- நவீன தனிம வரிசை அட்டவணையில் எந்தத் தொகுதி சார்ந்த தனிமங்கள் S தொகுதி தனிமங்கள் என அழைக்கப்படுகிறது?
தொகுதி-1 மற்றும் 2
- கார உலோக சேர்மங்களைக் கொண்டுள்ள தாவர சாம்பலைக் குறிக்கும் எந்த வார்த்தையிலிருந்து alkali வார்த்தை வருவிக்கப்பட்டுள்ளது?
Al-qualiy
- எரிக்கப்பட்ட தாவர சாம்பலின் நீர்ச்சாறு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
பொட்டாஷ்
- கார உலோக தொகுதியானது என்ன தனிமங்களை கொண்டுள்ளது?
லித்தியம் ,சோடியம், பொட்டாசியம் ,ருபீடியம்,சீசியம்,மக்னீசியம் மற்றும் ஃப்ரான்ஷியம்
- எந்த தனிமங்கள் மிகக் குறைவான அளவில் கார உலோகத் தாதுக்களுடன் சேர்ந்து காணப்படுகின்றன?
ருபீடியம் மற்றும் சீசியம்
- ஃப்ரான்ஷியத்தின் அதிக நிலைப்புத் தன்மை உடைய ஐசோடோப்பின் அரை ஆயுள் காலம் எவ்வளவு?
21 நிமிடங்கள்
- புவிப்பரப்பில் லித்தியம் எவ்வளவு சதவீதம் காணப்படுகிறது?
0.0018%
- லித்தியம் கனிம மூலங்கள் எது?
ஸ்போடுமின்
- புவிப்பரப்பில் சோடியம் எவ்வளவு சதவீதம் காணப்படுகிறது?
2.27%
- சோடியம் கனிம மூலங்கள் எது?
பாறை உப்பு
- புவிப்பரப்பில் பொட்டாசியம் எவ்வளவு சதவீதம் காணப்படுகிறது?
1.84%
- லித்தியம் கனிம மூலங்கள் எது?
சில்வைட்
- புவிப்பரப்பில் ருபீடியம் எவ்வளவு சதவீதம் காணப்படுகிறது?
0.0078%
- புவிப்பரப்பில் சீசியம் எவ்வளவு சதவீதம் காணப்படுகிறது?
0.00026%
- கார உலோகங்களின் பொதுவான இணைதிற கூட்டு எலக்ட்ரான் அமைப்பு என்ன?
ns¹
- ஒவ்வொரு வரிசையிலும் முதல் தனிமமாக இருப்பதால் எவை அந்தந்த வரிசைகளில் அதிகபட்சமான அணுமற்றும் அயனி ஆதாரங்களை கொண்டுள்ளன?
கார உலோகங்கள்
- ஒவ்வொரு வரிசையிலும் உள்ள மற்ற தனிமங்களுடன் ஒப்பிடும்போது எவை குறைந்தபட்ச அயனியாக்கும் என்தால்பி மதிப்புகளை கொண்டுள்ளன?
கார உலோகங்கள்
- லித்தியம் தனிமத்தை அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் சேர்த்து ஈரமாக்கி பிளாட்டின கம்பியின் முனையில் வைத்து சுடரில் வெப்பப்படுத்தும் போது என்ன நிறம் வெளிப்படுகிறது ?
கிரிம்சன் சிவப்பு
- சோடியம் தனிமத்தை அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் சேர்த்து ஈரமாக்கி பிளாட்டின கம்பியின் முனையில் வைத்து சுடரில் வெப்பப்படுத்தும் போது என்ன நிறம் வெளிப்படுகிறது ?
மஞ்சள்
- பொட்டாசியம் தனிமத்தை அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் சேர்த்து ஈரமாக்கி பிளாட்டின கம்பியின் முனையில் வைத்து சுடரில் வெப்பப்படுத்தும் போது என்ன நிறம் வெளிப்படுகிறது ?
