TNPSC TAMIL&GK ONELINERS (33,000+) PDF MATERIALS : [WD_Button id=9633]
TNPSC PREVIOUS YEAR QUESTIONS BANK [22,000+ MCQ] : [WD_Button id=9638]
- ஒளி என்ன வடிவில் பரவுகிறது?
அலை வடிவம்
- ஒளி செல்லும் பாதை எவ்வாறு அளிக்கப்படுகிறது?
ஒளிக்கதிர்
- ஒளிக்கதிர்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது ? ஒளிக்கற்றை
- ஒளியை வெளியிடும் பொருட்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
ஒளி மூலங்கள்
- சில ஒளி மூலங்கள் தங்களுடைய சுய ஒளியை வெளியிடுகின்றன. இவை எவ்வாறு அழைக்கப்படும்?
ஒளிரும் பொருட்கள்
- ஒளிப் பரவ எந்த ஊடகம் தேவை?
எந்த ஊடகமும் தேவையில்லை
- ஒளியின் திசைவேகம் எவ்வளவு?
3×10^8 மீ வி^-1
- ஒளியானது அலை வடிவில் செல்வதால் அது என்ன?
பண்புகளைப் பெற்றிருக்கும்? அலைநீளம்(λ ) மற்றும் அதிர்வெண்
- ஒளிக்கதிரொன்று ஓர் ஒளி புகும் ஊடகத்தில் இருந்து மற்றொரு
ஒளிபுகும் ஊடகத்திற்குச் சாய்வாகச் செல்லும்போதும் ஒளிக்கதிர் தன் பாதையில் இருந்து விலகிச் செல்கிறது. ஒளிக்கதிரின் பாதையில் ஏற்படும் இந்த விலகல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஒளி விலகல்
- “ஒளிக்கதிர் ஓர் ஊடகத்தில் இருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும்போது படுகதிர், விலகுகதிர்,படுபுள்ளியில் விலகல் அடையும் பரப்புக்குச் செங்குத்தாக வரையப்படும் கோடு ஆகியவை ஒரே தளத்தில் அமைகின்றன” இது என்ன விதி?
ஒளிவிலகலின் முதல் விதி
- “ஒளிக்கதிர் ஓர் ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குச் செல்லும்போது ,படுகோணத்தின் சைன் மதிப்பிற்கும், விலகு கோணத்தின் சைன் மதிப்பிற்கும் இடையே உள்ள தகவானது அவ்விரு ஊடகங்களின் ஒளிவிலகல் எண்களின் தகவிற்கு சமம். இவிவதி எவ்வாறு அழைக்கப்படும்?
ஸ்நெல் விதி
- எது ஒரு ஊடகத்தில் ஒளிக்கதிர் திசைவேகம் எவ்வாறு இருக்கும் என்பதை தெரிவிக்கின்றது ?
ஒளிவிலகல் எண்
- காற்றில் அல்லது வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகத்திற்கும் , மற்றொரு ஊடகத்தில் ஒளியின் திசைவேகத்திற்க்கும் இடையே உள்ள தகவு எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?
ஒளிவிலகல் எண்
- ஒளியின் திசைவேகமானது ஒளிவிலகல் எண் அதிகமுள்ள ஊடகத்தில் எவ்வாறு அமையும்?
குறைவாக
- ஒளியின் திசைவேகமானது ஒளிவிலகல் எண் குறைவான ஊடகத்தில் எவ்வாறு அமையும்?
அதிகமாக
- ஓர் ஒளிக்கதிரானது அடர்வு மிகு ஊடகத்திலிருந்து அடர்வு குறைந்த ஊடகத்திற்குச் செல்லும்போது விலகு கதிர் எதை விட்டு விலகிச்செல்லும்?
செங்குத்துக் கோடு
- ஓர் ஒளிக்கதிரானது அடர்வு குறைந்த ஊடகத்திலிருந்து அடர்வு மிகு ஊடகத்திற்குச் செல்லும்போது விலகு கதிர் எதை நோக்கி விலகிச்செல்லும்?
செங்குத்துக் கோடு
- ஓர் ஒளி மூலமானது ஒரே ஒரு நிறத்தைக் கொண்ட ஒளியை வெளியிடுமானால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
ஒற்றை ஒளி மூலம்
- வெள்ளொளி கற்றையானூஉ, கண்ணாடி, நீர் போன்ற ஒளிபுகும் ஊடகத்தில் ஒளிவிலகல் அடையும் போது அதில் உள்ள நிறங்கள் தனித்தனியாக பிரிகை அடைகின்றன. இந்நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படும் ?
