- ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றிற்கு பெயரிட்டவர் யார் ?
லவாய்சியர்
- எந்த ஆண்டு லவாய்சியர் வேதிப்பெயரிடுதலுக்கான புதிய முறையை அறிமுகப்படுத்தினார் ?
1787
- ஒரு எலக்ட்ரான் மற்றும் ஒரு புரோட்டானை கொண்டுள்ள மிக எளிமையான அணு எது ?
ஹைட்ரஜன்
- ஹைட்ரஜனின் எலக்ட்ரான் அமைப்பு என்ன?
1S1
- கார உலோகங்களின் அயனியாக்கும் ஆற்றலின் மதிப்பு எவ்வளவு ? 377 முதல் 520 KJmol-1 வரை
- ஹைட்ரஜனின் அயனியாக்கும் ஆற்றல் எவ்வளவு?
1314 KJmol-1
- ஹைட்ரஜன் ஒரு எலக்ட்ரானை ஏற்றுக்கொண்டு என்ன அயனியை உருவாக்குகிறது?
ஹைட்ரைடு அயனி
- ஹைட்ரஜன் இயற்கையில் கிடைக்கப்பெறும் எத்தனை ஐசோடோப்புகளைப் பெற்றுள்ளது?
மூன்று ஐசோடோப்புகள் : புரோட்டியம்,டியூட்டிரியம் மற்றும் டிரிட்டியம்
- இயற்கையில் கிடைக்கப்பெறும் ஹைட்ரஜன் ஐசோடோப்புகளில் அதிக அளவில் காணப்படுவது எது?
புரோட்டியம் (99.985%)
- நியூட்ரானை பெற்றிருக்காத ஒரே ஐசோடோப்பு எது?
புரோட்டியம்
- டியூட்டிரியம் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
கன ஹைட்ரஜனும்
- டியூட்டிரியம் எந்த அளவு மட்டுமே கிடைக்கிறது?
0.015%
- கதிர் இயக்கத் தன்மையுடைய டிரிட்டியம் என்ற ஹைட்ரஜன் ஐசோடோப் தோராயமாக எத்தனை ஹைட்ரஜன் அணுக்களுக்கு ஒரு டிரிட்டியம் அணு என்ற விகிதத்தில் உள்ளது?
10^18 ஹைட்ரஜன் அணுக்கள்
- ஹைட்ரஜன் அணுக்கருக்களின் சுழற்சி ஒரே திசையில் இருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
ஆர்த்தோ – ஹைட்ரஜன்
- ஹைட்ரஜன் அணுக்கருக்களின் சுழற்சி வெவ்வேறு திசையில் இருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பாரா- ஹைட்ரஜன்
- அறை வெப்ப நிலையில் சாதாரண ஹைட்ரஜனில் எத்தனை சதவீதம் ஆர்த்தோ,பாரா வகைகள் உள்ளன?
75% ஆர்த்தோ, 25% பாரா
- ஆர்த்தோ ஹைட்ரஜன் மற்றும் பாரா ஹைட்ரஜன் இரண்டில் அதிக நிலைப்புத் தன்மை உடையது எது ?
ஆர்த்தோ ஹைட்ரஜன்
- எந்த வினைவேகமாற்றிகளை சேர்ப்பதன் மூலம் பாரா ஹைட்ரஜனை ஆர்த்தோ ஹைட்ரஜனாக மாற்றலாம் ?
பிளாட்டினம், இரும்பு போன்றவைகள்
- பாரா ஹைட்ரஜனின் உருகுநிலை எவ்வளவு?
13.83K
- ஆர்த்தோ ஹைட்ரஜனின் உருகுநிலை எவ்வளவு?
13.95K
- பாரா ஹைட்ரஜனின் கொதிநிலை எவ்வளவு ?
20.26K
- ஆர்த்தோ ஹைட்ரஜனின் கொதிநிலை எவ்வளவு?
20.39K
- பாரா ஹைட்ரஜனின் காந்தத் திருப்புத்திறன் எவ்வளவு?
பூஜ்ஜியம்
- ஆர்த்தோ ஹைட்ரஜனின் காந்தத் திருப்புத்திறன் எவ்வளவு?
புரோட்டானைப்போல இரண்டு மடங்கு
- ஹைட்ரோகார்பன்களை நீராவியுடன் கலந்து எவ்வளவு வெப்பநிலையில் எவ்வளவு அழுத்தத்தில் நிக்கல் வினைவேக மாற்றியின் மீது செலுத்தி ஹைட்ரஜன் பெறப்படுகிறது?