லைலாக்(ஊதா)
- ருபீடியம் தனிமத்தை அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் சேர்த்து ஈரமாக்கி பிளாட்டின கம்பியின் முனையில் வைத்து சுடரில் வெப்பப்படுத்தும் போது என்ன நிறம் வெளிப்படுகிறது ?
சிவப்பு கலந்த ஊதா
- சீசியம் தனிமத்தை அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் சேர்த்து ஈரமாக்கி பிளாட்டின கம்பியின் முனையில் வைத்து சுடரில் வெப்பப்படுத்தும் போது என்ன நிறம் வெளிப்படுகிறது ?
நீலம்
- தொகுதி -1 ல் உள்ள முதல் தனிமம்(Li) மற்றும் அதன் மூலை விட்டத்தில் தொகுதி 2ல் இரண்டாவதாக அமைந்துள்ள தனிமம்(Mg) ஆகியவற்றுக்கிடையே உள்ள ஒத்த தன்மைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மூலைவிட்ட தொடர்பு
- எந்த தனிமத்தை தவிர அனைத்து கார உலோகங்களும் ஹைட்ரஜனுடன் சுமார் 673K நிலையில் வினைபுரிந்து அவற்றின் அயனி ஹைட்ரஜனை உருவாக்குகின்றன?
லித்தியம்(1073K)
- ஹேலஜன்களுடன் வினை புரியும் திறன் கார உலோகங் தொகுதியில் மேலிருந்து கீழாக செல்லும்பொழுது என்னவாகும்?
அதிகரிக்கிறது
- அனைத்து உலோக ஹேலைடுகளும் என்ன?
அயனிப் படிகங்கள்
- கார உலோகங்கள் திரவ அம்மோனியாவில் கரைந்து என்ன நிறக் கரைசலை தருகின்றன?
அடர் நீல நிறம்
- HGன் நியம கடத்து திறன் எவ்வளவு?
10⁴ Ω-¹
- திரவ அமோனியாவில் உள்ள சோடியத்தின் கடத்துத்திறன் எவ்வளவு?
0.5×10⁴ Ω-¹
- கார உலோகங்கள் நீருடன் வினைப்பட்டு அவற்றின் ஹைட்ராக்சைடுகளைத் தருகின்றன இதனுடன் என்ன வாயு வெளியேற்றப்படுகிறது?
ஹைட்ரஜன் வாயு
- லித்தியம் எதனுடன் சேர்த்து மோட்டார் என்ஜின்களில் பயன்படும் வெண்மை உலோக பேரிங்குகள் தயாரிக்க பயன்படுகிறது?
லெட்
- லித்தியம் அலுமினியத்துடன் சேர்த்து என்ன தயாரிக்க பயன்படுகிறது?
ஆகாய விமான பாகங்கள்
- லித்தியம் எதனுடன் சேர்த்து கேடயங்கள் தயாரிக்க பயன்படுகிறது?
மெக்னீசியம்
- Pb(Et)4 மற்றும் Pb(Me)4 ஆகியவற்றை தயாரிக்க தேவைப்படும் Na-PB உலோகக் கலவை தயாரிக்க பயன்படுவது எது?
சோடியம்
- அதிவேக ஈணுலைகளில் குளிர்விப்பானாக பயன்படுவது எது ?
திரவ சோடியம்
- மென் சோப்புகள் தயாரித்தலில் பயன்படுவது எது?
பொட்டாசியம் ஹைட்ராக்சைடு
- மிகச்சிறந்த கார்பன்டை ஆக்சைடு உறிஞ்சுப் பொருளாக பயன்படுவது எது?
பொட்டாசியம் ஹைட்ராக்சைடு
- ஒளி மின்கலங்களை வடிவமைப்பதில் பயன்படுவது எது?
சீசியம்
- காரை உலோகங்களை அதிகளவு காற்றில் எரிக்கும் போது என்ன மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட சாதாரண ஆக்சைடுகளை உருவாக்குகின்றன?
