- செல் எந்த வார்த்தையில் இருந்து உருவானது?
செல்லே என்ற லத்தீன் சொல்
- செல்லே என்ற லத்தீன் சொல்லின் பொருள் என்ன?
ஒரு சிறிய பெட்டி
- செல் என்ற சொல் முதன்முதலில் யாரால் எப்போது பயன்படுத்தப்பட்டது?
ராபர்ட் ஹூக்,1662
- முதன்முதலில் விலங்குகள் மற்றும் தாவரங்கள் ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பு அலகுகளைக் கொண்டுள்ளன என கண்டறிந்தவர் யார் ?
அரிஸ்டாட்டில்
- ராபர்ட் ஹூக் தக்கைத் திசுக்களில் கண்டறிந்தவற்றிற்கு எப்போது செல் என பெயரிடப்பட்டது ?
1665
- தான் கண்டறிந்த ஒரு செல் துகள்களுக்கு அனிமல்கியூல்ஸ் என பெயரிட்டவர் யார் ?
ஆண்டன் வான் லீவன் ஹுக்
- தாவர செல்லில் காணப்படும் உருண்டையான அமைப்பிற்கு உட்கரு என பெயரிட்டவர் யார் ?
இராபர்ட் பிரவுன்
- செல் கோட்பாடு என்ற கருத்தை முதன்முதலில் வெளியிட்டவர் யார் ?
H.J. டுட்ரோசெட்
- செல் கொள்கையின் அடிப்படை பண்புகளை கூறியவர்கள் யார்?
மாத்தியோஸ் மற்றும் ஷிலீடன் மற்றும் தியோடர் ஷிவான்
- செல் கோட்பாட்டை விளக்கியதுடன் அனைத்து உயிருள்ள செல்களும் ஏற்கனவே உள்ள உயிர் உள்ள செல்களில் இருந்து செல்பகுப்பிஅ மூலம் உருவாகின்றன என்ற கருத்தை கூறியவர் யார்?
ரூடால்ப் விர்ச்சௌ
- Microscopy என்பது எந்த மொழியிலிருந்து பெறப்பட்ட வார்த்தை ?
கிரேக்க மொழி (மைக்ரோ- சிறிய, ஸ்கைப்பின் -பார்த்தல்)
- கூட்டு நுண்ணோக்கியை கண்டறிந்தவர் யார்?
Z.ஜேன்சென்
- நுண்ணோக்கியானது எந்த அடிப்படையில் வேலை செய்கிறது ?
லென்ஸ் அமைப்பின் அடிப்படை
- இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள பொருளின் விவரத்தை தெளிவாக காட்டும் லென்சுகளின் திறன் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வேறுபடுத்தல் திறன்
- எண்களின் திறப்பு (numerical aperture) உயர்வாக இருப்பின் அதனுடைய வேறுபடுத்தல் திறன் என்பது என்னவாக இருக்கும் ?
அதிகமாக
- ஒரு பிம்பத்தின் அளவை பார்வைக்கு பெரியதாக காண்பிப்பதற்கு என்ன பெயர் ?
உருப்பெருக்கம்
- உருப்பெருக்கம் எந்த சூத்திரத்தின் மூலம் கணக்கிடப்படுகிறது ?
=நுண்ணோக்கியின் மூலம் காணப்படும் பிம்பத்தின் அளவு /சாதாரண கண்கள் மூலம் காணப்படும் பிம்பத்தின் அளவு
- நுண்ணோக்கியின் முதல் உருப்பெருக்கம் எதன் மூலம் பெறப்படுகிறது?
பொருளருகு லென்ஸ்
- நுண்ணோக்கியின் முதல் உருப்பெருக்கம் பொருளருகு லென்ஸ் மூலம் பெறப்படும் அதற்கு என்ன பெயர்?
முதன்மை உருப்பெருக்கம்
- முதன்மை உருப்பெருக்கம் மூலம் தோன்றுவது என்ன?
உண்மையான, தலைகீழான மெய்பிம்பம்
- இரண்டாவது உருப்பெருக்கம் எதன் மூலம் உண்டாகிறது ?
கண்ணருகு லென்சு
- இரண்டாவது உருப்பெருக்கம் எவ்வாறு அழைக்கப்படும் ?
இரண்டாம் நிலை உருப்பெருக்கம்
- இரண்டாம் நிலை உருப்பெருக்கம் மூலம் தோன்றுவது என்ன?
தலைகீழான மாயபிம்பம்
- இருள் புல நுண்ணோக்கியை (dark field microscope) கண்டுபிடித்தவர் யார்?
Z.ஜிக்மாண்டி(1905)
- கட்ட வேறுபடுத்தும் நுண்ணோக்கி (phase contrast microscope) கண்டுபிடித்தவர் யார்?
ஜெர்னைக் (1935)
- நுண்ணோக்கியில் நுண்ணிய பொருள்களை அளவிட முடியும் இந்த தொழில்நுட்பம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மைக்ரோமெட்ரி
- மைக்ரோமெட்ரியில் அளவிட எந்த அளவுகோல்கள் பயன்படுத்தப்படுகின்றன?
இரண்டு :1.விழி மைக்ரோமீட்டர் ,2.மேடை மைக்ரோமீட்டர்
- மின்னணு நுண்ணோக்கி முதன் முதலில் யாரால் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
எர்னஸ்ட் ரஸ்க் (1931)
- மின்னணு நுண்ணோக்கி யாரால் மேம்படுத்தப்பட்டது ?
G.பின்னிங் மற்றும் H.ரோகர் (1981)
- செல் நுண்ணுறுப்புகளின் நுண்ணிய விளக்கங்களை பகுத்தறிவதற்கு என்ன பெயர்?
நண்ணமைப்பு
- மின்னணு நுண்ணோக்கி நுண்ணோக்கியை விட எத்தனை மடங்கு வேறுபடுத்தும் திறன் கொண்டது ?
1,00,000 மடங்கு
- எலக்ட்ரான் நுண்ணோக்கியின் உற்று நோக்கப்பட வேண்டிய மாதிரி நீர்நீக்கம் செய்யப்பட்டு எலக்ட்ரான் ஒளி புகா வண்ணம் எதனைக் கொண்டு பதிக்கப்படுகிறது?
தங்கம் மற்றும் பலேடியம்
- மின்னணு நுண்ணோக்கி எத்தனை வகைப்படும்?
