- எந்த கிரேக்க தத்துவ அறிஞர் பருப்பொருள்கள் அனைத்தும் சிறிய பகுக்க இயலாது அலகுகள் என கருதினார்?
டெமாக்கிரிட்டஸ்
- டெமாக்கிரிட்டஸ் எந்த ஆண்டைச் சார்ந்தவர்?
கிமு 400
- எந்த ஆண்டு ஜான் டால்டன் என்பவர் தனிமங்கள் இயற்கையில் ஒரே மாதிரியான அணுக்களால் ஆனவை என கருதினார் ?
1803
- யார் (எதிர் மின் கதிர்கள்) கேத்தோடு எனப்படும் எலக்ட்ரான்களை ஆய்வின் மூலம் கண்டறிந்தார்?
ஜெ.ஜெ.தாம்சன்
- யார் ஆனோடு (நேர்மின்) கதிர்களை கண்டறிந்தார்?
கோல்ட்ஸ்டீன்
- கோல்ட்ஸ்டீன் கண்டுபிடித்த கதிர்களுக்கு புரோட்டான் என பெயரிட்டவர் யார்?
ரூதர்ஃபோர்டு
- மின்சுமையற்ற நியூட்ரான் கண்டறிந்தவர் யார்?
ஜேம்ஸ் சாட்விக் 1932
- எந்த ஆண்டு எர்னஸ்ட் ரூதர்போர்டு அணுவின் நிலையானது அதன் மையத்தில் செறிந்து காணப்படுகிறது என விளக்கினார்?
1911
- யுரேனியம் ஒளிப்பட தகட்டினை பாதிக்கும் அளவிற்கு சில கதிர்களை வெளியிடுகிறது இந்நிகழ்வுக்கு என்ன பெயர் ?
கதிரியக்கம்
- கதிரியக்கத்தை கண்டுபிடித்தவர் யார்?
பிரெஞ்சு இயற்பியலாளர் ஹென்றி பெக்கோரல்
- கதிரியக்கம் ஹென்றி பெக்கோரல் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
1896
- மேரி க்யூரி மற்றும் அவருடைய கணவர் பியரி கியூரி எந்த நாட்டைச் சார்ந்தவர் ?
போலந்து நாடு
- மேரி க்யூரி மற்றும் அவருடைய கணவர் பியரி கியூரி உடன் இணைந்து பிட்ச் பிளான்ட் எனப்படும் கருமை நிற சிறிய கதிரியக்க கனிம தாதுக்களிலிருந்து கதிரியக்கத்தை வெளிப்படும் பொருளுக்கு என்ன பெயரிட்டு அழைத்தனர் ?
ரேடியம்
- கதிரியக்கத் தனிமங்கள் என்ன கதிர்களை வெளியிடுகின்றன?
ஆல்பா ,பீட்டா மற்றும் காமா
- சில தனிமங்களின் உட்கருக்கள் சிதைவடைந்து சற்று அதிக நிலைப்புத் தன்மை உடையதாக மாறும் நிகழ்விற்கு என்ன பெயர்?
கதிரியக்கம்
- கதிரியக்க நிகழ்விற்கு உட்படும் அனைத்து தனிமங்களும் எவ்வாறு அழைக்கப்படும் ?
கதிரியக்க தனிமங்கள்
- சில தனிமங்கள் புறத் தூண்டுதல் இன்றி தன்னிச்சையாக கதிர்வீச்சுகளை வெளியிடும் நிகழ்வுக்கு என்ன பெயர்?
இயற்கை கதிரியக்கம்
- எந்த அணு எண்ணை விட அதிகமாக உள்ள தனிமங்கள் தன்னிச்சையாக கதிரியக்கங்களை வெளியிடும் திறன் பெற்றவை?
83
- இதுவரையில் அணு எண் 83 ஐ விட குறைவாக உள்ள எத்தனை தனிமங்கள் கதிரியக்கத் தன்மை வாய்ந்தவை என அடையாளம் காணப்பட்டுள்ளது ?
இரண்டு
- அணு எண் 83 விட குறைவாக இருந்தாலும் கதிரியக்கத் தன்மை கொண்ட இரண்டு தனிமங்கள் என்னென்ன?
