- மனித சமுதாயம் வளர்ச்சி பெற்ற வழிமுறைகள் மற்றும் இயற்கை சூழலுடனான செயல்பாடுகள் குறித்து கற்றறிதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
மானுடப்புவியியல்
- புவியில் காணப்படும் வளங்களில் மிகச் சிறந்த வளம் எது ?
மனிதவளம்
- அக்ரிகல்ச்சர்(agriculture) என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது ?
இலத்தீன் (அகர் மற்றும் கல்சரா என்றஸவார்த்தைகளில் இருந்து பெறப்பட்டது . இதன் பொருள் நிலம் மற்றும் வளர்த்தல் என்பதாகும்)
- தமிழ்நாட்டின் முக்கியமான தொழில் எது?
வேளாண்மை
- இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து எத்தனை சதவீதக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்வாதாரத்திற்கு வேளாண் துறையை சார்ந்துள்ளனர்?
65%
- மாநிலப் பொருளாதாரத்தில் வேளாண்மையின் பங்கு எவ்வளவு சதவீதம்?
ஏறத்தாழ 21 சதவீதம்
- வேளாண்மை வளர்ச்சியை தீர்மானிக்கும் முக்கிய புவியியல் காரணிகள் என்னென்ன?
நிலத்தோற்றம் ,காலநிலை, மண் மற்றும் நீர்ப்பாசனம்
- தீவிர தன்னிறைவு வேளாண்மை தமிழகத்தில் எந்த பகுதிகளில் பின்பற்றப்படுகிறது?
தமிழகத்தின் சில பகுதிகளை தவிர்த்து அனைத்து பகுதிகளிலும்
- தோட்ட வேளாண்மை வகை தமிழ்நாட்டில் எந்தப் பகுதிகளில் பயிரிடப்படுகிறது?
மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைச் சரிவுகள்
- கலப்பு வேளாண்மை வகை தமிழ் நாட்டின் எந்த பகுதியில் பயிரிடப்படுகிறது?
காவிரி மற்றும் தென்பெண்ணை ஆற்றுப்படுகைகள்
- தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் எந்த பல்கலைகழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது?
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்
- தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது ?
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆடுதுறை
- தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் எப்போது தொடங்கப்பட்டது?
ஏப்ரல் 1985
- சொர்ணவாரி (சித்திரைப்பட்டம் ) என்றழைக்கப்படும் தமிழ்நாட்டின் வேளாண் பருவ காலம்(விதைக்கும் காலம்) என்ன ?
ஏப்ரல் முதல் மே வரை
- சொர்ணவாரி (சித்திரைப்பட்டம் ) பருவ காலத்தில் பயிரிடப்படும் முக்கிய பயிர்கள் என்னென்ன?
பருத்தி மற்றும் திணை வகைகள்
- சம்பா( ஆடிப்பட்டம் ) என்றழைக்கப்படும் தமிழ்நாட்டின் வேளாண் பருவ காலம் என்ன ?
ஜூலை முதல் ஆகஸ்ட் வரை
- சம்பா( ஆடிப்பட்டம் )பருவ காலத்தில் பயிரிடப்படும் முக்கிய பயிர்கள் என்னென்ன?
நெல் மற்றும் கரும்பு
- நவரை என்றழைக்கப்படும் தமிழ்நாட்டின் வேளாண் பருவ காலம் என்ன ?
நவம்பர் முதல் டிசம்பர் வரை
- நவரை பருவ காலத்தில் பயிரிடப்படும் முக்கிய பயிர்கள் என்னென்ன?
பழங்கள், காய்கறிகள், வெள்ளரி, தர்பூசணி
- தமிழ்நாட்டின் முக்கியமான உணவு பயிர் எது?
நெல்
- தமிழகத்தில் பயிரிடப்படும் முக்கிய நெல் வகைகள் என்னென்ன ?
பொன்னி மற்றும் கிச்சடி சம்பா
- தமிழ்நாட்டில் எவ்வளவு பரப்பளவில் நெல் பயிரிடப்படுகிறது?
3 மில்லியன் ஹெக்டர்
- நெல் எந்த மாவட்டங்களில் அதிகளவில் பயிரிடப்படுகிறது?
தஞ்சாவூர், திருவாரூர் ,திருவள்ளூர் ,காஞ்சிபுரம் ,விழுப்புரம், கடலூர் மற்றும் திருநெல்வேலி
- நெல் உற்பத்தி செய்யும் இந்திய மாநிலங்களில் தமிழகம் எத்தனையாவது இடத்தை வகிக்கிறது?
மூன்றாமிடம்
- தமிழகத்தின் எந்தப் பகுதி அதிக நெல் உற்பத்தி செய்யும் பகுதியாகும்?
காவிரி டெல்டா பகுதி
- தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படுவது எது?
காவிரி டெல்டா பகுதி (பிரிக்கப்படாத தஞ்சாவூர்)
- தமிழ் நாட்டின் மக்கள் தொகையில் எத்தனை பங்கு பகுதியினரின் முக்கியமான உணவாக தினை உள்ளது?
மூன்றில் ஒரு பங்கு
- தமிழகத்தில் விளைவிக்கப்படும் முக்கியமான திணை பயிர்கள் என்னென்ன?
