- கனிமங்களின் கூட்டுப் பொருட்கள், மக்கிய தாவரங்கள் ,விலங்கின பொருட்கள் ,காற்று மற்றும் நீர் ஆகியவற்றை உள்ளடக்கியது எது ?
மண்
- மண் எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது ?
மூன்று மண் துகள்கள், களிமண் ,மணல் மற்றும் மண்மண்டி படிவு
- இந்தியாவில் காணப்படும் மண் வகைப் பிரிவுகள்எத்தனை?
8 வகை
- இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1953
- இந்தியாவில் காணப்படும் மண் வகைகள் என்னென்ன?
வண்டல் மண் ,கரிசல் மண், செம்மண் ,சரளை மண் ,காடு மற்றும் மலை மண், வறண்ட பாலை மண், உப்பு மற்றும் காரமண், களிமண் மற்றும் சதுப்பு நில மண்
- வெளிர் நிறம் உடைய மணற்பாங்கான மண் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
காதர்
- சுண்ணாம்பு மற்றும் களிமண் பாங்கான பழைய வண்டல் அடர் நிறப் படிவுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பாங்கர்
- வண்டல் மண்ணில் அதிகமாகக் காணப்படும் வேதியியல் பண்புகள் என்னென்ன ?
பொட்டாசியம் ,பாஸ்போரிக் அமிலம் ,சுண்ணாம்பு மற்றும் கார்பன் கலவைகள்
- வண்டல் மண்ணில் குறைவாக காணப்படும் வேதியல் பண்பு எது?
நைட்ரஜன்
- வண்டல் மண் எங்கு பரவியுள்ளது?
கங்கை மற்றும் பிரமபுத்திரா ஆற்றுப் பள்ளத்தாக்கு, உத்தர பிரதேசம் ,உத்தரகாண்ட் ,பஞ்சாப் ,அரியானா, மேற்கு வங்காளம் மற்றும் பீகார் மாநிலங்களில் உள்ள சமவெளி பகுதிகளில்
- வண்டல் மண்ணில் விளையும் பயிர்கள் என்னென்ன?
நெல் கோதுமை கரும்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள்
- தக்காணப் பகுதியில் உள்ள பசால்ட் பாறையில் இருந்து உருவாகும் மண் எது?
கரிசல் மண்
- கரிசல் மண் என்ன நிறத்தில் உள்ளது?
கருப்பு நிறம்
- கரிசல் மண்ணின் கருப்பு நிறத்திற்கு காரணம் என்ன ? டைட்டானியம் மற்றும் இரும்பு தாதுக்கள்
- கரிசல் மண்ணில் அதிகமாக காணப்படும் வேதியியல் பண்புகள் என்னென்ன?
கால்சியம் ,மெக்னீசியம், அதிக அளவிலான இரும்பு ,அலுமினியம் ,சுண்ணாம்பு மற்றும் மாங்கனீசு
- கரிசல் மண்ணில் குறைவாக காணப்படும் வேதியியல் பண்புகள் என்னென்ன?
நைட்ரஜன் பாஸ்போரிக் அமிலம் மற்றும் இலைமக்குகள்
- ஈரமாக இருக்கும் போது சேறாவும் ,ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்ளும் தன்மை உடைய மண் எது?
கரிசல் மண்
- கரிசல் மண்ணின் பரவல் எங்கெங்கு காணப்படுகிறது ? மகாராஷ்டிரா மற்றும் மாளவப் பீடபூமி, கத்தியவார் தீபகற்பம் ,தெலுங்கானா, ஆந்திர பிரதேசத்திலுள்ள ராயல்சீமா மற்றும் கர்நாடக மாநிலத்தின் வட பகுதி
- கரிசல் மண்ணில் வளரும் பயிர்கள் என்னென்ன?
பருத்தி ,திணை வகைகள், புகையிலை மற்றும் கரும்பு
- பழமையான படிகப் பாறைகளால் ஆன கிரானைட், நைஸ் போன்ற பாறைகள் சிதவடைவதால் உருவாகும் மண் வகை எது?
செம்மண்
- செம்மண்ணில் அதிகமாக காணப்படும் வேதியியல் பண்புகள் என்னென்ன?
