- அரசியலமைப்பின் எந்தப் பகுதி மாநிலங்களுக்கான சீரான அமைப்பினைப் பற்றி குறிப்பிடுகிறது?
பகுதி VI
- இந்திய அரசமைப்பின் எந்த சட்டப் பிரிவுகள் அனைத்து மாநிலங்களுக்குமான சீரான அமைப்பினைப் பற்றி குறிப்பிடுகிறது?
152 முதல் 237 வரை
- எந்த அரசியலமைப்பு சட்டப் பிரிவு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கி இருந்தது?
370
- மாநில அரசு எந்த பிரிவுகளின் கீழ் இயங்குகின்றது?
மூன்று பிரிவுகள்: நிர்வாகத்துறை ,சட்டமன்றம் மற்றும் நீதித்துறை
- ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்பு எந்த நாளில் ஏற்றுக்கொள்ளப்பட்டது?
நவம்பர் 17 1957
- ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்பு எப்போது முதல் நடைமுறைக்கு வந்தது?
நவம்பர் 26 1957
- ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கு முன்பு இந்திய அரசமைப்பின் எவை ஜம்மு-காஷ்மீருக்கு பொருந்தாது ?
இந்திய அரசமைப்பின் அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் மற்றும் அடிப்படை உரிமைகள்
- மாநில நிர்வாகத்தின் அரசியலமைப்பு தலைவர் யார்?
ஆளுநர்
- யாருடைய பெயரில் மாநில நிர்வாகம் செயல்படுகிறது ?
மாநில ஆளுநர்
- அரசமைப்பின் எந்த சட்டப் பிரிவு மாநில ஆளுநரின் நிர்வாக அதிகாரத்தை பற்றி குறிப்பிடுகிறது?
சட்டப்பிரிவு 154
- அரசமைப்பின் எந்த சட்டப் பிரிவின்படி மாநில ஆளுநரின் நிர்வாக அதிகாரம் ஆளுநரிடம் இருக்க வேண்டும் எனக் கூறுகிறது?
சட்ட பிரிவு 154 (1)
- மாநில ஆளுநர் யாரால் நியமனம் செய்யப்படுகிறார் ?
குடியரசுத் தலைவர்
- மாநில ஆளுநரின் பதவிக் காலம் எவ்வளவு?
5 ஆண்டுகள் (ஆனால் குடியரசுத் தலைவரின் விருப்பத்தின் பேரில் பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம்)
- ஆளுநர் தனது பணி துறப்பு கடிதத்தை யாரிடம் கொடுப்பதன் மூலம் பதவி விலகலாம்?
குடியரசுத் தலைவர்
- மாநில ஆளுநரை நியமிப்பதில் எத்தனை மரபுகள் பின்பற்றப்படுகின்றன?
இரண்டு
- ஆளுநராக நியமனம் செய்யப்படுவதை பின்பற்றப்படும் இரண்டு மரபுகள் என்னென்ன?
- ஆளுநராக நியமிக்கப்படும் ஒருவர் தான் எந்த மாநிலத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட உள்ளாரோ அந்த மாநிலத்தில் வசிப்பவராக இருத்தல் கூடாது .2.ஆளுநராக நியமிக்கப்படும் ஒருவரை மத்திய அரசு மாநில அரசுடன் கலந்தாலோசித்து அவரது பெயரை முன்மொழிய வேண்டும்
- அரசமைப்பின் எந்த சட்டப் பிரிவின் படி ஒருவர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் ஆளுநராக நியமிக்கப்படும் பொழுது குடியரசுத்தலைவர் ஒரு ஆணையின் மூலம் ஆளுநரின் ஊதியம் மற்றும் படிகளை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்து வழங்க தீர்மானிக்கலாம் ?
சட்டப்பிரிவு 158 (3A)
- சர்க்காரியா குழு எதற்காக அமைக்கப்பட்டது ?
