TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE
- எந்த ஆண்டு பிளாசிப் போர் நடைபெற்றது ?
ஜூன் 23, 1757
- பிளாசிப் போரில் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியால் தோற்கடிக்கப்பட்ட வங்காள நவாப் யார்?
சிராஜ் உத் தௌலா
- ஆங்கிலேயர் பிளாசிப் போரில் வங்காளத்தில் யாருடைய ரகசிய ஆதரவைப் பெற்றனர்?
மீர்சாபர்
- வங்காளத்தில் இருந்த வட்டிக்கு பணம் கொடுப்போர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
ஜகத் சேத்துகள்
- பழைய முறைமைகள் மற்றும் பழைய சமூக உறவுகளை நிலை நிறுத்தும் முயற்சிகள் தொடர்புடைய போராட்டங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது?
மறுசீரமைப்புக்கான கிளர்ச்சிகள்
- சமயத் தலைவர்கள் தலைமை ஏற்ற சமய சிந்தனைகளின் அடிப்படையில் சமூகத்தை சீர் அமைப்பதன் மூலம் உள்ளூர் மக்களின் விடுதலைக்காக போராடிய போராட்டம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
சமய இயக்கங்கள்
- இயக்கங்களின் தலைவர்கள் ஆங்கிலேயர்களாலும் பாரம்பரிய உயர்குடியினராலும் குற்றவாளிகளாக கருதப்பட்ட போராட்டம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
சமூக கொள்ளை போராட்டங்கள்
- பொதுவாக தலைவர்கள் இல்லாமல் திடீரென எழுந்த புரட்சி இயக்கங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது?
மக்களின் கிளர்ச்சிகள்
- ஃபராசி இயக்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1818
- ஃபராசி இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது?
ஹாஜி ஷரியத்துல்லா
- ஹாஜி ஷரியத்துல்லா எந்த ஆண்டு மறைந்தார்?
1839
- ஹாஜி ஷரியத்துல்லா மறைவிற்குப் பின் ஃபராசி கிளர்ச்சிக்கு தலைமை ஏற்றவர் யார்?
அவரது மகன் டுடு மியான்
- நிலம் கடவுளுக்கு சொந்தமானது என அறிவித்தவர் யார்?
டுடு மியான்
- டுடு மியான் எப்போது மறைந்தார் ?
1862
- டுடு மியான் மறைந்த பிறகு எந்த ஆண்டு மற்றும் யாரால் ஃபராசி இயக்கம் உயிர் பெற்றது?
1870, நோவா மியான்
- வஹாபி கிளர்ச்சி யாருக்கு எதிராக துவங்கப்பட்டது ?
ஆங்கிலேய ஆட்சிக்கும் ,நிலப்பிரபுக்களுக்கும்
- வஹாபி கிளர்ச்சி எப்போது தோன்றியது?
1827
- வஹாபி கிளர்ச்சி எங்கு தோன்றியது?
வங்காளத்தில் பரசத் பகுதி
- பரசத்தில் வஹாபி கிளர்ச்சிக்கு தலைமை ஏற்றவர் யார்?
இஸ்லாமிய மதபோதகர் டிடு மீர்
- கோல் கிளர்ச்சி எந்த ஆண்டுகளில் நடந்தது?
1831 -1832
- கோல் கிளர்ச்சி எந்த பகுதிகளை சுற்றி நடந்தது?
ஜார்கண்ட் மற்றும் ஒடிசா ஆகிய பகுதிகளிலுள்ள சோட்டா நாக்பூர் மற்றும் சிங்பும்
- கோல் கிளர்ச்சி யாருடைய தலைமையில் நடந்தது?
பிந்த்ராய் மற்றும் சிங்ராய்
- கோல்களின் தொடக்ககால போராட்டம் மற்றும் எதிர்ப்புகள் எவ்வாறு அமைந்திருந்தது ?
வெளியாட்கள் சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்துதல், கொள்ளையடித்தல் ,கலவரம் செய்தல்
- சாந்தலர்கள் இந்தியாவின் எந்த பகுதிகளில் வாழ்ந்து வந்த பழங்குடியின மக்கள் ?
கிழக்குப் பகுதிகள்
- சாந்தலர்கள் எந்தப் பகுதியை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டனர் ?
ராஜ்மஹால் மலையை சுற்றியிருந்த பகுதிகள்
- 1854ம் ஆண்டு வாக்கில் பல இடங்களில் சமூக கொள்ளை நடவடிக்கைகள் யாருடைய தலைமையில் நடந்தன?
