- பசுமை வேதியியல் அடிப்படையில் புதிய வேதி சேர்மங்களை உருவாக்கியதற்காக எந்த ஆண்டு விஸ் சாவின் ,ராபர்ட் H கிரப்ஸ் , ரிச்சர்ட் R.ஷ்ர்க் அறிஞர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது?
2005
- மெட்டாதிசிஸ் வினைகள் வினையூக்கிகள் ஆக செயல்படும் உலோகச் சேர்மங்களை பற்றி விளக்கியவர் யார்?
விஸ் சாவின்
- மெட்டாதிசிஸ் வினைக்கான செயல்திறன் மிக்க வினையூக்கியினை முதன்முதலில் விளக்கியவர் யார்?
ரிச்சார்ட் ஷ்ராக்
- சிறந்த காற்றில் நிலைப்புத் தன்மை உடைய பல்வேறு பயன்பாடுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வினையூக்கியினை உருவாக்கியவர் யார்?
ரிச்சார்ட்H.கிரப்ஸ்
- தாவரங்கள் விலங்குகள் மற்றும் மனித குலம் ஆகியவற்றின் மீது தீய விளைவுகளை உருவாக்கும் வகையில் நம் சுற்றுச் சூழலில் நிகழும் விரும்பத்தகாத மாற்றங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சுற்றுச்சூழல் மாசுபாடு
- சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பொருள்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
மாசுபடுத்திகள்
- மாசுபடுத்திகள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன?
இரண்டு: மக்கும் மாசுபடுத்திகள் மற்றும் மக்காத மாசுபடுத்திகள்
- இயற்கையான உயிரியல் செயல்முறைகளால் எளிதாகச் சிதைவடையக்கூடிய மாசுபடுத்திகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மக்கும் மாசுபடுத்திகள்
- இயற்கையான உயிரியல் செயல்முறைகளால் எளிதாக சிதைவடையாத மாசுபடுத்திகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மக்காத மாசுபடுத்திகள்
- வளிமண்டலத்தின் அடிநிலை அடுக்கானது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அடிவெளிப்பகுதி
- அடிவெளிப்பகுதி புவியின் மேற்பரப்பிலிருந்து எவ்வளவு தூரம் வரை காணப்படுகிறது?
10 கிலோ மீட்டர் வரை
- வளி மண்டலத்தின் நிறையில் ஏறத்தாழ எத்தனை சதவீத நிறையானது அடி வெளிப் பகுதியில் உள்ளது ?
80%
- பூமியின் மண் பாறைகள் மற்றும் மலைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
லித்தோஸ்பியர்
- போபால் வாயு கசிவு எந்த ஆண்டு நிகழ்ந்தது?
டிசம்பர் 3 1984
- போபால் வாயுக் கசிவில் என்ன நச்சுத்தன்மை கொண்ட வாயு காற்றில் பரவியது?
மெத்தில் ஐசோ சயனைடு
- உயிரினங்களின் மீது தீங்கு விளைவுகளை உருவாக்கும் வகையில் காற்றில் நிகழும் விரும்பத்தகாத மாற்றங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
காற்று மாசுபாடு
- காற்று மாசுபடுத்திகள் எத்தனை வகை வடிவங்களில் காணப்படுகிறது?
இரண்டு வாயுக்கள் மற்றும் துகள்கள்
- வாயு நிலை காற்று மாசுபடுத்திகளுக்கு எடுத்துக்காட்டு எது?
சல்பர் டை ஆக்சைடுகள், நைட்ரஜன் ஆக்சைடுகள், கார்பன் ஆக்சைடுகள் மற்றும் ஹைட்ரோகார்பன்கள்
- SO3 ஆனது காற்று மண்டலத்தில் உள்ள நீராவி உடன் இணைந்து இதனை உருவாக்கிய மழையாக பொழிகிறது?
H2SO4
- முழுமையாக எரிக்கப்படாத நிலக்கரி மற்றும் விறகு ஆகியவற்றால் எது உருவாக்கப்படுகிறது ?
கார்பன் மோனாக்சைடு
- கார்பன் மோனாக்சைடு ஹீமோகுளோபினுடன் இணைந்து எதனை உருவாக்கி இரத்தத்தின் ஆக்சிஜன் கடத்தும் திறனை பாதிக்கிறது?
கார்பாக்ஸஹீமோகுளோபின்
- பல்லணு அரோமேட்டிக் ஹைட்ரோ கார்பன்கள் எந்த நோயை உருவாக்கும் காரணிகள் ?
புற்று நோய்
- எந்த ஆண்டு, யார் பசுமைக்குடில் விளைவு எனும் சொற்பதத்தை உருவாக்கினார்?
