- கரிமச் சேர்மமான யூரியாவை கனிமச் சேர்மமான அமோனியம் சயனேட்டிலிருந்து தொகுத்து தயாரித்தவர் யார் ?
ப்ரெட்ரிச் வோலர்
- ப்ரெட்ரிச் வோலர் எந்தத் தனிமங்களின் இணை கண்டுபிடிப்பாளராக அறியப்படுகிறார்?
இட்ரியம்,பெரிலியம் மற்றும் டைட்டேனியம்
- கார்பனின் சேர்மங்களை பற்றி கற்றறிவது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
கரிம வேதியியல்
- ஒரு தனிம அணுவானது அதே தனிமத்தின் அணுக்களோடு சேர்ந்து சங்கிலித்தொடர் பிணைப்பை ஏற்படுத்தும் தன்மை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
சங்கிலித் தொடராக்கம்(catenation)
- ஆர்கானிக் என்ற வார்த்தை பொருள் என்ன?
உயிருள்ள உயிரினங்களில் இருந்து பெறப்பட்டவை
- கார்பன் எத்தனை இணைதிற எலக்ட்ரான்களை பெற்றுள்ளது?
4
- கார்பன் இயல்பு ஆற்றல் நிலையில் அதன் எலக்ட்ரான் அமைப்பு என்ன?
1S² 2S² 2P²
- கரிம சேர்மங்கள் கார்பனின் என்ன பிணைப்பு சேர்மங்கள்?
சகப்பிணைப்பு சேர்மங்கள்
- கரிமச் சேர்மங்கள் எந்த கரைப்பான்களில் எளிதில் கரைகின்றன?
பென்சீன் ,டொலுவீன்,ஈதர், குளோரோபார்ம்
- ஈதரின் வினைச்செயல் தொகுதி என்ன?
-O-
- ஆல்கஹால்களின் வினைச்செயல் தொகுதி என்ன?
-OH-
- ஒரு குறிப்பிட்ட வினை செயல் தொகுதியினை பெற்று இரு அடுத்தடுத்த சேர்மங்களின் மூலக்கூறு வாய்ப்பாடு -CH2- என்ற தொகுதியால் வேறுபடும் தொடர்ச்சியான கரிமச் சேர்மங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
படிவரிசைச் சேர்மங்கள்
- ஆல்கேன்களின் வாய்ப்பாடு என்ன?
CnH2n+2
- ஆல்கீன்களின் வாய்ப்பாடு என்ன?
CnH2n
- ஆல்கைன்களின் வாய்ப்பாடு என்ன?
CnH2n-2
- ஆல்கைல் ஹாலேடு -பொதுவான வாய்ப்பாடு என்ன?
R-X
- ஆல்கஹால் -பொதுவான வாய்ப்பாடு என்ன?
R-OH
- ஈதர் -பொதுவான வாய்ப்பாடு என்ன?
R-O-R’
- ஆல்டிஹைடு -பொதுவான வாய்ப்பாடு என்ன?
R-CHo
- கீட்டோன் -பொதுவான வாய்ப்பாடு என்ன?
R-CO-R’
- கார்பாக்சிலிக் அமிலம் -பொதுவான வாய்ப்பாடு என்ன?
R-COOH
- எஸ்டர் -பொதுவான வாய்ப்பாடு என்ன?
R-COOR’
- அமில நிரிலி -பொதுவான வாய்ப்பாடு என்ன?
R-CO-O-CO-R’
- அசைல் ஹேலைடு -பொதுவான வாய்ப்பாடு என்ன?
R-COX
- சல்போனிக் அமிலம் -பொதுவான வாய்ப்பாடு என்ன?
R-SO3H
- நைட்ரோ ஆல்கேன் -பொதுவான வாய்ப்பாடு என்ன?
R-NO2
- அமீன் -பொதுவான வாய்ப்பாடு என்ன?
R-NH2
- அமைடு -பொதுவான வாய்ப்பாடு என்ன?
R-CO-NH2
- சயனைடு -பொதுவான வாய்ப்பாடு என்ன?
R-CN
- ஐசோ சயனைடு -பொதுவான வாய்ப்பாடு என்ன?
