TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE
- பாளையம் என்ற சொல் எதனைக் குறிக்கும்?
ஒரு பகுதி அல்லது ஒரு ராணுவ முகாம் அல்லது ஒரு சிற்றரசு
- பாளையக்காரர்கள் என்ற தமிழ்ச்சொல் எதை குறிக்கிறது?
இறையாண்மை கொண்ட ஒரு பேரரசுக்கு கப்பம் கட்டும் குறுநில அரசு
- ஆங்கிலேயர்கள் பாளையக்காரர்களை எவ்வாறு குறிப்பிட்டனர்?
போலிகார்
- பாளையக்காரர் முறை யாரால் முதன்முதலில் நடைமுறைப்படுத்தப்பட்டது?
பிரதாபருத்ரன் ஆட்சிகாலத்தில் காகதீய அரசில்
- விஸ்வநாத நாயக்கர் எப்போது மதுரை நாயக்கர் ஆக பதவி ஏற்றார்?
1529
- விஸ்வநாத நாயக்கர் தன்னுடைய எந்த அமைச்சரின் உதவியோடு தமிழகத்தில் பாளையக்காரர் முறையை அறிமுகப்படுத்தினார் ?
அரியநாதர்
- தமிழகம் எத்தனை பாளையங்களாக பிரிக்கப்பட்டிருந்தது?
72 பாளையங்கள்
- பாளையக்காரர்களின் காவல் காக்கும் கடமை எவ்வாறு அழைக்கப்பட்டது?
படிக்காவல் அல்லது அரசு காவல்
- சாத்தூர், நாகலாபுரம் ,எட்டயபுரம் மற்றும் பாஞ்சாலங்குறிச்சி முதலிய பாளையங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன ?
கிழக்கு பாளையங்கள்
- மேற்கில் அமையப்பெற்ற முக்கியமான பாளையங்கள் என்னென்ன?
ஊத்துமலை ,தலைவன்கோட்டை ,நடுவக்குறிச்சி ,சிங்கம்பட்டி ,சேத்தூர்
- தெற்கத்திய பாளையக்காரர்களிடமிருந்து வரி வசூல் செய்யும் அதிகாரம் எதனால் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வழங்கப்பட்டது?
கர்நாடகப் போர்களில் ஆற்காடு நவாப் பெற்றிருந்த கடனுக்காக
- ஆற்காடு நவாபின் சகோதரர் யார்?
மாபூஸ்கான்
- மாபூஸ்கான் எப்போது திருநெல்வேலிக்கு சென்றார் ?
மார்ச்,1755
- மாபூஸ்கான் யாருடைய தலைமையிலான படையுடன் திருநெல்வேலிக்கு சென்றார்?
கர்னல் ஹெரான்
- நவாப் சந்தா சாகிப்பின் முகவர்களாக செயல்பட்டு வந்த மதுரை மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் பொறுப்பு வகித்த அதிகாரிகள் யார் ?
மியானா,முடிமையா,நபீகான் கட்டாக்
- எங்கு நடைபெற்ற போரில் மாபூஸாகான் படைகள் தோற்கடிக்கப்பட்டன?
களக்காடு
- கான்சாகிப் என அழைக்கப்பட்டவர் யார் ?
யூசுப்கான்
- மத மாற்றத்திற்கு முன்பு கான்சாகிப் இவ்வாறு அழைக்கப்பட்டார்?
மருதநாயகம்
- எப்போது புலித்தேவரின் மூன்று முக்கிய கோட்டைகள் யூசுப்கானின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன?
மே 16 1761
- யூசுப்கானின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பூலித்தேவரின் முக்கிய கோட்டைகள் எது?
நெற்கட்டும்செவல் ,வாசுதேவநல்லூர் மற்றும் பனையூர்
- பாளையக்காரர்களோடு பேச்சுவார்த்தை நடத்திய யூசுப்கான் மீது நம்பிக்கை துரோக குற்றம் சுமத்தப்பட்டு எப்போது தூக்கிலிடப்பட்டார்?
1764
- புலித்தேவர் திரும்பிவந்து எப்போது நெற்கட்டும்செவலை கைப்பற்றினார் ?
1764
- புலித்தேவர் கைப்பற்றிய நெற்கட்டும்செவல் மீண்டும் எப்போது ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டது ?
1767
- 1767 பூலித்தேவரை தோற்கடித்த ஆங்கிலேயர் யார் ?
கேப்டன் கேம்பல்
- வேலுநாச்சியார் எப்போது பிறந்தார்?
1730
- செல்லமுத்து சேதுபதி எந்த பாளையத்தின் அரசராக இருந்தார்?
ராமநாதபுரம்
- வேலுநாச்சியார் என்னென்ன மொழிகளில் வல்லமை பெற்றிருந்தார்?