இரும்பு மற்றும் மெக்னீசியம்
- செம்மண்ணில் குறைவாக காணப்படும் வேதியியல் பண்புகள் என்னென்ன?
நைட்ரஜன் ,இலைமக்குகள், பாஸ்போரிக் அமிலம் மற்றும் சுண்ணாம்பு சத்துக்கள்
- மென்துகள்கள் இடையளவு குறிப்பிடப்பட்டுள்ள உப்புக்கரைசல், வெண்களிப் பாறைத்தாதுக்கள் சிறு வெடிப்புகளுடன் கூடிய மண் படிவுகள் முதலியவை எந்த மண்ணின் தன்மைகள்?
செம்மண்
- செம்மண் பரவியுள்ள பகுதிகள் என்னென்ன?
தக்காண பீடபூமியின் கிழக்குப்பகுதி, தென் மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் சோட்டா நாகபுரி பீடபூமி
- செம்மண்ணில் வளரும் பயிர்கள் என்னென்ன?
கோதுமை, நெல் ,பருத்தி, கரும்பு மற்றும் பருப்பு வகைகள்
- வெப்பம் மற்றும் குளிர் அடுத்தடுத்து நிகழும் போது மண்சுவரல் காரணமாக உருவாகும் மண் வகை எது?
சரளை மண்
- சரளை மண்ணின் வேதியியல் பண்புகள் என்னென்ன?
இரும்பு மற்றும் அலுமினியத்தின் நீரேற்று ஆக்சைடுகளால் உருவானது
- ஈரப்பதத்தை எந்த மண்வகை தக்க வைத்துக் கொள்வதில்லை?
சரளை மண்
- சரளை மண் பரவியுள்ள பகுதிகள் என்னென்ன?
அசாம் குண்றுகள், கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதிகள், ஒடிசா மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள்
- சரளை மண் மண்ணில் வளரும் பயிர்கள் என்னென்ன?
காபி ,ரப்பர் ,முந்திரி மற்றும் மரவள்ளிக்கிழங்கு
- பனிமழை வெப்பநிலை வேறுபாடுகளால் பௌதீக சிதைவின் காரணமாக உருவாகும் மண் வகை எது?
காடு மற்றும் மலை மண்
- காடு மற்றும் மலை மண் வகைகளில் எந்த வேதிப்பண்புகள் குறைவாக காணப்படுகிறது?
பொட்டாஷ், பாஸ்பரஸ் மற்றும் சுண்ணாம்பு சத்துக்கள்
- மென்மையான மணல் மற்றும் பாறை துகள்கள் கலந்து காணப்படும் தன்மை எந்த மண் வகையை சார்ந்தது ?
காடு மற்றும் மலை மண்
- அதிக இலை மக்குச் சத்துக்கள் உடைய மண் வகை எது?
காடு மற்றும் மலை மண்
- காடு மற்றும் மலை மண் பரவல் எந்தப் பகுதிகளில் பரவியுள்ளது ?
ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம் ,உத்தரகாண்ட், சிக்கிம் போன்ற மாநிலங்களில் உள்ள ஊசியிலைக் காடுகளின் பகுதிகள் மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள்
- காடு மற்றும் மலை மண்ணில் வளரும் பயிர்கள் என்னென்ன ?
காப்பி ,தேயிலை ,நெல் ,மக்காச்சோளம் ,உருளைக்கிழங்கு, பார்லி ,வெப்பமண்டல பழவகைகள் மற்றும் பல்வேறு வகையான வாசனை பொருட்கள்
- வறண்ட பாலை மண்ணில் உள்ள வேதியியல் பண்புகள் எவை?
அதிக அளவிலான உப்பு அமிலத்தன்மை பாஸ்பேட் பல்வேறு அளவுகளில் உள்ள கால்சியம் கார்பனேட் உயிர்ச்சத்துக்கள் மற்றும் நைட்ரஜன் குறைவாகவும் காணப்படுகிறது
- வெளிர் நிறம் குறைந்த இலை மக்கு சத்து, புரைத்தன்மையுடையது மற்றும் குறைந்த ஈரப்பதம் உடைய ஆகிய தன்மைகள் எந்த மண்ணின் பண்புகளாகும்?
