11TH BOTANY STUDY NOTES |உயிரி உலகம்| TNPSC GROUP EXAMS


  1. புவி தோன்றி எவ்வளவு வருடங்கள் ஆகிறது?

4.6 பில்லியன்

  1. எந்த தாவரத்தின் கண்ணிகளில் பூச்சிகள் பட்டவுடன் அவை பிடிக்கப்படுகின்றன?

வீனஸ் தாவரம்(டையோனியா)

  1. டிஎன்ஏ எவற்றைக் கொண்டுள்ளது?

உயிரை கட்டுப்படுத்தும் ஒரு மூலக்கூறாகவும்,கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன்,பாஸ்பரஸ் போன்ற உயிரற்ற பொருட்களையும் கொண்டுள்ளது

  1. யார் 2011ல் மேற்கொண்ட ஆய்வின் மூலம் புவியில் ஏறத்தாழ 8.7 மில்லியன் சிற்றினங்கள் வாழ்ந்து வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது ?

 மோரா மற்றும் சக ஆய்வாளர்கள்

  1. அனைத்து உயிரினங்களும் எதனால் ஆனவை?

 செல்கள்

  1. செல்களின் அடிப்படையில் உயிரினங்கள் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன?

 2 தொன்மையுட்கரு/ தொல்லுட்கரு உயிரிகள் & உண்மையுட்கரு /மெய்யுட்கரு உயிரிகள்

  1. ஒரு செல் அமைப்புடைய உயிரிகள் எது?

தொன்மையுட்கரு/ தொல்லுட்கரு உயிரிகள்

  1. தொன்மையுட்கரு/ தொல்லுட்கரு உயிரிகளுள் எது காணப்படுவதில்லை?

உட்கரு ,மைட்டோகாண்ட்ரியங்கள், எண்டோபிளாச வலை, கோல்கை உறுப்புகள் போன்ற சவ்வினால் சூழப்பட்ட பல நுண்ணுறுப்புகளும

  1. உண்மையுட்கரு /மெய்யுட்கரு உயிரிகள் எந்த செல் அமைப்புடையவை?

ஒரு செல் (அமீபா ) அல்லது பல செல் (ஊடோகோனியம்)

  1. உயிரிகளில் இனப்பெருக்கம் எத்தனை வகைகளில் நடைபெறுகிறது?

இரண்டு: பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம்

  1. எந்த இனப்பெருக்கத்தின் மூலம் சில அல்லது பல பண்புகளில் பெற்றோரை ஒத்த சந்ததிகள் தோற்றுவிக்கப்படுகின்றன ?

பாலிலா இனப்பெருக்கம்

  1. பாலினப்பெருக்கம் எதன் வாயிலாக வேறுபாடுகளை சந்ததிகளில் கொண்டுவருகிறது?

 மறுகூட்டிணைவு (recombination)

  1. உயிரினங்களில் பாலிலா இனப்பெருக்கம் எதன் மூலம் நடைபெறுகிறது?

கொனிடியங்கள் (ஆஸ்பர்ஜில்லஸ்), மொட்டு விடுதல் (ஹைட்ரா,ஈஸ்ட்), இருபிளவுறுதல் (பாக்டீரியங்கள்,அமீபா),புரோட்டோனிமா,(மாஸ்கள்),மீளுருவாக்கம்(பிளனேரியா)

  1. விலங்குகள் அவற்றின் உணர்வு உறுப்புகள் மூலம் சுற்றுப்புறத்தை நன்கு உணர்ந்து கொள்கின்றன இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 உணர்வுநிலை

  1. தாவரங்கள் சூரிய ஒளியை நோக்கி வளைவதும், தொட்டாற்சினிங்கி தாவர இலைகள் தொட்டவுடன் மூடிக் கொள்வது எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

  உறுத்துணர்வு(Irritability)

  1. சுற்றுச் சூழலுக்கு ஏற்ப உயிரினங்கள் தங்களை ஒழுங்குபடுத்திக் கொள்வதுடன் சீரான உடல் நிலையையும் பாதுகாத்துக் கொள்கின்றன இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

சமநிலை பேணுதல்

  1. உயிருள்ள செல்களில் நடைபெறுகின்ற அனைத்து வேதிவினைகளும் சேர்த்து ஒட்டுமொத்தமாக எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

வளர்சிதைமாற்றம்

  1. வளர்சிதைமாற்றம் எத்தனை வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது ?

இரண்டு: வளர் மாற்றம் (Anabolism),சிதைவு மாற்றம்(catabolism)

  1. வளர் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டுகள் எவை ?

அமினோ அமிலங்கள் சேர்ந்து புரதம் உற்பத்தியாகுதல்

  1. குளுக்கோஸ் மூலக்கூறு நீராகவும் கார்பன் டை ஆக்சைடாகவும் சிதைவுறுதல் எதற்கு எடுத்துக்காட்டு?

சிதைவு மாற்றம்

  1. செல்லினுள் நடைபெறும் சைட்டோபிளாச இயக்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

சைட்டோபிளாச நகர்வு அல்லது சைக்ளோசிஸ்

  1. உயிரியலின் புதிர் என அழைக்கப்படுவது எது?

வைரஸ்

  1. வைரஸ் எனும் சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?

 இலத்தீன்

  1. இலத்தீன் மொழியில் வைரஸ் என்ற சொல்லின் பொருள் என்ன ?

நச்சு

  1. வைரஸ்கள் என்ன வகை உயிரிகள்?

மீநுண்ணிய செல்லுக்குள்ளே வாழும் நிலை மாற ஒட்டுண்ணிகள்

  1. வைரஸ்கள் என்ன வகை உட்கரு அமிலத்தை பெற்றுள்ளன?

 DNA or RNA

  1. வைரஸ்கள் பற்றிய படிப்பின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

வைரஸ்இயல் (Virology)

  1. எந்த விஞ்ஞானி 1935 ஆம் ஆண்டில் நோயுற்ற புகையிலை சாற்றிலிருந்து வைரஸ்களை படிகப்படுத்தினார்?

அமெரிக்க விஞ்ஞானி W.M ஸ்டான்லி

  1. அமெரிக்க விஞ்ஞானியான W.M ஸ்டான்லி எந்த ஆண்டு வேதியியல் பிரிவிற்கான நோபல் பரிசை J.H நார்த்ட்ராப்புடன் சேர்ந்து பெற்றார்?

 1946

  1. எந்த ஆண்டு பெரியம்மைக்கு எட்வர்டு ஜென்னர் தடுப்பூசி கண்டுபிடித்தார்?

 1796

  1. எந்த ஆண்டு அடால்ப் மேயர் புகையிலை தேமல் நோய் வைரஸின் தொற்று தன்மையை தேமல் பாதித்த இலைச்சாற்றை பயன்படுத்தி விளக்கினார்?

 1886

  1. எந்த ஆண்டு டிமிட்ரி ஐவான்ஸ்கி வைரஸ்கள் பாக்டீரியாக்களை விட சிறியது என நிரூபித்தார்?

 1892

  1. எந்த ஆண்டு M.W. பெய்ஜிரிங்க் புகையிலையில் உள்ள தொற்றுதல் காரணியை “தொற்றுத்தன்மை வாய்ந்த உயிருள்ள திரவம்” என்று அழைத்தார் ?

 1898

  1. எந்த ஆண்டு F.W. ட்வார்ட் பாக்டீரியங்களில் வைரஸ் தொற்றுதலைக் கண்டறிந்தார் ?

 1915

  1. எந்த ஆண்டு டி.ஹெரில்லி பாக்டீரியாஃபாஜ் என்னும் சொல்லை பயன்படுத்தினார் ?

 1917

  1. எந்த ஆண்டு லுக்மான்டக்னர் மற்றும் இராபர்ட் காலோ எச்ஐவி வைரஸை கண்டுபிடித்தனர்?

 1984

  1. வைரஸ்கள் பொதுவாக எவ்வளவு விட்டமுடையவை ?

 20nm முதல் 300nm வரை

  1. பாக்டீரியாஃபஆஜ்கள் எவ்வளவு அளவுடையவை?

10nm முதல் 100nm வரை

  1. TMV வைரஸின் அளவு என்ன?

300 x 20nm

  1. வடிவம் சீரமைப்பின் அடிப்படையில் வைரஸ்கள் பொதுவாக எத்தனை பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன?

 3: கனசதுர வடிவம், சுருள் வடிவம், சிக்கலான அல்லது இயல்பற்ற வடிவம்

  1. அடினோ வைரஸ் ,ஹெர்பஸ் வைரஸ் ஆகியவை எதற்கு எடுத்துக்காட்டு?

கன சதுர வடிவம்

  1. இன்புளூயன்சா வைரஸ்,TMV வைரஸ் எதற்கு எடுத்துக்காட்டு?

சுருள் வடிவம்

  1. பாக்டீரியஃபாஜ்,வாக்ஸினியா வைரஸ் எதற்கு எடுத்துகாட்டு ?

சிக்கலான அல்லது இயல்பற்ற வடிவம்

  1. dsDNA கொண்ட வைரஸ்களுக்கு எடுத்துக்காட்டு எது?

அடினோ வைரஸ்கள்

  1. வெளிப்பாடடையும் ssDNAகொண்ட வைரஸ்களுக்கு எடுத்துக்காட்டு?

பார்வோ வைரஸ்கள்

  1. dsRNA கொண்ட வைரஸ்களுக்கு எடுத்துக்காட்டு ?

 ரியோ வைரஸ்கள்

  1. வெளிப்பாடடையும் ssRNA கொண்ட வைரஸ்களுக்கு எடுத்துக்காட்டு?

 டோகா வைரஸ்கள்

  1. வெளிப்பாடடையாத ssRNA கொண்ட வைரஸ்களுக்கு எடுத்துக்காட்டு?

 ராப்டோ வைரஸ்கள்

  1. வெளிப்பாடடையும் ssRNA-RT: கொண்ட வைரஸ்கள் வாழ்க்கை சுழற்சியில் DNAவுடன் பெருக்கம் அடைபவை?

ரெட்ரோ வைரஸ்கள்

  1. dsDNA-RT  கொண்ட வைரஸ்கள் ,வாழ்க்கைச் சுழற்சியில் RNAவுடன் பெருக்கம் அடைபவை? 

ஹெபாட்னா வைரஸ்கள்

  1. வைரஸ் பற்றி டேவிட் பால்டிமோர் வெளியிட்ட வகைப்பாடு எந்த ஆண்டு வெளியிடப்பட்டது ?

1971

  1. டேவிட் பால்டிமோர் வைரஸ் வகைப்பாட்டில் எத்தனை வகுப்புகளாக வைரஸ்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன?

 7 வகுப்புகள்

  1. வைரஸ்களில் காணக்கூடிய உட்கரு அமிலங்கள் பொதுவாக என்ன வடிவில் இருக்கும் ?

நீண்ட இழை போன்று வட்டமாக இருக்கும்

  1. எந்த வைரஸ்களில் உட்கரு அமிலம் சிறு சிறு துண்டுகளாக காணப்படுகிறது?