M2O
- தூய நிலையில் ஆக்சைடுகள் மற்றும் பெராக்சைடுகள் என்ன நிறமுடையவை ?
நிறமற்றவை
- சூப்பர் ஆக்சைடுகள் என்ன நிறத்தில் இருக்கின்றன ?
மஞ்சள் அல்லது ஆரஞ்சு
- ஆக்சைடுகள் என்ன காந்தத் தன்மை உடையவை?
டையா காந்தத்தன்மை
- சூப்பர் ஆக்சைடுகள் என்ன காந்தத் தன்மை கொண்டவை?
பாரா காந்தத் தன்மை
- நீருடன் வினைப்படுத்தி பெறப்படும் ஹைட்ராக்சைடுகள் அனைத்தும் என்ன நிற திண்ம படிகங்கள்?
வெண்ணிறம்
- எதைத் தவிர்த்து மற்ற எல்லா ஹேலைடுகளும் அயனித் தன்மை கொண்டவை?
LiBR மற்றும் LiL
- எதைத் தவிர்த்து மற்ற எல்லா ஹேலைடுகளும் நீரில் கரைகின்றன ?
LiBR மற்றும் LiL
- சோடியம் கார்பனேட் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
சலவை சோடா (Na2CO3.10H20)
- தொழிற்சாலைகளில் பயன்படும் கனிம சேர்மங்களில் சோடியம் கார்பனேட் என்ன முறையில் தயாரிக்கப்படுகிறது?
சால்வே முறை
- சோடியம் கார்பனேட் பொதுவாக எவ்வாறு அறியப்படுகிறது ?
சலவை சோடா
- 373K வெப்பநிலைக்கு மேல் மொனோஹைடிரேட் முழுவதுமாக நீரற்ற வெண்ணிறப் பொடியாக மாறுகிறது இது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
சோடா சாம்பல்
- சோடியம் கார்பனேட் என்னவாக பயன்படுகிறது?
கடின நீரை மென்னீராக மாற்றும் செயல்முறைகள் மற்றும் கண்ணாடி, காகிதம், பெயிண்ட் ஆகியவற்றை தயாரிக்க பயன்படுகிறது
- கடல் நீரின் எடையில் எவ்வளவு சதவீதம் வரை சோடியம் குளோரைடு உப்பு உள்ளது?
2.7 முதல் 2.9 சதவீதம்
- உப்புநீரை பருகுவதன் மூலம் பெறப்படும் சோடியம் குளோரைடில் என்ன மாசுக்கள் உள்ளன?
சோடியம் சல்பேட், கால்சியம் சல்பேட், கால்சியம் குளோரைடு மற்றும் மெக்னீஷியம் குளோரைடு போன்றவைகள்
- சோடியம் குளோரைடு என்ன வெப்பநிலையில் உருகுகிறது?
1081K
- சோடியம் குளோரைடு 273K வெப்பநிலையில் 100 கிராம் நீரில் எவ்வளவு கரைதிறனை கொண்டுள்ளது?
36.0g
- சோடியம் குளோரைடு எங்கு பயன்படுகிறது?
வீட்டு உபயோகத்திற்கான சமையல் உப்பாக,NaOH & Na2CO3 போன்ற கரிம சேர்மங்களின் தயாரிப்பிலும் பயன்படுகிறது
- வணிக ரீதியாக என்ன முறையில் சோடியம் ஹைட்ராக்சைடு தயாரிக்கப்படுகிறது?
கேஸ்ட்னர்-கெல்னர் மின்கலத்தில் உப்பு நீரை மின்னாற் பகுப்பு
- சோடியம் ஹைட்ராக்சைடு இயற்பண்பு என்ன ?
வெண்ணிற ,ஒளி கசியக் கூடிய மற்றும் நீர் ஈர்க்கும் திண்மம்
- சோடியம் ஹைட்ராக்சைடு எந்த வெப்பநிலையில் உருகுகிறது?