R-NC
- சயனேட் -பொதுவான வாய்ப்பாடு என்ன?
R-OCN
- ஐசோ சயனேட் -பொதுவான வாய்ப்பாடு என்ன?
R-NCO
- தயோ சயனேட் -பொதுவான வாய்ப்பாடு என்ன?
R-SCN
- ஐசோ தயோ சயனேட் -பொதுவான வாய்ப்பாடு என்ன?
R-NCS
- தயோ ஆல்கஹால்கள் (அ) தயால்கள் -பொதுவான வாய்ப்பாடு என்ன?
R-SH
- தயோ ஈதர்கள் -பொதுவான வாய்ப்பாடு என்ன?
R-S-R’
- இமீன்கள் -பொதுவான வாய்ப்பாடு என்ன?
R-CH=NH
- நைட்ரசோ சேர்மங்கள் -பொதுவான வாய்ப்பாடு என்ன?
R-NO
- ஹைட்ரசின்கள் -பொதுவான வாய்ப்பாடு என்ன?
R-NH-NH2
- ஹைட்ரசோ சேர்மங்கள் -பொதுவான வாய்ப்பாடு என்ன?
R-NH-NH-R
- பீனால்கள் -பொதுவான வாய்ப்பாடு என்ன?
C6H5OH
- IUPACன் விரிவாக்கம் என்ன?
The international union of pure and applied chemistry
- ஒரு கரிமச்சேர்மத்தின் IUPAC பெயர் எத்தனை பகுதிகளை உள்ளடக்கியது ?
மூன்று: முன்னொட்டு+மூலவார்த்தை+பின்னொட்டு
- மூலக்கூறில் உள்ள நீண்ட தொடர்ச்சியான அதிக நீளமுடைய கார்பன் சங்கிலியில் உள்ள கார்பன் அணுக்களின் எண்ணிக்கையிணைக் குறிப்பிடுவது எது ?
மூல வார்த்தை
- முதன்மையான கார்பன் சங்கிலியோடு பிணைக்கப்பட்டுள்ள தொகுதிகளை குறிப்பிடுவது எது ?
முன்னொட்டு
- வினை செயல் தொகுதியை குறிப்பிடுவது எது?
பின்னொட்டு
- C1 என்ற கார்பன் அணுக்களின் சங்கிலியின் மூலவார்த்தை என்ன?
மெத்
- C2 என்ற கார்பன் அணுக்களின் சங்கிலியின் மூலவார்த்தை என்ன?
ஈத்
- C3 என்ற கார்பன் அணுக்களின் சங்கிலியின் மூலவார்த்தை என்ன?
புரப்
- C4 என்ற கார்பன் அணுக்களின் சங்கிலியின் மூலவார்த்தை என்ன?
பியூட்
- C5 என்ற கார்பன் அணுக்களின் சங்கிலியின் மூலவார்த்தை என்ன?
பென்ட்
- C6 என்ற கார்பன் அணுக்களின் சங்கிலியின் மூலவார்த்தை என்ன?
ஹெக்ஸ
- C7 என்ற கார்பன் அணுக்களின் சங்கிலியின் மூலவார்த்தை என்ன?
ஹெப்ட்
- C8 என்ற கார்பன் அணுக்களின் சங்கிலியின் மூலவார்த்தை என்ன?
ஆக்ட்
- C9 என்ற கார்பன் அணுக்களின் சங்கிலியின் மூலவார்த்தை என்ன?
நான்
- C10 என்ற கார்பன் அணுக்களின் சங்கிலியின் மூலவார்த்தை என்ன?
டெக்
- C11 என்ற கார்பன் அணுக்களின் சங்கிலியின் மூலவார்த்தை என்ன?
அன்டக்
- C12 என்ற கார்பன் அணுக்களின் சங்கிலியின் மூலவார்த்தை என்ன?
டோடெக்
- C13 என்ற கார்பன் அணுக்களின் சங்கிலியின் மூலவார்த்தை என்ன?
ட்ரைடெக்
- C14 என்ற கார்பன் அணுக்களின் சங்கிலியின் மூலவார்த்தை என்ன?
டெட்ராடெக்
- C15 என்ற கார்பன் அணுக்களின் சங்கிலியின் மூலவார்த்தை என்ன?