மத்திய மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆராய
- இந்திய அரசமைப்பின் எந்த சட்டப்பிரிவுகள் ஆளுநர் பதவிக்கு தேவையான தகுதிகளை கூறுகின்றன?
சட்டப்பிரிவு 157 மற்றும் 158
- ஆளுநர் ஆவதற்கு எத்தனை வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்?
35 வயது
- எந்த சட்டப் பிரிவின்படி முதலமைச்சரின் தலைமையிலான அமைச்சரவையின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி ஆளுநர் குறிப்பிட்ட சில நிகழ்வுகளைத் தவிர மற்ற அதிகாரங்களை செயல்படுத்துகிறார்?
சட்டப்பிரிவு 163
- முதலமைச்சரை நியமனம் செய்பவர் யார்?
மாநில ஆளுநர்
- யாருடைய பரிந்துரையின் பேரில் அமைச்சரவையின் மற்ற உறுப்பினர்களை ஆளுநர் நியமனம் செய்கிறார் ?
முதலமைச்சர்
- மாநிலத்தின் அரசு வழக்கறிஞரை நியமனம் செய்து அவரது ஊதியத்தையும் நிர்ணயம் செய்பவர் யார்?
ஆளுநர்
- அரசு பணியாளர் தேர்வாணைய குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்பவர் யார்?
மாநில ஆளுநர்
- யாரால் அரசு பணியாளர் தேர்வாணைய குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்ய முடியும்?
குடியரசுத் தலைவர்
- மாநில தலைமை தேர்தல் ஆணையரை நியமனம் செய்பவர் யார்?
மாநில ஆளுநர்
- எந்த முறையை பின்பற்றி மாநிலத் தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்யலாம்?
உயர்நீதிமன்ற நீதிபதி பதவி நீக்கும் முறை
- பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படும் அவர் யார் ?
மாநில ஆளுநர்
- மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமனம் செய்பவர் யார் ?
ஆளுநர்
- குடியரசுத் தலைவரின் அவசர நிலை பிரகடனம் செய்யப்படும் பொழுது குடியரசுத் தலைவரின் பெயரில் மாநிலத்தை நேரடியாக ஆட்சி செய்பவர் யார்?
ஆளுநர்
- சட்டமன்ற கூட்டத்தை கூட்டி வைக்கவும் சட்டமன்றத்தை கலைக்கவும் உரிமை பெற்றவர் யார் ?
மாநில ஆளுநர்
- தேர்தலுக்குப் பின் நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தின் முதல் கூட்டத்தில் உரை நிகழ்த்துபவர் யார்?
மாநில ஆளுநர்
- சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பணியிடம் காலியாக இருக்கும்போது சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை அந்த பதவிக்கு யார் நியமனம் செய்யலாம் ?
ஆளுநர்
- ஆங்கிலோ இந்தியன் வகுப்பினரலிருந்து ஓர் உறுப்பினரை மாநில சட்டமன்றத்திற்கு நியமனம் செய்யும் அதிகாரம் பெற்றவர் ?
ஆளுநர்
- கலை, இலக்கியம், அறிவியல் கூட்டுறவு இயக்கம் மற்றும் சமூக சேவை போன்றவற்றில் சிறந்து விளங்கும் நபர்களை தேர்ந்தெடுத்து மாநில சட்ட மேலவையில் எத்தனை பங்கு இடங்களுக்கு அவர்களை ஆளுநர் நியமனம் செய்கிறார்?
ஆறில் ஒரு பங்கு
- எந்த அரசியலமைப்பு சட்டப் பிரிவின் கீழ் ஆளுநர் மாநில சட்டமன்றம் நடைபெறாத பொழுது அவசர சட்டத்தை பிறப்பிக்கலாம்?
சட்டப்பிரிவு 213
- ஆளுநரால் பிறப்பிக்கப்படும் அவசர சட்டம் எத்தனை மாதத்திற்குள் மாநில சட்டமன்றத்தில் அங்கிகரிக்கப்படவேண்டும் ?
