்நாடு
- இரயத்துவாரி முறை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் எந்த இடங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது?
மகாராஷ்டிரா ,குஜராத் ,அசாம் ,கூர்க், கிழக்கு பஞ்சாப் மற்றும் மத்திய பிரதேசம்
- எந்த முறையில் நிலத்தை சொந்தம் கொண்டாடும் உரிமை மற்றும் நிலத்திற்கான கட்டுப்பாடு நில உரிமையாளரிடம் இருந்தது?
இரயத்துவாரி முறை
- எந்த ஆண்டில் முதல் உலகப்போர் தொடங்கியது?
1914
- ஆசியாவின் எத்தனையாவது முக்கிய பொருளாதாரம் இந்தியாவினுடையது?
மூன்றாவது
- எந்த ஆண்டு இந்தியா தனது முதல் தொழில் கொள்கையை அறிவித்தது?
ஏப்ரல் 6 1948
- இந்தியாவின் முதல் தொழில் கொள்கையின் முக்கிய நோக்கம் என்ன?
இந்தியாவில் கலப்புப் பொருளாதாரத்தை அறிமுகப்படுத்துவதாககும்
- 1948 தொழில் கொள்கையின்படி இந்திய தொழில்கள் எத்தனை வகையாகப் பிரிக்கப்பட்டன?
4
- நான்கு வகையாக பிரிக்கப்பட்ட இந்திய தொழில்கள் என்னென்ன?
பொது துறை (மூலதொழில்கள்), பொது மற்றும் தனியார் துறை( முக்கிய தொழில்கள்), கட்டுப்படுத்தப்பட்ட தனியார் துறை, தனியார் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள்
- எந்த ஆண்டின் தொழில்துறை தீர்மான கொள்கை பொது துறைக்கு முக்கியத்துவம் கொடுத்தது?
1956
- எந்த ஆண்டிற்கு பிறகு பாரம்பரிய வேளாண் முறைகள் சிறிது சிறிதாக மாற்றப்பட்டு புதிய தொழில்நுட்பத்தை வேளாண் முறைகள் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டன?
1960
- எந்த ஆண்டில் 7 மாவட்டங்களில் “வழிநடத்தும் திட்டம்” புதிய தொழில்நுட்பத்தை வேளாண் துறையில் பயன்படுத்தும் முயற்சி எடுக்கப்பட்டது?
1960-61
- வேளாண் யுத்தி என்னென்ன பெயர்களில் அழைக்கப்படுகிறது?
புதிய வேளாண் தொழில்நுட்பம், விதை -உரங்கள்- தண்ணீர் தொழில்நுட்பம், அல்லது பசுமைப்புரட்சி
- இரண்டாவது பசுமைப் புரட்சியின் முக்கிய நோக்கம் எது?
உணவு பயிர் உற்பத்தியை 2020இல் 400 மில்லியன் டன்களாக உயர்த்துவது ஆகும்.
- இந்தியாவில் முதல் எஃகு தொழிற்சாலை எங்கு நிறுவப்பட்டது ?
ஜாரியாவில் உள்ள குல்டி
- மேற்கு வங்காளத்தில் உள்ள “வங்காள இரும்புத் தொழில்” கம்பெனி எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
1870
- எந்த ஆண்டு பெரிய அளவிலான இரும்பு எஃகு தொழிற்சாலை ஜாம்ஷெட்பூரில் தொடங்கப்பட்டது?
1907
- எந்த ஆண்டு TISCO தொழிற்சாலை பான்பூரில் தொடங்கப்பட்டது?
1919
- முதன் முதலில் நிறுவப்பட்ட பொதுத்துறை நிறுவனம் எது?
பத்ராவதியில் உள்ள விஸ்வேஸ்வரைய்யா இரும்பு எஃகு தொழில்
- எதன் உதவியோடு ரூர்கேலாவில் (ஒரிசா) உள்ள எஃகு நிறுவனம் தொடங்கப்பட்டது?
ஜெர்மனி
- எதன் உதவியோடு பிலாய்(மத்தியபிரதேசம்) உள்ள எஃகு நிறுவனம் தொடங்கப்பட்டது?
ரஷ்யா
- எதன் உதவியோடு துர்காபூர் (மேற்குவங்காளம்)உள்ள எஃகு நிறுவனம் தொடங்கப்பட்டது?