ஆங்கிலம் ,பிரெஞ்சு, உருது
- வேலுநாச்சியார் 16 வயதில் சிவகங்கையின் மன்னரான யாரை மணந்து கொண்டார் ?
முத்துவடுகநாதர்
- வேலு நாச்சியாரின் மகள் யார் ?
வெள்ளச்சி நாச்சியார்
- யாருடைய தலைமையில் 1772ல் காளையார்கோவில் அரண்மனை தாக்கப்பட்டது?
ஆற்காடு நவாபும் லெப்டினன் கர்னல் பான் ஜோர்
- தனது மகளோடு தப்பிச்சென்ற வேலுநாச்சியார் யாருடைய பாதுகாப்பில் இருந்தார்?
கோபால நாயக்கர்
- வேலுநாச்சியார் கோபால நாயக்கர் பாதுகாப்பில் எங்கு எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?
திண்டுக்கல் அருகே உள்ள விருப்பாட்சி ,எட்டு ஆண்டுகள்
- வேலு நாச்சியாரின் சார்பில் ஹைதர் அலிக்கு உதவிவேண்டி யார் கடிதம் எழுதினார் ?
தளவாய் தாண்டவராயன்
- ஹைதர் அலி தனது திண்டுக்கல் கோட்டை படைத்தலைவரான யாரிடம் வேலுநாச்சியாருக்கு வேண்டிய ராணுவ உதவிகளை வழங்குமாறு ஆணையிட்டார் ?
சையது
- திண்டுக்கல் கூட்டமைப்பின் தலைவராக இருந்தவர் யார் ?
கோபாலநாயக்கர்
- பிரிட்டிஷ் படைகளால் எங்கு நடந்த கடுமையான போரில் கோபாலநாயக்கர் தோற்கடிக்கப்பட்டார்?
ஆனைமலை 1809
- இந்திய நாட்டில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்க அதிகாரத்தை எதிர்த்த முதல் பெண் ஆட்சியாளர் மற்றும் அரசி என்ற பெருமை யாருக்குரியது?
வேலுநாச்சியர்
- உடையாள் என்ற பெண்களின் படைப்பிரிவை தலைமை ஏற்று வழி நடத்திய வேலுநாச்சியாரின் தோழி யார்?
குயிலி
- குயிலி பற்றி கூற மறுத்ததால் கொல்லப்பட்ட மேய்த்தல் தொழில் புரிந்த பெண்ணின் பெயர் என்ன ?
உடையாள்
- தனக்குத்தானே நெருப்பு வைத்துக் கொண்டு குயிலி எப்போது பிரிட்டிஷாரின் ஆயுதக் கிடங்கை அழித்தார்?
1780
- வீரபாண்டிய கட்டபொம்மனின் தந்தை பெயர் என்ன ?
ஜெகவீர பாண்டிய கட்டபொம்மன்
- வீரபாண்டிய கட்டபொம்மன் தனது எத்தனையாவது வயதில் பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரராக பொறுப்பேற்றார்?
30 வயது
- கட்டபொம்மனிடமிருந்து வசூலிக்க வேண்டிய நிலவரி நிலுவையானது 1798 ஆம் ஆண்டு வாக்கில் எவ்வளவாக இருந்தது?
3310 பகோடாக்கள்
- ஆட்சியர் ஜாக்சன் தன்னை எப்போது ராமநாதபுரத்தில் வந்து சந்திக்குமாறு கட்டபொம்மனுக்கு ஆணை பிறப்பித்தார் ?
ஆகஸ்ட் 18 ,1798
- இறுதியாக கட்டபொம்மன் ஜாக்சனை எப்போது சந்தித்தார்
செப்டம்பர் 19 ,1798
- ராமநாதபுரம் கோட்டை வாசலில் நடந்த மோதலில் எந்த ஆங்கிலேய அதிகாரி கொல்லப்பட்டார்?
லெப்டினன்ட் கிளார்க்
- மதராஸ் ஆட்சிக்குள் அடங்கிய குழுவின் முன்பாக கட்டபொம்மனை ஆஜராகும்படி பணித்தது?
வில்லியம் ப்ரௌன்,,வில்லியம் ஓரம், ஜான் காஸாமேஜர்
- சிவசுப்ரமணியத்தை சிறையிலிருந்து விடுவித்தும் ,கலெக்டர் ஜாக்சனை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்ட ஆளுநர் யார்?
எட்வர்ட் கிளைவ்
- கலெக்டர் ஜாக்சனுக்கு பதிலாக புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டவர் யார்?
எஸ்.ஆர்.லூஷிங்கடன்
- திண்டுக்கல்லின் கோபால நாயக்கர் ஆனைமலை யதுல் நாயக்கர் போன்ற பாளையங்களை உள்ளடக்கிய தென்னிந்திய கூட்டமைப்பை உருவாக்கியவர் யார்?
