- ஒரு நாட்டின் நிர்வாகமானது எந்த அடிப்படை கொள்கைகளை சார்ந்து உள்ளது என்பதை பிரதிபலிக்கும் அடிப்படை சட்டமே ______ஆகும்.
அரசியலமைப்பு
- அரசியலமைப்பு என்ற கொள்கை முதன் முதலில் எங்கு தோன்றியது?
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
- இந்திய அரசியல் நிர்ணய சபை எதன் கீழ் உருவாக்கப்பட்டது?
அமைச்சரவைத் தூதுக்குழு திட்டம்
- அமைச்சரவைத் தூதுக்குழு திட்டம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
1946
- இந்திய அரசியல் நிர்ணய சபையில் எத்தனை மாகாண பிரதிநிதிகள் இடம்பெற்றனர்?
292
- இந்திய அரசியல் நிர்ணய சபையில் எத்தனை சுதேச அரசுகளின் நியமன உறுப்பினர்கள் இடம்பெற்றனர்?
93
- இந்திய அரசியல் நிர்ணய சபையில் பலுசிஸ்தான் சார்பில் எத்தனை பேர் இடம்பெற்றனர்?
ஒருவர்
- இந்திய அரசியல் நிர்ணய சபையில் மாகாண முதன்மை ஆணையர்கள் சார்பில் எத்தனை பேர் இடம்பெற்றனர்?
3
- இந்திய அரசியல் நிர்ணய சபையில் மொத்தம் எத்தனை உறுப்பினர்கள் இடம் பெற்றனர்?
389
- இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் எப்போது நடந்தது?
டிசம்பர் 9 ,1946
- இந்திய அரசியல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக இருந்தவர் யார்?
சச்சிதானந்த சின்கா
- இந்திய அரசியல் நிர்ணய சபையின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் யார்?
H.C முகர்ஜி மற்றும் V.T.கிருஷ்ணமாச்சாரி
- இந்திய அரசியல் நிர்ணய சபையின் கூட்டத் தொடர் எத்தனை அமர்வுகளாக நடைபெற்றது ?
11 அமர்வுகள்
- இந்திய அரசியல் நிர்ணய சபையின் கூட்டத் தொடர் எத்தனை நாட்கள் நடைபெற்றது?
166 நாட்கள்
- இந்திய அரசியல் நிர்ணய சபையின் கூட்டத்தின் போது எத்தனை திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன?
2473
- சட்ட வரைவு குழு தலைவராக நியமிக்கப்பட்டவர் ?
டாக்டர் பி ஆர் அம்பேத்கர்
- இந்திய அரசியலமைப்பின் தந்தை என அறியப்படுபவர்? யார்
டாக்டர் பி ஆர் அம்பேத்கர்
- இந்திய அரசியலமைப்பு எப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது?
நவம்பர் 26 1949
- இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட போது எத்தனை பாகங்கள் இந்திய அரசியலமைப்பில் இருந்தன?
22 பாகங்கள்
- இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட போது எத்தனை சட்டபிரிவுகள் இந்திய அரசியலமைப்பில் இருந்தன?
395 சட்டபிரிவுகள்
- இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட போது எத்தனை அட்டவணைகள் இந்திய அரசியலமைப்பில் இருந்தன?
8 அட்டவணைகள்
- எப்போது இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது?
ஜனவரி 26 1950
- இந்திய அரசமைப்புச் சட்டம் யாரால் கைப்பட எழுதப்பட்டது?
பிரேம் பெஹாரி நரேன் ரைஜடா
- இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த பாணியில் கைப்பட எழுதப்பட்டது?
இத்தாலிய பாணி
- உலகிலுள்ள எழுதப்பட்ட அனைத்து அரசியலமைப்புகளைவிடவும் மிக நீளமான அரசியலமைப்பு?
இந்திய அரசியலமைப்பு
- அரசியலமைப்பிற்கு அறிமுகம் அல்லது முன்னுரை என்பதை குறிக்கும் சொல் எது?
