TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE
- அரசியலமைப்பில் மத்திய அரசின் நிர்வாகம் பற்றி குறிப்பிடும் பகுதி எது?
பகுதி 5
- இந்திய அரசியலமைப்பில் மத்திய அரசு நிர்வாகம் பற்றி குறிப்பிடும் சட்டப் பிரிவுகள் எவை?
52 முதல் 78 வரை
- மத்திய அரசு எத்தனை அங்கங்களை கொண்டுள்ளது?
3
- மத்திய அரசின் அங்கங்கள் என்னென்ன?
நிர்வாகம், சட்டமன்றம் நீதித்துறை
- மத்திய நிர்வாகம் எவற்றையும் உள்ளடக்கியது?
குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதம அமைச்சரை தலைவராக கொண்ட அமைச்சரவை குழு மற்றும் இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்
- மத்திய சட்டமன்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நாடாளுமன்றம்
- மத்திய அரசின் நிர்வாகத் தலைவர்?
குடியரசுத் தலைவர்
- பெயரளவில் நிர்வாக அதிகாரம் பெற்றவர் யார் ?
குடியரசுத் தலைவர்
- இந்தியாவின் முதல் குடிமகன் என அறியப்படுபவர் யார்?
குடியரசுத்தலைவர்
- முப்படைகளின் தலைமைத் தளபதியாக செயல்படுபவர் யார்?
குடியரசுத் தலைவர்
- நீதித்துறையை அமைக்கும் பொறுப்பு யாருக்கு உண்டு ?
குடியரசுத் தலைவர்
- எந்த அரசியலமைப்பு சட்டப் பிரிவின்படி குடியரசுத் தலைவர் நேரடியாகவோ அல்லது அவருடைய சார்நிலை அலுவலர்கள் மூலமாக மத்திய அரசின் நிர்வாக அதிகாரங்களை அரசியலமைப்பின்படி செயல்படுத்துகிறார்?
சட்டப்பிரிவு 53
- குடியரசுத் தலைவராக தேர்தலில் போட்டியிடுவதற்கு எத்தனை வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்?
35 வயது
- குடியரசுத் தலைவரின் இல்லம் எவ்வாறு அழைக்கப்படும்? ராஷ்டிரபதி பவன் ராஷ்டிரபதி பவன் எங்கு அமைந்துள்ளது?
புது தில்லி
- குடியரசுத் தலைவருக்கு புதுடெல்லியில் உள்ள இல்லத்தை தவிர வேறு எங்கு இல்லங்கள் உள்ளன?
சிம்லாவில் உள்ள ரீட்ரீட் கட்டடம் ,ஹைதராபாத்தில் உள்ள ராஷ்ட்ரபதி நிலையம்
- குடியரசுத் தலைவர் எந்த தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
ஒற்றை மாற்று வாக்கு மூலம் விகிதாச்சாரப்படி
- குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்காளர் குழுமம் யாரை உள்ளடக்கியது?
மாநிலங்களவை மற்றும் மக்களவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் தேசிய தலைநகர் தில்லி மற்றும் புதுச்சேரியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
- குடியரசுத் தலைவருக்கு யார் பதவியேற்பு உறுதிமொழி செய்து வைப்பார்?
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
- குடியரசுத் தலைவரின் பதவிக்காலம்?
5 ஆண்டுகள்
- எந்த இந்திய அரசமைப்பு சட்ட பிரிவின் படி மத்திய அரசின் ஒவ்வொரு நிர்வாக நடவடிக்கையும் குடியரசுத் தலைவரால் மேற்கொள்ளப்படவேண்டும் எனக் கூறுகிறது?