800-900°C,35 atm
- கல்கரியின் மீது நீராவியை செலுத்தி கார்பன் மோனாக்சைடு ,ஹைட்ரஜன் பெறப்படுகின்றன இம்முறையில் பெறப்படும் வாயுக்கள் அடங்கிய கலவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நீர் வாயு
- நீர் வாயு வேறு எவ்வாறு அழைக்கப்படும்?
தொகுப்பு வாயு
- எந்த உலோகங்களை நீர்த்ஊ அமிலங்களுடன் வினைபுரியச் செய்வதன் மூலம் ஹைட்ரஜனை எளிதில் தயாரிக்க இயலும் ?
துத்தநாகம் ,இரும்பு ,வெள்ளீயம் போன்ற உலோகங்கள்
- சாதாரண நீரில் எவ்வளவு சதவீதம் கனநீர் உள்ளது?
1.6×10-4
- அணுக்கரு பிளவு உலையில் லித்தியத்தின் மீது மெதுவாக இயங்கும் நியூட்ரானை மோத செய்து செயற்கை முறையில் எது பெறப்படுகிறது?
டிரிட்டியம்
- ஹைட்ரஜன் ஒளி இல்லாத நிலையில் எதனுடன் வெடிக்கும் தன்மையுடைய வினை நிகழ்கிறது ?
புளூரின்
- ஒளி உள்ளநிலையில் ஹைட்ரஜன் எதனுடன் அறை வெப்பநிலையில் வினைபுரிகிறது?
குளோரின்
- அயோடினுடன் ஹைட்ரஜன் நிகழ்த்தும் வினை எது?
ஒளி வேதிவினை
- ஹைட்ரைடுகளில் ஹைட்ரஜனின் ஆக்சிஜனேற்ற நிலை என்ன?
-1
- கரிம வேதியியலில் தொகுப்பு முறையில் சேர்மங்களை தயாரிக்கும்போது எது ஒடுக்க வினை பொருளாக பயன்படுகிறது?
ஹைட்ரைடுகள்
- டியூட்டிரியம் ஆக்ஸிஜனுடன் வினைபுரிந்து எதனை தருகிறது?
டியூட்ரியம் ஆக்சைடு என்ற கனநீர்
- டிரிட்டியம் என்ன துகளை உமிழும் கதிரியக்க தனிமமாகும்?
பீட்டா துகள்
- டிரிட்டியம் அரை ஆயுட்காலம் எவ்வளவு?
12.3 ஆண்டுகள்
- தொழிற்சாலைகளில் பெருமளவில் கரைப்பானாக பயன்படுத்தப்படும் மெத்தனாலை கார்பன் மோனாக்சைடிலிருந்து எதனை வினையூக்கியாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது?
தாமிரம்
- எதைப் பயன்படுத்தி நிறைவுறாத கொழுப்பு எண்ணெய்களை, வனஸ்பதி என்றழைக்கப்படும் நிறைவுற்ற கொழுப்புகள் ஆக மாற்றலாம்?
Pt/H2
- அனுநிலை ஹைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜன்- ஆக்ஸிஜன் கலவையானது எதற்கு பயன்படுகிறது?
உலோகங்களையும் ஒட்டவும் வெட்டவும்
- நீர்ம ஹைட்ரஜன் எங்கு பயன்படுகிறது?
ராக்கெட்டுகளை உந்தித்தள்ளும் எரிபொருளாக
- ஹைட்ரஜன் சேர்மங்களின் மிக அதிக அளவு இயற்கையில் கிடைப்பது எது?
நீர்
- நமது உடலில் எத்தனை சதவீதம் நீரினை கொண்டுள்ளது?
65%
- பூமியில் வெப்பநிலை 300Kல் ஆர்த்தோ மற்றும் பாரா விகிதம் எவ்வளவு?
3:1
- அதிக பாரா நீர் எங்கு காணப்படுகிறது?
நட்சத்திரக் கூட்டங்களில்
- நீரின் ஆர்த்தோ மற்றும் பாரா விகிதம் எவ்வளவு?
2:5:1
- குளோரின் நீருடன் வினைபுரிந்து எவற்றை தரும் ?
ஹைட்ரோகுளோரிக் அமிலம் ,ஹைப்போகுளோரஸ் அமிலம்
- கடின நீரில் காணப்படும் அயனிகள் என்னென்ன?
பெரும்பாலும் கால்சியம் மற்றும் மெக்னீசியம் ,சில இடங்களில் இரும்பு ,அலுமினியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற உலோகங்களின் அயனிகள்
- கால்சியம் மற்றும் மெக்னீசியம் நீரில் கரையும் உப்புகள் இல்லாத நீர் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
மென்னீர்
- நீரின் கடினத்தன்மை எத்தனை வகைப்படும்?