சோளம், கேழ்வரகு மற்றும் கம்பு
- எந்தப் பகுதிகளில் சோளம் பயிரிடப்படுகிறது?
கோயம்புத்தூர் பீடபூமி மற்றும் கம்பம் பள்ளத்தாக்கு
- எந்த பகுதிகளில் கேழ்வரகு பயிரிடப்படுகிறது ?
கோயம்புத்தூர் ,தர்மபுரி, வேலூர் மற்றும் கடலூர் மாவட்டங்கள்
- எந்த பகுதிகளில் கம்பு பயிரிடப்படுகிறது?
ராமநாதபுரம் ,திருநெல்வேலி, கரூர் ,பெரம்பலூர் மற்றும் சேலம்
- தமிழ்நாட்டில் விளையும் முக்கிய பருப்பு வகைகள் என்னென்ன ?
கொண்டைக் கடலை, உளுந்து ,பச்சைபயறு, துவரம்பருப்பு ,தட்டைப்பயிறு மற்றும் கொள்ளு
- தமிழ்நாட்டில் எந்த மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பருப்பு வகைகள் பயிரிடப்படுகின்றன?
சென்னை ,நீலகிரி மற்றும் கன்னியாகுமரி
- எந்த மாவட்டம் கொண்டக்கடலை உற்பத்தியில் மாநிலத்தில் முதல் நிலை வகிக்கிறது?
கோயம்புத்தூர்
- எந்த மாவட்டங்கள் துவரம்பருப்பை கூடுதலாக உற்பத்தி செய்கின்றன?
வேலூர் மற்றும் கன்னியாகுமரி
- எந்த மாவட்டங்கள் அதிக அளவில் பச்சை பயிறு மற்றும் உளுந்து ஆகியவற்றை உற்பத்தி செய்கின்றன?
திருவாரூர் ,நாகப்பட்டினம், மற்றும் தூத்துக்குடி
- எந்த மாவட்டங்களில் கொள்ளு பயிரிடப்படுகிறது ?
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி
- இந்தியா எந்த ஆண்டை தினைப் பயிர்களின் தேசிய ஆண்டாக அனுசரித்தது ?
2018
- உலக உணவு மற்றும் வேளாண்மை கழகம் எந்த ஆண்டு சர்வதேசத் தினை பயிர் ஆண்டாக அனுசரிக்க தீர்மானித்துள்ளது?
2023
- தமிழ்நாட்டில் பயிரிடப்படும் முக்கிய எண்ணெய் வித்துக்கள் என்னென்ன?
நிலக்கடலை, எள் ,ஆமணக்கு, எண்ணெய் ,சூரியகாந்தி மற்றும் கடுகு
- தமிழ்நாட்டின் முக்கிய எண்ணெய் வித்துப் பயிர் எது?
நிலக்கடலை
- தமிழ்நாட்டின் அந்த மாவட்டங்களில் நிலக்கடலை உற்பத்தி செறிந்து காணப்படுகிறது?
வேலூர் ,திருவண்ணாமலை, விழுப்புரம் ,சேலம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்
- தமிழ்நாட்டின் எந்த மாவட்டங்களில் நிலக்கடலை உற்பத்தி சிறிய அளவில் காணப்படுகிறது?
தர்மபுரி, கடலூர், பெரம்பலூர், மதுரை ,ஈரோடு ,ராமநாதபுரம் ,சிவகங்கை மற்றும் விருதுநகர்
- எந்த மாவட்டங்களில் தென்னை மரங்கள் அதிகம் காணப்படுகின்றன?
கோயம்புத்தூர் ,தஞ்சாவூர் மற்றும் கன்னியாகுமரி
- தமிழ்நாட்டின் முக்கியமான வணிகப் பயிர் எது?
கரும்பு
- கரும்பு பயிரிட என்ன காலநிலை தேவைப்படுகிறது?
அதிக வெப்பநிலை மற்றும் அதிக மழைப்பொழிவு
- கரும்பு எந்த மண்டலத்தில் நன்கு வளரக் கூடியவை?
வெப்பமண்டல பிரதேசங்கள்
- தமிழ்நாட்டில் கரும்பு பயிரிடும் மாவட்டங்கள் என்னென்ன?
திருவள்ளூர் ,காஞ்சிபுரம், வேலூர், கடலூர், திருநெல்வேலி ,கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு
- பருத்தி பயிரிடுவதற்கு உகந்த காலநிலை என்ன?
கரிசல்மண் ,நீண்ட பனிப்பொழிவற்ற காலம் ,மித வெப்பம் மற்றும் ஈரப்பத வானிலை
- பருத்தி வளரும் காலத்தில் தேவையான காலநிலை என்ன ?
ஈரப்பத காலநிலை
- பருத்தி அறுவடை காலத்தில் தேவைப்படும் காலநிலை என்ன ?
வறண்ட காலநிலை
- பருத்தி எங்கு பயிரிடப்படுகிறது ?
மதுரை ,ராமநாதபுரம், விருதுநகர் ,திருநெல்வேலி, தூத்துக்குடி ,சேலம் மற்றும் தருமபுரி
- தமிழ்நாட்டின் முக்கிய தோட்டப்பயிர்கள் என்னென்ன?