முகவுரை (preamble)
- அரசியலமைப்பின் திறவுகோல் எனக் குறிப்பிடப்படுவது எது
முகவுரை
- குறிக்கோள் தீர்மானத்தை கொண்டு வந்தவர் யார் ?
ஜவஹர்லால் நேரு
- குறிக்கோள் தீர்மானம் எப்போது இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது?
ஜனவரி 22 1947
- முகவுரை எந்த அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின்படி திருத்தப்பட்டது ?
42வது அரசியலமைப்பு சட்ட திருத்தம்
- எந்த ஆண்டு 42வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது
1976
- 42வது சட்ட திருத்தத்தின்படி முகவுரையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட மூன்று புதிய சொற்கள் என்னென்ன?
சமதர்மம், சமயசார்பின்மை ,ஒருமைப்பாடு
- எந்த சொற்களுடன் இந்திய அரசியலமைப்பின் முகவுரை தொடங்குகிறது?
இந்திய மக்களாகிய நாம்
- இந்திய அரசியலமைப்பின் ஆதாரம் எது?
இந்திய மக்கள்
- எந்த ஆண்டு பிரெஞ்சு புரட்சியின்போது சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் ஆகியன முக்கிய முழக்கமாகின?
1789
- சிட்டிசன் எனும் சொல் எந்த சொல்லிலிருந்து பெறப்பட்டது?
இலத்தீன்
- சிவிஸ் எனும் இலத்தீன் சொல்லின் பொருள் என்ன?
ஒரு நகர அரசில் வசிப்பவர்
- இந்திய அரசியலமைப்பின் எந்தப் பாகம், சட்டப்பிரிவுகள் குடியுரிமை பற்றி விளக்குகின்றன?
பாகம்-2 சட்டப் பிரிவில் 5ல் இருந்து 11 வரை
- எந்த ஆண்டு இந்திய குடியுரிமை சட்டம் இயற்றப்பட்டது
1955
- இந்திய குடியுரிமை சட்டம் எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது
8 முறை
- இந்திய குடியுரிமை சட்டம் வழங்கிய காமன்வெல்த் குடியுரிமை எந்த ஆண்டு அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின்படி நீக்கப்பட்டது?
2003
- குடியுரிமை சட்டம் 1955 குடியுரிமை பெற எத்தனை வழிகளை பரிந்துரை செய்கிறது?
5
- குடியுரிமை சட்டம் 1955 பரிந்துரை செய்யும் 5 வழிகள் என்னென்ன?
பிறப்பு ,வம்சாவளி, பதிவுசெய்தல் ,இயல்புரிமை மற்றும் பிரதேச இணைப்பு
- எந்த நாளன்று அல்லது அதற்குப் பின்னரோ இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்திய குடிமக்களாக கருதப்படுகின்றனர்?
1950 ஜனவரி 26
- குடியுரிமை சட்டம் 1955 படி எந்த வழிகளில் குடியுரிமையை இழக்கலாம்?
3
- குடியுரிமை சட்டம் 1955 இன் படி உரிமையை இழக்க பரிந்துரைக்கப்படும் முறைகள் என்னென்ன?
குடியுரிமையை துறத்தல் ,முடிவுறச்செய்தல் ,இழத்தல்
- இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எந்த பகுதி அடிப்படை உரிமைகள் பற்றி கூறுகிறது?
பகுதி 3
- இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எந்த சட்டப்பிரிவுகள் அடிப்படை உரிமைகள் பற்றி கூறுகின்றன?
சட்டப்பிரிவு 12 லிருந்து 35 வரை
- முதலில் இந்திய அரசியலமைப்பு எத்தனை அடிப்படை உரிமைகளை வழங்கியது
ஏழு அடிப்படை உரிமைகள்
- தற்போது எத்தனை அடிப்படை உரிமைகள் உள்ளன
ஆறு அடிப்படை உரிமைகள்
- இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதி இந்தியாவின் மகாசாசனம் என அழைக்கப்படுகிறது?
பகுதி 3
- சமத்துவ உரிமை பற்றி குறிப்பிடும் சட்டப்பிரிவுகள் என்னென்ன?