2 :தற்காலிக கடினத்தன்மை மற்றும் நிரந்தர கடினத்தன்மை
- தற்காலிக கடினத்தன்மைக்கு முதன்மை காரணம் எது ?
நீரில் கரையக்கூடிய கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றின் பைகார்பனேட் உப்புகள் காணப்படுதல்
- தற்காலிக கடினத்தன்மையை எவ்வாறு நீக்கலாம்?
நீரை கொதிக்க வைத்த பின் வடி கட்டுவதன் மூலம்
- என்ன முறையினைப் பயன்படுத்தி தற்காலிக கடினத்தன்மை நீக்கப்படுகிறது ?
கிளார்க் முறை
- கிளார்க் முறையில் எது கணக்கிடப்பட்ட அளவில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் அயனிகளை கொண்டுள்ள கடின நீருடன் சேர்க்கப்படுகிறது?
சுண்ணாம்பு நீர்
- எந்த உப்புகளினால் நிரந்தர கடினத் தன்மை ஏற்படுகிறது ?
மெக்னீஷியம் மற்றும் கால்சியம் ஆகிய உலோகங்களின் நீரில் கரையக்கூடிய குளோரைடு மற்றும் சல்பேட் உப்புகள்
- நிரந்தர கடினத்தன்மை எதனை சேர்ப்பதன் மூலம் நீக்கப்படுகிறது ?
சலவை சோடா
- 5000 பங்குள்ள சாதாரண நீரில் எத்தனை பங்கு கனநீர் காணப்படுகிறது?
ஒரு பங்கு
- கடின நீரில் சோப்புகளை பயன்படுத்தும்போது அவற்றின் தூய்மையாக்கும் திறன் என்னவாகும் ?
குறையும்
- கனநீர் அணுக்கரு உலைகளில் என்னவாக பயன்படுத்தப்படுகிறது ?
மட்டுப்படுத்தியாக, குளிர்விப்பானாக
- ஹைட்ரஜன் பெராக்சைடின் 30 சதவீத கரைசலானது எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
‘100 கன அளவு’ ஹைட்ரஜன் பெராக்சைடு
- திட்ட வெப்ப அழுத்த நிலையில் ‘100 கன அளவு’ ஹைட்ரஜன் பெராக்சைடை சூடுபடுத்தும் போது எவ்வளவு ஆக்சிஜன் வெளியேறுகிறது?
100ml
- ஹைட்ரஜன் பெராக்ஸைடு என்ன கலன்களில் சேமித்து வைக்கப்படுகிறது ?
நெகிழி கலன்கள்
- ஆக்சிஜனேற்றி மற்றும் ஆக்ஸிஜன் ஒடுக்கி ஆகிய இரண்டு வினைபொருட்களாகவும் செயல்படும் தன்மை உடையது எது? ஹைட்ரஜன் பெராக்சைடு
- ஹைட்ரைடுகள் எத்தனை வகையாக வகைப்படுத்தப்படுகின்றன?
மூன்று : எலக்ட்ரான் குறைபாடுடையவை(B2H6), எலக்ட்ரான் அதிகமாக உள்ள ஹைரைடுகள்(NH3,H2O) சரியான எலக்ட்ரானை கொண்டுள்ள ஹைரைடுகள் (CH4,C2H6,SiH4,GeH4)
- ஹைட்ரஜன் பிணைப்பு என்ன கோடுகளால் குறிக்கப்படுகிறது?
விடுபட்ட கோடுகள்
- எப்போது ராபர்ட் பாயில் உலோகங்களை அமிலங்களுடன் வினைபுரியச் செய்து தீப்பற்றும் வாயுவை உருவாக்கினார்?
1670
- எப்போது நிக்கோலஸ் லெமரி சல்பியூரிக் அமிலம் / இரும்பு வினையில் வெளிவரும் வாயு காரத்தில் வெடிக்கும் தன்மையுடையதை நிரூப்பித்தார்?
1700
- எப்போது ஹென்றி கேவென்டிஸ் ஜிங்க் உலோகம் ஹைட்ரோ குளோரிக் அமிலத்துடன் வினைபுரிந்து ஹைட்ரஜன் வாயு வெளிவருதலைக் கண்டறிந்து வாயுவை தனியே பிரித்தார்?
1766
- எப்போது ஃபெலிஸ் ஃபன்டான நீர்வாயு மாற்று நிலையைக் கண்டறிந்தார்?
1780
- எப்போது ஆண்டனி லவாய்சியர் தனிமத்தை ஹைட்ரஜன் எனப் பெயரிட்டார் (கிரேக்க மொழியில் நீர் உருவாக்கி எனப்பொருள்)?
1783
- எப்போது வில்லியம் நிக்கல்சன் மற்றும் ஆண்டனி கார்லிசில் நீரினை மின்னாற் பகுத்து ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் ஆகச் சிதைவுறச் செய்தார்?