சிவகங்கையின் மருதுபாண்டியர்
- மே 1799ல் திருநெல்வேலி நோக்கி சென்ற படைகளுக்குத் தலைமை ஏற்றவர் யார்?
மேஜர் பானர்மேன்
- கட்டபொம்மனை சரணடைய கூறிய நிபந்தனை எப்போது வழங்கப்பட்டது?
செப்டம்பர் 1,1799
- பானர்மேன் யாரை தூது அனுப்பி கட்டபொம்மனைச் சரணடையுமாறு கேட்டுக்கொண்டார்?
ராமலிங்கர்
- எங்கு நடந்த மோதலில் சிவசுப்பிரமணியம் கைது செய்யப்பட்டார்?
கள்ளர்பட்டி
- கல்லுப்பட்டி மோதலுக்கு பின்பு கட்டபொம்மன் எங்கு தப்பிச் சென்றார்?
புதுக்கோட்டை
- கட்டபொம்மனின் அமைச்சர் சிவசுப்பிரமணியனார் எங்கு செப்டம்பர் 13 அன்று தூக்கிலிடப்பட்டார்?
நாகலாபுரம்
- கட்டபொம்மன் எங்கு தூக்கிலிடப்பட்டார்?
கயத்தாறு பழைய கோட்டை
- பெரியமருது வேறு பெயர் என்ன ?
வெள்ளமருது
- பெரிய மருது மற்றும் சின்ன மருது ஆகிய இருவரும் யாரின் கீழ் படைத் தளபதிகளாக இருந்தனர்?
முத்துவடுகநாதர்
- எந்த ஆண்டு நடந்த கலகம் பிரிட்டிஷாரின் குறிப்புகளில் இரண்டாவது பாளையக்காரர் போர் என்று குறிப்பிடப்படுகிறது ?
1800
- இரண்டாவது பாளையக்காரர் போர் யார் அடங்கிய கூட்டமைப்பால் வழிநடத்தப் பட்டது?
மருதுபாண்டியர் ,திண்டுக்கல்லில் கோபால நாயக்கர், மலபாரில் கேரளவர்மா ,மைசூரில் கிருஷ்ணப்பா, மற்றும் துண்டாஜி
- ஊமைத்துரையும் சிவத்தையாவும் எப்போது பாளையங்கோட்டை சிறையில் இருந்து தப்பி கமுதியில் பதுங்கி இருந்தனர்?
பிப்ரவரி 1801
- சின்னமருது ஊமைத்துரையும் சிவத்தையாவையும் தமது தலைமையிடமான எங்கு அழைத்துச் சென்றார்?
சிறுவயல்
- ஊமைத்துரையும் சிவத்தையாவையும் ஒப்படைக்கும்படி கூறிய பிரிட்டிஷாரின் கோரிக்கை மறுக்கப்பட்டதால் சிவகங்கை நோக்கி படை நடத்தி சென்றவர்கள் யார் ?
கர்னல் அக்னியூ, கர்னல் இன்ஸ்
- மருது சகோதரர்கள் எப்போது நாட்டின் விடுதலையை முன்னிறுத்திய “திருச்சிராப்பள்ளி பேரறிக்கை” எனும் பிரகடனத்தை வெளியிட்டனர்?
ஜூன் 1801
- மே1801 ஆங்கிலேயர்கள் எங்கு இருந்த கலகக்காரர்களை தாக்கினார்கள் ?
தஞ்சாவூர் திருச்சி
- எப்போது சிவகங்கை கைப்பற்றப்பட்டது ?
1801
- 1801 அக்டோபர் 24 அன்று எங்கு மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டனர் ?
திருப்பத்தூர், இராமநாதபுரம் அருகே
- ஊமைத்துரையும் சிவத்தையாவும் பிடிக்கப்பட்டு பாஞ்சாலங்குறிச்சியில் எப்போது தலை துண்டிக்கப்பட்டனர்?
நவம்பர் 16 1801
- கலகக்காரர்கள் எத்தனை பேர் மலேசியாவின் பினாங்கு நாட்டிற்கு கடத்தப்பட்டார்கள்?
73 பேர்
- மருது சகோதரர்கள் கலகம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தென்னிந்திய புரட்சி
- எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்ட கர்நாடக உடன்படிக்கையின்படி நேரடியாக தமிழகத்தின் மீது தங்கள் கட்டுப்பாட்டை செயற்படுத்தி, பாளையக்காரர் முறையை முடிவுக்குக் கொண்டுவந்தனர் ?
ஜூலை 31 1801
- தீரன் சின்னமலையின் இயற்பெயர் என்ன ?
