- ஒளிச்சேர்க்கை செய்யும் உயிரினங்கள் பயன்படுத்துவது பூமியின் மீது விழும் எத்தனை சதவீத சூரிய ஒளியை மட்டுமே?
0.2%
- கரிம பொருட்களின் உலர் எடை அதிகரிப்பு நீரின் மூலமே என்பதனை ஒரு வில்வோ மரத்தை வளர்ப்பதன் மூலம் செய்து காட்டியவர் யார்?
வான் ஹெல்மான்ட் ,1648
- தாவர செயலியல் தந்தை யார் ?
ஸ்டீபன் ஹேல்ஸ்
- தாவரங்கள் ஊட்டச்சத்துகளை ஒளி மற்றும் காற்றின் மூலம் பெறுகிறது என கண்டறிந்தவர் யார்?
ஸ்டீபன் ஹேல்ஸ்1727
- தாவரங்கள் காற்றை சுத்தப்படுத்துகிறது என்பதனை மெழுகுவர்த்தி எலிகள் மற்றும் புதினா தாவர சோதனை மூலம் நிரூபித்தவர் யார்?
ஜோசப் பிரிஸ்ட்லி,1772
- பிரிஸ்ட்லி சோதனையை உறுதி செய்தவர் யார்?
ஜான் இங்கன்ஹீஸ
- தாவரங்கள் காற்றை வெளியேற்றுவது ஒளி இருக்கும் போது மட்டுமே என்பதை நிரூபித்தவர் யார்?
ஜான் இங்கன்ஹீஸ,1779
- காற்றை தூய்மைப்படுத்தும் வாயுவான ஆக்சிஜன் (பிளோஜிஸ்ட்டான்) தாவரங்களால் உருவாகிறது,மெழுகுவர்த்தி எரிவதால் உருவாகும் தூய்மையற்ற கார்பன்-டை-ஆக்சைடு(டிபிளோஜிஸ்டான்) என நிரூபித்தவர் யார் ?
லவாய்சியர்,1783
- ஒளிச்சேர்க்கை நிகழ்விற்கு நீரின் முக்கியத்துவத்தை விளக்கியவர் யார்?
டிஸாசியர்,1804
- ஒளிச் சேர்க்கைக்கு பச்சையத்தின் முக்கியத்துவத்தை விளக்கியவர் யார்?
டிடுரோச்செட்,1837
- பசுந்தாவரங்கள் சூரிய ஆற்றலை வேதி ஆற்றலான கரிமப்பொருட்கள் மாற்றுகிறது என்பதை விளக்கியவர் யார் ?
வான்மேயர், 1845
- தாவரங்களின் கரிம பொருளானது கார்பன்-டை-ஆக்சைடிலிருந்து பெறப்படுகிறது என்பதை கண்டறிந்தவர் யார்?
லிபிக்,1845
- ஒளிச்சேர்க்கையின் விளைபொருள் ஸ்டார்ச் என கண்டறிந்தவர் யார்?
ஜூலியஸ் வான் சாக்ஸ் ,1854
- பச்சையமானது ஒரு தனித்துவமான அமைப்பில் காணப்படுகின்றது என விளக்கியவர் யார் ?
ஜூலியஸ் வான் சாக்ஸ் ,1854
- ஒளிச்சேர்க்கையின் ஒளி செயல்திறன் நிறமாலையை விவரித்தவர்?
T.W.என்ஜெல்மேன், 1888
- கட்டுப்படுத்தும் காரணிகள் விதியை உருவாக்கியவர் யார் ?
பிளாக்மன்,1905
- ஒளிச்சேர்க்கை ஆய்வுக்கு ஒரு செல் ஆல்காவான குளோரெல்லாவை பயன்படுத்தியவர் யார்?
வார்பர்க்,1920
- ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடப்படும் ஆக்சிஜன் கார்பன் டையாக்ஸைடு இருந்து வருவது இல்லை மாறாக நீரில் இருந்து வருகிறது என நிரூபித்தவர் யார் ?
வான் நீல், 1931
- வான் நீல் என்ன பாக்டீரியாக்களை பயன்படுத்தி ஒளிச்சேர்க்கை ஆய்வுகளை செய்து காட்டினார் ?