பென்டாடெக்
- C16 என்ற கார்பன் அணுக்களின் சங்கிலியின் மூலவார்த்தை என்ன?
ஹெக்ஸாடெக்
- C17 என்ற கார்பன் அணுக்களின் சங்கிலியின் மூலவார்த்தை என்ன?
ஹெப்டாடெக்
- C18 என்ற கார்பன் அணுக்களின் சங்கிலியின் மூலவார்த்தை என்ன?
ஆக்டாடெக்
- C19 என்ற கார்பன் அணுக்களின் சங்கிலியின் மூலவார்த்தை என்ன?
நானாடெக்
- C20 என்ற கார்பன் அணுக்களின் சங்கிலியின் மூலவார்த்தை என்ன?
ஐகோஸ்
- C21 என்ற கார்பன் அணுக்களின் சங்கிலியின் மூலவார்த்தை என்ன?
ஹெனிகோஸ்
- C22 என்ற கார்பன் அணுக்களின் சங்கிலியின் மூலவார்த்தை என்ன?
டோகோஸ்
- C30 என்ற கார்பன் அணுக்களின் சங்கிலியின் மூலவார்த்தை என்ன?
ட்ரையாகான்ட்
- C31 என்ற கார்பன் அணுக்களின் சங்கிலியின் மூலவார்த்தை என்ன?
ஹென்ட்ரையாகான்ட்
- C32 என்ற கார்பன் அணுக்களின் சங்கிலியின் மூலவார்த்தை என்ன?
டோட்ரையாகான்ட்
- C40 என்ற கார்பன் அணுக்களின் சங்கிலியின் மூலவார்த்தை என்ன?
டெட்ராகான்ட்
- C50 என்ற கார்பன் அணுக்களின் சங்கிலியின் மூலவார்த்தை என்ன?
பென்டாகான்ட்
- C60 என்ற கார்பன் அணுக்களின் சங்கிலியின் மூலவார்த்தை என்ன?
ஹெக்சாகான்ட்
- C70 என்ற கார்பன் அணுக்களின் சங்கிலியின் மூலவார்த்தை என்ன?
ஹெப்டாகான்ட்
- C80 என்ற கார்பன் அணுக்களின் சங்கிலியின் மூலவார்த்தை என்ன?
ஆக்டாகான்ட்
- C90 என்ற கார்பன் அணுக்களின் சங்கிலியின் மூலவார்த்தை என்ன?
நானாகான்ட்
- C100 என்ற கார்பன் அணுக்களின் சங்கிலியின் மூலவார்த்தை என்ன?
ஹெக்ட்
- எத்தனை வகையான பின்னொட்டுகள் உள்ளன?
2 :முதன்மை பின்னொட்டு மற்றும் இரண்டாம் நிலை பின்னொட்டு
- கரிமச் சேர்மத்தின் நிறைவுற்ற /நிறைவுறாத தன்மையினை குறிப்பிடுவது எது?
முதன்மை பின்னொட்டு
- கரிமச் சேர்மத்திலுள்ள வினைச்செயல் தொகுதியின் தன்மையினை குறிப்பிடுவது எது ?
இரண்டாம் நிலை பின்னொட்டு
- அரோமடிக் சேர்மமானது எத்தனை பகுதிகளை உள்ளடக்கியது?
2: உட்கரு மற்றும் பக்கச் சங்கிலி
- அரோமேட்டிக் சேர்மத்தில் காணப்படும் பென்சீன் வளையம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
உட்கரு
- பென்சீன் வளையத்தில் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஹைட்ரஜன் அணுக்களை பதிலீடு செய்து, பென்சீன் உட்கருவுடன் நேரடியாக இணைந்துள்ள ஆல்கைல் அல்லது மற்ற அலிபாட்டிக் தொகுதிகளில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பக்க சங்கிலிகள்
- அரோமடிக் சேர்மங்கள் பொதுவாக எத்தனை வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன ?
