- சுவாசித்தல் என்ற வார்த்தையை முதன்முதலில் தேர்ந்தெடுத்தவர் யார்?
பெபிஸ்(1966)
- சுவாசத்தலின் போது ஆக்சிஜனேற்றமடையும் கரிமப்பொருட்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
சுவாசத் தளப்பொருள்கள்
- பொதுவான சுவாசதளப் பொருள் எது?
குளுக்கோஸ்
- சுவாச தள பொருளின் தன்மையை பொருத்து பிளாக்மென் சுவாசித்தலை எவ்வாறு பிரிக்கிறார்?
மிதவை சுவாசித்தல் மற்றும் புரோட்டோபிளாசம் சுவாசித்தல்
- கார்போஹைட்ரேட் அல்லது கொழுப்பு அல்லது கரிம அமிலம் சுவாசத்தளப் பொருளாக பயன்படுத்தப்படும் வினை எவ்வாறு அழைக்கப்படும் ?
மிதவை சுவாசித்தல்
- சுவாசத்தின் போது புரதம் சுவாச தள பொருளாக பயன்படுத்தப்பட்டால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
புரோட்டோபிளாஸ்ம சுவாசித்தல்
- சுவாசித்தலின் போது வெளியிடப்படும் கார்பன்-டை-ஆக்சைடு ஒளிச்சேர்க்கையின் போது பயன்படுத்தப்படும் கார்பன்-டை-ஆக்சைடை எந்த புள்ளியில் ஈடுசெய்கிறதோ அதாவது நிகரவளி மாற்றம் நிகழாமல் இருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும் ?
ஈடுசெய்யும் புள்ளி
- ATP உற்பத்திக்கு காரணமாக உள்ளது எது?
சுவாசித்தல் நிகழ்ச்சி
- ATPயைக் கண்டறிந்தவர் யார்?
கார்ல் லோமென் (1929)
- ATPயின் விரிவாக்கம் என்ன?
Adenosine Tri phosphate
- ATPயில் காணப்படுவது?
அடினைன் என்ற ஒரு காரம், ரைபோஸ் எனும் பெண்டோஸ் சக்கரை மற்றும் மூன்று பாஸ்போர்ட் தொகுதிகள்
- ஒரு ATP நீராற்பகுப்படையும்போது எவ்வளவு ஆற்றல் வெளிப்படுகிறது?
7.3 கிலோ கலோரி அல்லது 30.6 கிலோ ஜுல் ஆற்றல்
- ஆற்றல் மாற்ற கருத்தாக்கத்தை உருவாக்கியவர் யார்?
லிப்மேன்(1941)
- சொல்லுக்குள் அதிக ஆற்றல் கொண்ட சேர்மங்கள் எவை?
GTP,UTP
- ஆக்சிஜன் உள்ள போது நடைபெறும் சுவாசித்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
காற்று சுவாசித்தல்
- காற்று சுவாசித்தல் எத்தனை படிநிலைகளில் நடைபெறுகிறது ?
4 : கிளைக்காலைசிஸ், பைருவேட் ஆக்சிஜனேற்றம் (இணைப்புவினை), கிரப்ஸ் சுழற்சி(TCA), எலக்ட்ரான் கடத்து சங்கிலி (இறுதி ஆக்சிஜனேற்றம்)
- காற்று சுவாசித்தலில் ஒரு மூலக்கூறு குளுக்கோஸ் ஆக்சிஜனேற்றம் அடையும் போது எத்தனை ATP மூலக்கூறுகளை உருவாக்குகிறது?
36
- காற்றிலாச் சுவாசித்தலில் எத்தனை ATP மூலக்கூறுகளை உருவாக்குகிறது?
2
- காற்று சுவாசித்தலில் இறுதி விளைப்பொருள்கள் எவை ?
கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் நீர்
- காற்றிலாச் சுவாசித்தலில் இறுதி விளைப்பொருள்கள் எவை ?