டெக்னிட்டியம் (43) மற்றும் புரோமித்தியம் (61)
- இதுவரை எத்தனை கதிரியக்கப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?
29
- இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கதிரியக்கப் பொருட்கள் பூமியில் உள்ள எந்த வகை தனிமங்களை சார்ந்தவை?
அருமண் உலோகங்கள் & இடைநிலை உலோகங்கள்
- இலேசான தனிமங்களை செயற்கையாக அல்லது தூண்டப்பட்ட முறையில் கதிரியக்க தனிமங்கள் ஆக மாற்றும் முறைக்கு என்ன பெயர் ?
செயற்கைக் கதிரியக்கம்
- செயற்கை கதிரியக்கத்தை கண்டறிந்தவர் யார்?
ஐரின் கியூரி மற்றும் ஜோலியட்
- செயற்கைக் கதிரியக்கம் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?
1934
- கதிரியக்க சிதைவின் போது கதிரியக்க சிதைவிற்கு உட்படும் உட்கரு எவ்வாறு அழைக்கப்படும் ?
தாய் உட்கரு
- செயற்கைக் கதிரியக்க சிதைவிற்கு பிறகு உருவாகும் உட்கரு எவ்வாறு அழைக்கப்படும்?
சேய் உட்கரு
- செயற்கை கதிரியக்கத்தை தூண்ட பயன்படும் துகள் எவ்வாறு அழைக்கப்படும்?
எறிதுகள் அல்லது எறிபொருள்
- செயற்கைக் கதிரியக்க சிதைவிற்கு பிறகு உருவாகும் துகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடுதுகள்
- கதிரியக்கத்தை குறிக்க பயன்படும் அலகுகள் என்னென்ன?
கியூரி, ரூதர்போர்ட் ,பெக்கோரல்,ராண்ட்ஜன்
- கதிரியக்கத்தின் தொன்மையான அலகு என்ன?
கியூரி
- ஒரு விநாடியில் எவ்வளவு அளவில் சிதைவுகள் ஏற்பட்டால் அது ஒரு கியூரி எனப்படும்?
3.7×10¹⁰
- ஒரு கியூரி எனப்படுவது தோராயமாக எது ஏற்படுத்தும் சிதைவிற்கு சமம் ஆகும்?
1 கிராம் ரேடியம் 226
- ஒரு வினாடியில் ஒரு கதிரியக்க பொருளானது வெளியிடப்படும் கதிரியக்கச் சிதைவின் அளவு 10⁶ எனில் அது எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?
ஒரு ரூதர்ஃபோர்டு
- கதிரியக்கத்தின் பன்னாட்டு அலகு என்ன?
பெக்கோரல்
- காமா மற்றும் x கதிர்கள் வெளியிடப்படும் கதிரியக்கத்தின் மற்றும் ஒரு அலகு என்ன?
ராண்ட்ஜன்
- ஒரு ராண்ட்ஜன் என்பது நிலையான அழுத்தம் வெப்பநிலை மற்றும் ஈரப்பத நிலையில் ஒரு கிலோகிராம் கதிரியக்க பொருளானது எத்தனை கூலும் மின்னோட்டங்களை உருவாக்கும் அளவாகும்?
2.58×10-4
- பிட்ச் பிளண்ட் என்ற கதிரியக்க கனிம தாதுவிலிருந்து யுரேனியத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
ஜெர்மன் வேதியியலாளர் மார்ட்டின் கிலாபிராத்
- இரண்டு புரோட்டான்கள் மற்றும் இரண்டு நியூட்ரான்கள் கொண்ட ஹீலியம் அணுவின் உட்கருவின் தன்மைக் கொண்டது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஆல்ஃபா கதிர்கள்
- அடிப்படைத் துகள்களால் ஆன எலக்ட்ரான்களின் தன்மைக் கொண்டது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பீட்டா கதிர்கள்
- காமாக் கதிர்கள் எந்த தன்மையுடையது?
ஃபோட்டான்கள் எனப்படும் மின்காந்த அலைகள்
- ஆல்பா கதிர்கள் என்ன மின்சுமை கொண்டது?
நேர் மின்சுமை +2e
- பீட்டா கதிர்கள் என்ன மின்சுமை கொண்டது?
எதிர்மின் சுமை -e
- காமாகதிர்கள் என்ன மின்சுமை கொண்டது?
