- பிரான்சுவா -மேரி ரௌலட் எந்த நாட்டைச் சேர்ந்த வேதியியல் அறிஞர்?
பிரெஞ்சு
- கரைசல்களின் இயற் பண்புகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டவர்?
பிரான்சுவா -மேரி ரௌலட்
- அணுக்கள், அயனிகள் அல்லது மூலக் கூறுகளைக் கொண்டுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்களின் ஒருபடித்தான கலவை எவ்வாறு அழைக்கப்படுகின்றன ?
கரைசல்கள்
- இயற்கையில் காணப்படும் கரைசல்களுக்கு எடுத்துக்காட்டு ?
கடல் நீர், காற்று போன்றவைகள்
- ஒருபடித்தான கலவையில் மிக அதிக அளவில் காணப்படும் சேர்மமானது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
கரைப்பான்
- கரைசல்களின் நீர் கரைப்பானாக பயன்படுத்தப்பட்டால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நீர் கரைசல்
- நீர் இல்லாத மற்ற கரைப்பான்கள் பயன்படுத்தப்பட்டால் அவை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
நீரில்லா கரைசல்கள்
- கரைபொருள் வாயு கரைப்பான் வாயு இந்தக் கரைசலுக்கு எடுத்துக்காட்டு எது?
காற்று
- கரைபொருள் நீர்மம் கரைப்பான் வாயு இந்தக் கரைசலுக்கு எடுத்துக்காட்டு எது?
ஈர ஆக்சிஜன்
- கரைபொருள் திண்மம் கரைப்பான் வாயு இந்தக் கரைசலுக்கு எடுத்துக்காட்டு எது?
நைட்ரஜன் வாயுவில் உள்ள கற்பூரம்
- கரைபொருள் வாயு கரைப்பான் நீர்மம் இந்தக் கரைசலுக்கு எடுத்துக்காட்டு எது?
நீரில் கரைக்கப்பட்ட CO2
- கரைபொருள் நீர்மம் கரைப்பான் நீர்மம் இந்தக் கரைசலுக்கு எடுத்துக்காட்டு எது?
நீரில் கரைக்கப்பட்ட எத்தனால்
- கரைபொருள் திண்மம் கரைப்பான் நீர்மம் இந்தக் கரைசலுக்கு எடுத்துக்காட்டு எது?
உப்பு நீர்
- கரைபொருள் வாயு கரைப்பான் திண்மம் இந்தக் கரைசலுக்கு எடுத்துக்காட்டு எது?
பல்லேடியத்தில் உறிஞ்சப்பட்ட H2 உள்ள கரைசல்
- கரைபொருள் நீர்மம் கரைப்பான் திண்மம் இந்தக் கரைசலுக்கு எடுத்துக்காட்டு எது?
பொட்டாசியம் பாதரச கலவை
- பொட்டாசியம் பாதரச கலவை எங்கு பயன்படுகிறது?
பற்குழிகளை அடைக்க
- கரைபொருள் திண்மம் கரைப்பான் திண்மம் இந்தக் கரைசலுக்கு எடுத்துக்காட்டு எது?
தங்கப் உலோகக்கலவை
- குளோர்ஹெக்ஸிடின் திரவக் கரைசல் எதற்கு பயன்படுகிறது?
வாய் கழுவும் திரவமாக
- குளோர்ஹெக்ஸிடின் திரவக் கரைசல் கொண்டுள்ள குளுக்கோனேட்டின் செறிவு என்ன?
0.2%(w/v)
- வணிக ரீதியில் கிடைக்கும் ஹைட்ரஜன் பெராக்சைடு கரைசலின் செறிவு என்ன?
3%(w/v)
- கரைசல்களின் செறிவுகளை குறிப்பதற்காக என்ன செறிவு அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன?
ppm(நீரின் TDS),மோலார் மற்றும் நார்மல்(ஆய்வக வினைப்பொருள்கள்)
- மோவாலிட்டியின் வாய்ப்பாடு என்ன?
கரை பொருளின் மோல்களின் எண்ணிக்கை/ கரைப்பானின் நிறை (Kg ல்)
- மோலாரிட்டியின் வாய்ப்பாடு என்ன?