பிரிவு 14 லிருந்து 18 வரை
- சுரண்டலுக்கு எதிரான உரிமைகள் பற்றி குறிப்பிடும் சட்டப்பிரிவுகள் என்னென்ன?
பிரிவு 23 மற்றும் 24
- சுதந்திர உரிமை பற்றி குறிப்பிடும் சட்டப்பிரிவுகள் என்னென்ன?
பிரிவுகள் 19 முதல் 22 வரை
- சமயச் சார்பு உரிமை பற்றி குறிப்பிடும் சட்டப்பிரிவுகள்
பிரிவு 25 முதல் 28 வரை
- கல்வி கலாச்சார உரிமை பற்றி குறிப்பிடும் சட்டப்பிரிவுகள்
பிரிவு 29 முதல் 30
- அரசியமைப்பு கூப்பிட்டு தீர்வு காணும் உரிமை எந்த பிரிவின்கீழ் வைக்கப்பட்டுள்ளது
பிரிவு 32
- கீழுள்ள பிரிவுகளின்படி பிரிவுகளின் சட்டங்களை குறிப்பிடுக:
பிரிவு 14 – சட்டத்தின் முன் அனைவரும் சமம்
- பிரிவு 15 – மதம் இனம் சாதி பாலினம் மற்றும் பிறப்பிடம் இவற்றின் அடிப்படையில் பாகுபடுத்துவதை தடை செய்தல்
- பிரிவு 16 – பொது வேலைவாய்ப்புகளில் சம வாய்ப்பு அளித்தல்
- பிரிவு 17- தீண்டாமை ஒழித்தல்
- பிரிவு 18 – ராணுவ மற்றும் கல்விசார் பட்டங்களை தவிர மற்ற பட்டங்களை நீக்குதல்
- பிரிவு 19 – பேச்சுரிமை, கருத்து தெரிவிக்கும் உரிமை ,அமைதியான முறையில் கூட்டம் கூறுவதற்கு உரிமை, சங்கங்கள் அமைப்புகள் தொடங்க உரிமை, இந்திய நாட்டிற்குள் விரும்பிய இடத்தில் வசிக்கும் மற்றும் தொழில் செய்யும் உரிமை
- பிரிவு 20 – குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கான உரிமை மற்றும் தண்டனைகளிலிருந்து பாதுகாப்புப் பெறும் உரிமை
- பிரிவு 21 – வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு பாதுகாப்புப் பெறும் உரிமை
- பிரிவு 21A – தொடக்கக் கல்வி பெறும் உரிமை
- பிரிவு 22 – சில வழக்குகளில் கைது செய்து தடுப்புக் காவலில் வைப்பதற்கான பாதுகாப்பு உரிமை
- பிரிவு 23 – கட்டாய வேலை கொத்தடிமை முறை மற்றும் மனித தன்மையற்ற வியாபாரத்தை தடுத்தல்
- பிரிவு 24 – தொழிற்சாலைகள் மற்றும் ஆபத்தான இடங்களில் குழந்தை தொழிலாளர்கள் முறையை ஒழித்தல்
- பிரிவு 25 – எந்த ஒரு சமயத்தினை ஏற்கவும், பின்பற்றவும் பரப்பவும் உரிமை
- பிரிவு 26 – சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை
- பிரிவு 27 – எந்த ஒரு மதத்தையும் பரப்புவதற்காக வரி செலுத்துவதற்கெதிரான சுதந்திரம்
- பிரிவு 28 – மதம் சார்ந்த கல்வி நிறுவனங்களில் நடைபெறும் வழிபாடு மற்றும் அறிவுரை நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமலிருக்க உரிமை
- பிரிவு 29 – சிறுபான்மையினரின் எழுத்து ,மொழி மற்றும் கலாச்சார பாதுகாப்பு
- பிரிவு 30 – சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களை நிறுவி நிர்வகிக்கும் உரிமை
- பிரிவு 32 – தனிப்பட்டவரின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும்போது நீதிமன்றத்தை அணுகி உரிமை பெறுதல்
- அடிப்படை உரிமைகள் பட்டியலில் இருந்து சொத்துரிமை எத்தனையாவது சட்ட திருத்தத்தின்படி நீக்கப்பட்டது?
