- ஓய்வு நிலையில் உள்ள பொருளை இயக்க அல்லது இயக்க நிலையில் உள்ள பொருளை ஓய்வு நிலைக்குக் கொண்டுவர எது தேவைப்படுகிறது?
விசை
- விசையின் செயல்பாட்டால் பொருள் மீது ஏற்படும் விளைவுகளைப் பற்றி பயிலும் அறிவியல் பாடம் எது ?
இயந்திரவியல்
- இயந்திரவியல் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது ?
2 :நிலையியல் மற்றும் இயங்கியல்
- விசையின் செயல்பாட்டால் ஓய்வு நிலையில் உள்ள பொருள் மீது ஏற்படும் விளைவுகள் பற்றி அறியும் அறிவியல் பிரிவு எது?
நிலையியல்
- விசையின் செயல்பாட்டால் இயக்க நிலையில் உள்ள பொருள் மீது ஏற்படும் விளைவுகள் பற்றிய அறிவியல் பிரிவு எது?
இயங்கியல்
- இயங்கியல் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது?
இயக்கவியல் & இயக்கவிசையியல்
- இயக்கத்தை ஏற்படுத்தும் விசையினை கருத்தில் கொள்ளாமல் இயக்கத்தினை மட்டுமே விளக்குவது எது ?
இயக்கவியல்
- பொருளின் இயக்கத்தையும் அதற்கு காரணமான விசை பற்றியும் விளக்குவது எது ?
இயக்க விசையியல்
- அரிஸ்டாட்டில் எந்த நாட்டைச் சேர்ந்த அறிவியல் மற்றும் தத்துவ அறிஞர் ?
கிரேக்கம்
- “இயக்குகின்ற பொருள்கள் யாவும் தாமாகவே இயற்கையான தத்தமது ஓய்வு நிலைக்கு வந்து சேரும். அவற்றினை ஓய்வு நிலைக்கு கொண்டு வர புறவிசை எதுவும் தேவையில்லை “எனக் கூறியவர்?
அரிஸ்டாட்டில்
- இயங்கும் பொருளின் இயக்கத்தினை அரிஸ்டாட்டில் எவ்வாறு வரையறுத்தார்?
இயற்கையான இயக்கம்
- “இருவேறு நிறை கொண்ட பொருள்கள் சம உயரத்தில் இருந்து விழும் போது அதிக நிறை கொண்ட பொருள் வெகு வேகமாக விழும்” என கூறியவர் யார் ?
அரிஸ்டாட்டில்
- பொருளின் மீது விசையின் தாக்கம் இருக்கும் போது தம் நிலை மாற்றத்தை தவிர்க்க முயலும் தன்மை எவ்வாறு அழைக்கப்படும்?
நிலைமம்
- ஒவ்வொரு பொருளும் தன்மீது சமன் செய்யப்படாத புறவிசை ஏதும் செயல்படாத வரையில் ,தமது ஓய்வு நிலையையோ அல்லது சென்று கொண்டிருக்கும் நேர்கோட்டு இயக்க நிலையையோ மாற்றுவதை எதிர்க்கும் தன்மை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நிலைமம்
- நிலைமத்தின் வகைகள் என்னென்ன?
ஓய்வில் நிலைமம் ,இயக்கத்தில் நிலைமம் ,திசையில் நிலைமம்
- நிலையாக உள்ள ஒவ்வொரு பொருளும் தனது ஓய்வு நிலை மாற்றத்தை எதிர்க்கும் பண்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஓய்வில் நிலைமம்
- இயக்க நிலையில் உள்ள பொருள் தமது இயக்க நிலை மாற்றத்தை எதிர்க்கும் பண்பு எவ்வாறு அழைக்கப்படும் ?
இயக்கத்தில் நிலைமம்
- இயக்க நிலையில் உள்ள பொருள் இயங்கும் திசையிலிருந்து மாறாது திசை மாற்றத்தினை எதிர்க்கும் பண்பு எவ்வாறு அழைக்கப்படும்?