கரை பொருளின் மோல்களின் எண்ணிக்கை/ கரைசலின் கன அளவு (Lல்)
- நார்மாலிட்டியின் வாய்ப்பாடு என்ன?
கரை பொருளின் கிராம் சமான நிறைகளின் எண்ணிக்கை/கரைசலின் கன அளவு (Lல்)
- பார்மாலிட்டியின் வாய்ப்பாடு என்ன?
கரை பொருளின் வாய்ப்பாட்டு நிரைகளின் எண்ணிக்கை/ கரைசலின் கன அளவு (Lல்)
- நிறைச் சதவீதம் (%w/w) ன் வாய்ப்பாடு என்ன?
( கரை பொருளின் நிறை கிராமில்/ கரைசலின் நிறை கிராமில்) x100
- கன அளவுச் சதவீதம் (%v/v) ன் வாய்ப்பாடு என்ன?
( கரை பொருளின் கன அளவு(மி.லி)/ கரைசலின் கன அளவு (மி.லி)) x100
- நிறை/ கன அளவுச் சதவீதம் (%w/v) ன் வாய்ப்பாடு என்ன?
( கரை பொருளின் நிறை கிராமில்/ கரைசலின் நிறை கிராமில்) x100
- ஒரு மில்லியனில் உள்ள பகுதிகளின் வாய்ப்பாடு?
(கரை பொருளின் நிறை/ கரைசலின் நிறை) x 10⁶
- வாயுக்களின் பகுதி அழுத்தங்கள் மற்றும் கரைசல்களின் ஆவி அழுத்தங்களை கணக்கிடுவதற்கு இது பயன்படுத்தப்படுகிறது ?
மோல் பின்னம்
- நோய் நீக்கும் மருந்து பொருட்களில் உள்ள செயலாக்க கூறுகளை குறிப்பிடுவதற்காக என்ன அளவுகள் பயன்படுத்தப்படுகின்றன?
சதவிகித அலகு
- கரைசலில் கரைந்துள்ள சிறிய அளவிலான கரைப்பொருள்களை குறிப்பிட எது பயன்படுத்தப்படுகிறது?
ppm
- துல்லியமாக திறன் தெரிந்த கரைசல் எது?
திட்ட கரைசல் அல்லது இருப்புக் கரைசல்
- சோதனைகளின் போது இருப்பு கரைசலை நீர்க்கச் செய்வதன் மூலமாக தேவையான செறிவுள்ளக் கரைசல் தயாரிக்கப்படுகிறது .இந்த நீர்த்த கரைசல் ஆனது பொதுவாக எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பயன்பாட்டு கரைசல்
- ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ஒரு குறிப்பிட்ட எடையுள்ள கரைப்பானில் கரைக்க இயலும் கரை பொருளின் அதிகபட்ச அளவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கரைபொருளின் கரைதிறன்
- ஒரு கரைப்பானில் அதிகபட்ச அளவு கரைபொருள் கரைந்து இருக்கும்போது அதற்குமேல் சேர்க்கப்படும் கரைபொருள் வீழ்படிவை உருவாக்கினால் அத்தகைய கரைசல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தெவிட்டிய கரைசல்
- ஒரு குறிப்பிட்ட ஒரு பொருளின் வெப்பநிலையில் கரைதிறன் என்பது அதன் தெவிட்டிய கரைசல் உருவாக எவ்வளவு கிராம் கரைப்பானில் கரைக்க இயலும் பொருளின் அதிகபட்ச அளவு என வரையறுக்கப்படுகிறது?
100 கிராம்
- பொதுவாக வெப்பநிலை அதிகரிக்கும் போது நீர்ம கரைப்பானில், திண்ம கரைபொருளின் பொருளின் கரைதிறன் என்னவாகும் ?
அதிகரிக்கும்
- வெப்பநிலை அதிகரிக்கும் போது கரைபொருள் மற்றும் கரைப்பான் மூலக்கூறுகளின் சராசரி இயக்க ஆற்றல் என்னவாகிறது ?