இங்கிலாந்து
- எதன் உதவியோடு பொகாரோ(ஜார்கண்ட்) உள்ள எஃகு நிறுவனம் தொடங்கப்பட்டது?
ரஷ்யா
- எதன் உதவியோடு விசாகப்பட்டினம் (ஆந்திரா) உள்ள எஃகு நிறுவனம் தொடங்கப்பட்டது?
ரஷ்யா
- எதன் உதவியோடு சேலம்(தமிழ்நாடு) உள்ள எஃகு நிறுவனம் தொடங்கப்பட்டது?
இந்தியா
- எதன் உதவியோடு விஜயநகர்(கர்நாடகா) உள்ள எஃகு நிறுவனம் தொடங்கப்பட்டது?
இந்தியா
- இந்தியாவில் உள்ள எஃகு தொழிற்சாலைகள் அனைத்தும் எதனால் நிர்வகிக்கப்படுகின்றன?
SAIL
- இந்திய எஃகு நிறுவனம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
1974
- தற்போது இந்தியா எஃகு உற்பத்தியில் உலக அளவில் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
எட்டாவது
- எந்த ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ரேஷ்ரா எனும் ஊரில் நவீனமயப்படுத்தப்பட்ட சணல் தொழிற்சாலை முதன்முறையாக உருவாக்கப்பட்டது?
1855
- இந்தியா கச்சா சணல் உற்பத்தி மற்றும் சணல் பொருட்கள் தயாரிப்பில் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
முதலிடம்
- இந்திய சணல் பொருட்கள் ஏற்றுமதியில் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
இரண்டாவது இடம்
- மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எத்தனை சதவீதம் நெசவுத்துறையின் மூலம் கிடைக்கிறது?
4%
- இந்தியாவில் நெசவுத்துறையின் மூலம் மதிப்பு கூட்டப்பட்ட உற்பத்தியில் எத்தனை சதவீதம் கிடைக்கிறது?
20 சதவீதம்
- ஏற்றுமதி வருவாயில் எத்தனை பங்கு நெசவு துறையின் மூலம் கிடைக்கிறது?
மூன்றில் ஒரு பங்கு
- கொல்கத்தாவிற்கு அருகிலுள்ள குளோஸ்டர் துறைமுக நகரில் எப்போது முதல் நவீன துணி உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டது?
1818
- எந்த ஆண்டு மும்பையில் கேஜி என் டேப்பர் (Daber) என்பவரால் மும்பையின் நூற்பு மற்றும் நெசவு கம்பெனி உருவாக்கப்பட்டது?
1854
- இந்தியாவில் வேளாண் சார்ந்த தொழில்களில் பருத்தி தொழிலுக்கு அடுத்தபடியாக இருக்கும் தொழில் எது?
சர்க்கரை தொழில்
- சர்க்கரை உற்பத்தியில் இந்திய அளவில் எத்தனை பங்கு மகாராஷ்டிரா மாநிலம் கொண்டுள்ளது?
மூன்றில் ஒரு பங்கு
- மகாராஷ்டிர மாநிலத்துக்கு அடுத்தபடியாக சர்க்கரை உற்பத்தியில் உள்ள மாநிலம் எது ?
உத்தரபிரதேசம்
- இந்தியாவில் நைட்ரஜனை பயன்படுத்தி தயாரிக்கும் உர தொழிலானது உலகின் எத்தனையாவது பெரிய தொழிலாகும்?
மூன்றாவது
- எந்த ஆண்டு வங்கத்தில் உள்ள செராம்பூர் என்ற ஊரில் இயந்திரத்தில் செயல்படும் காகித ஆலை உருவாக்கப்பட்டது?
1812
- உலகிலுள்ள காகித தொழிற்சாலைகளின் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
15
- இயற்கையான பட்டு தயாரிப்பில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
இரண்டாம் இடம்
- இயற்கையான பட்டு தயாரிப்பில் முதலிடத்தில் உள்ள நாடு எது?
சீனா
- தற்போது உலக அளவில் இயற்கை பட்டு தயாரிப்பில் எத்தனை சதவீத உற்பத்தியை இந்தியா கொண்டுள்ளது?
16%
- இந்தியா வணிக அடிப்படையிலான எத்தனை வகையான பட்டு துணிகளை உற்பத்தி செய்கிறது?
