- பெரும்பாலான நரம்பு செல்கள் என்ன நிலையில் காணப்படுகின்றன?
G⁰
- நரம்பு செல்கள் மற்றும் நியூரோகிளியா இறக்கும்போது அல்லது சேதம் ஏற்படும் போது இவை எந்த செல்களால் மாற்றீடு செய்யப்படுகின்றன?
நியூரல் ஸ்டெம் செல்களால்
- உயிருள்ள செல்களின் முக்கிய பண்பானது எது ?
வளர்ச்சியடைந்து பகுப்படைவது
- அஸ்காரிஸ் என்ற உருளைப்புழுவில் செய்த ஆய்வுகளின் மூலம் செல் மரபியலில் கருத்துக்களை வெளியிட்டவர் யார்?
எட்வர்ட் வான் பெனிடன்
- எட்வர்ட் வான் பெனிடன் எந்த நாட்டைச் சார்ந்தவர்?
பெல்ஜியம் (லீகி பல்கலைக்கழகத்தில் விலங்கியல் பேராசிரியராக இருந்தார்)
- செல் என்ற சொல்லை உருவாக்கியவர் யார் ?
இராபர்ட் ஹூக் ,1665
- முதன் முதலில் உயிருள்ள செல்களை (பாக்டீரியாவின் அமைப்பு ) நுண்ணோக்கி மூலம் கண்டறிந்தவர் யார் ?
ஆன்டோன்வான் லியூவன் ஹாக் 1670-74
- முதன்முதலில் ஆர்கிட் வேர் செல்களில் காணப்படும் உட்கருவை கண்டறிந்தவர் யார் ?
இராபர்ட் பிரௌன், 1831-33
- புரோட்டோபிளாசம் என்ற பதத்தை உருவாக்கியவர் யார்? ஜென் இவான்ஜிலிஸ்டா புர்க்னே J.E.பர்கன்ஜி
- செல் கோட்பாட்டினை முன்மொழிந்தவர் யார்?
M.J.ஷிலீடன் மற்றும் D.S ஷிவான் 1838-39
- “ஆமினிஸ் செல்லுலா ஈ செல்லுலா” என்ற சொல் கோட்பாட்டை முன் மொழிந்தவர் யார்?
ருடால்ப் லட்விக் காரல் விர்ச்சௌ (1858)
- குரோமோசோம்களை முதன்முதலில் விவரித்தவர் யார்?
ஆண்டன் ஷ்னிய்டர்(1873)
- மைட்டாசிஸ் என்ற பதத்தை உருவாக்கியவர் மற்றும் குரோமோசோம்களின் செயல்பாட்டை விளக்கியவர் யார்?
வால்த்தர் பிளம்மிங் (1882)
- உருளைப்புழுவில் நிகழும் செல் பகுப்பை கண்டறிந்தவர் யார்?
எட்வர்ட் வான் பெனிடன் (1883)
- சென்ட்ரோசோம்,குரோமோசோம் கோட்பாட்டை முன் வைத்தவர் யார்?
தியோடர் போவிரி(1888)
- எந்த நிலையின் போது மட்டுமே செல்களில் குரோமோசோம்கள் தெளிவாக காணப்படும்?
உட்கரு பகுப்படையும்போது
- குரோமோசோம்களின் நான்கு முக்கிய பண்புகள் என்னென்ன ?
குரோமோசோம்களின் வடிவமானது தனித்தன்மை உடையது, ஒரு சிற்றினத்திற்குரிய குரோமோசோம் எண்ணிக்கை நிலையானது ,குரோமோசோம்கள் இணைகளாக காணப்படுகின்றன, குரோமோசோம்களின் நகலாக்கம்
- மெல்லிய நீண்டதொரு குரோமோசோமில் சிறிய சுருக்கம் ஒன்று காணப்படுகிறது இதற்கு என்ன பெயர்?