திசையில் நிலைமம்
- நீளம் தாண்டுதல் போட்டியில் நீளம் தாண்டுவதற்கு முன் சிறிது தூரம் ஓடுவதற்கு காரணம் எது ?
இயக்கத்திற்கான நிலைமம்
- ஓடு மகிழுந்து வளைப்பாதையில் செல்லும்போது பயணியர் ஒரு பக்கமாக சாயக் காரணம் எது ?
திசைக்கான நிலைமம்
- கிளைகளை உலுக்கிய பின் மரத்திலிருந்து கீழே விழும் இலைகள் பழுத்தபின் விழும் பழங்கள் எதற்கான எடுத்துக்காட்டு?
ஓய்விற்கான நிலைமம்
- திசை வேகமோ, நிறையோ அதிகமானால் விசையின் தாக்கம் என்னவாகும் ?
அதிகமாகும்
- ஒரு பொருளின் மீது செயல்படும் விசையின் தாக்கத்தை எதன் மூலம் அளவிடலாம்?
நேர்கோட்டு உந்தம்
- இயங்கும் பொருளின் நிறை மற்றும் திசைவேகத்தின் பெருக்கற்பலன் எவ்வாறு அழைக்கப்படும் ?
உந்தம்
- விசையின் எண் மதிப்பானது எதனால் அளவிடப்படுகிறது?
உந்தம்
- உந்தத்தின் SI அலகு என்ன?
கிகி மீவி^-1
- ஒவ்வொரு பொருளும் புற விசை ஏதும் செயல்படாத வரையில் தமது ஓய்வு நிலையிலோ அல்லது சீராக இயங்கிக் கொண்டிருக்கும் நேர்கோட்டு நிலையிலோ தொடர்ந்து இருக்கும் என்பது என்ன விதி ?
நியூட்டனின் முதல் விதி
- இழுத்தல் அல்லது தள்ளுதல் என்ற புறச்செயல் வடிவம் எது?
விசை
- விசைகளை அவை செயல்படும் திசை சார்ந்து எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?
ஒத்த இணைவிசைகள், மாறுபட்ட இணை விசைகள்
- இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சமமான அல்லது சமமற்ற விசைகள் ஒரே திசையில் ஒரு பொருள் மீது இணையாக செயல்பட்டால் அவை எவ்வாறு அழைக்கப்படும் ?
ஒத்த இணை விசைகள்
- இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சமமான அல்லது சமமற்ற எதிர்எதிர்திசையில் ஒரு பொருள் மீது இணையாக செயல்பட்டால் அவை எவ்வாறு அழைக்கப்படும் ?
மாறுபட்ட இணைவிசைகள்
- ஒரு பொருள் மீது பல்வேறு விசைகள் செயல்படும் போது அவற்றின் மொத்த விளைவை ஏற்படுத்தும் ஒரு தனித்த விசை எவ்வாறு அழைக்கப்படும்?
தொகுபயன் விசை
- தொகுபயன் விசையின் மதிப்பு என்னவாக இருக்கும் பொழுது பொருள் சமநிலையில் உள்ளது என அறியலாம்?
சுழி
- தொகுபயன் விசையின் மதிப்பு சுழி எனில் அவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சமன் செய்யப்பட்ட விசைகள்
- தொகுபயன் விசையின் மதிப்பு சுழி இல்லை எனில் அவை பொருட்களின் இயக்கத்திற்கு காரணமாக அமைகின்றன.அவை எவ்வாறு அழைக்கப்படும்?
சமன் செய்யப்படாத விசைகள்
- கிணற்றிலிருந்து நீர் எடுக்க செயல்படும் விசை ,நெம்புகோலின் மீது செயல்படும் விசை, தராசு தட்டுகளில் செயல்படும் விசை ஆகியன எதற்கு எடுத்துக்காட்டு?