சட்டப்பிரிவு 77
- இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பதவி வகித்த வருடங்களை குறிப்பிடுக:
திரு. ராஜேந்திர பிரசாத்- 1950 – 1962
- திரு.சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் – 1962 -1967
- திரு.ஜாகீர் உசேன்- 1967 -1969
- திரு.வி வி கிரி – 1969- 1974
- திரு.பக்ருதீன் அலி அகமது – 1974 1977
- திரு.நீலம் சஞ்சீவி ரெட்டி- 1977 -1982
- திரு.கியானி ஜெயில் சிங் 1982 1987
- திரு. சங்கர் தயாள் சர்மா- 1992 -1997
- திரு கே ஆர் நாராயணன் – 1997 -2002
- திரு அ.ப.ஜ. அப்துல் கலாம்- 2002 -2007
- திருமதி பிரதீபா பாட்டில் – 2007 -2012
- திரு.பிரணாப் முகர்ஜி- 2012 -2017
- திரு ராம் நாத் கோவிந்த் 2017 முதல்
- பிரதம் அமைச்சரையும் மற்ற அமைச்சர்களையும் நியமிப்பவர் யார்?
குடியரசு தலைவர்
- குடியரசுத் தலைவர் யாருடைய ஆலோசனைப்படி அமைச்சரவை உறுப்பினர்களுக்கு துறைகளை ஒதுக்கீடு செய்கிறார் ?
பிரதம அமைச்சர்
- குடியரசுத் தலைவர் யாரையெல்லாம் நியமனம் செய்கிறார்?
மாநில ஆளுநர்கள் ,உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் ,இதர நீதிபதிகள் ,இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் ,தலைமை கணக்கு தணிக்கையாளர் ,இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்கள் ,மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் இதர உறுப்பினர்கள், மற்ற நாடுகளுக்கான தூதர்கள் மற்றும் உயர் ஆணையர்கள்
- தாழ்த்தப்பட்ட பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் நிலையை ஆய்வு செய்ய ஓர் ஆணையத்தை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் யார்?
குடியரசுத் தலைவர்
- பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை யார் உரையாற்றி துவக்கி வைக்கிறார்?
குடியரசுத்தலைவர்
- ஒவ்வொரு ஆண்டின் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் யாருடைய உரையுடன் தொடங்குகிறது?
குடியரசுத் தலைவர்
- குடியரசுத் தலைவர் ஆண்டுக்கு எத்தனை முறை நாடாளுமன்றத்தை கூட்டுகிறார்?
இரண்டு முறை
- யாருடைய ஒப்புதல் பெற்ற பின்னரே அனைத்து மசோதாக்களும் சட்டம் ஆகின்றன?
குடியரசுத் தலைவர்
- நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் அல்லது ஏதேனும் ஒரு அவையின் கூட்டத்தையும் யார் முடிவுக்குக் கொண்டுவரலாம்?
குடியரசுத் தலைவர்
- மக்களவையின் பதவிக்காலம் எவ்வளவு?
5 ஆண்டுகள்
- மக்களவையின் பதவிக்காலம் முடியும் முன்னரே அதனை கலைக்கும் அதிகாரம் யாருக்கு உண்டு?
குடியரசு தலைவர்
- கலை இலக்கியம் அறிவியல் விளையாட்டு மற்றும் சமூக பணி ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் எத்தனை நபர்களை குடியரசுத் தலைவர் மாநிலங்களவைக்கு நியமிக்கிறார்?
12 நபர்கள்
- ஆங்கிலோ இந்திய சமூகத்தைச் சேர்ந்த எத்தனை நபர்களை மக்களவையில் குடியரசுத்தலைவர் நியமிக்கலாம்?
இரண்டு நபர்கள்
- மத்திய அரசின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தினை யாருடைய அனுமதி பெற்ற பின்னரே மத்திய நிதியமைச்சர் மக்களவையில் சமர்ப்பிப்பார் ?
குடியரசுத் தலைவர்
- இந்திய அரசியலமைப்புச் சட்டம், இந்திய அவசரகால நிதியை யாரிடம் அளித்துள்ளது?
குடியரசுத் தலைவர்
- நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற ஒருவரின் தண்டனையை குறைக்கவும் ஒத்தி வைக்கவும் தண்டனையிலிருந்து விடுவிக்கவும் மன்னிப்பு வழங்கவும் குடியரசுத் தலைவருக்கு இந்திய அரசமைப்பின்படி எந்த சட்டப் பிரிவு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது?
