- உலகத்தில் கண்டறியப்பட்ட பாசி சிற்றினங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
40,000
- உலகத்தில் கண்டறியப்பட்ட பிரையோஃபைட் சிற்றினங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
16,236
- உலகத்தில் கண்டறியப்பட்ட டெரிடோஃபைட்கள் சிற்றினங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
12,000
- உலகத்தில் கண்டறியப்பட்ட ஜிம்னோஸ்பெர்ம் சிற்றினங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
1,012
- உலகத்தில் கண்டறியப்பட்ட ஆஞ்சியோஸ்பெர்ம் சிங்கங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
2,68,600
- இந்தியாவில் கண்டறியப்பட்ட பாசி சிற்றினங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
7,357
- இந்தியாவில் கண்டறியப்பட்ட பிரையோஃபைட் சிற்றினங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
2,748
- இந்தியாவில் கண்டறியப்பட்ட டெரிடோஃபைட்கள் சிற்றினங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
1,289
- இந்தியாவில் கண்டறியப்பட்ட ஜிம்னோஸ்பெர்ம் சிற்றினங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
79
- இந்தியாவில் கண்டறியப்பட்ட ஆஞ்சியோஸ்பெர்ம் சிங்கங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
18,386
- எம்பிரியோஃபைட்டாவில் அடங்கிய தாவரங்கள் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன?
இரண்டு : பிரையோஃபைட்டா ,டிரக்கியோஃபைட்டா
- டிரக்கியோஃபைட்டா எத்தனையாக பிரிக்கப்பட்டுள்ளது?
இரண்டு: டெரிட்டோஃபைட்டா,ஸ்பெர்மடோஃபைட்டா
- உண்மையான வேர் தண்டு இலைகளற்ற எளிய தாவரங்கள் எது?
பாசிகள்
- உலகில் நடைபெறும் மொத்த முதல்நிலை உற்பத்தியின் அளவில் பாதிக்கும் மேல் எந்த பிரிவு தாவரங்களை சார்ந்துள்ளது?
பாசிகள்
- இந்திய பாசியியலின் தந்தை யார்?
M.O பார்த்தசாரதி
- O பார்த்தசாரதி எதைப்பற்றி தனிக்கட்டுரை(Monograph) வெளியிட்டுள்ளார்?
வால்வகேல்ஸ்
- O பார்த்தசாரதி என்ன புதிய பாசி இனங்களை கண்டறிந்தார்?
ஃபிரிட்சியல்லா,எக்பல்லோசிஸ்டாப்சிஸ்,கேராசைஃபான்,சிலிண்ட்சோகேப்சோப்சிஸ்
- கிராசிலேரியா,சர்காசம் முதலிய பாசிகள் எதில் வாழ்பவை ?
கடல்நீர்
- ஊடோகோணியம்,யூலோத்ரிக்ஸ் முதலிய பாசிகள் எதில் வாழ்பவை ?
நன்னீர்
- ஃபிரிட்சியல்லா,வவுச்சீரியா முதலிய பாசிகள் எதில் வாழ்பவை ?
நிலம்
- குளோரெல்லா எனும் பாசி எதில் வாழ்கிறது ?
ஹைட்ரா மற்றும் கடற்பஞ்சுகளில் விலங்கு அக உயிரிகளாக (Endozoic)
- கிளாடோஃபோரா கிரிஸ்பேட்டா போன்ற பாசிகள் எதில் வாழ்பவை?
மெல்லுடலிகளின் ஓடுகளின்மேல்
- உப்பளத்தில் வளரும் திறன் பெற்ற பாசி எது?
டுனாலியல்லா சலைனா (Halophytic algae)
- பனிப்பாறைகளில் வளரும் பாசிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
குளிர்நாட்ட பாசிகள்(Cryophytic algae)
- பனி நிறைந்த மலைகளில் வளர்ந்து பனிக்கு சிவப்பு நிறத்தை தருவது எது? கிளாமிடோமோனஸ் நிவாலிஸ்
- கோலியோகீட்,ரோடிமீனியா போன்ற பாசிகள் எதில் வாழ்கின்றன?
நீர்வாழ் தாவரங்களின் மீது தோற்றுத் தாவரமாக (Epiphytic algae)
- பாசிகளைப் பற்றி படிக்கும் அறிவியல் பிரிவுக்கு பெயர் என்ன?
பாசியியல் (algology or phycology)
- ஒரு செல் அமைப்புடைய நகரும் தன்மையுடைய பாசி எது?
கிளாமிடோமோனஸ்
- ஒரு செல் அமைப்புடைய நகரும் தன்மையற்ற பாசி?
குளோரெல்லா
- காலனி அமைப்புடன் நகரும் தன்மை கொண்ட பாசி எது ?
வால்வாக்ஸ்
- காலனி அமைப்புடன் நகரும் தன்மையற்ற பாசி எது?
ஹைட்ரோடிக்டியான்
- குழல் அமைப்புடைய பாசி எது?
வவுச்சீரியா
- கிளைத்தலற்ற இழை வடிவம் கொண்ட பாசி எது?
ஸ்பைரோகைரா
- கிளைத்த இழை வடிவம் கொண்ட பாசி எது?
கிளாடோஃபோரா
- வட்டு வடிவம் கொண்ட பாசி எது ?
கோலியோகீட்
- இரு வடிவ உடலம் கொண்ட பாசி எது ?
ஃபிரிட்சியல்லா
- இலை வடிவம் கொண்ட பாசி எது?
அல்வா
- ராட்சத கடல் பாசிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
கெல்ப்
- இராட்சத கடல் பாசிகள் எடுத்துக்காட்டு?
லாமினேரியா, மாக்ரோசிஸ்டிஸ்
- பாசிகளின் செல்சுவர் எதனால் ஆனது?
செல்லுலோஸ் மற்றும் ஹெமிசெல்லுலோஸ்
- டயாட்டம்களில் எதனால் ஆன செல்சுவர் காணப்படுகிறது?