சமன் செய்யப்படாத விசைகள்
- தொகுபயன் விசைக்கு சமமான ஆனால் எதிர் திசையில் செயல்படும் ஒரு விசையானது பொருட்களை சமநிலைக்கு கொண்டுவர உதவுகிறது இந்த விசை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
எதிர்சமனி
- இரு சமமான இணை விசைகள் ஒரே நேரத்தில் ஒரு பொருளின் இருவேறு புள்ளிகளின் மீது எதிர்திசையில் செயல்பட்டால் அவை எவ்வாறு அழைக்கப்படும்?
இரட்டை விசை அல்லது இரட்டை
- இரட்டைகளின் தொகுபயன் விசை மதிப்பு சுழி ஆதலால் சூழல் விளைவினை ஏற்படுத்தும் இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இரட்டைகளின் திருப்புத்திறன்
- இரட்டை திருப்புத்திறனின் சமன்பாடு என்ன ?
விசையின் எண் மதிப்பு(F) x இணை விசைகளுக்கு இடையே உள்ள செங்குத்து தொலைவு(S)
- இரட்டை திருப்புத்திறனின் SI அலகு என்ன?
நியூட்டன்மீ
- இரட்டை திருப்புத்திறனின் CGS அலகு என்ன?
டைன் செ.மீ
- உந்தம் ஒரு _____அளவாகும்?
வெக்டார்
- விசை ஒரு _____ அளவாகும்?
வெக்டார்
- இரட்டை திருப்புத்திறன் ஒரு ____ அளவாகும்?
வெக்டார்
- திருப்புத்திறனின் திசை ,பொருட்களின் சுழற்சி வலஞ்சுழியாக இருப்பின் என்னவாக எடுத்துக்கொள்ளப்படுகிறது?
எதிர்க்குறி
- திருப்புத்திறனின் திசை ,பொருட்களின் சுழற்சி இடஞ்சுழியாக இருப்பின் என்னவாக எடுத்துக்கொள்ளப்படுகிறது?
நேர்க்குறி
- பொருள் ஒன்றின் மீது செயல்படும் விசையானது அப்பொருளின் உந்த மாறுபாட்டு வீதத்திற்கு நேர்தகவில் அமையும் .மேலும் இந்த உந்த மாறுபாடு விஷயம் திசையிலேயே அமையும். இந்த விதி எவ்வாறு அழைக்கப்படும்?
நியூட்டனின் இரண்டாம் இயக்க விதி
- நியூட்டனின் இரண்டாம் இயக்க விதி வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
விசையின் விதி
- 1 கிலோ கிராம் நிறையுடைய பொருள் ஒன்றை 1 மீவி^-2 அளவிற்கு முடுக்குவிக்க தேவைப்படும் விசையின் அளவு எவ்வாறு அழைக்கப்படும்?
ஒரு நியூட்டன்
- 1 கிராம் நிறையுடைய பொருள் ஒன்றை 1 செ. மீட^-2அளவிற்கு முடுக்குவிக்க தேவைப்படும் விசையின் அளவு எவ்வாறு அழைக்கப்படும் ?
ஒரு டைன்
- 1 நியூட்டன் என்பது எவ்வளவு டைன்?
10^5 டைன்
- 1 கிலோ கிராம் நிறையுடைய பொருள் ஒன்றை 1 மீவி^-2 அளவிற்கு முடுக்குவிக்க தேவைப்படும் விசையின் அளவு ஒரு நியூட்டன் ஆகும் இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஓரலகு விசை
- ஓரலகு நிறையுள்ள பொருள் ஒன்றை புவியின் ஈர்ப்பு முடுக்கத்திற்கு இணையாக விடுவிக்க தேவைப்படும் விசையின் அளவு எவ்வாறு அழைக்கப்படும் ?
ஈர்ப்பியல் அலகுவிசை
- ஈர்ப்பியல் அலகுவிசையின் SI அலகு என்ன?