இரண்டு : ஊடுருவல் மின்னணு நுண்ணோக்கி,பரவல் (ஸ்கேனிங்) மின்னணு நுண்ணோக்கி
- மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் மின்னணு நுண்ணோக்கி எது?
ஊடுருவல் மின்னணு நுண்ணோக்கி
- ஊடுருவல் மின்னணு நுண்ணோக்கி என்ன பிம்பங்களை தருகிறது?
இருபரிமாண பிம்பங்கள்
- ஊடுருவல் மின்னணு நுண்ணோக்கியின் உருப்பெருக்கம் எவ்வளவு?
ஒன்று முதல் மூன்று லட்சம் மடங்கு
- ஊடுருவல் மின்னணு நுண்ணோக்கியின் வேறுபடுத்தும் திறன் எவ்வளவு?
2 முதல் 10Å
- பரவல் மின்னணு நுண்ணோக்கியின் உருப்பெருக்கம் எவ்வளவு ?
2,00,000 மடங்கு
- பரவல் மின்னணு நுண்ணோக்கியின் வேறுபடுத்தும் திறன் எவ்வளவு?
5 முதல் 20nm
- எந்த ஆண்டு செல் கொள்கை வெளியிடப்பட்டது?
1833
- செல் கொள்கையை வெளியிட்டவர்கள் யார் ?
ஜெர்மனி தாவரவியலாளர் மாத்தியோஸ் ஷிலீடன், ஜெர்மனி விலங்கியலார் தியோடர் ஷிவான்
- அனைத்து உயிரினங்களின் அமைப்பு மற்றும் செயல்களின் அடிப்படை அலகாக திகழ்வது எது?
செல்
- செல்லின் அமைப்பையும் செயல்களையும் கட்டுப்படுத்துவது எது?
DNA
- புரோட்டோபிளாசத்தை முதன்முதலாக கண்டறிந்தவர் யார்?
கார்டி
- யார் விலங்கு செல்களில் ஒரு உயிருள்ள சாற்றினை கண்டறிந்து அதனை சார்கோடு என அழைத்தார்?
பெலிக்ஸ் டுஜார்டின்(1835)
- தாவர செல்களுக்கிடையே காணப்படும் சாற்றினை புரோட்டோபிளாசம் என பெயர் வைத்தவர் யார் ?
பர்கின்ஜி(1839)
- புரோட்டோபிளாசத்தின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டவர் யார்?
ஹூகோ வான் மோல் (1846)
- புரோட்டோபிளாசத்திற்க்கும் சார்கோடுக்கும் உள்ள ஒற்றுமையை எடுத்துரைத்தவர் யார்?
மாக்ஸ் ஸ்கல்ஸ்(1861)
- மாக்ஸ் ஸ்கல்ஸ் எடுத்துரைத்த ஒற்றுமையை பின்னர் “புரோட்டோபிளாச கோட்பாடு” என அழைத்தவர் யார் ?
ஓ.ஹெர்ட்விக்(1892)
- புரோட்டோபிளாசத்தை உயிரியின் இயற்பியல் அடிப்படை என முன்மொழிந்தவர் யார்?
ஹக்ஸ்லி(1868)
- புரோட்டோபிளாசத்தை ஒரு பல் கூட்டுக்கூழ்ம தொகுப்பு எனக் கூறியவர் யார்?
பிஷ்ஷர்(1894) மற்றும் ஹார்டி(1899)
- புரோட்டோபிளாசம் அதில் மிதக்கும் பொருட்கள் மற்றும் பல்வேறு வேதி பிணைப்புகளின் காரணமாக என்ன நிலையில் காணப்படுகிறது?
ஜெல் என்ற அரைதிட நிலையிலோ அல்லது சால் என்ற திரவ நிலையிலோ/ நீர்ம வடிவத்தில் காணப்படுகிறது
- இக்கூழ்ம புரோட்டோபிளாசம் ஜெல் நிலையிலிருந்து சால் நிலைக்கு மாறுதல் அடைவதற்கு என்ன பெயர் ?
சால் ஆதல்
- இக்கூழ்ம புரோட்டோபிளாசம் சால்நிலையிலிருந்து ஜெல்நிலைக்கு மாறுவதற்கு என்ன பெயர்?
ஜெல் ஆதல்
- புரோட்டோபிளாசத்தின் மிகவும் முக்கியமான மூன்று பண்புகள் என்னென்ன ?
பிரௌனியன் இயக்கம் ,அமீபாய்டு இயக்கம் மற்றும் சைட்டோபிளாஸீமிக் ஸ்டிரீமிங் அல்லது சைக்கிளோசிஸ்
- புரோட்டோபிளாசத்தின் பாகுநிலை என்ன ?
2 முதல் 20 சென்டிபாய்சஸ்
- புரோட்டோபிளாசத்தின் ஒளிவிலகல் என்ன?
1.4
- புரோட்டோபிளாசத்தின் pH மதிப்பு எவ்வளவு?
6.8
- புரோட்டோபிளாசம் எவ்வளவு நீரை கொண்டுள்ளது?
90%
- புரோட்டோபிளாசம் உத்தேசமாக எத்தனை தனிமங்களை கொண்டுள்ளது ?
34
- புரோட்டோபிளாசத்தில் எத்தனை முக்கியமான தனிமங்கள் உள்ளன?
13 தனிமங்கள்(C,H,O,N,Cl,Ca,P,Na,K,S,Mg,I&Fe)
- புரோட்டோபிளாசம் கார்பன் ஹைட்ரஜன் ஆக்சிஜன் மற்றும் நைட்ரஜனால் எத்தனை சதவீதம் ஆனது?
96%
- புரோட்டோபிளாசம் வெப்பத்தினால் என்னவாக மாறும்?
திடப்பொருள்
- ஒரே அமைப்பைக் கொண்ட செல்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
திசு
- ஒத்த பணியை செய்யக்கூடிய திசுக்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படும் ?
உறுப்பு
- ஒத்த பணியை செய்யும் பல உறுப்புகள் எவ்வாறு அழைக்கப்படும்?
உறுப்பு மண்டலம்
- அனைத்து உறுப்பு மண்டலங்களும் ஒத்திசைந்து செயல்பட்டு எது உருவாகிறது ?
உயிரினம்
- செல்லின் ஒழுங்கமைவு மற்றும் உட்கரு பண்பினை கொண்டு உயிரினங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?
புரோகேரியோட்டுகள்,மீசோகேரியோட்டுகள்,யூகேரியோட்கள்
- தொல் உட்கரு உயிரிகள் எவ்வாறு அழைக்கப்படும்?
