- 1951 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசினைப் பெற்றவர் யார்?
கிளன் T.சீபார்க்
- கிளன் T.சீபார்க் எதற்காக நோபல் பரிசை பெற்றார்?
யுரேனியம்- வழி தனிமங்களின் கண்டுபிடிப்புக்காக
- ஆக்டினைடு தனிமங்கள் லாந்தனைடு தனிமங்களின் பண்புகள் உடன் ஒத்துப் போகின்றன என்பதை சோதனை மூலம் நிரூபித்து காட்டியவர் யார்?
கிளன் T.சீபார்க்
- முதல் வேதி தனிமங்களின் பட்டியலினை வெளியிட்டவர் யார் ?
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லவாய்சியர், 1789
- லவாய்சியர் எத்தனை தனிமங்கள் கொண்ட முதல் வேதி தனிமங்களின் பட்டியலை வெளியிட்டார்?
23 தனிமங்கள்
- லவாய்சியர் தனிமங்களை எத்தனை வகுப்புகளாக வகைப்படுத்தினார் ?
4
- லவாய்சியர் வகைப்படுத்திய நான்கு தொகுப்புகள் என்னென்ன?
அமிலத்தை உருவாக்கும் தனிமங்கள், வாயுக்களை ஒத்த
தனிமங்கள், உலோக தனிமங்கள் மற்றும் புவியின் புறப்பரப்பு தனிமங்கள்
- தற்போது வரை எத்தனை தனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளது?
118 தனிமங்கள்
- 118 தனிமங்களில் எத்தனை தனிமங்கள் இயற்கையில் கிடைக்கின்றன ?
அணு எண் ஒன்று முதல் தொண்ணூற்று இரண்டு வரையில் உள்ள தனிமங்கள்
- வேதி பண்புகளில் ஒத்துள்ள குளோரின், புரோமின், அயோடின் போன்ற தனிமங்களை மூன்று தனிமங்கள் கொண்ட ஒரு குழுவாக வகைப்படுத்தியவர் யார் ?
J.W.டாபரீனர் 1817
- மூன்று தனிமங்கள் கொண்ட ஒரு குழுவை J.W.டாபரீனர் எவ்வாறு அழைத்தார் ?
மும்மைத் தொகுதி
- நடுவில் உள்ள தனிமத்தின் அணு நிறையானது மற்ற இரு தனிமங்களின் அணு நிறைகளின் கூட்டுச்சராசரிக்உ ஏறத்தாழ சமமாக இருப்பது எதில்?
மும்மைத் தொகுதி
- 1862ல் தனிமங்களின் பண்புகள் அவற்றின் அணு நிறையோடு கொண்டுள்ள ஒரு தொடர்பினை எடுத்துக் கூறியவர் யார்?
A.E.B. டி.சான்கோர்டாய்ஸ்
- அணு நிறையினை குறிப்பிட எண்கள் என்ற வார்த்தையை பயன் படுத்தியவர் யார்?
A.E.B. டி.சான்கோர்டாய்ஸ்
- 1864ல் தனிமங்களை வகைப்படுத்தும் பொருட்டு எண்ம விதியினை முன்மொழிந்தவர் யார்?
J.நியூலண்ட்
- தனிமங்களை அவற்றின் அணு நிறைகளின் ஏறு வரிசையில் அமைக்கும் போது ஒவ்வொரு எட்டாவது தனிமத்தினுடைய பண்பும் முதலாவது தனிமத்தின் பண்புடன் ஒத்திருப்பது என்ன விதி?
எண்ம விதி
- எண்ம விதி எதுவரையிலான லேசான தனிமங்களுக்கு மட்டுமே சரியாக பொருந்தியது?
கால்சியம்
- 1868ல் தற்போதுள்ள நவீன ஆவர்த்தன அட்டவணையை ஒத்த ஒரு தனிம வரிசை அட்டவணையை உருவாக்கியவர் யார் ?