தேயிலை, காபி, ரப்பர், முந்திரி மற்றும் சின்கோனா
- இந்தியாவில் தேயிலை பயிரிடும் பரப்பு மற்றும் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது ?
அசாம்
- தமிழ்நாடு தேயிலை பயிரிடும் பரப்பு மற்றும் உற்பத்தியில் எத்தனையாவது இடத்தை வகிக்கிறது?
இரண்டாமிடம்
- தமிழ்நாட்டின் எந்தப் பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் காணப்படுகின்றன?
நீலகிரி மலைகள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மலைகள்
- தமிழ்நாட்டின் எந்தப் பகுதிகளில் காபி குறிப்பிடத்தகுந்த அளவில் பயிரிடப்படுகிறது ?
நீலகிரி மலைகள் மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு மலைகள்
- இந்தியாவில் காப்பி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?
கர்நாடகா
- தமிழ்நாடு காப்பி உற்பத்தியில் எத்தனாவது இடத்தை வகிக்கிறது?
இரண்டாமிடம்
- இரப்பர் தோட்டங்கள் தமிழ்நாட்டில் எங்கு அதிகமாக காணப்படுகிறது?
கன்னியாகுமரியில்
- முந்திரி எந்த மாவட்டத்தில் பெரும் பகுதிகளில் பயிரிடப்படுகிறது?
கடலூர்
- எந்தப் பகுதிகளில் சின்கோனா பயிரிடப்படுகிறது?
1060 மீட்டர் முதல் 1280 மீட்டர் உயரம் வரை உள்ள ஆனைமலை பகுதிகளில்
- தமிழ்நாட்டில் எந்தப் பகுதிகளில் ஏலக்காய் தோட்டங்கள் காணப்படுகின்றன?
915 மீட்டர் முதல் 1525 மீட்டர் உயரம் வரை உள்ள மதுரையை சுற்றியுள்ள மலைப்பகுதிகளில்
- டான்டீ(TANTEA) என்ற நிறுவனம் என்ன உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களில் ஒன்றாகும்?
கருப்பு வகை தேயிலை உற்பத்தியிலும் ,கலப்பு வகை தேயிலை உற்பத்தியிலும்
- தமிழ்நாடு பால் வளர்ச்சிக் கழகம் என நிறுவப்பட்ட அமைப்பானது பின்னர் என்ன அமைப்பாக பதிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது ?
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் (பிரபலமாக ஆவின் என அழைக்கப்படுகிறது)
- இந்தியாவில் ஏழை மக்களின் பசு என அழைக்கப்படுவது எது?
வெள்ளாடுகள்
- தமிழ்நாட்டு கடற்கரையின் நீளம் எவ்வளவு?
1076 கிலோ மீட்டர்
- தமிழ்நாட்டு கடற்கரையின் நீளம் இந்திய கடற்கரையில் எவ்வளவு சதவீதம்?
13
- மாநிலத்தின் கடற்கரைப்பகுதி எவ்வளவு சதுர கிலோமீட்டர் பரப்பளவை உடையது?
0.19 மில்லியன் சதுர கிலோமீட்டர்
- சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி ,நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் மாநிலத்தின் கடல் மீன் உற்பத்தியில் ஏறத்தாழ எத்தனை சதவீத பங்களிப்பை தருகின்றன ?
40%
- தமிழ்நாட்டில் எத்தனை முக்கிய மீன்பிடி துறைமுகங்கள் ,இடைநிலை மீன்பிடித் துறைமுகம் மற்றும் மீன்பிடி தளங்களைக் கொண்டுள்ளது ?
மூன்று முக்கிய மீன்பிடி துறைமுகங்கள், மூன்று இடைநிலை மீன்பிடித் துறைமுகம் மற்றும் 363 மீன்பிடி தளங்கள்
- தமிழ்நாட்டின் உள்நாட்டு மீன் உற்பத்தியில் எந்த மாவட்டம் 10 சதவீத உற்பத்தியுடன் முன்னிலையில் உள்ளது ?
வேலூர் மாவட்டம்
- தமிழ்நாட்டின் எந்த மாவட்டங்கள் தலா 9 சதவீத உள்நாட்டு மீன் உற்பத்தி செய்து மாநிலத்தில் இரண்டாம் இடத்தில் உள்ளன?
சிவகங்கை, கடலூர் மற்றும் விருதுநகர்
- மாநில பொருளாதாரத்தில் மீன்பிடித்துறையானது எத்தனை சதவீதம் பங்களிப்பு செய்கிறது ?
1.25 சதவீதம்
- தமிழ்நாடு இந்திய பரப்பளவில் எத்தனை சதவீதத்தைக் கொண்டுள்ளது?
4%
- தமிழ்நாடு இந்திய மக்கள் தொகையில் எத்தனை சதவீதத்தைக் கொண்டுள்ளது?
6 %
- தமிழ்நாடு இந்திய நீர் வளத்தில் எத்தனை சதவீதத்தை பெற்றுள்ளது?
2.5%
- தமிழகத்தின் ஆண்டு சராசரி மழை அளவு எவ்வளவு?
ஏறத்தாழ 930 மில்லி மீட்டராகும்
- தமிழ்நாடு வடகிழக்கு பருவக்காற்று காலத்தில் எத்தனை சதவீத மழையைப் பெறுகிறது ?