ஊதா பச்சை பாக்டீரியங்கள்
- பசும் கந்தக பாக்டீரியாவில் H2S ஆனது ஹைட்ரஜன் கொடையாளியாக செயல்பட்டு ஆக்சிஜனுக்கு பதிலாக எதை வெளியேற்றும்?
சல்ஃபர்
- ஒளி மற்றும் இருள்வினைகள் நடை பெறுகிறது என்பதனை ஒளிசிதறல் ஆய்வின் மூலம் நிரூபித்தவர் யார்?
எமர்சன் மற்றும் அர்னால்டு, 1932
- பசுங்கணிகங்களை பிரித்தெடுத்து ஒளியின் முன்னிலையில் எலக்ட்ரான் ஏற்பியை பயன்படுத்தி நீரின் ஒளிபிளத்தல் நிகழ்வை நிரூபித்தவர் யார்?
R.ஹில், 1937
- கதிரியக்க ஆக்சிஜன் ¹⁸O2 பயன்படுத்தி ஆக்சிஜன் நீரிலிருந்து உருவாவதை நிரூபித்தவர் யார்?
ரூபன் மற்றும் கேமன் 1941
- கதிரியக்க ¹⁴ CO2 பயன்படுத்தி பிரித்தெடுக்கப்பட்ட பசுங்கணிகங்களில் கார்பன் டை ஆக்சைடு நிலைநிறுத்தம் நடைபெறுவதை நிரூபித்தவர் யார்?
ஆர்னான், ஆலன் மற்றும் வாட்லே, 1954
- கதிரியக்க ¹⁴ CO2 பயன்படுத்தி, ஒளிச்சேர்க்கையின் கார்பன் வழித்தடத்தை கண்டறிந்து இருள்வினையை (அ) C3 சுழற்சியை விவரித்தவர் யார் ?
மெல்வின் கால்வின், 1954
- C3 சுழற்சியை விவரித்ததற்காக மெல்வின் கால்வின் எந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றார்?
1960
- ரோடோபாக்டர் பாக்டீரியத்தின் ஒளிச்சேர்க்கை வினை மையத்தை படிகமாக மாற்றியவர்கள் யார்?
ஹீயுபர்,மைக்கேல் மற்றும் டிஸென்ஹாப்பர்,1985
- ஆறு மூலக்கூறு ஆக்சிஜனை உருவாக்க ஆறு மூலக்கூறு நீர் போதுமானதாக இருப்பதில்லை என நிரூபித்தவர் யார் ?
ரூபன் மற்றும் கேமன்,1941
- ஒளிச்சேர்க்கை எதை குறிக்கிறது ?
ஒட்டுமொத்த ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஒடுக்க வினைகள்
- நீரானது ஆக்சிஜனேற்றம் அடைந்து ஆக்ஸிஜனாக மாறுதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஆக்சிஜனேற்றம்(எலக்ட்ரான் இழப்பு)
- கார்பன்-டை-ஆக்சைடானது ஒடுக்கமடைந்து கார்போஹைட்ரேட்டுகளாக மாறுதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஒடுக்கம்(எலக்ட்ரான் ஏற்பு)
- சில உயிரினங்கள் ஒளியை உற்பத்தி செய்து உமிழும் தன்மை பெற்றவை இவை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது ?
உயிரொளிர்தல்(Bioluminerscenc)
- ஒளிச்சேர்க்கை நடைபெறும் இடம் எது?
பசுங்கணிகம்
- பசுங்கணிகம் என்ன வடிவம் பெற்ற ஒரு செல் நுண்ணுறுப்பு?
வட்ட வடிவ அல்லது லென்ஸ் வடிவ இரட்டை சவ்வினால் ஆன உறுப்பு
- பசுங்கணிகம் எவ்வளவு விட்டம் மற்றும் தடிமன் உடையது?
4-10 மைக்ரோமீட்டர் மற்றும் 1-33 மைக்ரோமீட்டர்
- பசுங்கணிகத்தின் இரண்டு சபைகள் இடைப்பட்ட இடைவெளி எவ்வளவு?
100 முதல் 200 Å
- பசுங்கணிகத்தின் உள்ளே காணப்படும் கூல் போன்ற புரத தன்மையுடைய திரவத்திற்கு என்ன பெயர்?