சிலிக்கா
- கேராவின் உடலம் எதனால் சூழப்பட்டுள்ளது?
கல்சியம் கார்பனேட்
- சில பாசிகளில் செல் சுவரில் காணப்படும் ஆல்ஜின், பாலிசாக்கரைட்களின் பாலிசல்பேட் எஸ்டர்கள் போன்றவை எதன் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களாக உள்ளன?
அகார்அகார் மற்றும் கேரஜீனன்
- பாசிகள் என்ன முறைகளில் இனப்பெருக்கம் அடைகின்றன?
உடல இனப்பெருக்கம், பாலிலா இனப்பெருக்கம், பால் இனப்பெருக்கம்
- பாசிகளில் இருபிளவுறுதல் முறைக்கு எடுத்துக்காட்டு எது?
கிளாமிடோமோனஸ்
- பாசிகளில் துண்டாதல் முறைக்கு எடுத்துக்காட்டு எது?
யூலோத்ரிக்ஸ்
- பாசிகளில் மொட்டுவிடுதல் முறைக்கு எடுத்துக் காட்டு எது?
புரோட்டோசைஃபான்
- பாசிகளில் பாலினப்பெருக்கம் எத்தனை வகைகளில் நடைபெறுகிறது?
3: ஒத்த கேமீட்களின் இணைவு, சமமற்ற கேமீட்களின் இனைவு, முட்டை கருவுறுதல்
- மிகத் தொன்மையான ஆல்கா என அறியப்படுவது எது?
கிரிப்பெனியா (Grypania)
- கிரிப்பெனியா எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?
ஏறத்தாழ 2100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கு மிச்சிகனில் இரும்பு படிம தோன்றல்களில் கண்டறியப்பட்டது
- பாசிகளின் அமைப்பு மற்றும் இனப்பெருக்கம் (the structure and reproduction of the algae) 1935 ,என்ற நூலில் பாசிகளை பதினோரு வகுப்புகளில் வகைப்படுத்தியவர் யார்?
F E.ஃப்ரிட்ச்
- எவை பொதுவாக பசும் பாசிகள் என அழைக்கப்படுகின்றன?
குளோரோஃபைசி
- குளோரோஃபைசி எங்கு வாழக்கூடியது?
பெரும்பாலும் நீர்வாழ்வன சில நிலத்திலும் வளரக்கூடியது
- எதில் கிண்ண வடிவில் பசுங்கணிகங்கள் காணப்படுகின்றன ?
கிளாமிடோமோனஸ்
- எதில் வட்டு வடிவில் பசுங்கணிகங்கள் காணப்படுகின்றன ?
கேரா
- எதில் கச்சை வடிவில் பசுங்கணிகங்கள் காணப்படுகின்றன ?
யூலோத்ரிக்ஸ்
- எதில் வலைப்பின்னல் வடிவில் பசுங்கணிகங்கள் காணப்படுகின்றன ? ஊடோகோணியம்
- எதில் சுருள் வடிவில் காணப்படுகின்றன?
ஸ்பைரோகைரா
- எதில் நட்சத்திர வடிவில் பசுங்கணிகங்கள் காணப்படுகின்றன ?
சைக்னீமா
- எதில் தட்டு வடிவ பசுங்கணிகங்கள் காணப்படுகின்றன?
மவுஜிலியா
- பசுங்கணிகத்தில் உள்ள எவை தரசத்தை சேமிக்கின்றன?
பைரினாய்டுகள்
- குளோரோஃபைசி பாசிகளில் செல் சுவரின் உள்ளடுக்கு எதனால் ஆனது?
செல்லுலோஸ்
- குளோரோஃபைசி பாசிகளில் செல் சுவரின் வெளியடுக்கு எதனால் ஆனது?
பெக்டின்
- குளோரோஃபைசி வகுப்பிலுள்ள பாசிகள் என்னென்ன?
குளோரெல்லா,கிளாமிடோமோனஸ்,வால்வாக்ஸ்,ஸ்பைரோகைரா,யூலோத்ரிக்ஸ்,கேரா,அல்வா
- எந்த வகுப்பை சார்ந்த பாசிகள் பழுப்பு பாசிகள் என அறியப்படுகின்றன?
ஃபியோஃபைசி
- ஃபியோஃபைசி வகுப்பைச் சார்ந்த ப்ளியூரோக்ளாடியா எங்கு வாழ்கிறது?
நன்னீர்
- ஃபியோஃபைசி வகுப்பில் எந்த பாசியின் உடலம் இழை வடிவம் உடையது?
எக்டோகார்பஸ்
- ஃபியோஃபைசி வகுப்பில் எந்த பாசியின் உடலம் இலை வடிவம் உடையது?
டிக்டியோட்டா
- ஃபியோஃபைசி வகுப்பில் எவை மிகப்பெரிய ராட்சத கடல் பாசி?
லாமினேரியா ,மேக்ரோசிஸ்டிஸ்
- ஃபியோஃபைசி வகுப்பில் உள்ள பாசிகளில் என்ன நிறமிகள் காணப்படுகின்றன?
பச்சையம் a மற்றும் c கரோட்டினாய்டுகள்,ஸாந்தோஃபில்கள்
- ஃபியோஃபைசி வகுப்பில் எந்த தங்க பழுப்பு நிறமி காணப்படுகிறது?
ஃபியுகோஸாந்தின்
- ஃபியோஃபைசி வகுப்பில் பாசிகளுக்கு ஆலிவ் பச்சையிலிருந்து பழுப்பு நிறம் வரை வேறுபட்டிருக்க காரணமாக இருப்பது எது?
ஃபியுகோஸாந்தின்
- ஃபியோஃபைசியின் சேமிப்பு உணவு எது?
மானிட்டால்,லாமினாரின்
- பொதுவாக சிவப்பு பாசிகள் என அழைக்கப்படுவது எது?
ரோடோஃபைசி
- ரோடோஃபைசி வகுப்பு பாசிகள் பெரும்பாலும் எங்கு வாழ்பவை ?