44வது அரசியலமைப்பு சட்ட திருத்தம்
- 44வது அரசியலமைப்பு சட்ட திருத்தம் எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது?
1978
- இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவின்படி சொத்துரிமை நீக்கப்படுவதற்கு முன் இருந்தது?
பிரிவு 31
- தற்போது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எந்தப் பகுதி மற்றும் பிரிவின்கீழ் சொத்துரிமை ஒரு சட்ட உரிமையாக வைக்கப்பட்டுள்ளது?
பகுதி XII, பிரிவு 300A
- குடிமக்களின் அடிப்படை உரிமைகளுடன் தொடர்புடைய முதல் எழுதப்பட்ட ஆவணம் எது?
இங்கிலாந்து மன்னரால் வெளியிடப்பட்ட உரிமைகள் பட்டயம்
- உரிமைகள் பட்டயம் யாரால் வெளியிடப்பட்டது?
இங்கிலாந்து மன்னர் முதலாம் ஜான்
- எந்த ஆண்டு உரிமைகள் பட்டயம் வெளியிடப்பட்டது?
1215
- இங்கிலாந்து மன்னரால் வெளியிடப்பட்ட உரிமைகள் பட்டயம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மகாசாசனம்
- நீதிமன்ற முத்திரையுடன் நீதிமன்றத்தால் வெளியிடப்படும் கட்டளை அல்லது ஆணை எவ்வாறு அழைக்கப்படும்?
நீதிப் பேராணை
- சில சட்டங்களை நிறைவேற்றாமல் தடைசெய்ய நீதிமன்றத்தால் வெளியிடப்படும் ஆணையின் பெயரென்ன?
நீதிப்பேராணை
- உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் எத்தனை வகையான நீதிப்பேராணை வெளியிட அதிகாரம் பெற்றுள்ளன
5
- நீதிமன்றங்கள் வெளியிடும் ஐந்து வகையான நீதிப் பேராணைகள் என்னென்ன?
ஆட்கொணர்வு நீதிப்பேராணை,கட்டளை உறுத்தும் நீதிப் பேராணை, தடை உறுத்தும் நீதிப் பேராணை ,ஆவணக் கேட்பு நீதிப்பேராணை, தகுதி முறை வினவும் நீதிப்பேராணை
- அரசியலமைப்பின் பாதுகாவலன் என அழைக்கப்படுவது எது ?
உச்சநீதிமன்றம்
- உச்ச நீதிமன்றம் ஏன் அரசியலமைப்பின் பாதுகாவலன் என அழைக்கப்படுகிறது?
மக்களின் உரிமைகளை காப்பதினால்
- சட்டத்திற்கு புறம்பாக ஒருவர் கைது செய்யப்படுவதில் இருந்து பாதுகாக்கும் நீதிப்பேராணை எது?
ஆட்கொணர்வு நீதிப்பேராணை
- மனுதாரர் சட்ட உதவியுடன் தனது மனு தொடர்பான பணியினை சம்பந்தப்பட்ட துறையில் இருந்து நிறைவேற்றிக்கொள்ள முடியும் இது எவ்வகை நீதிப்பேராணை?
கட்டளையுறுத்தும் நீதிப் பேராணை
- எந்த நீதிப்பேராணை ஒரு கீழ் நீதிமன்றம் தனது சட்ட எல்லையை தாண்டி செயல்படுவதை தடுக்கிறது ?
தடையுறுத்தும் நீதிப்பேராணை
- எந்த நீதிப்பேராணையின் மூலம் உயர் நீதிமன்றம் ஆவணங்களை நியாயமான பரிசீலனைக்கு தனக்கோ அல்லது உரிய அதிகாரிக்கோ அனுப்ப செய்ய கீழ் நீதிமன்றங்களுக்கு உத்தரவிட முடியும்?