சென்ட்ரோமியர்
- சுண்டெலியில் எத்தனை குரோமோசோம்கள் காணப்படுகின்றன?
40
- வெங்காயத்தில் எத்தனை குமோசோம்கள் காணப்படுகின்றன?
16
- மனிதனில் எத்தனை க்ரோமோசோம்கள் காணப்படுகின்றன?
46
- செல்லில் குரோமோசோம்கள் இணைந்து காணப்பட்டால் அவை எவ்வாறு அழைக்கப்படும்?
ஒத்திசைவு இணை குரோமோசோம்கள்
- ஒரு குரோமோசோமில் தோன்றும் ஒத்த அமைப்புடைய இரு இழைகளுக்கு என்ன பெயர்?
குரோமோட்டிட்கள்
- உட்கரு பகுப்பில் எத்தனை வகைகள் உள்ளன?
இரண்டு: மைட்டாசிஸ் மற்றும் மியாசிஸ்
- மைட்டாசிஸின் போது தோன்றிய சேய் செல்களின் குரோமோசோம் எண்ணிக்கை பெற்றோர் செல்லைப் போன்றே அமைந்துள்ளது இந்த நிலைக்கு என்ன பெயர் ?
இரட்டைமடிய நிலை
- மியாசிஸ் (குன்றல் பகுப்பு ) பகுப்பில் தோன்றும் சேய் செல்களில் தாய் செல்லின் குரோமோசோம் எண்ணிக்கையில் சரிபாதி எண்ணிக்கை காணப்படுகிறது .இந்த நிலைக்கு என்ன பெயர் ?
ஒற்றை மடிய நிலை
- எந்த ஒரு உட்கரு பகுப்பு நடைபெற்றாலும் அதனைத் தொடர்ந்து சைட்டோபிளாசம் பகுப்படைந்த பின்னரே தனி செல்களை உண்டாக்க முடியும் இதற்கு என்ன பெயர்?
சைட்டோபிளாசம் பகுப்பு(cytokinesis)
- புதிய செல்லை உருவாக்கும் தொடர்ச்சியான நிகழ்வுக்கு என்ன பெயர்?
செல் சுழற்சி
- செல் சுழற்ச்சியின் போது பல மாறுதல்கள் ஏற்பட்டு புதிய செல் தொகை உருவாக்கப்படுகிறது இதனைக் கண்டறிந்தவர் யார்?
பிரிவோஸ்ட் மற்றும் டியூமான்ஸ் (1824)
- யூகரியோடிக் செல்லானது எத்தனை மணி நேரத்திற்கு ஒருமுறை பகுப்படைகிறது?
24 மணிநேரம்
- செல்பேசிகள் எத்தனை நிலைகளாக பிரிக்கப்படுகிறது?
2: மைட்டாடிக் பகுப்பு நிலை மற்றும் இடைக்கால நிலை
- செல் சுழற்சியில் எத்தனை சதவீத கால அளவை இடைக்கால நிலை எடுத்துக்கொள்கிறது?
95%
- பகுபடும் மனிதச் செல்லின் சுழற்சியில் G1 நிலையின் கால அளவு என்ன?
11 மணிநேரம்
- பகுபடும் மனிதச் செல்லின் சுழற்சியில் S நிலையின் கால அளவு என்ன?
8 மணிநேரம்
- பகுபடும் மனிதச் செல்லின் சுழற்சியில் G2 நிலையின் கால அளவு என்ன?
4 மணிநேரம்
- பகுபடும் மனிதச் செல்லின் சுழற்சியில் M நிலையின் கால அளவு என்ன?
1 மணிநேரம்
- செல் பகுப்பில் அதிக காலம் கொண்ட நிலை எது?
இடைக்கால நிலை
- ஹாப்லாய்டு உட்கருவில் காணப்படும் டிஎன்ஏ அளவைக் குறிக்கிறது எது?
