- எந்த ஆண்டு மாநில மறுசீரமைப்பு சட்டத்தின் படி மொழியியல் அடிப்படையில் மாநிலங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன?
1956
- மதராஸ் மாகாண பிரிவிற்கு பிறகு மதராஸ் மாகாணத்தில் எத்தனை மாவட்டங்கள் மட்டும் இருந்த?
13 மாவட்டங்கள்
- மதராஸ் மாகாணம் யாரால் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது?
சி என் அண்ணாதுரை
- மதராஸ் மாகாணம் எப்போது தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது?
ஜனவரி 14 1969
- தமிழகத்தின் அமைவிடம் என்ன ?
8°4′ வடஅட்சம் முதல் 13°35′ வட அட்சம்வரையிலும் 76° 18′ கிழக்கு தீர்க்கம் முதல் 80° 20′ கிழக்கு தீர்க்கம் வரை
- தமிழ்நாட்டின் கிழக்குக் கோடியாக அமைந்துள்ள இடம் எது?
கோடியக்கரை
- தமிழ்நாட்டின் மேற்குகோடியாக அமைந்துள்ள இடம் எது?
ஆனைமலை
- தமிழகத்தின் வடகோடியாக உள்ள இடம் எது?
பழவேற்காடு ஏரி
- தமிழகத்தின் தென்கோடியாக அமைந்துள்ள இடம் எது?
குமரிமுனை
- தமிழகத்தின் பரப்பளவு என்ன?
1,30,058 சதுர கிலோ மீட்டர்கள்
- தமிழ்நாடு இந்தியாவின் எத்தனையாவது பெரிய மாநிலம்?
11ஆவது
- இந்திய பரப்பில் தமிழகம் எத்தனை சதவீதத்தைக் கொண்டுள்ளது?
4%
- தமிழ் நாட்டின் எல்லைகளாக கிழக்கே அமைந்துள்ளது இடம் எது?
வங்காள விரிகுடா
- தமிழ் நாட்டின் எல்லையாக மேற்கே அமைந்துள்ள இடம் எது?
கேரளா
- தமிழ் நாட்டின் எல்லையாக வடக்கில் அமைந்துள்ள இடம் எது?
ஆந்திரபிரதேசம்
- தமிழ் நாட்டின் எல்லையாக வடமேற்கே அமைந்துள்ள இடம் எது?
கர்நாடகா
- தமிழ் நாட்டின் எல்லையாக அமைந்துள்ள தெள்கே இடம் எது ?
இந்தியப்பெருங்கடல்
- தமிழ்நாட்டையும் இந்தியாவின் தென் கிழக்கில் உள்ள இலங்கையும் பிரிப்பது எது ?
மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீர் சந்தி
- தமிழ்நாட்டின் கடற்கரை நீளம் என்ன?
1076 கிலோ மீட்டர்
- தமிழ்நாட்டின் கடற்கரை இந்தியாவின் எத்தனையாவது நீளமான கடற்கரையாகும்?
மூன்றாவது
- தமிழ்நாடு உருவான காலகட்டத்தில் எத்தனை மாவட்டங்கள் மட்டும் இருந்தன?
13
- தமிழ்நாட்டில் தற்போது உள்ள மாவட்டங்கள் எத்தனை ?
38 (நடப்பு நிகழ்வுகளில் சரிபார்த்துக் கொள்க)
- தமிழ்நாட்டில் உள்ள எந்த மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்கள் பல்வேறு காலகட்டங்களில் பிரித்து அமைக்கப்பட்டன?
சென்னை, நீலகிரி மற்றும் கன்னியாகுமரி (நடப்பு நிகழ்வுகளில் சரிபார்த்துக் கொள்க)
- எந்த பீடபூமியில் தமிழ்நாடு அமைந்துள்ளது?
தீபகற்ப பீடபூமி என அழைக்கப்படும் தக்காண பீடபூமி
- தக்காண பீடபூமி எந்த பகுதியில் இருந்து உருவானது?
கிரெட்டேசியஸ் காலத்தில் 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற கோண்ட்வானா நிலப்பகுதியில் இருந்து
- தமிழ்நாடு நில தோற்றத்தின் அடிப்படையில் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது?
ஐந்து: மேற்கு தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சி மலை, பீடபூமிகள் ,கடற்கரை சமவெளிகள் மற்றும் உள்நாட்டு சமவெளிகள்
- மேற்கு தொடர்ச்சி மலை வடக்கு மற்றும் தெற்கில் எது வரை நீண்டுள்ளது?
வடக்கே நீலகிரி முதல் தெற்கே கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பில் உள்ள மருதமலை வரை
- மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் உயரம் என்ன ?
2000 மீட்டர் முதல் 3000 மீட்டர் வரை வேறுபடுகிறது
- மேற்கு தொடர்ச்சி மலை எத்தனை சதுர கிலோமீட்டர் பரப்பளவு உடையது ?
2500 சதுர கிலோமீட்டர்
- மேற்கு தொடர்ச்சி மலையில் காணப்படும் முக்கிய கணவாய்கள் என்னென்ன?
பாலக்காட்டு கணவாய், செங்கோட்டை கணவாய்,ஆரல்வாய்மொழி கணவாய் மற்றும் அச்சன்கோவில் கணவாய்
- மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ள முக்கிய மலைகள் என்னென்ன?
நீலகிரி ,ஆனைமலை, பழனிமலை ,ஏலக்காய் மலை, வருசநாடு ,ஆண்டிப்பட்டி மற்றும் அகத்தியர் மலைகள்
- நீலகிரி மலை தமிழ்நாட்டின் எந்த பகுதியில் அமைந்துள்ளது?
வடமேற்குப் பகுதி
- நீலகிரி மலையில் 2000 மீட்டருக்கு மேல் உயரம் கொண்ட எத்தனை சிகரங்கள் காணப்படுகின்றன ?
24
- நீலகிரி மலையின் உயரமான சிகரம் எது ?
தொட்டபெட்டா( 2637 மீட்டர்)
- முக்குருத்தி சிகரத்தின் உயரம் என்ன?
2554 மீட்டர்
- நீலகிரி மலையில் அமைந்துள்ள முக்கிய மலைவாழிடங்கள் என்னென்ன?
ஊட்டி, குன்னூர்
- ஆனைமலை எங்கு அமைந்துள்ளது?
தமிழ்நாடு மற்றும் கேரள மாநில எல்லைப் பகுதியில் பாலக்காட்டுக் கணவாய்க்கு தெற்கில்
- ஆழியாறு பாதுகாக்கப்பட்ட காடுகள், வால்பாறை மலை வாழிடம், காடம்பாறை நீர்மின் நிலையம் ஆகியவை எந்த மலைப் பகுதியில் காணப்படுகின்றன?
