- பாஸ்போரைஸ் குளோரைடினைக் கண்டறிந்தவர் யார்?
சார்லஸ் அடால்ஃப் உர்ட்ஸ்
- சார்லஸ் அடால்ஃப் உர்ட்ஸ் வேறு என்ன வினைகளை கண்டறிந்துள்ளார்?
அமீன்,கிளைக்கால் மற்றும் ஆல்டால் குறுக்க வினை
- கார்பன் மற்றும் ஹைட்ரஜனை மட்டுமே கொண்டுள்ள கரிமச் சேர்மங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
ஹைட்ரோகார்பன்கள்
- மாம்பழம் என்ன ஹைட்ரோ கார்பனை கொண்டுள்ளது?
சைக்கிளோஹெக்சேன்
- கரப்பான் பூச்சிகள் தங்கள் எதிர் பாலினத்தை கவர ஹைட்ரோ கார்பனை சுரக்கிறது ?
அன்டெக்கேன்
- திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு எவற்றின் கலவை?
புரப்பேன் மற்றும் பியூட்டேன்
- கார்பன் அணுக்களைக்கிடையே உள்ள பிணைப்பின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு ஹைட்ரோகார்பன்கள் எத்தனை வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன?
அலிபாட்டிக் மற்றும் அரோமேட்டிக்
- அலிபாட்டிக் என்ற வார்த்தை எதிலிருந்து பெறப்பட்டது?
கிரேக்க வார்த்தையான “alephar” பொருள் கொழுப்பு
- அலிபாட்டிக் ஹைட்ரோகார்பன்களின் முக்கிய மூலங்கள் என்னென்ன ?
எண்ணெய் மற்றும் கொழுப்புகள்
- அரோமா என்ற வார்த்தைக்கு என்ன பொருள் ?
மணமுடையது
- அலிபாட்டிக் ஹைட்ரோ கார்பன்கள் எத்தனை வகைகளை கொண்டது ?
மூன்று : ஆல்கேன்கள், ஆல்கீன்கள்,ஆல்கைன்கள்
- ஆல்கேன்களில் கார்பன் அணுக்களுக்கு இடையே உள்ள பிணைப்புகள் அனைத்தும் எத்தனை பிணைப்புகளாக உள்ளன?
ஒற்றைப் பிணைப்புகள்
- ஆல்கீன்களில் கார்பன் அணுக்களுக்கு இடையே உள்ள பிணைப்புகள் அனைத்தும் எத்தனை பிணைப்புகளாக உள்ளன?
குறைந்தது ஒரு இரட்டைப்பிணைப்பு
- ஆல்கைன்களில் கார்பன் அணுக்களுக்கு இடையே உள்ள பிணைப்புகள் அனைத்தும் எத்தனை பிணைப்புகளாக உள்ளன?
குறைந்தது ஒரு முப்பிணைப்பு
- உள்ளடங்கிய கார்பன் -கார்பன் பன்மை பிணைப்பினை பெற்றுள்ள ஹைட்ரோகார்பன்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
நிறைவுறா ஹைட்ரோகார்பன்கள்
- பென்சீன் வளையம் அல்லது அதன் பெறுதிகளைப் பெற்றிருக்கக் கூடிய வளையச் சேர்மங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள்
- நிறைவுற்ற ஹைட்ரோ கார்பனான ஆல்கேன்களின் பொதுவான வாய்ப்பாடு எது?
CnH2n+2
- ஆல்கேன் குடும்பத்தின் முதல் சேர்மம் எது?
மீத்தேன் CH4
- ஆல்கேன் குடும்பத்தின் படி வரிசையில் உள்ள அடுத்தடுத்த சேர்மங்கள் எந்த தொகுதியால் வேறுபடுகின்றன?
-CH2
- வியாழன், சனி ,யுரேனஸ் நெப்டியூன் ஆகிய கோள்களின் வழி மண்டலங்களில் முக்கிய கூறாக என்ன இடம்பெற்றுள்ளது ?