5 :மல்பெரி பட்டு,வெப்பமண்டல டஸ்சர் பட்டு,ஓக் டஸ்சர்,பட்டு எரி,முகா பட்டு
- அசாம் மாநிலத்தில் உள்ள டிக்பாய் எனும் ஊரில் எந்த ஆண்டு வெற்றிகரமாக முதல் முறையாக எண்ணெய் கிணறு தோண்டப்பட்டது?
1889
- எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை எடுப்பதற்காக எங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு கழகம் (ONGC) உருவாக்கப்பட்டது?
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன்
- எண்ணெய் மற்றும் எரிவாயு கழகம் (ONGC) எப்போது உருவாக்கப்பட்டது?
1956
- குறு உற்பத்தி நிறுவனங்கள் என அழைக்கப்படும் நிறுவனங்கள் தொழிற்சாலைகள் மற்றும் உபகரணங்களுக்கான முதலீடு எவ்வளவு மிகாமல் இருக்க வேண்டும்?
25 இலட்சம்
- சிறு உற்பத்தி நிறுவனங்கள் என அழைக்கப்படும் நிறுவனங்கள் தொழிற்சாலைகள் மற்றும் உபகரணங்களுக்கான முதலீடு எவ்வளவு இருக்க வேண்டும்?
25 இலட்சம் அதிகமாகவும் ஐந்து கோடிக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
- நடுத்தர உற்பத்தி நிறுவனங்கள் என அழைக்கப்படும் நிறுவனங்கள் தொழிற்சாலைகள் மற்றும் உபகரணங்களுக்கான முதலீடு எவ்வளவு இருக்க வேண்டும்?
5 கோடிக்கு அதிகமாகவும் 10 கோடிக்கும் மிகாமலும் இருக்க வேண்டும்
- குறு சேவை நிறுவனங்கள் என அழைக்கப்படும் நிறுவனங்கள் உபகரணங்களுக்கான முதலீடு எவ்வளவு மிகாமல் இருக்க வேண்டும்?
10 இலட்சம்
- சிறு சேவை நிறுவனங்கள் என அழைக்கப்படும் நிறுவனங்கள் உபகரணங்களுக்கான முதலீடு எவ்வளவு இருக்க வேண்டும்?
10 இலட்சம் அதிகமாகவும் இரண்டு கோடிக்கு மிகாமலும் இருக்க வேண்டும்
- நடுத்தர சேவை நிறுவனங்கள் என அழைக்கப்படும் நிறுவனங்கள் உபகரணங்களுக்கான முதலீடு எவ்வளவு இருக்க வேண்டும்?
2 கோடியைவிட அதிகமாகவும் ஐந்து கோடிக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
- பாரத ஸ்டேட் வங்கியில் அரசு எத்தனை சதவீத பங்குகளை கொண்டுள்ளது?
58.60%
- பஞ்சாப் நேஷனல் வங்கியில் எத்தனை சதவீதம் அரசு பங்குகளை கொண்டுள்ளது?
58.87%
- பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்கு எத்தனை சதவீதத்திற்கும் அதிகமாக இருக்க வேண்டும்?
50%
- இந்தியாவில் உள்ள மொத்த வங்கிகளில் எத்தனை சதவீத வங்கிகள் பொதுத்துறை வங்கிகளாக இயங்குகின்றன?
72.9%
- எண்ணிக்கை அடிப்படையில் எத்தனை பொதுத்துறை வங்கிகள் உள்ளன ?
27
- எத்தனை தனியார் வங்கிகள் உள்ளன?
22
- எந்த ஆண்டிலிருந்து ஐந்தாண்டு திட்டங்கள் இந்தியாவில் உருவாக்கப்பட்டது ?
1951
- பொருளாதார திட்டமிடலின் முதன்மை நோக்கம் என்ன?
சமூக நலம்
- எந்த ஆண்டு இந்திய அரசு 14 பெரிய வணிக வங்கிகளை தேசிய மயமாக்க முடிவு செய்தது?
ஜூலை 19,1969
- எந்த ஆண்டு இந்திய அரசு மேலும் ஆறு வணிக வங்கிகள் தேசிய மயமாக்கியது?
1980
- இந்தியாவில் எத்தனை சதவீத மக்கள் கிராமப்புறங்களில் வாழ்ந்து வருகின்றனர்?
70%
- 1969ல் எவ்வளவுக்கு மேல் வைப்பு தொகை கொண்ட 14 வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டன?
50 கோடி
- 1980ல் எவ்வளவுக்கு மேல் வைப்பு தொகை கொண்ட 6 வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டன?
