- புதிய பொருளாதார கொள்கையின் மூன்று முக்கிய தூண்களாக இருப்பவை எவை ?
தாராளமயம், தனியார்மயம் மற்றும் உலகமயமாதல்
- தொழில் துறை மீது அரசு கட்டுப்பாடுகளை எல்லா நிலைகளிலும் நீக்குவதையோ அல்லது தளர்த்துவதையோ குறிப்பது எது?
தாராளமயமாக்குதல்
- பொதுத்துறையின் நிர்வாகம் மற்றும் உரிமையை தனியாருக்கு மாற்றுவதை குறிப்பது எது?
தனியார்மயமாக்குதல்
- உள்நாட்டு பொருளாதாரத்தையும் ஏனைய உலக பொருளாதாரத்தையும் இணைப்பது எவ்வாறு அழைக்கப்படும்?
உலகமயமாதல்
- பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை பிற தனியார் நிறுவனங்கள் அல்லது வங்கிகளுக்கு விற்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
முதலீட்டு விளக்கம்(Disinvestment)
- 2016 இல் இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தியின் அளவு எவ்வளவாக இருந்தது?
2251 பில்லியன் அமெரிக்க டாலர்
- நாணய மாற்று வீதத்தின் அடிப்படையில் உலக மொத்த ஜிடிபி மதிப்பில் இந்தியாவின் பங்கு எத்தனை விழுக்காடு?
2.99%
- இந்தியா உலக மக்கள் தொகையில் எவ்வளவு சதவீதத்தைக் கொண்டுள்ளது?
17.5%
- உலக நிலப்பரப்பில் இந்தியா எத்தனை சதவீதத்தைக் கொண்டுள்ளது?
2.4 சதவீதம்
- ஆசிய நாடுகளில் மொத்த உற்பத்தியில் இந்தியா எத்தனாவது இடத்தில் உள்ளது?
மூன்றாவது இடம்
- ஆசிய நாடுகளில் மொத்த உற்பத்தியில் முதல் இரண்டு இடங்களை வகிக்கும் நாடுகள் என்னென்ன?
சீனா மற்றும் ஜப்பான்
- புதிய தொழில் கொள்கையை இந்தியப் பிரதமர் எப்போது அறிவித்தார்?
ஜூலை 24,1991
- 1991 புதிய தொழில் கொள்கையின் மிக முக்கிய அம்சம் எது ?
தொழிலுக்கு உரிமம் பெறுவதிலிருந்து விலக்களித்தல் மற்றும் சிவப்பு நாடா முறையை முடிவுக்குக் கொண்டு வருதல்
- புதிய தொழில் கொள்கையின் கீழ் எந்த மூன்று துறைகள் மட்டும் பொதுத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன?
அனுசக்தி, சுரங்கம் மற்றும் ரயில்வே
- பொருளாதார போட்டி நடைமுறைகளை கண்காணிக்கும் பொருட்டு போட்டி குழு எப்போது ஏற்படுத்தப்பட்டது?
2010
- 1991 இன் படி எத்தனை சதவீத பங்குகள் வரை வெளிநாட்டு நேரடி முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டது?
50 சதவீத பங்குகள்
- எப்போது பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது?
18 ,பிப்ரவரி 2016
- பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் படி கோடைகால பயிர்களுக்கு எத்தனை சதவீதம் சந்தா தொகை கட்ட உதவுகிறது ?
2%(குறுவை சாகுபடி பெயர்களுக்கு 1.5% )
- பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் படி தோட்டப்பயிர்கள் மற்றும் பணப் பயிர்களுக்கு வருடாந்திர சந்தா எவ்வளவாக இருக்கும்?
5%
- இந்தியா காய்கறி உற்பத்தியில் எத்தனையாவது மிகப்பெரிய உற்பத்தியாளராக விளங்குகிறது?
இரண்டாவது
- எந்த ஆண்டு சட்டத்தின் படி குளிர்பதன கிடங்கு ஆணை 1964 ஏற்படுத்தப்பட்டது?
1955 ஆம் ஆண்டு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் மூன்றாவது பிரிவு
- எந்த ஆண்டில் இந்திய மைய வங்கி மற்றும் ” விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி ” ஆகியவற்றால் உழவர் கடன் அட்டை தொடங்கப்பட்டது?
1998
- NABARD ன் விரிவாக்கம் என்ன ?
National bank for agriculture and rural development
- ICARன் விரிவாக்கம் என்ன?
Indian council of agricultural research
- வேளாண்மை அல்லது தோட்டப்பயிர்கள் அல்லது கால்நடை பொருட்களை வர்த்தகம் செய்வதற்கு மாநில அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வமான அமைப்பு எது?
விவசாய பொருட்களுக்கான அங்காடி குழு
- APMC ன் விரிவாக்கம் என்ன?
Agricultural produce Market committee
- எந்த ஆண்டு 1500க்கும் மேற்பட்ட பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டது?
2001
- யார் தலைமையிலான குழுவின் அறிக்கை இறக்குமதிக்கான தீர்வைகளை பெருமளவு குறைக்க பரிந்துரை செய்தது?
ராஜா செல்லையா குழு
- ஏற்றுமதி உதவிகளை 25 சதவீத அளவு குறைக்கவும் இந்திய பொருட்களை ஊக்குவிக்கவும் என்ன கருத்தாக்கம் உருவாக்கப்பட்டது?
இந்திய தயாரிப்பு (make in india)
- எப்போது சிறப்பு பொருளாதார மண்டல கொள்கை உருவாக்கப்பட்டது?
2000, ஏப்ரல் மாதம்
- SEZன் விவாகம் என்ன?
Special economic zones
- EPZன் விவாகம் என்ன?
Export processing zone
- ஆசியாவின் முதல் ஏற்றுமதி செயலாக்க மண்டலத்தை இந்திய அரசு எப்போது துவங்கியது?
1965
- ஆசியாவின் முதல் ஏற்றுமதி செயலாக்க மண்டலத்தை 1965ல் இந்திய அரசு எந்த இடத்தில் தொடங்கியது?
காண்ட்லா
- பண்டங்கள் மற்றும் சேவைகள் மீதான வரி எப்போது பாராளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது ?
மார்ச் 29,2017
- பண்டங்கள் மற்றும் சேவைகள் மீதான வரி எப்போது முதல் நடைமுறைக்கு வந்தது?
2017 ஜூலை
- 1991 ஆம் ஆண்டு யாருடைய குழுவின் பரிந்துரையின்படி சட்டரீதியான நீர்மை விகிதம் மற்றும் ரொக்க இருப்பு விகிதம் குறைக்கப்பட்டது?
நரசிம்ம குழு
- SLRன் விரிவாக்கம் என்ன?
Statutory liquidity ratio
- CRRன் விரிவாக்கம் என்ன?
Cash reserve ratio
- எந்தக் குழுவின் அறிக்கையின் படி வாராக்கடன் மற்றும் சொத்து மதிப்பை கணக்கிட புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டது?
நரசிம்ம குழு
- எப்போது GDP 2 டிரில்லியன் டாலரை கடந்தது?
2015- 16
- GDPஐப் பொறுத்து நமது நாடு தற்போது எத்தனாவது இடத்தில் உள்ளது?
9வது இடம்
11TH ECONOMICS STUDY NOTES | இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services