ஆனைமலை
- ஆனை மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள அணைகள் என்னென்ன ?
ஆழியாறு மற்றும் திருமூர்த்தி அணைகள்
- பழனி மலை எங்கு அமைந்துள்ளது?
மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதி
- பழனி மலையின் மிக உயரமான சிகரம் எது ?
வந்தராவ் ( 2533 மீட்டர்)
- பழனி மலையின் இரண்டாவது உயர்ந்த சிகரம் எது?
வேம்படி சோலை ( 2505 மீட்டர்)
- பழனி மலையின் தென் மத்திய பகுதியில் அமைந்துள்ள மலை வாழிடம் எது?
கொடைக்கானல் (2150 மீட்டர்)
- தமிழ் நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள மலைகள் எவ்வாறு அழைக்கப்படும்?
ஏலமலை குன்றுகள்
- ஏலமலை வடகிழக்கில் என்ன மலையோடு இணைகின்றது?
பழனிமலை
- ஏலமலை தென்கிழக்கில் என்ன மலையோடு இணைகின்றது?
ஆண்டிப்பட்டி மற்றும் வருஷநாடு குன்றுகள்
- மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சிகரமான பெருமாள்மலையின் உயரம் என்ன?
2234 மீட்டர்
- மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சிகரமான கோட்டைமலையின் உயரம் என்ன?
2019 மீட்டர்
- மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சிகரமான பகாசுராவின் உயரம் என்ன?
1918 மீட்டர்
- மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்கு நோக்கிய நீட்சி எது?
வருஷநாடு மட்டும் ஆண்டிபட்டி குன்றுகள்
- மேகமலை ,கழுகுமலை ,குரங்கனி மலை, சுருளி மற்றும் கும்பக்கரை நீர் வீழ்ச்சிகள் எந்த மலைகளில் காணப்படுகின்றது?
வருசநாடு மற்றும் ஆண்டிப்பட்டி மலைக்குன்றுகள்
- ஸ்ரீவில்லிபுத்தூர் மலை அணில் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?
விருதுநகர் மாவட்டம்
- ஸ்ரீவில்லிபுத்தூர் மலை அணில் சரணாலயம் எந்த மலைத்தொடரின் தெற்கு சரிவுகளில் உள்ளது?
ஆண்டிப்பட்டி மற்றும் வருஷநாடு குன்றுகள்
- ஆண்டிபட்டி மட்டும் வருஷநாடு மலை குன்றுகளில் என்ன ஆறு உற்பத்தி ஆகிறது?
வைகை மற்றும் அதன் துணை ஆறுகள்
- எந்த மலையின் பெரும்பகுதி திருநெல்வேலி மாவட்டத்திலும் அதன் தென் சரிவு கன்னியாகுமரி மாவட்டத்திலும் அமைந்துள்ளது?
பொதிகை மலை
- பொதிகைமலை வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சிவஜோதி பர்வத், அகத்தியர் மலைகள் மற்றும் தெற்கு கைலாயம்
- களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் எந்த பகுதியில் அமைந்துள்ளது?
பொதிகை மலை
- எந்த மலைத்தொடர் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் எல்லை பகுதிகளாகவும் மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் பகுதியாகும் அமைந்துள்ளது?
மகேந்திரகிரி மலை குன்றுகள்
- மகேந்திரகிரி மலைத்தொடரின் சராசரி உயரம் எவ்வளவு?
1645 மீ
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சோதனை உந்துவிசை செயற்கைகோள் ஏவுதளம் எந்த மலையின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது ?
மகேந்திரகிரி மலை குன்றுகள்
- கிழக்கு தொடர்ச்சி மலையின் உயரம் என்ன ?
1100 மீட்டர் முதல் 1600 மீட்டர் வரை வேறுபடுகிறது
- எந்த குன்றுகள் பீடபூமியை சமவெளியில் இருந்து பிரிக்கின்றன?
கிழக்கு தொடர்ச்சி மலை குன்றுகள்
- கிழக்குத் தொடர்ச்சி மலையின் முக்கிய குன்றுகள் என்னென்ன?
ஜவ்வாது ,சேர்வராயன் ,கல்வராயன், கொல்லிமலை மற்றும் பச்சை மலை
- ஜவ்வாது மலைகள் எந்த மாவட்டங்களில் பரவியுள்ளது?
கிழக்கு தொடர்ச்சி மலையின் நீட்சியான ஜவ்வாது மலை திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் பரவியுள்ளது
- திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களைச் இருக்கும் மலை எது ?
ஜவ்வாது மலை
- ஜவ்வாது மலையில் எவ்வளவு உயரம் கொண்ட பல்வேறு சிகரங்கள் அமைந்துள்ளன?
1100 முதல் 1150 மீட்டர் உயரம் கொண்ட பல்வேறு சிகரங்கள்
- ஜவ்வாது மலையின் மிக உயரமான சிகரம் எது?
மேல்பட்டு
- காவலூர் வானவியல் தொலைநோக்கி மையம் எங்கு அமைந்துள்ளது?
ஜவ்வாதுமலை
- காவலூர் வானவியல் தொலைநோக்கி மையம் எப்போது தொடங்கப்பட்டது?
1967
- ஜவ்வாது மலையின் பல பகுதிகளில் என்ன பாறைகளால் உருவானது?
நீல நிறம் சாம்பல் கிரானைட் பாறைகள்
- கல்வராயன் என்ற சொல் எந்த சொல்லிலிருந்து பெறப்பட்டது ?
தற்போதுள்ள பழங்குடியினரின் பண்டைய கால பெயரான கரலர் சொல்லிலிருந்து
- கல்வராயன் மலை, ஜவ்வாது மற்றும் சேர்வராயன் மலை களுடன் இணைந்து எந்த ஆற்று வடிநிலப் பகுதியை பிரிக்கிறது ?
காவிரி மற்றும் பாலாறு ஆகியவற்றின் ஆற்று வடிநிலப்பகுதி
- கல்வராயன் மலையின் உயரம் எவ்வளவு ?
600 மீட்டர் முதல் 1220 மீட்டர் வரை காணப்படுகிறது
- கல்ராயன் மலை எத்தனை பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது?
இரண்டு: வடபகுதிக் மலைப் மற்றும் தென் பகுதி
- வடபகுதி கல்வராயன் மலை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
சின்ன கல்வராயன்
- தென்பகுதி கல்வராயன் மலை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது ?
பெரிய கல்வராயன்
- சின்ன கல்வராயன் மலைப் பகுதியின் சராசரி உயரம் எவ்வளவு?
825 மீட்டர்
- பெரிய கல்வராயன் மலையின் சராசரி உயரம் எவ்வளவு?
1220 மீட்டர்
- சேர்வராயன் மலைத் தொடர் எங்கு அமைந்துள்ளது?