200 கோடி
- ஐந்தாண்டு திட்டங்கள் வாயிலாக பொருளாதார திட்டங்களை மேற்கொள்ளும் முறை யாரிடமிருந்து பெறப்பட்டது?
முன்னாள் சோவியத் ரஷ்யா
- இதுவரை இந்தியா எத்தனை ஐந்தாண்டு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது?
12 ஐந்தாண்டு திட்டங்கள்
- 12வது ஐந்தாண்டு திட்டம் எந்த காலகட்டம்?
2012- 2017
- NITI Aayog ன் விரிவாக்கம் என்ன?
National institution for transforming India
- முதல் ஐந்தாண்டு திட்டத்தின் காலகட்டம் என்ன?
1951-1956
- முதல் ஐந்தாண்டு திட்டம் யாருடைய மாதிரியை அடிப்படையாகக் கொண்டது?
ஹார்ரேட் டமர்
- முதல் ஐந்தாண்டு திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?
வேளாண்மை முன்னேற்றம்
- முதல் ஐந்தாண்டு திட்டம் எத்தனை சதவீத வளர்ச்சி விகிதத்துடன் வெற்றி பெற்றது?
3.6%
- இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் காலம் என்ன ?
1956 -1961
- இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் எந்த மாதிரியை அடிப்படையாகக் கொண்டது?
PC மஹலநோபிஸ் மாதிரி
- இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?
தொழில் முன்னேற்றத்தை மேம்படுத்துவது
- இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் எத்தனை சதவீத வளர்ச்சியுடன் வெற்றிபெற்றது?
4.1%
- மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் என்ன ?
1961 – 1966
- மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் வேறு எவ்வாறு அழைக்கப்பட்டது?
காட்கில் திட்டம்
- மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் நோக்கம் என்ன ?
சுதந்திரமான பொருளாதார மற்றும் சுயமுன்னேற்ற நிலையை ஏற்படுத்துதல்
- மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தின் வளர்ச்சி இலக்கு எது ?
5.6%
- எதன் காரணமாக மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் வளர்ச்சி இலக்கை எட்ட இயலவில்லை?
சீன- இந்தியப் போர்
- திட்ட விடுமுறையின் காலம் என்ன ?
1966- 1969
- திட்ட விடுமுறைக்கான முதன்மை காரணம் எது?
இந்தியா-பாகிஸ்தான் போர் மற்றும் மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் தோல்வி
- திட்ட விடுமுறை காலத்தில் என்ன திட்டங்கள் உருவாக்கப்பட்டன ?
ஓராண்டு திட்டங்கள்
- நான்காம் ஐந்தாண்டு திட்டத்தின் காலம் என்ன?
1969 – 1974
- நான்காம் ஐந்தாண்டு திட்டத்தின் வளர்ச்சி இலக்கு என்ன?
5.7%
- நான்காம் ஐந்தாண்டு திட்டம் எத்தனை சதவீத வளர்ச்சியை எட்டியது ?
3.3%
- ஐந்தாம் ஐந்தாண்டு திட்டத்தின் காலம் என்ன?
1974 -1979
- ஐந்தாம் ஐந்தாண்டு திட்டத்தில் எதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது?
வேளாண்மை தொழில் துறை மற்றும் சுரங்கத் தொழில்
- ஐந்தாம் ஐந்தாண்டு திட்டத்தின் வளர்ச்சி இலக்கு என்ன?
4.4%
- ஐந்தாம் ஐந்தாண்டு திட்டத்தின் எத்தனை சதவீதம் வளர்ச்சி பெற்று திட்டம் வெற்றி பெற்றது ?
4.8 சதவீதம்
- ஐந்தாம் ஐந்தாண்டு திட்டத்திற்கான முன்வரைவு யாரால் தயாரிக்கப்பட்டது?
D.P. தார்
- சுழல் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?
1978-79
- ஆறாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் என்ன?
1980 -1985
- ஆறாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் அடிப்படை நோக்கம் என்ன?
வறுமை ஒழிப்பு மற்றும் தொழில்துறை தற்சார்பு
- வறுமை ஒழிப்பு (GARIBI HATAO) என்பது எதனுடைய லட்சியம்?
ஆறாம் ஐந்தாண்டு திட்டம்
- ஆறாம் ஐந்தாண்டுத் திட்டம் எதனை அடிப்படையாகக் கொண்டது ?