ஸ்ரோமா
- ஸ்ரோமாவில் பைபோன்ற தட்டு வடிவ படல அமைப்புகள் காணப்படுகிறது.இதற்கு என்ன பெயர்?
தைலகாய்டு வட்டில்கள் அல்லது லாமெல்லே
- லாமெல்லாக்கள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்ட நாணயங்கள் போன்று காணப்படும் அமைப்பிற்கு என்ன பெயர் ?
கிரானம்
- ஒவ்வொரு பசுங்கணிகத்திலும் எத்தனை கிரானாக்கள் உள்ளன?
40 முதல் 80
- ஒவ்வொரு கிரானத்திலும் எத்தனை தைலகாய்டுகள் காணப்படுகின்றன ?
5 முதல் 30 தைலகாய்டுகள்
- கிரானத்தில் காணப்படும் தைலகாய்டுகள் எவ்வாறு அழைக்கப்படும்?
கிரானம் லாமெல்லே
- ஸ்ட்ரோமாவில் காணப்படும் தைலகாய்டுகள் எவ்வாறு அழைக்கப்படும் ?
ஸ்ட்ரோமா லாமெல்லே
- தைலகாய்டு தட்டுகள் எவ்வளவு விட்டமுடையவை?
0.25 முதல் 0.8 மைக்ரான்
- கிரானங்களை இணைக்கும் மெல்லிய லாமெல்லாக்களுக்கு என்ன பெயர்?
பிஃரட் சவ்வு
- பசுங்கணிகத்தில் என்னென்ன காணப்படுகின்றன ?
புரதங்கள், பாஸ்போலிப்பிடுகள், கரோட்டினாய்டுகள் ,ரைபோசோம்கள் ,வட்ட வடிவ டிஎன்ஏ மற்றும் தரசமணிகள்
- பசுங்கணிகத்தில் எத்தனை சதவீதம் புரதங்கள் காணப்படுகிறது?
30 முதல் 35 சதவீதம்
- பசுங்கணிகத்தில் எத்தனை சதவீதம் பாஸ்போலிப்பிடுகள் காணப்படுகிறது?
20 முதல் 30 சதவீதம்
- பசுங்கணிகத்தில் எத்தனை சதவீதம் குளோரோபில் காணப்படுகிறது?
5 முதல் 10 சதவீதம்
- பசுங்கணிகத்தில் எத்தனை சதவீதம் கரோட்டினாய்டுகள் காணப்படுகிறது?
4 முதல் 5%
- அகக்கூட்டுயிர் கோட்பாட்டின்படி பசுங்கணிகங்கள் எதிலிருந்து பரிணாமம் அடைந்தவை என கருதப்படுகிறது ?
பாக்டீரியா
- தைலகாய்டுகளின் நிறமி அமைப்பு சூரிய ஆற்றலை பயன்படுத்தி என்ன ஆற்றல் மூலக்கூறுகளை உற்பத்தி செய்கிறது?
ATP, NADPH+ H+
- பசுங்கணிகத்தின் ஸ்ட்ரோமாவில் உள்ள நொதிகள் கார்பன்-டை-ஆக்சைடை என்னவாக மாற்றுகிறது?
கார்போஹைட்ரேடடாக
- பசுங்கணிகங்கள் மற்றும் ஒளிச்சேர்க்கை பாக்டீரியாக்களில் காணப்படும் நிறமிகள் எவ்வாறு அழைக்கப்படும்?
ஒளிச்சேர்க்கை நிறமிகள்
- குளோரோபில் என்ன வடிவத்தை பெற்றிருக்கும் ?
தலைப்பிரட்டை
- ஃபைட்டால் வால்பகுதி எத்தனை காரணங்களால் ஆனது?
20
- சக்சனிக் அமிலம் எந்த சுழற்சியின் ஒரு இடை பொருள் ?
கிரப் சுழற்சி
- குளோரோபில் உயிர்ம உற்பத்திக்கு எந்த தனிமங்கள் அவசியம்?
Mg,Fe,Cu,Zn,Mn,K மற்றும் நைட்ரஜன்
- மஞ்சள் முதல் ஆரஞ்சு நிறமுடைய நிறமிகள் எவை ?