அதிகரிக்கும்
- “கரைத்தல் செயல்முறை ஒரு வெப்பம்கொள் செயல்முறையாக இருப்பதால் வெப்பநிலை அதிகரிப்பானது சமநிலையை வலது புறமாக நகர்த்தும் அதாவது கரைதிறன் அதிகரிக்கிறது. ஒரு வெப்பம் உமிழ் வினைக்கு வெப்பநிலை அதிகரிப்பானது கரைதிறனை குறைக்கிறது” என்பது யாருடைய கொள்கை?
லீ சாட்லியர்
- அமோனியம் நைட்ரேட்டின் கரைதல் செயல்முறையானது என்ன செயல்முறை?
வெப்பம் கொள் செயல்முறை
- சீரிக் சல்பேட்டை பொறுத்தவரையில் கரைதல் செயல்முறையானது என்ன செயல்முறை?
வெப்பம் உமிழ் செயல்முறை
- கால்சியம் குளோரைடின் கரைதல் நிகழ்வு என்ன செயல்முறை ?
வெப்பம் உமிழ் செயல்முறை
- நீர்ம கரைப்பானில் வாயு கரைபொருள் கரைந்துள்ள கரைசலில் வெப்பநிலை அதிகரிக்கும்போது கரைதிறன் என்னவாகிறது?
குறைகிறது
- குறைவான செறிவு கொண்ட கரைசல்களில் “ஆவி நிலைமையில் உள்ள வாயுவின் பகுதி அழுத்தமானது (கரைபொருளின் ஆவி அழுத்தம்) கரைசலிலுள்ள வாயுநிலைக் கரைபொருளின் மோல் பின்னத்திற்கு, நேர்விகிதத்திலிருக்கும்” என்பது என்ன விதி?
ஹென்றி விதி
- ஹென்றி விதியானது எந்த நிலைகளில் மட்டுமே பொருந்தக் கூடியது ?
மிதமான வெப்பநிலை மற்றும் அழுத்த நிலைகள்
- என்ன வாயுக்கள் மட்டுமே ஹென்றி விதிக்கு உட்படுகின்றன?
குறைந்த கரைதிறன் கொண்ட வாயுக்கள்
- திரவ நிலையில் உள்ள மூலக்கூறுகளின் இயக்க ஆற்றலானது அவற்றுக்கிடையே உள்ள மூலக்கூறுகளுக்கு இடைப்பட்ட கவர்ச்சி விசையை விட அதிகமாக இருக்குமானால் மூலக்கூறுகளில் இருந்து தப்பித்து செல்லும் இந்த செயல்முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
ஆவியாதல்
- கொடுக்கப்பட்ட ஒரு வெப்ப நிலையில் தனது திரவத்துடன் சமநிலையில் உள்ள ஒரு ஆவியின் அழுத்தமானது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஆவி அழுத்தம்
- ஒரு கரைபொருள் ஒரு திரவ கரைப்பானில் கரைக்கும் போது கிடைக்கும் கரைசலானது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
திரவக் கரைசல்
- இரண்டு கூறுகளை மட்டுமே கொண்டிருக்கக்கூடிய கரைசலானது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இருகூறுக் கரைசல்
- எளிதில் ஆவியாகும் திரவங்களை கொண்ட கரைசல் களில் கரைசலில் உள்ள ஒவ்வொரு கூறின் பகுதி ஆவி அழுத்தமும் அவற்றின் எண்ணத்துடன் நேர்விகிதத்தில் மோல் பின்னத்துடன் நேர் விகிதத்திலிருக்கும் என்பது என்ன விதி?
ரௌலட் விதி
- தூய டொலுயீன் ஆவி அழுத்தம் எவ்வளவு?
22.3mmHg
- தூய பென்சீன் ஆவி அழுத்தம் எவ்வளவு?
74.7 mmHg
- ஒரு தூய கரைப்பானில் எளிதில் ஆவியாகாதக் கரைபொருளைக் கரைக்கும் போது தூய கரைப்பானின் ஆவி அழுத்தம் என்னவாகும்?