ஆவணக் கேட்பு பேராணை
- என்ன பேராணை சட்டத்திற்குப் புறம்பாக தகாத முறையில் அரசு அலுவலகத்தை கைப்பற்றுவதை தடைசெய்கிறது?
தகுதிமுறை நீதிப்பேராணை
- எந்த பிரிவின் கீழ் குடியரசுத் தலைவரால் அவசரநிலை அறிவிக்கப்பட்டும்பொழுது சட்டப் பிரிவு 19ன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சுதந்திரம் தாமாகவே நிறுத்தப்படுகிறது?
சட்டப்பிரிவு 352
- எந்த சூழ்நிலையிலும் குடியரசுத் தலைவரால் எந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு கீழ் வழங்கப்பட்ட உரிமைகளை தடை செய்ய முடியாது?
சட்டப்பிரிவு 20 மற்றும் 21
- அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ளது?
பகுதி-4
- இந்திய அரசியலமைப்பின் எந்த சட்ட பிரிவுகள் அரசு நெறிமுறைக் கோட்பாடுகளை குறிப்பிடுகின்றன?
சட்டப்பிரிவு 36 முதல் 51 வரை
- அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் பொருளடக்கம் மற்றும் வழிகாட்டுதல் அடிப்படையில் எத்தனை பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன?
மூன்று பிரிவுகள்
- அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் இன் மூன்று பிரிவுகள் என்னென்ன?
சமதர்ம காந்திய மற்றும் தாராள அறிவு சார்ந்தவை
- அரசு நெறிமுறை கோட்பாடுகளின் நோக்கமென்ன?
சமுதாய நலனை மக்களுக்கு தருவது
- அரசு நெறிமுறைக் கோட்பாடுகளை இந்திய அரசமைப்பின் புதுமையான சிறப்பம்சம் என கூறியவர் யார்?
டாக்டர் பி ஆர் அம்பேத்கர்
- இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவு திருத்தப்பட்டு பிரிவு 21A சேர்க்கப்பட்டுள்ளது?
பிரிவு 45
- பிரிவு 21Aஇல் தொடக்கக் கல்வியை அடிப்படை உரிமையாக சேர்க்கப்பட்டுள்ளது எத்தனையாவது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி சேர்க்கப்பட்டுள்ளது?
86 வது அரசியலமைப்பு சட்ட திருத்தம்
- 86 வது சட்டத்திருத்தம் எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது
2002
- EECE-என்பதன் விரிவாக்கம் என்ன?
Early childhood care and education
- பிரிவு 21A ன் கீழ் எத்தனை வயது வரை உள்ள குழந்தைகளுக்கு முன்பருவ மழலையர் கல்வியை வழங்க அறிவுறுத்துகிறது?
6 வயது வரை
- அடிப்படை உரிமைகள் எந்த அரசியலமைப்பில் இருந்து பெறப்பட்டவை
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
- அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் எந்த அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது?
அயர்லாந்து
- இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கடமைகள் என்பவை எந்த அரசியலமைப்பின் தாக்கத்தால் சேர்க்கப்பட்டவை ?
முன்னால் சோவியத் யூனியன்
- அடிப்படை கடமைகள் குறித்து ஆராய பரிந்துரை செய்யப்பட்ட கமிட்டி எது?
சர்தார் ஸ்வரன் சிங் கமிட்டி
- சர்தார் ஸ்வரன் சிங் கமிட்டி எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
1976
- எத்தனையாவது சட்டத்திருத்தம் நமது அரசியலமைப்பில் குடிமக்களின் பொறுப்புகள் சிலவற்றை சேர்த்தது?
42-வது சட்டத்திருத்தம்
- 42வது அரசியலமைப்பு சட்ட திருத்தம் எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது?
1976
- அரசியலமைப்பின் கடமைகள் இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் உள்ளன?
பகுதி IV A
- IV A பகுதி எந்த ஒரே ஒரு பிரிவை மட்டும் கொண்டது?
51 A
- அடிப்படை கடமைகள் உருவாக்கப்பட்டபோது எத்தனை அடிப்படை கடமைகள் இருந்தது?