47%
- தமிழ்நாடு தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் எத்தனை சதவீத மழையைப் பெறுகிறது ?
35%
- தமிழ்நாடு கோடை காலத்தில் எத்தனை சதவீத மழையைப் பெறுகிறது?
14%
- தமிழ்நாடு குளிர்காலத்தில் எத்தனை சதவீதம் மழை பொழிவை பெறுகிறது?
4%
- மேட்டூர் அணை எந்த ஆற்றில் கட்டப்பட்டுள்ளது?
காவிரி ஆறு
- மேட்டூர் அணை எந்த மாவட்டங்களில் உள்ள ஏறத்தாழ 271000 ஏக்கர் விளை நிலத்திற்கு நீர் பாசன வசதியை அளிக்கிறது ?
சேலம், ஈரோடு ,கரூர் ,திருச்சிராப்பள்ளி ,தஞ்சாவூர் ,திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம்
- பவானிசாகர் அணை எங்கு அமைந்துள்ளது?
ஈரோடு மாவட்டம்
- பவானிசாகர் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?
பவானி ஆறு
- தமிழ்நாட்டில் உள்ள எந்த அணை நாட்டின் மண் கல் கலவையால் கட்டப்பட்ட மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகும்?
பவானிசாகர் அணை
- அமராவதி அணை எங்கு அமைந்துள்ளது?
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை
- அமராவதி அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?
காவிரியின் துணை ஆறான அமராவதி ஆற்றின் குறுக்கே
- சாத்தனூர் அணை எங்கு அமைந்துள்ளது?
செங்கம் தாலுக்கா (சென்ன கேசவ மலையின் நடுவே?
- சாத்தனூர் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?
தென்பெண்ணை ஆறு
- முல்லைப் பெரியாறு அணை எப்போது கட்டப்பட்டது?
1895 ,ஆங்கிலேயர்கள் நிர்வாகத்தால் கட்டப்பட்டது
- முல்லைப் பெரியாறு அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?
பெரியாறு ஆற்றின் குறுக்கே
- முல்லைப்பெரியாறு அணையின் உயரம் மற்றும் நீளம் எவ்வளவு ?
175 அடி உயரம் மற்றும் 1200 அடி நீளம்
- வைகை அணை எங்கு கட்டப்பட்டுள்ளது ?
ஆண்டிப்பட்டி அருகே வைகை ஆற்றின் குறுக்கே
- வைகை அணையின் உயரம் என்ன?
111 அடி உயரம்
- வைகை அணை எப்போது திறக்கப்பட்டது?
ஜனவரி 21 1959
- வைகை அணையில் அமைந்துள்ள தோட்டம் என்ன பெயரில் அழைக்கப்படுகிறது?
சிறிய பிருந்தாவனம்
- மணிமுத்தாறு அணை எங்கு அமைந்துள்ளது?
திருநெல்வேலி
- பாபநாசம் அணை எங்கு அமைந்துள்ளது?
திருநெல்வேலி
- பாபநாசம் அணை வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கரையார் அணை
- பாபநாசம் அணையில் எவ்வளவு நீர் மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது?
28 மெகாவாட்
- தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட நீர்த்தேக்க திட்டம் எது?
பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம்
- பரப்பலாறு திட்டம் எந்த இடத்தின் அருகே அமைந்துள்ளது?
ஒட்டன்சத்திரம்
- தமிழ்நாட்டின் மொத்த மேற்பரப்பு நீரின் அளவு எவ்வளவு?
24864 மில்லியன் கனமீட்டர்
- தமிழ்நாட்டின் பயன்படுத்திக் கொள்ளத் தக்க நிலத்தடி நீர் வளம் எவ்வளவு?
22,433 மில்லியன் கன மீட்டர்
- தமிழ்நாட்டின் தனிநபர் நீர் நுகர்வின் அளவு என்ன?
900 கன மீட்டர்
- தேசிய தனிநபர் நீர் நுகர்வின் அளவு என்ன ?
2200 கனமீட்டர்
- தமிழ்நாடு எந்த கனிமவளங்களில் முன்னணி உற்பத்தியாளராக உள்ளது ?
வெர்மிகுலைட்,மேக்னடைட், டுனைட்,ரூட்டைல்,செம்மணிக்கல், மாலிப்டினம் மற்றும் இல்மனைட்.
- பழுப்பு நிலக்கரி உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு எவ்வளவு?
55.3%
- வெர்மிகுலைட் கனிம உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு எவ்வளவு ?
75%
- டுனைட் கனிம உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு எவ்வளவு?
59%
- செம்மணிக்கல் கனிம உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு எவ்வளவு?
59%
- மாலிப்டீனம் கனிம உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு எவ்வளவு?
52%
- டைட்டானியம் கனிம உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு எவ்வளவு?
30%
- தமிழ்நாட்டில் எந்தப் பகுதியில் மிகப்பெரிய பழுப்பு நிலக்கரி வளங்களைக் கொண்டுள்ளது ?
நெய்வேலி
- தமிழ்நாட்டின் எந்த பகுதிகளில் நிலக்கரிப் படிமங்கள் காணப்படுகின்றன?