591K
- பாக்சைட்டை (அலுமினியத்தின் தாது ) தூய்மைப்படுத்துதல் மற்றும் பெட்ரோலிய சுத்திகரிப்பில் பயன்படுவது எது?
சோடியம் ஹைட்ராக்சைடு
- ஜவுளி தொழில் பருத்தி துணிகளை மேம்படுத்த பயன்படுவது எது?
சோடியம் ஹைட்ராக்சைடு
- சோப்பு ,காகிதம் மற்றும் செயற்கை பட்டு ஆகியவற்றை தயாரிக்க பயன்படுவது எது ?
சோடியம் ஹைட்ராக்சைடு
- சோடியம் ஹைட்ரஜன் கர்பனேட் அல்லது சோடியம் பைகார்பனேட் ஆனது என்ன தயாரிப்பில் பயன்படுகிறது?
கேக் தயாரிப்பு
- தோல் நோய் தொற்றுக்கு எதிரான மென்மையான திசு அழுகல் நோய் எதிர்ப்பு பொருளாக பயன்படுவது எது ?
சோடியம் பை கார்பனேட்(NaHCaO3)
- சோடியம் பை கார்பனேட் வேறு எதில் பயன்படுகிறது ?
தீயணைப்பான்கள்
- 70Kg எடையுடைய ஒரு மனிதனின் உடலில் எவ்வளவு இரும்பு உள்ளது?
5g
- 70Kg எடையுடைய ஒரு மனிதனின் உடலில் எவ்வளவு காப்பர் உள்ளது?
0.06g
- 70Kg எடையுடைய ஒரு மனிதனின் உடலில் எவ்வளவு சோடியம் உள்ளது?
90g
- 70Kg எடையுடைய ஒரு மனிதனின் உடலில் எவ்வளவு பொட்டாசியம் உள்ளது?
170g
- செல்களுக்கு வெளியே ரத்த பிளாஸ்மா மற்றும் செல்லை சூழ்ந்துள்ள இடங்களில் என்ன அயனிகள் முதன்மையாக காணப்படுகின்றன?
சோடியம் அயனிகள்
- நரம்பு சமிக்கைகளை கடத்துவதில் எந்த அயனிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன?
சோடியம் அயனிகள்
- இரண்டாம் தொகுதியில் உள்ள எந்த தனிமத்தை தவிர்த்து பிற தனிமங்களின் ஆக்சைடுகள் மற்றும் ஹைட்ராக்சைடுகள் காரத்தன்மை பெற்றுள்ளன?
பெரிலியம்
- இரண்டாம் தொகுதி தனிமங்கள் பொதுவாக எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
காரமண் உலோகங்கள்
- பெரிலியம் (Be) தனிமத்தின் தாது என்ன?
பெரைல் (Be3AL2Si6O18)
- மெக்னீசியம் (Mg) தனிமத்தின் தாது என்ன?
கார்னலைட் (KCL.MgCl26H2aO),டோலமைட்(MgCO3CaCO3)
- கால்சியம் (Ca) தனிமத்தின் தாது என்ன?
புளுரோபடைட் (Ca3(PO4)3F)
- ஸ்ட்ரோண்டியம் (Sr) தனிமத்தின் தாது என்ன?
செலிசைட் (SrSO4)
- பேரியம் (Ba) தனிமத்தின் தாது என்ன?
பேரைட்ஸ் (BaSo4)
- காரமண் உலோகங்கள் வெப்ப பாறைகளில் எத்தனை சதவீதம் மட்டுமே காணப்படுகிறது?
10%
- புவிமேல் பொதுவாக காணப்படும் காரமண் உலோகத் தனிமங்கள் எவை?
மெக்னீஷியம் மற்றும் கால்சியம்
- அதிகளவு கிடைக்கப்பெறும் தனிமங்களில் கால்சியம் எத்தனாவதாக உள்ளது ?