கரோட்டினாய்டுகள்
- கரோட்டினாய்டுகள் பெரும்பாலும் என்னவாக உள்ளன?
டெட்ராடெர்பீன்கள்
- கரோட்டினாய்டுகள் குளோரோஃபில் நிறமிகளை ஒளி ஆக்சிஜனேற்ற சிதைவிலிருந்து பாதுகாப்பதால் இவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கவச நிறமிகள்
- கரோட்டினாய்டு நிறமிகள் எத்தனை கார்பன் அணுக்களை பெற்றிருக்கும்?
40
- கனிகள் பழுத்தல்,மலரின் நிறங்கள் மற்றும் இலையுதிர் கால இலைகளின் நிறமாற்றம் ஆகியவைகளுக்கு எது காரணம் ?
கரோட்டினாய்டுகள்
- ஆரஞ்சு சிவப்பு மஞ்சள் மற்றும் பழுப்பு நிற கொண்ட நிறமிகள் எவை?
கரோட்டின்கள்
- வைட்டமின் Aவின் முன்னோடி பொருளாக உள்ளவை எவை?
கரோட்டின்
- தக்காளி ,சிவப்பு மிளகாய் மற்றும் ரோஜாக்களில் காணப்படும் சிவப்பு நிறமி என்ன?
லைக்கோபீன்கள்
- சாந்தோஃபில் நிறமிகள் என்ன நிறமுடையவை?
மஞ்சள் நிறம்
- இலையுதிர்கால இலைகளில் மஞ்சள் நிற மாற்றத்திற்கு காரணமாக உள்ள ரத்தத்தின் நிறம் எது?
லியூட்டின்
- எந்தப் புரதத்தன்மையுடைய நிறமிகள் நீரில் கரையக்கூடியவை?
பைக்கோபிலின்கள்
- பைக்கோபிலின்கள் எத்தனை வகையாக உள்ளன?
இரண்டு: பைக்கோசயனின், பைக்கோஎரித்திரின்
- சயனோ பாக்டீரியங்களின் நீல பச்சை நிறத்துக்கு காரணம் எது ?
பைக்கோசயனின்
- சிவப்பு ஆல்காக்களில் சிவப்பு நிறத்திற்கு காரணமாக உள்ளது எது?
பைக்கோஎரித்திரின்
- அடுத்தடுத்த இரு அலை முகடுகளுக்கு இடைப்பட்ட தூரம் என்ன?
அலைநீளம்
- ஒளியின் மிகச்சிறிய துகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
போட்டன்
- ஒவ்வொரு போட்டான் பெற்றிருக்கும் ஆற்றலுக்கு என்ன பெயர்?
குவாண்டம்
- ஒளிச்சேர்க்கை செயல்பாட்டிற்கான உருவ தோற்ற வெளிப்பாடு அலகுகள் என்னென்ன?
குவாண்டோசோம்கள்
- எப்போது யார் எலக்ட்ரான் நுண்ணோக்கியின் மூலம் குளோரோபிளாஸ்ட் லாமெல்லாக்களில் காணப்படும் துகள் போன்ற அமைப்புகளை கண்டறிந்தார்?
ஸ்டெயின்மேன்,1952
- இந்த குமிழ் போன்ற துகள்கள் ஒளிச்சேர்க்கையின் செயல் அலகுகள் என உறுதி செய்தவர் யார்?
பார்க் மற்றும் பிக்கின்ஸ், 1964
- ஒரு குவாண்டோசோமில் எத்தனை மூலக்கூறுகள் உள்ளது என கருதப்படுகிறது?
230 குளோரோபில்
- ஒரு கார்பன் டை ஆக்சைடு நிலைநிறுத்த 2500 குளோரோஃபில் மூலக்கூறுகள் தேவைப்படுகின்றன என ஒளிக்கற்றை ஆய்வுகளின் மூலம் கண்டறிந்தவர்கள் யார்?
எமர்சன் மற்றும் அர்னால்டு, 1932
- ஒரு கார்பன்-டை-ஆக்சைடை ஒடுக்க அல்லது நிலைநிறுத்த எத்தனை குவாண்டா ஒளி தேவைப்படுகிறது?
10
- ஒரு செயலியல்சார் ஒளிச்சேர்க்கை அலகு எனக் கருதப்படுவது எது?