காயக்கழலை வைரஸ்கள் மற்றும் இன்ஃப்ளூயன்சா வைரஸ்

  1. DNAவைக் கொண்டுள்ள வைரஸ்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

டீஆக்ஸிவைரஸ்கள்

  1. RNAவைக் கொண்டுள்ள வைரஸ்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

 ரிபோவைரஸ்கள்

  1. பெரும்பாலான விலங்கு,பாக்டீரிய வைரஸ்கள் என்ன வைரஸ்களாகும்?

DNA வைரஸ்கள்

  1. HIV விலங்கு வைரஸாக இருப்பினும் எதைனைக் கொண்டுள்ளது?

RNA

  1. தாவர வைரஸ்கள் பொதுவாக எதனை கொண்டுள்ளன?

 RNA

  1. காலிஃப்ளவர் தேமல் வைரஸ்கள் எதனை பெற்றுள்ளன?

DNA

  1. உட்கரு அமிலங்களின் அடிப்படையில் வைரஸ்கள் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது ?

நான்கு வகைகள்: ssDNA வைரஸ்கள்,dsDNA வைரஸ்கள்,ssRNA வைரஸ்கள், மற்றும் dsRNA வைரஸ்கள்

  1. புகையிலை தேமல் வைரஸ் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது ?

 1892

  1. புகையிலை தேமல் வைரஸை கண்டுபிடித்தவர் யார் ?

டிமிட்ரி ஐவான்ஸ்கி

  1. புகையிலை தேமல் வைரஸ் எந்த கடத்திகள் மூலம் பரவுகிறது?

செடிப்பேன் ,வெட்டுக்கிளி போன்ற கடத்திகள் வழியாக

  1. முதன்முதலாக கண்ணுக்குப் புலப்படக்கூடிய புகையிலை தேமல் வைரஸ் நோயின் முக்கிய அறிகுறியாக கூறப்படுவது?

பச்சையசோகை

  1. புகையிலை தேமல் நோயின் அறிகுறிகள் என்னென்ன?

 மஞ்சள் மற்றும் பசுமை நிற புள்ளிகள் இலைகளில் காணப்படுவது

  1. புகையிலை தேமல் வைரஸ்கள் என்ன வடிவமைப்பைப் பெற்றுள்ளன?

கோல் வடிவமைப்பு

  1. புகையிலை தேமல் வைரஸின் அளவு என்ன ?

 280-150µm

  1. புகையிலை தேமல் வைரஸின் மூலக்கூறு எடை எவ்வளவு?

 39×10⁶ டால்டன்கள்

  1. எந்த வைரஸ் துகள் இரண்டு முக்கியப் பகுதிப்பொருட்களான கேப்சிட் என்ற புரத உரையையும் மையத்தில் உட்கரு அமிலத்தையும் கொண்டுள்ளது ?

 விரியான்

  1. புரத உறை என்ன புரதத் துணை அலகுகளால் ஆனது?

2130 அமைப்பில் ஒத்த கேப்சோமியார்கள் என்று அழைக்கப்படும் துணை அலகுகள்

  1. TMV வைரஸின் RNA எவ்வளவு நியூக்ளியோடைடுகளை கொண்டுள்ளது?

 6500

  1. பாக்டீரியாக்களை தாக்கி அழிக்கும் வைரஸ்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

பாக்டீரியஃபாஜ்கள்

  1. பாக்டீரியஃபாஜ்கள் என்பது எந்த மொழி சொல்?

 கிரேக்கம்

  1. பாக்டீரியஃபாஜ்கள் என்ற கிரேக்க சொல்லின் பொருள் என்ன?

 பாக்டீரிய உண்ணிகள்

  1. பாக்டீரியஃபாஜ்கள் என்பதில் ஃபாஜின் என்பது என்ன?

 உண்ணுவது

  1. ஃபாஜ்கள் எதில் அதிக அளவில் காணப்படுகின்றன?

மண், கழிவுநீர் ,பழங்கள், காய்கறிகள் ,பால் போன்றவற்றில்

  1. T4 ஃபாஜ்கள் என்ன வடிவம் கொண்டவை ?

தலைப்பிரட்டை வடிவம்

  1. T4 பாக்டீரியஃபாஜ்களின் அறுகோண வடிவம் கொண்ட தலைப் பகுதி எவ்வளவு ஒத்த புரதத்தால் ஆனது?

 2000

  1. T4 ஃபாஜ்கள் ஈரிழை டிஎன்ஏ மூலக்கூறு எவ்வளவு அளவுடையது?

 50µm

  1. ஃபாஜின் நீளத்தை விட அதன் DNA மூலக்கூறின் நீளம் எவ்வளவு அதிகமாகும்?

1000 மடங்கு

  1. எத்தனை வகையான வாழ்க்கை சுழற்சிகள் மூலம் ஃபாஜ்கள் பெருக்கமடைகின்றன?

சிதைவு (lytic)அல்லது வீரியமுள்ள(virulent) சுழற்சி மற்றும் உறக்க நிலை(lysogenic) அல்லது வீரியமற்ற சுழற்சி(Avirulent)

  1. பாக்டீரியாவினுள் டிஎன்ஏ துகள் தன்னிச்சையாக செலுத்தப்படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 ஊடுதொற்றல்

  1. ஊடுருவலுக்குப்பிறகு ஓம்புயிர் செல்லுக்கு வெளியே காணப்படும் ஃபாஜின் வெற்று புரத உறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

வெறும் கூடு (ghost)

  1. ஃபாஜ்களின் பகுதிகள் ஒன்று சேர்ந்து முழு வைரஸ் துகள்களாக மாறும் நிகழ்ச்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

முதிர்ச்சியடைதல்

  1. தொற்றுதல் நடந்த 20 நிமிடங்களுக்கு பிறகு சுமார் எத்தனை புதிய ஃபாஜ்கள் தொகுக்கப்படுகின்றன?

 300

  1. ஓம்புயிரி செல்லின் குரோமோசோமுடன் ஒருங்கிணைக்கப்பட்ட ஃபாஜ் DNA எவ்வாறு அழைக்கப்படுகிறது?

ஃபாஜ் முன்னோடி (Prophage)

  1. தொற்றுத்தன்மை வாய்ந்த ஓம்புயிர் செல்லுக்கு வெளியே பெருக்கடைய முடியாத ,ஒரு முழுமையான வைரஸ்துகள் எது ?

 விரியான்

  1. விராய்டுகள் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?

 1971

  1. விராய்டுகளை கண்டுபிடித்தவர் யார்?

 T.O டெய்னர்

  1. உறையற்ற, வட்டவடிவமான ஓரிழை RNAக்கள் எது?

 விராய்டுகள்

  1. விராய்டுகள் எவற்றில் நோயை உண்டாக்குகின்றன?

சிட்ரஸ் எக்ஸோகார்ட்டிஸ், உருளைக்கிழங்கில் கதிர்வடிவகிழங்குநோய் போன்ற தாவர நோய்களை உண்டாக்குகின்றன

  1. விருசாய்டுகள் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?

 1981

  1. விருசாய்டுகள் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?

 J.W ராண்டல்ஸ் மற்றும் அவரது சக ஆய்வாளர்கள்

  1. பிரியான்கள் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது ?

1982

  1. பிரியான்கள் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?

ஸ்டான்லி R. புரூச்னர்

  1. பிரியான்கள் எந்த நோய்க்கு காரணமாக அமைகின்றன?

மனிதன் மற்றும் பல விலங்குகளின் மைய நரம்பு மண்டலத்தை பாதிக்கும் பல்வேறு நோய்கள்

  1. பிரியான்கள் ஏற்படுத்தும் நோய்கள் என்னென்ன?

 க்ரூயிட்ஸ்பெல்ட்-ஜேக்கப் நோய் (CJD), மாடுகளின் பித்தநோய் என்று பொதுவாக அழைக்கப்படும் போவைன் ஸ்பாஞ்சிபார்ம் என்சிஃபலோபதி, ஆடுகளின் ஸ்கிராபி நோய்

  1. நீலப் பசும் பாசிகளை தாக்கக்கூடிய வைரஸ்கள் முதன்முதலில் எப்போது கண்டறியப்பட்டது?

 1963

  1. நீலப் பசும் பாசிகளை தாக்கக்கூடிய வைரஸ்களை முதன்முதலில் கண்டறிந்து அவைகளை சயனோஃபாஜ்கள் என்று அழைத்தவர்கள் யார்?

சாபர்மேன் மற்றும் மோரிஸ்

  1. வளர்ப்பு காளான்களில் நுனி அடி இழப்பு நோய் (die back disease) உண்டாக்கக்கூடிய வைரஸ்கள் எப்போது கண்டறியப்பட்டது?

1962

  1. வளர்ப்பு காளான்களில் நுனி அடி இழப்பு நோய் (die back disease) உண்டாக்கக்கூடிய வைரஸ்கள் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?

ஹோலிங்க்ஸ்

  1. பூஞ்சைகளைத் தாக்கக்கூடிய வைரஸ்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

மைக்கோவைரஸ்கள் அல்லது மைக்கோஃபாஜ்கள்

  1. தாவரவியலின் தந்தை யார்?

தியோஃபிராஸ்டஸ்

  1. வைரஸ்களால் ஏற்படும் தாவர நோய்கள் என்னென்ன ?

 புகையிலை தேமல் நோய் ,காலிஃப்ளவர் தேமல் நோய் ,கரும்பு தேமல் நோய் ,உருளைக்கிழங்கின் இலைச்சுருள் நோய் ,வாழையின் உச்சிக்கொத்து நோய், பப்பாளியின் இலைச்சுருள் நோய் ,வெண்டையின் நரம்பு வெளிர்தல் நோய், நெல்லின் துங்ரோ நோய் ,வெள்ளரியின் தேமல் நோய் ,தக்காளியின் தேமல் நோய்

  1. வைரஸ்களால் விலங்குகளில் ஏற்படும் நோய்கள் என்னென்ன ?

கால்நடைகளில் கோமாரி நோய் ,வெறிநாய்க்கடி ,குதிரைகளின் மூளை தண்டுவட அழற்சி நோய்

  1. வைரஸ்களினால் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் என்னென்ன?

சளி, ஹெபடைடிஸ் B, புற்றுநோய், சார்ஸ் (அதிதீவிர சுவாச குறைபாடு), எய்ட்ஸ் (பெறப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி குறை நோய்), வெறிநாய்க்கடி ,பொன்னுக்கு வீங்கி இளம்பிள்ளைவாதம், சிக்குன்குன்யா, பெரியம்மை ,சின்னம்மை, தட்டம்மை

  1. துலிப் மலர்களின் இதழ்களில் காணக்கூடிய நீண்ட வரிகள் அனைத்தும் எதனால் உண்டாகிறது?
SEE ALSO  11TH BOTANY STUDY NOTES |ஒளிச்சேர்க்கை| TNPSC GROUP EXAMS

துலிப் மலர் விரியும் வைரஸ்களால்

  1. எந்த குடும்பத்தைச் சார்ந்த வைரஸ்கள் வணிகரீதியாக பூச்சிக்கொல்லிகளாக பயன்படுத்தப்படுகின்றன?