ஆல்கஹால் மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடு அல்லது லாக்டிக் அமிலம்
- ஆக்சிஜன் மூலக்கூறு இல்லாத போது குளுக்கோஸ் முழுமையற்று சிதைந்து என்னவாக மாறுகிறது?
எத்தில் ஆல்கஹால் அல்லது லாக்டிக் அமிலம்
- காற்றிலாச் சுவாசித்தல் எத்தனை படிநிலைகளில் நடைபெறுகிறது ?
இரண்டு: கிளைக்காலைசிஸ் , நொதித்தல்
- செல்லின் சைட்டோபிளாசத்தில் உள்ள குளுக்கோஸைப் பைருவிக் அமிலமாக மாற்றும் படி நிலை எது?
கிளைக்காலைசிஸ்
- மைட்டோகாண்ட்ரிய உட்கூழ்மத்தில் பைருவிக் அமிலத்தை அசிட்டைல் Co Aவாக மாற்றுவது?
இணைப்பு வினை
- மைட்டோகாண்ட்ரிய மேட்ரிக்ஸில் அசிட்டைல் Co Aவை கார்பன் டை ஆக்சைடாகவும் நீராகவும் மாற்றுவது?
கிரப்ஸ் சுழற்சி
- கிளைக்க்லிஸ் என்பது எந்த மொழியில் இருந்து பெறப்பட்ட வார்த்தை ?
கிரேக்கம்(Glykos – குளூக்கோஸ், Lysis-உடைதல்)
- கிளைகாலைசிஸ் நிகழ்ச்சியின் வினைகளை ஈஸ்ட் செல்களில் நடைபெறுவதை கண்டறிந்தவர்கள் யார்?
கஸ்டவ் எம்டன்,ஓட்டோ மேயர்ஹாப்,ஜே.பர்னாஸ்
- குளுக்கோஸ் எந்த நொதியின் உதவியினால் குளுக்கோஸ்- 6- பாஸ்பேட்டாக பாஸ்பரிகரணமடைகிறது?
ஹெக்சோகைனேஸ் நொதி
- ப்ரக்டோஸ் -1,6-பிஸ்ஃபாஸ்பேட் எந்த நொதியின் உதவியால் கிளிசரால்டிஹைடு-3- ஃபாஸ்பேட் மற்றும் ஹைட்ராக்ஸி ஆசிட்டோன் மற்றும் டைஹைட்ராக்ஸி அசிட்டோன் ஃபாஸ்பேட்டாக உடைகிறது?
ஆல்டோலேஸ் நொதி
- டைஹைட்ராக்ஸி அசிட்டோன் ஃபாஸ்பேட்டானது எந்த நொதியின் உதவியால் கிளிசரால்டிஹைடு-3- ஃபாஸ்பேட்டாக மாறுகிறது?
ட்ரையோஸ் ஃபாஸ்பேட் ஐசோமெரேஸ்
- 2 பாஸ்போ கிளிசரேட் எந்த நொதியின் செயல்பாட்டினால் பாஸ்போ ஈனால் பைருவேட்டாக மாறுகிறது?
ஈனோலேஸ்
- மூலக்கூறினுள் ஈனால் தொகுதி உருவாவதால் இந்த நிகழ்ச்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஈனோலேசன்
- TCA சுழற்சிக்கு தேவையான நொதிகளில் எந்த நொதி மட்டும் மைட்டோகாண்ட்ரியாவின் உட்சவ்வில் காணப்படுகிறது?
சக்சினேட் டிஹைட்ராஜினேஸ்
- கிரப்ஸ் சுழற்சி வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சிட்ரிக் அமில சுழற்சி அல்லது ட்ரை கார்பாக்சிலிக் அமில சுழற்சி
- சர் ஹான்ஸ் அடால்ப் கிரப்ஸ் எப்போது எங்கு பிறந்தார் ?
ஜெர்மன் 1900
- சர் ஹான்ஸ் அடால்ப் கிரப்ஸ் சிட்ரிக் அமில சுழற்சியை கண்டுபிடித்ததற்காக எப்போது நோபல் பரிசு வழங்கப்பட்டது?