ராமநாதபுரம்
- தமிழ் நாட்டின் எந்த பகுதியில் எண்ணெய் மற்றும் இயற்கைவாயு படிவுகள் காணப்படுகின்றன?
காவிரி வடிநில பகுதி
- தமிழ்நாட்டு எந்தப் பகுதிகளில் இரும்புத்தாது படிவுகள் காணப்படுகின்றன ?
சேலம் மாவட்டத்திலுள்ள கஞ்ச மலை, திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கல்வராயன் மலை
- சேலம் அருகே எந்த தாது கிடைக்கின்றது?
மேக்னசைட்
- சேர்வராயன் குன்றுகள் ,கோத்தகிரி, உதகமண்டலம் பழனி மலை மற்றும் கொல்லிமலைப் பகுதிகளில் என்ன?
தாதுக்கள் காணப்படுகின்றன? பாக்சைட்
- திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் என்ன தாது கிடைக்கிறது?
ஜிப்சம்
- கன்னியாகுமரி கடற்கரை மணல் பரப்புகளில் என்ன தாது கிடைக்கிறது?
இல்மனைட் மற்றும் ரூட்டைல்
- சுண்ணாம்பு தாது எந்தெந்த பகுதிகளில் கிடைக்கிறது ?
கோயம்புத்தூர் ,கடலூர் ,திண்டுக்கல், காஞ்சிபுரம் ,கரூர் ,மதுரை ,நாகப்பட்டினம், நாமக்கல் ,பெரம்பலூர் ,ராமநாதபுரம், சேலம் மற்றும் திருவள்ளூர்
- தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் மேக்னசைட் கிடைக்கிறது?
கோயம்புத்தூர் ,தர்மபுரி, கரூர் ,நாமக்கல், நீலகிரி ,சேலம், திருச்சிராப்பள்ளி ,திருநெல்வேலி மற்றும் வேலூர் மாவட்டங்கள்
- மூலப்பொருட்களை இயந்திரங்களின் மூலம் உற்பத்தி பொருளாகவோ அல்லது பயன்படுத்தக் கூடிய பொருளாக மாற்றப்படும் இடத்திற்கு பெயர் என்ன?
தொழிலகங்கள்
- தமிழ்நாட்டின் முக்கிய தொழிலகங்கள் என்னென்ன ?
பருத்தி நெசவாலை, சர்க்கரை ஆலை, காகித ஆலை, தோல் தொழிலகம், சிமெண்ட் ஆலை ,மின்சாதன பொருட்கள் உற்பத்தி ஆலை, வாகன உதிரிபாகங்கள் ,தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாத்துறை
- பருத்தி நெசவாலைகள் எந்த பகுதிகளில் செறிந்து காணப்படுகின்றன?
கோயம்புத்தூர், திருப்பூர்,சேலம் ,பல்லடம் ,கரூர் ,திண்டுக்கல் ,விருதுநகர், திருநெல்வேலி ,தூத்துக்குடி, மதுரை மற்றும் ஈரோடு
- இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு எவ்வளவு?
30%
- தமிழ்நாட்டில் உள்ள எந்த பகுதி கைத்தறி விசைத்தறி மற்றும் ஆயத்த ஆடைகளின் விற்பனைக்கு புகழ் பெற்றது?
ஈரோடு
- தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என அழைக்கப்படுவது எது?
கோயம்புத்தூர்
- தமிழ்நாட்டின் எந்த பகுதிகள் தமிழ்நாட்டின் ஜவுளி பள்ளத்தாக்கு என குறிப்பிடப்படுகிறது?
கோயம்புத்தூர், திருப்பூர் ,ஈரோடு மாவட்டங்கள்
- தமிழ்நாட்டின் நெசவு தலைநகரம் என அழைக்கப்படுவது எது?
கரூர்
- நாட்டின் பட்டு உற்பத்தியில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தை வகிக்கிறது?
4-வது இடம்
- தமிழ்நாட்டின் ஆண்டு பட்டு உற்பத்தி ஏறத்தாழ எத்தனை மெட்ரிக் டன்கள் ஆகும்?
1200
- தமிழ்நாட்டின் முக்கிய பட்டு நெசவு மையங்கள் என்னென்ன ?
காஞ்சிபுரம் ,ஆரணி, ,கும்பகோணம், சேலம் ,கோயம்புத்தூர் ,மதுரை மற்றும் திருநெல்வேலி
- இந்தியாவில் தோல் பதனிடும் தொழிலகங்களில் தமிழ்நாடு எத்தனை சதவீத உற்பத்தியை வழங்குகிறது?
60%
- தமிழ்நாடு காலணிகள் தோல் மற்றும் தோல் உபபொருட்கள் உற்பத்தியில் எத்தனை சதவீத பங்களிப்பை அளிக்கிறது?
38%
- எந்தப் பகுதிகளில் தோல் பதனிடும் தொழிலகங்கள் அமைந்துள்ளன?
வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ராணிப்பேட்டை ,ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி
- தோல் மற்றும் தோல் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதியில் எத்தனை சதவீத பங்களிப்புடன் வேலூர் முதன்மை மாவட்டமாக விளங்குகிறது?
37%
- அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி நிறுவனம் கீழ் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆய்வகம் எங்கு அமைந்துள்ளது?