பேக்குலோவிரிடே குழுமம்

  1. என்ன வைரஸ்கள் திறன்மிக்க பூச்சிக்கொல்லிகளாக பயன்படுத்தப்படுகிறது?

சைட்டோபிளாச பாலிஹெட்ரோஸிஸ் கிரானுலோ வைரஸ்கள்,எண்டமோபாக்ஸ் வைரஸ்கள்

  1. தாவரவியலின் தந்தை யார்?

தியோஃபிராஸ்டஸ்

  1. தியோஃபிராஸ்டஸ் தாவரங்களை என்ன அடிப்படையில் வகைப்படுத்தினார் ?

புற அமைப்பு பண்புகளின் அடிப்படையில் மரங்கள் ,புதர் செடிகள் ,செடிகள் என வகைப்படுத்தினார்.

  1. இரத்த நிறத்தின் அடிப்படையில் விலங்கினங்களை சிவப்பு நிற ரத்த உயிரிகள் சிவப்பு நிற மற்ற உயிரிகள் என இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்தவர் யார்?

அரிஸ்டாட்டில்

  1. உயிரின உலகத்தை அவற்றின் புறப் பண்புகளின் அடிப்படையில் தாவரங்கள் விலங்குகள் என இரு குழுக்களாக பிரித்தவர் யார்?

கார்ல் லின்னேயஸ்

  1. இரண்டு பெரும் பிரிவு வகைப்பாட்டு முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

கார்ல் லின்னேயஸ்(1735)

  1. கார்ல் லின்னேயஸ் அறிமுகப்படுத்திய இரண்டு பெரும் பிரிவு வகைப்பாட்டு முறை எது?

பிளண்டே,அனிமேலியா

  1. மூன்று பெரும் பிரிவு வகைப்பாட்டு முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

 எர்னெஸ்ட் ஹெக்கேல்(1866)

  1. எர்னெஸ்ட் ஹெக்கேல் அறிமுகப்படுத்திய மூன்று பெரும் பிரிவு வகைப்பாட்டு முறை எது?

புரோட்டிஸ்டா,பிளண்டே,அனிமேலியா

  1. நான்கீ பெரும் பிரிவு வகைப்பாட்டு முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

கோப்லேண்ட்(1956)

  1. கோப்லேண்ட் அறிமுகப்படுத்திய இரண்டு பெரும் பிரிவு வகைப்பாட்டு முறை எது?

மொனிரா,புரோட்டிஸ்டா,பிளண்டே,அனிமேலியா

  1. ஐந்து பெரும் பிரிவு வகைப்பாட்டு முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

R.H.விட்டாக்கெர்(1969)

  1. H.விட்டாக்கெர் அறிமுகப்படுத்திய இரண்டு பெரும் பிரிவு வகைப்பாட்டு முறை எது?

மொனிரா,புரோட்டிஸ்டா,பூஞ்சைகள்,,பிளண்டே,அனிமேலியா

  1. யார் உயிரினங்களில் மூன்று முக்கிய உயிர்புலங்களை அறிமுகப்படுத்தினர்?

காரல் வோஸ் மற்றும் அவரது சக ஆய்வாளர்கள் (1990)

  1. காரல் வோஸ் அறிமுகப்படுத்திய உயிரினங்களின் மூன்று முக்கிய உயிர்புலங்கள் என்னென்ன?

பாக்டீரியா,ஆர்க்கியே,யுகேரியா

  1. உயிரை உலகத்திற்கு திருத்தப்பட்ட ஆறு பெரும் பிரிவு வகைப்பாட்டினை வெளியிட்டவர் யார் ?

தாமஸ் கேவாலியர்-ஸ்மித் 1998

  1. தாமஸ் கேவாலியர்-ஸ்மித் மொனிரா என்ற பெரும் பிரிவுஐ எவ்வாறு பிரித்தார்?

இரண்டு: ஆர்க்கிபாக்டீரியங்கள்,யுபாக்டீரியங்கள்

  1. ஏழு பெரும் பிரிவு வகைப்பாட்டினை வெளியிட்டவர்கள் யார்?

 ருகிரோ மற்றும் சக ஆய்வாளர்கள் 2015

  1. எந்தப் பெரும் பிரிவில் பசுங்கணிகத்தின் பச்சையம் a மற்றும் c கொண்ட பாசிகளும் மற்றும் இவையுடன் நெருக்கமான தொடர்புடைய பலவகை நிறமற்ற உயிரிகளும் வைக்கப்பட்டுள்ளன?

 குரோமிஸ்டா

  1. டயாட்டம்கள்,பழுப்பு பசிகள்,கிரிப்டோமோனாட்கள்,ஊமைசீட்ஸ் போன்றவை எந்த பிரிவின்கீழ் வைக்கப்பட்டுள்ளன?

குரோமிஸ்டா

  1. சிவப்பு அலை என்பது எதனால் ஏற்படும் விளைவாகும்?

 டைனோபிளாஜெல் லேட்டுகளான ஜிம்னோடினியம் பிரெவி,கோனியலாக்ஸ் டாமரின்ஸிஸ் போன்ற நச்சு பாசிப்பொலிவினால்(Alga boom)

  1. பால் தயிராக மாறுவதற்கு காரணமான பாக்டீரியா எது?

லாக்டோபேசில்லஸ் லாக்டிஸ்

  1. தயிருக்கு புளிப்பு தன்மையை தருவது எது?

லாக்டிக் அமிலம்

  1. டைஃபாய்டு காய்ச்சல் ஏற்பட காரணமாக இருப்பது எது ?

 சால்மோனெல்லா டைஃபி

  1. அண்மைக்கால பாக்டீரியயியலின் தோற்றுநராகக் கருதப்படுபவர் யார்?

ராபர்ட் ஹின்ரிக் ஹெர்மன்  கோக்

  1. ராபர்ட் ஹின்ரிக் ஹெர்மன் கோக் எந்த நாட்டைச் சார்ந்தவர்?

ஜெர்மனி

  1. ராபர்ட் ஹின்ரிக் ஹெர்மன் கோக் எந்த நோய்களுக்கான நோய்க் காரணிகளை கண்டுபிடித்தார் ?

கோமாரி நோய் ,காலரா ,காசநோய்

  1. ராபர்ட் ஹின்ரிக் ஹெர்மன் கோக் எந்த ஆண்டு மருத்துவம் மற்றும் வாழ்வியல் பிரிவிற்கான நோபல் பரிசு பெற்றார்?

 1905

  1. யார் பாக்டீரியம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தினார்?

 C.G.எஹ்ரன்பெர்க் 1829

  1. எந்த ஆண்டு கிறிஸ்டியன் கிராம் கிராம் சாயமேற்றும் முறையை அறிமுகப்படுத்தினார்?

1884

  1. எந்த ஆண்டு டேவிட் H. பெர்ஜி ,”பெர்ஜி கையேட்டின்” முதல் பதிப்பை வெளியிட்டார்?

1923

  1. எந்த ஆண்டு பிரட்ரிக் கிரிஃபித் பாக்டீரியத்தின் மரபணு மாற்றத்தை கண்டறிந்தார்?

1928

  1. எந்த ஆண்டு ஜோஸ்வா லெடர்பர்க் பிளாஸ்மிட்டை கண்டறிந்தார்?

 1952

  1. பாக்டீரியங்கள் பற்றி அறியும் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

பாக்டீரியியல்

  1. யார் முதன் முதலில் பாக்டீரியாக்களை நுண்ணோக்கியில் கண்டறிந்தார் ?

ஆண்டன் வான் லீவன் ஹுக் ,1676

  1. ஆண்டன் வான் லீவன் ஹுக் பாக்டீரியங்களை நுண்ணோக்கியில் கண்டு அதனை எவ்வாறு அழைத்தார்?

அனிமல்கியூஸ் (animalcules)

  1. பாக்டீரியாக்களின் செல்சுவர் எதனால் ஆனது ?

பாலிசாக்கரைடுகள், புரதங்களால் ஆனது

  1. சார்பூட்ட முறை பாக்டீரியங்களுக்கு எடுத்துக்காட்டு எது?

விப்ரியோ காலரே

  1. தற்சார்பு ஊட்ட முறையைக் கொண்ட பாக்டீரியங்களுக்கு எடுத்துக்காட்டு எது?

குரோமேஷியம்

  1. குடல் மற்றும் இரைப்பை புண்கள் எந்த பாக்டீரியாவால் ஏற்படுகிறது ?

ஹெலிகோபேக்டர் பைலோரி எனும் கிராமம் எதிர் பாக்டீரியம்

  1. எந்த பாக்டீரியத்திலிருந்து பெறப்படும் Bt நச்சு பயிர்களில் பூச்சி எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க உதவுகிறது?

பேசில்லஸ் துரின்சியன்சிஸ்

  1. பாக்டீரியங்கள் என்ன முறைகளில் உடல இனப்பெருக்கம் செய்கின்றன?

இருப்பிளவுறுதல்(Binary fission), அகவித்துக்கள் உருவாதல்(endospores)போன்ற முறைகள்

  1. பாக்டீரிய செல் எத்தனை பகுதிகளைக் கொண்டுள்ளது ?

மூன்று பகுதிகள்: வெளியுறை அல்லது கிளைக்காலிசிஸ், செல் சுவர் மற்றும் சைட்டோபிளாசம்

  1. செல் சுவரோடு மிக நெருக்கமாக அமைந்த கிளைக்கோகேலிக்ஸினாலான அடுக்கு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 வெளியுறை

  1. பாக்டீரியங்களின் செல்சுவர் எதனால் ஆனது?

 பெப்டிடோகிளைக்கான் அல்லது மியூகோபெப்டைட்களால் ஆனது

  1. பாக்டீரியங்களின் செல் சுவர்களில் எது மிகுந்து காணப்படுகிறது?

 போரின் பாலிபெப்டைட்கள்

  1. போரின் பாலிபெப்டைட்கள் என்ன உதவி புரிகின்றன?

கரை பொருட்கள் பரவி செல்வதற்கு

  1. பிளாஸ்மா சவ்வு எதனால் ஆனது?

லிப்போ புரதம்

  1. சிறிய மூலக்கூறுகள் ,அயனிகள் உட்செல்வதையும் ,வெளியேறுவதையும் கட்டுப்படுத்துவது எது?

 பிளாஸ்மா சவ்வு

  1. சுவாசித்தல் நிகழ்ச்சியில் வளர்சிதை பொருளின் ஆக்ஸிஜனேற்றத்தில் பங்குபெறும் நொதிகளும் ஒளிச் சேர்க்கையில் ஈடுபடும் நொதிகளும் எங்கு அமைந்துள்ளன?

பிளாஸ்மா சவ்வு

  1. சைட்டோபாசத்தில் எவை காணப்படுகின்றன?

ரிபோசோம்களும் இதர செல் உள்ளடக்க பொருட்களும்

  1. சைட்டோபாசத்தில் உட்பொருட்களாக காணப்படுபவை என்னென்ன?