மீத்தேன்
- மீத்தேன் வாயு வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சதுப்பு நில வாயு
- நீர் மட்டும் மீத்தேன் வாயுவின் உறைந்த கலவையை குறிக்கும் சொல் எது?
எரியும் பனிக்கட்டி
- எரியும் பனிக்கட்டி வேதியியலில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மீத்தேன் கிளாத்திரேட்டுகள்
- ஆழ்கடலில் உருவாகும் மீத்தேனின் ஒவ்வொரு மூலக்கூறும் எவ்வளவு நீர் மூலக்கூறுகள் சூழப்பட்டு மீத்தேன் கிளாக்திரேட்டுகளாக உருவாகின்றன?
6 முதல் 18 நீர் மூலக்கூறுகள்
- அறை வெப்பநிலையில் பிளாட்டினம் அல்லது பெல்லேடியம் மீது ஆல்கீன் அல்லது ஆல்கைன்கள் மற்றும் ஹைட்ரஜன் வாயு கலவையை செலுத்துவதால் என்ன உருவாகின்றன?
ஆல்கேன்கள்
- நிறைவுறா சேர்மங்களுடன் ஹைட்ரஜனை சேர்ப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஹைட்ரஜனேற்றம்
- 298K வெப்பநிலையில் நிக்கல் வினையூக்கியை பயன்படுத்தி ஆல்கேனைப் பெறும் செயல்முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சாபாடியர்-சண்டர்சன்ஸ் வினை
- கார்பாக்சிலிக் தொகுதியை நீக்கும் செயல்முறைக்கு பெயர் என்ன ?
கார்பாக்சிலிக் நீக்கம்
- கார்பாக்சிலிக் அமிலத்தின் சோடியம் மற்றும் பொட்டாசியம் உப்பினை மின்னாற்பகுக்கும் போது என்ன உருவாகின்றன ?
உயர் ஆல்கேன்கள்
- உலர் ஈதரில் உள்ள ஹாலோ ஆல்கேன் கரைசலை உலோக சோடியத்துடன் வெளிப்படுத்தும்போது உயர் ஆல்கேன்கள் உருவாவது என்ன வினை?
உர்ட்ஸ் வினை
- ஆல்கைல் ஹாலைடும் லித்தியம் டை ஆல்கைல் குப்ரைட்டும் வினைப்பட்டு உயர் ஆல்கேனைத் தருவது என்ன வினை?
கோரி ஹவுஸ் வினைவழிமுறை
- ஈதர் முன்னிலையில் ஹாலோ ஆல்கேன்கள் மெக்னீசியத்துடன் வினைப்பட்டு, ஆல்கைல் மெக்னீசியம் ஹாலைடுகளைத் தருகின்றன இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கிரிக்னார்டு காரணி
- ஒவ்வொரு கார்பன் அணுவினை சேர்க்கும் போதும் தோராயமாக கொதிநிலையானது எவ்வளவு அதிகரிக்கின்றது?
30°C
- உலோக மேற்பரப்பு அரிப்பு ஏற்படாதவாறு பாதுகாக்கும் சிறந்த நீர் விலக்கும் காரணியாக செயல்படுபவை எவை?
ஆல்கேன்கள்
- ஆப்பிள் பழத்தின் மீது ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக பூசப்படும் மெழுகில் என்ன உள்ளன?
நீண்ட கிளைகளற்ற நெடுந்தொடர் ஆல்கேன்கள் (C27 H56 & C29H60)
- ஆல்கேன்கள் குடும்பம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பாராபின்கள்
- பாராபின்கள் என்பது எந்த மொழியிலிருந்து பெறப்பட்ட வார்த்தை?