முதலீட்டுத் திட்டம்
- ஆறாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் வளர்ச்சி இலக்கு என்ன?
5.2 சதவீதம்
- ஆறாம் ஐந்தாண்டுத் திட்டம் எத்தனை சதவீத வளர்ச்சி எட்டப்பட்டது ?
5.7%
- ஏழாம் ஐந்தாண்டு திட்டத்தின் காலம் என்ன ?
1985- 1990
- ஏழாம் ஐந்தாண்டு திட்டத்தின் நோக்கம் என்ன?
தன்னிறைவு பொருளாதாரத்தை உருவாக்குதல் மற்றும் ஆக்கபூர்வமான வேலைவாய்ப்பை வழங்குதல்
- எந்த ஐந்தாண்டு திட்டத்தில் முதல்முறையாக பொதுத்துறை க்கும் மேலாக தனியார் துறைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது ?
ஏழாம் ஐந்தாண்டு திட்டம்
- ஏழாம் ஐந்தாண்டு திட்டத்தின் வளர்ச்சி இலக்கு என்ன?
5.0 சதவீதம்
- ஏழாம் ஐந்தாண்டு திட்டம் எத்தனை சதவீதம் வளர்ச்சி காணப்பட்டது?
6%
- எப்போது இரு- ஓராண்டு திட்டங்கள் உருவாக்கப்பட்டது?
1990-91&1991-92
- எட்டாம் ஐந்தாண்டு திட்டத்தின் காலம் என்ன?
1992 -1997
- எட்டாம் ஐந்தாண்டு திட்டத்தில் எதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது?
வேலைவாய்ப்பு ,கல்வி, சமூக நலம் போன்ற மனிதவள மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு
- எந்த ஐந்தாண்டு திட்ட காலத்தில் இந்தியாவிற்கான புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது?
எட்டாம் ஐந்தாண்டு திட்டம்
- எட்டாம் ஐந்தாண்டு திட்டத்தின் வளர்ச்சி இலக்கு என்ன ?
5.6%
- எட்டாம் ஐந்தாண்டு திட்டம் எட்டிய வளர்ச்சி என்ன?
6.8 சதவீதம்
- ஒன்பதாம் ஐந்தாண்டு திட்டத்தின் காலம் என்ன?
1997 -2002
- ஒன்பதாம் ஐந்தாண்டு திட்டத்தில் எதற்கு முக்கிய கவனம் கொடுக்கப்பட்டது?
சமூக நீதியுடன் கூடிய சமமான வளர்ச்சி
- ஒன்பதாம் ஐந்தாண்டு திட்டத்தின் வளர்ச்சி இலக்கு என்ன?
7%
- ஒன்பதாம் ஐந்தாண்டு திட்டத்தில் இந்திய பொருளாதாரம் எத்தனை சதவீத வளர்ச்சியை அடைந்தது?
5.6 சதவீதம்
- பத்தாம் ஐந்தாண்டு திட்டத்தின் காலம் என்ன?
2002 -2007
- பத்தாம் ஐந்தாண்டு திட்டத்தின் இலக்கு என்ன?
10 ஆண்டுகளில் தலா வருவாயை இருமடங்காக உயர்த்துவது
- பத்தாம் ஐந்தாண்டு திட்டம் எந்த ஆண்டில் வறுமை விகிதத்தை 15 சதவீதமாக குறைக்கும் குறிக்கோளை கொண்டிருந்தது?
2012
- பத்தாம் ஐந்தாண்டு திட்டத்தின் வளர்ச்சி இலக்கு என்ன?
8%
- பத்தாம் ஐந்தாண்டு திட்டம் எட்டிய வளர்ச்சி எவ்வளவு?
7.2 சதவீதம்
- பதினொன்றாம் ஐந்தாண்டு திட்டத்தின் காலம் என்ன?
2007 -2012
- பதினொன்றாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன?
விரைவான மற்றும் அதிகமான உள்ளடக்கிய வளர்ச்சி
- 11ஆம் ஐந்தாண்டு திட்டத்தின் வளர்ச்சி இலக்கு என்ன?
8.7%
- பதினொன்றாம் ஐந்தாண்டு திட்டம் எட்டிய வளர்ச்சி என்ன?
7.9 சதவீதம்
- பன்னிரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தின் நோக்கம் என்ன?
விரைவான அதிகமான உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சி
- பன்னிரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தின் வளர்ச்சி இலக்கு என்ன?