கிலோகிராம் விசை
- ஈர்ப்பியல் அலகுவிசையின் CGS அலகு என்ன?
கிராம் விசை
- 1 kgf என்பது எவ்வளவு நியூட்டன்?
9.8 நியூட்டன்
- ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை உண்டு. விசையும் எதிர்விசையும் எப்போதும் இரு வேறு பொருள்களின் மீது செயல்படும் என்பது என்ன விதி ?
நியூட்டனின் மூன்றாம் விதி
- புறவிசை ஏதும் தாக்காத வரையில் ஒரு பொருள் அல்லது ஓர் அமைப்பின் மீது செயல்படும் மொத்த நேர்க்கோட்டு உந்தம் மாறாமல் இருக்கும் இது என்ன விதி ?
நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதி
- ராக்கெட் ஏவுதலில் என்ன விதிகள் பயன்படுத்தப்படுகின்றன?
நியூட்டனின் மூன்றாம் விதி மற்றும் நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதி
- அண்டத்தில் உள்ள பொருட்களின் ஒவ்வொரு துகளும் பிற துகளை ஒரு குறிப்பிட்ட விசை மதிப்பில் ஈர்க்கிறது. அவ்விசையானது அவைகளின் நிறைகளின் பெருக்கற்பலனுக்கு நேர் விகிதத்திலும், அவைகளின் மையங்களுக்கு இடையே உள்ள தொலைவு எதிர் விகிதத்திலும் இருக்கும் இது என்ன விதி ?
நியூட்டனின் ஈர்ப்பியல் விதி
- புவியீர்ப்பு முடுக்கத்தின் சராசரி மதிப்பு எவ்வளவு?
9.8 மீ வி^-2
- புவியின் நிறை மதிப்பு எவ்வளவு ஆக கணக்கிடப்பட்டுள்ளது?
5.972x 10^24 கி.கி
- புவியீர்ப்பு முடுக்கம் gன் மதிப்பு எதனை சார்ந்து அமையும்?
பூமியின் ஆரம்
- புவியின் ஆரம் நிலநடுக்கோட்டுப் பகுதியில் அதிகமாக உள்ளதால் ஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு என்னவாக இருக்கும்?
குறைவாக
- துருவப்பகுதியில் புவியின் ஆரத்தின் மதிப்பு குறைவாக உள்ளதால் ஈர்ப்பு முடுக்கம் என்னவாக இருக்கும்?
அதிகமாக
- புவியின் தரைப்பகுதியில் இருந்து உயரே செல்ல செல்ல புவியீர்ப்பு முடுக்கம் என்னவாகும் ?
குறையும்
- புவியின் மையத்தில் gன் மதிப்பு என்ன?
சுழியம்
- பொருட்களின் நிறை என்பது அதில் அடங்கியுள்ள எதன் அளவாகும்?
பருப்பொருள்
- நிறையின் அலகு என்ன?
கிலோகிராம்
- ஒரு பொருளின் மீது செயல்படும் புவி ஈர்ப்பு விசையின் மதிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
எடை
- எடை ஓர் ____ அளவாகும்?
வெக்டார்
- நிலவில் புவியீர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு என்ன?
1.625 மீவி^2
- நியூட்டனின் ஈர்ப்பியல் விதியின் பயன்பாடுகள் என்னென்ன?
விண் பொருட்களின் பரிமாணங்களை அளவிட ,புதிய விண்மீன்கள் மற்றும் கோள்களை கண்டுபிடிக்க , விண் பொருட்களின் பாதையினை வரையறை செய்வதற்கு
- தாவரங்களின் வேர் முளைத்தல் மற்றும் வளர்ச்சி புவியின் ஈர்ப்பு விசை சார்ந்து அமைவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
புவிதிசை சார்பியக்கம்
10TH PHYSICS STUDY NOTES |இயக்க விதிகள்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services