லோதர் மேயர்
- “தனிமங்களின் பண்புகள் அவற்றின் அணுநிறைகளின் ஆவர்த்தன சார்பாக அமைகின்றன” என்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஆவர்த்தன விதி
- ஆவர்த்தன விதி என்ள கருத்தினை முன்மொழிந்தவர் யார்?
டிமிரிட்டி மெண்டலீஃப்
- தனிமங்களின் அணு எண்ணிற்கும் உமிழப்பட்ட X சிறப்பு கதிர்களின் அதிர்வெண்ணிற்க்கும் நேர்கோட்டு தொடர்பு இருப்பதை கண்டறிந்தவர் யார்?
ஹென்றி மோஸ்லே ,1913
- நவீன ஆவர்த்தன விதி யாருடைய ஆய்வின்படி உருவாக்கப்பட்டது?
மோஸ்லே
- “தனிமங்களின் இயர் மற்றும் வேதிப் பண்புகள் அவற்றின் அணு எண்களின் ஆவர்த்தன சார்பாக அமைகின்றன” என கூறுவது ?
நவீன ஆவர்த்தன விதி
- எந்த விதியின் அடிப்படையில் தனிமங்கள் அவற்றின் அணு எண்களின் ஏறுவரிசையில் வரிசைப்படுத்தப்பட்டன?
நவீன ஆவர்த்தன விதி
- சீரான இடைவெளிகளில் தனிமங்கள் அவற்றின் இயற் மற்றும் வேதிப் பண்புகள் ஒத்திருப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஆவர்த்தன தன்மை
- நவீன ஆவர்த்தன அட்டவணையில் அனைத்து தனிமங்களும் எத்தனை செங்குத்து நிரல்கள் மற்றும் கிடைமட்ட நிரைகளில் வைக்கப்பட்டுள்ளன?
18 செங்குத்து நிரல்கள் 7 கிடைமட்ட நிரைகள்
- செங்குத்து நிரல்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
தொகுதிகள்
- கிடைமட்ட நிரைகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
வரிசைகள்
- ஒவ்வொரு வரிசையும் எந்த பொதுவான வெளி கூட்டு எலக்ட்ரான் அமைப்பினைக் கொண்டுள்ள தனிமத்தின் துவங்குகிறது?
ns1
- ஒவ்வொரு வரிசையும் எந்த பொதுவான வெளி கூட்டு எலக்ட்ரான் அமைப்பினைக் கொண்டுள்ள தனிமத்தின் முடிவடைகிறது?
ns2np6
- 101 என்ற அணு எண் உடைய தனிமத்தின் தற்காலிகப் பெயர் ,தற்காலிக குறியீடு என்ன?
Unnilunium,Unu
- 101 என்ற அணு எண் உடைய தனிமத்தின் பெயர் மற்றும் குறியீடு?
Mendelevium,Md
- 102 என்ற அணு எண் உடைய தனிமத்தின் தற்காலிகப் பெயர் ,தற்காலிக குறியீடு என்ன?
Unilbium,Unb
- 102 என்ற அணு எண் உடைய தனிமத்தின் பெயர் மற்றும் குறியீடு?
Nobeliium,No
- 103 என்ற அணு எண் உடைய தனிமத்தின் தற்காலிகப் பெயர் ,தற்காலிக குறியீடு என்ன?
Unniltrium,Unt
- 103 என்ற அணு எண் உடைய தனிமத்தின் பெயர் மற்றும் குறியீடு?
Lawrencium,Lr
- 104 என்ற அணு எண் உடைய தனிமத்தின் தற்காலிகப் பெயர் ,தற்காலிக குறியீடு என்ன?
Unnilquadium,Unq
- 104 என்ற அணு எண் உடைய தனிமத்தின் பெயர் மற்றும் குறியீடு?
Rutherfordium,Rf
- 105 என்ற அணு எண் உடைய தனிமத்தின் தற்காலிகப் பெயர் ,தற்காலிக குறியீடு என்ன?