இரண்டு : உட்கருவில் பதிலீடு செய்யப்பட்ட அரோமேட்டிக் சேர்மங்கள் & பக்க சங்கிலியில் பதிலீடு செய்யப்பட்ட சேர்மங்கள்
- மூலக்கூறில் அடங்கியுள்ள அணுக்களின் எண்ணிக்கையை குறிப்பிடுவதுடன் அதன் வடிவமைப்பு பற்றிய குறைந்தபட்ச தகவலை தரக்கூடியது எது?
ஒரு சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு
- கரிம மூலக்கூறுகளின் முப்பரிமாண வடிவமைப்புகளை சிறந்த முறையில் புலக்காட்சிப்படுத்த பயன்படும் இயற் உபகரணங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மூலக்கூறு மாதிரிகள்
- மாற்றியம் (Isomerism) என்ற சொற்கூறு யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது ?
பெர்சீலியஸ்
- ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டினையும் வெவ்வேறு அமைப்பு வாய்ப்பாடுகள் மற்றும் பண்புகளை பெற்றுள்ள கரிமச் சேர்மங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
மாற்றியங்கள்
- இட அமைவு மாறுபடுவதால் வேறுபட்ட அமைப்பு வாய்ப்பாடுகளை பெற்றுள்ள சேர்மங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இட அமைப்பு மாற்றியங்கள்
- ஒரே மூலக்கூறு வாய்ப்பாடினையும் வெவ்வேறு வினைச்செயல் தொகுதிகளையும் பெற்றிருக்கும் சேர்மங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வினை செயல் தொகுதி மாற்றங்கள்
- வினைச்செயல் தொகுதியின் இருபுறமும் வெவ்வேறு ஆல்கைல் தொகுதியில் இணைக்கப்பட்டிருப்பதால் ஏற்படும் ஒரு சிறப்பு வகை மாற்றியம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இணை மாற்றியம்(metamerism)
- ஈதர்கள் ,கீட்டோன்கள் ,எஸ்டர்கள் மற்றும் ஈரினைய அமீன்கள் போன்ற வினைசெயல் தொகுதிகளை பெற்றுள்ள சேர்மங்களின் என்ன மாற்றியம் காணப்படுகிறது?
இணை மாற்றியம்
- சேர்மமானது எளிதில் ஒன்றுக்கொன்று மாற்றமடையும் வேறு வடிவமைப்புகளை பெற்றிருக்கும் இதன் வடிவமைப்புகளில் குறைந்தபட்சம் ஒரு அணு பொதுவாக ஹைட்ரஜனின் அமைவிடம் மாற்றமடைந்திருக்கும் இத்தகைய வெவ்வேறு வடிவமைப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
இயங்கு சமநிலை மாற்றங்கள்
- கீட்டோ வடிவமானது ஈனால் வடிவமாக மாற்றம் அடைவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஈனாலாக்கம்
- ஒரேவிதமான பிணைப்பு இணைப்பினைப் பெற்று ,தொகுதிகள் அல்லது அணுக்கள் புறவெளியில் வெவ்வேறு விதங்களில் அமைவதால் உருவாகும் மாற்றியங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
புறவெளி மாற்றங்கள்
- முப்பரிமான தன்மையினை (புறவெளி அமைப்புகள்) பற்றி படிக்கும் வேதியியலின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
முப்பரிமாண வேதியியல் (Stereo Chemistry)
- இரட்டை பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ள கார்பன்களுடன் இணைந்துள்ள இரு ஒத்த தொகுதிகளும் ஒரே பக்கத்தில் காணப்படின் அவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சிஸ் மாற்றியம்
- இர ஒத்தத் தொகுதிகளும் இரட்டைப் பிணைப்பின் எதிரெதிர் பக்கங்களில் காணப்படின் அவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
டிரான்ஸ் மாற்றியங்கள்
- ஒரே இயற் மற்றும் வேதிப் பண்புகளைப் பெற்றிருந்து தள முனைவுற்ற ஒளியின் தளத்தினை சுழற்றுவதில் மட்டும் மாறுபட்டு காணப்படும் சேர்மங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஒளி சுழற்சி மாற்றியங்கள்
- ஒளி சுழற்சி மாற்றியங்கள் ,தளமுனைவு கொண்ட ஒளியினை சமகோண அளவுகளில் சுழற்றுகின்றன. ஆனால் எதிர் எதிர் திசைகளில் சுற்றுகின்றன இந்நிகழ்வுக்கு என்ன பெயர்?