நிறப்பிரிகை
- நிறங்களின் தொகுப்பானது எவ்வாறு அழைக்கப்படும்?
நிறமாலை
- நிற மாலை என்னென்ன நிறங்களை கொண்டுள்ளது?
ஊதா, கருநீலம், நீலம், பச்சை ,மஞ்சள் ,ஆரஞ்சு மற்றும் சிவப்பு
- ஊடகத்தில் ஒளிக்கதிரின் விலகு கோணமானது எதைப் பொறுத்து மாறுபடுகிறது?
நிறங்கள்
- கண்ணுறு ஒளியில் எந்த நிறம் மிக குறைந்த விலகுக் கோணத்தை பெற்றுள்ளது?
சிவப்பு நிறம்
- கண்ணுறு ஒளியில் எந்த நிறம் மிக அதிகமாக விலகுக் கோணத்தை பெற்றுள்ளது?
ஊதா நிறம்
- எந்த விதிப்படி விலகு கோணமானது ஊடகத்தின் ஒளிவிலகல் எண்ணை சார்ந்து அமையும்?
ஸ்நெல் விதி
- ஒரு ஊடகத்தின் ஒளிவிலகல் எண் எதை சார்ந்தது?
ஒளிக்கதிரின் அலைநீளம்
- சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தில் நுழையும்போது வளிமண்டலத்தில் உள்ள பல்வேறு வாயு அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளால் அனைத்து திசைகளிலும் விலகல் அடைய செய்யப்படுகிறது.இந்த நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஒளிசிதறல்
- ஒளிக்கற்றையின் தொடக்க மற்றும் இறுதி ஆற்றலை அடிப்படையாகக் கொண்டு ஒளிக்கதிர்களை எத்தனை வகையாக பிரிக்கலாம்? அவை என்னென்ன?
இரண்டு வகை: மீட்சிச் செய்தல் மற்றும் மீட்சியற்ற சிதறல்
- சிதறல் அடையும் ஒளி கற்றையின் தொடக்க மற்றும் இறுதி ஆற்றல்கள் சமமாக இருப்பின் அச்சிதறல் எவ்வாறு அழைக்கப்படும்?
மீட்சி சிதறல்
- சிதறல் அடையும் ஒளிக்கற்றை தொடக்க மற்றும் இறுதி ஆற்றல்கள் சமமற்று இருப்பின் அச்சிதறல் எவ்வாறு அழைக்கப்படும் ?
மீட்சியற்ற சிதறல்
- சிதறலை உண்டாக்கும் பொருளின் தன்மை மற்றும் அளவைப் பொறுத்து சிதறலை எவ்வாறு வகைப்படுத்தலாம்?
ராலே ஒளிச்சிதறல், மீ ஒளிச்சிதறல்,டிண்டால் ஒளிச்சிதறல் ,ராமன் ஒளிச்சிதறல்
- சூரியனிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் வளிமண்டலத்திலுள்ள வாயு அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளால் சிதறடிக்கப்படு.ம் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ராலே ஒளிச்சிதறல்
- ஓர் ஒளிக்கதிர் சிதறல் அடையும் அளவானது அதன் அலைநீளத்தின் நான்மடிக்கு எதிர்த்தகவில் இருக்கும் என்பது என்ன விதி?
ராலே சிதறல் விதி
- எந்த விதியின் படி குறைந்த அலைநீளம் கொண்ட நிறமானது அதிக அலைநீளம் கொண்ட நிறத்தை விட அதிகமாக சிதறல் அடையும் ?
ராலே சிதறல் விதி
- ஒளிச் சிதறலை ஏற்படுத்தும் துகளின் விட்டமானது, படும் ஒளிக்கதிரின் அலைநீளத்திற்குச் சமமாகவோ அல்லது அலை நீளத்தை விட அதிகமாக இருக்கும்போது என்ன சிதறல் ஏற்படுகிறது?
மீ-ஒளிசிதறல்
- மிக நுண்ணிய துகள்கள் மற்றொரு பொருளில் சம அளவில் விரவி இருப்பதை எவ்வாறு அழைக்கின்றோம்?
கூழ்மம்
- ஒரு கூழ்மக் கரைசலில் உள்ள கூழ்மத்துகளால் ஒளிக்கதிர்கள் சிதறடிக்கப்படுகின்ற நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படும் ?
டிண்டால் ஒளிசிதறல் அல்லது டிண்டால் விளைவு
- ஒளிக்கதிரானது தூய திரவங்கள் மற்றும் ஒளிபுகும் தன்மை கொண்ட திண்மங்களில் உள்ள துகள்களுடன் இடைவினை புரிவதன் காரணமாக ஒளிக்கதிரின் அலைநீளம் மற்றும் அதிர்வெண்ணில் மாற்றங்கள் ஏற்படும் நிகழ்வு எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?
ராமன் ஒளிச்சிதறல்
- படுகதிர் அதிர்வெண்ணுக்குச் சமமான அதிர்வெண்ணைக் கொண்ட நிறமாலை வரிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ராலே வரிகள்
- புதிய அதிர்வெண்களைக் கொண்ட நிறமாலை வரிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
ராமன் வரிகள்
- படுகதிரின் அதிர்வெண்ணை விட குறைவான அதிர்வெண் கொண்ட நிறமாலை வரிகளை எவ்வாறு அழைக்கிறோம் ?
ஸ்டோக் வரிகள்
- படுகதிரின் அதிர்வெண்ணை விட அதிகமான அதிர்வெண்ணைக் கொண்ட நிறமாலை வரிகளை எவ்வாறு அழைக்கின்றோம்?
ஆண்டிஸ்டோக்வரிகள்
- இரு பரப்புகளுக்கு இடைப்பட்ட ஒளிபுகும் தன்மை கொண்ட ஊடகம் எவ்வாறு அழைக்கப்படும்?
லென்சு
- எந்த லென்ஸ் இருபுறமும் கோளக பரப்புகளை கொண்டதும் மையத்தில் தடித்தும் ஓரங்களில் மெலிந்தும் காணப்படும் ?
குவிலென்சு அல்லது இருபுறக் குவிலென்சு
- குவிக்கும் லென்சுகள் என அழைக்கப்படுபவை எவை?
குவிலென்சு
- எந்து லென்சு இருபுறமும் உள்நோக்கி குழிந்த கோளகப் பரப்புகளைக் கொண்டதும் மையத்தில் மெலிந்தும் ஓரங்களில் தடித்தும் காணப்படும் ?
குழிலென்சு அல்லது இருபுறக் குழிலென்சு
- விரிக்கும் லென்சுகள் என அழைக்கப்படுபவை எவை?
குழிலென்சு
- ஓர் இருபுற குவிலென்சின் ஒரு பரப்பு சமதள பரப்பாக அமைந்திருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
தட்ட குவிலென்சு
- ஓர் இருபுற குழிலென்சின் ஒரு பரப்பு சமதள பரப்பாக அமைந்திருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
தட்ட குழிலென்சு
- குவிலென்ஸில் பொருள் ஈறில்லா தொலைவில் வைக்கப்படும்போது, முதன்மை குவியத்தில் என்ன உருவாக்கப்படுகிறது?
மெய்பிம்பம்
- ஒளிப்படக் கருவியில் பயன்படும் லென்சு எது?
குவிலென்சு
- உருப்பெருக்கும் கண்ணாடிகள் ,நுண்ணோக்கிகள் ,தொலைநோக்கிகள் மற்றும் நழுவப்படவீழ்த்திகள் போன்றவற்றில் பயன்படும் லென்சு?
குவி லென்ஸ்
- தூரப்பார்வை என்ற பார்வை குறைபாட்டை சரிசெய்ய பயன்படும் லென்சு எது?
குவிலென்சு
- லென்சிற்க்கும் பொருளுக்கும் இடையே உள்ள தொலைவு குறையும்போது எவற்றுக்கு இடையேயான தொலைவு குறைகிறது?
பிம்பம் மற்றும் லென்சிற்கு இடையேயான தொலைவு
- கலிலியோ தொலைநோக்கியில் கண்ணருகு லென்சாக பயன்படுவது எது?
குழிலென்சு
- எந்த லென்ஸ் வெளியாட்களைத் தெரிந்துகொள்ள வீட்டின் கதவுகளில் ஏற்படுத்தப்படும் உளவுத் துளைகளில் வெளிப்படுத்தப்படுகின்றன?
குழிலென்சு
- லென்சு சமன்பாடு என்ன?
1/f= (1/v)-(1/u)….
- லென்சுகளின் கதிர் வரைபடங்களில் பல்வேறு தொலைவுகளை அளவிடுவதற்கு எந்த குறியீட்டு மரபு பயன்படுத்தப்படுகிறது?
கார்டீசியன் குறியீட்டு மரபு
- கார்டீசியன் குறியீட்டு மரபின்படி பொருள் எப்போதும் லென்சிற்கு எந்த பக்கம் வைக்கப்பட வேண்டும்?
இடப்பக்கம்
- கார்டீசியன் குறியீட்டு மரபின்படி படுகதிரின் திசையில் மேற்கொள்ளப்படும் அளவீடுகளை எவ்வாறு கொள்ள வேண்டும்?
நேர்க்குறி
- கார்டீசியன் குறியீட்டு மரபின்படி படுகதிரின் திசைக்கு எதிர் திசையில் மேற்கொள்ளப்படும் அளவீடுகளை எவ்வாறு கொள்ள வேண்டும்?
எதிர்க்குறி
- உருபெருக்கத்தின் மதிப்பு ஒன்றை விட அதிகமாக இருந்தால் பிம்பம் எவ்வாறு கிடைக்கும் ?
பொருளை விட பெரிய பிம்பம்
- உருபெருக்கத்தின் மதிப்பு ஒன்றை விட குறைவாக இருந்தால் பிம்பம் எவ்வாறு கிடைக்கும் ?
பொருளை விட சிறிய பிம்பம்
- லென்சை உருவாக்கும் ஒருவர் லென்ஸின் எவற்றை பற்றி அறிந்திருக்கவேண்டும்?
வளைவு ஆரம் மற்றும் ஒளிவிலகல் எண்
- 1/f=(μ-1) (1/R1-1/R2)…. இது எவ்வாறு அழைக்கப்படும்?
லென்சை உருவாக்குவோர் சமன்பாடு
- லென்ஸ் சமன்பாடு மற்றும் லென்சை உருவாக்குவோர் சமன்பாடு ஆகியவை எந்த லென்சுகளுக்கு மட்டுமே பொருந்தக் கூடியவை ?
மெல்லிய லென்ஸ்
- லென்ஸ் ஒன்று தன் மீது விழும் ஒளிக்கதிர்களை குவிக்கும் அல்லது விரிக்கும் அளவு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
லென்சின் திறன்
- லென்சின் திறனின் SI அலகு ?
டையாப்டர் அல்லது D
- லென்சின் குவிய தொலைவு எந்த அலகால் குறிப்பிடப்படுகிறது?
மீட்டர்
- பெரும்பாலும் மெய் பிம்பங்களை தோற்றுவிக்கும் லென்ஸ் எது?
குவிலென்சு
- மாய பிம்பங்களை தோற்றுவிக்கும் லென்சு?
குழி லென்ஸ்
- ஒரு மீட்டர் குவியத் தொலைவு கொண்ட லென்சின் திறன் என்பது எதற்கு சமம்?
ஒரு டயாப்டர்
- குறியீட்டு மரபின்படி குவிலென்சின் திறன் எவ்வாறாக கொள்ளப்படுகிறது?
நேர்க்குறி
- குறியீட்டு மரபின்படி குழிலென்சின் திறன் எவ்வாறாக கொள்ளப்படுகிறது?
எதிர்க்குறி
- விழியானது ஏறத்தாழ எத்தனை அளவு விட்டம் கொண்ட கோள வடிவ அமைப்புடையது?
2.3 செ.மீ
- கண்ணில் உள்ள எந்த வலிமையான சவ்வினால் கண்ணின் உள்ளுறுப்புகள் பாதுகாக்கப்படுகின்றன?
ஸ்கிளிரா
- விழி கோளத்தின் முன் பகுதியில் காணப்படும் மெல்லிய ஒளிபுகும் படலம் எது?
கார்னியா
- கண்ணில் ஒளிவிலகல் நடைபெறும் முக்கியமான பகுதி எது ?
கார்னியா
- கண்ணின் நிறமுடைய பகுதி எது ?
ஐரிஸ்
- ஒளிப்படக் கருவியின் முகப்பை போன்று செயல்பட்டு கண் பார்வையின் உள்ளே நுழையும் ஒளிக்கதிர்களின் அளவைக் கட்டுப்படுத்துவது எது?
ஐரிஸ்
- ஐரிசின் மையப்பகுதி எது?
கண்பாவை
- பொருளில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் எதன் வழியாக விழித்திரையை அடைகின்றன?
கண்பாவை
- விழி கோளத்தில் பின்புறபரப்பின் பெயர் என்ன?
விழித்திரை அல்லது ரெட்டினா
- விழிலென்சானது எந்த தசைகளால் தாங்கப்பட்டுள்ளது?
சிலியரித் தசைகள்
- அருகில் உள்ள மற்றும் தொலைவில் உள்ள பொருள்களை தெளிவாக காண்பதற்கு ஏற்ப விழிலென்சு தன்னை மாற்றியமைத்துக் கொள்ளும் தன்மை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
விழி ஏற்பமைவுத்திறன்
- விழிலென்சு அதனுடைய குவியத் அளவை மாற்றி அமைப்பதற்கு எது உதவுகிறது ?
சிலியரித் தசைகள்
- இரு அடுத்தடுத்த ஒளித் துடிப்பு களுக்கு இடைப்பட்ட கால இடைவெளி எத்தனை வினாடியை விட குறைவாக இருந்தால் மனித கண்களால் அவற்றை தனித்தனியாக வேறுபடுத்தி அறிய இயலாது?
1/16 வினாடிகள்
- இரு அடுத்தடுத்த ஒளித் துடிப்பு களுக்கு இடைப்பட்ட கால இடைவெளி 1/16 வினாடியை விட குறைவாக இருந்தால் மனித கண்களால் அவற்றை தனித்தனியாக வேறுபடுத்தி அறிய இயலாது. இது எவ்வாறு அழைக்கப்படும் ?
பார்வை நீட்டிப்பு
- மனிதக் கண் ஒன்றினால் தன் எதிரில் உள்ள பொருள்களை தெளிவாக காண கூடிய மிகச் சிறிய தொலைவு எவ்வாறு அழைக்கப்படும்?
தெளிவுறு காட்சியின் மீச்சிறு தொலைவு
- தெளிவுறு காட்சியின் மீச்சிறு தொலைவு எவ்வாறு அழைக்கப்படும்?
அன்மை புள்ளி
- மனிதக் கண்ணின் அண்மைப் புள்ளி எந்த அளவில் இருக்கும்?
25 சென்டி மீட்டர்
- கன் ஒன்றினால் எவ்வளவு தொலைவில் உள்ள பொருள்களை தெளிவாக காணமுடிகிறதோ அந்தப் புள்ளி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சேய்மைப்புள்ளி
- கிட்டப் பார்வை குறைபாடு எவ்வாறு அழைக்கப்படும்? மையோபியா
- விழிக்கோளம் சிறிது நீண்டு விடுவதால் ஏற்படும் குறைபாடு எது?
மையோபியா
- எந்த குறைபாடு உள்ள மனிதர்களால் அருகில் உள்ள பொருள்களை தெளிவாக காண முடியும் ஆனால் தொலைவில் உள்ள பொருட்களை காண முடியாது?
மையோபியா
- தூரப்பார்வை குறைபாடு எவ்வாறு அழைக்கப்படும்?
ஹைப்பர் மெட்ரோபியா
- விழிக்கோளம் சுருங்குவதால் ஏற்படும் குறைபாடு எவ்வாறு அழைக்கப்படும்?
தூரப்பார்வை
- சில மனிதர்களை ஒரே நேரத்தில் கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை ஆகிய பார்வை குறைபாடுகளால் பாதிக்கப்படும் போது அந்த குறைபாடானது எந்தெந்த லென்சு மூலம் சரி செய்யப்படுகிறது?
இருகுவிய லென்சுகள்
- என்ன குறைபாடு உடைய கண்களால் இணையான மற்றும் கிடைமட்ட கோடுகளை தெளிவாக காண இயலாது ?
பார்வைச் சிதறல் குறைபாடு (Astigmatism)
- பார்வைச் சிதறல் குறைபாடு (Astigmatism) இதன் மூலம் சரி செய்யப்படுகிறது?
உருளை லென்சுகள்
- கடிகாரம் பழுது பார்ப்பவர்கள் மற்றும் ஆபரணங்கள் செய்பவர்கள் மற்றும் பூக்கள் பூச்சிகளின் பாகங்களை உற்றுநோக்க பயன்படும் நுண்ணோக்கி எது?