கிளைகோஜன், பாலி-β-ஹைட்ராக்ஸிபியுட்ரேட் துகள்கள், கந்தக துகள்கள், வளிம குமிழ்கள்

  1. பாக்டீரிய குரோமோசோம் வட்ட வடிவ,இறுக்கமாக சுருண்ட  DNA மூலக்கூறு ஆகும். இது மெய்யுட்கரு உயிரியில் உள்ளது போல சவ்வினால் சூழப்பட்டு காணப்படுவதில்லை. இந்த மரபியல் பொருள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

உட்கரு ஒத்த அமைப்பு (Nucleoid) அல்லது மரபணுதாங்கி(Genophore)

  1. DNA என்ன புரதத்துடன் இணைந்து காணப்படுவதில்லை?

ஹிஸ்டோன் புரதம்

  1. பாக்டீரியங்களில் காணக்கூடிய ஈரிழைகளாலான வட்டவடிவ ,சுயமாக பெருக்கமடையும் தன்மை கொண்ட கூடுதல் குரோமோசோம்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

பிளாஸ்மிட்கள்

  1. பிளாஸ்மிட்கள் எதை உற்பத்தி செய்கின்றன?

பாக்டீரியத்தின் குரோமோசோமில் காணப்படாத பாக்டீரியோசின்(Bacteriocin) மற்றும் நச்சுக்களையும்

  1. பாக்டீரியங்களில் காணப்படும் மொத்த DNAவில் பிளாஸ்மிட்கள் எத்தனை சதவீதம் வரை உள்ளன?

 0.5 சதவீதம் முதல் 5.0 சதவீதம் வரை

  1. பிளாஸ்மிட்கள் அவற்றின் செயல்பாடுகளின் அடிப்படையில் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?

F(வளத்தன்மை) காரணி,R (எதிர்ப்புதன்மை) பிளாஸ்மிட்கள்,col(கோலிசின்) பிளாஸ்மிட்கள்,Ri(வேரினைத் தூண்டும்) பிளாஸ்மிட்கள்,Ti (கழலையைத் தூண்டும் பிளாஸ்மிட்கள்)

  1. புரத சேர்க்கை நடைபெறும் மையங்கள் எது ?

 ரிபோசோம்கள்

  1. ஒரு செல்லில் ரிபோசோம் எண்ணிக்கை எவ்வளவு வரை வேறுபடுகிறது?

 10,000 முதல் 15,000வரை

  1. ரிபோசோம்கள் என்ன வகை சார்ந்தது?

70S

  1. 70S ரிபோசோம்கள் என்ன துணை அலகுகளை பெற்றுள்ளன ?

 இரண்டு : 50S &30S

  1. ஏவல்RNA(mRNA) இழையின் மீது பல ரிபோசோம்கள் ஒன்று சேர்ந்து காணப்படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

பாலிரிபோசோம்கள் அல்லது பாலிசோம்கள்

  1. இடப்பெயர்ச்சி அடையும் சில பாக்டீரியங்களின் செல் சுவரிலிருந்து தோன்றுகின்ற வேறுபட்ட நீளமுடைய எண்ணற்ற மெல்லிய மயிரிழை போன்ற அமைப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

கசையிழைகள்

  1. கசையிழைகள் எவ்வளவு நீளமுடையவை?

10 µm (20 µm-30µm விட்டம்)

  1. கிராம் எதிர் பாக்டீரியங்களின் செல் சுவரின் மேற்புறத்தில் மயிரிழை போன்ற நீட்சிகள் காணப்படுகின்றன இவை எவ்வாறு அழைக்கப்படும் ?

 நுண் சிலும்புகள் அல்லது ஃபிம்ரியே

  1. பாக்டீரியங்களை வேறுபடுத்தும் சாயமேற்றும் முறையை முதன் முதலில் உருவாக்கியவர் யார்?

கிறிஸ்டியன் கிராம், டென்மார்க் (1884)

  1. சாயமேற்றும் முறையில் பாக்டீரியங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது?

இரண்டு: கிராம் நேர் மற்றும் கிராம் எதிர் பாக்டீரியங்கள்

  1. எந்த வகை பாக்டீரியங்கள் படிக ஊதா சாயத்தை தமக்குள் தக்க வைத்துக்கொண்டு அடர் ஊதா நிறத்தில் தோன்றுகின்றன?

கிராம்நேர் பாக்டீரியங்கள்

  1. எந்த பாக்டீரியத்தினுள் 40 முதல் 50 மேக்னடைட் துகள்கள் சேர்ந்து சங்கிலிகளாக காணப்படுகின்றன?

அக்குவாஸ்பைரில்லம் மேக்னடோடேக்டிகம்

  1. அக்குவாஸ்பைரில்லம் மேக்னடோடேக்டிகம் பாக்டீரியத்தினுள் காணப்படும் மேக்னடைட் துகள்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?

மேக்னடோசோம்கள்

  1. பொதுவாக எந்த செல் சுவரில் குறிப்பிட்ட அளவு டெக்காயிக் அமிலம் மற்றும் டெக்யூரானிக் அமிலம் காணப்படுகின்றன?

கிராம் நேர் பாக்டீரியங்கள்

  1. பாக்டீரியங்களில் எத்தனை வகையான சுவாசித்தல் நிகழ்வுகள் காணப்படுகிறது?

இரண்டு: காற்று சுவாசித்தல் & காற்றுணா சுவாசித்தல்

  1. எந்த வகை பாக்டீரியங்கள் இறுதி எலக்ட்ரான் ஏற்பியாக ஆக்சிஜன் தேவைப்படுகிறது ?

காற்று சுவாசித்தல்

  1. ஸ்ட்ரெப்டோகாக்கஸ் எந்தவகை சுவாசித்தலுக்கு எடுத்துக்காட்டு?

காற்று சுவாசித்தல்

  1. சுவாச நிகழ்ச்சிக்கு கட்டாயம் ஆக்சிஜன் பயன்படுத்திக்கொள்ளும் பாக்டீரியங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன ?

நிலைமாறா காற்று சுவாசிகள்

  1. மைக்ரோகாக்கஸ் எந்தவகை சுவாசித்தலுக்கு எடுத்துக்காட்டு? 

 நிலைமாறா காற்று சுவாசிகள்

  1. எந்த வகை பாக்டீரியங்களின் வளர்ச்சிக்கும் வளர்சிதை மாற்றத்திற்கும் ஆக்ஸிஜன் தேவைப்படுவதில்லை?

 காற்றுணா சுவாசித்தல்

  1. எந்த வகை பாக்டீரியங்களின் பாக்டீரியங்கள் நொதித்தல் வினைகளின் மூலம் ஆற்றலைப் பெறுகின்றன?

காற்றுணா சுவாசித்தல்

  1. கிளாஸ்ட்ரிடியும் எந்தவகை சுவாசித்தலுக்கு எடுத்துக்காட்டு?

காற்றுணா சுவாசித்தல்

  1. எந்த வகை பாக்டீரியங்கள் ஆக்சிஜனை இறுதி எலக்ட்ரான் ஏற்பியாகப் பயன்படுத்தி ஆக்ஸிஜனேற்ற முறையிலோ காற்றுணாமல் நடைபெறும் நொதித்தல் வினையின் மூலமாகவோ ஆற்றலைப் பெற்று வளர்கின்றன ?

நிலைமாறும் காற்றுணா உயிரிகள்

  1. ஈஸ்டிரிச்சியா கோலை,சால்மோனெல்லா சிற்றினங்கள் எந்தவகை பாக்டிரியங்களுக்கு எடுத்துக்காட்டு?

 நிலைமாறும் காற்றுணா உயிரிகள்

  1. கார்பன் டை ஆக்சைடை பயன்படுத்தி வளரும் பாக்டீரியங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

கேப்னோஃபிலிக் பாக்டீரியங்கள்

  1. கேம்பைலோபாக்டர் பாக்டீரியங்கள் எதற்கு எடுத்துக்காட்டு ?

கேப்னோஃபிலிக் பாக்டீரியங்கள்

  1. ஊட்ட முறையின் அடிப்படையில் பாக்டீரியங்கள் எத்தனை வகைப்படும்?

இரண்டு : தற்சார்பு ஊட்ட முறை பாக்டீரியங்கள் & சார்பூட்ட முறை பாக்டீரியங்கள்

  1. தங்களுக்கு தேவையான உணவைத் தாமே தயாரித்துக் கொள்ளும் பாக்டீரியங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

தற்சார்பூட்ட முறை பாக்டீரியங்கள்(photoautotrophic bacteria)

  1. தற்சார்பூட்ட முறை பாக்டீரியங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன?

கனிம  ஒளிச்சார்பு ஊட்ட பாக்டீரியங்கள்(photolithotrophic bacteria) & கரிம ஒளிச்சார்பு ஊட்ட பாக்டீரியங்கள்(photoorganotrophic bacteria)

  1. எந்த வகை பாக்டீரியங்கள் சூரிய ஒளி ஆற்றலை ஆதாரமாகக் கொண்டு உணவை உற்பத்தி செய்கின்றன?

கனிம  ஒளிச்சார்பு ஊட்ட பாக்டீரியங்கள்

  1. எந்த வகையில் கனிமப் பொருட்கள் ஹைட்ரஜன் கொடுநர்களாக செயல்படுகின்றன?

கனிம  ஒளிச்சார்பு ஊட்ட பாக்டீரியங்கள்

  1. எந்த வகையில் ஹைட்ரஜன் சல்பைடு ஹைட்ரஜன் கொடுநர்களாக செயல்படுகின்றன?

பசும் கந்தக பாக்டீரியங்கள்

  1. பாக்டீரியவிரிடின் (bacterioviridin) எனும் நிறமி எந்த வகையில் காணப்படுகிறது?

பசும் கந்தக பாக்டீரியங்கள்

  1. பசும் கந்தக பாக்டீரியங்களுக்கு எடுத்துக்காட்டு எது?

 குளோரேபியம்

  1. எந்த வகை பாக்டீரியங்களில் தயோசல்ஃபேட் ஹைட்ரஜன் கொடுநர்களாக செயல்படுகிறது?

 இளஞ்சிவப்பு கந்தகக் பாக்டீரியங்கள்

  1. இளஞ்சிவப்பு கந்தகக் பாக்டீரியங்களில் என்ன நிறமி காணப்படும்?

பாக்டீரியகுளோரோஃபில் (மேலும் பச்சைய நிறமிகளை கொண்ட குளோரோசோம்களும் காணப்படுகின்றன)

  1. குரோமேஷியம் எதற்கு எடுத்துக்காட்டு?

இளஞ்சிவப்பு கந்தக பாக்டீரியங்கள்

  1. எந்தப் பிரிவைச் சார்ந்த பாக்டீரியங்கள் கரிம அமிலம் அல்லது ஆல்கஹாலை ஹைட்ரஜன் கொடுநர்களாக பயன்படுத்துகின்றன?

 ஒளிச் சார்பு ஊட்ட பாக்டீரியங்கள்

  1. ஒளிச் சார்பு ஊட்ட பாக்டீரியங்களுக்கு எடுத்துக்காட்டு எது?

ரோடோஸ்பைரில்லம்

  1. ஒளி ஆற்றலை பயன்படுத்த முடியாமல் கனிம அல்லது கரிம பொருட்களிலிருந்து தமக்கு தேவையான ஆற்றலைத் தரும் பாக்டீரியங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
SEE ALSO  TNPSC APTITUDE PYQ TEST 20

 வேதி தற்சார்பு பாக்டீரியங்கள்

  1. வேதி தற்சார்பு பாக்டீரியங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன?