பீர்சிங்
- 1855 இல் எந்த இரண்டு சந்தால் சகோதரர்கள் கிளர்ச்சியை தலைமையேற்று நடத்த வேண்டி தங்களுக்கு கடவுளிடமிருந்து தேவசெய்தி கிடைத்ததாக அறிவித்தனர்?
சித்து மற்றும் காணு
- எப்போது சந்தாலர் கிளர்ச்சி மகாஜன்கள்,ஜமீன்தார்கள் ,ஆங்கிலேய அதிகாரிகள் ஆகியோருக்கு எதிரான வெளிப்படையான கிளர்ச்சியாக உருவெடுத்தது?
ஜூலை மாதம் ,1855
- எந்த ஆண்டு சந்தாலர்கள் வசமிருந்த பகுதிகளை ஒழுங்கு முறைப்படுத்துவது பற்றிய சட்டம் நிறைவேற்றப்பட்டது?
1855
- உலுக்குலன் கிளர்ச்சி எங்கு நடைபெற்றது?
ராஞ்சி
- குண்டக்கட்டி என்ற முறையில் விவசாயம் செய்வதில் எந்த மக்கள் பெயர் பெற்றவர்கள்?
முண்டா மக்கள்
- குண்டக்கட்டி என்றால் என்ன பொருள்?
கூட்டு சொத்து (கூட்டாக நிலத்தை வைத்துக் கொண்டு விவசாயம் செய்வது)
- தம்மை கடவுளின் தூதர் என அறிவித்துக் கொண்டவர் யார்?
மிர்சா முண்டா
- மிர்சா முண்டா எப்போது கைது செய்யப்பட்டார்?
பிப்ரவரி 1900
- சோட்டா நாக்பூர் குத்தகை சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது ?
1908
- வாரிசு இழப்பு கொள்கையின் கீழ் எந்தெந்த நாடுகள் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டன?
சதாரா ,சம்பல்பூர், பஞ்சாபின் சில பகுதிகள் ,ஜான்சி மற்றும் நாக்பூர்
- எந்த ஆண்டு வேலூரில் சிப்பாய்கள் சமய குறியீடுகளை வைத்துக் கொள்வதற்கும் தாடி வைத்துக் கொள்வதற்கும் தடைவிதிக்கப்பட்டது ?
1806
- எந்த ஆண்டு கல்கத்தா அருகே பராக்பூரில் கடல்வழியாக பர்மா செல்ல மறுத்தனர்?
1824
- 1857;நடந்த புரட்சிக்கு வித்திட்டது எது?
புதிய என்ஃபீல்ட் ரக துப்பாக்கி வழங்கப்பட்ட தோட்டாக்கள் பற்றிய வதந்திகள்
- தோட்டாக்களில் என்ன பசை பயன்படுத்தப்பட்டதாக சிப்பாய்கள் பெரிதும் சந்தேகம் கொண்டனர் ?
பசு மற்றும் பன்றிக் கொழுப்பில் இருந்து தயாரிக்கப்பட்ட பசை
- மங்கள் பாண்டே எப்போது தனது ஐரோப்பிய அதிகாரியை தாக்கினார் ?
மார்ச் 29
- எப்போது மீரட்டில் இருந்து தில்லி செங்கோட்டை நோக்கி சிப்பாய்கள் ஒரு குழுவாக அணிவகுத்துச் சென்றனர்?
மே 11 1857
- டெல்லியில் புரட்சியாளர்கள் எந்த முகலாய அரசரை இந்துஸ்தானத்தின் மாமன்னராக பதவியேற்க செய்தனர்? இரண்டாம் பகதூர்ஷா
- கடைசி பேஷ்வா மன்னரான இரண்டாவது பாஜிராவ் இன் தத்துப்பிள்ளை யார் ?
நானாசாகிப்
- நானாசாகிப் எந்தப்பகுதியில் கிளர்ச்சிக்கு தலைமை தாங்கினார்?
கான்பூர்
- லக்னோவில் யார் புரட்சிக்கு தலைமை தாங்கினார்?
பேகம் ஹஜ்ரத் மகால்
- பரெய்லியில் யார் புரட்சிக்கு தலைமை தாங்கினார்?