1987 ஜீன் பேப்டிஸ் ஃபுரீயர் எனும் பிரான்சு நாட்டு கணிதவியலாளர்
- வளிமண்டலத்திலுள்ள எதனால் வெப்பத்தின் ஒரு பகுதியானது சிறைப்பிடிக்கப்படுகிறது?
CH4,CO2,CFC மற்றும் நீராவி
- பூமியின் மேற்பரப்பில் எதிரொளிக்கப்பட்ட அகச்சிவப்பு கதிர்களை வளிமண்டலத்தில் உள்ள கார்பன்டை ஆக்சைடு படலம் உறிஞ்சி சிறைபிடிக்கும் காரணத்தினால் பூமியின் மேற்பரப்பு வெப்பமடையும் நிகழ்ச்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
பசுமை குடில் விளைவு
- பசுமை குடில் விளைவின் காரணமாக பூமி வெப்பமடையும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
உலகம் வெப்பமாதல்
- மழைநீரின் pH மதிப்பு என்ன?
5.6
- மழைநீரின் pah மதிப்பு 5.6 கீழ் குறையும்போது அது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
அமில மழை
- அமில மழையானது பளிங்குக் கற்களில் மீது பாதிப்பை ஏற்படுத்தும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கல்குஷ்டம்
- துகள் பொருள்கள் எத்தனை வகைப்படும் ?
இரண்டு :உயிர் உள்ள துகள் பொருள்கள் மற்றும் உயிரற்ற துகள் பொருள்கள்
- நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் என்ன நோயால் பாதிக்கப்படுகின்றனர்?
கருமை நுரையீரல் நோய்
- நூற்பாலை தொழிலாளர்கள் என்ன நோயால் பாதிக்கப்படுகின்றனர் ?
வெண்மை நுரையீரல் நோய்
- லெட் துகள்கள் என்ன பாதிப்பை உண்டாக்குகின்றன ?
குழந்தைகளின் மூளையை பாதிக்கின்றன, ரத்த சிவப்பணுக்களின் முதிர்ச்சியடைதலில் பாதிப்பு, புற்றுநோயையும் உருவாக்குகின்றன
- பனிப்புகை என்பது நகர்ப்புறப் பகுதிகளில் என்ன நிறப் புகை மூட்டத்தை உருவாக்கும் ?
பழுப்பு மஞ்சள் நிறம்
- எத்தனை விதமான பனிப்புகை காணப்படுகிறது?
2: தீவிர பனிப்புகை மற்றும் ஒளி வேதி பனிப்புகை
- முதன்முதலில் எப்போது எங்கு தீவிர பனிப்புகை உருவானது?
1952 இல் லண்டன்
- தீவிர பனிப்புகை எந்த காலநிலையில் உருவாகிறது?
குளிர்ந்த ஈரப்பதம் நிறைந்த காலநிலை
- SO2 ஆனது தூண்டப்பட்ட ஆக்சிஜனேற்றத்தினால் SO3 ஆக மாற்றமடைந்து ஈரப்பதத்துடன் வினைபட்டு கந்தக அமிலக் கரைசலை தருவதன் காரணமாக எது உருவாகிறது?
தீவிர பனிப்புகை
- தீவிர பனிப்புகை வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
லண்டன் பனிப்புகை /ஒடுக்கும் பனிப்புகை
- முதன் முதலில் எங்கு எப்போது ஒளி வேதி பனிப்புகை உருவானது?
1950 லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம்
- ஒளி வேதி பனிப்புகை எந்த காலநிலையில் உருவாகின்றது ?
சூடான உலர்ந்த மற்றும் சூரிய ஒளி நிறைந்த காலநிலை
- ஒளி வேதி பனிப்புகை வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
ஆக்ஸிஜனேற்ற பனிப்புகை
- ஒளி வேதி பனிப்புகையின் மூன்று முக்கிய பகுதி பொருட்கள் என்னென்ன ?
பார்மால்டிஹைடு ,அக்ரோலின் மற்றும் பெராக்ஸி அசிட்டைல் நைட்ரேட்
- ஓசோன் படலம் சிதைதல்களுக்கு மிக முக்கிய காரணிகள் என கண்டறியப்பட்டுள்ளது?
நைட்ரிக் ஆக்சைடு மற்றும் குளோரோ புளோரோ கார்பன்
- ஓசோன் படலத்தை சிதைக்கும் அல்லது அதை மெலிதாக்கும் சேர்மங்கள் பொதுவாக எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
ஓசோன் குறைப்பு பொருட்கள்(ODS)
- மீத்தேன் மற்றும் ஈத்தேனின் குளோரோபுளூரோ பெறுதிகளானவை என்ன வணிக பெயரில் குறிக்கப்படுகின்றன?