மின்சுவை அற்றவை
- ஆல்பா துகள்களின் அயனியாக்கும் திறன் பீட்டாத் துகள்களை விட எத்தனை மடங்கு அதிகம்?
100 மடங்கு
- ஆல்பா துகள்களின் அயனியாக்கும் திறன் காமா துகள்களை விட எத்தனை மடங்கு அதிகம்?
1000 மடங்கு
- மிகக் குறைந்த ஊடுருவும் திறன் கொண்டது எந்த கதிர் ?
ஆல்ஃபா கதிர்கள்
- மிக அதிக ஊடுருவும் திறன் கொண்ட கதிர் எது?
காமா கதிர்கள்
- மின் மற்றும் காந்தப் புலன்களால் விலக்கமடையும் துகள் எது?
ஆல்பா கதிர்கள்
- மின் மற்றும் காந்தப் புலன்களால் விலகலடையாத கதிர் எது?
காமாக்கதிர்
- ஆல்பா கதிர்கள் திசை வேகம் என்னொ?
ஒளியின் திசைவேகத்தில் 1/10 முதல் 1/20 மடங்கு வரை
- பீட்டா கதிர்கள் திசை வேகம் என்ன?
ஒளியின் திசை வேகத்தில் 9/10 மடங்கு திசைவேகம்
- காமா கதிர்கள் திசை வேகம் என்ன ?
ஒளியின் திசைவேகம்
- ஆல்பா மற்றும் பீட்டா சிதைவின் போது சேய்க் உட்கரு உருவாகும் என்பதனைக் கதிரியக்க இடப்பெயர்வு விதியின் மூலம் விளக்கியவர் யார்?
சாடி மற்றும் ஃபஜன்(1913)
- கதிரியக்கத் தனிமம் எந்தத் துகளை உமிழும்போது அதன் நிறை எண்ணில் 4ம் அணு எண்ணில் இரண்டும் என்ற அளவில் குறைந்து புதிய சேய் உட்கரு உருவாகும் ?
ஆல்ஃபா துகள்
- கதிரியக்கத் தனிமம் எந்தத் துகளை உமிழும்போது அதன் நிறை எண்ணில் மாறாமலும் அணு எண்ணில் ஒன்றும் அதிகரித்தும் புதிய சேய் உட்கரு உருவாகும் ?
பீட்டா துகள்
- அணுக்கரு வினையின் போது நிலையற்ற தாய் உட்கருவானது ஆல்பா துகளை உமிழ்ந்து நிலைப்புத் தன்மையுள்ள சேய் உட்கருவாக மாறுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஆல்பா சிதைவு
- எந்தச் சிதைவின்போது உட்கருவின் ஆற்றல் மட்டும் மட்டுமே மாற்றமடைகிறது அதன் அணு எண் மற்றும் நிறை எண்ணில் மாற்றம் ஏதுமில்லாமல் அதே அளவில் இருக்கும்?
காமா சிதைவு
- யுரேனியம் உட்கரு வினை நியூட்ரான் கொண்டு தாக்கும் போது ஒப்பீட்டளவில் சமமான நிறை கொண்ட இரண்டு சிறு உட்கருக்களாகப் பிளவுற்று சில நியூட்ரான்களையும் ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது என்பதனை கண்டறிந்தவர்கள் யார்?
ஜெர்மன் அறிவியலறிஞர்கள் ஆட்டோ ஹான் மற்றும் ஸ்ட்ராஸ்மன் 1939
- கனமான அணுவின் உட்கரு பிளவுற்று இரண்டு சிறிய உட்காருக்களாக மாறும்போது அதிக ஆற்றலுடன் நியூட்ரான்கள் வெளியேற்றப்படும் நிகழ்வுக்கு என்ன பெயர்?
அணுக்கருப் பிளவு
- ஒவ்வொரு பிளவிற்கும் இடையே எவ்வளவு சராசரி ஆற்றல் வெளியாகிறது?
3.2×10-¹¹J
- கதிரியக்க பொருள் ஒன்று நியூட்ரான்களின் உட்கவர்ந்து நிலைநிறுத்தப்பட்ட பிளவுகளை ஏற்படுத்துமானால் அப்பொருள் எவ்வாறு அழைக்கப்படும் ?