வறண்ட பாறை மண்
- வறண்ட பாலை மண்ணின் பரவல் எங்கெங்கு பரவியுள்ளது?
ராஜஸ்தான் ,குஜராத்தின் வடபகுதி, பஞ்சாப் மாநிலத்தின் தென் பகுதி
- வறண்ட பாலை மண்ணில் வளரும் பயிர்கள் என்னென்ன?
நீர்ப்பாசன வசதியுடன் திணை வகைகள் ,பார்லி, பருத்தி, சோளம் பருப்பு வகைகள்
- உப்பு மற்றும் கார மண் வகையில் காணப்படும் வேதியல் பண்பு என்ன?
சோடியம் ,மெக்னிசியம் ,கால்சியம் மற்றும் சல்பியூரிக் அமிலம்
- சிதைக்கப்படாத பாறைகள் மற்றும் சிதைவுற்ற கனிமங்களை உடைய தன்மை எந்த மண்ணின் தன்மை ?
உப்பு மற்றும் கார மண் வகை
- உப்பு மற்றும் கார மண் வகை பரவல் எங்கு காணப்படுகிறது?
ஆந்திர பிரதேசம் ,கர்நாடகம் ,பீகார் ,உத்தரபிரதேசம் ,அரியானா, பஞ்சாப் ,ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் வறண்ட பகுதிகள்
- அதிக மழை அளவு ,அதிக ஈரப்பதம் கொண்ட பகுதிகளில் காணப்படும் மண் வகை எது?
களிமண் மற்றும் சதுப்பு நிலம்
- களிமண் மற்றும் சதுப்பு நிலத்தின் வேதியியல் பண்புகள் என்னென்ன?
பொட்டாஷ் மற்றும் பாஸ்பேட் சத்துக்கள் குறைவாகவும், கணிசமான அளவில் உப்புக்கரைசல் உயிரின பொருட்கள் 10 முதல் 40 சதவீதம் வரை காணப்படுகிறது
- களிமண் மற்றும் சதுப்பு நிலம் மண்வகை எங்கு பரவியுள்ளது ?
கேரளாவில் கோட்டயம் மற்றும் ஆலப்புழை மாவட்டங்கள் ஒடிசா தமிழ்நாடு கடற்கரை பகுதிகள் மேற்கு வங்கத்தில் உள்ள சுந்தர வனப்பகுதிகள் பீகார் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பல மாவட்டங்கள்
- எந்த மண் வகையில் அதிக காரத்தன்மை காரணமாக பயிர்கள் வளர்வதற்கு ஏற்ற சூழ்நிலை இல்லை?
உப்பு மற்றும் கார வகை
- களிமண் மற்றும் சதுப்பு நிலம் மண்ணில் விளையும் பயிர்கள் என்னென்ன ?
நெல், சணல்
- இந்திய தொலை நுண்ணுணர்வு 2015 ஆம் ஆண்டு அறிக்கையின் படி எத்தனை ஹெக்டேர் நிலப்பரப்பு மண் அரிப்பால் பாதிப்படைந்துள்ளது ?
147 மில்லியன் ஹெக்டர்
- கால்வாய் பாசனம் இந்தியாவின் எத்தனையாவது முக்கியமான நீர்ப்பாசன ஆதாரமாகும் ?
இரண்டாவது
- கால்வாய் பாசனத்தை எத்தனை வகைகளாக பிரிக்கலாம் ?
இரண்டு வகைகள்: வெள்ளப்பெருக்கு கால்வாய் & வற்றாத கால்வாய்
- எந்த வகை கால்வாய்களில் ஆற்றிலிருந்து நேரடியாக எவ்வித தடைகளும் இன்றி தண்ணீர் கால்வாய் மூலம் எடுக்கப்படுகிறது ?
வெள்ளப்பெருக்கு கால்வாய்
- எந்த வகை கால்வாய்கள் வற்றாத நதிகளின் குறுக்கே அணைகளைக் கட்டி நீரின் போக்கை சீர்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வருவதாகும்?
வற்றாத கால்வாய்
- கால்வாய் பாசனத்தில் எத்தனை சதவீதம் வட இந்திய பெரும் சமவெளிகளில் காணப்படுகின்றன?