கடலில்
- குளோரோஃபைசி வகுப்பு பாசிகளில் காணப்படும் நிறமிகள் எது?
பச்சையம் a,b,கரோட்டினாய்டுகள்-ஸாந்தோஃபில்
- குளோரோஃபைசி வகுப்பு பாசிகளில் காணப்படும் கசையிழை?
1,2,4 அல்லது அதற்கு மேற்பட்ட சம அளவு உடைய முன்புறத்தில் அமைந்த சாட்டை ஒத்த கசையிழை
- குளோரோஃபைசி வகுப்பு பாசிகளின் சேமிப்பு உணவு எது?
தரசம்
- ஸாந்தோஃபைசி வகுப்பு பாசிகளில் காணப்படும் நிறமிகள் எது?
பச்சையம் a,b,கரோட்டினாய்டுகள்-ஸாந்தோஃபில்
- ஸாந்தோஃபைசி வகுப்பு பாசிகளில் காணப்படும் கசையிழை?
முன்புறத்தில் பொருந்திய இரண்டு சமமற்ற கசை இலைகள்
- ஸாந்தோஃபைசி வகுப்பு பாசிகளின் சேமிப்பு உணவு எது?
கொழுப்பு,லியுக்கோசின்
- கிரைசோஃபைசி வகுப்பு பாசிகளில் காணப்படும் நிறமிகள் எது?
பச்சையம் a,b,கரோட்டினாய்டுகள்
- கிரைசோஃபைசி வகுப்பு பாசிகளில் காணப்படும் கசையிழை?
முன்புறத்தில் பொருந்திய ஒன்று அல்லது இரண்டு சமமற்ற அல்லது சமமான கசையிழைகள் , இரண்டும் சாட்டை ஒத்த கசையிழைகள் அல்லது 1 சாட்டை ஒத்த கசையிழை மற்றும் ஒரு குறுநா தகடொத்த வகை
- கிரைசோஃபைசி வகுப்பு பாசிகளின் சேமிப்பு உணவு எது?
எண்ணெய்,லியுக்கோசின்
- பேசில்லேரியோஃபைசி வகுப்பு பாசிகளில் காணப்படும் நிறமிகள் எது?
பச்சையம் a,c,கரோட்டினாய்டுகள்
- பேசில்லேரியோஃபைசி வகுப்பு பாசிகளில் காணப்படும் கசையிழை?
முன்புறத்தில் பொருந்திய கொரு குறுநா தகடொத்த கசையிழை
- பேசில்லேரியோஃபைசி வகுப்பு பாசிகளின் சேமிப்பு உணவு எது?
லியுக்கோசின், கொழுப்பு
- கிரிப்டோஃபைசி வகுப்பு பாசிகளில் காணப்படும் நிறமிகள் எது?
பச்சையம் a,c,கரோட்டினாய்டுகள்-ஸாந்தோஃபில்
- கிரிப்டோஃபைசி வகுப்பு பாசிகளில் காணப்படும் கசையிழை?
முன்புறத்தில் பொருந்திய சமமற்ற 2 குறுநா தகடொத்த கசையிழைகள்
- கிரிப்டோஃபைசி வகுப்பு பாசிகளின் சேமிப்பு உணவு எது?
தரசம்
- டைனோஃபைசி வகுப்பு பாசிகளில் காணப்படும் நிறமிகள் எது?
பச்சையம் a,c,கரோட்டினாய்டுகள்-ஸாந்தோஃபில்
- டைனோஃபைசி வகுப்பு பாசிகளில் காணப்படும் கசையிழை?
இரு சமமற்ற (சாட்டை ஒத்த கசையிழைகள்) பக்கவாட்டிலமைந்த கசையிழை வெவ்வேறு தளத்தில் உள்ளது
- டைனோஃபைசி வகுப்பு பாசிகளின் சேமிப்பு உணவு எது?
தரசம், எண்ணெய்
- குளோரோமோனாடினியே வகுப்பு பாசிகளில் காணப்படும் நிறமிகள் எது?
பச்சையம் a,b,கரோட்டினாய்டுகள்-ஸாந்தோஃபில்
- குளோரோமோனாடினியே வகுப்பு பாசிகளில் காணப்படும் கசையிழை?
இரண்டு சமமான கசையிழைகள்
- குளோரோமோனாடினியே வகுப்பு பாசிகளின் சேமிப்பு உணவு எது?
எண்ணெய்
- யூக்ளினோஃபைசி வகுப்பு பாசிகளில் காணப்படும் நிறமிகள் எது?
பச்சையம் a,b
- யூக்ளினோஃபைசி வகுப்பு பாசிகளில் காணப்படும் கசையிழை?
முன்புறத்தில் பொருந்திய ஒன்று அல்லது இரண்டு குறுநா தகடொத்த கசையிழைகள்
- யூக்ளினோஃபைசி வகுப்பு பாசிகளின் சேமிப்பு உணவு எது?
கொழுப்பு,பாராமைலான்
- ஃபியோஃபைசி வகுப்பு பாசிகளில் காணப்படும் நிறமிகள் எது?
பச்சையம் a,b, ஸாந்தோஃபில்
- ஃபியோஃபைசி வகுப்பு பாசிகளில் காணப்படும் கசையிழை?
இரு சமமற்ற (சாட்டை ஒத்த மற்றும் குறுநா தகடொத்த பக்கவாட்டில் பொருந்திய கசையிழைகள்) பக்கவாட்டிலமைந்த கசையிழை வெவ்வேறு தளத்தில் உள்ளது
- ஃபியோஃபைசி வகுப்பு பாசிகளின் சேமிப்பு உணவு எது?
லாமினாரின் தரசம், கொழுப்பு
- ரோடாஃபைசி வகுப்பு பாசிகளில் காணப்படும் நிறமிகள் எது?