சேலம்
- சேர்வராயன் மலைத் தொடரின் உயரம் என்ன?
1200 முதல் 1620 வரை
- சேர்வராயன் மலையின் பெயர் காரணம் என்ன?
உள்ளூர் தெய்வமான ‘சேர்வராயன்’ என்ற பெயரில் இருந்து வந்தது
- சேர்வராயன் மலையில் அமைந்துள்ள உயரமான சிகரம் எது?
சோலைக்கரடு (1620 மீட்டர்)
- ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படுவது எது?
ஏற்காடு
- ஏற்காடு மலை வாழிடம் எந்த மலைத்தொடரில் அமைந்துள்ள?
சேர்வராயன் மலை
- சேர்வராயன் மலைத்தொடரின் உயரமான பகுதி எது ?
சேர்வராயன் கோவில் (1623 மீட்டர்)
- கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சிகரமான சேர்வராயன் மலையின் உயரம் என்ன?
1623 மீட்டர்
- கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சிகரமான பழமலையன் உயரம் என்ன?
1500 மீட்டர்
- கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சிகரமான உருகமலையின் உயரம் என்ன?
1486 மீட்டர்
- கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சிகரமான குட்டிராயன் மலையின் உயரம் என்ன?
1395 மீட்டர்
- கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சிகரமான முகனூர் மலையின் உயரம் என்ன?
1279 மீட்டர்
- கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சிகரமான வலச மலையின் உயரம் என்ன?
1034 மீட்டர்
- தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மலைகள் என்னென்ன?
மருதமலை, வெள்ளையங்கிரி மற்றும் ஆனைமலை
- தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள மலைகள் என்னென்ன?
தீர்த்தமலை, சித்தேரி மற்றும் வத்தல்மலை
- தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள மலைகள் என்னென்ன?
பழனி மலை மற்றும் கொடைக்கானல்
- தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள மலைகள் என்னென்ன?
சென்னிமலை மற்றும் சிவன்மலை
- தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மலைகள் என்னென்ன?
ஜவ்வாது ,ஏலகிரி மற்றும் இரத்தினமலை
- தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள மலைகள் என்னென்ன?
கொல்லிமலை
- தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மலைகள் என்னென்ன?
சேர்வராயன், கஞ்சமலை மற்றும் சுண்ணாம்புக் குன்றுகள்
- தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள மலைகள் என்னென்ன?
கல்வராயன் மற்றும் செஞ்சி மலை
- தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மலைகள் என்னென்ன?
பச்சை மலை
- தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள மலைகள் என்னென்ன?
மருந்துவாழ் மலை
- தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள மலைகள் என்னென்ன?
மகேந்திரகிரி மற்றும் அகத்தியர் மலை
- தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள மலைகள் என்னென்ன?
நீலகிரி மலை
- கொல்லிமலை எங்கு அமைந்துள்ள சிறிய மலைத்தொடராகும்?
நாமக்கல் மாவட்டம்
- கொல்லிமலை எத்தனை சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது?
2800
- கொல்லிமலையிஅ உயரமென்ன?
1300 மீட்டர்
- கொல்லி மலையில் அமைந்துள்ள முக்கியமான புனிதத் தலம் எது?
அரப்பளீஸ்வரர் கோயில்
- திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் உயரம் குறைந்த குன்றுத் தொடராகக் காணப்படும் மலை எது?
பச்சை மலை
- தமிழ் மொழியில் பச்சை என்றால் எதனை குறிக்கிறது?
பசுமை
- எந்த மலைகளில் பலாப்பழம் ஒரு குறிப்பிடத்தக்க வேளாண் பருவநிலை பொருளாக உள்ளது ?
பச்சமலை
- தமிழ்நாட்டில் உள்ள பீடபூமி எதற்கு இடையில் அமைந்துள்ளது ?
மேற்கு தொடர்ச்சி மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள்
- தமிழ்நாட்டிலுள்ள பீடபூமி முக்கோண வடிவத்தில் எத்தனை சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது?
60,000
- தமிழ்நாட்டின் பீடபூமி கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு உயரம் வரை வேறுபட்டுக் காணப்படுகிறது?
150 மீட்டர் முதல் 600 மீட்டர் வரை
- தமிழ்நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்திருக்கும் பீடபூமி எது?
பாரமஹால் பீடபூமி
- பாரமஹால் பீடபூமி எந்தப் பகுதியின் ஒரு பகுதியாகும்?
மைசூர் பீடபூமி
- பாரமஹால் பீடபூமியின் உயரம் எவ்வளவு ?
350 மீட்டர் முதல் 710 மீட்டர் வரை
- பாரமஹால் பீடபூமியில் என்ன மாவட்டங்கள் அமைந்துள்ளது?
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி
- நீலகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு இடையே அமைந்துள்ள பீடபூமி எது?
கோயம்புத்தூர் பீடபூமி
- கோயம்புத்தூர் பீடபூமியின் உயரம் எவ்வளவு ?
150 மீட்டர் முதல் 450 மீட்டர் வரை
- கோயம்புத்தூர் பீடபூமி என்ன மாவட்டங்களை உள்ளடக்கி உள்ளது?
சேலம் ,கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு
- கோயம்புத்தூர் பீடபூமியின் பரப்பளவு எவ்வளவு?
சுமார் 2560 சதுர கிலோமீட்டர்
- எந்த ஆறு கோயம்புத்தூர் பீடபூமி மைசூர் பீடபூமியில் இருந்து பிரிக்கிறது?
மோயர் ஆறு
- கோயம்புத்தூர் பீடபூமியில் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் எந்த ஆறுகள் இப்பீடபூமியில் பள்ளத்தாக்குகளை உருவாக்கியுள்ளன?
பவானி ,நொய்யல் மற்றும் அமராவதி ஆறுகள்
- சிகூர் பீடபூமி எங்கு உள்ளது?
நீலகிரி பகுதிகளிலுள்ளது (மலையிடைப் பீடபூமி)
- மதுரை பீடபூமி எங்கு அமைந்துள்ளது ?
மதுரை மாவட்டம்
- தமிழ்நாட்டில் காணப்படும் சமவெளிகள் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது?
இரண்டு :உள்நாட்டு சமவெளிகள் ,கடற்கரை சமவெளிகள்
- எந்த ஆறுகள் உள்நாட்டு சமவெளிகளை உருவாக்கியுள்ளது?
பாலாறு ,பெண்ணையாறு, காவிரி மற்றும் தாமிரபரணி
- காவிரி சமவெளியானது எந்த மாவட்டங்களில் பரவியுள்ளது ?