ஆறு மாதம்
- மாநில ஆளுநர் எந்தெந்த அறிக்கையை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கிறார்?
மாநிலத்தின் ஆண்டு நிதிநிலை அறிக்கை ,அரசு பணியாளர் தேர்வாணைய குழுவின் அறிக்கை, அரசின் தணிக்கை குழு அறிக்கை
- மாநிலத்தின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தினை தயார் செய்து சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யும் கடமையை யாருக்கு அரசிலமைப்பு வழங்குகிறது ?
ஆளுநர்
- ஆண்டு நிதிநிலை அறிக்கையை (வரவுசெலவுத் திட்டம் ) சட்டமன்றத்தில் அறிமுகம் செய்ய காரணமாக இருப்பவர்?
ஆளுநர்
- மாநில சட்டமன்றத்தில் யார் மூலம் வரவு செலவு திட்டத்தை தேவைப்பட்டால் ஆளுநர் சமர்ப்பிக்கலாம்?
மாநில நிதியமைச்சர்
- யாருடைய முன் அனுமதியுடன் மட்டுமே பணமசோதா சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியும்?
ஆளுநர்
- யாருடைய பரிந்துரையின்றி நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது?
ஆளுநர்
- பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளின் நிதி நிலையை ஆய்வு செய்ய ஒவ்வொரு ஐந்து ஆண்டிற்கும் ஒரு முறை நிதி ஆணையம் ஒன்றை அமைப்பது யார் ?
ஆளுநர்
- கீழ் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமனம் செய்பவர் யார்?
ஆளுநர்
- யாருடைய ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமனம் செய்கிறார்?
ஆளுநர்
- உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையின் பேரில் மாவட்ட நீதிபதிகளின் நியமனம் மற்றும் பதவி உயர்வு போன்ற பணிகளை மேற்கொள்பவர் யார் ?
ஆளுநர்
- குற்றவாளிகளின் கருணை மனு அடிப்படையில் குற்றவாளிகளை மன்னிக்கவும் அல்லது குற்றவாளிகளின் தண்டனையை குறைக்கவும் அல்லது நிறுத்தி வைக்கவும் யாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது?
மாநில ஆளுநர்
- மாநிலத்தில் குடியரசுத் தலைவரின் ஆட்சிக்கு பரிந்துரை செய்பவர் யார்?
ஆளுநர்
- மாநில நிர்வாகம் மற்றும் சட்ட மன்ற செயல்பாடுகள் தொடர்பான செய்திகளை யாரிடமிருந்து ஆளுநர் பெறுகிறார்?
முதலமைச்சர்
- அரசமைப்பின் எந்த சட்டப் பிரிவின் கீழ் மாநில அரசை கலைக்க குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் பரிந்துரை செய்யலாம்?
சட்ட பிரிவு 356
- எந்த சட்டப்பிரிவின் கீழ் தனது பணிகள் மட்டும் அதிகாரத்தை செய்ய வேண்டும் என எண்ணுவதிலும் செயல்படுத்துவதிலும் எந்த நீதிமன்றத்துக்கும் ஆளுநர் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்ற சிறப்புரிமையை வழங்குகின்றது?
சட்டப்பிரிவு 361 (1)
- மாநில ஆளுநருக்கு எதிராக எந்த வழக்குகளைத் தொடர முடியாது?
உரிமையியல் வழக்குகள்
- மாநிலத்தின் பெயரளவு நிர்வாகியாக செயல்படுபவர் யார்?
ஆளுநர்
- மாநிலத்தின் உண்மையான நிர்வாகியாக செயல்படுபவர் யார்?
முதலமைச்சர்
- மாநில அரசின் தலைவர் யார் ?
ஆளுநர்
- மாநில அரசாங்கத்தின் தலைவர் யார்?
முதலமைச்சர்
- முதலமைச்சரின் பதவி காலம் எவ்வளவு ?