பச்சையம் a,r,பைக்கோ எரித்ரின்
- ரோடாஃபைசி வகுப்பு பாசிகளில் காணப்படும் கசையிழை?
இல்லை
- ரோடாஃபைசி வகுப்பு பாசிகளின் சேமிப்பு உணவு எது?
புளோரிடியன் தரசம்
- சயனோஃபைசி வகுப்பு பாசிகளில் காணப்படும் நிறமிகள் எது?
பச்சையம் a,c,கரோட்டினாய்டுகள் c பைக்கோசயனின் அல்லோபைக்கோசயனின்
- சயனோஃபைசி வகுப்பு பாசிகளில் காணப்படும் கசையிழை?
இல்லை
- சயனோஃபைசி வகுப்பு பாசிகளின் சேமிப்பு உணவு எது?
சயனோஃபைசியன் தரசம்
- ரோடாஃபைசி வகுப்பில் காணப்படும் பாசிகளின் எடுத்துக்காட்டு?
செராமியம்,பாலிசைபோனியா,ஜெலிடியம்,கிரிப்டோனெமியா,ஜிகார்டினா
- பாட்ரியோகாக்கஸ் பிரோனி எனும் பசும் பாசி என்ன தயாரித்தலில் பயன்படுத்தப்படுகிறது?
உயிரி எரிபொருள்
- அயோடின் நிறைந்த ஆதாரப் பொருட்கள் எவை?
ராட்சத கடற்பாசிகள்
- தனி செல் புரதமாக பயன்படுத்தப்படுவது எது?
குளோரெல்லா
- உப்பளங்களில் வளரும் என்ன பாசி உடல் நலத்திற்கு தேவையான பீட்டா-கரோட்டீனை தருகிறது?
டுனாலியல்லா சலைனா
- உணவாகப் பயன்படும் பாசிகள் என்னென்ன ?
குளோரெல்லா ,லாமினேரியா, சர்காசம்,அல்வா,என்டிரோமார்பா
- அகார் அகார் செல் சுவரிலிருந்து பெறப்படும் பொருள், நுண்ணுயிரியல் ஆராய்ச்சி கூடங்களில் ஊடகம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது . புட்டியிடுதல் துறையில் பொதிவு செய்தல், அழகு பொருட்கள் காகிதம், துணிகள் தொடர்பான தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் பாசிகள் என்னென்ன?
கிராசிலேரியா,ஜெலிடியல்லா,ஜிகார்டினா
- கேராஜினின் -பற்பசை வண்ணப்பூச்சு ரத்தம் உறைவிகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பாசி எது?
கான்ட்ரஸ் கிரிஸ்பஸ்
- ஆல்ஜினேட்- ஐஸ்கிரீம் ,வண்ணப்பூச்சு தீப்பற்றிக் கொள்ளாத துணிகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பாசி எது?
லேமினேரியா,ஆஸ்கோபில்லம்
- தீவனமாகப் பயன்படுத்தப் படும் பாசி எது? லாமினேரியா,சர்காஸம்,ஆஸ்கோபில்லம்,பியுகஸ்
- டையட்டமேசிய மண்- நீர் வடிகட்டி மின்காப்பு பொருள்கள் தயாரிக்க கான்கிரீட் மற்றும் ரப்பர் வலிமை கூட்டும் பொருளாக சேர்க்கப் பயன்படும் பாசி எது?
டயாட்டம் (சிலிக்கா புற ஓடுகள்)
- உரங்களாக பயன்படுத்தப்படும் பாசி எது?
லித்தோபில்லம்,கேராஃபியுகஸ்
- குளோரெல்லின்- உயிர் எதிர்ப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பாசி எது?
குளொரெல்லா
- கழிவுநீர் சுத்திகரித்தல் மாசு குறியீட்டு உயிரினங்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் பாசி எது?
குளொரெல்லா,செனிடெஸ்மஸ்,கிளாமிடோமோனாஸ்
- காஃபி தாவரத்தில் சிவப்பு துரு நோய்க்கு காரணமான பாசி எது?
செபலூரஸ் வைரசென்ஸ்
- இழை போன்ற உடலமைப்பை கொண்ட நன்னீரில் வாழும் ஒரு பாசி எது?
ஊடோகோணியம்
- ஊடோகோணியம் டெரஸ்ட்டிரி எங்கு வாழ்கிறது?
நிலம்
- என்ன பாசிகள் பாசி கூழ்மங்கள் அறுவடை செய்ய வணிகரீதியில் வளர்க்கப்படுகின்றன?
கப்பாபைகஸ் ஆல்வர்ஜே,கிராசிலேரியா எடுலிஸ்,ஜெலிடியெல்லா எசரோசா
- கடல் பனை என அழைக்கப்படும் பழுப்பு பாசி எது?
போஸ்டிலியா பால்மிபார்மிஸ்
- ஊடோகோணியத்தின் உட்புற அடுக்கு எதனால் ஆனது?
செல்லுலோஸ்
- ஊடோகோணியத்தின் வெளிப்புற அடுக்கு எதனால் ஆனது?
பெக்டின்
- நிறமற்ற நீட்சி உடைய மேற்பகுதியில் வட்ட அமைப்பில் சம அளவிலான கசையிழைகள் கொண்ட அமைப்பிற்கு என்ன பெயர்?
ஸ்டெபனோகான்ட்
- ஊடோகோணியம் எத்தனை சிற்றினங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது?
2: பெருஆண் சிற்றினங்கள் , குட்டை ஆண் சிற்றினங்கள்
- எந்த வகை சிற்றினங்களில் ஆந்திரீடியங்களும் ஊகோணியங்களும் ஒரே உடலிழையில் அமைந்துள்ளன?
பெருஆண் இருபால்வகை
- எந்த வகை சிற்றினங்களில் ஆந்திரீடியங்களும் ஊகோணியங்களும் வெவ்வேறு உடலிழையில் அமைந்துள்ளன?
பெருஆண் ஒருபால்வகை
- கேரா பொதுவாக எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கல் தாவரங்கள்
- கேரா எங்கு வாழ்வன?