1800
- எப்போது ஹம்ஃப்ரி டேவி எரிதல் மின்கலம் என்ற கருத்தைக் (concept) கண்டறிந்தார்?
- எப்போது ஃபிரான்காயிஸ் டி ரிவாஸ் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனைக் கொண்டு முதன் முதலில் உள் எரி எந்திரத்தை வடிவமைத்தார்?
1806
- எப்போது ஹம்ஃப்ரி டேவி வாயு ஹைட்ரேட்டுகளைக் கண்டறிந்தார்?
1811
- எப்போது L. தெனார்டு Bao,ல் இருந்து ஹைட்ரஜன் பெராக்சைடை உருவாவதை கண்டறிந்து தயாரித்தார்?1818 எப்போது மைக்கேல் ஃபாரடே மின்னாற்பகுப்பு விதிகளை வெளியிட்டார்?
1834
- எப்போது கிரஹாம் ஹைட்ரஜன் பெலேடியத்தால் உறிஞ்சப்படுவதைக் கண்டறிந்தார்?
1866
- எப்போது பால் செபாடியர் ஹைட்ரஜன் ஏற்றத்தை செபாடியர் வினையில் பயன்படுத்தினார்?
1897
- எப்போது ஜேம்ஸ் தீவார் ஹைட்ரஜனை திரவமாக்கினார்?
1898
- எப்போது P.L. சாரன்சன் ஹைட்ரஜன் அயனிச் செறிவைக் குறிக்கும் P. அளவீட்டு முறையை அறிமுகப்படுத்தினார்?
1909
- எப்போது ஃபிரிட்ஸ் ஹேபர், ஹேபர் முறைக்கு காப்புரிமைப் பெற்றார்?
1910
- எப்போது நீல்ஸ் ஃபோர் ரிட்பெர்க் வாய்பாடு கொண்டும் ஹைட்ரஜன் நிறமாலை கொண்டும், குவாண்டம் நிலையில் ஹைட்ரஜனின் ஆர்பிட்டால்களில் உள்ள எலக்ட்ரானின் அமைவிடத்தை தெளிவுற விவரித்தார்?
1913
- எப்போது மெக்கே – ஆர்த்தோ மற்றும் பாரா ஹைட்ரஜனைக் கண்டறிந்தார்?
1924
- எப்போது ஹரால்டு யுரே டியூட்ரியத்தைக் கண்டறிந்தார்?
1931
- எப்போது ஹரால்டு யுரே கனநீரைக் கண்டறிந்தார்?
1932
- எப்போது P. ஹேமட் மிக வலிமையுள்ள அமிலங்களின் அமிலச் சார்பினை முன் மொழிந்தார்?
1932
- எப்போது எர்ன்ஸ்ட் ரூதர்போர்டு, மார்க் ஒலிபண்ட் மற்றும் பால் ஹர்டெக் டிரிட்டியத்தைக் கண்டறிந்தார்?
1934
- எப்போது யூஜின் விக்னர் மற்றும் B. ஹன்டிங்க்டன் உலோக ஹைட்ரஜனைக் கண்டறிந்தார்?
1935
- எப்போது E.பின்ஹோல்ட், A.C.பாண்ட், H..ஷேலிங்ஷர் LiAIH4.-ஐக் கண்டறிந்தனர், மேலும் அதனை மிகச் சிறந்த ஒடுக்கும் வினைபொருளாக நிரூபித்தனர்.?
1947
- எப்போது பால்ஃட்டிங்ஸ் மற்றும் P.ஹர்டெக் முதன் முதலில் காற்றிலுள்ள டிரிட்யத்தைக் கண்டறிந்தனர்?
1950
- எப்போது அஹிரா ஃபியுஜிஸ்மா ஒளியால் தூண்டப்பட்ட நீரின் சிதைவு நிகழ்வினைக் கண்டறிந்தார்?
1967
- எப்போது அலெக்ஸாண்டர் கிளாஸ் மற்றும் போரிஸ் |. சென்டர் நிக்கல் ஹைட்ரஜன் மின்கலத்திற்கு காப்புரிமைப் பெற்றார்?
1971
- எப்போது சோலார் வாஸர்டோப் பேயர்ன் முதன் முதலில் சூரிய ஒளி கொண்டு ஹைட்ரஜன் தயாரிப்பு நிலையத்தைத் துவக்கினார்?
1990
- எப்போது பீட்டர் டோன்னிஸ் ஹைட்ரஜன் 15K-ல் மிக அதிபாயும் செயல் திறனைக் (Super fluidity) காட்டினார்?
2000
11TH CHEMISTRY STUDY NOTES |ஹைட்ரஜன்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services