200 முதல் 300 குளோரோஃபில் மூலக்கூறுகளை கொண்ட அலகு
- எமர்சன் கூற்றுப்படி ஒரு ஆக்சிஜனை வெளியேற்ற அல்லது ஒரு கார்பன்-டை-ஆக்சைடை ஒடுக்க எவ்வளவு குவாண்டா ஒளி தேவைப்படுகிறது?
8
- ஒளியை பிரதிபலிக்காமல் ,கடத்தாமல் ஒளியை முழுமையாக தேக்கி வைத்துக் கொள்வது எவ்வாறு அழைக்கப்படும்?
ஒளிஈர்ப்பு
- ஒளிச்சேர்க்கையின் போது பல்வேறு ஒளி அலைகளின் செயல் திறனை அளவிட அவற்றின் குவாண்டம் விளைச்சல் உடன் ஒப்பிட்டு வரைபடம் வரையும் போது உருவாகும் வளைவுகள் கொண்ட வரைபடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
செயல்திறன் நிறமாலை
- சிவப்பு பகுதிக்கு அப்பால் ஒளிச்சேர்க்கை வீதமானது திடீரென குறைவதற்கு என்ன பெயர் ?
சிவப்பு வீழ்ச்சி அல்லது எமர்சன் முதல் விளைவு
- அதிக அலைநீளம் கொண்ட ஒற்றை ஒளியை,குறைந்த அலைநீளம் கொண்ட( சிவப்பு ) ஒளியுடன் சேர்த்து செலுத்தி ஒளிச்சேர்க்கை வீதம் கணக்கிடும்போது சிவப்பு ஒளியில் ஏற்படும் வீழ்ச்சிக்கு மாறாக ஒளிச்சேர்க்கை வீதம் அதிகரிக்கிறது இதற்கு என்ன பெயர்?
எமர்சன் மேம்படுத்தப்பட்ட விளைவு
- ஒளிச்சேர்க்கையின் முதல் கட்ட நிகழ்வில் ஒளியானது தேவைப்படுவதால் அதற்கு என்ன பெயர்?
ஒளி வினை அல்லது ஹில் வினை
- ஒளி வினையில் உருவான ஆற்றலை பயன்படுத்தி கார்பன்-டை-ஆக்சைடு கார்போஹைட்ரேட்டுகளாக ஒடுக்கப்படுகிறது இந்த வினை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இருள்வினை
- ஒளி வினையானது எத்தனை நிலைகளில் விவரிக்கப்படுகிறது?
2: ஒளி ஆக்சிஜனேற்ற நிலை மற்றும் ஒளி வேதி நிலை
- நல்வினை வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கால்வின் -பென்சன் சுழற்சி
- ஒளியின் மூலம் வெளியேற்றப்பட்ட எலக்ட்ரான்கள் பாஸ்பரிகரணம் நிகழ்விற்கு பயன்படுத்தப்படுவதால் அதற்கு என்ன பெயர்?
ஒளி பாஸ்பரிக்கரணம்
- ஓர் அணு அல்லது மூலக்கூறின் இயல்பான நிலைக்கு என்ன பெயர்?
தள நிலை
- எத்தனை வகையான கிளிர்வடைந்த நிலைகள் காணப்படுகின்றன?
3 :முதல் சிங்லெட் நிலை, இரண்டாவது சிங்லெட் நிலை, முதல் டிரிப்லெட் நிலை
- ஈர்க்கப்பட்ட கதிர்வீச்சு ஆற்றலானது விரைந்து ஒளியாக உமிழும் நிகழ்விற்கு என்ன பெயர்?
உடன்மிளிர்தல்
- ஈர்க்கப்பட்ட கதிர்வீச்சு ஆற்றலானது தாமதமாக ஒளியாக உமிழும் நிகழ்விற்கு என்ன பெயர்?
தாமத மிளிர்தல்
- நீரின் ஒளி ஆக்சிஜனேற்றத்தை விளக்கும் கோட்பாட்டினை உருவாக்கியவர்கள் யார் ?
காக் மற்றும் சக ஆய்வாளர்கள்
- காக் மற்றும் சக ஆய்வாளர்கள் வெளியிட்ட கோட்பாட்டிற்கு என்ன பெயர்?