நன்னீர்
- எந்த முன்னோடிகளில் இருந்து பிரையோபைட்டுகள் தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது?
பாசிகள் போன்ற முன்னோடிகள்
- இந்திய பிரையோலஜியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
சிவ்ராம் காஷியாப்
- “லிவர்வொர்ட்ஸ் ஆவெஸ்டர்ன் ஹிமாலயாஸ் அண்ட் பஞ்சாப் பிளெயின்ஸ்” என்ற நூலை வெளியிட்டவர் யார்?
சிவ்ராம் காஷியாப்
- 1957ல் பிரையோஃபைட்களை மூன்று பகுப்புகளாக வகைப்படுத்தியவர் யார்?
புரோஸ்காயர்
- புரோஸ்காயர் வகைப்படுத்திய பிரையோஃபைட்களின் வகைகள் என்னென்ன?
ஹெப்பாட்டிகாப்சிடா,ஆந்த்ரோசெரடாப்சிடா,பிரையாப்சிடா
- பரிணாமத்தில் கீழ்நிலையில் உள்ள பிரையோபைட்டுகளை கொண்ட வகுப்பு எது?
ஹெப்பாட்டிகாப்சிடா
- மேம்பாடு அடைந்த பிரையோபைட்டுகள் எது?
பிரையாப்சிடா
- எந்தத் தாவரங்கள் மிகையாக வளர்ந்து மடிந்த பின்னர்ப் புவியில் புதையுண்டு அழுத்தப்பட்டுக் கடினமான பீட் உண்டாகிறது?
ஸ்பேக்னம்
- சாற்றுண்ணி வகை பிரையோஃபைட்கள் எவை?
பக்ஸ்பாமியா ஏபில்லா,கிரிப்டோதாலஸ் மிராபிலிஸ்
- பீட்டிலிருந்து என்ன பெறப்படுகிறது?
நைட்ரேட்டுகள் ,பழுப்பு நிறச் சாயம், டானின் பொருட்கள் போன்றவைகள்
- ஸ்பேக்னம் மற்றும் பீட் எதற்கு பயன்படுத்தப்படுகிறது ?
இரண்டும் அதிக அளவில் நீரை தேக்கி வைக்கும் திறன் கொண்டிருப்பதால் அடைக்கும் பொருட்களாக தோட்டக்கலைத் துறையில் பயன்படுத்தப்படுகின்றன
- மார்கான்ஷியா பாலிமார்பா எதற்கு பயன்படுத்தப்படுகிறது ?
நுரையீரல் காச நோயை குணப்படுத்த
- ஸ்பேக்னம்,பிரையம்,பாலிடிரைக்கம் போன்றவை எதற்கு பயன்படுத்தப்படுகிறது ?
உணவாக
- குளிர்ந்த ஈரப்பதம் நிறைந்த நிழலான இடங்களில் வளர்வது எது?
மார்கான்ஷியா
- மார்கான்ஷியா வகுப்பில் பொதுவாக காணப்படும் சிற்றினம் இது?
மார்கான்ஷியா பாலிமார்பா
- ஃப்யூனேரியா எந்த தாவர வகையைச் சார்ந்தது ?
இருபால் தாவர வகை
- முதன்முதலாக உண்மைநிலை தாவர தொகுப்பாக அறியப்படுபவை எவை?
டெரிடோஃபைட்டுகள்
- சைலம் புளோயம் பெற்ற முதல் தாவரங்கள் எவை?
டெரிடோஃபைட்டுகள்
- டெரிடோஃபைட்டுகள் வேறு எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
வாஸ்குலத்தொகுப்புடைய பூவாத்தாவரங்கள்
- டெரிடோஃபைட்டுகள் பிரிவைச் சார்ந்த தாவரங்கள் என்னென்ன?
கிளப் மாஸ்கள்,குதிரைவாலிகள்,இறகுத்தாவரங்கள்,நீர்பெரணிகள்,மரப்பெரணிகள்
- டெரிடோஃபைட்டுகள் காலகட்டத்தில் மிகுதியாகக் காணப்பட்டன?
பேலியோசோயிக் ஊவியின் டிவோனியன் காலகட்டம்
- டெரிடோஃபைட்டுகள் பெரும்பாலும் எங்கு வளரக்கூடிய சிறு செடிகள் ஆகும்?
ஈரப்பதம் நிறைந்த குளிர்ந்த நீர் உள்ள நிழலான பகுதிகள்
- டெரிடோஃபைட்டுகளில் நீரைக் கடந்து முக்கிய கூறுகள் எது?
டிரக்கீடுகள்
- 1954ல் டெரிடோஃபைட்டுகளுக்கு வகைப்பாட்டின் முன்மொழிந்தவர் யார்?
ரெய்மர்
- ரெய்மர் முன்மொழிந்த டெரிடோஃபைட்டுகளின் பிரிவுகள் என்னென்ன?
சைலோஃபைட்டாப்சிடா,சைலோடாபிசிடா,லைகாப்சிடா,ஸ்பீனாப்சிடா,டீராப்சிடா
- ருமோஹ்ரா அடியாண்டிபார்மிஸ் பயன்கள் என்னென்ன?
வெட்டுமலர் ஒழுங்கமைப்பு செயல் முறைகளில் பயன்படுத்தப்படுகிறது
- மார்சீலியா (ஆரக்கீரை) பயன்கள் என்னென்ன?
உணவாகப் பயன்படுத்தப்படுகிறது
- அசோல்லோவின் பயன்கள் என்னென்ன?
உயிரி உரம் தயாரிக்கப் பயன்படுகிறது
- டிரையோப்டரிஸ் பிலிக்ஸ்-மாஸ் பயன்கள் என்னென்ன?
நாடாப்புழு நீக்குவதற்கு
- டெரிஸ் விட்டேட்டா பயன்கள் என்னென்ன?