புரோகேரியோட்டுகள்
- இடைப்பட்ட உட்கரு உயிரிகள் எவ்வாறு அழைக்கப்படும்?
மீசோகேரியோட்டுகள்
- உண்மை உட்கரு உயிரிகள் எவ்வாறு அழைக்கப்படும்?
யூகேரியோட்டுகள்
- டாட்ஜ் மற்றும் அவரது சக ஆராய்ச்சியாளர்களும் 1966 ஆம் ஆண்டு எதனை மூன்றாம் வகை உயிரினங்களை என அழைத்தனர்?
மீசோகேரியோட்டுகள்
- எதன் குரோமோசோம்களில் உள்ள DNA வானது ஹிஸ்டோன் புரதங்களால் ஆனது?
யூக்கேரியோட்டுகள்
- பரிணாம வளர்ச்சியில் புரோகேரியோட்டுகளில் இருந்து எவை கூட்டுயிரிகளாக செல்லினுள் உட்சென்றவை என கருதப்படுகிறது?
மைட்டோகாண்ட்ரியா மற்றும் பசுங்கணிகம்
- விலங்கு சொல்லானது எதனால் சூழப்பட்டிருக்கிறது ?
செல் சவ்வு அல்லது பிளாஸ்மா சவ்வு
- செல் சவ்வினுள் என்ன காணப்படுகிறது?
புரோட்டோபிளாசம் எனும் ஜெலாடினஸ் மாட்டிரிக்ஸ்
- செல்லின் உயிருள்ள பொருள் எது?
புரோட்டோபிளாசம்
- புரோட்டோபிளாசம் எவற்றை உள்ளடக்கியது?
சிறிய அயனிகள், அமினோ அமிலங்கள் ,ஒற்றைச் சர்க்கரைகள் மற்றும் நீர் மூலக்கூறு, நியூக்ளிக் அமிலங்கள், புரதங்கள் லிப்பிடுகள் மற்றும் பல்கூட்டுச் சர்க்கரைகள் போன்றவை
- செல்லின் வெளிப் பகுதியில் காணப்படும் பாதுகாப்பு அடுக்கு எது?
செல்சுவர்
- பாக்டீரியங்களின் செல்சுவர் எதனால் ஆனது?
பெப்டிடோகிளைக்கான்
- பூஞ்சைகளின் செல் சுவர் எதனால் ஆனது ?
கைட்டின் மற்றும் பூஞ்சை செல்லுலோஸ்
- ஆல்காக்களில் செல்சுவர் எதனால் ஆனது?
செல்லுலோஸ்,கேலக்டான்ஸ்,மன்னான்ஸ்
- தாவர செல் சுவர்கள் எதனால் ஆனது ?
செல்லுலோஸ், ஹெமி செல்லுலோஸ் ,பெக்டின்,லிக்னின் ,கியூட்டின்,சூபரின் மற்றும் சிலிக்கா
- தாவர செல் சுவர் எத்தனை பக்கங்களைக் கொண்டுள்ளது?
மூன்று: முதன்மைச் சுவர், இரண்டாம் நிலை சுவர், மையத்தட்டு
- முதன்மை சுவரின் நுண்பொருள் பெரும்பாலும் என்னவாக உள்ளது?
ஹெமிசெல்லுலோஸ், பெக்டின், கிளைக்கோபுரதம் மற்றும் நீர்நிரப்பு பொருள்
- தளப் பொருளுடன் நுண்இழைகளை இணைப்பது எது ?
ஹெமி செல்லுலோஸ்
- நுண்இழைகளின் அமைவைத் தீர்மானிப்பது எது ?
கிளைக்கோபுரதங்கள்
- முதன்மைச் சுவரை மட்டுமே பெற்றுள்ளவை எவை?
பாரங்கைமா செல்கள் மற்றும் ஆக்குத்திசுக்கள்
- செல் வடிவத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது எது ?
இரண்டாம் நிலைச் சுவர்
- இரண்டாம் நிலைச் சுவர் எதனால் ஆனது ?
செல்லுலோஸ் மற்றும் லிக்னின்
- இரண்டாம் நிலைச் சுவர் எத்தனை துணை அடுக்குகளாக பிரிகின்றது?
மூன்று துணை அடுக்குகள் S1,S2,S3
- சைட்டோபிளாச பகுப்பின் போது கால்சியம் மற்றும் மெக்னீசியம் பெக்டேட்டுகளில் படிந்து உருவான வெளிப்புற அடுக்கு எது?
மையத்தட்டு
- செல் சவ்வானது வேறு எவ்வாறு அழைக்கப்படும்?
செல் பரப்பு அல்லது பிளாஸ்மா சவ்வு
- எது ஒரு மெல்லிய அமைப்பாக இருந்து சைட்டோசால் என்ற சைட்டோபிளாச உட்பொருளை கட்டுக்குள் வைக்க உதவுகிறது ?
செல்சவ்வு
- செல்சழ்வு எவ்வளவு அளவிற்கும் குறைவான மெல்லிய சவ்வு ?
10nm
- பாய்ம திட்டு மாதிரியை முன்மொழிந்தவர்கள் யார் ?
ஜோனாத்தான் சிங்கர் மற்றும் கார்த்நிக்கோல்சன் (1972)
- நீரை விரும்பும் துருவ மூலக்கூறுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
ஹைடிரோஃபிலிக் மூலக்கூறுகள்
- நீரை வெறுக்கும் துருவ மூலக்கூறுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
ஹைடிரோஃபோபிக் மூலக்கூறுகள்
- செல் சவ்வின் பணிகள் என்னென்ன?
செல் சமிக்ஞைகளை ஏற்படுத்துதல் ,ஊட்டங்களை இடம் பெயரச் செய்தல், நீரைக் கடத்துதல் ,தேவையற்ற பொருட்கள் செல்லினுள் புகாமல் தடுத்தல்
- செல்லினுள் அதிக அளவு திடப்பொருள் மற்றும் திரவ பொருட்களைச் செல்லுக்குள்ளே கடத்தும் நிகழ்விற்கு என்ன பெயர்?
செல் உள் விழுங்குதல்
- செல் உள் விழுங்குதல் எத்தனை வகைப்படும்?
இரண்டு :பேகோசைட்டோசிஸ்,பின்னோசைட்டோசிஸ்
- வெசிக்கிள்கள் பிளாஸ்மா சவ்வுடன் இணைந்து, தேவைப்படாத பொருட்களை வெளியேற்றுகின்றன, இந்நிகழ்வுக்கு என்ன பெயர் ?