சென்னை
- தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?
கரூர் மாவட்டம் காகிதபுரம்
- தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?
1979
- ஒரு குறிப்பிட்ட புவியியல் பிரதேசத்தில் தயாரிக்கப்படும் பொருட்களின் மீது பயன்படுத்தப்படும் குறிப்பு எவ்வாறு அழைக்கப்படும் ?
புவியியல் குறியீடு (GI Tag)
- பட்டு எந்த பகுதியின் புவியியல் குறியீடைப் பெற்றுள்ளது?
ஆரணி மற்றும் காஞ்சிபுரம்
- மாவு அரைக்கும் இயந்திரம், கோரா பட்டு சேலை ஆகியவை எந்த பகுதியின் புவியியல் குறியீடு பெற்றுள்ளன ?
கோயம்புத்தூர்
- ஓவியங்கள் ,கலைநயம் மிக்க தட்டுகள், தலையாட்டி பொம்மைகள் ஆகியவை எந்த பகுதியின் புவியியல் குறியீடு பெற்றுள்ளன ?
தஞ்சாவூர்
- கோயில் நகைகள் எந்த பகுதியின் புவியியல் குறியீடு பெற்றுள்ளன ?
நாகர்கோவில்
- மஞ்சள் எந்த பகுதியின் புவியியல் குறியீடு பெற்றுள்ளன ?
ஈரோடு
- வெண்பட்டு(சேலம் பட்டு) எந்த பகுதியின் புவியியல் குறியீடு பெற்றுள்ளன ?
சேலம்
- போர்வைகள் எந்த பகுதியின் புவியியல் குறியீடு பெற்றுள்ளன ?
பவானி
- சுங்குடி சேலை எந்த பகுதியின் புவியியல் குறியீடு பெற்றுள்ளன ?
மதுரை
- வெண்கல சிலைகள் எந்த பகுதியின் புவியியல் குறியீடு பெற்றுள்ளன ?
சுவாமிமலை
- குத்துவிளக்கு எந்த பகுதியின் புவியியல் குறியீடு பெற்றுள்ளன ?
நாச்சியார் கோவில்
- பாய் எந்த பகுதியின் புவியியல் குறியீடு பெற்றுள்ளன ?
பத்தமடை
- பாரம்பரிய பூத்தையல் எந்த பகுதியின் புவியியல் குறியீடு பெற்றுள்ளன ?
நீலகிரி
- சிற்பங்கள் எந்த பகுதியின் புவியியல் குறியீடு பெற்றுள்ளன ?
மகாபலிபுரம்
- மலைவாழை எந்த பகுதியின் புவியியல் குறியீடு பெற்றுள்ளன ?
சிறுமலை
- தேங்காய் எந்த பகுதியின் புவியியல் குறியீடு பெற்றுள்ளன ?
ஏத்தோமொழி
- மாநிலத்தில் உள்ள மற்ற காகித ஆலைகள் என்னென்ன ?
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள புக்காதுரை, பவானிசாகர் ,பள்ளிபாளையம், பரமத்திவேலூர் ,கோயமுத்தூர் ,உடுமலைப்பேட்டை ,தொப்பம்பட்டி, நிலக்கோட்டை மற்றும் சேரன்மாதேவி
- சிமெண்ட் உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடத்தை வகிக்கிறது?
இரண்டாவது இடம்
- கல்நார் சிமெண்ட் அட்டை அலகு எந்தப் பகுதியில் உள்ளது ?
ஆலங்குளம்
- கற்கலன் குழாய் அலகு எந்தப் பகுதியில் உள்ளது?
விருத்தாசலம்
- தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்கள் இணைந்து இந்தியாவின் மொத்த மென்பொருள் ஏற்றுமதியில் எத்தனை சதவீத பங்களிப்பை செய்கின்றன?
59.6 சதவீதம்
- நாட்டின் மென்பொருள் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது ?
கர்நாடகா
- நாட்டின் மென்பொருள் ஏற்றுமதியில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தை வகிக்கிறது?
இரண்டாவது
- சர்வதேச அளவில் மிகச்சிறந்த பகுதிகளாகவும் ஏற்றுமதியை ஊக்குவிக்க கூடிய சூழலை பெற்றதாகவும் உள்ள மண்டலங்கள் எது?
சிறப்பு பொருளாதார மண்டலங்கள்
- டைடல் பூங்கா-2 ,டைடல் பூங்கா-3 மற்றும் உயிரி மருந்தகம் போன்றவை எங்கு அமைந்துள்ளன?
சென்னை
- டைடல் பூங்கா 4 எங்கு அமைந்துள்ளன ?
கோயம்புத்தூர்
- தொழில்துறை உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு நாட்டின் உற்பத்தியில் எத்தனை சதவீதமாகும்?
11 முதல் 12 சதவீதம்
- இந்தியாவின் மென்பொருள் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு எவ்வளவு?
17%
- வாகன உற்பத்தி மற்றும் கனரக வாகன உற்பத்தி மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எத்தனை சதவீத பங்களிப்பை அளிக்கிறது?
8%
- இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வாகன தொழில்களில் எத்தனை சதவீதம் பயணிகள் மகிழுந்து ,வணிக வாகனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்கள் தமிழ்நாட்டின் பங்களிப்பு என்ன?