இலத்தின் மொழி அதன் பொருள் குறைந்த வினைத்திறன் உடைய
- வெப்பத்தை பயன்படுத்தி காற்றில்லா சூழலில் கரிம சேர்மங்களை சிறு துகள்களாக மாற்றும் வெப்ப சிதைவு வினை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
காற்றில்லா வெப்பமூட்டல்
- காற்றில்லா வெப்பமூட்டல் ஆங்கிலத்தில் எவ்வாறு அழைக்கப்படும்?
பைரோலிசிஸ் (பைரோ என்பது நெருப்பு மற்றும் லைசிஸ் என்பது பிரித்தெடுத்தல்)
- ஆல்கேன்களை பைரோலிசிஸ் செய்வது எவ்வாறு பயிரிடப்படுகிறது?
பிளத்தல் (Cracking)
- ஒரு சேர்மம் அதனுடைய மாற்றிய அமைப்புகளில் ஏதேனுமாக மாறும் வேதி செயல்முறைக்கு பெயர் என்ன?
மாற்றியமாக்குதல்
- ஆல்கேன்களின் எரிதல் வினையானது என்ன வினை ?
வெப்ப உமிழ் வினை
- கார்பன் அணுக்களின் எண்ணிக்கை 1-4 இருந்தால் அறை வெப்ப நிலையில் காணப்படும் நிலைமை என்ன?
வாயு
- கார்பன் அணுக்களின் எண்ணிக்கை 1-4 இருந்தால் அவற்றின் பயன்கள் என்ன?
வெப்ப எரிபொருள் ,சமையல் எரி பொருள்
- கார்பன் அணுக்களின் எண்ணிக்கை 5-7 இருந்தால் அறை வெப்ப நிலையில் காணப்படும் நிலைமை என்ன?
குறைந்து கொதிநிலை நீர்மம்
- கார்பன் அணுக்களின் எண்ணிக்கை 5-7 இருந்தால் அவற்றின் பயன்கள் என்ன?
கரைப்பான்கள், எரிவாயு
- கார்பன் அணுக்களின் எண்ணிக்கை 6-12 இருந்தால் அறை வெப்ப நிலையில் காணப்படும் நிலைமை என்ன?
நீர்மம்
- கார்பன் அணுக்களின் எண்ணிக்கை 6-12 இருந்தால் அவற்றின் பயன்கள் என்ன?
எரிவாயு
- கார்பன் அணுக்களின் எண்ணிக்கை 12-24இருந்தால் அறை வெப்ப நிலையில் காணப்படும் நிலைமை என்ன?
நீர்மம்
- கார்பன் அணுக்களின் எண்ணிக்கை 12-24 இருந்தால் அவற்றின் பயன்கள் என்ன?
ஜெட் எரிபொருள்- எடுத்துச் செல்லத்தக்க அடுப்புகளில் எரிபொருள்
- கார்பன் அணுக்களின் எண்ணிக்கை 18-50 இருந்தால் அறை வெப்ப நிலையில் காணப்படும் நிலைமை என்ன?
உயர் கொதிநிலை நீர்மம்
- கார்பன் அணுக்களின் எண்ணிக்கை 18-50 இருந்தால் அவற்றின் பயன்கள் என்ன?
டீசல் எரிபொருள் ,உயவுப்பொருள் ,வெப்பமூட்டும் ஏரி எண்ணெய்
- கார்பன் அணுக்களின் எண்ணிக்கை 50+ இருந்தால் அறை வெப்ப நிலையில் காணப்படும் நிலைமை என்ன?
திண்மம்
- கார்பன் அணுக்களின் எண்ணிக்கை 50+ இருந்தால் அவற்றின் பயன்கள் என்ன?
பெட்ரோலிய உறைகூழ்,பாரபின் மெழுகு
- கார்பன் கார்பன் இரட்டைப் இணைப்பை கொண்டுள்ள நிறைவுறா ஹைட்ரோ கார்பன்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஆல்கீன்கள்
- ஆல்கீன்களின் பொதுவான வாய்ப்பாடு என்ன?