சட்டப்பிரிவு 72
- மத்திய பாதுகாப்பு படையின் தலைமை தளபதி என்ற அதிகாரத்தை குடியரசுத் தலைவருக்கு இந்திய அரசமைப்பின் எந்த சட்டப் பிரிவு வழங்கியுள்ளது ?
சட்டப்பிரிவு 53 (2)
- வெளிநாடுகளுக்கான அனைத்து உடன்படிக்கைகளும் ஒப்பந்தங்களும் யாருடைய பெயராலேயே நடைபெறுகின்றன?
குடியரசுத் தலைவர்
- நெருக்கடி நிலையை அறிவிக்கும் அதிகாரத்தை இந்திய அரசமைப்பு சட்டம் யாருக்கு வழங்கியுள்ளது?
குடியரசுத் தலைவர்
- தேசிய நெருக்கடி நிலையை அறிவிக்கும் சட்டப்பிரிவு என்ன?
352
- மாநில நெருக்கடி நிலையை அறிவிக்கும் சட்டப்பிரிவு என்ன?
356
- இந்தியாவின் நிதி நிலையில் திருப்தியின்மை காணப்படும் போது அறிவிக்கப்படும் நிதி நெருக்கடி நிலையின் சட்டப்பிரிவு என்ன?
360
- கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் அதிகபட்சமாக எத்தனை முறை குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது?
9 முறை
- குடியரசுத் தலைவர் தன்னுடைய பணி துறப்பு கடிதத்தை யாரிடம் வழங்க வேண்டும்?
துணைக் குடியரசுத் தலைவரும்
- எந்த சட்டப் பிரிவின்படி அரசியலமைப்பை மீறிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுவதன் மூலம் குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்யப்படலாம்?
சட்டப்பிரிவு 61
- எந்த சட்டப் பிரிவின்படி குடியரசுத் தலைவர் தன்னுடைய பணி மற்றும் அதிகாரத்தை செய்ய வேண்டும் என எண்ணுவதிலும் செயல்படுத்துவதிலும் எந்த நீதிமன்றத்துக்கும் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை?
சட்டப்பிரிவு 361(1)
- இந்திய சட்டப்பிரிவு 63 இன்படி நாட்டின் இரண்டாவது உயர்ந்த பதவி எது?
துணை குடியரசுத் தலைவர்
- துணை குடியரசுத் தலைவருக்கான வயது தகுதி எவ்வளவு?
35 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்
- எந்த சட்டப் பிரிவின்படி துணை குடியரசுத் தலைவர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
சட்டப்பிரிவு 66(1)
- குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் பதவிகள் ஒரே சமயத்தில் காலியாக இருக்கும் பட்சத்தில் யார் குடியரசுத்தலைவரின் பணிகளை செயலாற்றுவார்கள்?
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
- எந்த ஆண்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எம் இதயத்துல்லா குடியரசுத் தலைவராக நியமிக்கப்பட்டார்?
1969
- துணை குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் கொண்டுவர குறைந்தபட்சம் எத்தனை நாட்களுக்கு முன்னரே துணை குடியரசுத் தலைவருக்கு அறிவிப்பு வழங்கப்படவேண்டும்?
14 நாட்கள்
- மாநிலங்களவையின் தீர்மானம் அல்லது கேள்விகளை அனுமதிப்பதை முடிவு செய்பவர் யார் ?
துணை குடியரசுத் தலைவர்
- குடியரசுத் தலைவர் பதவி காலியாகும்போது துணை குடியரசுத் தலைவர் அதிகபட்சமாக எவ்வளவு காலத்திற்கு குடியரசுத்தலைவரின் பணிகளை கவனிப்பார்?
ஆறுமாதம்
- மாநிலங்களவையில் சட்ட மசோதாவின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பு சமநிலையில் இருக்கும் பட்சத்தில் அரசமைப்பின் எந்த சட்டப் பிரிவின்படி துணை குடியரசுத்தலைவர் வாக்களிக்கலாம் ( casting vote)?