சேலம், ஈரோடு, கரூர் ,திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை ,தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம்
- தமிழ்நாட்டின் கடற்கரை சமவெளியானது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கோரமண்டல் அல்லது சோழ மண்டல சமவெளி
- ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கடற்கரையோரங்களில் உருவாக்கப்பட்ட மணல் குன்றுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தேரி
- கிழக்கு கடற்கரை சமவெளி பகுதியில் உள்ள எந்த இடத்தில் பவளப் பாறைகள் காணப்படுகின்றன?
மன்னார்வளைகுடா
- புகழ்பெற்ற தமிழகக் கடற்கரைகள் எவை ?
சென்னையிலுள்ள மெரினா மற்றும் எலியட் கடற்கரை ,கன்னியாகுமரியின் கோவளம் மற்றும் வெள்ளி கடற்கரை(சில்வர் கடற்கரை-கடலூர்)
- தமிழ்நாட்டின் பெரும்பாலான ஆறுகள் எங்கு உற்பத்தியாகி வங்காள விரிகுடாவில் கலக்கின்றன?
மேற்குத் தொடர்ச்சி மலைகள்
- தமிழ்நாட்டில் உள்ள வற்றாத ஆறு எது?
தாமிரபரணி
- காவேரி ஆறு எங்கு உற்பத்தி ஆகிறது?
கர்நாடக மாநிலத்தில் கூர்க் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பிரம்மகிரி குன்றுகளில் தலைக்காவிரி என்னும் இடத்தில்
- காவிரி தமிழ்நாட்டில் எவ்வளவு கிலோமீட்டர் நீளத்திற்கு பாய்கிறது?
416 கிலோமீட்டர்
- காவிரி ஆறு கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றுக்கு இடையே எவ்வளவு தூரத்திற்கு எல்லையாக உள்ளது?
64 கிலோமீட்டர்
- காவிரி ஆறு எந்த மாவட்டத்தில் ஒகேனக்கல் எனும் இடத்தில் நீர்வீழ்ச்சியை உருவாகிறது ?
தர்மபுரி மாவட்டம்
- காவிரி ஆற்றின் குறுக்கே சேலம் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள அணை எது?
மேட்டூர் அணை
- மேட்டூர் அணை வேறு எவ்வாறு அழைக்கப்படும் ?
ஸ்டான்லி நீர்த்தேக்கம்
- மேட்டூர் நீர் தேக்கத்தில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் என்ன ஆறு காவிரி ஆற்றின் துணையாறாக வலது கரையில் காவிரியுடன் இணைகிறது?
பவானி ஆற
- கரூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருமுக்கூடல் என்னும் இடத்தில் வலது கரையில் காவிரியின் துணை ஆறுகளாக என்ன ஆறுகள் இணைகின்றன?
அமராவதி மற்றும் நொய்யல் ஆறு
- அமராவதி மற்றும் நொய்யல் ஆறுகள் இணையும் பகுதியில் ஆற்றின் அகலம் அதிகமாக இருப்பதால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அகன்ற காவிரி
- காவிரி ஆறு எந்த மாவட்டத்தில் இரண்டு கிளைகளாக பிரிகிறது ?
திருச்சிராப்பள்ளி
- திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பிரியும் காவிரி ஆற்றின் வடகிளை எவ்வாறு அழைக்கப்படும்?
கொலேருன் அல்லது கொள்ளிடம்
- திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பிரியும் காவிரி ஆற்றின் தென்கிளை எவ்வாறு அழைக்கப்படும்?
காவிரி
- காவிரியின் எது கிளைகள் 16 கிலோமீட்டர் தொலைவிற்கு பாய்ந்த பின் மீண்டும் இணைந்து என்னதீவை உருவாக்குகின்றது ?
ஸ்ரீரங்கம் தீவு
- திருச்சியில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை எது?
கிராண்ட் அணைக்கட் என்றழைக்கப்படும் கல்லணை
- காவிரி டெல்டா பகுதிகளில் கிளை ஆறுகள் உண்டாகி உள்ள வலைப்பின்னல் அமைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
தென்னிந்தியாவின் தோட்டம்
- காவிரி எந்த இடத்தில் வங்கக்கடலில் கலக்கிறது ?
கடலூருக்கு தெற்கு
- தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தீவுகள் என்னென்ன ?
பாம்பன் ,முயல் தீவு, குருசடை ,நல்லதண்ணி தீவு, புள்ளிவாசல் தீவு ,ஸ்ரீரங்கம் ,உப்புத்தண்ணீர் தீவு ,தீவுத்திடல், காட்டுப்பள்ளி தீவு, குவிப்பில் தீவு மற்றும் விவேகானந்தர் நினைவு பாறை
- பாலாறு எங்கு உற்பத்தியாகிறது?
கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் தலகவராவிற்கு அப்பால்
- பாலாறு எவ்வளவு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பாய்கிறது?
17,871
- பாலாற்றின் பரப்பளவில் எத்தனை சதவீதம் தமிழகத்தில் உள்ளன ?
57%
- பாலாற்றின் துணையாறுகள் என்னென்ன?
பொன்னி, கவுண்டினியா நதி, மலட்டாறு , செய்யாறு மற்றும் கிளியாறு
- பாலாற்றின் மொத்த நீளம் எவ்வளவு ?
348 கிலோமீட்டர்
- பாலாற்றின் மொத்த நீளத்தில் தமிழகத்தில் எவ்வளவு தொலைவு பாய்கிறது?
222 கிலோ மீட்டர்
- பாலாறு தமிழ்நாட்டில் வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் வழியாக பாய்ந்து எந்த இடத்தின் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது ?
கூவத்தூர்
- தென்பெண்ணையாறு/ தென்பொருணையாறு எங்கு உற்பத்தியாகிறது?
கர்நாடகாவின் நந்தி துர்கா மலைகளின் கிழக்குச் சரிவுகளிலிருந்து
- தென்பெண்ணையாற்றின் வடி நிலப்பரப்பு எவ்வளவு?
சுமார் 16019 சதுர கிலோமீட்டர்
- தென்பெண்ணை ஆற்றின் வட்டி நிலப்பரப்பில் எத்தனை சதவீதம் தமிழ்நாட்டில் உள்ளது ?
77%
- தென்பெண்ணையாறு எந்தெந்த மாவட்டங்கள் வழியாக பாய்கிறது ?
கிருஷ்ணகிரி ,தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள்(247 கி.மீ நீளம்)
- எந்த இடத்தில் தென்பெண்ணையாறு கெடிலம் மற்றும் பெண்ணையாறு என இரண்டு கிளைகளாக பிரிகிறது?
திருக்கோவிலூர் அணைக்கட்டிற்கு அருகில்
- கெடிலம் ஆறு எந்த இடத்தில் வங்கக் கடலில் கலக்கிறது ?
கடலூருக்கு அருகில்
- பெண்ணையாறு எந்த இடத்தில் வங்க கடலில் கலக்கின்றது?