குறையும்
- சோடியம் குளோரைடை நீரில் கரைக்கும் போது உப்புக் கரைசலின் ஆவி அழுத்தம் என்னவாகிறது?
குறைகிறது
- “ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ,எளிதில் ஆவியாகத கரை பொருளை கொண்டுள்ள ஒரு நல்லியல்பு கரைசலின் ஒப்பு ஆவிஅழுத்த குறைவானது கரைபொருள் மோல் பின்னத்திற்கு சமம்” என்பது என்ன விதி?
ரௌலட் விதி
- கரைசலில் உள்ள ஒவ்வொரு கூறும் அதாவது கரைபொருள் மற்றும் கரைப்பான் ஆகியன செறிவு எல்லை முழுமைக்கும் ரௌலட் விதிக்கு உட்பட்டிருக்குமாயின் அந்த கரைசல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நல்லியல்பு கரைசல்
- செறிவு எல்லை முழுமைக்கும் ரௌலட் விதிக்கு உட்படாத கரைசல்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இயல்பு கரைசல்கள்
- ரௌலட் விதியில் இருந்து விலகல் அடைவதற்கு காரணமான காரணிகள் என்னென்ன?
கரைபொருள் – கரைப்பான் இடையீடுகள் ,கரைபொருள் பிரிகையடைதல்,கரைபொருள் இணைதல், வெப்பநிலை, அழுத்தம்,செறிவு
- ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ஒரு திரவத்தின் ஆவி அழுத்தமானது வலிமண்டல அழுத்தத்திற்கு 1 atmக்குச் சமமானதாகிறதோ அந்த வெப்ப நிலையானது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கொதிநிலை
- நீரின் ஆவி அழுத்தம் மதிப்பு எதற்கு சமம்?
1 atm
- நீரின் கொதிநிலை எவ்வளவு?
100°C/ 373.15K
- எத்தனாலின் கொதிநிலை எவ்வளவு?
351.5K
- பென்சீன் கொதிநிலை எவ்வளவு?
353.3K
- குளோரோஃபார்ம் கொதிநிலை எவ்வளவு?
334.4K
- ஈதர் கொதிநிலை எவ்வளவு?
307.8K
- கார்பன் டெட்ரா குளோரைடு கொதிநிலை எவ்வளவு?
350.0K
- கார்பன் டைசல்பைடு கொதிநிலை எவ்வளவு?
319.4K
- அசிட்டிக் அமிலம் கொதிநிலை எவ்வளவு?
391.1K
- வளைய ஹெக்சேன் கொதிநிலை எவ்வளவு?
353.74K
- வளிமண்டல அழுத்தத்தில் எந்த ஒரு வெப்ப நிலையில் ஒரு பொருளின் திட மற்றும் திரவ நிலைமைகள் ஆகிய இரண்டும் சமமான ஆவி அழுத்தத்தை பெற்றுள்ளனவோ அந்த வெப்பநிலை எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?
உறைநிலை
- நீரின் உறைநிலை எவ்வளவு?
273.0K
- எத்தனாலின் உறைநிலை எவ்வளவு?
155.7K
- பென்சீன் உறைநிலை எவ்வளவு?
278.6K
- குளோரோஃபார்ம் உறைநிலை எவ்வளவு?
209.6K
- ஈதர் உறைநிலை எவ்வளவு?
156.9K
- கார்பன் டைசல்பைடு உறைநிலை எவ்வளவு?
164.2K
- அசிட்டிக் அமிலம் உறைநிலை எவ்வளவு?
290.0K
- வளைய ஹெக்சேன் உறைநிலை எவ்வளவு?
279.5K
- குளிர் பிரதேசங்களில் பயணிக்கும் கார்களின் ரேடியேட்டர்களில் உறைத் தடுப்பானாக எதனை பயன்படுத்த முடியும்?
எத்திலீன் கிளைக்கால் (C2H6O2)
- ஒரு கூறு புகவிடும் சவ்வின் வழியாக செறிவு குறைந்த கரைசலிலிருந்து செறிவு மிகுந்த கரைசலுக்கு கரைப்பான் மூலக்கூறுகள் விரைவில் செல்லும் தன்னிச்சையான நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சவ்வூடுபரவல்
- சவ்வூடுபரவல் (osmosis) எனும் சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது ?