சட்டப்பிரிவு 100
- எந்த இந்திய அரசமைப்புச் சட்டப்பிரிவு குடியரசுத் தலைவருக்கு உதவிடவும் அறிவுரை வழங்கவும் பிரதமரை அமைச்சரவை தலைவராகக் கொண்ட ஒரு மத்திய அமைச்சரவை குழு இருக்கும் என குறிப்பிடுகிறது?
சட்டப்பிரிவு 74(1)
- இந்தியாவின் பிரதம அமைச்சர் பதவி யானது எந்த அரசியல் அமைப்பு முறையிலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது ?
இங்கிலாந்தின் வெஸ்ட்மினிஸ்டர் அரசமைப்பு முறை
- அமைச்சர்களுக்கும் பிரதமருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைப்பவர் யார்?
குடியரசுத் தலைவர்
- பிரதம அமைச்சர் மற்றும் மற்ற அமைச்சர்களின் ஊதியங்களையும் பணிகளையும் தீர்மானிப்பார்கள்?
நாடாளுமன்றம்
- நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாதவர்கள் கூட அமைச்சராகும்பட்சத்தில் அவர் எத்தனை காலத்துக்குள் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்?
ஆறு மாதம்
- அமைச்சர்கள் தனிப்பட்ட முறையிலும் ஒட்டுமொத்தமாக யாருக்கு பொறுப்புடையவர்கள்?
மக்களவைக்கு
- இந்திய பிரதமர்களின் காலங்களை குறிப்பிடுகிறார் திரு.ஜவகர்லால் நேரு- 1947 1964
- திரு லால் பகதூர் சாஸ்திரி 1964 1966
- திருமதி இந்திரா காந்தி 1966 1977
- திரு மொரார்ஜி தேசாய் 1977 1979
- திரு சரண்சிங் 1979 1980
- திருமதி இந்திரா காந்தி 1980 1984
- திரு ராஜீவ் காந்தி 1980 1989
- திரு வி பி சிங் 1989 1990
- திரு சந்திரசேகர் 1990 1991
- திரு பி வி நரசிம்ம ராவ் 1991 1996
- திரு அடல் பிகாரி வாஜ்பாய் மே 1996
- திரு.டி தேவகவுடா 1996 1997
- திரு.ஐ. கே குஜ்ரால் 1997 1998
- திரு அடல் பிகாரி வாஜ்பாய் 1998 2004
- திரு மன்மோகன் சிங் 2004 2014
- திரு நரேந்திர மோடி 2014 முதல்
- அரசியலமைப்பின் எந்த சட்டப்பிரிவு பிரதமரின் கடமைகளைப் பற்றி குறிப்பிடுகிறது?
சட்டப்பிரிவு 78
- அமைச்சரவை கூட்டத்தின் தேதி நிகழ்ச்சிநிரல் குறித்து முடிவு செய்பவர் யார்?
பிரதம அமைச்சர்
- அமைச்சரவையின் தலைவர் யார் ?
பிரதம அமைச்சர்
- குடியரசுத் தலைவருக்கும் அமைச்சரவைக்கும் இடையே பாலமாக செயல்படுபவர் யார் ?
பிரதம அமைச்சர்
- நாட்டின் உண்மையான தலைவர் யார் ?
பிரதம அமைச்சர்
- நாட்டின் முக்கிய செய்தி தொடர்பாளர் யார்?
பிரதம அமைச்சர்
- காமன்வெல்த், அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு, சார்க் நாடுகளின் மாநாடு ஆகியவற்றில் இந்திய நாட்டின் பிரதிநிதியாகக் கலந்து கொள்பவர் யார்?
பிரதமர்
- ஒட்டு மொத்த மக்களவை உறுப்பினர்களில் எத்தனை சதவீதம் மட்டுமே அமைச்சரவை உறுப்பினர்களாக இருக்க வேண்டுமென இந்திய அரசமைப்பு சட்டம் வரையறுத்துள்ளது ?