மண்ணில் உள்ள வன்உலோகங்களை நீக்கு செய்ய பயன்படுத்தப்படுகிறது உயிரிவழி சீர்திருத்தம்
- டெரிடியம் சிற்றினம் பயன்கள் என்னென்ன?
இலைகள் பச்சைநிறச் சாயத்தினைத் தருகின்றன
- ஈக்விசிட்டம் சிற்றினம் பயன்கள் என்னென்ன?
அழுக்கு அகற்றுதலுக்குத் தாவரத்தின் தண்டுகள் பயன்படுதப்படுகிறது.
- சைலோட்டம்,லைக்கோபோடியம்,செலாஜினெல்லா,ஆஞ்சியாப்டெரிஸ்,மராஷியா ஆகியவற்றின் பயன்கள் என்னென்ன?
அலங்காரத்திற்காக வளர்க்கப்படுகின்றன
- செலாஜினெல்லா பொதுவாக எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஸ்பைக் மாஸ்
- அடியாண்டம் பொதுவாக எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மங்கையர் கூந்தல் பெரணி அல்லது நடக்கும் பெரணி
- இந்தியாவில் பொதுவாக காணப்படும் சில அடியாண்டம் சிற்றினங்கள் என்னென்ன?
அடியாண்டம் கேப்பில்லஸ் – வெனிரிஸ், அ.பெடேட்டம்,அ.காடேட்டம்,அ. வெனுசுட்டம்
- ஸ்டீல் என்பது எதைக் குறிக்கும்?
வாஸ்குலர் திசுக்களால் ஆன மைய உருளையை குறிக்கும்
- ஸ்டீல்கள் எத்தனை வகைப்படும்?
இரண்டு: புரோட்டோஸ்டீல் & சைபனோஸ்டீல்
- எந்த வகையில் சைலம் ஃபுளோயத்தால் சூழப்பட்டிருக்கும்?
புரோட்டோஸ்டீல்
- புரோட்டோஸ்டீலின் வகைகள் என்னென்ன?
ஹேப்ளோஸ்டீல்,ஆக்டினோஸ்டீல்,பிளெக்டோஸ்டீல்,கலப்பு புரோட்டோஸ்டீல்
- புரோட்டோஸ்டீலின் எந்த வகையில் மையத்திலுள்ள சைலம் ஃபுளோயத்தால் சூழப்பட்டிருக்கும்?
ஹேப்ளோஸ்டீல்
- ஹேப்ளோஸ்டீல் வகைக்கு எடுத்துக்காட்டு?
செலாஜினெல்லா
- புரோட்டோஸ்டீலின் எந்த வகையில் நட்சத்திர வடிவ சைலம் ஃபுளோயத்தால் சூழப்பட்டிருக்கும்?
ஆக்டினோஸ்டீல்
- ஆக்டினோஸ்டீல் வகைக்கு எடுத்துக்காட்டு?
லைக்கோபோடியம் செர்ரேட்டம்
- புரோட்டோஸ்டீலின் எந்த வகையில் சைலமும் ஃபுளோயம் தட்டுகள் போன்று மாறி மாறி அமைந்திருக்கும்?
பிளெக்டோஸ்டீல்
- பிளெக்டோஸ்டீல் வகைக்கு எடுத்துக்காட்டு?
லைக்கோபோடியம் கிளாவெட்டம்
- புரோட்டோஸ்டீலின் எந்த வகையில் மையத்திலுள்ள சைலம் ஃபுளோயத்தில் ஆங்காங்கே சிதறி காணப்படும் ?
கலப்பு புரோட்டோஸ்டீல்
- கலப்பு புரோட்டோஸ்டீல் வகைக்கு எடுத்துக்காட்டு?
லைக்கோபோடியம் செர்னுவம்
- எந்த வகையில் சைலம் ஃபுளோயத்தால் சூழப்பட்டிருக்கும் மற்றும் மையத்தில் பித் காணப்படும்?
சைபனோஸ்டீல்
- சைபனோஸ்டீல் வகைகள் என்னென்ன?
வெளிப்புற ஃபுளோயம்சூழ் சைபனோஸ்டீல்,இருபக்க ஃபுளோயம்சூழ் சைபனோஸ்டீல்,சொலினோஸ்டீல்,அடாக்டோஸ்டீல்,பாலிசைக்ளிக்ஸ்டீல்
- சைலத்தின் வெளிப்புறத்தில் மட்டும் ஃபுளோயம் காணப்படும் மையத்தில் பித் காணப்படும் இது என்ன வகை?
வெளிப்புற ஃபுளோயம்சூழ் சைபனோஸ்டீல்
- வெளிப்புற ஃபுளோயம்சூழ் சைபனோஸ்டீலுக்கு எடுத்துக்காட்டு?
ஆஸ்முண்டா
- சைலத்தின் இருபுறமும் ஃபுளோயம் காணப்படும் மையத்தில் பித் காணப்படும் இது என்ன வகை?
இருபக்க ஃபுளோயம்சூழ் சைபனோஸ்டீல்
- இருபக்க ஃபுளோயம்சூழ் சைபனோஸ்டீல் எடுத்துக்காட்டு?
மார்சீலியா
- பல ஒருங்கமைந்த வாஸ்குலர் கற்றைகளாகப் பிரிந்து பித்தை சூழ்ந்து ஒரு வளையமாக அமைந்திருப்பது எது?
யூஸ்டீல்
- ஸ்டீல் பிளவுற்று தெளிவான ஒருங்கமைந்த வாஸ்குலக் கற்றைகளாகவும் ,அடிப்படைத்திசுவில் சிதறியும் காணப்படுவது எது?
அடாக்டோஸ்டீல்
- அடாக்டோஸ்டீல் வகைக்கு எடுத்துக்காட்டு?
ஒருவிதையிலைத் தண்டு
- வாஸ்குலார் திசுக்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வளையங்களாக காணப்படுவது எது?
பாலிசைக்ளிக்ஸ்டீல்
- பாலிசைக்ளிக்ஸ்டீலுக்கு எடுத்துக்காட்டு?