21% பயணிகள் மகிழுந்து, 33% வணிக வாகனங்கள் மற்றும் 35% வாகன உதிரி பாகங்கள்
- ரசாயன தொழிலகம் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எத்தனை சதவீத பங்களிப்பை செய்கின்றது?
13%
- ரசாயன தொழிலகம் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் எத்தனை சதவீத பங்களிப்பை செய்கின்றது?
8%
- தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை சர்க்கரை ஆலைகள் உள்ளன ?
34
- தமிழ்நாட்டில் உள்ள 34 சர்க்கரை ஆலைகளில் கூட்டுறவு மற்றும் தனியார் துறைகளினால் நிர்வகிக்கப்படுபவை எத்தனை ?
16 கூட்டுறவுத்துறையாலும், 18 தனியார் துறையிலும் நிர்வகிக்கப்படுகின்றன
- தமிழ்நாட்டின் சுற்றுலா துறையின் ஆண்டு வளர்ச்சி விகிதம் எவ்வளவு?
16%
- ஒரு நாட்டின் வரையறுக்கப்பட்ட பகுதியில் வாழும் மக்களின் எண்ணிக்கை எவ்வாறு அழைக்கப்படும்?
மக்கள் தொகை
- மக்கள் தொகை பண்புகள் பற்றிய புள்ளி விவர ஆய்வுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றது ?
மக்கட்தொகையியல்
- 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு?
7.21 கோடி
- 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் மக்கள் தொகை எவ்வளவு?
ஆண்கள் 3.61 கோடி, பெண்கள் 3.60 கோடி
- 2001-2011 ஆம் ஆண்டு காலத்தில் மக்கள் தொகை வளர்ச்சி எவ்வளவு ஆக இருந்தது ?
15.6 சதவீதம்
- இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் தமிழ்நாட்டின் மக்கள் தொகை எத்தனை சதவீதம் ஆகும்?
5.96%
- 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளாக தமிழ்நாட்டின் எந்தப் பகுதிகள் உள்ளது?
சென்னை (முதலிடம்), கோவை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ,விழுப்புரம், தர்மபுரி,சேலம் ,மதுரை மற்றும் திருநெல்வேலி
- 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மிதமான மக்கள்தொகை கொண்ட பகுதிகள் என்னென்ன ?
திருவண்ணாமலை, கடலூர் ,திருச்சி மற்றும் தஞ்சாவூர் (30-35 லட்சம் மக்கள்தொகை) வேலூர் திண்டுக்கல் விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள்( 15 முதல் 20 லட்சம் மக்கள் தொகை)
- 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் குறைவான மக்கள்தொகை கொண்ட பகுதிகள் என்னென்ன ?
நாகப்பட்டினம், திருவாரூர் ,புதுக்கோட்டை ,இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை (15 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை) நீலகிரி மாவட்டம் (10 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை)
- 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் அடர்த்தி சதுர கிலோ மீட்டருக்கு எவ்வளவு ?
555
- 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தேசிய சராசரி மக்கள் அடர்த்தி எவ்வளவு?
382
- சென்னை ஒரு சதுர கிலோ மீட்டருக்கு எவ்வளவு மக்களடர்த்தி கொண்ட மாவட்டம் ஆகும்?
26903 (மிக அதிகம்)
- நீலகிரி மாவட்டத்தில் மக்கள் அடர்த்தி எவ்வளவு ?
288 (மிக குறைவு)
- தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இந்துக்கள் எவ்வளவு சதவீதம்?
87.58%
- தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் கிறிஸ்தவர்கள் எவ்வளவு சதவீதம்?
6.12%
- தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இஸ்லாமியர்கள் எவ்வளவு சதவீதம்?
5.86%
- தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சமணர்கள் எவ்வளவு சதவீதம்?
0.12%
- தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சீக்கிய மதத்தினர் எவ்வளவு சதவீதம்?
0.02%
- தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் புத்த மதத்தினர் எவ்வளவு சதவீதம்?
0.02%
- தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் குறிப்பிடவியலா மதத்தை சேர்ந்தவர்கள் எவ்வளவு சதவீதம்?
0.26%
- 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் நகர்ப்புற மக்கள்தொகை சதவீதம் எவ்வளவு?
48.40% ( 3,49,17,440)
- 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் கிராமப்புற மக்கள்தொகை சதவீதம் எவ்வளவு?
51.60% ( 3,72,29,590)
- ஆயிரம் ஆண்களுக்கு இணையாக உள்ள பெண்களின் எண்ணிக்கையை குறிப்பது எது ?
பாலின விகிதம்
- 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் பாலின விகிதம் எவ்வளவு?
996
- 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் பாலின விகிதம் எவ்வளவு?
940
- தமிழ்நாட்டின் பாலின விகிதம் அதிகம் கொண்ட மாவட்டம் எது ?
நீலகிரி (1041) அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர்
- தமிழ்நாட்டில் பாலின விகிதம் குறைவாக உள்ள மாவட்டம் எது?
தர்மபுரி(954)
- 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் கல்வியறிவு விகிதம் எவ்வளவு?
80.01%
- தமிழகத்தின் தற்போதைய ஆண்களின் கல்வியறிவு விகிதம் எவ்வளவு?