5 ஆண்டுகள்
- 1947 இல் இருந்து பதவி வகித்த தமிழக முதலமைச்சர்கள் காலங்களை குறிப்பிடுக:
சுதந்திரத்திற்கு பின் தமிழகத்தின் முதல் முதலமைச்சர் யார் ?
ஓமந்தூர் ராமசாமி
- திரு. ஓமந்தூர் ராமசாமி முதலமைச்சராக பதவி வகித்த காலம்- 1947-1949
- திரு.பி.எஸ். குமாரசாமி ராஜா 1949- 1952
- திரு.சி ராஜகோபாலச்சாரி 1952 – 1954
- திரு .காமராஜர் 1954 -1963
- திரு.எம். பக்தவச்சலம் 1963- 1967
- திரு சி என் அண்ணாதுரை 1967 1969
- திரு எம் கருணாநிதி 1969 1976
- திரு எம் ஜி ராமச்சந்திரன் 1977 1987
- திருமதி ஜானகி ராமச்சந்திரன் ஜனவரி 1988
- திரு எம் கருணாநிதி 1989 1991
- செல்வி ஜெ ஜெயலலிதா 1991 1996
- திரு எம் கருணாநிதி 1996 2001
- செல்வி ஜெ ஜெயலலிதா 2001
- திரு ஓ.பன்னீர் செல்வம் 2001 2002
- செல்வி ஜெ ஜெயலலிதா 2002 2006
- திரு எம் கருணாநிதி 2006 2011
- செல்வி ஜெ ஜெயலலிதா 2011 2014
- திரு ஓ பன்னீர்செல்வம் 2014 2015
- செல்வி ஜெ ஜெயலலிதா 2015 2016
- திரு. ஓ பன்னீர்செல்வம் 2016 2017
- திரு எடப்பாடி கே பழனிசாமி 2017 முதல்
- மாநில நிர்வாகத்தின் உண்மையான தலைவர் யார் ? முதலமைச்சர்
- அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்கீடு செய்பவர் யார் ? முதலமைச்சர்
- ஓர் அமைச்சருடன் கருத்து வேறுபாடுகள் எழும் பொழுது ராஜினாமா செய்யும்படி அல்லது பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்பவர் யார் ?
முதலமைச்சர்
- அமைச்சரவைக் கூட்டத்தை தலைமையேற்று நடத்தி முடிவுகளை எடுப்பவர் யார் ?
முதலமைச்சர்
- அமைச்சரவையின் குழப்பத்தை தனது ராஜினாமா மூலம் முடித்து வைப்பவர் யார்?
முதலமைச்சர்
- ஆளுநருக்கும் அமைச்சரவைக்கும் இடையே செய்தி தொடர்புகளில் யார் முதன்மையாக விளங்குகிறார்?
முதலமைச்சர்
- முதலமைச்சர் எந்த அலுவலர்களின் நியமனங்கள் தொடர்பாக ஆளுநருக்கு ஆலோசனை வழங்குகிறார் ?
மாநில அரசு வழக்கறிஞர், மாநில தேர்தல் ஆணையர், மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ,மாநில திட்டக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மாநில நிதிக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
- சட்டமன்ற கூட்டத்தொடரை ஆரம்பிக்கவும் ஒத்திவைக்க ஆளுநருக்கு ஆலோசனை வழங்குபவர் யார்?
முதலமைச்சர்
- சட்டமன்றத்தில் அரசின் கொள்கைகளை அறிவிப்பவர் யார்?
முதலமைச்சர்
- அமைச்சரவை எதற்கு கூட்டாக பொறுப்புடையது?
மாநில சட்டமன்றம்
- சட்டமன்ற உறுப்பினர் அல்லாத ஒருவர் அமைச்சராக பதவியேற்றால் எத்தனை மாத காலத்திற்குள் அவர் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும்?
ஆறு மாதம்
- எந்த சட்டப் பிரிவு ஆளுநருக்கு ஆலோசனைகள் வழங்க அமைச்சரவை உருவாக்க வழிவகை செய்திருக்கிறது ?