புறத்தள்ளுதல்
- செல்லுக்கு வெளியே உள்ள தூண்டல்களை ஏற்று அதனை கடத்தி அதற்கேற்ற செல்லினுள் நிகழ்த்தும் செயல்களுக்கு என்ன பெயர்?
சமிக்ஞை ஊடுகடத்தல்
- செல்லினுள் சமிக்ஞை மூலக்கூறாக திகழ்வது எது ?
நைட்ரிக் ஆக்சைடு
- செல்லின் பல்வேறு செயல்களுக்கு முக்கிய இருப்பிடமாக திகழ்வது எது?
சைட்டோபிளாசம்
- சைட்டோபிளாசம் எத்தனை சதவீதம் நீரால் ஆனது?
80%
- புரோட்டோபிளாசத்தின் உட்கரு அற்ற பகுதி எனக் கூறப்படுவது எது?
சைட்டோபிளாசம்
- செல்லின் பிளாஸ்மா சவ்விற்கும்,உட்கரு சவ்விற்கும் இடைப்பட்ட பகுதி எது?
சைட்டோபிளாசம்
- உள் சவ்வு தொகுப்பில் மிகப்பெரியதாக கருதப்படுவது எது?
எண்டோபிளாச வலை
- எண்டோபிளாச வலை என பெயரிட்டவர் யார் ?
கே.ஆர்.போர்டர்
- எண்டோபிளாச வலை என்ன அமைப்பு கூறுகளை பெற்றுள்ளது?
சிஸ்டர்னே,வெசிக்கிள்கள்,டியூபியூல்கள்
- எண்டோபிளாச வலையில் நீளமான அகலமான மற்றும் தட்டையான பை போன்ற அமைப்புகளுடன் இணைக் கற்றைகளாக அமைந்தது எது?
சிஸ்டர்னே
- எண்டோபிளாச வலைத் தொகுப்பில் முட்டை வடிவ, சவ்வு சூழ்ந்த உட்குமிழ்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
வெசிக்கிள்கள்
- ஒழுங்கற்ற கிளைத்த மென்மையான சுவருடைய உள்வெளியை பெற்ற அமைப்புகள் எவ்வாறு அழைக்கப்படும்?
டியூபியூல்கள்
- தவறான மடிப்பை கொண்ட புரதங்களை வெளியேற்றி சிதைக்க உதவுவது எது ?
எண்டோபிளாச வலை
- எண்டோபிளாச வலையின் வெளிப்பரப்பில் ரைபோசோம்கள் ஒட்டி காணப்பட்டால் அதற்கு என்ன பெயர்?
சொரசொரப்பான எண்டோபிளாச வலை
- எண்டோபிளாச வலையின் வெளிப்பரப்பில் ரைபோசோம்கள் அற்று காணப்பட்டால் அதற்கு என்ன பெயர்?
வழவழப்ப்ன எண்டோபிளாச வலை
- வழவழப்பான எண்டோபிளாச வலை எது உருவாக உதவுகிறது ?
லிப்பிட்
- சொரசொரப்பான எண்டோபிளாச வலை என்ன இடமாக திகழ்கிறது?
புரத சேர்க்கை நிகழும் இடம்
- தீமை விளைவிக்கும் சில வேதிச் சேர்மங்களையும், லிப்பிடில் கரையும் ,மருந்துப் பொருட்களையும், நச்சு நீக்க உதவும் நொதிகளை பெற்றிருப்பது எது?
வழவழப்பான எண்டோபிளாச வலை
- உட்கருவிற்கு அருகமைந்த வலைப்பின்னல் வடிவில் உள்ள இழைகளை கண்டறிந்தவர் யார் ?
1898
- கோல்கை அமைப்பு பின்னர் அவரது பெயராலேயே எவ்வாறு அழைக்கப்பட்டது?
கோல்கை உடலங்கள்
- சிறிய வெசிக்கிள்களாக தாவரங்களில் காணப்படும் கோல்கை உடலங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
டிக்டியோசோம்கள்
- லிப்பிடுகளில் ஏற்றம் அடைய செய்யவும், புரத மூலக்கூறுகளில் மாற்றம் நிகழவும் உதவுவது எது?
கோல்கை உடலங்கள்
- மைட்டோகாண்ட்ரியத்தை முதன்முதலாக கண்டறிந்தவர் யார்?
A.கோலிக்கர் (1880)
- மைட்டோகாண்ட்ரியத்தை பயோபிளாஸ்டுகள் என பெயரிட்டவர் யார்?
ஆல்ட்மேன்(1894)
- மைட்டோகோண்டிரியங்கள் எனப் பெயரிட்டவர் யார்?
பெண்டா (1897,1898)
- மைட்டோகாண்ட்ரியத்தில் காணப்படும் புரதம் எவ்வாறு அழைக்கப்படும்?
போரின்கள்
- மைட்டோகாண்ட்ரியத்தின் உள் சவ்வு மைட்டோகாண்ட்ரியாவை எத்தனை அறைகளாக பிரிக்கின்றது?
2
- மைட்டோகாண்ட்ரியத்தின் உள்சவ்வு உட்புறமாக மடிப்புகளை உருவாகின்றன இந்த மடிப்பு நீட்சிகளுக்கு என்ன பெயர்?
கிரிஸ்டே
- கிரிஸ்டேவின் உள்ளறை புரதப் பொருளால் ஆனது இதற்கு என்ன பெயர்?
மைட்டோகாண்ட்ரியல் மாட்ரிக்ஸ்
- மைட்டோகாண்ட்ரியத்தின் உள் உறையின் பரப்பில் காம்பு போன்ற துகள்கள் காணப்படுகின்றன இவை எவ்வாறு அழைக்கப்படுகின்றன ?
தொடக்க நிலை துகள்கள் அல்லது பெர்னான்டியா மோரன் துகள்கள்,F1 துகள்கள் அல்லது ஆக்சிசோம்கள்
- மைட்டோகாண்ட்ரியங்களில் புரதம் எத்தனை சதவீதம் காணப்படுகிறது ?
73 சதவீதம்
- மைட்டோகாண்ட்ரியங்களில் லிப்பிடுகள் எத்தனை சதவீதம் காணப்படுகிறது ?
25-30 சதவீதம்
- மைட்டோகாண்ட்ரியங்களில் RNA எவ்வளவு சதவீதம் காணப்படுகிறது ?