பிளவுக்கு உட்படும் பொருள்
- இயற்கையில் எத்தனை சதவீதம் யுரேனியம் 238 தனிமம் காணப்படுகிறது ?
99.28%
- இயற்கையில் எத்தனை சதவீதம் யுரேனியம் 235 தனிமம் காணப்படுகிறது ?
0.72%
- பிளவுக்கு உட்படாத சில கதிரியக்கத் தனிமங்களை நியூட்ரான்களை உட்கவரச் செய்வதன்மூலம் பிளவுக்குட்படும் பொருளாக மாற்ற முடியும் இவை எவ்வாறு அழைக்கப்படுகின்றன ?
வளமிக்க பொருள்கள்
- யுரேனியம் 235 அணுக்கருவினை நியூட்ரான் கொண்டு தாக்கும்போது பிளவுபட்டு எத்தனை நியூட்ரான்கள் வெளியேற்றப்படுகின்றன?
3
- முதலில் வெளியேற்றப்படும் மூன்று நியூட்ரான்களும் அடுத்தடுத்து 27 நியூட்ரான்கள் உருவாக காரணமாகின்றன. இவ்வாறு தொடர்ந்து நடைபெறும் இந்நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படும்?
தொடர்வினை
- தொடர் வினையே எத்தனை வகையாக பிரிக்கலாம்?
இரண்டு கட்டுப்பாடான தொடர்வினை மற்றும் கட்டுப்பாடற்ற தொடர்வினை
- கட்டுப்பாடான தொடர்வினை யில் வெளிவரும் நியூட்ரான்களின் எண்ணிக்கை எந்த அளவில் பராமரிக்கப்படும்?
ஒன்று
- அணுகுண்டு வெடித்தல் நிகழ்வு எந்த வினையை பயன்படுத்தி நிகழ்த்தப்படுகிறது ?
கட்டுப்பாடற்ற தொடர்வினை
- கட்டுப்பாடான தொடர்வினை எங்கு பயன்படுத்தப்படுகிறது?
அணுக்கரு உலை
- அணுக்கரு பிளவின் போது அடுத்தடுத்த பிரிவினை உண்டாக்கும் நியூட்ரான்கள் சில பிளவு அமைப்பிலிருந்து வெளியேறுகின்றன. இதனை எவ்வாறு அழைக்கலாம்?
நியூட்ரான் கசிவு
- தொடர் வினையை தொடர்ந்து நிலை நிறுத்துவதற்கு தேவையான பிளவுப் பொருள்களின் குறைந்த அளவு நிறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மாறுநிலை நிறை
- மாறுநிலை நிறையை விட பிளவுப் பொருள்களின் நிறை குறைவாக இருந்தால் அதனை எவ்வாறு அழைக்கலாம்?
குறைமாறு நிலைநிறை
- மாறுநிலை நிறையை விட பிளவுப் பொருள்களின் நிறை அதிகமாக இருந்தால் அதனை எவ்வாறு அழைக்கலாம்?
மிகைமாறு நிலைநிறை அல்லது மீமாறுநிலை
- எந்த தத்துவத்தின் அடிப்படையில் அணுகுண்டு செயல்படுகிறது?
கட்டுப்பாடற்ற தொடர்வினை
- எந்த ஆண்டு ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா மற்றும் நாகசாகி பகுதிகளில் அணு குண்டுகள் வீசப்பட்டன ?
1945
- அணுக்கரு இயற்பியலில் சிறிய துகள்களின் ஆற்றலை அளவிடும் அலகு என்ன?
எலக்ட்ரான் வோல்ட் (eV)
- ஓர் எலக்ட்ரான் வோல்ட்டின் ஆற்றல் என்ன?
1.602×10-¹⁹ ஜீல்
- 1 மில்லியன் எலக்ட்ரான் வோல்ட் என்பது எதற்கு சமம்?
10⁶eV
- அணுக்கரு பிளவின் மூலம் வெளியேற்றப்படும் சராசரி ஆற்றல்?
200 MeV
- இரு லேசான உட்கருக்கள் இணைந்து கனமான உட்கரு உருவாகும்போது ஆற்றல் வெளியாகிறது இந்த நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அணுக்கரு இணைவு
- ஒவ்வொரு அணுக்கரு இணைவின் போதும் வெளியாகும் சராசரி ஆற்றல் எவ்வளவு?