சட்டப்பிரிவு 163
- எந்த சட்டப் பிரிவின்படி முதலமைச்சரை தலைவராக கொண்ட அமைச்சரவை ஆளுநருக்கு தேவைப்படும் பொழுது உதவி செய்யவும் ஆலோசனை வழங்கவும் வேண்டும்?
சட்டப்பிரிவு 163 (1)
- எந்த சட்டப்பிரிவு ஆளுநரால் முதலமைச்சர் நியமிக்கப்படுவது பற்றிக் கூறுகிறதுமற்றும் முதலமைச்சரின் பரிந்துரையின்பேரில் மற்ற அமைச்சர்களை நியமிக்க வகை செய்கிறது?
சட்டப்பிரிவு 164 (1)
- யார் விரும்பும் வரை முதலமைச்சர் பதவியில் தொடரலாம்?
ஆளுநர்
- முதல் அமைச்சர் உட்பட மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் எத்தனை விழுக்காடு தாண்டக்கூடாது?
15%
- அமைச்சர்களின் எண்ணிக்கை மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் 15 சதவிகிதத்தை தாண்டகூடாது எனக் கூறும் சட்டப்பிரிவு?
சட்டப்பிரிவு 164(1A)
- ஈரவை சட்டமன்றங்களைக் கொண்டுள்ள மாநிலங்கள் எவை?
பீகார், கர்நாடகா ,மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம் ,ஆந்திர பிரதேசம் ,தெலுங்கானா
- தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு ?
234 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் (மொத்தம் 234+1 ஆங்கிலோ இந்தியன் உறுப்பினர்கள்)
- தமிழகத்தின் அமைச்சர்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கலாம்?
36
- மாநில அதிகாரத்தின் உண்மையான அதிகார மையம் எது?
மாநில சட்டமன்றம்
- தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகபட்சம் எத்தனைக்கும் மிகாமல் குறைந்தபட்சம் எத்தனைக்கும் குறையாமலும் இருக்க வேண்டும் ?
அதிகபட்சம் 500 க்கு மிகாமல் குறைந்தபட்சம் 60 க்கு குறையாமல்
- சட்டமன்றத்தின் பதவி காலம் எவ்வளவு ஆண்டுகள்?
ஐந்து ஆண்டுகள்
- சட்ட மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அம்மாநில சட்டமன்ற மேலவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் எத்தனை பங்குக்கு மிகாமல் இருக்கவேண்டும்?
மூன்றில் ஒரு பங்கு
- மேலவை உறுப்பினர்கள் எண்ணிக்கை எத்தனைக்கு குறையாமல் இருக்க வேண்டும்?
40
- அமைச்சரவை குழுக்கள் எத்தனை வகைகள்?
இரண்டு வகைகள் : ஒன்று நிரந்தரமானது மற்றொன்று தற்காலிகமானவை
- சட்டமன்றம் ஒரு தீர்மானத்தின் மூலம் எத்தனை நாட்கள் அறிவிப்பு கொடுத்த பிறகு சபாநாயகரை பதவி நீக்கம் செய்யலாம்?
14 நாட்கள்
- சட்டமன்றத் கலக்கப்படும் பொழுது யார் தனது பதவியை இழக்க மாட்டார்?
சபாநாயகர்
- மாநில சட்டமன்றத்தின் நிரந்தர அவை எது?
சட்டமேலவை
- சட்ட மேலவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை சட்டமன்ற பேரவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்குக்கு மிகாமல் குறைந்தபட்ச எண்ணிக்கை 40 குறையாமலும் இருக்க வேண்டும் எனக் கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது?
171 (1)
- சட்ட மேலவை உறுப்பினர் பதவி காலம் எவ்வளவு?
ஆறு ஆண்டுகள்
- எந்த ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு சட்ட மேலவை நீக்க மசோதா மூலம் தமிழ்நாட்டில் சட்ட மேலவை நீக்கப்பட்டது?