ஐந்தாவது
- அதிகளவு கிடைக்கப்பெறும் தனிமங்களில் மெக்னீசியம் எத்தனையாவது உள்ளது?
எட்டாவது
- கார்னலைட், டோலமைட் ,மேக்னசைட் ஆகியவற்றில் எந்த தனிமம் காணப்படுகிறது ?
மெக்னீசியம்
- சுண்ணாம்புக் கல்,ஜிப்சம் ஆகியவற்றில் என்ன தனிமம் காணப்படுகிறது?
கால்சியம்
- பெரும்பாலான ஸ்ட்ரான்சியமானது எதில் காணப்படுகிறது?
செலிசைட் மற்றும் ஸ்ட்ரெப்டோமைசியோனைட்டில்
- பேரியம் பெரும்பாலும் எந்த தாதுவில் உள்ளது ?
பேரைட்
- யுரேனியத்தின் கதிரியக்கத் தன்மையின் விளைவாக உருவாகும் பொருள் எது ?
ரேடியம்
- குளோரின் தனிமத்துடன் சேர்ந்து பேரியம் என்ன நிற தீப்பொறிகளை உருவாக்குகிறது ?
பச்சை நிறம்
- வானவேடிக்கைகளில் ஆரஞ்சு நிறத்தை உருவாக்குவது எது ?
கால்சியம்
- வாணவேடிக்கைகளில் லித்தியம் என்ன நிறத்தை தருகிறது ?
ஓரளவு சிவப்பு நிறம்
- வாணவேடிக்கைகளில் பிரகாசமான சிவப்பு நிறத்தை தருவது எது?
ஸ்ட்ரான்சியம் கார்பனேட்
- வாணவேடிக்கைகளில் ஆரஞ்சு நிறத்தை தருவது ?
சோடியத்தின் நைட்ரேட்டுகள்
- வாணவேடிக்கைகளில் கரு ஊதா நிறத்தை தருவது ?
பொட்டாசியம் மற்றும் ருபீடியம்
- வாணவேடிக்கைகளில் இண்டிகோ நிறத்தை தருவது ?
சீசியம்
- வெப்பச் சுடரில் காப்பர் கார்பனேட்டானது சிதைவடையும் என்பதால் என்ன நிறமுள்ள வானவேடிக்கை உருவாக்குவது கடினமானதாகும்?
நீலநிறம்
- வானவேடிக்கை நிறங்களை வலுப்படுத்த இதனை பயன்படுத்துகின்றனர் ?
மெக்னீசியம் மற்றும் அலுமினியத்தின் உலோகக் கலவையான மெக்னாலியம்
- மெக்னாலியம் எந்த நிறத்தை மேலும் வலுப்படுத்துகிறது?
நீலநிறம்
- Be தனிமத்தின் அணு எண் என்ன?
4
- Mg தனிமத்தின் அணு எண் என்ன?
12
- Ca தனிமத்தின் அணு எண் என்ன?
20
- Sr தனிமத்தின் அணு எண் என்ன?
38
- Ba தனிமத்தின் அணு எண் என்ன?
56
- Ra தனிமத்தின் அணு எண் என்ன?
88
- இரண்டாம் தொகுதி தனிமங்கள் அவைகளின் இணைதிறன் கூட்டில் எத்தனை எலக்ட்ரான்களை கொண்டுள்ளன?
இரண்டு
- கார மண் உலோகங்களின் தொகுதியில் மேலிருந்து கீழே செல்லும் பொழுது எலக்ட்ரான் கவர் தன்மை மதிப்பு என்னவாகும்?
குறைகிறது
- ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை சேர்த்து ஈரமாக்கப்பட்ட கால்சியம் தனிமத்தை பிளாட்டின கம்பி மூலம் சுடரில் காட்டப்படும் போது அது என்ன நிறத்தை வெளிப்படுத்துகிறது?