60%
- கிணறுகள் எத்தனை வகைப்படும்?
இரண்டு திறந்தவெளிக் கிணறுகள் ,ஆழ்துளை கிணறுகள்
- நிலத்தடி நீர் போதுமான அளவிற்கு இருக்கக்கூடிய பகுதிகளில் எந்த வகை கிணற்றுப்பாசனம் காணப்படுகிறது?
திறந்தவெளிக் கிணறுகள்
- நிலத்தடி நீர்மட்டம் குறைவாக உள்ள பகுதிகள், மின்மிகை பகுதிகள் மற்றும் மென் பாறைகள் கொண்ட பகுதிகளில் எந்த வகை கிணற்றுப்பாசனம் மேற்கொள்ளப்படுகிறது?
ஆழ்துளை கிணற்றுப் பாசனம்
- புவியின் மேற்பகுதியில் இயற்கையாக அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு தாழ்வான நீர் தேங்கும் பகுதி எவ்வாறு அழைக்கப்படும்?
ஏரி
- சொட்டு நீர் பாசனம் எந்த நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது ?
இஸ்ரேல்
- சொட்டு நீர் பாசனத்தின் மூலம் எத்தனை சதவீத நீர் சேமிக்கப்படுகிறது?
70%
- ஆற்றின் குறுக்கே பல்வேறு நோக்கங்களுக்காக அணைகளை கட்டுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்கு திட்டங்கள்
- குறைந்த அளவு நீரில் அதிக மகசூலை பெறுதல் மற்றும் தண்ணீர் பயன்பாட்டை மேம்படுத்த ஏற்படுத்தப்பட்ட திட்டம் எது?
பிரதான் மந்திரி கிருஷி சிஞ்சாயி யோஜனா
- நுண்ணீர் பாசன திட்டத்தில் 5 மாநிலங்கள் மட்டும் சுமார் எத்தனை சதவீத நீர் பாசன வசதியை பெற்றுள்ளது?
78%
- தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம் எந்த ஆற்றில்?
கட்டப்பட்டுள்ளது தாமோதர்
- தாமோதர் பள்ளத்தாக்கு திட்டத்தால் பயன் அடையும் மாநிலங்கள் ?
மேற்கு வங்காளம் ஜார்கண்ட்
- உலகின் பெரிய புவியீர்ப்பு அணை எது?
பக்ராநங்கல் திட்டம்
- பக்ராநங்கல் திட்டம் எந்த ஆற்றில் கட்டப்பட்டுள்ளது?
சட்லஜ்
- பக்ராநங்கல் திட்டத்தால் பயன் அடையும் மாநிலங்கள்?
பஞ்சாப் ஹரியானா ராஜஸ்தான்
- உலகின் மிக நீளமான அணை எது?
ஹிராகுட் திட்டம்
- ஹிராகுட் திட்டம் எந்த ஆற்றில் கட்டப்பட்டுள்ளது?
மகாநதி
- ஹிராகுட் திட்டத்தால் பயன் அடையும் மாநிலங்கள்?
ஒடிசா
- கோசி திட்டம் எந்த ஆற்றில் கட்டப்பட்டுள்ளது?
கோசி
- கோசி திட்டத்தால் பயன் அடையும் மாநிலங்கள்?
பீகார் மற்றும் நேபாளம்
- துங்கபத்ரா திட்டம் எந்த ஆற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ளது ?
துங்கபத்ரா
- துங்கபத்ரா திட்டத்தில் பயனடைய மாநிலங்கள் ?
ஆந்திரபிரதேசம் மற்றும் கர்நாடகா
- தெகிரி அணை எந்த ஆற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ளது?
பாகீரதி
- தெகிரி அணை திட்டத்தால் பயன் அடையும் மாநிலங்கள்?
உத்தரகாண்ட்
- சம்பல் பள்ளத்தாக்கு திட்டம் எந்த ஆற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ளது?
சம்பல்
- சம்பல்பள்ளத்தாக்கு திட்டத்தால் பயன் அடையும் மாநிலங்கள் ?
ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம்
- நாகார்ஜுன சாகர் திட்டம் எந்த ஆற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ளது?