பத்து
- தற்போது எத்தனை அடிப்படை கடமைகள் உள்ளன?
11
- இறுதியாக எந்த ஆண்டு பதினோராவது அடிப்படை கடமை அறிமுகப்படுத்தப்பட்டது?
2002
- 11வது அடிப்படைக் கடமையாக இயற்றப்பட்டது எது?
பெற்றோர்கள் அல்லது இந்திய குடிமக்கள் 6 முதல் 11 வயது வரை உள்ள தங்கள் குழந்தைகள் அனைவருக்கும் கல்வி பெறும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தர வேண்டும்
- மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான அதிகாரப் பகிர்வு பட்டியலில் எத்தனை பட்டியல் குறிப்பிடப்பட்டுள்ளது?
3
- மூன்று அதிகாரப்பகிர்வு பட்டியல்கள் என்னென்ன?
மத்திய பட்டியல், மாநில பட்டியல் ,பொதுப்பட்டியல்
- மத்திய அரசுக்கு சொந்தமான பட்டியலில் சட்டம் இயற்றும் அதிகாரத்தை எது பெற்றுள்ளது ?
நாடாளுமன்றம்
- மத்திய அரசு பட்டியலில் தற்போது எத்தனை துறைகள் உள்ளன?
100
- மாநில அரசு பட்டியலில் தற்போது எத்தனை துறைகள் உள்ளன?
61
- பொதுப்பட்டியலில் தற்போது எத்தனை துறைகள் உள்ளன?
52
- எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின்படி மாநிலப் பட்டியலிலிருந்து
5 துறைகள் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது?
42வது அரசியலமைப்பு சட்ட திருத்தம். 1976
- மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட 5 துறைகள் என்னென்ன?
கல்வி ,காடுகள், எடைகள் மற்றும் அளவைகள் ,பறவைகள் மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பு, மற்றும் உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்ற அமைப்புகளை தவிர பிற நீதிமன்றங்களின் நீதி நிர்வாகம்
- மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே பொதுப்பட்டியலில் உள்ள துறைகள் குறித்து சட்டம் இயற்றும் பொழுது முரண்பாடு ஏற்பட்டால் எது
இயற்றும் சட்டமே இறுதியானது?
மத்திய அரசு
- தமிழக அரசு மத்திய மாநில அரசுகளின் உறவுகள் குறித்து முழுவதுமாக ஆராய யாருடைய தலைமையின்கீழ் மூவர் குழு ஒன்றை நியமித்து?
டாக்டர் பி.வி ராஜமன்னார்
- டாக்டர் பி.வி ராஜமன்னார் குழு எந்த ஆண்டு நியமிக்கப்பட்டது?
1969
- மத்திய மாநில அரசுகளின் நிதி சார்ந்த உறவுகளைப் பற்றி விளக்கும் அரசியலமைப்பு சட்டத்தின் பகுதி மற்றும்
சட்டப் பிரிவு என்ன?
பகுதி XII சட்டப்பிரிவு 268 இலிருந்து 293 வரை
- எந்தப் பிரிவின் கீழ் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட்ட நிதிக் குழு பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசால் சில வரிகள் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு மத்திய அரசாலும் மாநில அரசாலும் பிரித்துக்க்கொள்ளப்படுகின்றன?
இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 280
- மத்திய மாநில அரசுகளின் உறவினை விசாரிக்க முன்னாள் பிரதமர் திருமதி.இந்திராகாந்தி அவர்களால் நியமிக்கப்பட்ட குழு எது?
சர்க்காரியா குழு
- சர்க்காரியா குழு எந்த ஆண்டு நியமிக்கப்பட்டது
1983
- சர்க்காரியா குழுவின் 247 பரிந்துரைகளில் எத்தனை பரிந்துரைகளை மத்திய அரசு செயல்படுத்தியது ?
180
- எந்த ஆண்டு மாநிலங்களுக்கிடையிலான குழு அமைக்கப்பட்டது
1990
- அலுவலக மொழிகள் பற்றி விவரிக்கும் சட்டப்பிரிவுகள் என்னென்ன?