செங்கல் சிவப்பு
- ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை சேர்த்து ஈரமாக்கப்பட்ட ஸ்ட்ரான்சியம் தனிமத்தை பிளாட்டின கம்பி மூலம் சுடரில் காட்டப்படும் போது அது என்ன நிறத்தை வெளிப்படுத்துகிறது?
கிரிம்சன் சிவப்பு
- ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை சேர்த்து ஈரமாக்கப்பட்ட பேரியம் தனிமத்தை பிளாட்டின கம்பி மூலம் சுடரில் காட்டப்படும் போது அது என்ன நிறத்தை வெளிப்படுத்துகிறது?
ஆப்பிள் பச்சை
- குறைந்த அணு எண் மற்றும் X-கதிர்களை உட்கவர்தல் குறைவாக இருப்பதால்,X- கதிர் குழாய்களின் வெளியேறும் பகுதி மற்றும் x-கதிர் கண்டுணர்விகளில் பயன்படுகிறது எது?
பெரிலியம்
- கதிர் உமிழ்வு ஆய்வுகளில் மாதிரியினை வைக்கும் கலன்கள் பொதுவாக எதனால் தயாரிக்கப்படுகிறது?
பெரிலியம்
- இரும்பு மற்றும் எஃகிலிருந்து சல்பரை நீக்கப் பயன்படுவது எது ?
மெக்னீசியம்
- அச்சிடும் தொழிலில் நிழற்பட அச்சு பதிவுகளை உருவாக்கப் பயன்படும் தகடுகளாக பயன்படுத்தப்படுவது எது?
மெக்னீசியம்
- கரிம தொகுப்பு கிரிக்னார்டு வினைப்பொருளை தயாரிக்க பயன்படுவது எது?
மக்னீசியம் நாடா
- கால்வானிக் அரிமானத்தை கட்டுப்படுத்த தன்னை அழித்துக் கொள்ளும் மின்வாயாக பயன்படுவது எது?
மெக்னீசியம்
- யுரேனியம்,ஜிர்கோனியம் மற்றும் தோரியம் ஆகியவற்றின் உலோகவியலில் ஒடுக்கும் காரணியாக செயல்படுவது எது?
கால்சியம்
- பல்வேறு பெர்ரஸ் மற்றும் பெர்ரஸ் அற்ற உலோக கலவைகளுக்கு, ஆக்சிஜன் நீக்கி சல்ஃபர் நீக்கி மற்றும் கார்பன் நீக்கியாகப் பயன்படுவது எது?
கால்சியம்
- கட்டுமானத்திற்கு பயன்படும் சிமெண்ட் மற்றும் கலவைகள் தயாரிப்பதில் பயன்படுவது எது?
கால்சியம்
- வெற்றிடக் குழாய்களில் வாயு மாசு நீக்கியாக பயன்படுவது எது?
கால்சியம்
- எண்ணெய்யில் நீர் நீக்கியாக பயன்படுகிறது எது?
கால்சியம்
- கேன்சர் மருத்துவத்தில் பயன்படும் ஸ்ட்ரான்சியம் எது?
⁹⁰ Sr
- எந்த ஸ்ட்ரான்சியம் விகிதமானது கடல்சார் ஆய்வுகள் மற்றும் விலங்குகளின் இடப்பெயர்ச்சி தொடர்தல், குற்ற தடயவியலில் பயன்படுகிறது?
⁸⁷Sr/⁸⁶Sr
- பாறைகளின் வயதை தீர்மானிப்பதில் பயன்படுத்தப்படுவது எது?
ஸ்ட்ரான்சியம்
- பழங்கால புராதான பொருட்கள் நாணயங்கள் ஆகியவற்றின் மூலம் கண்டறிய கதிரியக்க சுவடறிவானாக பயன்படுவது எது?
ஸ்ட்ரான்சியம்
- பேரியம் எங்கு பயன்படுகிறது ?