Unnilpentium,Unp
- 105 என்ற அணு எண் உடைய தனிமத்தின் பெயர் மற்றும் குறியீடு?
Dubnium,Db
- 106 என்ற அணு எண் உடைய தனிமத்தின் தற்காலிகப் பெயர் ,தற்காலிக குறியீடு என்ன?
Unnilhexium,Unh
- 106 என்ற அணு எண் உடைய தனிமத்தின் பெயர் மற்றும் குறியீடு?
Seaborgium,Sg
- 107 என்ற அணு எண் உடைய தனிமத்தின் தற்காலிகப் பெயர் ,தற்காலிக குறியீடு என்ன?
Unnilseptium,Uns
- 107 என்ற அணு எண் உடைய தனிமத்தின் பெயர் மற்றும் குறியீடு?
Bohrium,Bh
- 108 என்ற அணு எண் உடைய தனிமத்தின் தற்காலிகப் பெயர் ,தற்காலிக குறியீடு என்ன?
Unniloctium,Uno
- 108 என்ற அணு எண் உடைய தனிமத்தின் பெயர் மற்றும் குறியீடு?
Hassium,Hs
- 109 என்ற அணு எண் உடைய தனிமத்தின் தற்காலிகப் பெயர் ,தற்காலிக குறியீடு என்ன?
Unnilennium,Une
- 109 என்ற அணு எண் உடைய தனிமத்தின் பெயர் மற்றும் குறியீடு?
Meitnerium,Mt
- 110 என்ற அணு எண் உடைய தனிமத்தின் தற்காலிகப் பெயர் ,தற்காலிக குறியீடு என்ன?
Ununilium,Uun
- 110 என்ற அணு எண் உடைய தனிமத்தின் பெயர் மற்றும் குறியீடு?
Darmstadium,Ds
- 111 என்ற அணு எண் உடைய தனிமத்தின் தற்காலிகப் பெயர் ,தற்காலிக குறியீடு என்ன?
Unununium,Uuu
- 111 என்ற அணு எண் உடைய தனிமத்தின் பெயர் மற்றும் குறியீடு?
Roentgenium,Rg
- 112 என்ற அணு எண் உடைய தனிமத்தின் தற்காலிகப் பெயர் ,தற்காலிக குறியீடு என்ன?
Ununbium,Uub
- 112 என்ற அணு எண் உடைய தனிமத்தின் பெயர் மற்றும் குறியீடு?
Copernicium,Cn
- 113 என்ற அணு எண் உடைய தனிமத்தின் தற்காலிகப் பெயர் ,தற்காலிக குறியீடு என்ன?
Ununtrium,Uut
- 113 என்ற அணு எண் உடைய தனிமத்தின் பெயர் மற்றும் குறியீடு?
Nihonium,Nh
- 114 என்ற அணு எண் உடைய தனிமத்தின் தற்காலிகப் பெயர் ,தற்காலிக குறியீடு என்ன?
Ununquadium,Uuq
- 114 என்ற அணு எண் உடைய தனிமத்தின் பெயர் மற்றும் குறியீடு?
Flerovium,Fl
- 115 என்ற அணு எண் உடைய தனிமத்தின் தற்காலிகப் பெயர் ,தற்காலிக குறியீடு என்ன?
Ununpentium,Uup
- 115 என்ற அணு எண் உடைய தனிமத்தின் பெயர் மற்றும் குறியீடு?
Moscovium,Mc
- 116 என்ற அணு எண் உடைய தனிமத்தின் தற்காலிகப் பெயர் ,தற்காலிக குறியீடு என்ன?
Ununhexium,Uuh
- 116 என்ற அணு எண் உடைய தனிமத்தின் பெயர் மற்றும் குறியீடு?
Livermorium,Lv
- 117 என்ற அணு எண் உடைய தனிமத்தின் தற்காலிகப் பெயர் ,தற்காலிக குறியீடு என்ன?
Ununseptium,Uus
- 117 என்ற அணு எண் உடைய தனிமத்தின் பெயர் மற்றும் குறியீடு?
Tennessine,Ts
- 118 என்ற அணு எண் உடைய தனிமத்தின் தற்காலிகப் பெயர் ,தற்காலிக குறியீடு என்ன?
Ununoctium,Uuo
- 118 என்ற அணு எண் உடைய தனிமத்தின் பெயர் மற்றும் குறியீடு?
Oganesson,Og
- தனிமங்களின் கடைசி இணைதிற எலக்ட்ரான் சென்று சேரக்கூடிய ஆர்பிட்டாலின் அடிப்படையில் தனிமங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?
s,p,d&f தொகுதி தனிமங்கள்
- தொகுதி-1 மற்றும் தொகுதி -2ல் உள்ள தனிமங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
S தொகுதி தனிமங்கள்
- S தொகுதி தனிமங்களின் கடைசி இணைதிறன் எலக்ட்ரான்கள் எங்கு சென்று சேருகின்றன ?
ns ஆர்பிட்டால்
- தொகுதி-1 ஐச் சேர்ந்த தனிமங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கார உலோகங்கள்
- தொகுதி-2 ஐச் சேர்ந்த தனிமங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
காரமண் உலோகங்கள்
- தொகுதி-13 மற்றும் தொகுதி 18வரையிலான தனிமங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
P தொகுதி தனிமங்கள்
- P தொகுதி தனிமங்களின் பொதுவான வெளி கூட்டு எலக்ட்ரான் அமைப்பு என்ன?
ns2,np1-6
- 16ம் தொகுதி தனிமங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
சல்கோஜன்கள்
- 17ஆம் தொகுதி தனிமங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஹாலஜன்கள்
- 18ஆம் தொகுதி தனிமங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மந்த வாயுக்கள் அல்லது உயரிய வாயுக்கள்
- தொகுதி 3 முதல் 12 வரையில் உள்ள தனிமங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
d தொகுதி தனிமங்கள் அல்லது இடைநிலைத் தனிமங்கள்
- d தொகுதி தனிமங்களின் பொதுவான இணைதிற கூட்டு எலக்ட்ரான் அமைப்பு என்ன?
ns1-2,(n-1) d1-10
- லாந்தனைடுகள் மற்றும் ஆக்டினைடுகள் ஆகியன எவ்வாறு அழைக்கப்படுகின்றன ?
f-தொகுதி தனிமங்கள்
- எந்த தொகுதி தனிமங்கள் உலோகத் தன்மையினையும் அதிக உருகுநிலையினையுப் கொண்டுள்ளன?
f-தொகுதி தனிமங்கள்
- அணுக்கருவின் மையத்திற்கும் இணைதிறன் எலக்ட்ரான் உள்ள வெளிக்கூட்டிற்கும் இடையேயான தூரம் எவ்வாறு வரையறுக்கப்படுகிறது ?
ஒரு அணு ஆரம்
- ஒற்றை சகப்பிணைப்பால் இணைக்கப்பட்டுள்ள இரண்டு ஒத்த அணுக்களின் அணு கருக்களுக்கு இடையேயான தொலைவின் பாதியளவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சகபிணைப்பு ஆரம்
- நெருங்கி பொதிந்து அமைந்துள்ள உலோகப் படிகத்தில், அருகருகே அமைந்துள்ள இரு உலோக அணுக்களுக்கு இடைப்பட்டத் தொலைவின் சரிபாதியளவு எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?
உலோக ஆரம்
- எலக்ட்ரான்களுக்கும் அணுக்கருவிற்கும் இடையே என்ன விசை காணப்படுகிறது ?
நிலைமின்னியல் கவர்ச்சி விசை
- உட்கூட்டில் உள்ள எலக்ட்ரான்கள் ,அணுக்கருவிற்கும், இணைதிறன் எலக்ட்ரான்களுக்கும் இடையே ஒரு திரை போல் செயல்படுகிறது இந்த விளைவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
திரைமறைப்பு விளைவு
- வெளிக்கூட்டில் உள்ள இணைதிற எலக்ட்ரான்களால் உணரப்படும் நிகர அணுக்கரு மின்சுமை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
செயலுறு அணுக்கரு மின்சுமை
- தனிம வரிசை அட்டவணையில் ஒரு தொகுதியில் மேலிருந்து கீழாக செல்லும்பொழுது அணு ஆரம் என்னவாகும்?
அதிகரிக்கும்
- ஒரு அயனியின் அணுக்கருவின் மையத்திற்கும் , அவ்வயனியின் எலக்ட்ரான் திரள்முகில் மீது அதன் அணுக்கருவால் கவர்ச்சி விசையினை செலுத்த இயலும் தூரத்திற்கும் இடையிலான தொலைவு எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?
அயனி ஆரம்
- இயல்பு ஆற்றல் நிலையில் உள்ள நடுநிலை தன்மையுடைய தனித்த வாயு நிலை அணு ஒன்றின் இணைதிற கூட்டிலிருந்து இலகுவாகப் இணைக்கப்பட்டுள்ள ஒரு எலக்ட்ரானை நீக்குவதற்கு தேவைப்படும் குறைந்தபட்ச ஆற்றல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அயனியாக்கும் ஆற்றல்
- அயனியாக்கும் ஆற்றல் என்ன அலகால் குறிப்பிடப்படுகிறது?
KJmol-1 அல்லது eV
- ஒரு ஒற்றை நேர்மின்சுமையுடைய அணியிலிருந்து ஒரு எலக்ட்ரானை நீக்குவதற்கு தேவைப்படும் குறைந்தபட்ச ஆற்றல் எவ்வாறு அழைக்கப்படும் ?
இரண்டாம் அயனியாக்கும் ஆற்றல்
- பெரிலியம் அணுவின் அயனியாக்கும் ஆற்றல் எவ்வளவு?
899 KJmol-1
- போரான் அணுவின் அயனியாக்கும் ஆற்றல் எவ்வளவு?
800 KJmol-1
- ஒரு தொகுதியில் மேலிருந்து கீழாக வெல்லும்போது அயனியாக்கும் ஆற்றல் என்னவாகும்?
குறைகிறது
- ஒரு தொகுதியில் மேலிருந்து கீழாகச் செல்லும்போது உட் கூட்டில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை என்னவாகிறது ?
அதிகரிக்கின்றது
- ஒரு வரிசையில் கார உலோகத்தில் இருந்து ஹாலஜன்கள் நோக்கி செல்லும்போது எலக்ட்ரான் நாட்டம் என்னவாகும் ?
அதிகரிக்கின்றது
- ஒரு தொகுதியில் மேலிருந்து கீழாக வரும் போது பொதுவாக எலக்ட்ரான் நாட்டத்தின் மதிப்பு என்னவாகும்?
குறைகிறது
- சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ள மூலக்கூறில் உள்ள ஒரு அணுவானது, சகப்பிணைப்பில் பங்கிடப்பட்டுள்ள எலக்ட்ரான் இணையினைத் தன்னை நோக்கி ஒப்பீட்டு அளவில் கவரும் பண்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
எலக்ட்ரான் கவர் தன்மை
- ஒரு வரிசையில் இடமிருந்து வலமாக செல்லும் போது பொதுவாக எலக்ட்ரான் கவர் தன்மை மதிப்பு என்னவாகிறது ?
அதிகரிக்கின்றது
- ஒரு தொகுதியில் மேலிருந்து கீழாக வரும்போது எலக்ட்ரான் கவர் தன்மை மதிப்பு என்னவாகும் ?
குறையும்
- ஒரு தொகுதியில் மேலிருந்து கீழே வரும்போது அணு ஆரம் என்னவாகும்?
அதிகரிக்கின்றது
- ஒரு தொகுதியில் மேலிருந்து கீழாகச் செல்லும்போது அயனியாக்கும் ஆற்றல் என்னவாகும்?
குறையும்
11TH CHEMISTRY STUDY NOTES |தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services