C-அளவு
- பல்வேறு தடை புள்ளிகள் செல் சுழற்ச்சியைக் கட்டுப்படுத்துகின்றன.G1 படிநிலையின் முடிவில் ஏற்படும் புள்ளி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வரையறு புள்ளி
- எந்த புரதங்கள் ஜீன்களையும் அவற்றின் புரதங்களையும் செயல்படச் செய்து செல்பகுப்பினை செயல்படுத்துகிறது?
கைனேசஸ் மற்றும் சைக்ளின்கள்
- சில செல்கள் G1 நிலையிலிருந்து விடுபட்டு அமைதி நிலைக்கு செல்கின்றன இந்த நிலைக்கு என்ன பெயர்?
G0 நிலை
- ஏமைட்டாசிஸ் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நேர்முக பகுப்பு அல்லது தெளிவிலாச் செல்பகுப்பு
- ஏமைட்டாசிஸ் பகுப்பில் எத்தனை நிலைகள் உள்ளன?
இரு: காரியோகைனசிஸ்,சைட்டோகைனசிஸ்
- மைட்டாசிஸ் பகுப்பில் தாய் செல்லின் குரோமோசோம் எண்ணிக்கையை ஒத்திருப்பதால் இதற்கு என்ன பெயர் ?
சமநிலை பகுப்பு
- முதலில் உட்கரு உறை சிதையாமல் இருப்பதுடன் உட்கருவினுள் குரோமோசோம்கள் எதிரெதிர் துருவங்களை நோக்கி செல்கின்றன. இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மூடிய மைட்டாசிஸ்
- முதலில் உட்கரு உறை சிதைந்து ,குரோமோசோம்கள் இரண்டு தொகுதிகளாக பிரிகிறது. பின் ஒவ்வொரு தொகுதியையும் உட்கரு உறை சூழ்ந்து பின்னர் மீண்டும் உட்கரு உறை உருவாக்கப்படுகிறது இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
திறந்த மைட்டாசிஸ்
- மைட்டாசிஸ் எத்தனை நிலைகளைக் கொண்டுள்ளது?
4: புரோஃபேஸ்,மெட்டாஃபேஸ்,அனாஃபேஸ் மற்றும் டீலோஃபேஸ்
- மைட்டாசிஸ் பகுப்பில் அதிக கால அளவை எடுத்துக் கொள்ளும் நிலை எது?
புரோஃபேஸ்
- விலங்கு செல்லின் சென்ட்ரியோல்களிலிருந்து நுண்இழைகள் தோன்றி செல்லினுள் எதிரெதிர் துருவங்கள் நோக்கி இடப்பெயர்ச்சி அடைகின்றன இந்த நிலைகளுக்கு என்ன பெயர்?
நட்சத்திர இழைகள்
- செல்லின் மைய தளத்தில் குரோமோசோம்கள் நெருக்கமாக அமைவதால் உண்டாகும் அமைப்பிற்கு பெயர் என்ன?
மெட்டாஃபேஸ் தட்டு
- மெடாஃபேஸ் நிலையிலிருந்து அனாஃபேஸ் நிலைக்கு முன்னேறுதலை ஒழுங்குபடுத்தும் புரதங்களைச் சிதைவடையச் செய்ய எந்த சைக்லோசோம் உதவுகிறது?
APC/C (Anaphase promoting complex/cyclosome)
- தாவர செல் பகுப்பின் போது இரண்டு சேய் செல்களுக்கும் இடையே என்ன உருவாகின்றன?
பிராக்மோபிளாஸ்டுகள்
- விலங்கு செல்களில் எது பிளாஸ்மா சவ்வு சுருங்குவதால் நடைபெறுகிறது ?
சைட்டோகைனசிஸ்
- பிளாஸ்மா சவ்வினால் ஏற்படும் சுருங்கு வளையம் எது சேர்ந்த நுண் இழைகளால் ஆனது ?