3.814×10-¹² ஜீல்
- தாய் உட்கருவின் நிறைக்கும் சேய் உட்கருவின் நிலைக்கும் இடையே உள்ள வேறுபாடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நிறைவழு
- 1905இல் நிறை ஆற்றல் சமன்பாட்டை முன்மொழிந்தவர் யார்?
ஐன்ஸ்டீன்
- நிறைய ஆற்றல் சமன்பாடு என்ன?
E=mc²
- இரண்டாவது உலகப் போரின்போது ஹீரோஷிமா நகரத்தில் வீசப்பட்ட அணுகுண்டின் பெயர் என்ன?
லிட்டில் பாய்
- லிட்டில் பாய் அணுகுண்டு எதனை உள்ளடக்கமாகக் கொண்டது ?
யுரேனியம்
- நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டின் பெயர் என்ன?
ஃபேட் மேன்
- ஃபேட் மேன் அணுகுண்டு எதனை உள்ளடக்கமாகக் கொண்டது ?
புளூட்டோனியம்
- அணுக்கரு இணைவு நடைபெற தேவையான வெப்பநிலை எவ்வளவு?
10⁷ முதல் 10⁹K
- உயர் வெப்பநிலையில் ஹைட்ரஜன் அணுவின் உட்கருக்கள் ஒன்றோடொன்று அருகருகே சென்று அணுக்கரு இணைவு நடைபெறும். அவற்றை எவ்வாறு அழைக்கின்றோம்?
வெப்ப அணுக்கரு இணைவு
- சூரியன் மற்றும் விண்மீன்களின் உள் அடுக்கில் அணுக்கரு இணைவு நடைபெறுவதால் அதிக அளவு ஆற்றல் உருவாகிறது இது எவ்வாறு அழைக்கப்படும்?
விண்மீன் ஆற்றல்
- எந்த தத்துவத்தின் அடிப்படையில் ஹைட்ரஜன் குண்டு செயல்படுகிறது ?
அணுக்கரு இணைவு
- அணுக்கரு இணைவின் போது என்ன கதிர்கள் வெளியாகின்றன ?
ஆல்பா கதிர்கள் ,பாசிட்ரான் மற்றும் நியூட்ரினோக்கள்
- ஒவ்வொரு வினாடியிலும் எவ்வளவு ஹைட்ரஜன் அணுக்கரு இணைவு சூரியனில் நடைபெறுகிறது?
620 மில்லியன் மெட்ரிக் டன் ஹைட்ரஜன் அணுக்கரு இணைவு
- சூரியனிலிருந்து ஒரு வினாடியில் எவ்வளவு ஆற்றல் கதரியக்கமாக வெளியாகிறது?
3.8×10²⁶ ஜீல்
- சூரியனிலிருந்து பூமியை அடையும்போது கதிரியக்கம் ஒரு வினாடியில் ஓரலகுப் பரப்பில் அதன் மதிப்பு எவ்வளவு ஆகும் ?
1.4 கிலோ ஜூல்
- எந்த கதிரியக்க ஐசோடோப்புகள் பயிர் உற்பத்தியை அதிகரிக்க பயன்படுகிறது ?
பாஸ்பரஸ் ஐசோடோப்பு P-32
- கதிரியக்க ஐசோடோப்புகள் மருத்துவத் துறையில் எந்த வகைகளில் வகைப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படுகிறது ?
இரண்டு வகை : நோயறிதல் மற்றும் கதிரியக்க சிகிச்சை
- எந்த கதிரியக்க ஐசோடோப்புகள் இதயத்தை சீராக செயல்பட வைக்க உதவுகிறது?
சோடியம்- 24 ( Na²⁴)
- எந்த கதிரியக்க ஐசோடோப் முன்கழுத்துக் கழலை குணப்படுத்த உதவுகிறது?
அயோடின் -131 (I¹³¹)
- இரும்பின் எந்த ஐசோடோப் ரத்தசோகையை அடையாளம் காணவும் குணப்படுத்தவும் உதவுகிறது?
இரும்பு-29(Fe⁵⁹)
- எந்த கதிரியக்க ஐசோடோப்புகள் தோல் நோய் சிகிச்சையில் பயன்படுகிறது?