5 முதல் 7 சதவீதம்
- மைட்டோகாண்ட்ரியங்களில் நொதிகள் எத்தனை வகைகளில் காணப்படுகிறது?
60வகைகளில்
- மைட்டோகாண்டிரியங்கள் வேறு எவ்வாறு அழைக்கப்படும்?
செல்லின் ஆற்றல் உலைகள்
- வட்டவடிவமான DNA மற்றும் ரைபோசோம்கள் எதில் காணப்படுகின்றன?
மைட்டோகாண்டிரியங்கள்
- DNAவைப் பெற்றிருப்பதால் எது “ஒருபாதி தற்சார்புடைய செல் நுண்ணுறுப்பாக” கருதப்படுகிறது ?
மைட்டோகாண்ட்ரியா
- எதன் மூலம் தற்காலிக பரிணாம கால அளவை கணக்கிட முடியும்?
மைட்டோகாண்ட்ரியா DNA மூலம்
- பிளாஸ்டிட் என்பது எந்த சொல்லில் இருந்து உருவானது ?
பிளாடிகாஸ் என்ற கிரேக்கச் சொல்
- பிளாஸ்டிட் என பெயரிட்டவர் யார்?
A.F.U.ஸ்ஷிம்பர் (1885)
- கணிகங்கள் எதன் மூலம் பெருக்கம் அடைகின்றன ?
பிளவுறுதல்
- கணிகங்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்றிக்கொள்ளும் திறன் உடையவை என கூறியவர் யார்?
ஸ்ஷிம்பர்
- பசும் தாவரத்தின் முக்கிய உள்ளுறுப்பாக காணப்படுவது எது?
பசுங்கணிகம்
- பசுங்கணிகம் எதனால் ஆனது?
உள்சவ்வு மற்றும் வெளிசவ்வு
- பசுங்கணிகத்தின் இரண்டு சவ்வுகளுக்கிடையே உள்ள பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பசுங்கணிக சுற்றுவெளி
- பசுங்கணிகத்தின் உள்சவ்வினால் சூழப்பட்ட உள்வெளியில் என்ன காணப்படுகின்றன?
ஜெல்லாடினஸ் மேட்ரிக்ஸ்,லிப்போபுரத திரவம்
- ஜெல்லாடினஸ் மேட்ரிக்ஸ்,லிப்போபுரத திரவம் காணப்படும் பகுதிக்கு என்னப் பெயர்?
ஸ்ட்ரோமா
- ஸ்ட்ரோமாவினுள் தட்டையான பின்னப்பட்ட நிலையில் உள்ள பகுதிக்கு என்ன சவ்வு வட்டில்கள் காணப்படுகின்றன?
தைலக்காய்டுகள்
- பல தைலக்காய்டுகளின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கிரானம்
- தைலக்காய்டுகளில் என்ன நிறமி காணப்படுகிறது?
பச்சையம் நிறமி
- ATP சின்தேஸ் நொதி உருவாக்க பசுங்கணிகத்தின் எது உதவுகிறது?
ஜீனோம் குறியீடு
- ஸ்ட்ரோமாவில் காணப்படும் முக்கியமான புரதம் எது?
Rubisco
- உயிர் உலகின் அதிகம் காணப்படும் புரத மூலக்கூறாக இருப்பது எது?
Rubisco
- தைலக்காய்டுகளில் உள்ள சிறிய வட்ட வடிவமான ஒளிச்சேர்க்கை அளவுகளுக்கு என்ன பெயர்?
குவான்டசோம்கள்
- பாதி தற்சார்புடைய செல் நுண்ணுறுப்புகளாக உள்ளவை எவை?
பசுங்கணிகள் (மைட்டோகாண்டிரியங்களும்)
- ரைபோசோம்களை முதலில் கண்டறிந்தவர் யார்?
ஜார்ஜ் பாலேடு (1953)
- ரைபோசோம் எத்தனை துணை அடுக்குகளைக் கொண்டிருக்கும்?
இரண்டு: பெரிய மற்றும் சிறிய அலகுகள்
- புரதச் சேர்க்கை நிகழும் இலக்குகளாக திகழ்பவை எவை?
ரைபோசோம்கள்
- ரைபோசோம்கள் எதனால் ஆனவை?
RNA மற்றும் புரதம்
- ரைபோசோம்களில் எத்தனை சதவீதம் RNA அடங்கும்?
60%
- ரைபோசோம்களில் எத்தனை சதவீதம் புரதம் உள்ளது?
40%
- புரத சேர்க்கையின் போது பல ரைபோசோம்கள் ஒரு தூதுவ RNA(mRNA) இதனால் தோன்றும் ஒரு கூட்டமைப்பிற்கு என்ன பெயர்?
பாலிசோம்கள் அல்லது பாலிரைபோசோம்கள்
- லைசோசோம்களை கண்டறிந்தவர் யார்?
கிறிஸ்டியன் டி டுவி(1953)
- தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் நுண்ணுறுப்பு என அழைக்கப்படுவது எது ?
லைசோசோம்கள்
- ரைபோசோமின் பருமன் மற்றும் துணை அலகுகளின் பருமன் எந்த அளவால் குறிக்கப்படுகிறது?
ஸ்வெட்பெர்க்
- தியோடர் ஸ்வெட்பெர்க் இந்த நாட்டைச் சேர்ந்த வேதியியல் அறிஞர்?
ஸ்வீடன் நாடு
- தியோடர் ஸ்வெட்பெர்க் எந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றார் ?
1929
- பிரித்தெடுக்கப்பட்ட ரைபோசோம்களை எதன் மூலம் அவற்றின் படிதல் நிலைவேகம் கண்டறியப்படுகிறது?
அல்ட்ரா சென்ட்ரிஃபியூஜி
- லைசோசோம்கள் என்ன வடிவம் உடையவை?
கோள வடிவம்
- கொள்கை உடலத்தின் முனை சிறு வகைகளாக பிரிக்கப்பட்டு வெளியேறும் சிறிய வாக்குவோல்கள் என்னவாக உருவாகின்றன?
லைசோசோம்கள்
- லைசோசோமின் முக்கிய பணி என்ன?
சைட்டோபிளாசத்தில் காணப்படும் கார்போஹைட்ரேட்டுகள் ,புரதங்கள் மற்றும் லிப்பிடுகளைச் செரித்தல்
- யூகேரியோட்டிக் செல்களில் நொதிகள் பலவற்றை பெற்ற சவ்வு சூழ்ந்த நுண் வெசிக்கிள்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
நுண் உடலங்கள்
- பெராக்சிசோம்களை செல் நுண்ணுறுப்புகள் என கண்டறிந்து விளக்கியவர் யார்?