புதுச்சேரிக்கு அருகில்
- தென்பெண்ணை ஆற்றின் துணை ஆறுகள் என்னென்ன ?
சின்னாறு, மார்க்கண்ட நதி ,வாணியாறு மற்றும் பாம்பன் ஆறு
- தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே என்ன நீர்த்தேக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன?
கிருஷ்ணகிரி மற்றும் சாத்தனூர்
- பெண்ணையாறு எந்த சமய மக்களால் புனித நதியாகக் கருதப்படுகிறது?
இந்து சமயம்
- வைகை ஆறு எங்கு உற்பத்தியாகிறது?
தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள வருசநாட்டு குன்றின் கிழக்குச் சரிவில்
- வைகை ஆற்றின் வடிநிலப் பரப்பளவு எவ்வளவு?
7741 சதுர கிலோமீட்டர்
- வைகை ஆறு எந்த மாவட்டங்களின் வழியாக பாய்கிறது?
மதுரை ,சிவகங்கை ,மற்றும் இராமநாதபுரம்
- வைகை ஆற்றின் மொத்த நீளம் எவ்வளவு?
258 கிலோமீட்டர்
- வைகை எந்த இடத்தில் கலக்கிறது?
ராமநாதபுரம் அருகிலுள்ள பாக் நீர் சந்தியில்
- தாமிரபரணி என்பதன் பெயர் காரணம் என்ன?
தாமிரம் (காப்பர்), மற்றும் வருணி (சிற்றோடைகள்)
- தாமிரபரணி நீர் என்ன நிறத்தில் காணப்படும்?
செந்நிறம்
- தாமிரபரணி எங்கு தோன்றுகிறது?
அம்பாசமுத்திரம் வட்டம் பாபநாசத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் பொதிகை மலை முகடுகள்
- எந்த ஆற்றின் தோற்றம் அகத்திய முனிவரோடு தொடர்புடையதாகக் கருதப்படுகிறது?
தாமிரபரணி ஆறு
- தாமிரபரணி ஆறு எந்த மாவட்டங்களின் வழியாக பாய்கிறது?
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள்
- தாமிரபரணி ஆற்றின் முக்கிய துணையாறுகள் என்னென்ன ?
காரையாறு ,சேர்வலாறு ,மணிமுத்தாறு ,கடனா நதி ,பச்சையாறு, சிற்றாறு மற்றும் இராமநதி
- ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள மாவட்டம் எது ?
தர்மபுரி
- கல்யாண தீர்த்தம் மற்றும் குற்றாலம் நீர்வீழ்ச்சிகள் அமைந்துள்ள மாவட்டம் எது ?
திருநெல்வேலி
- கும்பக்கரை மற்றும் சுருளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ள மாவட்டம் எது?
தேனி
- ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி அமைந்துள்ள மாவட்டம் எது?
நாமக்கல்
- கேத்தரின் மற்றும் பைக்காரா நீர்வீழ்ச்சி அமைந்துள்ள மாவட்டம் எது ?
நீலகிரி
- கிள்ளியூர் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள மாவட்டம் எது?
சேலம்
- ஐயனார் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள இடம் எது?
விருதுநகர்
- வைதேகி, செங்குபதி ,சிறுவாணி மற்றும் கோவை குற்றாலம் ஆகிய நீர்வீழ்ச்சிகள் அமைந்துள்ள மாவட்டம் எது?
கோயம்புத்தூர்
- திருமூர்த்தி நீர்வீழ்ச்சி அமைந்துள்ள மாவட்டம் எது?
திருப்பூர்
- குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சி அமைந்துள்ள மாவட்டம் எது?
மதுரை
- திருப்பரப்பு, காளிகேசம் ,உலக்கை மற்றும் வட்டபாறை நீர்வீழ்ச்சிகள் அமைந்துள்ள மாவட்டம் எது?
கன்னியாகுமரி
- இந்தியாவை இரு சம பாகங்களாகப் பிரிக்கும் ரேகை எது ?
கடகரேகை
- தமிழ்நாடு எந்த ரேகைக்கு தெற்கே அமைந்துள்ளது?
கடகரேகை
- தமிழகம் என்ன காலநிலை மண்டலத்தில் அமைந்துள்ளது?
வெப்பமண்டல காலநிலை
- தமிழ்நாட்டின் வெப்பநிலை அளவு எவ்வளவு ?
18°C முதல் 43 °C வரை
- தமிழ் நாட்டின் சராசரி மழையளவு என்ன?
958.5 மில்லிமீட்டர்
- வெப்ப மண்டல கடல் ஆதிக்க காலநிலை காலநிலை எந்த பகுதியில் காணப்படுகிறது ?
கிழக்கு கடற்கரை பகுதி
- மலைப்பாங்கான காலநிலை எந்த பகுதியில் காணப்படுகிறது ?
மாநிலத்தின் மேற்குப்பகுதி
- தமிழ்நாட்டில் குளிர்காலத்தின் காலம் என்ன ?
ஜனவரி முதல் பிப்ரவரி வரை
- தமிழ்நாட்டில் கோடை காலத்தின் காலம் என்ன?
மார்ச் முதல் மே வரை
- தமிழ் நாட்டின் தென்மேற்கு பருவக்காற்று காலம் என்ன ?
ஜூன் முதல் செப்டம்பர் வரை
- தமிழ் நாட்டின் வடகிழக்கு பருவக்காற்று காலம் என்ன?
அக்டோபர் முதல் டிசம்பர் வரை
- எந்த மாதங்களில் சூரியனின் செங்குத்து கதிர்கள் பூமத்திய ரேகைக்கு மகர ரேகைக்கும் இடையே விழுகிறது?
ஜனவரி மற்றும் பிப்ரவரி
- தமிழகத்தில் குளிர்கால வெப்பநிலை என்ன அளவில் மாறுபடுகிறது?
15°C முதல் 25°C வரை
- சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு எந்த மாதங்களில் நிகழ்வதால் சூரியனின் செங்குத்து கதிர்கள் தென்னிந்தியாவில் விழுகிறது ?
மார்ச், ஏப்ரல் மற்றும் மே
- தமிழகத்தில் கோடைகால வெப்ப நிலை என்ன அளவில் மாறுபடுகிறது?
30°C முதல் 40 °C வரை
- தென்மேற்கு பருவ காலத்தில் கோயம்புத்தூர் பீடபூமி சராசரியாக எவ்வளவு மழையைப் பெறுகிறது ?
50 சென்டிமீட்டர்
- தென்மேற்கு பருவ காலத்தில் கன்னியாகுமரி திருநெல்வேலி மற்றும் நீலகிரி மாவட்டங்கள் எவ்வளவு மழையைப் பெறுகின்றன?