1986
- தமிழ்நாட்டில் எப்போது சட்ட மேலவை நீக்கப்பட்டது?
நவம்பர் 1 1986
- சட்ட மேலவை உறுப்பினர் ஆவதற்கு எத்தனை வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்?
30 வயது
- சட்டமேலவைக்கான தேர்தலில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?
உள்ளாட்சி அமைப்புகள்
- சட்டமேலவைக்கான தேர்தலில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?
சட்டமன்ற பேரவை உறுப்பினர்கள்
- பன்னிரண்டில் ஒரு பங்கு உறுப்பினர்கள் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?
பட்டதாரிகள்
- பன்னிரண்டில் ஒரு பங்கு உறுப்பினர்கள் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?
பட்டதாரி ஆசிரியர்கள்
- ஆறில் ஒரு பங்கு உறுப்பினர்கள் கலை இலக்கியம் அறிவியல் சமூக சேவை மற்றும் கூட்டுறவு இயக்கம் இவற்றில் சிறந்து விளங்குபவர்களை யார் நேரடியாக நியமனம் செய்கிறார் ?
ஆளுநர்
- மேலவை கூட்டத்தை தலைமையேற்று நடத்துபவர் யார்?
மேலவைத் தலைவர்
- சட்டமேலவை உருவாக்கம் அல்லது நீக்கம் பற்றி கூறும் சட்டப்பிரிவு?
சட்டப்பிரிவு 169
- மாநிலத்தின் சட்ட மேலவையை உருவாக்கவும் நீக்கவும் அதிகாரம் உள்ள இடம்?
நாடாளுமன்றம்
- சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் எத்தனை பங்கு உறுப்பினர்கள் வாக்களித்து தீர்மானத்தை நிறைவேற்றி சட்டமேலவை உருவாக்கவோ அல்லது நீக்கவோ நாடாளுமன்றத்தை கேட்டுக்கொண்டால், நாடாளுமன்றம் அவற்றை செயல்படுத்தும்?
மூன்றில் இரண்டு பங்கு
- அரசியலமைப்பின்படி மாநிலத்திலுள்ள அனைத்து துறைகள் மீது சட்டத்தை இயற்றும் அதிகாரம் பெற்றது?
சட்டமன்றம்
- மாநிலத்தின் நிதி நிலையை கட்டுப்படுத்துவது?
சட்டமன்றம்
- பண மசோதாவை எந்த அவையில் மட்டுமே அறிமுகப்படுத்த முடியும்?
கீழவை
- எந்த அவையின் அனுமதி இன்றி புதிய வரிகளை விதிக்க முடியாது?
சட்டமன்ற கீழவை
- அமைச்சரவையானது எதற்கு பொறுப்பானது ?
சட்டமன்றம்
- எந்த ஆண்டு உயர்நீதிமன்றங்கள் கல்கத்தா பம்பாய் மற்றும் சென்னையில் தோற்றுவிக்கப்பட்டன?
1862
- எந்த ஆண்டு திருத்தச் சட்டம் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களுக்கு என்று ஒரு பொதுவான உயர்நீதிமன்றத்தை நிறுவ நாடாளுமன்றத்திற்கு அங்கீகாரம் வழங்கியது?
1956 ஆம்ஆண்டு 7 ஆவது திருத்தச் சட்டம்
- எப்போது விக்டோரியா மகாராணி வழங்கிய காப்புரிமை கடிதத்தின் மூலம் சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய மாகாணங்களில் உயர் நீதிமன்றங்கள் தோற்றுவிக்கப்பட்டன?
ஜூன் 26 ,1862
- உலகிலேயே மிகப்பெரிய நீதித்துறை வளாகம் எங்குள்ளது?
லண்டன்
- சென்னை உயர் நீதிமன்ற வளாகம் உலகிலேயே எத்தனையாவது பெரிய நீதித்துறை வளாகம் ஆகும் ?