நீர் ஆக்சிஜனேற்ற கடிகாரம் அல்லது S நிலை இயந்திர நுட்பம்
- ஒளி வினையில் ஒரு எலக்ட்ரானை வெளியேற்ற நிறமி அமைப்பிற்கு எவ்வளவு ஆற்றல் தேவைப்படுகிறது?
இரு குவாண்டம் ஒளி ஆற்றல்
- ஒளி வினையில் PS Iக்கு எலக்ட்ரான்களை கடத்துவதற்கு எவ்வளவு ஆற்றல் தேவைப்படுகிறது?
ஒரு குவாண்டம் ஒளி ஆற்றல்
- ஒரு NADPH+H+ உற்பத்திக்கு எத்தனை எலக்ட்ரான்கள் தேவைப்படுகின்றன?
இரண்டு
- 4 எலக்ட்ரான்களை கடத்துவதற்கு எத்தனை ஒளி ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது ?
எட்டு குவாண்டம் ஒளி ஆற்றல்
- வேதி சவ்வூடுபரவல் கோட்பாட்டினை உருவாக்கியவர் யார்?
P.மிட்செல்(1966)
- ஆறு ஆக்சிஜன் மூலக்கூறு தோற்றத்திற்கு எவ்வளவு ATP & NADPH+ H+ பயன்படுகிறது?
30 ATP & 12 NADPH+ H+
- எப்போது யாரால் கார்பன் நிலைநிறுத்தும் வழித்தடம் கண்டறியப்பட்டது?
- மெல்வின் கால்வின், A.A.பென்சன் மற்றும் அவர்களின் சகாக்கள் மூலம் 1957 ஆம் ஆண்டு
- கார்பன் நிலைநிறுத்தும் வழித்தடம் கண்டுபிடித்ததால் மெல்வின் கால்வினிற்கு இதற்காக எந்த ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது?
1961
- கார்பன் நிலைநிறுத்தும் வழித்தடம் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கால்வின் பென்ஷன் சுழற்சி அல்லது வெப்ப வேதியியல் வினை
- இருளினை எத்தனை நிலைகளை கொண்டது ?
மூன்று: கார்பன் நிலைநிறுத்தம், கார்பன் ஒடுக்க வினை, மறுஉருவாக்கம்
- இவ்வுலகில் அதிகமாக காணப்படும் புரதம் எது?
RUBISCO – RUBP கார்பாக்சிலேஸ் ஆக்ஸிஜினேஸ் நொதி
- பசுங்கணிகம் புரதங்களில் RUBISCO எவ்வளவு சதவீதமாக உள்ளது?
16%
- கரும்பில் நடைபெறும் C4 அல்லது டைகார்பாக்சிலிக் அமில வழித்ஊடம் யாரால் எப்போது கண்டறியப்பட்டது?
கோர்ட்சாக்,ஹார்ட் மற்றும் பர்,1965
- இவ்வுலகின் உயிர்களில் எத்தனை சதவீதம் C4 தாவரங்களாக உள்ளன?
5%
- ஆக்ஸிலோ அசிட்டிக் அமிலமானது என்ன வகை அமிலம் ?
டைகார்பாக்சிலிக் அமிலம்
- Kranz எனம் ஜெர்மன் சொல்லிற்க்கு என்ன பெயர்?
ஒளிவட்டம் அல்லது வளையம்
- C3 தாவரங்களுக்கான உகந்த வெப்பநிலை எவ்வளவு?
20° முதல் 30°C
- C4 தாவரங்களுக்கான உகந்த வெப்பநிலை எவ்வளவு?
20° முதல் 30°C
- CAM சுழற்சி அல்லது கிராசுலேசியன் அமில வளர்ச்சிதை மாற்ற வழித்தடம் முதன்முதலில் எந்த தாவரங்களில் கண்டறியப்பட்டது?
கிராசுலேசியன் குடும்பத்தைச் சார்ந்த பிரையோஃபில்லம்,செடம்,கலான்சோ
- பகலில் மூடியும் இரவில் திறந்தும் காணப்படும் இலைத்துளை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஸ்கோடோஆக்டிவ் (Scotoactive)
- சில தாவரங்களில் சுவாசித்தல் விகிதமானது ஒளியின் போது அதிகமாகவும் இருளின் போது குறைவாகவும் இருப்பதைக் கண்டறிந்தவர் யார்?