கான் பகதூர் கான்
- எந்த ஆண்டு இயற்றப்பட்ட இந்திய அரசு சட்டத்தின்படி பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தால் நேரடியாக ஆட்சி அதிகாரம் செலுத்தப்பட்டது ?
நவம்பர் மாதம் 1858
- சாயத்துக்காக பயிரிடப்பட்ட செடி எது?
இண்டிகோ
- இண்டிகோ கிளர்ச்சி எந்த ஆண்டு தொடங்கியது?
1859
- வங்காளத்தின் எந்த மாவட்டத்தின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் இனி இண்டிகோ பயிரிட போவதில்லை என மறுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர் ?
வங்காளத்தின் நடியா
- நீல தர்பன் (இண்டிகோவின் கண்ணாடி ) எனும் தலைப்பில் ஒரு நாடகத்தை எழுதியவர் யார் ?
தீனபந்து மித்ரா
- எந்த ஆண்டு தக்காணத்தில் வட்டிக்கு பணம் வழங்குவோருக்கு எதிரான கலவரங்கள் பூனா அருகே உள்ள சூபா என்ற கிராமத்தில் முதன் முதலாக வெடித்ததாக பதிவாகியுள்ளது?
1875 ,மேமாதம்
- சென்னை வாசிகள் சங்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1852
- கிழக்கிந்திய அமைப்பு எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1866
- சென்னை மகாஜன சபை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 1884
- பூனா சர்வஜன சபா எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1870
- பம்பாய் மாகாண சங்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1885
- காலனி ஆட்சியின் பொருளாதாரம் பற்றிய விமர்சனத்தை செய்வதில் முக்கிய பங்காற்றியவர்கள் யார்?
தாதாபாய் நவரோஜி ,நீதிபதி ரானடே மற்றும் ரமேஷ் சந்திர தத்
- எந்த ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் உருவானது?
1885
- இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பை உருவாக்க காரணமாக இருந்தவர்?
ஏ.ஓஹியூம்
- இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவராக இருந்தவர்? உமேஷ் சந்திர பானர்ஜி
- காங்கிரஸின் ஆரம்பகால முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாக இருந்தது எது?
தேசிய ஒற்றுமை குறித்த உணர்வுகளை ஒருங்கிணைப்பது
- எந்த ஆண்டு வங்கப்பிரிவினை ஏற்படுத்தப்பட்டது ?
1905
- “முகலாயர்களின் ஆட்சி காலங்களில் கூட அனுபவிக்காத ஒற்றுமையை முஸ்லிம்கள் கிழக்கு வங்காளம் என்ற புதிய மாகாணத்தில் அனுபவிப்பார்கள்” என்று உறுதி அளித்தவர் யார்?
கர்சன்
- எப்போது வங்காளம் அதிகாரப்பூர்வமாக பிரிவினை ஆனபோது அந்த நாள் துக்க நாளாக அறிவிக்கப்பட்டது ?
அக்டோபர் 16 ,1905
- வங்காளத்தில் சுதேசி இயக்கத்தின் போது எத்தனை முக்கிய போக்குகள் காணப்பட்டன?
நான்கு:மிதவாதப் போக்கு ,ஆக்கப்பூர்வ சுதேசி, தீவிரத் தேசியவாதம், புரட்சிகர தேசியவாதம்
- சுதேசி காலத்தில் எப்போதும் லால் -பால் -பால் என அழைக்கப்பட்டவர்கள் யார்?
லாலா லஜபதிராய், பாலகங்காதர திலகர், பிபின் சந்திர பால்
- லாலா லஜபதிராய் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
பஞ்சாப்
- பாலகங்காதர திலகர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
மகாராஷ்டிரா
- பிபின் சந்திரபால் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் ?
வங்காளம்
- தென்னிந்தியாவில் சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடங்கியவர் யார்?
வ.உ. சிதம்பரனார்
- சுயராஜ்யம் என்பது முழுமையான தன்னாட்சி மற்றும் அந்நிய ஆட்சியிலிருந்து முழுமையான விடுதலை பெறுவதாக இருக்க வேண்டும் என நினைத்தவர் யார்?
திலகர்
- தன்னாட்சி இயக்கத்தின் காலகட்டம் என்ன?
1916- 1918
- லக்னோ ஒப்பந்தத்தின் காலகட்டம் என்ன?
1916
- மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் எந்த ஆண்டு ஆங்கிலேய அரசு அறிவித்தது ?
1919
10TH HISTORY STUDY NOTES | காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services