இனான்சியோமெரிசம்
- ஒன்றுக்கு மேற்பட்ட ஆடி பிம்பங்களை உடைய மாற்றியங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இனன்ஷியோமர்கள்
- ஒரு கார்பனின் நான்கு இணைதிறன்களும் வெவ்வேறு பதிலிகளால் நிறைவு செய்யப்பட்டின் அத்தகைய கார்பன் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சீர்மையற்ற கார்பன் அல்லது கைர்ல் கார்பன்
- சேர்மங்களில் காணப்படும் தனிமங்களில் முதன்மையானவை எவை?
கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன்
- நைட்ரஜனை அளந்தறிய எத்தனை முறைகள் உள்ளன?
2 டுமாஸ் முறை, கெல்டால் முறை
- உணவுப்பொருள்கள் ,உரங்கள் போன்றவற்றின் பகுப்பாய்விற்கு பெருமளவில் பயன்படும் நைட்ரஜன் அளவிடும் முறை எது?
கெல்டால் முறை
- நைட்ரஜனை அளந்தறிய பயன்படும் இரு முறைகள் உயர் துல்லியமான முறை எது?
டுமாஸ் முறை
- கரிம சேர்மங்களை பிரித்தெடுக்க மற்றும் தூய்மைப்படுத்த பெரும்பாலும் பயன்படுத்தப்படும் முறைகள் என்னென்ன?
படிகமாக்குதல் ,பதங்கமாதல், வாலை வடித்தல் ,பின்ன வாலை வடித்தல் ,நீராவியால் வாலை வடித்தல், கொதிநிலை மாறா வாலைவடித்தல், வகையீட்டு வாலைவடித்தல், வண்ணப்பிரிகை முறை
- கரிம தேட பொருள்களை தூய்மைப்படுத்துவதற்கும் மிகப் பரவலாக பயன்படுத்தப்படும் முறை எது ?
படிகமாக்குதல்
- மிகச்சிறிய கொதிநிலை வேறுபாடு கொண்ட நீர்மங்கள் அடங்கிய கலவையிலிருந்து அந்த நீர்மங்களை தனித்தனியே பிரித்து எடுக்கவும் அவைகளை தூய்மைப்படுத்தவும் எந்த முறை பயன்படுகிறது ?
பின்ன வாலை வடித்தல்
- எளிதில் ஆவியாகும் மாசுக்கள் உள்ள நீர்மங்களை தூய்மைப்படுத்தும் வேறுபட்ட கொதிநிலை கொண்ட நீர்ம கலவைகளை அதன் பகுதி பொருட்களாக பிரிப்பதற்கும் பயன்படும் முறை எது?
வாலைவடித்தல் (காய்ச்சி வடித்தல்)
- கொதிநிலை மாறா வாலை வடித்தல் முறையின் மூலம் மட்டுமே தூய்மைப்படுத்த இயலக்கூடிய கலவைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
மாறா கொதிநிலைச் சேர்மங்கள் (Azeotropes)
- சிறிதளவு பொருள் அடங்கியுள்ள கலவையிலிருந்து பகுதி பொருட்களைப் பிரித்தெடுப்பதற்க்கும், தூய்மைபடுத்துவதற்க்கும் பயன்படும் முறை எது?
வண்ணப்பிரிகை முறை
- வண்ணப்பிரிகை முறை முதன்முதலில் யாரால் எப்போது பயன்படுத்தப்பட்டது?
1906 ரஷ்ய நாட்டைச் சேர்ந்த தாவரவியல் அறிஞரான M.S.ஸ்வியட்
- நகரும் கரைப்பானின் இயக்க விளைவினால் வெவ்வேறு விகிதங்களில் ஒரு நுண்துளைகள் ஊடகத்தின் வழியே ஒரு கலவையில் உள்ள தனித்த பகுதிப் பொருட்கள் பிரிக்கப்படுதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வண்ணப்பிரிகை முறை
11TH CHEMISTRY STUDY NOTES |கரிம வேதியியலின் அடிப்படைகள்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services