டெக்கர்
- C2 சுழற்சியானது எந்த மூன்று செல் நுண்ணுறுப்புகள் நடைபெறுகிறது?
பசுங்கணிகம் ,பெர்ராக்ஸிசோம் மற்றும் மைட்டோகாண்ட்ரியா
- ஒளிசுவாசத்தில் இறுதி விளைப்பொருட்கள் என்னென்ன?
PGA மற்றும் CO2
- இருள்சுவாசத்தில் இறுதி விளைப்பொருட்கள் என்னென்ன?
நீர் மற்றும் CO2
- எந்த ஆண்டு சாக்ஸ் ஒளிச்சேர்க்கையை கட்டுப்படுத்தக் கூடிய காரணிகளை மூன்று இலக்கு மிகுநுட்ப கோட்பாட்டின் மூலம் விவரித்தார் ?
1860
- மூன்று இலக்கு மிகுநுட்ப கோட்பாட்டு என்னென்ன?
குறைந்தபட்ச நிலை, உகந்த நிலை,அதிகபட்ச நிலை
- எந்த ஆண்டு பிளாக்மென் ஒளிச்சேர்க்கையை கட்டுப்படுத்தக் கூடிய சிறிய காரணிகளின் முக்கியத்துவத்தை கூறினார்?
1905
- “ஒரு செயலின் வேகத்தை கட்டுப்படுத்த கூடிய பல்வேறு தனித்த காரணிகள் இருப்பினும் அதன் செயல் வீதத்தை கட்டுப்படுத்தக் கூடியதாக இருப்பது குறைந்தபட்ச காரணியாகும் ” எனக் கூறியவர் யார்?
பிளாக்மென்
- ஒளிச்சேர்க்கையை கட்டுப்படுத்தும் காரணிகள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது ?
வெளிப்புற காரணிகள் அல்லது சுற்றுச்சூழல் காரணிகள் மற்றும் அகக்காரணிகள்
- ஒளிச்சேர்க்கையை கட்டுப்படுத்தும் வெளிப்புற காரணிகள் என்னென்ன?
ஒளி ,கார்பன்-டை-ஆக்சைடு ,வெப்பநிலை, நீர்,கனிமங்கள் மற்றும் மாசுக்கள்
- ஒளிச்சேர்க்கையை கட்டுப்படுத்தும் அகக் காரணிகள் என்னென்ன?
நிறமிகள் ,புரோட்டோபிளாசம் ,கார்போஹைட்ரேட்டுகளின் குவிப்பு, இலையின் உள்ளமைப்பு மற்றும் ஹார்மோன்கள்
- வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் அளவு அது எவ்வளவு சதவீதம் மட்டுமே உள்ளது?
0.3%
- ஆக்சிஜன் செறிவு அதிகரிக்கும் போது ஒளிச்சேர்க்கையின் வீதமானது என்னவாகும்?
குறைகிறது
- ஆக்சிஜன் செறிவு அதிகரிக்கும் போது ஒளிச்சேர்க்கை வீதமானது குறைவது என்ற தடுப்பு விளைவினை வார்பார்க் முதன்முதலில் எந்த ஆல்காவினை பயன்படுத்தி கண்டறிந்தார்?
குளோரேல்லா
- சப்பாத்திக்கள்ளி போன்ற தாவரங்களில் ஒளிச்சேர்க்கைக்காண உகந்த வெப்பநிலை எவ்வளவு?
55°C
- லைக்கன்கள் போன்ற தாவரங்களில் ஒளிச்சேர்க்கைக்காண உகந்த வெப்பநிலை எவ்வளவு?
20°C
- வெந்நீர் ஊற்றுகளில் வளரும் ஆல்காக்களில் ஒளிச்சேர்க்கைக்காண உகந்த வெப்பநிலை எவ்வளவு?
75°C
- எந்த ஹார்மோன்கள் ஒளிச்சேர்க்கை வீதத்தை அதிகரிக்க செய்கின்றன?
ஜிப்ரெலின் மற்றும் சைட்டோகைனின்
11TH BOTANY STUDY NOTES |ஒளிச்சேர்க்கை| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services