1953
- கார்போஹைட்ரேட் அல்லாத கார்பன் தளப்பொருளான புரதங்கள் மற்றும் லிப்பிடுகளிலிருந்து க்ஷ குளுக்கோஸ் உருவாக்கப்படும் நிகழ்ச்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
குளுக்கோ நியோஜெனிசிஸ்
- மைட்டோகாண்ட்ரியாத்தின் உட்சவ்வு விரல்கள் ஒத்த நீட்சிகளாக மேட்ரிக்ஸ் நோக்கி உட்புறமாக உள்ளன இவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கிரிஸ்டே
- எந்த கோட்பாட்டின்படி ATP உருவாக்கம் எலக்ட்ரான் கடத்தல் வினையோடு இணைந்து நிகழ்கிறது?
வேதி சவ்வூடு பரவல்
- வேதி சவ்வூடு பரவல் கோட்பாட்டினை உருவாக்கியவர் யார் ?
பீட்டர் மிட்செல்
- பழுக்கும் பழங்களின் அசாதாரண சுவாச வீத அதிகரிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
வீரிய சுவாசம்
- செல்லின் ஆற்றல் நிலையம் என அழைக்கப்படுபவை எவை ?
மைட்டோகாண்டிரியங்கள்
- காற்று சுவாசிகளாக உள்ள புரோகேரியோட்டுகளில் மைட்டோகாண்ட்ரியங்கள் இல்லாததால் ஒவ்வொரு குளுக்கோஸ் மூலக்கூறும் எவ்வளவு மூலக்கூறுகளை உருவாக்க இயலும்?
38 ATP
- மைட்டோகாண்ட்ரியத்தில் நிகழும் ஆக்சிஜனேற்ற பாஸ்பரிகரண இணைவுச் செயலை கண்டறிந்த யாருக்கு 1978 வேதியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது?
பீட்டர் மிட்செல்
- ADPயிலிருந்து ATP உருவாவதை தடை செய்வது எது?
2,4 டைநைட்ரோபீனால்
- சைட்டோகுரோம் a3 லிருந்து O2விற்கு கடத்தப்படும் எலக்ட்ரான்களை தடை செய்வது எது?
சயனைடு
- NADH+FADH2லிருந்து CoQவிற்கு செல்லும் எலக்ட்ரான்களை தடை செய்வது எது?
ரொடினோன்
- ஆக்ஸிஜனேற்ற பாஸ்பரிகரணத்தை தடைசெய்வது எது?
ஒலிகோமைசின்
- சுவாசித்தலின் போது வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு அளவுக்கும் பயன்படுத்தப்படும் ஆக்ஸிஜன் அளவுக்கும் உள்ள விகிதம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
சுவாச ஈவு அல்லது சுவாச விகிதம்
- சுவாச தளப்பொருள் கார்போஹைட்ரேட் எனில் காற்று சுவாசித்தலின் போது சுவாச ஈவு மதிப்பு என்ன?
ஒன்றுக்கு சமம்
- சுவாச தளப்பொருள் கார்போஹைட்ரேட் எனில் காற்றில்லாச் சுவாசித்தலின் போது சுவாச ஈவு மதிப்பு என்ன?
முடிவிலி
- சிலர் சதைப்பற்றுள்ள தாவரங்களான ஒபன்சியா, பிரையோபில்லம் ஆகியவற்றில் கார்போஹைட்ரேட் பகுதியாக ஆக்சிஜனேற்றம் அடைந்து கரிம அமிலமாக குறிப்பாக மாலிக் அமிலமாக மாறும் அதனால் இதன் சுவாச ஈவு மதிப்பு என்ன ?
சுழியம்
- சுவாச தள பொருள் புரதம் அல்லது கொழுப்பு எனில் சுவாச ஈவு மதிப்பு என்ன?