CnH2n
- ஆல்கீன்கள் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஒலிஃபீன்கள்
- ஒலிஃபீன்கள் எந்த மொழியிலிருந்து பெறப்பட்ட வார்த்தை?
இலத்தீன் மொழி அதன் பொருள் எண்ணெய் உருவாக்கி
- ஆல்கீன் குடும்பத்தில் உள்ள எந்த சேர்மம் முதல் கட்டமைப்பு மாற்றியம் காணப்படுகிறது?
பியூட்டீன்
- ஒத்தத் தொகுதிகள் ஒரே புறத்தில் அமைந்தால் அத்தகைய வடிவமாற்றியம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சிஸ் மாற்றியம்
- ஒத்தத் தொகுதிகள் எதிரெதிர் புறங்கழில் அமைந்தால் அத்தகைய வடிவமாற்றியம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
டிரான்ஸ் மாற்றியம்
- கந்தகம் அல்லது பெட்ரோலால் பகுதி கிளர்வு நீக்கம் செய்யப்பட்ட பெலேடியத்தில் வைக்கப்பட்டுள்ள CaCO3 எவ்வாறு அழைக்கப்படுகிறது?
லிண்ட்லர் வினையூக்கி
- நீர்ம அம்மோனியாவில் உள்ள எதன் முன்னிலையில் ஆல்கைன்களை ,டிரான்ஸ் ஆல்கீன்களாக ஒடுக்கலாம்?
சோடியம்
- ஆல்கீன்களின் முதல் மூன்று சேர்மங்கள் என்ன நிலையில் காணப்படுகின்றன ?
வாயு நிலை
- ஆல்கீன்களின் முதல் மூன்று சேர்மங்களை அடுத்து வருகின்ற 14 ஆல்கீன்கள் என்ன நிலையில் காணப்படுகின்றன ?
நீர்மம் நிலை
- உயர் ஆல்கீன்கள் என்ன நிலையில் காணப்படுகின்றன?
திண்ம நிலை மெழுகுககளாக
- புரோமின் நீர் என்ன நிறத்தை உடையது?
செம்பழுப்பு நிறம்
- பொதுவாக ஆல்கீன்கள் எதனுடன் வினை புரிவதில்லை?
நீர்
- ஓசோனை பயன்படுத்தி ஆல்கீன்கள் மற்றும் ஆல்கைன்களை, ஆக்சிஜனேற்ற பிளவிற்கு உட்படுத்தும்,வினைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஓசோனேற்ற வினைகள்
- கார்பன் கார்பன் முப்பிணைப்பை கொண்டுள்ள நிறைவுறா ஹைட்ரோ கார்பன்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
ஆல்கைன்கள்
- ஆல்கைன்களின் பொதுவான வாய்ப்பாடு என்ன?
CnH2n-2
- ஆல்கைன் படி வரிசையில் முதல் சேர்மமானது என்ன?
அசிட்டிலீன் (ஈத்தைன்)
- ஆக்சி-அசிட்டிலீன் தீச்சுடர்கள் எவற்றிற்கு பயன்படுகிறது?
உலோகங்களை வெட்டவும் ஒட்டவும்
- ஒரே கார்பன் அணுவில் இரண்டு ஹாலஜன் அணுக்கள் இருப்பின் அச்சேர்மம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஜெம் டை ஹாலைடு
- ஆல்கைன்களின் படி வரிசையில் முதல் மூன்று சேர்மங்கள் என்ன நிலையில் உள்ளன?
வாயுக்கள்
- ஆல்கைன்களின் படி வரிசையில் முதல் மூன்று சேர்மங்களை அடுத்துள்ள எட்டு சேர்மங்கள் என்ன நிலையில் உள்ளன?
நீர்மம்
- உயர் ஆல்கைன்கள் என்ன நிலையில் உள்ளன?
திடநிலை
- அசிட்டிலீன் என்ன மணமுடையது?