கிருஷ்ணா
- நாகர்ஜுனா சாகர் திட்டத்தால் பயன் அடையும் மாநிலங்கள் ?
ஆந்திரப்பிரதேசம்
- சர்தார் சரோவர் திட்டம் எந்த ஆற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ளது ?
நர்மதை
- சர்தார் சரோவர் திட்டத்தில் பயனடைய மாநிலங்கள் எவை?
மத்திய பிரதேசம் ,மகாராஷ்டிரா ,ராஜஸ்தான்
- இந்திராகாந்தி கால்வாய் திட்டம் எந்த ஆற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ளது?
சட்லஜ்
- இந்திராகாந்தி கால்வாய் திட்டத்தால் பயனடையும் மாநிலங்கள் எது?
ராஜஸ்தான் ,பஞ்சாப் ,ஹரியானா
- மேட்டூர் அணை எந்த ஆற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ளது ?
காவிரி
- மேட்டூர் அணையால் பயனடையும் மாநிலம் எது?
தமிழ்நாடு
- குறிப்பிடப்பட்ட பயிர்களை உற்பத்தி செய்தும் மற்றும் கால்நடைகளை வளர்க்கும் மக்களுக்கு உணவையும் கால்நடைகளுக்கு தீவனத்தையும் மற்றும் தேவையான இதரப் பொருட்களையும் வழங்குவதற்கு என்ன பெயர் ?
வேளாண்மை
- குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் சாகுபடி செய்யப்பட்டு நிலத்தின் மொத்த விளைச்சலில் பெரும்பகுதி குடும்ப உறுப்பினர்களால் நுகரப்பட்டு மீதமுள்ளவை விற்பனை செய்யப்படும் வேளாண்மை வகை எது ?
தன்னிறைவு வேளாண்மை
- எந்த வகை வேளாண்மை பழங்குடியின மக்களால் காடுகளில் ஒரு சிறிய பகுதியில் உள்ள மரங்களை அகற்றி சாகுபடி செய்யப்படுகிறது?
இடப்பெயர்வு வேளாண்மை
- இடப்பெயர்வு வேளாண்மை வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வெட்டுதல் மற்றும் எரித்தல் வேளாண்மை
- அசாம் மாநிலத்தில் இடப்பெயர்வு வேளாண்மை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஜூம்
- கேரள மாநிலத்தில் இடப்பெயர்வு வேளாண்மை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பொன்னம்
- ஆந்திரபிரதேசம் மற்றும் ஒடிசாவில் இடப்பெயர்வு வேளாண்மை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பொடு
- மத்திய பிரதேசத்தில் இடப்பெயர்வு வேளாண்மை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
பீவார்,மாசன்,பென்டா,பீரா
- இயந்திரங்கள் மற்றும் பல்வேறு நவீன உத்திகள் மூலம் உற்பத்தியை அதிகப்படுத்தும் வேளாண்மை?
தீவிர வேளாண்மை
- நீர்ப்பாசன வசதி இல்லாத வறண்ட பகுதிகளில் எந்தவகையான வேளாண் முறை பின்பற்றப்பட்டு வருகிறது?
வறண்ட நில வேளாண்மை
- பயிரிடுதலுடன் கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு ,மீன் வளர்ப்பு ,தேனீ வளர்ப்பு போன்றவற்றை உள்ளடக்கிய வேளாண்மை எது?
கலப்பு வேளாண்மை
- மலைப்பிரதேசங்களில் பின்பற்றப்படும் வேளாண்மை முறை எது ?
படிக்கட்டு முறை வேளாண்மை
- உலகளவில் நெல் உற்பத்தியில் இந்தியா எத்தனாவது இடத்தை வகிக்கிறது?
இரண்டாமிடம் ( சீனா முதலிடம் )
- நெல் என்பது என்ன வகை பயிர்?
அயன மண்டல பயிர்
- நெல் பயிரிடப்பட எவ்வளவு சராசரி வெப்பநிலை தேவைப்படும்?
24 டிகிரி செல்சியஸ்
- நெல் பயிரிடப்பட ஆண்டு மழை அளவு எவ்வளவு தேவைப்படுகிறது?