கிரிஸ்டியன் டி டுவி(1967)
- பெராக்சிசோம்கள் எதில் பங்காற்றுகிறது?
ஒளி சுவாசம் மற்றும் கிளைகோலட் வளர்ச்சிதை மாற்றம்
- பெராக்சிசோம்கள் எங்கு அதிகம் காணப்படுகின்றன?
பாலூட்டிகளின் கல்லீரல் ,சிறுநீரகம் ,புரோட்டோசோவன்கள், ஈஸ்ட் செல்கள்
- கிளையாக்ஸிசோம்களை கண்டறிந்தவர் யார்?
ஹாரி பிவேர்ஸ்(1961)
- தாவர செல்களில் மட்டும் காணப்படும் ஒற்றைச் சவ்வைக் கொண்ட துணை செல் நுண்ணுறுப்பு எது?
கிளையாக்ஸிசோம்கள்
- கிளையாக்ஸிசோம்கள் எதற்கு உதவுகின்றன?
கொழுப்பு அமிலங்களின் ஆக்ஸிகரணம் நிகழ
- ஸ்ஃபீரோசோம்கள் என்ன வடிவம் உடையவை ?
கோளவடிவம்
- சென்ட்ரியோலின் மையப்பகுதிக்கு என்ன பெயர்?
ஹப்
- தாவர செல்களில் வாக்குவோல்கள் பெரிதாகவும் எந்த ஒற்றை சவ்வினால் சூழப்பட்டும் காணப்படுகிறது?
டோனோபிளாஸ்ட்டு
- பீட்ரூட் செல்களின் வாக்குவோல்களில் என்ன நிறம் அதிகம் உள்ளது?
ஆந்தோசையானின்
- டானின் பொருட்கள் செல்லில் சேகரம் அடைய எவை உதவுகின்றன?
ஆந்தோசையானின்
- தாவர வாக்குவோல்களின் முக்கிய பணியானது என்ன?
நீரின் அழுத்தமான விறைப்பு அழுத்தத்தை நிலைநாட்டுவது
- புரோகேரியோட்டுகளில் காணப்படும் சேமிப்பு பொருட்கள் என்னென்ன?
பாஸ்பேட் சிறுமணிகள், சைனோபேசியன் சிறுமணிகள்,கிளைக்கோஜன் சிறுமணிகள், பாலி ஹைட்ராக்ஸி பியூட்ரேட் சிறுமணிகள்,சல்ஃபர் சிறுமணிகள், கார்பாக்சிசோம்கள், காற்று வாக்குவோல்கள்
- பாக்டீரியங்களில் காணப்படும் கனிம உள்ளடக்க பொருட்களாக உள்ளவை எவை?
பாலிபாஸ்பேட் சிறு மணிகள் மற்றும் சல்பர் சிறு மணிகள்
- பாக்டீரியங்களில் காணப்படும் சிறுமணிகளுக்கு என்ன பெயர்?
மெட்டாகுரோமடிக் சிறுமணிகள்
- யூகேரியோட்டு செல்களில் காணப்படும் சேமிப்பு உணவுப் பொருட்கள் என்னென்ன?
தரசமணிகள், கிளைகோஜன் சிறுமணிகள், அலூரன் நுண்மணிகள்,கொழுப்பு நுண் குமிழ்கள்
- தாவர செல்லின் உள்ளடக்கக் பொருட்களாக விளங்கும் கனிம படிவங்கள் என்னென்ன ?
கால்சியம் கார்பனேட், கால்சியம் ஆக்சலேட், சிலிகா போன்றவை
- ஆல இலையின் புறத்தோல் செல்களில் என்ன படிகங்கள் காணப்படுகின்றன?
கால்சியம் கார்பனேட்
- கொலக்கேசியா தாவரத்தின் உள்ள கால்சியம் ஆக்சலேட் படிகங்கள் என்ன வடிவுடையவை ?
நட்சத்திர வடிவம்
- செல்லின் உள் காணப்படும் முக்கியமான நுண்ணுறுப்பு ?
உட்கரு
- செல்லின் அனைத்து செயல்களையும் கட்டுப்படுத்துவது எது ?
உட்கரு
- உட்கரு என்ன வடிவினை பெற்றுள்ளன?
கோள வடிவம்,கனசதுரம் ,பலகோணம் அல்லது தட்டு வடிவம்
- உட்கரு தளையின் ஒவ்வொரு துளையும் என்ன வட்ட அமைப்பினால் சூழப்பட்டுள்ளது?
அனுலஸ்
- இரண்டு சவ்வுக்கும் இடையே உள்ள இடைவெளிக்கு என்ன பெயர்?
உட்கரு புறவெளி
- உட்கரு உள்வெளியிலுள்ள ஜெலாட்டினஸ் மேட்ரிக்ஸ் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
உட்கருபிளாசம்
- செல் பகுப்பின் போது குரோமாடின்களின் சுருக்கமடைந்து அமைப்பிற்கு என்ன பெயர்?
குரோமோசோம்கள்
- யூகேரியோட்டிக் குரோமோசோமின் பகுதியானது m-RNA படுக்கையில் அதிலுள்ள செயல்படும் ஜீன்கள் உறுதியாக செறிவுற்று இடைக்கால நிலையில் இருப்பதில்லை இதற்கு என்ன பெயர்?
யூகுரோமாட்டின்
- இடைக்கால நிலையில் யூகேரியோட்டிக் குரோமோசோமின் பகுதி m-RNAவில் படியெடுக்கப்படாமல் செறிவுற்று அதிக சாயம் ஏற்கும் பகுதிக்கு என்ன பெயர்?
ஹெட்டிரோகுரோமாட்டின்
- உட்கருவினுள் ஒன்று அல்லது பல எண்ணிக்கைகளில் காணப்படும் சிறிய செறிவுற்ற கோள வடிவச் சவ்வு சூழ்ந்திராத அமைப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
நியூக்ளியோலஸ்
- யூகேரியோட்டு செல்களில் முதன்முதலில் குரோமோசோம் இருப்பதை கண்டறிந்தவர் யார்?
ஸ்டிராஸ்பர்கர்(1875)
- குரோமோசோம் என்ற சொல்லை முதன் முறையாக அறிமுகப்படுத்தியவர் யார் ?