 கனிம வேதி தற்சார்பு பாக்டீரியங்கள் & கரிம வேதிச்சார்பு ஊட்ட பாக்டீரியங்கள்

  1. எவற்றில் கனிமப் பொருட்கள் ஆக்சிஜனேற்றம் அடைந்து ஆற்றலை வெளிப்படுத்துகின்றன?

கனிம வேதிச்சார்பு ஊட்ட பாக்டீரியங்கள் (chemolithotrophic bacteria)

  1. தயோபேசில்லஸ் தயோ ஆக்சிடன்ஸ் என்ன வகை பாக்டீரியா?

கந்தக பாக்டீரியங்கள்

  1. ஃபெர்ரோபேசில்லஸ் ஃபெர்ரோஆக்சிடன்ஸ் என்ன வகை பாக்டீரியா?

இரும்பு பாக்டீரியங்கள்

  1. ஹைட்ரோஜீனாமோனாஸ் என்ன வகை பாக்டீரியா?

 ஹைட்ரஜன் பாக்டீரியாக்கள்

  1. நைட்ரஜனாக்க பாக்டீரியங்கள் என்ன வகை பாக்டீரியா? நைட்ரோசோமோனாஸ்,நைட்ரோபாக்டர்
  2. எந்த வகையில் கரிம கூட்டுப்பொருட்கள் ஆக்சிஜனேற்றம் அடைந்து ஆற்றலை வெளிப்படுத்துகின்றன?

கரிம வேதிச்சார்பு ஊட்ட பாக்டீரியங்கள் (Chemoorganotrophic bacteria)

  1. மெத்தனோகாக்கஸ் என்பது என்ன?

மீத்தேன் பாக்டீரியங்கள்

  1. அசிட்டோபாக்டர் என்பது என்ன?

அசிட்டிக் அமில பாக்டீரியங்கள்

  1. லாக்டோபேசில்லஸ் என்பது என்ன?

லாக்டிக் அமில பாக்டீரியங்கள்

  1. எந்த வகை பாக்டீரியங்கள் ஒட்டுண்ணிகளாகவும் சாறுண்ணிகளாகவும், ஒருங்குயிரிகளாகவும் வாழ்கின்றன?

சார்பூட்ட முறைபாக்டீரியங்கள் (Heterotrophic bacteria)

  1. பாக்டீரியங்களில் பாலிலா இனப்பெருக்கம் என்ன முறைகளில் நடைபெறுகிறது?

 இருபிளவுறுதல்,கொனிடியங்கள் தோற்றுவித்தல், அகவித்து உருவாதல்

  1. பொதுவாக அனைத்து பாக்டீரியங்களும் என்ன வழியில் பாலிலா இனப்பெருக்கம் செய்கின்றன?

இருபிளவுறுதல்

  1. என்ன பாக்டீரியங்கள் அகவித்துக்கள் தோன்றுகின்றன?

பேசில்லஸ் மெகாதீரியம்,பேசில்லஸ் ஸ்பெரிகஸ்,கிளாஸ்ட்டிரிடியம் டெட்டானி போன்றவற்றில்

  1. பாக்டீரியங்களின் மரபணு மறுகூட்டிணைவு (gene recombination) என்ன எத்தனை முறைகளில் நடைபெறுகிறது?

இணைவு (Conjugation),மரபணுமாற்றம்(transformation), மரபணு ஊடுகடத்தல்(transduction)

  1. யார் முதன் முதலில் பாக்டீரியங்களில் நடைபெறும் இணைவு முறையின் செயல்பாட்டை முதன்முதலில் விளக்கினர்?

 J.லெடர்பர்க், எட்வர்டு L.பாட்டம் (1946)

  1. ஒரு பாக்டீரியத்திலிருந்து மற்றொரு பாக்டீரியத்திற்கு DNA இடமாற்றம் செய்யப்படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

 மரபணுமாற்றம்

  1. முதன்முதலில் மரபணு மாற்றத்தை விளக்கியவர் யார்?

பிரட்ரிக் கிரிஃபித் (1928)

  1. பிரட்ரிக் கிரிஃபித் என்ன பாக்டீரியாவை பயன்படுத்தி மரபணு மாற்றத்தை விளக்கினார் ?

டிப்ளோகாக்கஸ் நிமோனியே

  1. மரபணு ஊடுகடத்தல் முறையை முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார்?

 ஜிண்டர் மற்றும் லெடர்பர்க், 1952

  1. மரபணு ஊடுகடத்தல் முறையை ஜிண்டர் மற்றும் லெடர்பர்க் இருவரும் எந்த பாக்டீரியாவில் கண்டறிந்தனர்?

  சால்மோனெல்லா டைஃபிமியுரம்

  1. புரோபயாடிக்தயிர்(yoghurt), பற்பசை தயாரிக்க பயன்படும் பாக்டீரியம் எது?

லாக்டோபேசில்லஸ் பைஃபிடோபாக்டீரியம்

  1. மரபணு ஊடுகடத்தல் முறையில் எதன் மூலமாக டிஎன்ஏ இடமாற்றம் செய்யப்படுகிறது?

பாக்டீராயஃபாஜ்

  1. மரபணு ஊடுகடத்தல் எத்தனை வகைப்படும்?

இரண்டு : பொதுவான மரபணு ஊடுகடத்தல் & சிறப்புவாய்ந்த அல்லது வரையறுக்கப்பட்ட மரபனு ஊடுகடத்தல்

  1. எந்த முறையில் பாக்டீரிய DNAவின் எந்த ஒரு பகுதியும் ஃபாஜ்வழியாக கடத்தப்படுகிறது ?

பொதுவான மரபணு ஊடுகடத்தல்

  1. எந்த முறையில் பாக்டீரிய டிஎன்ஏவின் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் பாக்டீரியஃபாஜ் வழியாக கடத்தப்படுகிறது?

சிறப்பு வாய்ந்த மரபணு ஊடுகடத்தல்

  1. எந்த பாக்டீரியத்தால் (PHB) பாலி ஹைட்ராக்ஸி பியுட்டிரேட் எனும் நுண்ணுயிரி சார் நெகிழி பெறப்படுகிறது?

ராஸ்டோனியா

  1. தாவரம், விலங்கு போன்றவை இறந்த பின்பு அவைகளின் உடல்களில் இருக்கும் சிக்கலான புரதங்களை அமோனியாவாகவும் பின்பு அமோனியா உப்புகளாகவும் மாற்றும் செயல் முறைக்கு பெயர் என்ன?

அமோனியாவாக்கம்

  1. அமோனியாவாக்க செயல்முறைக்கு பயன்படும் பாக்டீரியம் எது?

பேசில்லஸ் ரமோசஸ்,பேசில்லஸ் மைக்காய்டஸ்

  1. அமோனியா உப்புகளை நைட்ரைட், நைட்ரேட்டாக மாற்றும் செயல் முறைக்கு பெயர் என்ன?

 நைட்ரஜனாக்கம்

  1. நைட்ரஜனாக்கம் செயல்முறைக்கு பயன்படும் பாக்டீரியம் எது?

நைட்ரோபாக்டர்,நைட்ரசோமோனாஸ்

  1. வளிமண்டல நைட்ரஜனை கரிம நைட்ரஜனாக மாற்றும் செயல் முறைக்கு பெயர் என்ன?

நைட்ரஜனை நிலைப்படுத்தல்

  1. நைட்ரஜனை நிலைப்படுத்தல் செயல்முறைக்கு பயன்படும் பாக்டீரியம் எது?

அஸட்டோபாக்டர்,கிளாஸ்ட்டிரிடியம்,ரைசோபியம்

  1. சிறுநீர் குழாய் தொடர்பான நோய்கள்,எலும்புருக்கி நோய் ,மூளை சவ்வு பாதிப்பு ,நிமோனியா காய்ச்சல் போன்றவற்றை குணப்படுத்தும் உயிர்ப்பொருள் எது?

ஸ்ட்ரெப்டோமைசின்

  1. ஸ்ட்ரெப்டோமைசின் எதிர் உயிர்ப்பொருள் எதிலிருந்து பெறப்படுகிறது?

ஸ்ட்ரெப்டோமைசிஸ் கிரைசியஸ்

  1. கக்குவான் இருமல், கண் சம்பந்தப்பட்ட தொற்றுதல் நோய்களுக்கு மருந்தாக பயன்படும் உயிர் எதிர்ப்பொருள் எது?

 ஆரியோமைசின்

  1. ஆரியோமைசின் எதிலிருந்து பெறப்படுகிறது?

 ஸ்ட்ரெப்டோமைசிஸ் ஆரியோபேசியன்ஸ்

  1. டைபாய்டு காய்ச்சலை குணப்படுத்த பயன்படும் உயிரி எரிபொருள் எது?

குளோரோமைசிட்டின்

  1. குளோரோமைசிட்டின் எதிலிருந்து பெறப்படுகிறது?

 ஸ்ட்ரெப்டோமைசிஸ் வெனிசுலே

  1. மேக நோய்க்கு(Syphilis) மருந்தாக பயன்படும் உயிர் எதிர் பொருள் எது?

பேசிட்ராசின்

  1. பேசிட்ராசின் எதிலிருந்து பெறப்படுகிறது?

பேசில்லஸ் லைக்கனிபார்மிஸ்

  1. சில வகை பாக்டீரிய நோய்களை குணப்படுத்தும் உயிர் எதிர்ப்பொருள் எது?

பாலிமிக்ஸின்

  1. பாலிமிக்ஸின் எதிலிருந்து பெறப்படுகிறது?

பேசில்லஸ் பாலிமிக்ஸா

  1. பாலில் உள்ள லாக்டோஸ் சர்க்கரையை லாக்டிக் அமிலமாக மற்றும் பாக்டீரியாக்கள் எது?

ஸ்ட்ரெப்டோகாக்கஸ் லாக்டிக்ஸ்,லாக்டோபேசில்லஸ் பல்கேரிகஸ்

  1. பாலை வெண்ணெய்யாக மாற்றும் பாக்டீரியாக்கள் எது?

 ஸ்ட்ரெப்டோகாக்கஸ் லாக்டிஸ்,லியுக்கோனாஸ்டாக் சிட்ரோவோரம்

  1. பாலை பாலாடைக்கட்டியாக மாற்றும் பாக்டீரியாக்கள் எது?

லாக்டோபேசில்லஸ் அசிட்டோஃபோபஸ்,லாக்டோபேசில்லஸ் லாக்டிஸ்

  1. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா எது ?

லாக்டோபேசில்லஸ் லாக்டிஸ்

  1. பாலை யோகார்ட் ஆக மாற்றும் பாக்டீரியா எது?

லாக்டோபேசில்லஸ் பல்கேரிகஸ்

  1. வினிகர் (அசிட்டிக் அமிலம்) தயாரிக்க பயன்படும் பாக்டீரியா எது?