டெரிடியம்
- எந்த ஜிம்னோஸ்பெர்ம் தாவரம் ஆம்பரை உற்பத்தி செய்கிறது?
பைனிட்டிஸ் சக்ஸினிஃபெரா
- ஜிம்னோஸ்பெர்ம் என்பது எந்த மொழியிலிருந்து பெறப்பட்ட வார்த்தை?
கிரேக்கம்: (ஜிம்னோ- திறந்த ,பெர்மா- விதை)
- ஜிம்னோஸ்பெர்ம் தாவரங்கள் எந்த பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றன?
உலகின் வெப்ப மண்டலம் மற்றும் மித வெப்ப மண்டலப் பகுதிகளில்
- ஜிம்னோஸ்பெர்ம்களை 1965ல் வகைப்படுத்தியவர் யார்?
ஸ்போர்ன்
- ஸ்போர்ன் வகைப்பாட்டின் படி ஜிம்னோஸ்பெர்ம்கள் எத்தனை தொகுப்புகளாக உள்ளன?
3:சைக்கடாப்சிடா,கோனிஃபெராப்சிடா,நீட்டாப்சிடா
- சைகஸ் சிர்சினாலிஸ் ,சை.ரெவல்யூட்டா போன்ற ஜிம்னோஸ்பர்ம்களில் கிடைக்கும் பொருட்கள் என்ன?
சாகோ
- சைகஸ் சிர்சினாலிஸ் ,சை.ரெவல்யூட்டா போன்ற ஜிம்னோஸ்பர்ம்கள் பயன்பாடு என்ன?
தரசம் நிறைந்த உணவாக பயன்படுகிறது
- பைனஸ் ஜெரார்டியானா ஜிம்னோஸ்பர்ம்களில் கிடைக்கும் பொருட்கள் என்ன?
வறுத்த விதைகள்
- பைனஸ் ஜெரார்டியானா ஜிம்னோஸ்பர்ம்கள் பயன்பாடு என்ன?
உணவாக பயன்படுகிறது
- ஏபிஸ் பால்சாமியா போன்ற ஜிம்னோஸ்பர்ம்களில் கிடைக்கும் பொருட்கள் என்ன?
கனடாபால்சம்(ரெசின்)
- ஏபிஸ் பால்சாமியா போன்ற ஜிம்னோஸ்பர்ம்கள் பயன்பாடு என்ன?
நிலையானக்கண்ணாடி துண்டம் தயாரித்தலில் பொதித்தல் பொருளாக பயன்படுகிறது
- பைனஸ் இன்சுலாரிஸ்,பை.ராக்ஸ்பரோயியை போன்ற ஜிம்னோஸ்பர்ம்களில் கிடைக்கும் பொருட்கள் என்ன?
ரோசின்,டர்பன்டைன்
- பைனஸ் இன்சுலாரிஸ்,பை.ராக்ஸ்பரோயியை போன்ற ஜிம்னோஸ்பர்ம்கள் பயன்பாடு என்ன?
தாள் (காகித ) அளவீட்டிலும் வார்னிஷ் தயாரிக்கவும் உதவுகின்றன.
- அரகேரியா,பில்லோகிளாடஸ்,பைசியா போன்ற ஜிம்னோஸ்பர்ம்களில் கிடைக்கும் பொருட்கள் என்ன?
டானின்கள்
- அரகேரியா,பில்லோகிளாடஸ்,பைசியா போன்ற ஜிம்னோஸ்பர்ம்கள் பயன்பாடு என்ன?
பட்டையில் இருந்து பெறப்படும் டானின்கள் தோல்துறையில் பயன்படுத்தப்படுகின்றன.
- டாக்ஸஸ் பிரேபிஃபோலியா போன்ற ஜிம்னோஸ்பர்ம்களில் கிடைக்கும் பொருட்கள் என்ன?
டாக்ஸால்
- டாக்ஸஸ் பிரேபிஃபோலியா போன்ற ஜிம்னோஸ்பர்ம்கள் பயன்பாடு என்ன?
புற்றுநோய்க்கு சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது
- எபிட்ரா ஜெரராடியானா போன்ற ஜிம்னோஸ்பர்ம்களில் கிடைக்கும் பொருட்கள் என்ன?
எஃபிடிரின்
- எபிட்ரா ஜெரராடியானா போன்ற ஜிம்னோஸ்பர்ம்கள் பயன்பாடு என்ன?
ஆஸ்துமா மூச்சுக்குழாய் அழற்சி ஆகிய நோய்களை குணப்படுத்தும் மருந்தாக பயன்படுகிறது.
- பைனஸ் ராக்ஸ்பரோயியை போன்ற ஜிம்னோஸ்பர்ம்களில் கிடைக்கும் பொருட்கள் என்ன?
ஓலியோரெசின்
- பைனஸ் ராக்ஸ்பரோயியை போன்ற ஜிம்னோஸ்பர்ம்கள் பயன்பாடு என்ன?
கோந்து,வார்னிஷ்கள்,அச்சுமை தயாரித்தலில் உதவுகிறது
- பைனஸ் ராக்ஸ்பரோயியை,பைசியா ஸ்மித்தியானா போன்ற ஜிம்னோஸ்பர்ம்களில் கிடைக்கும் பொருட்கள் என்ன?
மரக்கூழ்
- பைனஸ் ராக்ஸ்பரோயியை,பைசியா ஸ்மித்தியானா போன்ற ஜிம்னோஸ்பர்ம்கள் பயன்பாடு என்ன?
காகிதம் தயாரித்தலில் உதவுகிறது
- செட்ரஸ் டியோடரா போன்ற ஜிம்னோஸ்பர்ம்களில் கிடைக்கும் பொருட்கள் என்ன?
மரக்கட்டை
- செட்ரஸ் டியோடரா போன்ற ஜிம்னோஸ்பர்ம்கள் பயன்பாடு என்ன?