15%
- மத்திய அமைச்சர்கள் எத்தனை தர நிலைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்?
மூன்று
- மத்திய அமைச்சர்களின் வகைகள் என்னென்ன?
கேபினட் அல்லது ஆட்சிக்குழு அமைச்சர்கள்,இராஜாங்க அமைச்சர்கள்,இணை அமைச்சர்கள்
- நிர்வாகத்தின் மையக்கருத்தை உருவாக்கும் மூத்த அமைச்சர்களின் முறைசாரா அமைப்பிற்கு என்ன பெயர்?
கேபினட்
- இந்திய நாடாளுமன்ற அமைப்பு உள்ளடக்கம் ஆயுட்காலம் அலுவலர்கள் செயல்முறைகள் சிறப்பு சலுகைகள் அதிகாரங்கள் பற்றி எந்த இந்திய அரசமைப்பு பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது ?
பகுதி 5,சட்டப்பிரிவு 79 முதல் 122
- இந்திய நாடாளுமன்றம் எத்தனை பகுதிகளைக் கொண்டுள்ளது?
மூன்று பகுதிகள்
- இந்திய நாடாளுமன்றத்தின் மூன்று பகுதிகள் என்னென்ன?
குடியரசுத் தலைவர், ராஜ்ய சபா மற்றும் லோக் சபா
- மாநிலங்களவை எத்தனை உறுப்பினரை கொண்டது?
250
- மாநிலங்களவையில் எத்தனை உறுப்பினர்கள் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் யூனியன் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள் மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் ?
238 உறுப்பினர்கள்
- மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கு எத்தனை வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்?
30 வயது
- மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?
6 ஆண்டுகள்
- மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் எந்த முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?
ஒற்றை மாற்று வாக்கு மூலம் விகிதாசார பிரதிநிதித்துவ முறை
- எத்தனை மாதங்களுக்கு மேல் ஒரு மசோதா ஒப்புதல் பெறவில்லை எனில் குடியரசுத்தலைவர் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து மசோதாவின் முடக்கத்தை தீர்த்து வைக்கிறார் ?
ஆறுமாதம்
- மாநிலங்களவை எத்தனை உறுப்பினர்கள் பெரும்பான்மையுடன் ஒரு தீர்மானம் ஒப்புதல் பெறவும் அகில இந்திய பணிகளை உருவாக்கவும் நீக்கவும் அதிகாரம் பெற்றுள்ளது?
⅔ உறுப்பினர்கள்
- எங்கு மட்டுமே நிதி மசோதா வினை அறிமுகப்படுத்த முடியும்?
மக்களவை
- எத்தனை நாட்களுக்குள் நிதி மசோதா வினை மாநிலங்களவை ஒப்புதல் அளிக்கவேண்டும்?
14 நாட்கள்
- மக்களவைக்கு அதிகபட்சமாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் எவ்வளவு?
552
- தற்சமயம் மக்களவை எத்தனை உறுப்பினர்களை கொண்டுள்ளது?
545
- மக்களவையில் உறுப்பினர் ஆவதற்கு எத்தனை வயது குறைவுடையவராய் இருத்தல் கூடாது?
25வயது
- நம்பிக்கையில்லாத் தீர்மானம் எந்த அவையில் மட்டுமே அறிமுகப்படுத்த முடியும் ?
மக்களவை
- தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் எவ்வளவு?
18 உறுப்பினர்கள்
- தமிழகத்தில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் எவ்வளவு?
39 உறுப்பினர்கள்
- மக்களவையை தலைமையேற்று நடத்துபவர் யார்?
சபாநாயகர்
- சபாநாயகர் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
மக்களவை உறுப்பினர்கள்
- நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்திற்கு தலைமை வகிப்பவர் யார் ?
சபாநாயகர்
- ஒரு மசோதாவை நிதி மசோதாவா அல்லது சாதாரண மசோதாவா என தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவர் யார்?