வால்டேயர்(1888)
- குரோமோசோம்கள் ஜீன்களை கொண்டுள்ளன என்பதை முதன் முதலாக உறுதி செய்தவர் யார்?
பிரிட்ஜஸ்(1916)
- குரோமோசோம் நூல் போன்ற நுண் இலைகளால் ஆனது இதற்கு என்ன பெயர்?
குரோமாட்டின்
- ஒவ்வொரு குரோமோசோமிலும் இரு ஒத்த அமைப்புகள் காணப்படுகின்றன அவைகளுக்கு என்ன பெயர் ?
குரோமாட்டிட்கள்
- குரோமாட்டிட்கள் இரண்டும் ஒத்த அமைப்பை பெற்றிருப்பதால் அவை வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
சகோதரி குரோமாட்டிட்கள்
- இயல்பான குரோமோசோம் ஒன்றில் காணப்படும் குறுகிய பகுதிக்கு என்ன பெயர் ?
இறுக்கங்கள்
- இறுக்கங்கள் எத்தனை வகைப்படும்?
இரண்டு வகைப்படும்: முதல்நிலை இறுக்கம் மற்றும் இரண்டாம் நிலை இறுக்கம்
- முதல் நிலையில் இறுக்கத்தில் காணப்படுவது எது?
சென்ட்ரோமியர் மற்றும் கைனிட்டோகோர்
- மானோசென்ட்ரிக் குரோமோசோமில் எத்தனை சென்ட்ரோமியர் காணப்படுகிறது ?
ஒரு சென்ட்ரோமியர்
- பாலிசென்ட்ரிக் குரோமோசோமில் எத்தனை சென்ட்ரோமியர் காணப்படுகிறது ?
பல சென்ட்ரோமியர்
- சென்ட்ரோமியர்களில் காணப்படும் புரத இழைகள் கூட்டமைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கைனிட்டோகோர்
- இரண்டாம் நிலை இறுக்கத்தில் இருந்து உருவாகும் நியூக்ளியோலஸ்கள் எவ்வாறு
அழைக்கப்படுகின்றது?
நியூக்ளியோலார் அமைப்பான்கள்
- நியூக்ளியோலஸ் உருவாவதைத் தூண்டுவதற்க்கு என்ன பெயர்?
நியூக்ளியோலஸ் அமைக்கும் பகுதிகள்
- பிரதானக் குரோமோசோமின் முனைகளிலிருந்து தோன்றும் சிறு குரோமோசோம் பகுதிக்கு என்ன பெயர்?
சாட்டிலைட் அல்லது SAT
- சாட்டிலைட்கள் காணப்படும் குரோமோசோமிற்கு என்ன பெயர்?
SAT குரோமோசோம்
- குரோமோசோம்களில் சென்ட்ரோமியரின் அமைவிடத்தை கொண்டு அவை எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன ?
டீலோசென்ட்ரிக் (நுனி அமைந்த சென்ட்ரோமியர்), அக்ரோசென்ட்ரிக் ( நுனி கீழ் அமைந்த சென்ட்ரோமியர் ), சப்மெட்டாசென்ட்ரிக் ( மைய அருகு சென்ட்ரோமியர்) மெட்டாசென்ட்ரிக் (மையம் அமைந்த சென்ட்ரோமியர்)
- யூகேரியோட்டுகளில் டீலோசென்ட்ரிக் மற்றும் அக்ரோசென்ட்ரிக் குரோமோசோம்களில் என்ன வடிவம்?
கோல் வடிவம்
- யூகேரியோட்டுகளில் சப்மெட்டாசென்ட்ரிக் குரோமோசோம்களில் என்ன வடிவம்?
L வடிவம்
- யூகேரியோட்டுகளில் மெட்டாசென்ட்ரிக் குரோமோசோம்களில் என்ன வடிவம்?
V வடிவம்
- குரோமோசோம்களின் நுனிப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
டீலோமியர்
- குரோமோசோமிற்கு நிலைத்தன்மை அளிக்க உதவுவது எது?
டீலோமியர்
- புள்ளி சென்ட்ரோமியரில் அமைந்த கைனிட்டகோரானது ஓர் மைக்ரோடியூபியலை இணைத்துக் கொள்கிறது இது எவ்வாறு அழைக்கப்படும்?
இட எல்லைக்கு உட்பட்ட சென்ட்ரோமியர்
- குரோமாட்டின் நார்களின் விட்டம் எவ்வளவு?
100-130nm
- உயரிய கட்டுமான அமைப்பாக குரோமோசோமிற்க்குள் பொதிந்து காணப்படுவது எது?
குரோமாட்டின்
- எந்த நிலையில் குரோமோசோம் பொருள்கள் மிகவும் மெல்லிய இழை போன்று தெளிவாகக் காணப்படுகின்றன?
புரோஃபேஸ்
- குரோமோசோம் பொருள்கள் மிகவும் மெல்லிய இழை போன்று காணப்படுவதற்கு என்ன பெயர் ?
குரோமோனிமேட்டா
- இடைக்கால நிலையில் குரோமாட்டின்களின் அடர்ந்த பகுதி மணிகளை போன்ற அமைப்பு உடையதாய் இருக்கின்றது.இந்த அடர்ந்த பகுதி எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
குரோமோமியர்கள்
- குரோமோசோம்களின் பணிகளை கொண்டு அவை எவ்வாறு பிரிக்கப்படுகின்றன?
இரண்டு ஆட்டோசோம்கள் மற்றும் பால் குரோமோசோம்கள்
- ஒரு உயிரின் உடலப் பண்பை கட்டுப்படுத்துவதால் எல்லா உடலச் செல்களிலும் எது காணப்படுகிறது?
ஆட்டோசோம்கள்
- மனிதர்களில் இரட்டை மைய எண்ணிக்கை கொண்ட செல்களில் எத்தனை குரோமோசோம்கள் ஆட்டோசோம்களும் இரண்டு பால் குரோமோசோம்களும் உள்ளன?
44
- சிறப்பு வகை குரோமோசோம்கள் அளவில் பெரிதாக காணப்படுவதால் அவை எவ்வாறு அழைக்கப்படும் ?
அசுர குரோமோசோம்கள்
- விலங்குகளில் காணப்படும் பாலிடீன் குரோமோசோம்கள் மற்றும் விளக்கு தூரிகை குரோமோசோம்கள் எந்தவகை?
