- அதிர்வடையும் பொருட்கள் என்ன வடிவில் ஆற்றலை உருவாக்குகிறது?
அலை வடிவம்
- அதிர்வடையும் பொருட்கள் அலை வடிவில் ஆற்றலை உருவாக்குகிறது இதற்கு பெயர் என்ன?
ஒலி அலைகள்
- அதிர்வுறும் பொருட்கள் உருவாக்கும் ஒலி பரவ என்ன ஊடகங்கள் தேவை?
திட, திரவ, வாயு உலகம்
- ஒலி அலைகள் ______களாகும்.
நெட்டலைகள்
- ஒலி அலைகளின் திசைவேகம் எந்த பண்பை பொறுத்து அமையும்?
பருப்பொருள் ஊடகங்களின் பண்பு
- ஒரு ஊடகத்தில் ஒலி அலை பரவும் திசையிலேயே துகள்கள் அதிர்வுற்றால் அதற்கு என்ன பெயர்?
நெட்டலை
- ஒவ்வொரு ஒலி மூலக்கூறும் அதன் மையப்பகுதியில் இருந்து நீளவாக்கில் இடப்பெயர்ச்சி அடைவதால் எது உருவாகிறது?
நெட்டலைகள்
- ஊடகத்தின் வழியே நெட்டலைகள் பரவும்போது அதிக அழுத்தம் உள்ள பகுதி எவ்வாறு அழைக்கப்படும்?
இறுக்கங்கள்
- ஊடகத்தின் வழியே நெட்டலைகள் பரவும்போது குறைந்த அழுத்தம் உள்ள பகுதி எவ்வாறு அழைக்கப்படும்?
தளர்ச்சிகள்
- செவியுணர் ஒலி அலைகளின் அதிர்வெண்கள் என்ன?
20Hz – 20000Hz
- 20Hzஐ விடக் குறைவான அதிர்வெண் உடைய ஒலி அலைகள் எவ்வாறு அழைக்கப்படும்?
குற்றொலி அலைகள்
- நிலநடுக்கத்தின் போது உருவாகும் அதிர்வுகள், கடல் அலைகள் மற்றும் திமிங்கலங்கள் ஏற்படுத்தும் ஒலி எதற்கு எடுத்துக்காட்டு?
குற்றொலி அலைகள்
- கொசு, நாய் மற்றும் டால்பின் போன்ற உயிரினங்களால் எவ்வளவு அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளைக் கேட்க இயலும்?
20,000Hz
- ஒலி அலைகளின் அலை நீளம் எவ்வளவு?
1.65 செண்டி மீட்டர் முதல் 1.65 மீட்டர் வரை
- ஒளி அலைகளின் அலை நீளம் எவ்வளவு?
4×10^-7 மீ முதல் 7×10^-7
- ஒலி அலைகள் எந்த திசை வேகத்தில் பரவும்?
340 மீவி^-1
- ஒளி அலைகள் எந்த திசை வேகத்தில் பரவும்?
3×10^8
- திசைவேகத்தின் அலகு என்ன ?
மீட்டர் வினாடி^-1
- ஒரு ஊடகத்தில் அலைகள் வடிவில் ஆற்றலை கடத்துவதற்காக துகள்கள் அதிர்வடையும் திசைவேகம் எவ்வாறு அழைக்கப்படும்?
துகள் திசைவேகம்
- ஒரு ஊடகத்தின் வழியே அலை பரவும் திசைவேகம் எவ்வாறு அழைக்கப்படும்?
அலை திசைவேகம்
- ஓரலகு காலத்தில் ஒலி அலை பரவும் தூரம் எவ்வாறு அழைக்கப்படும் ?
அலை திசைவேகம்
- அலை திசைவேகத்தின் சூத்திரம் என்ன?
தொலைவு/ பரவ எடுத்துக்கொண்ட காலம்
- திடப் பொருட்களில் வழியாக ஒலி அலை செல்லும் போது ஒலியின் திசை வேகம் அதிகமாக இருப்பதற்கு காரணம் என்ன?
திடப்பொருளின் மீட்சிப்பண்பு அதிகம்
- ஒலி அலை பரவும் ஊடகங்களை பொறுத்து வரிசைப்படுத்துக?
Vதிட>Vதிரவ>Vவாயு
- திடப் பொருள்களின் வழியாக ஒலி செல்லும் போது எது ஒலியின் திசைவேகத்தை பாதிக்கிறது?