பூண்டின் மணம்
- முப்பிணைப்பு கார்பனில் ஹைட்ரஜன் கொண்ட ஆல்கைன்கள் என்ன தன்மை உடையது ?
அமிலத்தன்மை
- ஆல்கைன்கள் எத்தனை வகையான பலபடியாக்கல் வினைக்கு உட்படுகின்றன?
இரண்டு: நேரிய பலபடியாக்கல் மற்றும் வளைய பலப்படியாக்கல்
- மெத்தில் பென்சீன் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
டொலுயீன்
- டைமெத்தில் பென்சீன் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சைலீன்
- அரோமேட்டிக் தன்மை என்பது எலக்ட்ரான் அமைப்பைப் பொருத்து அமைகிறது என கூறியவர் யார்?
ஹக்கல்
- 1865ல் பென்சீனில் உள்ள ஆறு கார்பன் அணுக்களும் சமதள வளைய அமைப்பினை பெற்றிருப்பதுடன் கார்பன் கார்பன் ஒற்றை பிணைப்பும் இரட்டைப் பிணைப்பும் மாறி மாறி அமைந்திருக்கும் என அறிவித்தவர் யார்?
ஆகஸ்ட் கெக்குலே
- அமைவிடங்கள் மாற்றாமல் ஓர் சேர்மத்திற்கு 2 அதற்கு மேற்பட்ட அமைப்புகளை எழுத முடியுமானால் அந்த நிகழ்வுக்கு என்ன பெயர்?
உடனிசைவு
- கச்சா எண்ணெய்யின் 350-449K வெப்பநிலையில் என்ன பகுதிப் பொருட்கள் பெறப்படுகின்றன?
பென்சீன்,பொலுயீன்,சைலீன்
- நடுத்தரச் செறிவு எண்ணெய்யின் 443-503K வெப்பநிலையில் என்ன பகுதிப் பொருட்கள் பெறப்படுகின்றன?
பீனால்,நாப்தலீன்
- மிகைச்செறிவு எண்ணெய்யின் 503-543K வெப்பநிலையில் என்ன பகுதிப் பொருட்கள் பெறப்படுகின்றன?
நாப்தலீன்,கிரசால்
- நிலக்கீழ் எண்ணெய்யின் 543-633K வெப்பநிலையில் என்ன பகுதிப் பொருட்கள் பெறப்படுகின்றன?
ஆன்திரசீன்
- வாலை எச்சத்தின் 633K வெப்பநிலையில் என்ன பகுதிப் பொருட்கள் பெறப்படுகின்றன?
சக்கை
- பீனால் ஆவியினை தூய ஜின்க் மீது செலுத்தும் போது அது என்னவாக ஒடுக்கம் அடைகிறது?
பென்சீன்
- உர்ட்ஸ்-பிட்டிக் வினையில்,உலர் ஈதர் முன்னிலையில் புரோமோ பென்சீன் மற்றும் அயோடா மீத்தேன் கரைசலை,உலோக சோடியத்துடன் வினைப்படுத்தும்போது என்ன உருவாகிறது?
பொலுயீன்
- நீரற்ற அலுமினியம் குளோரைடு முன்னிலையில் பென்சீனை மெத்தில் குளோரைடுடன் வினைப்படுத்தும்போது என்ன கிடைக்கின்றது?
டொலுவீன்
- பென்சீன் என்ன நிறமுடைய நீர்மம் ?
நிறமற்றது
- ஆல்கேன்கள் மற்றும் ஆல்கீன்கள் வழக்கமாக என்ன நிற சுவாலையுடன் எரியும்?
நீல நிறம்
- பிளாட்டினம் அல்லது பெல்லேடியப் முன்னிலையில் பென்சீன் ஹைட்ரஜனுடன் இணைந்து எதனை தருகிறது ?
வளையஹெக்சேன்
11TH CHEMISTRY STUDY NOTES |ஹைட்ரோ கார்பன்கள்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services