சபாநாயகர்
- எந்த ஆண்டு கட்சித் தாவல் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது?
1985
- பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது கூட்டப்படுகிறது?
பிப்ரவரி முதல் மே வரை
- மழைக்கால கூட்டத்தொடர் அல்லது பருவ கால கூட்டத்தொடர் எப்போது கூட்டப்படுகிறது?
ஜூலை முதல் செப்டம்பர் வரை
- குளிர்கால கூட்டத்தொடர் எப்போது கூட்டப்படுகிறது?
நவம்பர் மற்றும் டிசம்பர்
- சட்டம் இயற்றுதல் ,நிர்வாகத்தினை மேற்பார்வையிடுதல், வரவு செலவுத் திட்டத்தினை நிறைவேற்றுதல், பொதுமக்கள் குறைகளை போக்குதல், மேலும் வளர்ச்சித் திட்டங்கள் சர்வதேச உறவுகள், உள்நாட்டு கொள்கைகள் போன்றவற்றை விவாதித்தல் யாருடைய பணி?
நாடாளுமன்றம்
- குடியரசுத் தலைவர் மீதான அரசியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும்,உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் தலைமை தேர்தல் ஆணையர், இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் ஆகியோரை அரசமைப்பு சட்ட விதிகளின்படி பதவி நீக்கம் செய்யவும் அதிகாரம் பெற்றுள்ளது எது?
நாடாளுமன்றம்
- இந்திய அரசமைப்பின் எந்த சட்டப் பிரிவு இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரை நியமிக்க வழிவகை செய்கிறது?
சட்டப்பிரிவு 76
- நாட்டின் உயர்ந்த சட்ட அதிகாரி யார்?
இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்
- இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆவதற்கு எத்தனை ஆண்டுகள் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி இருக்க வேண்டும்?
ஐந்து ஆண்டுகள் (அல்லது உயர் நீதிமன்றத்தில் பத்தாண்டுகள் வழக்குரைஞராக இருக்க வேண்டும்)
- இந்தியாவிலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்காடும் உரிமை யாருக்கு உண்டு?
இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்
- இந்திய அரசமைப்பு சட்டத்தின் பாதுகாவலன் யார்?
உச்சநீதிமன்றம்
- புதுடெல்லியில் அமைந்துள்ள இந்திய உச்சநீதிமன்றம் எப்போது துவங்கப்பட்டது ?
ஜனவரி 28, 1950
- தொடக்கத்தில் உச்ச நீதிமன்றம் எத்தனை நீதிபதிகளை கொண்டு இருந்தது?
ஒரு தலைமை நீதிபதி உட்பட 8 நீதிபதிகள்
- தற்சமயம் உச்ச நீதிமன்றம் எத்தனை நீதிபதிகளை கொண்டுள்ளது?
ஒரு தலைமை நீதிபதி உட்பட 34 நீதிபதிகள்
- இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யாரால் நியமிக்கப்படுகிறார்?
குடியரசுத் தலைவர்
- உச்ச நீதிமன்ற நீதிபதியாக எத்தனை ஆண்டுகள் உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றி இருக்க வேண்டும்?
பத்தாண்டுகள்
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட இதர நீதிபதிகள் எத்தனை வயது வரை பதவியில் நீடிப்பர் ?
65 வயத
- யாருடைய ஒப்புதலின் மூலம் இந்திய தலைமை நீதிபதியின் முடிவின்படி இந்தியாவின் எந்த இடத்திலும் உச்சநீதிமன்றத்தின் அமர்வு அமைக்கப்படலாம் ?
குடியரசுத் தலைவர்
- ஒரு சட்டத்தினை அரசமைப்பு சட்டத்திற்கு முரணானது என அறிவிக்கும் உச்சநீதிமன்றத்தின் அதிகாரத்தின் பெயர் என்ன ?
நீதிப்புனராய்வு
10TH POLITY STUDY NOTES |மத்திய அரசு| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services