50 முதல் 100 சென்டிமீட்டர் வரை
- பூமியின் சுழற்சியின் காரணமாக நகரும் அல்லது இயங்கும் பொருட்களை வட அரைக்கோளத்தில் வலது புறமாகவும், தென் அரைக்கோளத்தில் வலது புறமாகவும் திசையை மாற்றி அமைக்கும் விசைக்கு பெயர் என்ன?
கொரியாலிஸ் விசை
- வடகிழக்கு பருவக்காற்று எந்த மாதம் வரை நீடிக்கிறது?
அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் முதல் பாதி வரை
- வட கிழக்கு பருவ காற்று காலத்தில் சூரியன் எந்த ரேகையில் செல்லும்?
கடக ரேகையில் இருந்து மகர ரேகைக்கு
- வட இந்தியாவில் இருந்து வங்கக் கடலை நோக்கி வீசும் காற்று கோரியாலிஸ் விசைக் காரணமாக திசை திருப்பப்பட்டு வடகிழக்கு திசையில் இருந்து வீசுவதால் இக்காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வடகிழக்கு பருவக்காற்று
- வடகிழக்கு பருவக்காற்றானது திரும்பி வரும் தென்மேற்கு பருவக்காற்றின் ஒரு பகுதியாதலால் இக்காற்று வேறு எவ்வாறு அழைக்கப்படும் ?
பின்னடையும் பருவக்காற்று
- தமிழ்நாட்டின் வருடாந்திர மழை அளவில் எத்தனை சதவீதம் வடகிழக்கு பருவக்காற்று காலத்தில் கிடைக்கிறது?
48%
- வடகிழக்கு பருவக்காற்று காலத்தில் கடற்கரை மாவட்டங்கள் எத்தனை சதவீதம் & உள் மாவட்டங்கள் எத்தனை சதவீதமும் வருடாந்திர மழை அளவை பெறுகின்றன?
கடற்கரை மாவட்டங்கள் 60% ,,உள் மாவட்டங்கள் 40 முதல் 50 சதவீதம்
- தமிழ்நாட்டில் எத்தனை சதவீத மழை அளவு வெப்ப மண்டல சூறாவளிகள் மூலம் கிடைக்கிறது ?
50%
- வெப்பமண்டல சூறாவளி பருவத்தில் கிழக்கு கடற்கரை பகுதிகள் எவ்வளவு மழையைப் பெறுகின்றன?
100 முதல் 200 சென்டிமீட்டர் வரை (மத்திய மற்றும் வட மேற்கு தமிழகம் 50 முதல் 100 சென்டிமீட்டர் வரை)
- தமிழ்நாட்டின் மிக அதிக மழை பெறும் பகுதியாக உள்ள இடம் எது?
வால்பாறைக்கு அருகிலுள்ள சின்னக்கல்லார்
- சின்னக்கல்லார் இந்தியாவின் எத்தனையாவது மிக அதிக மழை பெறும் பகுதியாகும் ?
மூன்றாவது
- மண் எந்த வள வகையைச் சார்ந்தது ?
புதுப்பிக்க இயலாத வளம்
- இரண்டு அங்குல வளமான மண் உருவாக எத்தனை ஆண்டுகள் ஆகின்றன?
300 முதல் 1000 ஆண்டுகள்
- தமிழ்நாட்டில் காணப்படும் மண்ணை அதன் தன்மைகள் கொண்டு எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
ஐந்து : வண்டல் மண் ,கரிசல் மண் ,செம்மண், சரளை மண் மற்றும் உவர் மண்
- வண்டல் மண் என்ன தாதுக்களை கொண்டுள்ளது ?
சுண்ணாம்பு சத்து, பொட்டாசியம் ,மெக்னீசியம், நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் அமிலம்
- வண்டல் மண்ணில் எது குறைவாக உள்ளன?
நைட்ரஜன் மற்றும் இலைமக்குகள்
- வண்டல் மண்ணில் என்ன பயிர்கள் பயிரிடப்படுகின்றன?
நெல் ,கரும்பு ,வாழை மற்றும் மஞ்சள்
- வண்டல் மண் தமிழ்நாட்டில் எந்த பகுதியில் காணப்படுகிறது ?
தஞ்சாவூர், திருவாரூர் ,நாகப்பட்டினம், விழுப்புரம் ,கடலூர் ,திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி
- தீப்பாறைகள் சிதைவடைவதன் மூலம் என்ன மண் உருவாகிறது?
கரிசல் மண்
- கரிசல் மண் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ரீகர் மண்
- எந்த மண்ணில் பருத்தி நன்கு வளர்வதால் பருத்திமண் என்றும் அழைக்கப்படுகிறது?
கரிசல்மண்
- கரிசல் மண் எந்த காலநிலையில் உருவாகிறது ?
தக்காண பீடபூமி பகுதிகளில் அரை வறண்ட காலநிலை
- கரிசல் மண்ணில் எந்த சத்து குறைவாக உள்ளது?
பாஸ்பாரிக் அமிலம் ஹைட்ரஜன் மற்றும் உயிரின பொருட்களின் சத்துக்கள்
- கரிசல் மண்ணில் எந்த சத்து அதிகமாக உள்ளது?
கால்சியம் மெக்னீசியம் கார்பனேட் பொட்டாசியம் மற்றும் சுண்ணாம்பு சத்துக்கள்
- கரிசல் மண்ணில் பயிரிடப்படும் பயிர்கள் என்னென்ன?
பருத்தி, கம்பு சோளம் மற்றும் கால்நடை தீவனங்கள்
- கரிசல்மண் எந்த பகுதிகளில் காணப்படுகிறது?
கோயம்புத்தூர் ,மதுரை, விருதுநகர் ,திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி
- தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவில் எத்தனை பங்கு செம்மண் பரவியுள்ளது?
சுமார் மூன்றில் இரண்டு பங்கு
- செம்மண் எங்கு காணப்படுகிறது?
மாநிலத்தின் மத்திய மாவட்டங்களில் காணப்படுகிறது
- நுண் துகள்களை உடையதால் எந்த மண் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும் தன்மையைப் பெற்றிருக்கவில்லை?
செம்மண்
- செம்மண் சிகப்பு நிறத்துடன் காணப்படுவதற்கான காரணம் என்ன?
இரும்பு ஆக்சைடு அதிக அளவில் காணப்படுவதால்
- செம்மண்ணில் குறைவாக காணப்படும் சத்துக்கள் என்னென்ன?
நைட்ரஜன் ,பாஸ்பரஸ்,அமிலம் மற்றும் இலைமக்குகள்
- செம்மண்ணில் பயிரிடப்படும் முக்கிய பயிர்கள் என்னென்ன?
நெல், கேழ்வரகு ,புகையிலை மற்றும் காய்கறிகள்
- செம்மண் எந்த பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது?
சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம்
- மண்ணில் கரைந்துள்ள சத்துக்கள் அடித்து செல்ல பெறுவதால் உருவாகும் மண் எது?
சரளை மண்
- வளமற்ற மண் என அழைக்கப்படுவது எது?
சரளை மண்
- சரளை மண் எந்த மாவட்டங்களில் காணப்படுகிறது ?
காஞ்சிபுரம்,திருவள்ளூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களின் சில பகுதிகள் நீலகிரி மலையின் சில பகுதிகள்
- சரளை மண்ணில் எந்த பயிர்கள் பயிரிடப்படுகின்றன ?
நெல்,இஞ்சி, மிளகு மற்றும் வாழை (தேயிலை மற்றும் காபி பயிரிடுவதற்கு ஏற்றதாக உள்ளது)
- தமிழ்நாட்டின் சோழமண்டல கடற்கரை பகுதிகளில் மட்டும் காணப்படும் மண் வகை எது?
உவர்மண்(வேதாரண்யம் பகுதிகளில் காணப்படுகிறது)
- மண்ணரிப்பின் முக்கிய காரணங்கள் என்னென்ன ?
காடுகள் அழிப்பு ,அதிக மேய்ப்பு ,நகரமயமாக்கம், அதிக மழை பொழிவு
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்த பாலைவனமாதல் நிலவரைபடத்தின்படி மொத்த நிலப்பரப்பில் சுமார் எத்தனை சதவீதம் நிலப்பகுதிகள் பாலைவனமாதல் மற்றும் நில சீரழிவுடையதாதல் என்ற இரு நிலைகள் கண்டறியப்பட்டுள்ளது?
12%
- பாலைவனமாதலால் பாதிக்கப்படும் பகுதிகள் என்னென்ன?
தேனி, நீலகிரி, கன்னியாகுமரி
- எந்தப் பகுதிகளில் சுமார் 12000 ஹெக்டர் நிலம் காற்றடி மணல் பதிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளது?
தேனி மற்றும் ராஜபாளையம்
- 1988 தேசிய வன கொள்கையின்படி புவிப்பரப்பில் குறைந்தபட்சம் எத்தனை பகுதி காடுகளால் சூழப்பட்ட இருக்கவேண்டும்?
மூன்றில் ஒரு பகுதி
- 2017 ஆம் ஆண்டு மாநில வன அறிக்கையின்படி தமிழ்நாட்டில் உள்ள காடுகளின் பரப்பளவு எவ்வளவு ?
26.281 சதுர கிலோ மீட்டர்கள்
- தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவில் காடுகளின் சதவீதம் எவ்வளவு?
20.21 சதவீதம்
- வெப்பமண்டல பசுமைமாறா காடுகள் எங்கு காணப்படுகிறது?
திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவுகளில்
- தமிழகத்தில் உள்ள வெப்ப மண்டல பசுமை மாறா காடுகளில் காணப்படும் முக்கிய மரங்கள் என்னென்ன?
இலவங்க மரம் ,மலபார்,கருங்காலி மரம் ,பனாசமரம்,ஜாவாபிளம்,ஜமுன், பலாமருது,அயனி,கிராப் மிர்ட்டல் போன்றவைகள்
- அரை பசுமைமாறா காடுகள் எங்கு காணப்படுகிறது?
உப அயன மண்டல காலநிலை நிலவும் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காணப்படுகிறது(சேர்வராயன் மலை ,கொல்லி மலை, பச்சை மலை போன்றவைகள்)
- அரை பசுமைமாறா காடுகள் காணப்படும் முக்கிய மர வகைகள் என்னென்ன?
இந்திய மகோகனி, குரங்கு தேக்கு,உல்லி காசியா,பலா மற்றும் மா உள்ளிட்ட மரங்கள்
- தமிழ்நாட்டில் மித வெப்ப மண்டல மழை காடுகள் எங்கு காணப்படுகிறது ?
ஆனைமலை ,நீலகிரி மற்றும் பழனி மலைகளில் சுமார் 1000 மீட்டர் உயரமான பகுதிகளிலும் பள்ளத்தாக்குகளிலும் காணப்படுகிறது
- மித வெப்ப மண்டல மழை காடுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சோலாஸ்
- மித வெப்பமண்டல மழைக்காடுகளில் என்ன மரங்கள் காணப்படுகிறது?
நீலகிரி, சாம்பா, வெள்ளைலிட்சா, ரோஸ் ஆப்பிள் போன்ற மரங்கள்
- வெப்பமண்டல இலையுதிர் காடுகளில் உள்ள மரங்கள் எவ்வளவு உயரம் வரை வளரக்கூடியவை?
30 மீட்டர்
- வெப்பமண்டல இலையுதிர் காடுகளில் உள்ள மரங்களின் வகைகள் என்னென்ன ?
பருத்திப்பட்டு மரம், இலவம்,கடம்பா,டாகத்தேக்கு,வாகை, வெக்காளி மரம் மற்றும் சிரஸ்
- எந்த வகை தாவரங்கள் உவர் நிலங்கள் மற்றும் உவர் நீரில் வாழும் தன்மையுடையவை ?
சதுப்பு நில தாவரங்கள்
- சதுப்பு நிலங்களில் காணப்படும் தாவரங்கள் என்னென்ன?
ஆசிய மாங்குரோவ் ,வெள்ளை மாங்குரோவ் ,காட்டுமல்லி இந்தியன் ப்ரிவட் மரங்கள் போன்றவைகள்
- தமிழகத்தில் எந்த பகுதிகளில் சதுப்புநிலக் காடுகள் காணப்படுகின்றன?
பிச்சாவரம் ,வேதாரண்யம், முத்துப்பேட்டை சத்திரம் மற்றும் தூத்துக்குடி
- பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகள் எங்கு காணப்படுகிறது ?
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே
- பிச்சாவரம் காடுகளின் பரப்பளவு எவ்வளவு?
1100 ஹெக்டர் 16 சதுர கிலோமீட்டர்
- உலகின் இரண்டாவது மிகப் பெரிய சதுப்பு நிலக்காடுகள் எது?
பிச்சாவரம் சதுப்பு நிலக்காடு
- பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகள் என்ன தாவர வகைகளைக் கொண்டது?
அவிசினியா மற்றும் ரைசோபோரா போன்ற தாவர இனங்கள்
- தமிழ்நாட்டில் மிகக் குறைவான மழை பெறும் பகுதிகளில் என்ன வகை காடுகள் காணப்படுகிறது?
வெப்பமண்டல முட்புதர் காடுகள்
- வெப்பமண்டல முட்புதர் காடுகளில் காணப்படும் முக்கிய மரங்கள் என்னென்ன?