கதவுகள் ,படகுகள் ,தண்டவாள அடிக்கட்டைகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது
- செட்ரஸ் அட்லாண்டிகா போன்ற ஜிம்னோஸ்பர்ம்களில் கிடைக்கும் பொருட்கள் என்ன?
எண்ணெய்
- செட்ரஸ் அட்லாண்டிகா போன்ற ஜிம்னோஸ்பர்ம்கள் பயன்பாடு என்ன?
வாசனைத் திரவி தயாரிப்பில் பயன்படுகிறது
- துஜா,குப்ரசஸ்,அரகேரியா,கிரிப்டோமீரியா போன்ற ஜிம்னோஸ்பர்ம்களில் கிடைக்கும் பொருட்கள் என்ன?
முழுத்தாவரமும் பயன்படும்
- துஜா,குப்ரசஸ்,அரகேரியா,கிரிப்டோமீரியா ஜிம்னோஸ்பர்ம்கள் பயன்பாடு என்ன?
அலங்கார தாவரங்கள் பயன்படுகிறது
- சைக்கஸ் தாவரங்கள் எங்கு பரவியுள்ளன ?
உலகின் கிழக்கு துருவப் பகுதிகளில் வெப்ப மண்டல ,மித வெப்ப மண்டல பகுதிகளில்
- பொதுவாக காணப்படும் சைக்கஸ் சிற்றினங்கள் என்னென்ன?
சைகஸ் ரெவல்யூட்டா,சை.பெட்டோமி,சை.சிர்சினாலிஸ்,சை.ராம்ஃபி
- பசுமைமாறா வறள்நிலத் தாவரமான சைக்கஸ் தோற்றத்தில் எவ்வாறு காணப்படும்?
சிறிய பனைமரம்
- சைக்கஸ் எத்தனை வகையான வேர்களைக் கொண்டுள்ளது?
2 ஆணிவேர் மற்றும் பவழ வேர்
- சைக்கஸ் எத்தனை வகையான இலைகளைக் கொண்டுள்ளது?
இரண்டு: தழை இலைகள் மற்றும் செதில் இலைகள்
- இலையின் அகன்ற மேல்பகுதி படிப்படியாக நுனி நோக்கி குறுகிய கூர்மையான முனையை கொண்டிருப்பதற்கு பெயர் என்ன?
அபோஃபைசிஸ்
- சைகஸின் சூல் எத்தனை அடுக்குகளை கொண்டது?
மூன்று: சதைப்பற்றுடன் கூடிய உள்ளடுக்கு மற்றும் வெளி அடுக்கு சார்க்கோடெஸ்டா என்றும் கல் போன்ற உறுதியான நடு அடுக்கு ஸ்கிளிரோடெஸ்டா என்றும் அறியப்படுகிறது.
- கூம்பு வடிவமுடைய உயரமான மரம் எது?
பைனஸ்
- பைனஸ் எங்கு காணப்படுகிறது ?
வடக்கு மித வெப்ப மண்டலப் பகுதிகளிலும் துணை அல்பைன் பகுதிகளிலும் பசுமைமாறா காடுகளை உருவாக்குகின்றன
- பைனஸ் தாவரத்தில் எத்தனை வகையான கிளைகளைக் கொண்டுள்ளது?
நெடுங்கிளை அல்லது வரம்பற்ற வளர்ச்சியுடைய கிளை மற்றும் குறுங்கிளை அல்லது வரம்பு கொண்ட வளர்ச்சியுடைய கிளை
- பைனஸ் தாவரத்தில் எத்தனை வகையான இலைகள் காணப்படுகிறது?
செதில் இலைகள் & பசுமையான இலைகள்
- பைனஸ் தாவரத்தில் உணவுப் பொருட்களை இலையிடைத் திசுவிலிருந்து புளோயத்திற்க்கு கடத்த உதுவுவது எது?
அல்புமின் செல்கள்
- கூட்டிணைவு திசுவுடன் சேர்ந்து நீரைக் கடத்த உதவுவது எது?
டிரக்கீடு செல்கள்
- தமிழ்நாட்டில் எங்கு தேசிய கல்மரப் பூங்கா அமைந்துள்ளது ?
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவக்கரை கிராமம்
- தமிழ்நாட்டில் உள்ள தேசிய கல்மர பூங்காவில் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த மரக்கட்டைகளின் எச்சங்கள் உள்ளன?
20 மில்லியன் ஆண்டுகள்
- எந்த சொல் தொல்லுயிர் எச்ச தாவரங்களுக்கு பெயர் சூட்ட பயன்படுத்தப்படுகிறது?
உரு பேரினம் (form genera)
- இந்திய நாட்டிலுள்ள சில முக்கிய தொல்லுயிர் எச்சம் மிகுந்த பகுதிகள் எவை?
சிவாலிக் தொல்லுயிர்ப் பூங்கா- இமாச்சல பிரதேசம்,மாண்ட்லா தொல்லுயிர்ப் பூங்கா- மத்திய பிரதேசம், இராஜ்மஹால் குன்றுகள்- ஜார்கண்ட், அரியலூர் பூங்கா -தமிழ்நாடு
- இந்திய தொல் தாவரவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
பேராசிரியர் பீர்பல் ஸானி
- பீர்பல் ஸானி தொல் தாவர நிறுவனம் எங்கு அமைந்துள்ளது ?
லக்னோ
- திறந்த விதை தாவரங்கள் எவ்வாறு அழைக்கப்படும் ?
ஜிம்னோஸ்பெர்ம்கள்
- மூடுவிதை தாவரங்கள் எவ்வாறு அழைக்கப்படும் ?
ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
- புவியில் உள்ள தாவர தொகுப்பில் பெரும்பான்மையாகவும் ,நிலத்தில் வாழத்தகுந்த தகவமைப்புகள் பெற்றவைகளாவும் உள்ள தாவரம் எது?
ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
11TH BOTANY STUDY NOTES |தாவர உலகம்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services