86.77 சதவீதம்
- தமிழகத்தின் தற்போதைய பெண்களின் கல்வியறிவு விகிதம் எவ்வளவு?
73.44 சதவீதம்
- 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவின் கல்வியறிவு விகிதம் எவ்வளவு?
74.04 (ஆண்கள் 82.14 சதவீதம் பெண்கள் 65.46 சதவீதம்)
- தமிழ் நாட்டின் அதிக கல்வியறிவு விகிதம் கொண்ட மாவட்டம் எது?
கன்னியாகுமரி( 91.75 சதவீதம்)
- தமிழ்நாட்டின் மிகக் குறைந்த கல்வியறிவு கொண்ட மாவட்டம் எது?
தர்மபுரி (68.54%)
- மொத்த சாலை திட்டங்களில் தமிழகம் எத்தனாவது இடத்தில் உள்ளது?
இரண்டாவது இடம்
- தெற்கு ரயில்வேயின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
சென்னை
- தமிழ்நாட்டின் மொத்த இருப்பு பாதையின் நீளம் எவ்வளவு ?
6693 கிலோமீட்டர்
- தெற்கு ரயில்வே மண்டலத்தில் எத்தனை ரயில் நிலையங்கள் உள்ளன?
690
- தமிழ்நாட்டில் எத்தனை முக்கிய சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன?
4
- இந்தியாவின் மூன்றாவது பெரிய விமான நிலையமாக உள்ளது எது?
சென்னை சர்வதேச விமான நிலையம்
- தமிழ்நாட்டின் பிற சர்வதேச விமான நிலையங்கள் என்னென்ன?
கோயம்புத்தூர் ,மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி
- தமிழ்நாட்டில் உள்ள உள்நாட்டு விமான நிலையங்கள் என்னென்ன ?
தூத்துக்குடி மற்றும் சேலம்
- தமிழ்நாட்டின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை எண்?
44
- NH44 தேசிய நெடுஞ்சாலை எந்த பகுதிகளை இணைக்கிறது?
ஓசூரில் இருந்து தர்மபுரி, சேலம் ,கரூர் ,திண்டுக்கல் மதுரை திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை 627.2 கிலோமீட்டர் தூரம்
- தமிழ்நாட்டின் மிகக் குறைந்த தேசிய நெடுஞ்சாலை எண் எது?
785
- தேசிய நெடுஞ்சாலையில் 785 எந்த பகுதியை இணைக்கிறது?
மதுரையிலிருந்து நத்தம் வரை 38 கிலோமீட்டர்
- தமிழ்நாட்டின் மூன்று முக்கிய துறைமுகங்கள் என்னென்ன ?
சென்னை ,எண்ணூர் மற்றும் தூத்துக்குடி
- தமிழ்நாட்டில் எந்த பகுதியில் இடைநிலை துறைமுகம் அமைந்துள்ளது?
நாகப்பட்டினம்
- தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் எத்தனை சிறிய துறைமுகங்கள் உள்ளன?
15
- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறு துறைமுகங்களும் எதனால் நிர்வகிக்கப்படுகிறது?
தமிழ்நாடு கடல்சார் வாரியம்
- சென்னை துறைமுகம் என்னவகை துறைமுகம்?
செயற்கைத் துறைமுகம்
- எந்த துறைமுகம் சரக்கு பெட்டகங்களை கையாளும் நாட்டின் துறைமுகங்களில் இரண்டாவது பெரிய துறைமுகம் ஆகும் ?
சென்னை துறைமுகம்
- தமிழகத்தில் அதிக நிலக்கரி மற்றும் தாதுக்களை கையாளும் துறைமுகமாக உள்ளது எது?
எண்ணூர்
- தகவல் தொடர்பு (communication) என்பது எந்த மொழி வார்த்தையிலிருந்து பெறப்பட்டது?
இலத்தீன் வார்த்தை, (கம்யூனிகேர் இதன்பொருள் பகிர்தல்)
- தகவல் தொடர்புகள் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன?
இரண்டு :தனிமனித தகவல் தொடர்பு ,பொது தகவல் தொடர்பு
- தமிழகத்தின் அஞ்சலக தென்மேற்கு மண்டலத்தின் தலைமையகம் எது ?
கோயம்புத்தூர்
- தமிழகத்தின் அஞ்சலக மத்திய மண்டலத்தின் தலைமையகம் எது ?
திருச்சிராப்பள்ளி
- தமிழகத்தின் அஞ்சலக தெற்கு மண்டலத்தின் தலைமையகம் எது ?
மதுரை
- வணிகத்தின் இரு கூறுகள் என்னென்ன?
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி
- இந்தியாவின் ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு எவ்வளவு சதவீதம்?
12.2 சதவீதம்
- ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பிற்கு இடையேயான வேறுபாடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வர்த்தக சமநிலை
- நாட்டின் வணிகத்தில் தமிழ்நாட்டின் முக்கிய துறைமுகங்கள் எவ்வளவு பங்களிப்பை செய்கின்றன?
10.9 4%
- பேரிடர் அவசரகால தொலைபேசி எண் என்ன?
1077
10TH GEOGRAPHY STUDY NOTES |தமிழ்நாடு மானுடப் புவியியல்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services