8%
- நிதி ஆயோக் என்னும் அமைப்பு எப்போது ஏற்படுத்தப்பட்டது?
ஜனவரி 1, 2015
- எந்த ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் முன்னேற்ற கூட்டமைப்பு ஒவ்வொரு ஆண்டும் மனித மேம்பாட்டு அறிக்கையை வெளியிடுகிறது?
1990
- மனித வள மேம்பாட்டு குறியீடு எத்தனை குறியீடுகளை அடிப்படையாக கொண்டது?
3 (வாழ்நாள், கல்வி, வாழ்க்கை தரம்)
- மனித வள மேம்பாட்டு குறியீடு என்பதை யார் 1990 இல் மேம்படுத்தினர்?
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பொருளியல் அறிஞர் மகபூப் உள் ஹக் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த அமர்த்தியா குமார் சென்
- பரிமாண குறியீடின் சமன்பாடு என்ன?
[ உண்மை மதிப்பு -குறைந்தபட்சம் மதிப்பு]/ [அதிகபட்ச மதிப்பு- குறைந்தபட்ச மதிப்பு]
- திட்டக்குழுவின் எந்த ஆண்டு மனித மேம்பாட்டு அறிக்கையின்படி மனித வளர்ச்சி குறியீடு 1980 முதல் 2011 வரை குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறியுள்ளது?
2011
- மனித மேம்பாட்டு குறியீட்டுக்காண கணக்கீடானது மனித வளர்ச்சிக்கான முக்கிய அம்சங்களை புறக்கணித்து உள்ளது என்று கூறியவர் யார்?
பிஸ்வஜித்குஹா
- HDI1,HDI2,HDI3 & HDI4 என்ற நான்கு விதமான மனித மேம்பாட்டு குறியீடுகளை உருவாக்கி உள்ளவர் யார்?
பிஸ்வஜித்குஹா
- PQLIன் விரிவாக்கம் என்ன?
Physical quality of life index
- செய்திறன் குறியீட்டெண் அல்லது வாழ்க்கைத்தர குறியீட்டு எண்ணை உருவாக்கியவர் யார் ?
மோரிஸ் டி.மோரிஸ்
- ஒரு நாட்டின் வாழ்க்கை தரத்தினை அளவிடப் பயன்படும் குறியீட்டு எண் எது?
செய்திறன் குறியீட்டெண் அல்லது வாழ்க்கைத்தர குறியீட்டு எண்(PQLI)
- செய்திறன் குறியீட்டெண் அல்லது வாழ்க்கைத்தர குறியீட்டு எண்ணை அளவிடப் பயன்படும் குறியீடுகள் என்னென்ன?
எதிர்பார்ப்பு ஆயுட்காலம் ,குழந்தை இறப்பு வீதம் மற்றும் எழுத்தறிவு வீதம்
- ஒரு நாட்டின் மோசமான செயல்பாட்டைக் குறிக்கும் செய்திறன் குறியீட்டெண் அல்லது வாழ்க்கைத்தர குறியீட்டு எண்ணை எது?
1
- ஒரு நாட்டின் மிகச்சிப்பான செயல்பாட்டைக் குறிக்கும் செய்திறன் குறியீட்டெண் அல்லது வாழ்க்கைத்தர குறியீட்டு எண்ணை எது?
100
- செய்திறன் குறியீட்டு எண்ணில் எதிர்பார்க்கப்படும் ஆயுளுக்கான குறியீட்டில் மேல் எல்லையான 100 என்பதை 77 வருட ஆயுளுக்கு வழங்கப்பட்டது .இக்குறியீடு 1973 ஆம் ஆண்டே அடைந்துவிட்ட நாடு எது?
ஸ்வீடன்
- 1 என்ற கீழ் எல்லையானது 28 வருட ஆயுளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை எந்த நாடு 1960 இல் பெற்றுள்ளது?
கயானா-பிசாவு
- PQLI மற்றும் HDI இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன?
HDIல் வருமானம் சேர்க்கப்படுகிறது PQLIலிருந்து வருமானம் நீக்கப்படுகிறது. உடல் மற்றும் பணம் சார்ந்த மேம்பாட்டை HDIல் குறிப்பிடுகிறது. உடல் சார்ந்த மேம்பாட்டை மட்டுமே PQLI குறிக்கிறது
11TH ECONOMICS STUDY NOTES |இந்திய பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services