150 சென்டிமீட்டர்
- இந்தியாவில் நெல் எத்தனை முறைகளில் பயிரிடப்படுகிறது?
மூன்று :விதைத்தல் முறை, ஏர் உழுதல் அல்லது துளையிடும் முறை , நாற்று நடுதல் முறை
- காரிப் பருவம் என அழைக்கப்படுவது எந்த மாதங்கள்?
ஜூன் முதல் செப்டம்பர் வரை
- ராபி பருவம் என அழைக்கப்படுவது எந்த மாதம்?
அக்டோபர் முதல் மார்ச் வரை
- சையத் பருவம் என அழைக்கப்படுவது எந்த மாதம்?
ஏப்ரல் முதல் ஜூன் வரை
- காரிப் பருவத்தில் தென்மாநிலங்களில் பயிரிடப்படும் முக்கிய பயிர்கள் என்னென்ன ?
நெல் கேழ்வரகு மக்காச்சோளம் கம்பு நிலக்கடலை
- ராபி பருவத்தில் தென்மாநிலங்களில் பயிரிடப்படும் முக்கிய பெயர்கள் என்னென்ன?
நெல் ,மக்காச்சோளம் ,கேழ்வரகு ,நிலக்கடலை, கம்பு
- சையத் பருவத்தில் தென்மாநிலங்களில் பயிரிடப்படும் முக்கிய பயிர்கள் எவை?
நெல் ,காய்கறிகள் ,தீவனப்பயிர்கள்
- அதிக விளைச்சல் தரும் நெல் வகைகள் என்னென்ன?
CR தான் 205,A.R. தான்,CRR 451
- 2016 ஆம் ஆண்டு நிலவரப்படி அரிசி உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாநிலம்?
மேற்கு வங்காளம் தமிழ்நாடு (மூன்றாம் இடம்)
- நாட்டின் பயிர் சாகுபடி பரப்பில் 24 சதவீதமும் மற்ற உணவுப் பயிர் உற்பத்தியில் 34 சதவீத பங்கையும் வகிக்கும் பயிர் எது?
கோதுமை
- கோதுமைக்கு விதைக்கும் பருவத்தில் எவ்வளவு வெப்பம் தேவைப்படும் ?
10-15 டிகிரி செல்சியஸ்
- கோதுமைக்கு முதிரும் பருவத்தில் எவ்வளவு வெப்பநிலை தேவைப்படுகிறது?
20 முதல் 25 டிகிரி செல்சியஸ்
- உத்தரபிரதேசம் பஞ்சாப் அரியானா ராஜஸ்தான் மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் எத்தனை சதவீதத்திற்கு மேலான கோதுமை உற்பத்தி நடைபெறுகிறது ?
85%
- நம் நம் நாட்டின் மூன்றாவது முக்கிய உணவுப் பயிர் எது ?
சோளம்
- சோளம் எந்த நாட்டை பூர்விகமாகக் கொண்ட பயிராகும் ?
ஆப்பிரிக்கா
- சோளம் பயிரிடுவதில் எந்த மாநிலங்கள் முதன்மை உற்பத்தியாளர்கள் ஆக உள்ளன?
மகாராஷ்டிரம் கர்நாடகம் மற்றும் மத்திய பிரதேசம்
- கம்பு எந்த நாட்டை பூர்வீகமாக கொண்ட பயிராகும் ?
ஆப்பிரிக்கா
- கம்பு உற்பத்தியில் இந்தியாவில் எந்த மாநில முதன்மை உற்பத்தியாளராக உள்ளது ?
ராஜஸ்தான்
- உலகில் அதிக பருப்பு உற்பத்தி செய்யும் நாடு எது ?
இந்தியா
- வணிக நோக்கத்திற்காக பயிரிடப்படும் பயிர்களை எவ்வாறு அழைக்கின்றோம் ?
வாணிபப்பயிர்கள்
- இந்தியா கரும்பு உற்பத்தியில் உலகின் எத்தனையாவது பெரிய உற்பத்தியாளர்?
இரண்டாவது
- சர்க்கரை உற்பத்தியில் இந்தியா எத்தனாவது இடத்தில் உள்ளது ?