அசட்டோபேக்டர் அசிட்டை

  1. ஆல்கஹால் அசிட்டோன், பியூட்டைல் ஆல்கஹால், மீத்தைல் ஆல்கஹால் போன்றவற்றை தயாரிக்க பயன்படும் பாக்டீரியா எது?

கிளாஸ்ட்டிரிடியம் அசிட்டோபியூட்டிலிக்கம்

  1. நார்தரும் தாவரங்களிலிருந்து நார்களை பிரித்தெடுக்கப்படும் செயல் முறைக்கு என்ன பெயர்?

நார் பிரித்தல் (retting)

  1. நார்களை பிரித்தெடுக்க பயன்படும் பாக்டீரியா எது?

கிளாஸ்ட்டிரிடியம் டெர்ஷியம்

  1. மனிதனின் குடற்பகுதியில் உயிர்வாழ்ந்து அதிக அளவு வைட்டமின் K மற்றும் வைட்டமின் B கூட்டுப் பொருளை உற்பத்தி செய்யும் பாக்டீரியா எது?

 ஈஸ்டிரிச்சியா கோலை

  1. சர்க்கரை பொருளிலிருந்து நொதித்தல் மூலம் வைட்டமின் B2 பெறுவதற்கு உதவும் பாக்டீரியா எது?

கிளாஸ்ட்டிரிடியம் அசிட்டோபியட்டிலிக்கம்

  1. எந்த பாக்டீரியா நொதித்தல் மூலம் புகையிலை தேயிலை பதப்படுத்தப்பட்டு நறுமணமும் சுவையும் மேம்படுத்தப்படுகிறது?

 மைக்கோகோகஸ் கேண்டிசன்ஸ்,பேசில்லஸ் மெகாதீரியம்

  1. நெல்லில் எந்த பாக்டீரியத்தால் வெப்புநோய் ஏற்படுகிறது?

சாந்தமோனாஸ் ஒரைசே

  1. ஆப்பிள் தீவெப்பு நோய் ஏற்பட காரணமான நோய்க்காரணி எது?

எர்வினியா அமைலோவோரா

  1. கேரட் மென் அழுகல் நோயக்கான காரணி என்ன?

எர்வினியா கேரட்டோவோரா

  1. எலுமிச்சையில் ஏற்படும் திட்டு நோய்க்கான காரணி என்ன?

சாந்தோமோனாஸ் சிட்ரி

  1. பருத்தியில் காணப்படும் கோண இலைப்புள்ளி நோய்க்கான காரணி எது?

சாந்தோமோனாஸ் மால்வாஸியேரம்

  1. உருளைக்கிழங்கில் ஏற்படும் வளைய அழுகல் நோய்க்காரணி எது?

கிளாவிபாக்டர் மிட்சிகேனன்சிஸ் துணை சிற்றினம்,செபிடோனிக்கஸ்

  1. உருளைக்கிழங்கில் ஏற்படும் படைப்புண் நோய்க்காரணி எது?

ஸ்ட்ரெப்டோமைசிஸ் ஸ்கேபிஸ்

  1. காலரா எந்த பாக்டீரியாவால் ஏற்படுகிறது?

விப்ரியோ காலரே

  1. டைபாய்டு நோய் காரணி எது?

சால்மோனெல்லா டைஃபி

  1. எலும்புருக்கி நோய்க்கான நோய் காரணி எது?

மைக்கோ பாக்டீரியம் டியூபர்குளோசிஸ்

  1. தொழுநோய்க்கான நோய் காரணி எது?

மைக்கோபாக்டீரியம் லெப்ரே

  1. நிமோனியா நோய் எந்த பாக்டீரியாவால் ஏற்படுகிறது ?

 டிப்ளோடோகஸ் நிமோனியா

  1. பிளேக் நோய் (கொள்ளை நோய்) எதனால் ஏற்படுகிறது?

 எர்சினியா பெஸ்டிஸ்

  1. டிப்தீரியா(தொண்டை அடைப்பான்) நோய்க்கான நோய்காரணி எது?

கார்னிபாக்டீரியம் டிப்தீரியே

  1. டெட்டனஸ் (இசிப்புவலிப்பு நோய்) நோய்க் காரணி எது?

கிளாஸ்ட்டிரிடியம் டெட்னி

  1. உணவு நஞ்சாதல் நோய்க்கான காரணி ?

கிளாஸ்ட்டிரிடியம் போட்டுலினம்

  1. மேக நோய்க்கான நோய்காரணி எது?

டிரிப்போனிமா பேலிடம்

  1. மிகக்கடுமையான சூழ்நிலைகளாகிய வெப்ப ஊற்றுகள், அதிக உப்புத்தன்மை, குறைந்த pH போன்ற சூழ்நிலைகளில் வாழும் மிகப் பழமையான தொல்லுட்கரு உயிரிகள் எது?

ஆர்க்கிப்பாக்டீரியங்கள்

  1. ஆர்க்கிப்பாக்டீரியங்கள் எந்த ஊட்ட முறையை சார்ந்தவை ?

வேதிய தற்சார்பு ஊட்ட முறை

  1. ஆர்க்கிப்பாக்டீரியங்களுக்கு எடுத்துக்காட்டு எது? மெத்தனோபாக்டீரியம்,ஹாலோபாக்டீரியம்,தெர்மோபிளாஸ்மா
  2. எந்த மரபியல் மாற்றத்திற்கு உட்பட்ட மீயுயிரி(superbug) ஹைட்ரோ கார்பன்கள் சிதைவுறச்  செய்யும் திறன் வாய்ந்தவை?

சூடோமோனஸ் பூடிடா

  1. மெத்திலோஃபில்லஸ் ,மெத்திலோடிராபஸ் போன்ற பாக்டீரியங்கள் இருந்து பெறப்படும் ஒரு செல் புரதம் எது?

 புரூட்டின்

  1. தாவரங்களில் நுனிகழலை நோய் எந்த பாக்டீரியாவால் ஏற்படுகிறது ?

அக்ரோபாக்டீரியம் டுமிபேசியன்ஸ்

  1. எந்த பாக்டிரியம் உற்பத்தி செய்யும் டாக் பாலிமர்(Taq polymerase) என்ற முக்கிய நொதி பலபடியாக்க தொடர் வினையில் பயன்படுத்தப்படுகிறது?

தெர்மஸ் அக்குவாட்டிகஸ்

  1. மெத்தனோபாக்டீரியம் எதை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகிறது?

 உயிரிவளி

  1. மிகக் கடுமையான சூழலில் அதிக உப்புத்தன்மையில் வாழும் பாக்டீரியமான ஹாலோபாக்டீரியம் எது உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகிறது?

β கரோட்டீன்

  1. சையனோ பாக்டீரியங்கள் அல்லது நீலப்பசும் பாசிகள் கால்சியம் கார்பனேட்டுடன் இணைந்து தோன்றும் கூட்டமைப்புகளின் என்ன பெயர்?

 ஸ்ட்ரோமட்டோலைட்கள்

  1. ஸ்ட்ரோமட்டோலைட்கள் புவியியல் கால அளவையில் இருந்து எத்தனை ஆண்டுகள் பழமையானவை?

 2.7 பில்லியன் ஆண்டுகள்

  1. பையனோ பாக்டீரியங்கள் பிரபலமாக எவ்வாறு அறியப்படுகின்றன ?

நீலப்பசும்ப்பாசி அல்லது சயனோஃபைசி

  1. கடலின் சிவப்பு நிறத்திற்கு காரணமான சயனோ பாக்டீரியம் எது?

 டிரைக்கோடெஸ்மியம் எரித்ரேயம்

  1. நாஸ்டாக் ,அனபீனா சிற்றினங்கள் எங்கு ஒருங்குயிரி வாழ்க்கையில் ஈடுபட்டு நைட்ரஜனை நிலைப்படுத்துகின்றன?

சைகஸ் பவளவேர்,நீர்வாழ் பெரணியான அசோலா,கொம்புத் தாவரங்களான ஆந்தோசெராஸ் உடலம்

  1. எவை லைக்கென்களின் உடலத்தில் பாசி உறுப்பினர்களாக ( ஒளி உயிரிகளாக ) வாழ்கின்றன?

கிளாயோகாப்சா,நாஸ்டாக்,சைட்டோனீமா

  1. குரூக்காக்கஸ் என்ன வடிவில் காணப்படுகிறது?

ஒருசெல் உடலமைப்பு

  1. நாஸ்டாக் என்ன வடிவில் காணப்படுகிறது?

இழை வடிவம் (கிளியோகாப்சா கூட்டமைப்பு)

  1. சைனோ பாக்டீரியங்களில் மையப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 சென்ட்ரோபிளாசம்

  1. சைனோ பாக்டீரியங்களில் என்ன நிறமிகள் காணப்படுகின்றன?

 C- பைக்ககோசயனின்,C-பைக்கோஎரித்ரின் போன்றவை மிக்சோஸாந்தின்,மிக்சோஸாந்தோபில்லுடன் இணைந்து காணப்படுகின்றன

  1. சைனோ பாக்டீரியங்களில் சேமிப்பு உணவாக என்ன காணப்படுகிறது?

சயனோஃபைசிய தரசம்

  1. சில சைனோ பாக்டீரிய சிற்றினங்களில் பெரிய நிறமற்ற செல்கள் உடலத்தின் நுனி அல்லது இடைப்பகுதியில் காணப்படுகின்றன இவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

ஹெட்டிரோசிஸ்டுகள்

  1. சைனோ பாக்டீரியங்கள் என்ன முறையில் இனப்பெருக்கம் செய்கின்றன ?

உடல இனப்பெருக்கம்

  1. துருவக் கரடியின் உரோமங்களின் மேல் வளரும் நீலபசும்பாசி எது?

அபனோகேப்சா மான்டனா

  1. சயனோபாக்டீரிய பிரிவு உயிரினங்களின் உடலைச் சூழ்ந்து மியுசிலேஜ் படலம் காணப்படுவதால் இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

மிக்ஸோஃபைசி

  1. எந்த நீலப் பசும் பாசிகள் நீர் மலர்ச்சியினை ஏற்படுத்துவதுடன் நச்சுப் பொருட்களையும் வெளியேற்றி நீர்வாழ் உயிரினங்களை பாதிக்கின்றன?

மைக்ரோசிஸ்டிஸ் ஏருஜினோசா,அனபீனா பிளாஸ்-அக்குவே

  1. எவற்றில் புரதம் அதிகம் இருப்பதால் அவை ஒற்றைச்சொல் புரதமாக பயன்படுத்தப்படுகிறது?

ஸ்பைருலினா

  1. மைக்கோபிளாஸ்மா அல்லது மொல்லிகியுட்கள் என்ற மிகச்சிறிய கிராமம் எதிர் நுண்ணுயிரிகளை முதன்முதல் தனிமைப்படுத்தியவர்கள் யார்?

 நக்கார்டு மற்றும் சக ஆய்வாளர்கள் (1898)

  1. மைக்கோபிளாஸ்மா எப்படி நோயை ஏற்படுத்துகின்றன ?