ஆக்டின் மற்றும் மையோசின்
- குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையுடைய வழித்தோன்றல்களை எந்த பகுப்பின் மூலம் உருவாக்க இயலும்?
மைட்டாசிஸ் பகுப்பு
- Meioum என்ற கிரேக்கச் சொல்லுக்கு என்ன பொருள்?
குன்றல்
- விலங்குகளில் விந்தகத்தில் ஹாப்லாய்டு விந்துக்கள் உருவாக்கவும், அண்டகத்தில் ஹாப்லாய்டு முட்டைகள் உருவாக்கவும் எந்த பகுப்பு உதவுகிறது ?
குன்றல் பகுப்பு (மியாசிஸ்)
- மியாசிஸ்சில் உள்ள எந்த நிலை நீளமான மிகவும் சிக்கலான நிலையாக உள்ளது?
புரோஃபேஸ் I
- புரோஃபேஸ் I எத்தனை துணை நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
5:லெப்டோடீன்,சைக்கோட்டீன்,பாக்கிடீன்,டிப்ளோட்டீன்,டையாகைனசிஸ்
- எந்த துணை நிலையில் குரோமோசோம்கள் ஒளி நுண்ணோக்கி மூலம் எளிதாக காண கூடியதாக உள்ளன?
லெட்போட்டீன்
- ஒத்திசைவு குரோமோசோம்கள் சைக்கோட்டீன் துணை நிலையில் இணை சேர்கின்றன இதற்கு என்ன பெயர்?
சினாப்ஸிஸ்
- சினாப்ஸிஸ் ஆல் தோன்றும் இணை குரோமோசோம்களின் தொகுப்பிற்கு என்ன பெயர் ?
பைவாலண்ட்
- சைக்கோட்டீன் நிலையில் இரு குரோமோசோம்களின் நான்கு குரோமாட்டிட்கள் தொகுதியடைவதால் இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நான்கமை நிலை
- எந்த நிலையில் சினாப்டினிமல் தொகுப்புகள் கலைந்து கரையத் தொடங்குகிறது?
டிப்லோட்டீன்
- எந்த நிலையில் நியுக்ளியோலஸ் மறைகிறது?
டயாகைனசிஸ்
- தாவரங்களில் குன்றல் பகுப்பின் போது காரியோகைனசிஸ் அடுத்து சைட்டோகைனசிஸ் நிகழ்வதால் செல்கள் உருவாகின்றன இந்த நிலைக்கு என்ன பெயர் ?
இரு செல் நிலை(Dyad)
- இரண்டு மியாசிஸ் பகுப்பிற்கு இடையே குறுகிய காலத்தில் அமைந்த ஒரு நிலை உருவாகிறது இதற்கு என்ன பெயர்?
பகுப்பிடைக்காலம் (Interkinesis)
- செல் சுழற்சி மிகை பெருதலை ஊக்கப்படுத்தும் காரணிக்கு என்ன பெயர்?
மைட்டோஜென்
- உட்கரு பகுப்பு மற்றும் சைட்டோபிளாசம் பகுப்பு நிகழாமல் குரோமோசோம்கள் மட்டுமே இரட்டிப்பதால் ஒரே செல்லினுள் பல நகல்கள் தோன்றும் நிலைக்கு என்ன பெயர்?
எண்டோமைட்டாசிஸ்
- நட்சத்திர இழையயற்ற பகுப்பு எங்கு மட்டும் காணப்படுகின்றன ?
தாவரங்கள்
- நட்சத்திர இழை பெற்ற செல்பகுப்பு எதில் மட்டும் காணப்படுகிறது?
விலங்கு செல்கள்
- நட்சத்திர இழை பெற்ற செல்பகுப்பில் இரு வகை இழைகள் உருவாவதால் இதற்கு என்ன பெயர்?
ஆம்ஃபிஆஸ்ட்ரல்
11TH BOTANY STUDY NOTES |செல் சுழற்சி| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services