அசுர குரோமோசோம்கள்
- பாலிடீன் குரோமோசோம்கள் முதல் முறையாக கண்டறிந்தவர் யார்?
C.G.பால்பியானி, (1881)
- G.பால்பியானி பாலிடீன் குரோமோசோம்களை எதில் கண்டறிந்தார்?
டிரோசோஃபைலா என்ற பழ பூச்சியின் உமிழ்நீர் சுரப்பியில்
- ஒரு குரோமோசோம் பல நகல்களை உருவாக்குவதால் தோன்றும் அமைப்பிற்கு பெயர் என்ன?
பாலிடீன் குரோமோசோம்கள்
- கைரோனோமஸ் லார்வாவில் உள்ள பாலிடீன் குரோமோசோம்களில் மிகப்பெரிய புடைப்புகள் காணப்படுகின்றன இவற்றிற்கு என்ன பெயர்?
பால்பியானி வளையங்கள்
- பால்பியானி வளையங்கள் வேறு எவ்வாறு அழைக்கப்படும் ?
குரோமோசோம் புடைப்புகள்
- பால்பியானி வளையங்கள் உமிழ்நீர் சுரப்பியில் காணப்படுவதால் இவற்றுக்கு என்ன பெயர் ?
உமிழ்நீர் சுரப்பி குரோமோசோம்கள்
- உட்கரு பகுப்பு நடைபெறாமல் குரோமோசோம் DNA தொடர்ச்சியாக இரட்டிப்படைந்து தோன்றும் சகோதரக் குரோமாட்டிட்கள் பக்கவாட்டில் தொகுக்கப்பட்டு இந்த பாலிடீன் குரோமோசோம் உருவாகிறது இந்த நிகழ்விற்கு என்ன பெயர் ?
எண்டோமைட்டாசிஸ்
- உடல் செல்களில் தாய்வழி மற்றும் தந்தைவழித் தோன்றிய ஒத்திசைவு குரோமோசோம்கள் பக்கவாட்டில் ஒன்றோடொன்று தொடர்புடையதாக காணப்படுகின்றன இதற்கு என்ன பெயர்?
உடல இணைவு
- விளக்கு தூரிகை குரோமோசோம்கள் எதில் காணப்படுகிறது?
ஒரு செல்லாலான அசிடாபுலேரியா மற்றும் சல்மண்டார் ஊசைட்டுகள் முதல் மியாட்டிக் புரோஃபேஸின் டிப்லோடீன் துணைநிலைகளில்
- விளக்கு தூரிகை குரோமோசோம்களை முதன்முதலில் கண்டறிந்தவர் யார்?
பிளம்மிங் 1882
- புரோகேரியோட்டுகளான பாக்டீரியங்களில் இடம்பெயர உதவும் முறுக்கிழைகளால் ஆன உறுப்புகள் எவ்வாறு அழைக்கப்படும்?
கசையிழைகள்
- யூகரியோடிக் கசையிழை குறுயிழையைக் காட்டிலும் மெல்லியதாக உள்ளன. இதன் இலை பகுதி எந்த புரதத்தால் ஆனது?
பிளஜெல்லின்
- மைக்ரோ டிபியூல்கள் வெளிப்புறத்தில் காணப்படும் இரட்டை மைக்ரோ டிபியூல்களை எந்த இயக்க புரதம் இணைக்கிறது?
டையனின்
- நுண்ணோக்கியில் உள்ளமைக்கப்பட்ட நிழற்படக் கருவி மூலம் எடுக்கப்படும் படம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
நுண்புகைப்படம் அல்லது நுண்புகைப்படக்கலை
- செல்களுக்கும் திசுகளுக்கும் சாயமேற்றும் நுட்பத்திற்கு என்ன பெயர் ?
திசுவேதியியல் சாயமேற்றுதல் அல்லது திசுவேதியியல்(histochemistry)
- இயோசின் சாயத்தின் நிறம் என்ன?
இளஞ்சிவப்பு, சிவப்பு
- இயோசின் சாயத்தின் ஏற்கும் திறன் எது?
சைட்டோபிளாசம் செல்லுலோஸ்
- அசிட்டோகார்மைன்,ஹிமோட்டாக்சிலின் சாயத்தின் நிறம் என்ன?
இளஞ்சிவப்பு, சிவப்பு
- அசிட்டோகார்மைன்,ஹிமோட்டாக்சிலின் சாயத்தின் ஏற்கும் திறன் எது?
உட்கரு,குரோமோசோம்கள்
- மெத்திலின் நீலம் சாயத்தின் நிறம் என்ன?
நீலம்
- மெத்திலின் நீலம் சாயத்தின் ஏற்கும் திறன் எது?
உட்கரு
- சாஃப்ரானின் சாயத்தின் நிறம் என்ன?
சிவப்பு
- சாஃப்ரானின் சாயத்தின் ஏற்கும் திறன் எது?
செல்சுவர்(லிக்னின்)
- காட்டன் நீலம் சாயத்தின் நிறம் என்ன?
நீலம்
- காட்டன் நீலம் சாயத்தின் ஏற்கும் திறன் எது?
பூஞ்சையின் ஹைப்பாக்கள்
- சூடான் IV,சூடான் கருப்பு சாயத்தின் நிறம் என்ன?
கருஞ்சிவப்பு,கருப்பு
- சூடான் IV,சூடான் கருப்பு சாயத்தின் ஏற்கும் திறன் எது?
லிப்பிடுகள்
- கோமாஸ்சி அடர்நீலம் சாயத்தின் நிறம் என்ன?
நீலம்
- கோமாஸ்சி அடர்நீலம் சாயத்தின் ஏற்கும் திறன் எது?
புரதம்
- ஜேனஸ் பச்சை சாயத்தின் நிறம் என்ன?
பசுமை கலந்த நீலம்
- ஜேனஸ் பச்சை சாயத்தின் ஏற்கும் திறன் எது?
மைட்டோகாண்ட்ரியா
- I2KI சாயத்தின் நிறம் என்ன?
கருநீலம் முதல் பழுப்பு
- I2KI சாயத்தின் ஏற்கும் திறன் எது?
தரசம்
- டால்யூடின் நீலம் சாயத்தின் நிறம் என்ன?
நீலம்,நீலப்பச்சை
- டால்யூடின் நீலம் சாயத்தின் ஏற்கும் திறன் எது?
சைலம்,பாரங்கைமா,புறத்தோல்
11TH BOTANY STUDY NOTES |செல் ஒரு வாழ்வியல் அலகு| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services