பாஸ்பரஸ்-32 (P³²)
- எந்த கதிரியக்க ஐசோடோப்புகள் தோல் புற்று நோயை குணப்படுத்த பயன்படுகிறது?
கோபால்ட் -60 (Co⁶⁰) தங்கத்தின் ஐசோடோப் -198 (Au¹⁹⁸)
- வானூர்திகளில் எடுத்துச்செல்லப்படும் சுமைகளில் வெடிபொருட்கள் உள்ளனவா என்பதைக் கண்டறிய எந்த ஐசோடோப் பயன்படுத்தப்படுகிறது?
கலிபோர்னியம் 252(cf ²⁵²)
- பல்வேறு தொழிற்சாலைகளில் புகையை உணரும் கண்டுணர்வியாக பயன்படும் ஐசோடோப்பு எது?
அமர்சியம்- 241(Am²⁴¹)
- நமது பூமியின் வயது என்ன ?
தோராயமாக 45 கோடியே 40 லட்சம் ஆண்டுகள் அல்லது 4.54×10⁹
- பன்னாட்டு கதிரியக்கப் பாதுகாப்பு கழகத்தின் படி ஒரு ஆண்டிற்கான கதிரியக்க பாதிப்பின் பாதுகாப்பான அளவு என்ன?
20 மில்லி சிவர்ட்
- ராண்ட்ஜன் அலகில் குறிப்பிடும்போது ஒரு வாரத்திற்கான பாதுகாப்பான கதிர்வீச்சின் அளவு என்ன?
100 மில்லி ராண்ட்ஜன்
- கதிர்வீச்சின் பாதிப்பு அளவு எவ்வளவு இருந்தால் ரத்தப் புற்றுநோயை ஏற்படுத்தும்?
100 R
- கதிர்வீச்சின் பாதிப்பு அளவு எவ்வளவு இருந்தால் மரணத்தை உண்டாக்கும் ?
600 R
- அயனியாக்கும் கதிர்வீச்சின் அளவை கண்டறியும் சாதனத்தின் பெயர் என்ன?
டோசிமீட்டர்
- கதிரியக்கப் பொருள்களை எந்த சுவர்களால் ஆன கொள்கலனில் வைக்கவேண்டும்?
காரீயம்
- உலகின் முதல் அணுக்கரு உலை எப்போது கட்டப்பட்டது ?
1942 அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரம்
- அணுக்கரு உலைகளில் தடுப்பானாக பயன்படுவது எது ?
கிராபைட் மற்றும் கனநீர்
- அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தும் கழிகளில் பயன்படுபவை?
போரான் மற்றும் காட்மியம்
- அணுக்கரு உலைகளில் குளிர்விப்பானாக பயன்படுவது எது?
நீர் காற்று மற்றும் ஹீலியம்
- எந்த ஆண்டு இந்திய அறிவியல் ஆராய்ச்சித் துறையால் இந்திய அணுசக்தி ஆணையம் மும்பையில் அமைக்கப்பட்டது?
1948
- இந்திய அணுசக்தி ஆணையத்தின் முதல் தலைவராக இருந்தவர் யார் ?
டாக்டர் ஹோமி ஜஹாங்கீர் பாபா
- இந்திய மின் உற்பத்தியில் அணு சக்தியானது எத்தனையாவது வளமாக உள்ளது?
ஐந்தாவது
- இந்தியாவின் முதல் அணு மின் நிலையம் எது ?
தாராப்பூர் அணுமின் நிலையம்
- இந்தியாவில் எந்த மாநிலங்களில் அணு மின் நிலையம் உள்ளது ?
மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், உத்திரப்பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு
- தமிழ்நாட்டில் எத்தனை அணுமின் நிலையங்கள் உள்ளன ?
2 கூடங்குளம் மற்றும் கல்பாக்கம்
- ஆசியா மற்றும் இந்தியாவில் கட்டப்பட்ட முதல் அணுக்கரு உலை எது ?
அப்சரா
- இந்தியாவில் தற்போது எத்தனை அணுக்கரு உலைகள் செயல்பாட்டில் உள்ளன?
22
10TH PHYSICS STUDY NOTES |அணுக்கரு இயற்பியல்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services