கத்தரித்தாவரத்தில் தோன்றும் சிறிய இலை நோய், லெகூம் வகை தாவரங்களில் காணப்படும் துடைப்பம் நோய் ,இலவங்கத்தில் இலைக்கொத்துநோய், சந்தனத்தில் கூர் நுனி நோய் போன்றவற்றை

  1. புளூரோநிமோனியா நோயினை ஏற்படுத்தும் நுண்ணுயிரி எது?

 மைக்கோபிளாஸ்மா மைக்காய்டஸ்

  1. ஆக்டினோமைசீட்கள் அல்லது ஆக்டினோபாக்டரியங்கள் மைசீலியம் போன்ற வளர்ச்சியை பெற்றுள்ளதால் இவை எவ்வாறு அழைக்கப்படும்?

கதிர் பூஞ்சைகள் (Ray fungi)

  1. ஆக்டினோமைசீட்களின் DNAவில் கூடுதலாக எவற்றைக் கொண்டுள்ளன? குவனைன்,சைட்டோசைன்
  2. என்ன ஒருங்குயிரி ஆக்டினோபாக்டரியம் வேர் முடிச்சுகளை உருவாக்கி லெகூம் அல்லாத தாவரங்களான அல்னஸ் மற்றும் கேசுரைனா தாவரங்களில் நைட்ரஜனை நிலைப்படுத்துகிறது?

 ஃபிரான்கியா

  1. எந்த ஆக்டினோபாக்டரியம் கால்நடைகளின் வாய் பகுதியில் வளர்ந்து கழலைத் தாடை நோயை ஏற்படுத்துகிறது?

ஆக்டினோமைசீட்ஸ் போவிஸ்

  1. மண்ணில் வாழும் மைசீலியத்தை உருவாக்கும் ஒரு ஆட்டினோபாக்டீரியம் எது?

ஸ்ட்ரெப்டோமைசிஸ்

  1. மழைக்குப்பின் மண்வாசனை ஏற்பட காரணமானது எது?

 ஸ்ட்ரெப்டோமைசிஸ்

  1. மண்வாசனைக்கு என்ன எளிதில் ஆவியாகக் கூடிய கூட்டுப்பொருள் காரணமாகும்?

ஜியோஸ்மின்

  1. ஆக்டினோமைசீட்கள் பேரினத்தில் இருந்து பெறப்படும் உயிர் எதிர் பொருட்கள் என்னென்ன?

ஸ்ட்ரெப்டோமைசின்,குளோரம்ஃபெனிகால்,டெட்ராசைக்ளின்

  1. எந்த ஆண்டு பெனிசிலின் கண்டுபிடிக்கப்பட்டது?

1928

  1. எந்த ஆண்டு P.A.மைச்சிலி வித்து  வளர்ப்பு சோதனையை செய்தார் ?

 1729

  1. எந்த ஆண்டு பாண்டானா பூஞ்சைகள் தாவரங்களில் நோயை ஏற்படுத்தும் என்பதை நிரூபித்தார்?
SEE ALSO  TNPSC UNIT 8 ONELINER NOTES -03| களவியல்

 1767

  1. எந்த ஆண்டு C.H. ப்பிளாக்கிலி மனிதர்களில் பூஞ்சைகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பதை நிரூபித்தார்?

1873

  1. எந்த ஆண்டு A.F ப்ளாக்ஸ்லி பூஞ்சைகளின் மாற்று உடலதன்மையை கண்டறிந்தார்?

 1906

  1. எந்த ஆண்டு பான்டிகார்வோவும் ,ராப்பரும் இணைந்து பாலின ஒத்த தன்மையை கண்டறிந்தனர்?

1952

  1. பூஞ்சை (fungus) என்பது எந்த மொழியிலிருந்து பெறப்பட்ட சொல்?

இலத்தீன் மொழி

  1. இலத்தீன் மொழியில் பூஞ்சை (fungus) என்பதன் பொருள் என்ன?

காளான்

  1. பூஞ்சைகள் பற்றிய படிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

பூஞ்சையியல் (mycology)

  1. பூஞ்சையியல் (mycology) என்பது எந்த மொழியிலிருந்து பெறப்பட்ட சொல்?

கிரேக்கம் ( மைக்கஸ்=காளான்,லாகோஸ்= படிப்பு)

  1. பூஞ்சையியலை தோற்றுவித்ததாக கருதப்படுபவர் யார்?

P.A.மைச்சிலி

  1. பெரும்பாலான பூஞ்சைகளின் உடலம் கிளைத்த இழைப் போன்ற எவற்றால் ஆனது?

ஹைஃபாக்கள்

  1. பூஞ்சைகளின் செல் சுவர் எதனால் ஆனது?

 கைட்டின் எனும் பாலிசாக்கரைடுகள்

  1. தடுப்புச்சுவர் காணப்படுவதன் அடிப்படையில் மைசீலியம் எத்தனை வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன ?

இரண்டு

  1. இந்திய பூஞ்சையியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

 E.J.பட்லர்

  1. J.பட்லர் எந்த இடத்தில் இம்பீரியல் வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவினார் ?

பீகாரில் உள்ள பூசா

  1. இம்பீரியல் வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம் பின்னர் புதுடெல்லிக்கு மாற்றப்பட்டு என்ன பெயரில் அறியப்படுகிறது ?

 இந்திய வேளாண்மை ஆராய்ச்சி மையம் (IARI)

  1. J.பட்லர் எந்த ஆண்டு இந்திய தாவர நோய்களை தொகுத்து “பூஞ்சை மற்றும் தாவர நோய்கள்” என்ற பெயரில் புத்தகத்தை வெளியிட்டார்?

 1918

  1. மைசீலியத்தில் காணக்கூடிய ஹைஃபாக்கள் நெருக்கமின்றியோ அல்லது நெருக்கமாகவோ பிணைந்து பூஞ்சை திசுக்களை உருவாக்குகிறது இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

பிளங்டங்கைமா

  1. பிளங்டங்கைமா எத்தனை வகைப்படும்?

இரண்டு: புரோசங்கைமா,பாரங்கைமா

  1. பொதுவாக பூஞ்சைகளின் பாலினப்பெருக்கத்தில் எத்தனை படிநிலைகள் உள்ளன ?

மூன்று : 1.இரண்டு செல்களின் சைட்டோபிளாச இணைவு 2. உட்கரு இணைவு 3. குன்றல் பகுப்பு வழி ஒற்றைமடியவித்துகள் உண்டாதல்

  1. மரபுசார் வகைப்பாடுகளில் பூஞ்சைகள் எத்தனை வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன ?

நான்கு: ஃபைக்கோமைசீட்ஸ்,ஆஸ்கோமைசீட்ஸ்,பசிடியோமைசீட்ஸ்,டியூட்டிரோமைசீட்ஸ்

  1. எந்த வகுப்பு பூஞ்சைகள் பின்தங்கியதாகவும் பாசிகளில் இருந்து தோன்றியதாகவும் கருதப்படுகிறது?

ஃபைக்கோமைசீட்ஸ்

  1. ஃபைக்கோமைசீட்ஸ் முகப்பில் காணப்படும் பூஞ்சைகள் என்னென்ன?

ஊமைசீட்ஸ்,கைட்ரிடியோமைசீட்ஸ்,சைகோமைசீட்ஸ்

  1. “Introductory mycology” எனும் நூலில் பூஞ்சைகளின் வகைப்பாட்டை வெளியிட்டவர்கள் யார்?

கான்ஸ்டான்டின் J. அலெக்சோபோலஸ் மற்றும் சார்லஸ் W.மிமஸ் (1979)

  1. “Introductory mycology” எனும் நூலில் பூஞ்சைகளின் வகைகள் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன?

மூன்று: ஜிம்னோமைக்கோட்டா,மாஸ்டிகோமைக்கோட்டா,ஏமாஸ்டிகோமைக்கோட்டா

  1. ஜிம்னோமைக்கோட்டா பிரிவில் என்ன ஊட்டமுறை காணப்படுகிறது ?

விழுங்குதல் ஊட்டமுறை

  1. எந்தக் குழுவைச் சேர்ந்த பூஞ்சைகளில் செல் சுவர் காணப்படுவதில்லை?

ஜிம்னோமைக்கோட்டா

  1. எந்தப் பிரிவு பூஞ்சைகளில் கசையிழைகளைக் கொண்ட செல்கள் காணப்படுகின்றன?

 மாஸ்டிகோமைக்கோட்டா

  1. மாஸ்டிகோமைக்கோட்டா பிரிவில் என்ன ஊட்டமுறை காணப்படுகிறது ?

உறிஞ்சுதல் ஊட்டமுறை

  1. எந்தப் பிரிவு பூஞ்சைகளில் ஒரு செல் மற்றும் பல செல் அமைப்புடைய பூஞ்சைகளை கொண்டுள்ளன?

ஏமாஸ்டிகோமைக்கோட்டா

  1. ரொட்டி மீது வளரக்கூடிய (மியூக்கர் ரைசோபஸ்), சாணத்தில் வாழ்பவை (coprophilous fungi) ஆகியவை எது?

சைகோமைசீட்ஸ்

  1. ஈஸ்ட்கள் ,மாவொத்தப் பூசணங்கள், கிண்ணப்பூஞ்சைகள், மோரல்கள் போன்றவற்றை கொண்ட தொகுப்பு எது?

ஆஸ்கோமைசீட்ஸ்

  1. ஆஸ்கோவித்துகள் ஆஸ்கஸ் எனும் பைப் போன்ற அமைப்பினுள் காணப்படுவதால் இந்த குழும பூஞ்சைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

பை பூஞ்சைகள்

  1. எத்தனை வகையான ஆஸ்கோகனியுருப்புகள் உள்ளன?

நான்கு: கிளிஸ்டோதீசியம்,பெரிதீசியம்,அப்போதீசியம்,சூடோதீசியம்

  1. முழுமை பெறாபூஞ்சைகள் என அழைக்கப்படுவது எது?

டியூட்டிரோமைசீட்ஸ்

  1. பால் சார்ந்த தொழிற்சாலைகள் எந்த ஒரு செல் பூஞ்சையை சார்ந்துள்ளன?

ஈஸ்ட்

  1. ஊட்ட மதிப்புடையதால் உணவாக பயன்படுத்தப்படும் பூஞ்சைகள் என்னென்ன?

லென்டினஸ் எடோடஸ்,அகாரிகஸ் பைஸ்போரஸ், வால்வேரியெல்லா வால்வேசியே

  1. ஈஸ்ட்கள் எந்த வைட்டமின்களைத் தருகின்றன?

வைட்டமின் B

  1. எரிமோதீசியம் ஆஷ்பியி எந்த வைட்டமின்களைத் தருகின்றன?

 வைட்டமின் B12

  1. பெனிசிலின் உயிர் எதிர்ப்பொருள் எந்த பூஞ்சையிலிருந்து பெறப்படுகிறது?

பெனிசிலியம் நோடேட்டம்

  1. செபலோஸ்போரின்கள் உயிர் எதிர்ப்பொருள் எந்த பூஞ்சையிலிருந்து பெறப்படுகிறது? அக்ரிமோனியம் கிரைசோஜீனம்
  2. கிரைசியோ பல்வின் உயிர் எதிர்ப்பொருள் எந்த பூஞ்சையிலிருந்து பெறப்படுகிறது?