ஃபிரியான்கள்
- அடுக்கு மண்டலத்தில் உருவாகும் ஒவ்வொரு வினைத்திறன் மிக்க குளோரின் அணுவும் எவ்வளவு ஓசோன் மூலக்கூறுகளை சிதைக்கின்றன என மதிப்பிடப்பட்டுள்ளது?
1,00,000
- நீர் மாசுபடுத்திகளின் மூலங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன?
இரண்டு: கண்டுணர் மூலங்கள் மற்றும் கண்டுணர இயலா மூலங்கள்
- மாசுபாட்டிற்கு காரணமான மூலங்களின் தோன்றிடம் எளிதில் கண்டறியக் கூடியதாக இருந்தால் அவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கண்டுணர் மூலங்கள்
- நீர்நிலைகள் அதிகப்படியான சத்துக்களை பெறுவதால் அதிகப்படியான தாவர வளர்ச்சியைத் தூண்டும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
தூர்ந்துபோதல் (Eutrophication)
- நீர் நிலைகளில் ஏற்படும் இந்த அதீத தாவர வளர்ச்சிக்கு என்ன பெயர்?
பாசிபடர்தல் (algae bloom)
- 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 5 நாள்களில் கால இடைவெளியில் ஒரு லிட்டர் நீரில் உள்ள கரிம கழிவுகளை சிதைக்க நுண்ணுயிரிகளால் நுகரப்படும் மொத்த ஆக்சிஜனின் மில்லிகிராம் அளவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
உயிர்வேதி ஆக்சிஜன் தேவை (BOD)
- உயிர்வேதி ஆக்சிஜன் தேவை (BOD) மதிப்பு என்ன அளவீட்டில் அளக்கப்படுகிறது?
ppm
- தூயநீரின் உயிர்வேதி ஆக்சிஜன் தேவை (BOD) மதிப்பு என்ன?
5 ppm விடகுறைவு
- மாசுபட்டநீரின் உயிர்வேதி ஆக்சிஜன் தேவை (BOD) மதிப்பு என்ன?
17 ppm அல்லது அதற்கு மேல்
- குறிப்பிட்ட நீர் மாதிரிகள் உள்ள கரிம பொருட்களை,அமில ஊடகத்தில் இரண்டு மணி நேரம் கால இடைவெளியில் K2r2,O7 போன்ற வலிமையான ஆக்சிஜனேற்றி கொண்டு ஆக்சிஜனேற்றம் செய்ய தேவைப்படும் ஆக்ஸிஜனின் அளவானது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வேதி ஆக்சிஜன் தேவை (COD)
- காட்மியம் மற்றும் மெர்குரி ஆகியவற்றால் உடலில் என்ன சேதம் ஏற்படுத்தப்படுகிறது?
சிறுநீரகம்
- லெட் நச்சால் உடலின் எந்த பகுதியகள் பாதிப்படைகின்றன ?
சிறுநீரகம் ,கல்லீரல் ,மூளை மற்றும் மைய நரம்பு மண்டலத்தையும் பாதிக்கிறது
- பாலிகுளோரினேற்றம் செய்யப்பட்ட பைபீனைல்கள் என்ன நோய்களை உருவாக்குகின்றன?
தோல்நோய்கள்
- குடிநீரில் புளோரைடு பற்றாக்குறை எதை தோற்றுவிக்கிறது?
பற்சிதைவு
- புளூரைடு அயனிகள் ,பற்களின் மேற்பரப்பில் உள்ள எதை புளூரோ அபடைட்டாக மாற்றுகின்றன?
ஹைட்ராக்ஸி அபடைட்
- புளோரைடு அயனி செறிவு எவ்வளவுக்கு அதிகமாக இருப்பின் பற்களில் பழுப்பு நிற புள்ளிகள் தோற்றுவிக்கிறது?
2 ppm
- குடிநீரில் எவ்வளவுக் அதிகமாக லெட் மாசுக்கள் இருப்பின் கல்லீரல் சிறுநீரகம் மற்றும் இனப்பெருக்க மண்டலம் ஆகியவற்றிற்கு பாதிப்பை உண்டாக்குகிறது?
50ppb
- எவ்வளவுக்கு அதிகமான செறிவில் நைட்ரேட்களை கொண்டுள்ள குடி நீரைப் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு இரத்த இரும்பு கனிம குறைவு நோய் உண்டாகிறது?
45ppm
- துணி வெளுத்தலில் பயன்படுத்தப்படும் எது நிலத்தடி நீரை மாசடையச் செய்து புற்றுநோயை உண்டாக்கும் காரணியாகவும் திகழ்கிறது ?
டெட்ராகுளோரோ எத்திலீன்
11TH CHEMISTRY STUDY NOTES |சுற்றுச்சூழல் வேதியியல்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services