ஒன்றைவிட குறைவு
- சுவாச தள பொருள் புரதம் அல்லது கொழுப்பு எனில் சுவாச ஈவு மதிப்பு என்ன?
ஒன்றைவிட அதிகம்
- புரதங்களின் சுவாச ஈவு மதிப்பு என்ன ?
0.8- 0.9
- ஒலியிக் அமிலம் (கொழுப்பின்) சுவாச ஈவு மதிப்பு என்ன?
0.71
- பால்மிடிக் அமிலம் (கொழுப்பு) சுவாச ஈவு மதிப்பு என்ன?
0.36
- டார்டாரிக் அமிலம் (கொழுப்பு) சுவாச ஈவு மதிப்பு என்ன?
1.6
- ஆக்ஸாலிக் அமிலம் (கொழுப்பு) சுவாச ஈவு மதிப்பு என்ன?
4.0
- பல தாவர பகுதிகளில் சிவப்பு நிறம் இருக்க காரணம் என்ன?
ஆந்தோசயனின்
- ஆந்தோசயனின் உருவாக்க கார்பன்-டை-ஆக்சைடு வெளியேறுவதை காட்டிலும் அதிக அளவு ஆக்சிஜனை பயன்படுத்திக் கொள்வதால் சுவாச ஈவு மதிப்பு என்ன?
ஒன்றை விட குறைவு
- சுவாசித்தல் மற்றும் சுவாச ஈவு ஆகியவற்றை கணக்கிடுவதற்கு பயன்படுத்தப்படும் சாதனம்?
கேனாங்கின் சுவாச கணக்கீட்டு கருவி
- சில உயிரினங்கள் ஆக்ஸிஜனேற்ற நிலையில் சுவாசிக்கின்றன இந்த நிகழ்ச்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நொதித்தல் அல்லது காற்றில்லா சுவாசித்தல்
- எத்தனை வகையான நொதித்தல் உள்ளன ?
மூன்று :ஆல்கஹாலிக் நொதித்தல் ,லாக்டிக் அமில நொதித்தல், கலப்பு அமில நொதித்தல்
- ஆல்கஹாலிக் நொதித்தல் எங்கு பயன்படுத்தப்படுகிறது?
பேக்கரிகளில் ரொட்டி கேக் தயாரிக்க, மதுபானங்கள் தயாரிக்க
- வினிகர் மற்றும் டானின்கள் எங்கு பயன்படுத்தப்படுகிறது?
தோல் தொழிற்சாலைகள்
- பிரேசில் கார்களில் பயன்படுத்தப்படும் என்ன எரிபொருளை எத்தனாலில் இருந்து தயாரிக்க ஆல்கஹாலிக் நொதித்தல் பயன்படுத்தப்படுகிறது?
கேசோஹால்
- எந்தவகை நொதித்தல் எண்டிரோபாக்டீரியேசியின் சிறப்புப் பண்பு?
கலப்பு அமில நொதித்தல்
- ஈஸ்டில் உள்ள எந்த நொதியானது குளுக்கோஸ் கரைசலை ஆல்கஹால் மற்றும் கார்பன் டை ஆக்சைடாக மாற்றுகிறது?
சைமேஸ்
- பெண்டோஸ் ஃபாஸ்பேட் வழித்தடம் யாரால் எப்போது கண்டறியப்பட்டது?
வார்பர்க்,டிக்கன்ஸ்,லிப்மேன் 1938
- பெண்டோஸ் ஃபாஸ்பேட் வழித்தடம் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வார்பர்க்- டிக்கன்ஸ்-லிப்மேன் வழித்தடம்,ஹெக்சோஸ் மானோ ஃபாஸ்பேட் ஷண்ட் அல்லது நேரடி ஆக்சிஜனேற்ற வழித்தடம்
- அந்தோசயனின் ,லிக்னின் மற்றும் பிற அரோமேட்டிக் சேர்மங்கள் உருவாக்கத்திற்கு எது பயன்படுகிறது?
எரித்ரோஸ்
11TH BOTANY STUDY NOTES |சுவாசித்தல்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services