கிரேக்க மொழியில் (Osmos) என்பதன் பொருள் தள்ளு
- நீர்த்த கரைசல்களுக்கு ,சவ்வூடுபரவல் அழுத்தமானது கரை பொருளின் மோலார் செறிவு மற்றும் கரைசலின் வெப்பநிலை ஆகியவற்றிற்கு நேர்விகிதத்தில் இருக்கும் என்பதை கண்டறிந்தவர் யார்?
வாண்ட் ஹாஃப்
- வாண்ட் ஹாஃப் சமன்பாடு என்று அழைக்கப்படுவது எது?
π=CRT
- கொடுக்கப்பட்ட வெப்பநிலையில் ஒத்த சவ்வூடுபரவல் அழுத்தங்களைக் கொண்ட கரைசல்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஐசோடானிக் கரைசல்கள்
- இரண்டு ஐசோடானிக் கரைசல்களுக்கு இடையே நிகர கரைப்பான் நகர்வானது எவ்வளவு?
பூஜ்ஜியம்
- 37°C வெப்ப நிலையில் ரத்த செல்களின் சவ்வூடு பரவல் அழுத்தம் தோராயமாக எவ்வளவு?
7 atm
- நரம்பு வழியாக செலுத்தப்படும் கரைசல்கள் மிக நீர்த்த அல்லது ஹைப்போடானிக் கரைசல்களாக இருந்தால் சவ்வூடுபரவல் அழுத்தத்தை சீராக்குவதற்காக செல்களுக்கு வெளியே உள்ள கரைப்பானானது செல்களுக்குள் நுழையும் நிகழ்வுக்கு என்ன பெயர்?
இரத்தச் சிதைவு (hemolysis)
- தூய நீரானது கரைசல் பகுதியிலிருந்து கரைப்பான் பகுதிக்கு நகருப் செயல்முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
எதிர் சவ்வூடு பரவல்
- வணிகரீதியில் பொதுவாக என்ன சவ்வுகள் சவ்வூடுபரவலுக்காக பயன்படுத்தப்படுகின்றன ?
செல்லுலோஸ் அசிடேட் அல்லது பாலிஅமைடு சவ்வுகள்
- கரைசல்களின் கரைபொருளின் கணக்கிடப்பட்ட மோலார் நிறையின் மதிப்பானது உண்மையான மோலார் நிறை மதிப்பிலிருந்து மாறுபடுகிறது இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அசாதாரண மோலார் நிறை
- கரைசலில் கரை பொருளின் இணைதல் அல்லது பிரிகை அடைதலின் வீதத்தை கணக்கிடுவதற்காக வாண்ட் ஹாஃப் அறிமுகப்படுத்தி தற்போது அது வாண்ட் ஹாஃப் காரணி என்று அழைக்கப்படுகிறது?
i
- கரை பொருளின் உண்மையான மோலார் நிறைக்கும் அசாதாரண (கணக்கிடப்பட்டது) மோலார் நிறைக்கும் இடையே உள்ள விகிதம் எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?
வாண்ட் ஹாஃப் காரணி
- பென்சீனில் அசிட்டிக் அமிலம் கரைந்துள்ள கரைசலின் கணக்கிடப்பட்ட வாண்ட் ஹாஃப் காரணி மதிப்பு என்ன?
0.5
- சோடியம் குளோரைடு நீர் கரைசலுக்கு வாண்ட் ஹாஃப் காரணி மதிப்பு என்ன?
2
- பிரிகையடைதல் அல்லது இணைதல் நிகழாத கரை பொருளுக்கு வாண்ட் ஹாஃப் காரணி மதிப்பு என்ன?
1
- கரைசலில் இணைந்து உயர்படி ஒலிகோமரைத் தரும் கரைபொருள்களின் வாண்ட் ஹாஃப் காரணி மதிப்பு என்ன?
1க்கும் குறைவு
11TH CHEMISTRY STUDY NOTES |கரைசல்கள்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services