மூன்றாவது இடம்
- இந்தியாவில் எந்த மாநிலம் சர்க்கரையின் முதன்மை உற்பத்தியாளர் ஆகும் ?
உத்தர ப்பிரதேசம்
- பருத்தி உற்பத்தியில் உலகின் முதலாவது இடத்தில் உள்ள நாடு எது?
சீனா
- பருத்தி உற்பத்தியில் இந்தியா எத்தனாவது இடத்தில் உள்ளது?
இரண்டாவது இடம்
- சனல் பயிரிடுவதிலும் உற்பத்தியிலும் இந்தியாவின் எந்த மாநிலம் முதலிடத்தில் வகிக்கிறது?
மேற்கு வங்காளம்
- இந்தியாவின் எந்த மாநிலம் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது ?
குஜராத்
- நிலக்கடலை உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது இடத்தை வகிக்கும் நாடு எது?
இந்தியா
- அயன மண்டல மற்றும் உப அயன மண்டல கால நிலைகளில் வளரும் ஒரு பசுமையான தாவரம் எது ?
தேயிலை
- இந்தியாவில் பயிரிடப்படும் இரண்டு முக்கிய தேயிலை வகைகள் எவை?
பூகி மற்றும் அசாமிகா
- பூகி தேயிலை எந்த நாட்டை பிறப்பிடமாகக் கொண்டது?
சீனா
- அசாமிகா தேயிலை எந்த நாட்டை பிறப்பிடமாகக் கொண்டது?
இந்தியா
- உலக தேயிலை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு?
சீனா
- உலக தேயிலை உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் நாடு ?
இந்தியா
- இந்தியாவில் தேயிலை உற்பத்தி செய்யும் முதன்மை மாநிலம் எது ?
அசாம்
- இந்தியாவில் அதிகம் பயிரிடப்படும் காபி வகை எது?
அராபிகா
- தரம் குறைந்த காப்பி வகை எது?
ரொபஸ்டா
- உலக காப்பி உற்பத்தியில் இந்தியா எத்தனாவது இடத்தில் உள்ளது?
ஏழாவது இடம்
- இந்தியாவில் காபி உற்பத்தியில் முதன்மையான மாநிலம் எது ?
கர்நாடகம்
- கர்நாடக மாநிலம் இந்திய காப்பி உற்பத்தியில் எத்தனை சதவீதமும் பங்களிக்கிறது?
71%
- இந்தியாவில் முதன் முதலில் எங்கு எப்போது ரப்பர் தோட்டம் உருவாக்கப்பட்டது?
1902 கேரளா
- நறுமண பொருட்களை உற்பத்தி செய்யும் இந்தியாவின் முதன்மை மாநிலம் எது?
கேரளா
- தோட்டக்கலை பயிர்கள் என்பது எவற்றைக் குறிக்கும்?
பழங்கள் ,மலர்கள் மற்றும் காய் வகை பயிர்கள்
- பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் இந்தியா எத்தனாவது இடம் வகிக்கிறது?
இரண்டாமிடம்
- இந்தியாவில் உள்ள மொத்த கால்நடைகளில் மாடுகள் எத்தனை சதவீதம்?
37.3
- உலக அளவில் மாடுகள் எண்ணிக்கையில் இந்தியா எத்தனையாவது இடத்தை வகிக்கிறது ?
இரண்டாமிடம் (முதலிடம் பிரேசில்)
- இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிக மாடுகள் உள்ளது ?
மத்திய பிரதேசம் 10.3 சதவீதம்
- ஏழை மக்களின் பசு என்று அழைக்கப்படுவது எது ?
வெள்ளாடுகள்
- 16 சதவீத எண்ணிக்கையுடன் வெளிநாடுகள் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது ?
ராஜஸ்தான்
- இந்தியாவில் எந்த மாநிலத்தில் எருமைகள் அதிகப்படியாக உள்ளன?
உத்தரபிரதேசம் 28.2%
- இந்தியாவின் முதல் கால்நடை கணக்கெடுப்பு எந்த ஆண்டு நடைபெற்றது?
1919
- கால்நடை கணக்கெடுப்பு எத்தனை வருட இடைவெளியில் மேற்கொள்ளப்படுகிறது?