 பெனிசிலியம் கிரைசோபல்வம்

  1. எர்காட் ஆல்கலாய்டு(எர்காட்டமைன்) உற்பத்தி செய்வது எது?

கிளாவிசெப்ஸ் பர்ப்பூரியா

  1. எர்காட் ஆல்கலாய்டு(எர்காட்டமைன்) என்ன மருந்தாக பயன்படுகிறது?

இரத்தக் குழாயினை சுருங்க வைக்கும் மருந்தாக

  1. சிட்ரிக் அமிலம், குளுக்கோனிக் அமிலம் தயாரிக்க பயன்படும் பூஞ்சை எது?

ஆஸ்பெர்ஜில்லஸ் நைஜர்

  1. இட்டகோனிக் அமிலம் தயாரிக்க பயன்படும் பூஞ்சை எது?

ஆஸ்பெர்ஜில்லஸ் டெரியஸ்

  1. கோஜிக் அமிலம் தயாரிக்க பயன்படும் பூஞ்சை எது?

ஆஸ்பெர்ஜில்லஸ் ஒரைசே

  1. எந்த ஈஸ்ட் நொதித்தல் மூலம் சர்க்கரையை ஆற்றலாக மாற்ற உதவுகிறது?

சக்காரோமைசிஸ்

  1. பாலாடைக்கட்டி உற்பத்தி செய்வதில் உபயோகப்படுத்தப்படும் பூஞ்சைகள் எது?

பெனிசிலியம் ராக்குவிபோர்ட்டை,பெனிசிலியம் கேமம்பர்ட்டை

  1. ஆஸ்பெர்ஜில்லஸ் ஒரைசே,ஆஸ்பெர்ஜில்லஸ் நைஜர் போன்றவைகள் என்ன நொதிகளை தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன?

 புரோட்டியேஸ்,லாக்டேஸ்

  1. பாலாடைக்கட்டி தயாரித்தலில் பால் உறைதலுக்கு தேவையான எது மியூக்கர் சிற்றினங்களைப் பயன்படுத்தி பெறப்படுகிறது?

ரென்னட்

  1. பூஞ்சைவேரிகளை(mycorrhizae) உருவாக்கும் எது போன்ற பூஞ்சைகள், தாவரங்கள் நீர் , கனிமப் பொருட்களை உறிஞ்ச உதவுகின்றன?

ரைசோக்டோனியா,ஃபாலஸ்,ஸ்கிளிரோடெர்மா

  1. எந்தப் பூஞ்சைகள் வேளாண்மை பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை அழிக்க உதவுகின்றன?

பியுவேரியா பேசியானா,மெட்டாரைசியம் அனைசோபிளியா

  1. ஜிப்ரெல்லின் என்ற தாவர வளர்ச்சி சீராக்கி பொருள் தாவரங்களுக்கு வளர்ச்சி ஊக்கியாக பயன்படுத்தப்படுகிறது இது எந்த பூஞ்சையில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது?

ஜிப்பெரெல்லா ஃபுயுஜிகுரை

  1. நெல்லின் கருகல் நோய்க்குக் காரணமான பூஞ்சை எது?

மாக்னபோர்தே கிரைசியே

  1. கரும்பின் செவ்வழுகல் நோய்க்கு காரணமான பூஞ்சை எது?

கொலிட்டோடிரைக்கம் ஃபால்கேட்டம்

  1. பீன்ஸின் அந்த்ரக்னோஸ் நோய்க்கு காரணமான பூஞ்சை எது?

 கொலிட்டோடிரைக்கம் லிண்டிமுத்தியானம்

  1. குருசிபெரே குடும்பத் தாவரங்களின் வெண்துரு நோய்க்கு காரணமான பூஞ்சை எது?

அல்புகோ கேண்டிடா

  1. பீச் இலைச்சுருள் நோய்காரணி எது?

டாப்ரினா டிபார்மன்ஸ்

  1. கோதுமையின் துரு நோய்க்கு காரணமான பூஞ்சை எது?

பக்சீனியா கிராமினிஸ் -டிரிட்டிசை

  1. சேற்றுப்புண் ஏற்படுவதற்கான பூஞ்சை எது?

எபிடெர்மோபைட்டான் பிளாக்கோசம்

  1. கேண்டியாசிஸ் ஏற்படுவதற்கான பூஞ்சை எது?

கேண்டிடா அல்பிகன்ஸ்

  1. கோகிடியோய்டோமைகோசிஸ் ஏற்படுவதற்கான பூஞ்சை எது?

கோகிடியோய்டிஸ் இம்மிட்டிஸ்

  1. ஆஸ்பர்ஜில்லோசிஸ் ஏற்படுவதற்கான பூஞ்சை எது?

 ஆஸ்பெர்ஜில்லஸ் ஃபியுமிகேட்டஸ்

  1. அதிக நச்சுத் தன்மை உடைய காளான்கள் எவை?

அமானிட்டா ஃபேலாய்ட்ஸ்,அமானிட்டா வெர்னா,போலிட்டஸ் சடானஸ்

  1. அமானிட்டா ஃபேலாய்ட்ஸ்,அமானிட்டா வெர்னா,போலிட்டஸ் சடானஸ் போன்ற அதிக நச்சுத்தன்மை உடைய காளான்கள் பொதுவாக எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 தவளை இருக்கை பூஞ்சைகள்

  1. உணவு கெட்டுப் போவதற்கு காரணமாக இருக்கும் பூஞ்சைகள் எது?

ஆஸ்பெர்ஜில்லஸ்,ரைசோபஸ்,மியூக்கர்

  1. எந்த பூஞ்சை உலர்ந்த உணவுப் பொருட்களில் புற்றுநோயை தூண்டும் ஆப்ளாட்டாக்சின் நச்சுப்பொருளை உண்டாக்குகிறது?

அஸ்பெர்ஜில்லஸ் பிளாவஸ்

  1. பூஞ்சைகள் உற்பத்தி செய்யும் சில நச்சுப் பொருட்கள் என்னென்ன?

 பாட்டுலின்,ஆக்ராடாக்சின் A போன்றவைகள்

  1. தோலில் நோய் தொற்றுதல் ஏற்படுத்தக்கூடிய பூஞ்சைகள் எது?

 டெர்மோபைட்கள்

  1. உருளைக்கிழங்கில் தாமதித்த வெப்புநோய் ஏற்படுத்தும் பூஞ்சை எது?

பைட்டோப்தோரா இன்பெஸ்ட்டன்ஸ்

  1. ரைசோபஸ் என்ன வகை பூஞ்சை?

சாற்றுண்ணி(saprophyte)

  1. ரைசோபஸ் பொதுவாக எவ்வாறு அழைக்கப்படுகிறது?

ரொட்டிக் காளான்

  1. காய்கறிகளில் கழிவு மற்றும் மென் அழுகல் நோயை தோற்றுவிப்பது எது?

ரைசோபஸ் ஸ்டொலோனிபர்

  1. வளர் தளத்தின் மேற்பரப்பில் கிடைமட்டமாக வளரக்கூடிய ஹைஃபாக்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?

ஓடு ஹைஃபா (stolon)

  1. ரைசோபஸ் செல்சுவர் எதனால் ஆனது?

கைட்டின்,கைட்டோசான்

  1. செயலில் வேறுபட்ட இரண்டு உடலங்கள் ( ஹைஃபாக்கள்) பாலினப்பெருக்கத்தில் ஈடுபடும் நிகழ்ச்சி எவ்வாறு அழைக்கப்படும்?

மாற்று உடலத்தன்மை (Heterothallism)

  1. அகாரிகஸ் என்ன வகை பூஞ்சை?

மரக்கட்டைகள், உரக் குவியல்கள், மக்காத குப்பைகள் ,மேய்ச்சல் நிலங்கள் போன்ற பல இடங்களில் காணக் கூடிய ஒரு மட்குண்ணிப் பூஞ்சை

  1. அகாரிகஸ் ஆர்வென்சிஸ்,அகாரிகஸ் டேபுலாரிஸ் போன்ற சிற்றினங்கள் வாழிடங்களில் வளையங்களாக காணப்படுகின்றன இவை எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

 தேவதை வளையங்கள்

  1. அகாரிகஸ் கேம்பெஸ்ட்ரிஸ் பொதுவாக எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 களக் காளான்

  1. பூஞ்சைகளின் மைசீலியம் வேரினை சூழ்ந்து அடர்த்தியான உறையினை தோற்றுவிப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 மேலுறை (Mantle)

  1. பூஞ்சைவேரிகள் எத்தனை வகைப்படும்?

மூன்று

  1. பூஞ்சைவேரிகளின் முக்கியத்துவம் என்ன?

 தாவரங்களுக்கு கனிமப் பொருட்கள் மற்றும் நீரை அதிக அளவில் கிடைக்க உதவுகின்றன.

  1. பாசிகள் மற்றும் பூஞ்சைகள் இடையே ஏற்படும் ஒருங்குயிரி அமைப்பிற்கு என்ன பெயர்?

லைக்கென்கள்

  1. மரப்பட்டை மீது காணப்படும் லைக்கன்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

கார்ட்டிகோலஸ்

  1. கட்டை மீது வாழும் லைக்கன்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 லிக்னிகோலஸ்

  • பாறை மீது வாழும் லைக்கன்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

சாக்ஸிகோலஸ்

  1. நிலத்தில் வாழும் லைக்கன்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

டெர்ரிகோலஸ்

  • உடல புற அமைப்பின் அடிப்படையில் லைக்கன்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன?

லெப்ரோஸ்,கிரிஸ்டோஸ்,ஃபோலியோஸ்,புருட்டிகோஸ்

  1. லைக்கன் உடலத்தில் பாசி செல்கள் பரவலின் அடிப்படையில் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?

ஹோமியோமிரஸ் ,ஹெட்டிரோமிரஸ்

  1. லைக்கென் உடலத்தில் உள்ள பூஞ்சை உயிரி ஆஸ்கோமைசீட்ஸ் வகுப்பைச் சாரந்தவையாக இருப்பின் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

ஆஸ்கோலைக்கென்

  • லைக்கென் உடலத்தில் உள்ள பூஞ்சை உயிரி பசிடியோமைசீட்ஸ் வகுப்பைச் சார்ந்தது எனில் அவை எவ்வாறு அறியப்படுகின்றன?

பசிடியோலைக்கென்

  1. லைக்கென்களில் இருந்து பெறப்படும் எந்த அமிலம் உயிர் எதிர்ப்பொருள் தன்மையைப் பெற்றுள்ளது?

அஸ்னிக் அமிலம்

  1. லிட்மஸ் காகிதத்திற்கு தேவையான சாயம் எந்த லைக்கென்களிலிருந்து பெறப்படுகிறது?

ரோசெல்லா மாண்டாக்னே

  1. எந்த லைக்கென் துருவப் பிரதேசத்தில் வாழும் விலங்குகளுக்கு உணவாக பயன்படுத்தப்படுகிறது?

கிளாடோனியா ரான்ஜிஃபெரினா (ரெயின்டீர் மாஸ்)


11TH BOTANY STUDY NOTES |உயிரி உலகம்| TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

 

Leave a Comment

error: