- இயற்கையில் இருந்து பெறப்பட்டு உயிரினங்களால் பயன்படுத்தப்படும் அனைத்து வளங்களும் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இயற்கை வளம்
- பயன்பாட்டிற்கு பிறகு இயற்கை முறையில் மீட்டுருவாக்கம் செய்து கொள்ளும் வளங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
புதுப்பிக்கக்கூடிய வளங்கள்
- பயன்பாட்டிற்கு பிறகு இயற்கை முறையில் மீட்டுருவாக்கம் செய்ய இயலா வளங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
புதுபிக்க இயலா வளங்கள்
- ஒரு குறிப்பிட்ட வேதியியல் மற்றும் இயற்பியல் பண்புகள் கொண்ட உயிருள்ள மற்றும் உயிரற்ற இயற்கை மூலங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
கனிமங்கள்
- இந்திய நிலவியல் கள ஆய்வு நிறுவனத்தின் தலைமை இடம் எங்கு உள்ளது?
கொல்கத்தா
- இந்திய சுரங்கப் பணியகம் எங்கு
உள்ளது?
நாக்பூர்
- இரும்பா சாரா தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் எங்குள்ளது ?
ஹைதராபாத்
- இந்தியாவில் உள்ள சுரங்கங்கள் மற்றும் கனிமங்களின் நிர்வாகத்திற்கான பொறுப்பு யாரிடம் உள்ளது ?
சுரங்கப்பணி அமைச்சகம்
- வேதியியல் மற்றும் இயற்பியல் பண்புகளின் அடிப்படையில் கனிமங்கள் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளன?
இரண்டு :உலோக கனிமங்கள் மற்றும் அலோக கனிமங்கள்
- ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உலோகங்களை கொண்டிருக்கும் கனிமம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
உலோக கனிமம்
- உலோகப் படிவுகளில் என்னென்ன உலோகங்கள் காணப்படுகின்றன?
இரும்பு ,மாங்கனீசு ,தாமிரம் ,பாக்சைட் ,நிக்கல் ,துத்தநாகம் ,காரியம் தங்கம்
- தீப்பாறைகள் மற்றும் உருமாறிய பாறைகளின் கலவையாக காணப்படும் தனிமம் எது?
இரும்புத்தாது
- இந்தியாவில் காணப்படும் இரும்பு தாது வகை எது?
ஹேமடைட் மற்றும் மேக்னடைட்
- பொதுவாக இரும்புத்தாது எந்தெந்த வடிவங்களில் காணப்படுகிறது?
மேக்னடைட், ஹேமடைட் ,கோதைட், லைமனைட்,சிடரைட்
- எந்த இரும்புத்தாதுவில் இரும்பின் அளவு அதிகமாக காணப்படும் ?
மேக்னடைட் 72.4 சதவீதம்
- எந்த இரும்புத்தாது படிவில் இரும்பின் அளவு குறைவாக காணப்படும்?
சிடரைட் 48.2%
- நாட்டின் மொத்த இரும்புத்தாது உற்பத்தியில் ஜார்கண்ட் மாநிலம் எத்தனை சதவீதத்தை உற்பத்தி செய்து முதன்மை உற்பத்தியாளராக திகழ்கிறது?
25%
- ஜார்கண்ட் மாநிலத்தின் முக்கிய இரும்பு உற்பத்தி மாவட்டங்கள் எது?
சிங்கபும், ராணிகஞ்ச் ,தன்பாத் மற்றும் ராஞ்சி
- இரும்பு உற்பத்தியில் 21 சதவீத உற்பத்தியுடன் இரண்டாம் நிலையில் உள்ள மாநிலம் எது?
ஒடிஸா
- ஒடிசாவின் இரும்பு உற்பத்தியின் இதர முக்கிய உற்பத்தி மாவட்டங்கள் எது?
சுந்தர்கார் ,மயூர்பஞ்ச் ,சம்பல்பூர் மற்றும் கியோஞ்சர்
- சத்தீஸ்கர் மாநிலத்தின் இரும்பு உற்பத்தி மாவட்டங்கள் எவை?
ராஜ்கார் மற்றும் பிலாஸ்பூர்
- மேக்னடைட் உற்பத்தி தமிழ்நாடு எத்தனை சதவீத உற்பத்தி செய்கின்றது?
5%
- தமிழ்நாட்டின் எந்த மாவட்டங்கள் குறிப்பிடத்தக்க அளவு இரும்பு தாது உற்பத்தி செய்கின்றன?
நாமக்கல், சேலம் ,திருவண்ணாமலை ,திருச்சிராப்பள்ளி ,கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி
- இந்தியாவில் இரும்பு எஃக்கு தொழிற்சாலை திட்டமிடல் மற்றும் வளர்ச்சிக்கு எது முக்கிய பங்காற்றுகிறது?
இந்திய இரும்பு எஃக்கு ஆணையம்
- வெளிர் சாம்பல் நிறமுடைய மிகவும் கடினமான ஆனால் எளிதில் உடையும் தன்மையுடைய கனிமம் எது ?
மாங்கனீசு
- மாங்கனீசு எப்பொழுதும் எந்த தாதுக்களுடன் கலந்து காணப்படும்?
இரும்பு, லேட்ரைட் மற்றும் பிற தாதுக்கள்
- இரும்பு எஃக்கு மற்றும் உலோகக்கலவை உற்பத்திக்கு அடிப்படையான மூலப்பொருள் எது?
மாங்கனீசு
- ஒரு டன் இரும்பு எஃகு உற்பத்தி செய்வதற்கு எவ்வளவு மாங்கனீசு தேவைப்படுகிறது?
10 கிலோ
- மாங்கனீஸின் வேறு பயன்பாடுகள் என்னென்ன?
வெளுக்கும்தூள், பூச்சிக்கொல்லிகள் ,வண்ணப்பூச்சுகள், மின்கலன்கள் போன்றவற்றை தயாரிப்பதற்கும் பயன்படுகிறது
- இந்திய மாங்கனீசு தாது நிறுவனம் எங்கு அதன் தலைமை இடத்தை கொண்டுள்ளது?
நாக்பூர்
- மாங்கனிசு படிவுகள் பெரும்பாலும் என்ன பாறைகளில் காணப்படுகிறது?
உருமாறிய பாறைகள்
- அதிக மாங்கனீசு படிவுகள் எங்கு காணப்படுகிறது?
ஒடிசா 44%
- மாங்கனீசு உற்பத்தியில் முதன்மை மாவட்டங்கள் எவை ?
மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள நாக்பூர் ,பாந்ரா &ரத்தனகிரி
- மாங்கனீசு உற்பத்தியில் மத்திய பிரதேசத்தில் உள்ள முதன்மை மாவட்டங்கள் எவை ?
பால்காட்,சிந்துவாரா மாவட்டம்
- உலக அளவில் மாங்கனீசு உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது பெரிய நாடு?
ஐந்தாவது
- வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் உலோகம் எது?
தாமிரம்
- தாமிரத்துடன் எது சேர்த்து கலந்து பித்தளை உருவாக்கப்படுகிறது?
துத்தநாகம்
- தாமிரத்துடன் எது சேர்த்து வெண்கலம் உருவாக்கப்படுகிறது?
தகரம்
- தாமிர பதிவு அதிகம் உள்ள மாநிலம் எது?
ராஜஸ்தான் (53.81%)
- இந்தியாவின் மொத்த தாமிர உற்பத்தியில் ஜார்கண்ட் மாநிலம் எத்தனை சதவீதம் உற்பத்தி செய்கிறது?
62%
- அலுமினியம் எந்த தாதுவில் இருந்து பெறப்படுகிறது?
பாக்சைட்
- பாக்சைட் தாது எந்த பாறைகளில் காணப்படுகிறது ?
நீரேற்ற அலுமினியம் ஆக்சைடு உள்ள பாறைகள்
- விமான கட்டுமானத்திற்கு பயன்படுவது எது?
அலுமினியம்
- பாக்சைட் தாதுக்கள் ஒடிசா மாநிலத்தில் எத்தனை சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது?
50.2 சதவீதம்
- தேசிய அலுமினிய நிறுவனம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1981
- ____என்பது அலுமினியத்தின் ஒருவகையான ஆக்சைடு ஆகும் .
பாக்சைட்
- பாக்சைட் எந்த மொழி வார்த்தையான லீ பாக்ஸ் என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டது?
பிரெஞ்சு
- எந்த கனிமங்களில் உலோகத் தன்மை இருக்காது?
அலோக கனிமங்கள்
- அலோக கனிமங்கள் என அழைக்கப்படுபவை?
மைக்கா,சுண்ணாம்பு ,ஜிப்சம் ,நைட்ரேட் , பொட்டாஷ் டோலமைட், நிலக்கரி, பெட்ரோலியம்
- பண்டைய காலத்தில் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு அலோகக் கனிமம் எது?
மைக்கா
- நல்ல தரமான மைக்கா வகை எது ?
அப்ராக் வகை
- மைக்காவின் பண்புகள் என்னென்ன?
ஒளிபுகும் தன்மையுடையது எளிதில் மிக மெல்லிய பட்டைகளாக பிரித் தெடுக்கக் கூடியவை, நிற மற்றவை ,நெகிழும் தன்மை உடையவை
- இந்த கனிமம் குறைந்த மின் இழப்பையும் அதிக மின் அழுத்தத்தையும் தாங்கக்கூடிய திறன் பெற்று இருப்பதால் மின் காப்பான்கள் தயாரிக்க பயன்படுகிறது?
மைக்கா
- மைக்கா வேறு என்னென்ன தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது?
மசகு எண்ணை, மருந்துகள், வர்ணப்பூசுதல் மற்றும் மெருகு எண்ணெய்
- இந்தியாவின் முக்கியமான மைக்கா உற்பத்தியாளர்கள் யார் ?
ஆந்திர பிரதேசம், ராஜஸ்தான் ,ஒடிசா, ஜார்கண்ட்
- சுண்ணாம்புக்கல் எவற்றை உள்ளடக்கியது ?
சிலிகா ,அலுமினா ,இரும்பு ஆக்சைடு ,பாஸ்பரஸ் மற்றும் கந்தகம்
- சுண்ணாம்புக்கல் எந்த பாறைகளில் காணப்படுகிறது?
கால்சியம் கார்பனேட் அல்லது கால்சியம் மற்றும் மெக்னீசியம் அல்லது இரண்டும் கலந்த பாறைகளில்
- சுண்ணாம்புக்கல் எதற்கு பயன்படுகிறது ?
சோடா சாம்பல் ,எரிசோடா, வெளுக்கும் தூள் ,காகிதம் ,சிமெண்ட், இரும்பு, எஃகு உற்பத்தி ,கண்ணாடி மற்றும் உரங்கள் தயாரிப்பு
- சுண்ணாம்புக்கல் இன் முக்கிய உற்பத்தியாளர் மாநிலங்கள் எவை?
கர்நாடகா ,ஆந்திர பிரதேசம், தெலுங்கானா ,ராஜஸ்தான் ,மத்திய பிரதேசம் ,தமிழ்நாடு ,மேகாலயா ,குஜராத் ,சத்தீஸ்கர்
- ஜிப்சம் என்பது எதனுடைய நீர்ம கனிமமாகும்?
கால்சியம் சல்பேட்
- ஜிப்சம் எவற்றுக்கு பயன்படுகிறது?
சிமெண்ட் ,உரங்கள், சுவர்ப்பட்டி, பாரிஸ் சாந்து போன்ற தயாரிப்புகளில் மற்றும் மண் வளம் ஊட்டியாகவும்
- ஜிப்சம் காணப்படும் மாநிலங்கள் எவை?
ராஜஸ்தான் தமிழ்நாடு குஜராத் இமாச்சல் பிரதேசம் கர்நாடகம் உத்தரகாண்ட் ஆந்திரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம்
- ஜிப்சம் மாநிலத்தில் ராஜஸ்தான் மட்டும் எத்தனை சதவீத படிவுகளைக் கொண்டுள்ளது?
81%
- ஜிப்சம் தமிழ்நாட்டில் எத்தனை சதவீதம் காணப்படுகிறது?
2%
- மின்சாரம் உற்பத்தி செய்ய பயன்படும் வளங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
எரிசக்தி வளங்கள்
- எளிதில் எரியக்கூடிய உயிரின படிமங்கள் கொண்ட ஒரு நீரக கனிமம் எது ?
நிலக்கரி
- நிலக்கரி எந்த பாறைகளில் கிடைக்கிறது?
படிவுப் பாறைகள்
- ஒரு நாட்டின் தொழிற்சாலை வளர்ச்சிக்கு மிக இன்றியமையாததாக இருப்பதால் நிலக்கரி எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
கருப்பு தங்கம்
- ஆந்திராசைட் நிலக்கரி வகை எத்தனை சதவீதம் கரிம அளவைக் கொண்டுள்ளது?
80 முதல் 90 சதவீதம்
- பிட்டுமனஸ் நிலக்கரி வகை எத்தனை சதவீதம் கரிம அளவைக் கொண்டுள்ளது?
60 முதல் 80 சதவீதம்
- பழுப்பு நிலக்கரி வகை எத்தனை சதவீதம் கரிம அளவைக் கொண்டுள்ளது?
40 முதல் 60 சதவீதம்
- மரக்கரி நிலக்கரி வகை எத்தனை சதவீதம் கரிம அளவைக் கொண்டுள்ளது?
40 சதவீதத்திற்கும் குறைவு
- இந்தியாவில் காணப்படும் நிலக்கரி வயல்கள் எந்த பாறைகளோடா தொடர்புடையவை?
கோண்டுவானா தொடர்புடைய பாறைகள்
- நாட்டின் மொத்த நிலக்கரியை படிவுகளில் 90 சதவீதத்தை கொண்டுள்ள முக்கிய மாநிலங்கள் எவை?
ஜார்கண்ட் ,ஒடிசா ,மேற்கு வங்காளம் மற்றும் மத்திய பிரதேசம்
- எத்தனை சதவீத நிலக்கரி மூன்றாம் வகையைச் சார்ந்தது ?
2%
- மூன்றாம் நிலையை சார்ந்த நிலக்கரி எங்கு அதிகமாக காணப்படுகிறது?
அசாம் மற்றும் ஜம்மு காஷ்மீர்
- எந்த மாநிலம் இந்தியாவில் அதிக நிலக்கரி உற்பத்தி செய்கிறது?
ஜார்கண்ட்
- தென் மற்றும் மேற்கு தீபகற்ப இந்திய பகுதிகளில் குறிப்பாக தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களில் எந்த வகை நிலக்கரிப் படிவுகள் காணப்படுகின்றன?
பழுப்பு நிலக்கரி
- இந்திய நிலக்கரி நிறுவனம் எதனை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது?
மேற்குவங்கத்தில் உள்ள கொல்கத்தா
- இந்திய நிலக்கரி அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனங்கள் என்னென்ன?
இந்திய நிலக்கரி நிறுவனம் ,இந்திய தேசிய பழுப்பு நிலக்கரி நிறுவனம் மற்றும் சிங்கரெனி கோலாரிஸ் நிலக்கரி நிறுவனம்
- பெட்ரோலியம் என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது ?
இலத்தீன்
- “பெட்ரோ” என்ற லத்தின் மொழி சொல்லுக்கு என்ன பொருள்?
பாறை
- “ஓலியம்” என்ற லத்தின் மொழி சொல்லுக்கு என்ன பொருள்?
எண்ணெய்
- பெட்ரோலியம் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தாது எண்ணெய்
- பெட்ரோலியத்தில் எத்தனை சதவீதம் நீரக கரிமம் உள்ளது?
90 -95 சதவீதம்
- பெட்ரோலியத்தில் எத்தனை சதவீதம் ஆக்சிஜன் நைட்ரஜன் கந்தகம் மற்றும் கரிம உலோகங்களைக் கொண்டுள்ளது?
5 முதல் 10 சதவீதம்
- பெட்ரோலியத்தின் உபஉற்பத்தி பொருட்கள் என்னென்ன? மசகு எண்ணெய், மண்ணெண்ணெய், களிம்புகள், தார்,சோப்பு ,டெர்லின் ,மெழுகு
- மேற்கு கடற்கரையில் உள்ள மிகப் பெரிய எண்ணெய் வயல் எது ?
மும்பை ஹை எண்ணெய் வயல்
- மேற்கு கடற்கரையில் உள்ள இரண்டாவது மிகப் பெரிய எண்ணெய் வயல் எது ?
குஜராத்
- நாட்டின் மிகப் பழமையான எண்ணெய் வயல் எது?
திக்பாய் எண்ணெய் வயல் (கிழக்கு கடற்கரையோரம்)
- மேற்கு கடற்கரை அருகில் உள்ள எண்ணெய் வயல்கள் என்னென்ன?
மும்பை ஹை எண்ணெய் வயல், குஜராத் கடற்கரை எண்ணெய் வயல்,பேஸ்ஸைம் எண்ணெய் வயல் மும்பை ஹையின் தென்பகுதி,அலியாபத்- எண்ணெய் வயல், அங்கலேஷ்வர், காம்பே-லூன் பகுதிகள் ,அகமதாபாத்-கலோல் பகுதி
- கிழக்கு கடற்கரை அருகில் உள்ள எண்ணெய் வயல்கள் என்னென்ன?
பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு, திக்பாய் எண்ணெய் வயல், நாகர்காட்டியா எண்ணெய் வயல், மோரான் ஹக்ரிஜன் – எண்ணெய் வயல், ருத்திர சாகர் – லாவா எண்ணெய் வயல்கள், சர்மா பள்ளத்தாக்கு ,அந்தமான் நிக்கோபார் பகுதியில் மன்னார் வளைகுடா கடற்கரை
- இயற்கையாக உருவாகும் ஒரு நீர்ம கரிம வாயு எது?
இயற்கை எரிவாயு
- இயற்கை வாயு என்னென்ன கலவைகளால் ஆனது ?
பெரும் பகுதி மீத்தேன் வாயு மற்றும் மதுக்கரியம் ,கார்பன் டை ஆக்சைடு ,நைட்ரஜன் மற்றும் நைட்ரஜன் சல்ஃபைடு
- கெயில் நிறுவனத்தின் தலைமையகம் எங்குள்ளது ?
புதுடெல்லி
- வட இந்தியப் பகுதிகளில் அதிக அளவிலான எந்த நிலை பாறைகள் மற்றும் வண்டல் பிரிவுகளைக் கொண்டுள்ளது ?
மூன்றாம் நிலை பாறைகள்
- அதிக அளவிலான இயற்கை எரிவாயு எந்த எண்ணெய் வயல் பகுதிகளில் காணப்படுகிறது ?
மும்பை மற்றும் பேஸ்ஸைம் எண்ணெய் வயல்
- தமிழ்நாட்டில் எந்த இடத்தில் இயற்கை எரிவாயு கண்டறியப்பட்டுள்ளது?
நெய் பள்ளத்தூர் மற்றும் மங்கமடம் (தஞ்சாவூர்)
- தேசிய அனல் மின் நிறுவனம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1975
- இந்தியாவில் அணுமின் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1940
- இந்தியாவின் முதல் அணு மின் நிலையம் எந்த ஆண்டு மும்பைக்கு அருகில் உள்ள தாராப்பூரில் நிறுவப்பட்டது?
1969
- இந்தியாவின் முதல் அணு மின் நிலையத்தின் உற்பத்தி திறன் என்ன?
320 மெகாவாட்
- தமிழ்நாட்டின் முக்கிய அனல் மின் நிலையங்கள் எவை?
நெய்வேலி, மேட்டூர், தூத்துக்குடி மற்றும் எண்ணூர்
- இந்திய அணுமின்சக்தி நிறுவனத்தின் தலைமை இடம் எது?
மும்பை
- நீர்மின்சக்தி உலக மின் தேவையில் எத்தனை சதவீதத்தை பூர்த்தி செய்கிறது ?
7%
- இந்திய தேசிய நீர் மின்சக்தி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது ?
பரிதாபாத்
- இந்தியாவின் முதல் நீர்மின் நிலையம் எங்கு எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1897 டார்ஜிலிங்
- இந்திய சூரியசக்தி நிறுவனம் எங்கு தனது தலைமை இடத்தை கொண்டுள்ளது?
புதுடெல்லி
- இந்தியாவில் அதிக அளவு காடுகளைக் கொண்ட மாநிலம்?
தமிழ்நாடு
- உலகிலேயே ஒரு பகுதியில் அதிக காற்றாலைகளை கொண்ட பெரிய காற்றாலை பண்ணை எது?
முப்பந்தல் பெருங்குடி பகுதி ,கன்னியாகுமரி மாவட்டம் .தமிழ்நாடு
- இந்தியாவின் காற்றாலை மின் உற்பத்தி எந்த ஆண்டு முதன் முதலில் தொடங்கப்பட்டது?
1986
- முதன்முதலில் காற்றாலை மின் உற்பத்தி எங்கு தொடங்கப்பட்டது?
குஜராத்தில் உள்ள கடற்கரை பகுதியான ஓகா, மகாராஷ்ட்ரா கடற்கரை பகுதியான ரத்தனகிரி ,தமிழ்நாட்டில் உள்ள கடற்கரை பகுதியான தூத்துக்குடியில் 55 கிலோவாட் உற்பத்தி திறனுடன் தொடங்கப்பட்டது
- தேசிய காற்றாற்றல் நிறுவனம் எங்கு எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
சென்னை 1998
- இந்தியா எவ்வளவு உயிரி எரிசக்தி உற்பத்தி திறனை கொண்டுள்ளது?
18 GW
- இந்தியாவில் பயன்படுத்தப்படும் மொத்த எரிசக்தி பயன்பாட்டில் எத்தனை சதவீதம் உயிரி சக்தியிலிருந்து பெறப்படுகிறது?
32%
- இந்தியாவில் ஓதசக்தி உற்பத்திக்கு மிக உகந்த இடமாக உள்ளது எது?
காம்பே வளைகுடா
- 150KW உற்பத்தித் திறன் கொண்ட அலை சக்தி ஆலை எங்கு நிறுவப்பட்டுள்ளது?
விழிஞ்சம் ,திருவனந்தபுரம்
- மூலப்பொருட்கள் இயந்திரங்களின் மூலம் உற்பத்தி பொருளாக மாற்றப்படும் இடங்களுக்கு என்ன பெயர்?
தொழிலகங்கள்
- மூலப்பொருட்களின் ஆதாரங்களின் அடிப்படையில் தொழிலகங்கள் எத்தனை வகைப்படுத்தப்படுகின்றன?
3 :வேளாண் சார்ந்த தொழிலகங்கள், காடுகள் சார்ந்த தொழிலகங்கள், கனிமம் சார்ந்த தொழிலகங்கள்
- இந்தியாவின் முதல் பருத்தி நெசவாலை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1818
- இந்தியாவின் முதல் பருத்தி நெசவாலை எங்கு தொடங்கப்பட்டது ?
போர்ட் க்ளாஸ்டர், கொல்கத்தா
- இந்தியா நெசவாலை துறையில் உலகின் எத்தனாவது இடத்தில் உள்ளது?
இரண்டாமிடம்
- இந்தியா தற்போது பருத்தி உற்பத்தியில் உலகின் எத்தனையாவது பெரிய நாடாக உள்ளது?
மூன்றாவது
- இந்தியா நூற்பு கருவிகளின் எண்ணிக்கையில் எத்தனையாவது நாடாக உள்ளது?
முதன்மையான நாடு
- தற்போது இந்தியாவில் எத்தனை பருத்தி நெசவாலைகள் உள்ளன ?
1719
- போதுமான காற்றோட்ட வசதியற்ற இடங்களில் வேலை செய்யும் பஞ்சாலை தொழிலாளர்கள் பஞ்சு நுண் துகள்களால் ஏற்படும் என்ன நோயால் பாதிக்கப்படுகின்றனர் ?
பைசின்னோசிஸ் எனப்படும் பழுப்பு நுரையீரல் நோய்
- பருத்தி இலையில் இருந்து விதைகளை பிரித்தெடுக்கும் முறைக்கு என்ன பெயர்?
ஜின்னிங்
- இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுவது எது ?
மும்பை
- தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுவது எது?
கோயம்புத்தூர்
- சணல் பொருட்கள் உலக மொத்த உற்பத்தியில் இந்தியா மட்டும் எத்தனை சதவீதம் பங்களிப்பைக் கொண்டுள்ளது ?
35%
- தங்க இழைப்பயிர் என அழைக்கப்படுவது எது ?
சணல்
- தேசிய சணல் வாரியத்தின் தலைமையகம் எங்கு உள்ளது ?
கொல்கத்தா
- இந்தியாவின் முதல் சணல் ஆலை யாரால் தொடங்கப்பட்டது?
ஆங்கிலேயர் ஜார்ஜ் ஆக்லாண்டு
- இந்தியாவின் முதல் சணல் ஆலை எங்கு எப்போது தொடங்கப்பட்டது?
கொல்கத்தா ,1854
- இந்தியா சணல் உற்பத்தியில் உலகின் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
முதலிடம்
- இந்தியா சணல் பொருட்கள் உற்பத்தியில் உலகில் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
இரண்டாமிடம்
- மத்திய பட்டு ஆராய்ச்சி தொழில்நுட்ப நிறுவனம் எப்போது தொடங்கப்பட்டது?
1983
- மத்திய பட்டு ஆராய்ச்சி தொழில்நுட்ப நிறுவனம் தனது தலைமை இடத்தை எங்கு அமைந்துள்ளது?
பெங்களூரு
- கச்சா பட்டு உற்பத்தியில் எத்தனையாவது இடத்தில் இந்தியா உள்ளது?
இரண்டாமிடம்
- பட்டு உற்பத்தியில் இந்தியாவில் முதன்மை மாநிலமாக உள்ளது எது ?
கர்நாடகம்
- கைத்தறி வளர்ச்சி ஆணையர் அலுவலகம் எப்போது தொடங்கப்பட்டது?
நவம்பர் 20 1975
- கைத்தறி வளர்ச்சி ஆணையர் அலுவலகம் தனது தலைமை இடத்தை எங்கு கொண்டுள்ளது?
உத்யோக் பவன், புதுடெல்லி
- கரும்பு உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடம் வகிக்கிறது ?
இரண்டாமிடம்
- நாட்டின் மொத்த சர்க்கரை உற்பத்தியில் 50 சதவீதத்தை கொண்டு முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?
உத்தரப்பிரதேசம்
- இந்தியாவின் முதல் காகித தொழிற்சாலை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1812
- இந்தியாவின் முதல் காகித தொழிற்சாலை எங்கு தொடங்கப்பட்டது ?
செராம்பூர் மேற்குவங்கம்
- முதன் முதலில் இந்தியாவில் ராயல் பெங்கால் காகித தொழிற்சாலை எந்த இடத்தில் நிறுவப்பட்டது?
கொல்கத்தாவுக்கு அருகிலுள்ள பாலிகஞ்ச்
- ராயல் பெங்கால் காகித தொழிற்சாலை எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
1867
- தேசிய செய்திகள் மற்றும் காகித ஆலைகள் எந்த இடத்தில் அமைந்துள்ளது?
மத்திய பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்திலுள்ள நேபாநகர்
- ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி எந்த உற்பத்தி அளவை கொண்டு தீர்மானிக்கப்படுகிறது?
இரும்பு எஃக்கு
- அடிப்படையான உலக தொழிற்சாலை என அழைக்கப்படும் தொழிற்சாலை எது ?
இரும்பு எஃகு தொழிற்சாலை
- டாட்டா இரும்பு எக்கு தொழிற்சாலை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1907
- டாட்டா இரும்பு எக்கு தொழிற்சாலை எங்கு தொடங்கப்பட்டது?
சாக்சி என்றழைக்கப்பட்ட ஜாம்ஷெட்பூர்
- இரும்பு மற்றும் எஃகு உற்பத்தி தொழிற்சாலை முதன் முதலில் தமிழ்நாட்டில் போர்ட்டோ நோவாவில் எப்போது அமைக்கப்பட்டது?
1830
- டாட்டா இரும்பு எஃகு நிறுவனம் அமைந்துள்ள இடம் நிறுவப்பட்ட ஆண்டு உற்பத்தி செய்யும் பொருள் என்னென்ன?
1911 ஜாம்ஷெட்பூர் ஜார்க்கண்ட் உற்பத்திப் பொருள் தேனிரும்பு
- இந்தியா இரும்பு எஃகு நிறுவனம் நிறுவனம் அமைந்துள்ள இடம் நிறுவப்பட்ட ஆண்டு உற்பத்தி செய்யும் பொருள் என்னென்ன?
1972 பர்ன்பூர்,ஹிராபபூர்,குல்டி- மேற்குவங்காளம். உற்பத்தி செய்யும் பொருட்கள் தேனிரும்பு கட்சா எஃகு
- விஸ்வேஸ்வரய்யா இரும்பு எஃகு நிறுவனம் அமைந்துள்ள இடம் நிறுவப்பட்ட ஆண்டு உற்பத்தி செய்யும் பொருள் என்னென்ன?
1923,பத்ராவதி கர்நாடகா. உற்பத்தி செய்யும் பொருள் கலப்பு தேனிரும்பு மற்றும் கடல்பாசி எஃகு
- இந்துஸ்தான் எஃகு நிறுவனம் (ரஷ்யா தொழில்நுட்ப உதவியுடன்)அமைந்துள்ள இடம் நிறுவப்பட்ட ஆண்டு உற்பத்தி செய்யும் பொருள் என்னென்ன?
1957,பிலாய் சத்தீஸ்கர் உற்பத்திப் பொருள்: ரயில்வே மற்றும் கப்பல் கட்டும் உபகரணங்கள்
- இந்துஸ்தான் எஃகு நிறுவனம் (ஜெர்மனியின் தொழில்நுட்ப உதவியுடன்)அமைந்துள்ள இடம் நிறுவப்பட்ட ஆண்டு உற்பத்தி செய்யும் பொருள் என்னென்ன?
1965, ரூர்கேலா- ஒடிசா உற்பத்திப் பொருள்: வெப்ப மற்றும் குளிர்ந்த உருளை தகடுகள் மின் முலாம் பூசப்பட்ட தகடுகள் மற்றும் மின்சாதன தகடுகள்
- இந்துஸ்தான் எஃகு நிறுவனம் (இங்கிலாந்து தொழில்நுட்ப உதவியுடன்)அமைந்துள்ள இடம் நிறுவப்பட்ட ஆண்டு உற்பத்தி செய்யும் பொருள் என்னென்ன?
1959, துர்காபூர் மேற்கு வங்காளம் உற்பத்திப் பொருள்: உலோகக் கலவை கட்டுமான பொருள்கள் ரயில்வே உபகரணங்கள்
- இந்துஸ்தான் எஃகு நிறுவனம் (ரஷ்யா தொழில்நுட்ப உதவியுடன்)அமைந்துள்ள இடம் நிறுவப்பட்ட ஆண்டு உற்பத்தி செய்யும் பொருள் என்னென்ன?
1972, பொகாரோ- ஜார்க்கண்ட் உற்பத்திப் பொருள்: இரும்பு கழிவு மற்றும் இரும்பு உலோகம்
- சேலம் எஃகு ஆலை அமைந்துள்ள இடம் நிறுவப்பட்ட ஆண்டு உற்பத்தி செய்யும் பொருள் என்னென்ன?
1982, சேலம் தமிழ்நாடு உற்பத்திப் பொருள்: துருப்பிடிக்காத இரும்பு
- விஜயநகர் எஃகு ஆலை அமைந்துள்ள இடம் நிறுவப்பட்ட ஆண்டு உற்பத்தி செய்யும் பொருள் என்னென்ன?
1994, டோர்நகல் -கர்நாடகா உற்பத்திப் பொருள்: நீண்ட மற்றும் பட்டை எஃகுகள்
- விசாகப்பட்டினம் எஃகு ஆலை அமைந்துள்ள இடம் நிறுவப்பட்ட ஆண்டு உற்பத்தி செய்யும் பொருள் என்னென்ன?
1981, விசாகப்பட்டினம்- ஆந்திரப் பிரதேசம் உற்பத்திப் பொருள்: வெப்ப உலோகம்
- இந்தியாவின் முதல் வாகன தொழிலகம் எங்கு அமைந்துள்ளது?
மும்பை
- இந்தியாவின் முதல் வாகன தொழிலகம் என்ன பெயரில் எப்போது தொடங்கப்பட்டது?
பிரீமியர் வாகன நிறுவனம் 1947
- ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் எப்போது எங்கு தொடங்கப்பட்டது?
கொல்கத்தாவிற்கு அருகிலுள்ள உத்தர்பாரா, 1948
- இந்தியா வாகன உற்பத்தியில் எத்தனையாவது பெரிய நாடாக விளங்குகிறது ?
ஏழாவது
- ஆசியாவின் டெட்ராய்ட் என அழைக்கப்படுவது நகரம் எது?
சென்னை
- இந்தியாவில் உற்பத்தி செய்யும் திட்டம் ( மேக் இன் இந்தியா) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
2014
- இந்தியாவில் அதிக மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்யும் நகரம் எது ?
பெங்களூரு
- இந்தியாவின் மின்னியல் தலைநகரம் என அழைக்கப்படுவது எது?
பெங்களூரு
- இந்தியாவின் முதல் மென்பொருள் தொழிலகம் எது?
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்
- டாடா கன்சல்டன்சி எப்போது தொடங்கப்பட்டது ?
1970
10TH GEOGRAPHY STUDY NOTES |வளங்கள் & தொழிலகங்கள்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services