பொருட்களின் மீட்சிப்பண்பு மற்றும் அடர்த்தி
- ஒலியின் திசைவேகமானது மீட்சி குணத்தின் அடிப்படையில் எவ்வாறு அமையும்?
மீட்சி குணத்தின் இருமடி மூலத்திற்கு நேர்த்தகவிலும் அடர்த்தியின் இருமடிமூலத்திற்கு எதிர்த்தகவிலும் அமையும்
- அடர்த்தி அதிகரிக்கும் போது ஒலியின் வேகம் என்னவாகும்?
குறையும்
- ஒலியின் திசைவேகம் வாயுக்களில் எதைப் பொறுத்து அமையும் ?
அடர்த்தியின் இருமடி மூலத்திற்கு எதிர்தகவில்
- வாயுக்களின் அடர்த்தி அதிகரிக்கும் போது திசைவேகம் என்னவாகும்?
குறையும்
- வாயுக்களின் வெப்ப நிலை அதிகரிக்கும் போது ஒலியின் திசைவேகம் என்னவாகும் ?
அதிகரிக்கும்
- ஒவ்வொரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிப்பிற்க்கும் திசை வேகமானது எவ்வளவு அதிகரிக்கிறது?
0.61மீவி^-1
- காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும்போது ஒலியின் திசைவேகம் என்னவாகும் ?
அதிகரிக்கிறது
- திடப்பொருள் ஊடகமான தாமிரத்தில் ஒலியின் திசை வேகம் எவ்வளவு?
5010 மீவி^-1
- திடப்பொருள் ஊடகமான இரும்பில் ஒலியின் திசைவேகம் எவ்வளவு?
5950 மீவி^-1
- திடப்பொருள் ஊடகமான அலுமினியத்தில் ஒலியின் திசை வேகம் எவ்வளவு?
6420 மீவி^-1
- திரவ ஊடகமான மண்ணெண்ணெயில் ஒலியின் திசை வேகம் எவ்வளவு?
1324 மீவி^-1
- திரவ ஊடகமான நீரில் ஒலியின் திசைவேகம் எவ்வளவு?
1493மீவி^-1
- திரவ ஊடகமான கடல் நீரில் ஒலியின் திசைவேகம் எவ்வளவு?
1533மீவி^-1
- காற்று ஊடகத்தில் 0°C வெப்ப நிலையில் ஒலியின் திசை வேகம் எவ்வளவு?
331 மீவி^-1
- காற்று ஊடகத்தில் 20°C வெப்ப நிலையில் ஒலியின் திசை வேகம் எவ்வளவு?
343 மீவி^-1
- எந்த வெப்பநிலையில் ஒலியின் திசைவேகம் ஆனது 0°C உள்ளதைவிட இரட்டிப்பாகும்?
819°C
- இரண்டாம் ஊடகத்தை நோக்கி செல்லும் கதிர் எவ்வாறு அழைக்கப்படும்?
படுகதிர்
- இரண்டாம் ஊடகத்தில் பட்டு திரும்பிவரும் கதிர் எவ்வாறு அழைக்கப்படும்?
எதிரொலித்தக் கதிர்
- எதிரொளிப்பு விதிகளின்படி இவை ஒரே தளத்தில் அமையும்?
படுகதிர், செங்குத்துக் கோடு மற்றும் எதிரொளிப்பு கதிர்
- எதிரொளிப்பு விதிகளின்படி எவை சமமாக இருக்கும்?
படுகோணம் ∆i மற்றும் எதிரொளிப்பு கோணம்∆r
- எதிரொளிப்பு தளத்தை நோக்கி செல்லும் கதிர்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
படு கதிர்கள்
- எதிரொளிப்பு தளத்தில் பட்டு மீண்டு திரும்பி வரும் கதிர்கள் எவ்வாறு அழைக்கப்படும் ?
எதிரொலித்த கதிர்கள்
- எதிரொலிப்பு தளத்துக்கு செங்குத்தாக வரையப்பட்டிருக்கும் கோடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
செங்குத்துக் கோடு
- கோல்கொண்டா கோட்டை எங்கு அமைந்துள்ளது? ஹைதராபாத்,தெலுங்கானா
- கோல்கொண்டா கோட்டையில் உள்ள கைத்தட்டு அறையின் சிறப்பம்சத்திற்கு காரணம் என்ன?
இதிலுள்ள ஒவ்வொரு வளைவும் முந்தைய வளைவை விட சிறியதாக காணப்படும்.
- ஒரு நெட்டலையானது ஊடகத்தில் பரவும் போது எவ்வாறு பரவும்?
இறுக்கங்களாகவும் தளர்ச்சிகளாகவும்
- ஒலியானது ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும்போது அதன் திசை வேகம் அதிகரித்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
அடர்குறை ஊடகம்
- ஒலியானது ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும்போது அதன் திசை வேகம் குறையுமானால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
அடர்மிகு ஊடகம்
- ஒலி அலைகள் எந்த பரப்புகளில் மோதி எதிரொலிக்கும் போது ஒலி அலைகளின் செறிவு கூடுவதோ குறைவதோ இல்லை?
சமதளப் பரப்பு
- ஒலி அலைகள் எந்த பரப்புகளில் பட்டு மோதி எதிரொலிக்கும் போது அதன் செறிவு மாறுகிறது?
வளைவான பரபரப்பு
- பெரும்பாலான பேசும் கூடங்களின் மேற்பகுதி எந்த வடிவில் அமைக்கப்பட்டிருக்கும்?
பரவளையம்
- மிகவும் புகழ்பெற்ற மெதுவாக பேசும் கூடம் எங்கு அமைந்துள்ளது?
லண்டனில் உள்ள புனித பால் கேதிட்ரல் ஆலயம்
- ஒலி அலைகள் சுவர்கள் மேற்கூரைகள் மலைகள் போன்றவற்றின் பரப்புகளில் மோதி பிரதிபலிக்கும் நிகழ்வுக்கு என்ன பெயர்?
எதிரொலி
- மனிதர்களால் கேட்கப்படும் ஒலியானது நமது காதுகளில் எத்தனை வினாடிகளுக்கு நிலைத்திருக்கும்?
0.1 விநாடிகள்
- மனிதர்களால் இரண்டு ஒலிகளைக் கேட்க வேண்டுமானால் இரண்டு ஒலிகளுக்கும் இடையே கால இடைவெளி குறைந்தபட்சம் எத்தனை வினாடிகள் இருக்க வேண்டும்?
0.1 விநாடிகள்
- எதிரொலி கேட்க வேண்டுமானால் குறைந்தபட்ச தொலைவானது காற்றின் ஒலியின் திசைவேகத்தின் மதிப்பில் எத்தனை பகுதியாக இருக்க வேண்டும்?
1/20 பகுதி
- ஒலியின் திசைவேகம் காற்றில் 344மீவி^-1எனக் கருதினால் எதிரொலி கேட்பதற்கான குறைந்தபட்ச தொலைவு எவ்வளவு?
17.2 மீ
- எதிரொலி தத்துவம் எங்கு பயன்படுத்தப்படுகிறது ? மகப்பேற்றியல் துறையில் அல்ட்ரா சோனோகிராபி கருவியில்
- கேட்குநருக்கும் ஒலி மூலத்திற்கும் இடையே சார்பியக்கம் இருக்கும் போது கேட்குநரால் கேட்கப்படும் ஒலியின் அதிர்வெண்ணிற்கும், ஒலி மூலத்தின் அதிர்வெண்ணிற்கும் இடையே வேறுபாடு உள்ளதை கண்டறிந்தவர் யார்?
டாப்ளர்
- டாப்ளர் விளைவை கண்டறிந்தவர் யார்?
கிறிஸ்டியன் டாப்ளர், ஆஸ்திரியா
- ஒலி மூலத்திற்கும் கேட்குநருக்கும் இடையேயானத் தொலைவு குறையும் போது தோற்ற அதிர்வெண்ணானது, உண்மையான அதிர்வெண்ணைவிட எவ்வாறு அமையும்?
அதிகமாக
- தோற்ற அதிர்வெண் n’ க்கான சமன்பாடு என்ன?
n’=(v+vL/V-Vs)n
- வாகனம்ஒன்றின் வேகத்தை அளவிடுதல் எந்த விளைவின் பயன்பாடு?
டாப்ளர் விளைவு
- RADAR-விரிவாக்கம் என்ன?
Radio detection and ranging
- SONAR-விரிவாக்கம் என்ன?
Sound navigation and ranging
- டாப்ளர் விளைவு எவற்றில் பயன்படுகிறது?
வாகனத்தின் வேகத்தை அளக்க ,செயற்கைகோளின் தூரத்தை அளக்க, ரேடார், சோனார் கருவிகள்
10TH PHYSICS STUDY NOTES |ஒலியியல்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services