பேரியத்தின் சேர்மங்கள் பெட்ரோலிய சுரங்கம் ,கதிரியக்கவியல் மற்றும் வெப்ப தொழில்நுட்பங்கள்
- தாமிரத் தூய்மையாக்கலில் ஆக்சிஜன் நீக்கியாக பயன்படுவது எது?
பேரியம்
- எதன் நிக்கல் உலோகக்கலவை எளிதில் எலக்ட்ரானை உமிழ்வதால் எலக்ட்ரான் குழாய்கள் மற்றும் மின்வாய்ப்பொறிகளில் பயன்படுகிறது?
பேரியம்
- தொலைக்காட்சி மற்றும் மின்னணுவியல் குழாய்களில் உள்ள ஆக்சிஜனை நீக்க பயன்படும் தூய்மையாக்கியாக பயன்படுவது எது?
பேரியம்
- பேரியத்தின் எந்த ஐசோடோபானது அணுக்கரு வேதியியலில் காமா கதிர் கண்டு உணர்வியை திட்ட அளவீடு செய்ய பயன்படுகிறது?
¹³³Ba ஐசோடோப்பானது
- இரண்டாம் தொகுதி தனிமங்களின் முதன்மையான ஆக்ஸிஜனேற்ற நிலை எது?
+2
- காரமண் உலோகங்கள் என்ன பொதுவான வாய்ப்பாடுடைய ஹேலைடுகளை உருவாகின்றன?
MX2
- தொகுதியில் மேலிருந்து கீழாக செல்ல கார்ப்பனேட்டுகளின் கரைதிறன் என்னவாகிறது ?
குறைகிறது
- தொகுதியில் கீழே இறங்கும்போது நேர் அயனிகளின் உருவ அளவு அதிகரிக்க அவற்றின் வெப்பநிலைப்புத் தன்மை என்னவாகும்?
அதிகரிக்கிறது
- காரமண் உலோகங்களின் சல்பேட்டுகள் என்ன நிற திண்மங்கள்?
வெண்மை நிறம்
- வணிக ரீதியில் சுண்ணாம்புக் கல்லைப் சுண்ணாம்புக் களவாயில் எவ்வளவு வெப்பநிலையில் வெப்பப்டுத்துவதன் மூலம் சுட்ட சுண்ணாம்பு(Cao) தயாரிக்கப்படுகிறது?
1070-1270K
- கால்சியம் ஆக்சைடின் உருகுநிலை எவ்வளவு?
2870K
- குறைந்த அளவு நீரினை சேர்க்கும்போது கால்சியம் ஆக்சைடு கட்டிகள் உடைக்கப்படுகின்றன இச்செயல் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
சுண்ணாம்பை நீர்க்க செய்தல்
- சுண்ணாம்பு நீர்க்க செய்தல் மூலம் உருவாகும் வினை பொருள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நீற்றுச் சுண்ணாம்பு
- சுட்ட சுண்ணாம்பு மற்றும் சோடியம் ஹைட்ராக்சைடு சேர்ந்த கலவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சோடாச் சுண்ணாம்பு
- கால்சியம் ஆக்சைடு எங்கு பயன்படுகிறது?
சிமெண்ட் ,கட்டுமான பூச்சுகள், கண்ணாடி தயாரிப்பு ,சோடியம் கார்பனேட் மற்றும் நீற்றுச் சுண்ணாம்பு தயாரித்தல், சர்க்கரை தூய்மையாக்கல், உலர்த்தும் வினைப் பொருளாக
- கால்சியம் ஆக்சைடுடன் நீர் சேர்க்கப்பட்டு எது தயாரிக்கப்படுகிறது ?
கால்சியம் ஹைட்ராக்சைடு
- நீற்றுச் சுண்ணாம்பின் தொங்கல் நீர் கரைசல் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
சுண்ணாம்பு பால்
- வெப்பநிலை அதிகரிக்கும் போது ஜிப்சத்தின் கரைதிறன் என்னவாகும்?
குறைகிறது
- வெப்பநிலை அதிகரிக்கும் போது அதன் கரைதிறன் குறைவதன் பண்பு எவ்வாறு அறியப்படுகிறது?