343 லிருந்து 351 வரை
- அரசியலமைப்பின் எந்த சட்ட பகுதி அலுவலக மொழிகள் பற்றி விவரிக்கின்றன?
பகுதி XVII
- முதலாவது மொழி குழு எந்த ஆண்டு நியமிக்கப்பட்டது?
1955
- முதலாவது மொழி குழு தனது அறிக்கையை எந்த ஆண்டு சமர்ப்பித்தது
1956
- முதலாவது மொழி குழு அறிக்கையின் தொடர்ச்சியாக நாடாளுமன்றம் எந்த ஆண்டில் அலுவலக மொழி சட்டம் இயற்றியது
1963
- எந்த ஆண்டு அலுவலக மொழிகள் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது?
1967
- மொழிகள் அரசியலமைப்பின் எத்தனையாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது?
எட்டாவது அட்டவணை
- தொடக்கத்தில் எத்தனை மொழிகள் அரசியலமைப்பின் அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டிருந்தன?
14 மொழிகள்
- தற்போது எத்தனை அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் அட்டவணையில் உள்ளன?
22 மொழிகள்
- எந்த ஆண்டு இந்திய அரசு செம்மொழிகள் எனும் புதிய வகைப்பாட்டினை ஏற்படுத்த தீர்மானித்தது
2004
- தற்போதுவரை எத்தனை மொழிகள் செம்மொழி தகுதியைப் பெற்றுள்ளன
6
- முதன் முதலில் செம்மொழி தகுதியைப் பெற்ற மொழி எது
தமிழ்
- தமிழ் மொழி எந்த ஆண்டு செம்மொழி தகுதியைப் பெற்றது
2004
- சமஸ்கிருதம் எந்த ஆண்டு செம்மொழித் தகுதியைப் பெற்றது?
2005
- தெலுங்கு எந்த ஆண்டு செம்மொழி தகுதியைப் பெற்றது ?
2008
- கன்னடம் எந்த ஆண்டு செம்மொழி தகுதியைப் பெற்றது?
2008
- மலையாளம் எந்த ஆண்டு செம்மொழி தகுதியைப் பெற்றது?
2013
- ஒடியா எந்த ஆண்டு செம்மொழி தகுதியைப் பெற்றது?
2014
- அரசியலமைப்பின் எத்தனை வகையான அவசர நிலைகள் பற்றி கூறப்பட்டுள்ளது ?
மூன்றுவகை
- மூன்று வகை அவசர நிலைகள் என்னென்ன?
தேசிய அவசர நிலை ,மாநில அவசர நிலை ,பொருளாதார நிலை
- தேசிய அவசர நிலையின் சட்டப்பிரிவு என்ன?
352
- தேசிய அவசர நிலையை அறிவிக்கலாம்?
குடியரசுத் தலைவர்
- எப்போது தேசிய அவசரநிலை கொண்டுவரப்படும் ?
போர் வெளிநாட்டினர் ஆக்கிரமிப்பு அல்லது ஆயுதமேந்திய கிளர்ச்சி அல்லது உடனடி ஆபத்து அல்லது அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால்
- போர் அல்லது வெளிநாட்டினர் ஆக்கிரமிப்பின் காரணமாக அவசர நிலை அறிவிக்கப்படும் பொழுது அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வெளிப்புற அவசரநிலை
- ஆயுதமேந்திய கிளர்ச்சி காரணமாக அவசர நிலை அறிவிக்கப்படும் பொழுது அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
உள்நாட்டு அவசர நிலை
- தேசிய அவசரநிலை எந்தெந்த ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டன?
1962,1971,1975
- மாநில அவசரநிலை எந்த சட்டப்பிரிவின் கீழ் அறிவிக்கப்படுகிறது ?
356
- மாநில அவசர நிலை 352ன்ப்படி நடைமுறையில் இருந்தாலும் அல்லது தேர்தல் ஆணையம் சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்கு தகுந்த சூழல் இல்லை என்று சான்றிதழ் அளித்தாலும் எத்தனை ஆண்டுகள் தாண்டி தொடரமுடியும்?