தீர்த்தகிரி
- தீரன் சின்னமலை எப்போது பிறந்தார்?
1756
- கொங்கு பகுதியில் யாரால் வரி வசூலிக்கப்பட்டது?
திப்புவின் திவான் முகமது அலி
- முகமது அலியிடம் “சிவமலைக்கும் சென்னிமலைக்கும் இடையே இருந்த சின்னமலையே வரி பணத்தை பிடுங்கிக் கொண்டதாக சுல்தானுக்கு போய் சொல்” எனக் கூறியவர் யார்?
தீரன் சின்னமலை
- திவான் அனுப்பிய படையும் சின்னமலையும் எங்கு மோதிக்கொண்டனர்?
நொய்யல் ஆற்றங்கரை
- தீரன் சின்னமலை யாரிடம் பயிற்சி பெற்றார்?
பிரஞ்சுக்காரர்கள்
- எங்கு திப்புவின் இறப்பிற்குப் பின் ஒரு கோட்டையை எழுப்பி தீரன்சின்னமலை அவ்விடத்தை விட்டு வெளியேறாமல் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடினார்?
ஓடாநிலை
- தீரன் சின்னமலை கைதுசெய்யப்பட்டு எங்கு சிறை வைக்கப்பட்டார்?
சங்ககிரி
- ஆங்கிலேய ஆட்சியை ஏற்க மறுத்ததால் தீரன் சின்னமலை மற்றும் அவரது சகோதரர்கள் எப்போது சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டனர்?
ஜூலை 31 1805
- கிழக்கிந்திய கம்பெனி எந்த ஆண்டு ஏற்பட்ட போரின் முடிவில் சேலம் மற்றும் திண்டுக்கல் வருவாய் மாவட்டங்களை திப்புவிடமிருந்து பெற்றுக்கொண்டது?
1792
- எந்த போரின் முடிவில் கோயம்புத்தூர் இணைக்கப்பட்டது?
1799 ஆங்கிலேய மைசூர் போர்
- எந்த ஆண்டு தஞ்சாவூரின் அரசர் அப்பகுதியில் இறையாண்மை உரிமையை ஆங்கிலேயருக்கு விட்டுக் கொடுத்தார்?
1798
- வேலூர் புரட்சி ஏற்படுவதற்கான இயக்க சக்தியாக யார் வெளியிட்ட புதிய ராணுவ விதிமுறை அமைந்தது ?
தலைமை தளபதி சர்ஜான் கிரடாக்
- எப்போது ஜூலை 10 1806 அன்று அதிகாலையில் எந்த படைப்பிரிவுகளின் இந்திய சிப்பாய்கள் துப்பாக்கிகளின் முழக்கத்தோடு புரட்சியில் இறங்கினர்?
முதல் மற்றும் 23ஆம் படைப்பிரிவு
- வேலூர் கோட்டையின் காவல் படையின் உயர் பொறுப்பு வகித்து பலியானவர் யார்?
கர்னல் பேன்கோர்ட்
- கர்னல் பேன்கோர்ட்க்குப் பிறகு பலியான கர்னல் மீக்காரஸ் எந்த படைப் பிரிவைச் சேர்ந்தவர்?
23ஆம் படைப்பிரிவு
- வேலூர் புரட்சியில் கொல்லப்பட்ட பிரிட்டிஷ் மன்னரின் படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் யார்?
லெப்டினன்ட் எல்லி,லெப்டினன்ட் பாப்ஹாம்
- கோட்டைக்கு வெளியே இருந்த யார் ஆற்காடு குதிரைப் படைத் தளபதியாக இருந்த கர்னல் கில்லெஸ்பிக்கு தகவல் கொடுத்தார்?
மேஜர் கூட்ஸ்
- யார் தலைமையிலான குதிரை படையுடன் கில்லஸ்பி வேலூர் கோட்டையை வந்தடைந்தார் ?
கேப்டன் யங்
- வேலூர் புரட்சியின் காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைமை தளபதிகள் யார்?
தலைமைத் தளபதி ஜான் கிரடாக், உதவித் தளபதி அக்னியூ, வில்லியம் பெண்டிங்
- சமீபகால ஆய்வுகளின்படி வேலூர் புரட்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்தவர்கள் யார் ?
ஷேக் ஆடம்,ஷேக் ஹமீது,ஷேக் ஹூசைன்,ஷேக் காஸிம்
- வேலூர் புரட்சியானது எங்கெல்லாம் பரவியது?
பெல்லாரி,வாலாஜாபாத்,ஹைதராபாத்,பெங்களூர்,நந்திதுர்க்கம்,சங்கரிதுர்க்கம்
10TH HISTORY STUDY NOTES | ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான தொடக்கால கிளர்ச்சிகள் | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services