பனை ,வேம்பு, வெள்ளைக்கருவேலம் ,சீமைகருவேலம்
- வெப்பமண்டல முட்புதர் காடுகள் எந்தப் பகுதியில் காணப்படுகின்றன?
தர்மபுரி ,இராமநாதபுரம், விருதுநகர் மற்றும் பிற மாவட்டங்களின் சில பகுதிகள்
- தமிழ்நாட்டில் அதிக காடுகளைக் கொண்ட மாவட்டங்கள் எது?
தர்மபுரி ( 3280 சதுர கிலோமீட்டர்)(நடப்பு நிகழ்வுகளில் சரிபார்த்துக் கொள்ளவும்)
- தமிழ்நாட்டில் உள்ள உயிர்கோள பெட்டகங்கள் என்னென்ன?
நீலகிரி உயிர்க்கோள பெட்டகம், மன்னார் வளைகுடா உயிர்கோள பெட்டகம் , அகத்தியர் மலை உயிர்கோளப் பெட்டகம்
- முதுமலை வனவிலங்கு சரணாலயம் எங்கு எப்போது நிறுவப்பட்டது ?
1940 ,நீலகிரி
- முண்டந்துறை வனவிலங்கு சரணாலயம் எப்போது எங்கு நிறுவப்பட்டது ?
1962,திருநெல்வேலி
- கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் எங்கு எப்போது நிறுவப்பட்டது?
1967 ,நாகப்பட்டினம்
- இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் எங்கு எப்போது நிறுவப்பட்டது?
1976 ,கோயம்புத்தூர்
- களக்காடு வனவிலங்கு சரணாலயம் எங்கு எப்போது நிறுவப்பட்டது?
1976 ,திருநெல்வேலி
- வளநாடு கருப்பு மான்கள் சரணாலயம் எங்கு எப்போது நிறுவப்பட்டது?
1987, தூத்துக்குடி
- மலை அணில் வனவிலங்கு சரணாலயம் எங்கு எப்போது நிறுவப்பட்டது?
1988, விருதுநகர்
- கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயம் எங்கு எப்போது நிறுவப்பட்டது ?
2007 ,கன்னியாகுமரி
- சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயம் எங்கு எப்போது நிறுவப்பட்டது ?
2008, ஈரோடு
- மேகமலை வனவிலங்கு சரணாலயம் எங்கு எப்போது நிறுவப்பட்டது?
2009 ,தேனி மற்றும் மதுரை
- கோடியக்கரை வன விலங்கு பாதுகாப்பகம் மண்டலம் (அ) மண்டலம்(ஆ) எங்கு எப்போது நிறுவப்பட்டது?
2013 ,தஞ்சாவூர் ,திருவாரூர் ,நாகப்பட்டினம்
- கொடைக்கானல் வன விலங்கு சரணாலயம் எங்கு எப்போது நிறுவப்பட்டது?
2013 ,திண்டுக்கல் மற்றும் தேனி
- கங்கைகொண்டான் புள்ளிமான் சரணாலயம் எங்கு எப்போது நிறுவப்பட்டது?
2013 ,திருநெல்வேலி
- வட காவிரி வனவிலங்கு சரணாலயம் எங்கு எப்போது நிறுவப்பட்டது?
2014 ,தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி
- நெல்லை வன விலங்கு சரணாலயம் எங்கு எப்போது நிறுவப்பட்டது?
2015 ,திருநெல்வேலி
- வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் எங்கு எப்போது நிறுவப்பட்டது?
1977, சிவகங்கை
- பழவேற்காடு ஏரி பறவைகள் சரணாலயம் எங்கு எப்போது நிறுவப்பட்டது?
1980, திருவள்ளூர்
- கரிக்கிளி பறவைகள் சரணாலயம் எங்கு எப்போது நிறுவப்பட்டது?
1989, காஞ்சிபுரம்
- கஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம் எப்போது எங்கு நிறுவப்பட்டது?
1989,இராமநாதபுரம்
- சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் எங்கு எப்போது நிறுவப்பட்டது?
1989,இராமநாதபுரம்
- கூத்தன்குளம், கூடங்குளம் பறவைகள் சரணாலயம் எங்கு எப்போது நிறுவப்பட்டது?
1994 ,திருநெல்வேலி
- வெள்ளோடு பறவைகள் சரணாலயம் எங்கு எப்போது நிறுவப்பட்டது ?
1997 ,ஈரோடு
- வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் எங்கு எப்போது நிறுவப்பட்டது?
1998, காஞ்சிபுரம்
- உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் எங்கு எப்போது நிறுவப்பட்டது?
1998 ,திருவாரூர்
- மேலச்செல்வனூர்- கீழ செல்வனூர் பறவைகள் சரணாலயம் எங்கு எப்போது நிறுவப்பட்டது?
1998,இராமநாதபுரம்
- வடுவூர் பறவைகள் சரணாலயம் எங்கு எப்போது நிறுவப்பட்டது?
1999, திருவாரூர்
- காரைவெட்டி பறவைகள் சரணாலயம் எப்போது எங்கு நிறுவப்பட்டது?
2000, அரியலூர்
- தீர்த்தங்கள் பறவைகள் சரணாலயம் எங்கு எப்போது நிறுவப்பட்டது?
2010,ராமநாதபுரம்
- சக்கரக்கோட்டை ஏரி பறவைகள் சரணாலயம் எங்கு எப்போது நிறுவப்பட்டது?
2012 ,இராமநாதபுரம்
- ஊசுடு ஏரி பறவைகள் சரணாலயம் எங்கு எப்போது நிறுவப்பட்டது?
2015, விழுப்புரம்
- “அபாயக் குறைப்பு என்பது பேரிடருக்கான காரணங்களை முறையாக கண்டறிந்து பேரிடர்களின் போது அதன் தாக்கங்களை குறைப்பதாகும் “என்பது யாருடைய கூற்று ?
ஐக்கிய நாடுகள் சபையின் அபாய நேர்வு குறைப்பு அமைப்பு
- தமிழ்நாட்டின் மொத்த நீர் வளம் எவ்வளவாக மதிப்பிடப்பட்டுள்ளது?
1587 மில்லியன் கன அடி
- தமிழகத்தின் மொத்த நீர் தேவை எவ்வளவு அடியாக கணக்கிடப்பட்டுள்ளது?
1894 மில்லியன் கன அடி
- தமிழ்நாட்டின் நீர் பற்றாக்குறை எத்தனை சதவீதமாக உள்ளது?
19.3 சதவீதம்
- தமிழ்நாட்டிலுள்ள எத்தனை சதவீத நிலப்பகுதி வறட்சிக்கு உள்ளாகும் பகுதிகளாக உள்ளது ?
64%
10TH GEOGRAPHY STUDY NOTES |தமிழ்நாடு இயற்கை பிரிவுகள்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services