எதிர்க்கரைதிறன்
- ஜிப்சம் பொதுவாக என்ன நிறத்தில் இருக்கும்?
நிறமற்றதாகவும் அல்லது வெளிர்ந்த நிறத்தை கொண்டிருக்கும், மாசுக்கள் காணப்பட்டால் இளஞ்சிவப்பு மஞ்சள் பழுப்பு மற்றும் வெளிர் பச்சை ஆகிய நிறங்களின் சாயல்கள் காணப்படும்
- சில நேரங்களில் ஜிப்சம் மலர்களின் இதழ்களை ஒத்த வடிவமைப்பில் கிடைக்கப்பெறுகிறது இவ்வகை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
பாலைவன ரோஜா
- இயற்கை மின்காப்பு பொருள் என அழைக்கப்படுவது எது?
ஜிப்சம்
- ஜிப்சத்தின் எந்த வகையானது அணிகல கற்கள் போன்று விலைமதிப்புமிக்கது?
அலபாஸ்டர்
- மோ கடினத்தன்மை அளவீட்டில் ஜிப்சத்தின் கடினத்தன்மை எவ்வளவு?
1.5 முதல் 2 வரை
- ஜிப்சத்தின் அடர்த்தி எண் எவ்வளவு?
2.3 முதல் 2.4 வரை
- பண்டைய எகிப்து மற்றும் மெசபடோமியாவில் ஜிப்சத்தின் எந்த வகை சிற்பிகளால் பயன்படுத்தப்பட்டுள்ளது?
அலபாஸ்டர்
- ஜிப்சத்தினை எவ்வாறு பாரிஸ்சாந்தாக மாற்றுவது என்பதனை சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பே யாரால் அறியப்பட்டுள்ளது ?
எகிப்தியர்கள்
- ஜிப்சம் எங்கு பயன்படுகிறது ?
உலர்பலகைகள் ,பூச்சுப் பலகைகள் மேற்கூரைகள் , பாரிஸ் சாந்து தயாரிப்பில் மற்றும் எலும்பியல் துறையில் ,எலும்பு முறிவு சரிசெய்யும் கட்டுகள் மற்றும் அச்சுகள் தயாரிக்கவும் பயன்படுகிறது
- ஜிப்சத்தினை எவ்வளவு வெப்பநிலையில் சூடுபடுத்தி பாரிஸ் சாந்து தயாரிக்கப்படுகிறது?
300 டிகிரி ஃபாரன்ஹீட்
- போர்ட்லாண்டு சிமெண்டுகளில் எது கடினமாதலை தாமதப்படுத்தும் ஒரு முக்கிய பகுதி பொருள் காரணியாக செயல்படுகிறது?
ஜிப்சம்
- கால்சியம் சல்பேட்டின் ஹெமிஹைட்ரேட் எது?
பாரிஸ் சாந்து
- பற் சீராக்கும் துறை,அணிகலன்கள், சிலைகள் மற்றும் வார்ப்புகள் உருவாக்குவதில் பயன்படுவது எது?
பாரீஸ் சாந்து
- ஒரு சராசரி மனித உடலில் எவ்வளவு மெக்னீசியம் அடங்கியுள்ளது?
25 கிராம்
- ஒரு சராசரி மனித உடலில் எவ்வளவு கால்சியம் அடங்கியுள்ளது?
1200 கிராம்
- எலும்பு மற்றும் பற்களில் முக்கிய பகுதி பொருளாக காணப்படும் தனிமம் எது?
கால்சியம்
- எந்த ஹார்மோன்களால் ரத்தத்தில் கால்சியத்தின் அளவு பராமரிக்கப்படுகிறது?
கால்சிடோனின் மற்றும் பாரா தைராய்டு ஹார்மோன்கள்
11TH CHEMISTRY STUDY NOTES |கார மற்றும் காரமண் உலோகங்கள்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services