இரண்டாவது
- பஞ்சாப் அரியானா மற்றும் யூனியன் பிரதேசமான சண்டிகர் ஆகிய பகுதிகளுக்கு எங்குள்ள உயர்நீதிமன்றம் பொது நீதிமன்றமாக உள்ளது?
சண்டிகர்
- ஏழு வடகிழக்கு மாநிலங்களான அசாம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் ,மேகாலயா, திரிபுரா மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகியவற்றிற்கு எங்குள்ள உயர்நீதிமன்றம் பொது நீதிமன்றமாக உள்ளது?
கவுகாத்தி
- உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையானது யாரால் தீர்மானிக்கப்படுகிறது ?
குடியரசுத் தலைவர்
- எந்த சட்டப்பிரிவின் படி ஒவ்வொரு உயர் நீதிமன்றத்திற்கும் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள் குடியரசுத்தலைவர் காலத்திற்கு ஏற்றவாறு நியமனம் செய்கிறார் ?
சட்டப்பிரிவு 216
- இந்திய அரசமைப்பின் எந்த சட்டப் பிரிவு அடிப்படை உரிமைகளுக்காக மட்டுமின்றி மற்ற நோக்கங்களுக்காகவும் பேராணைகளை வெளியிடும் அதிகாரங்களை உயர்நீதிமன்றங்களுக்கு வழங்குகிறது?
சட்டப்பிரிவு 226
- எந்த சட்டப்பிரிவின் கீழ் உச்சநீதிமன்றம் நீதிப்பேராணைகளை வழங்குகிறது?
சட்டப்பிரிவு 32
- தவறாக ஒருவர் காவலில் வைக்கப்பட்டால் நீதிமன்ற காவலில் வைத்து அதிகாரிக்கோ, அரசாங்கத்திற்கோ, ஆணை வழங்கி காவலில் வைக்கப்பட்ட வரை நீதிமன்றத்தின் முன் கொண்டுவர செய்ய உதவும் பேராணை ?
ஆட்கொணர்வு நீதிப்பேராணை
- நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் இடும் ஆணை? கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை
- ஒரு அரசு அலுவலர் அல்லது ஒரு கழகம் அல்லது மற்ற நிறுவனங்கள் பணியை விரைந்து நிறைவேற்றுமாறு கீழ் நீதிமன்றங்களுக்கு உயர்நீதிமன்ற பிறப்பிக்கும் ஆணை?
கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை
- கீழ் நீதிமன்றங்களிடமிருந்து வழக்கு சம்பந்தமான ஆவணங்கள்,ஆதாரங்கள் கோப்புகள் ஆகியவற்றை உயர்நீதிமன்றங்கள் கேட்டு பெரும் ஆணை?
ஆவண கேட்பு பேராணை
- பதிவேடுகளின் நீதிமன்றமாக செயல்படுவது எது?
உயர்நீதிமன்றம்
- மத்திய மாநில அரசுகள் இயற்றும் சட்டங்கள் அரசியலமைப்புக்கு உட்பட்டதா அல்லது முரண்பட்டதா என்பதை ஆராய உயர்நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட ஒரு அதிகாரம் எது?
நீதிப்புனராய்வு அதிகாரம்
- எந்த சட்டப்பிரிவுகள் உயர்நீதிமன்றத்தின் நீதிப்புனராய்வு அதிகாரம் பற்றி வெளிப்படையாக கூறுகிறது?
சட்டப்பிரிவு 226 மற்றும் சட்டப்பிரிவு 227
- எந்த ஆண்டு சட்டத்திருத்தம் உயர்நீதிமன்ற நீதிப்புணராய்வு அதிகாரத்தை குறைத்தது?
1976
- 42வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது?
1976
- எந்த ஆண்டு சட்ட திருத்தத்தின் மூலம் உயர் நீதிமன்றத்திற்கு மீண்டும் நீதிப்புனராய்வு அதிகாரம் வழங்கப்பட்டது?
43 வது அரசியல் சட்டத் திருத்தம் 1977
10TH POLITY STUDY NOTES |மாநில அரசு| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services