எளிய நுண்ணோக்கி
- தடய அறிவியல் துறையில் கைரேகைகளை பகுத்தறிய பயன்படும் நுண்ணோக்கி எது?
எளிய நுண்ணோக்கி
- என்ன தொலைவினை குறைப்பதன் மூலம் நுண்ணோக்கியின் உருப்பெருக்குத் திறனை அதிகரிக்கலாம்?
குவிலென்சின் குவியத் தொலைவு
- கூட்டு நுண்ணோக்கி எத்தனை குவிலென்ஸ்களை கொண்டது ?
இரண்டு
- பொருளுக்கு அருகில் உள்ள குறைந்த குவிய தூரம் கொண்ட குவிலென்ஸானது எவ்வாறு அழைக்கப்படும்?
பொருளருகு லென்சு அல்லது பொருளருகு வில்லை
- உற்று நோக்குபவருடைய கண்ணிற்கு அருகில் உள்ள அதிக விட்டமும் அதிக குவிய தூரமும் கொண்ட குவிலென்ஸ் எவ்வாறு அழைக்கப்படும்?
கண்ணருகு லென்சு அல்லது கண்ணருகு வில்லை
- கூட்டு நுண்ணோக்கியின் உருப்பெருக்குத் திறனானது எளிய நுண்ணோக்கியின் உருப்பெருக்குத் திறனை காட்டிலும் எத்தனை மடங்கு வரை அதிகமாக இருக்கும்?
50 முதல் 200 மடங்கு வரை
- நகரும் நுண்ணோக்கியின் மீச்சிற்றளவு என்ன?
0.01மிமீ
- முதன் முதலில் தொலைநோக்கி எப்போது உருவாக்கப்பட்டது?
1608
- முதன்முதலில் தொலைநோக்கியை உருவாக்கியவர் யார்?
ஜோகன் லிப்ரஷே
- கெப்ளர் எந்த ஆண்டு தொலைநோக்கியை உருவாக்கினார்?
1611
- யார் உருவாக்கிய தொலைநோக்கி தற்கால வானியல் தொலைநோக்கியை ஒத்திருந்தது ?
கெப்ளர்
- ஒளியியல் பண்புகளை அடிப்படையாகக் கொண்டு தொலைநோக்கிகள் எத்தனை வகையாக வகைப்படுத்தப் படுகின்றன? அவை என்னென்ன?
இரண்டுவகை : ஒளிவிலகல் தொலைநோக்கி, ஒளி எதிரொளிப்பு தொலைநோக்கி
- கலிலியோ தொலை நோக்கி ,கெப்ளர் தொலைநோக்கி ,நிறமற்ற ஒளி விளக்கிகள் ஆகியவை எந்த தொலைநோக்கிகளுக்கு எடுத்துக்காட்டுகள்?
ஒளிவிலகல் தொலைநோக்கி
- ஒளிவிலகல் தொலைநோக்கிகளில் எது பயன்படுத்தப்படுகிறது?
லென்சுகள்
- ஒளி எதிரொளிப்பு தொலைநோக்கியில் எது பயன்படுத்தப்படுகின்றன ?
கோளக ஆடிகள்
- ஒளி எதிரொளிப்பு தொலைநோக்கிகள் எடுத்துக்காட்டுகள் எவை?
கிரிகோரியன் ,நியூட்டன் ,கேஸ்கிரைன் தொலைநோக்கிகள்
- தொலைநோக்கிகளை பயன்படுத்தி காணக்கூடிய பொருள்களைக் அடிப்படையாகக் கொண்டு எத்தனை வகையாகப் பிரிக்கப் படுகின்றன ?அவை என்னென்ன?
இரண்டுவகை : வானியல் தொலைநோக்கிகள் &நிலப்பரப்பு தொலைநோக்கிகள்
- வானியல் தொலைநோக்கி களில் கிடைக்கும் பிம்பமானது எவ்வாறு இருக்கும்?
தலைகீழ் பிம்பம்
- வானியல் தொலைநோக்கிகளுக்கும் நிலப் பரப்பு தொலைநோக்கிகளுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு எது?
நேரான இறுதி பிம்பத்தை உருவாக்குவது
10TH PHYSICS STUDY NOTES |ஒளியியல்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services