ஐந்து வருடம்
- இந்தியாவில் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட கால்நடை கணக்கெடுப்பு எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது?
2017
- 2016-17 கணக்கெடுப்பின்படி நம் நாட்டின் மொத்த பால் உற்பத்தி எவ்வளவு?
163.7 மில்லியன் டன்
- 2016 17 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி பால் உற்பத்தியில் எந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது?
உத்தரபிரதேசம்
- இறைச்சியை பொருத்தவரை முதன்மை மாநிலமாக விளங்குவது எது?
உத்திரப் பிரதேசம்
- நம் நாட்டின் மொத்த ரோம உற்பத்தியில் எந்த மாநிலம் முதலிடத்தை வகிக்கிறது ?
ராஜஸ்தான்
- உலக மீன் உற்பத்தியில் 3 சதவீதத்துடன் இந்தியா எத்தனாவது இடத்தில் உள்ளது ?
இரண்டாமிடம்
- இந்திய கடற்கரை நீளம் எவ்வளவு ?
6100 கிலோமீட்டர்
- தீவுக் கூட்டங்களின் கடற்கரையையும் சேர்த்து மொத்த கடற்கரையின் நீளம் எவ்வளவு?
7517 கிலோமீட்டர்
- இந்தியாவில் மீன்பிடித்தொழில் எத்தனை வகைகளாக வகைப்படுத்தப் பட்டுள்ளது?
இரண்டு: கடல் மீன்பிடிப்பு, உள்நாட்டு அல்லது நன்னீர் மீன் பிடிப்பு
- இந்திய மாநிலங்களில் எந்த மாநிலம் கடல் மீன் உற்பத்தியில் முதன்மையானதாக உள்ளது?
கேரளா
- நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் சுமார் எத்தனை சதவீதம் உள்நாட்டு மீன் பிடித்தல் மூலம் கிடைக்கிறது?
50%
- உள்நாட்டு மீன்பிடி தொழில் முதன்மை மாநிலமாக திகழும் மாநிலம் எது?
ஆந்திரப் பிரதேசம்
- மஞ்சள் புரட்சி எந்த உற்பத்தியை குறிக்கும்?
எண்ணெய் வித்துக்கள் (குறிப்பாக கடுகு மற்றும் சூரியகாந்தி)
- நீலப்புரட்சி எந்த உற்பத்தியை குறிக்கும் ?
மீன்கள் உற்பத்தி
- பழுப்பு புரட்சி என்பது எந்த உற்பத்தியை சார்ந்தது?
தோல், கோகோ, மரபுசாரா உற்பத்தி
- தங்க நூலிழைப் புரட்சி என்பது எந்த உற்பத்தியை சார்ந்தது?
சணல் உற்பத்தி
- பொன் புரட்சி என்பது எந்த உற்பத்தியை சார்ந்தது?
பழங்கள் தேன் மற்றும் தோட்டக்கலைப் பயிர்
- சாம்பல் புரட்சி என்பது எந்த உற்பத்தியை சார்ந்தது?
உரங்கள்
- இளஞ்சிவப்பு புரட்சி என்பது எந்த உற்பத்தியை சார்ந்தது ?
வெங்காயம், மருந்து பொருள்கள் உற்பத்தி
- பசுமைப் புரட்சி என்பது எந்த உற்பத்தியை சார்ந்தது?
அனைத்து வேளாண் உற்பத்தி
- வெள்ளி புரட்சி என்பது எந்த உற்பத்தியை சார்ந்தது?
முட்டை மற்றும் கோழிகள்
- வெள்ளி இழைப் புரட்சி என்பது எந்த உற்பத்தியை சார்ந்தது?
பருத்தி
- சிவப்புப் புரட்சி என்பது எந்த உற்பத்தியை சார்ந்தது?
இறைச்சி உற்பத்தி, தக்காளி உற்பத்தி
- வட்ட புரட்சி என்பது எந்த உற்பத்தியை சார்ந்தது?
உருளைக்கிழங்கு
- வெண்மைப் புரட்சி என்பது எந்த உற்பத்தியை சார்ந்தது?
பால் உற்பத்தி
10TH GEOGRAPHY STUDY NOTES |வேளாண்மை கூறுகள்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services