ஓராண்டு
- மாநில அவசர நிலையின் அதிகபட்ச காலம் எவ்வளவு?
மூன்று ஆண்டுகள்
- இந்தியாவில் முதன் முறையாக எந்த ஆண்டு குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது?
1951
- இந்தியாவில் முதன் முறையாக எந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது?
பஞ்சாப்
- நிதி சார்ந்த அவசரநிலை எந்த சட்டப் பிரிவின் கீழ் அறிவிக்கப்படும்?
360
- நிதி சார்ந்த அவசர நிலையின் போது மத்திய மாநில அரசு ஊழியர்களின் ஊதியம் படிகள் யாருடைய ஆணையின் மூலம் குறைக்கப்படும் ?
குடியரசுத் தலைவர்
- “அமெண்ட்மெண்ட்” எனும் சொல்லின் பொருள் என்ன ?
மாற்றம், மேம்படுத்துதல் மற்றும் சிறு மாறுதல்
- அரசியலமைப்பின் எந்தப் பகுதி அரசியல் அமைப்பினை சட்ட திருத்தம் செய்வது பற்றிய நடைமுறைகளை தெரிவிக்கிறது?
பகுதி XX
- அரசியலமைப்பின் எந்தப் சட்டப்பிரிவு அரசியல் அமைப்பினை சட்ட திருத்தம் செய்வது பற்றிய நடைமுறைகளை தெரிவிக்கிறது ?
சட்டப்பிரிவு 368
- அரசியலமைப்பு சட்ட திருத்தம் செய்யப்படும்போது நாடாளுமன்றத்தின் எந்த அவைகளில் அரசியல் சட்டத்திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட வேண்டும்?
இரு அவைகளிலும்
- அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை எவற்றால் மட்டுமே கொண்டு வரமுடியும்?
நாடாளுமன்றம்
- அரசியலமைப்பின் 368 ஆவது சட்டப்பிரிவு எத்தனை வகைகளில் அரசியலமைப்பு சட்டத் திருத்தங்களை செய்ய வழிவகை செய்கிறது?
மூன்று வகைகள்
- மூன்று சட்டத்திருத்த வழிமுறைகள் என்னென்ன?
நாடாளுமன்றத்தின் சாதாரண அறுதிப் பெரும்பான்மை மூலம் திருத்தப்படுவது ,நாடாளுமன்றத்தின் சிறப்பு அறுதிப் பெரும்பான்மை மூலம் திருத்தப்படுவது, நாடாளுமன்றத்தின் சிறப்பு அறுதி பெரும்பான்மையுடன் பாதிக்கும் மேற்பட்ட மாநில சட்டமன்றங்களில் ஒப்புதலை பெறுவதன் மூலம் திருத்தப்படுவது
- அரசியலமைப்பின் எத்தனையாவது சட்டத்திருத்தம் சிறிய அரசியலமைப்பு என அறியப்படுகிறது?
42-வது சட்டத்திருத்தம்
- எந்த ஆண்டு அரசியலமைப்பு சட்ட செயல்பாட்டிற்கான தேசிய சீராய்வு ஆணையம் இந்திய அரசால் அமைக்கப்பட்டது?
2000
- அரசியலமைப்பு செயல்பாடு குறித்து ஆய்வு செய்ய யாருடைய தலைமையில் தேசிய சீராய்வு ஆணையம் அமைக்கப்பட்டது?
திரு.எம்.என்.வெங்கடாசலய்யா
- அரசின் பல்வேறு நிலைகள் அவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் பங்களிப்புகள் குறித்து புதிய நோக்கத்தோடு ஆராய யாருடைய தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது ?
எம்.எம்.பூஞ்சி
- எம்.எம்.பூஞ்சி ஆணையம் எப்போது ஏற்படுத்தப்பட்டது?
ஏப்ரல் 2007
10TH POLITY STUDY NOTES |இந்திய அரசியலமைப்பு| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services