- சமச்சீர் காலநிலை என்பது வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
பிரிட்டிஷ் கால நிலை
- இந்தியா எந்த அட்சரேகையில் அமைந்துள்ளது?
8°4′ வட அட்சம் முதல் 37°6′ வட அட்சம் வரை
- எந்த ரேகை இந்தியாவை இரு சம பங்காக பிரிக்கிறது?
கடகரேகை
- புவிப்பரப்பில் இருந்து ஒவ்வொரு 1000 மீட்டர் உயரத்திற்கும் எவ்வளவு வெப்பநிலை குறைகிறது ?
6.5 டிகிரி செல்சியஸ்
- ஒவ்வொரு 1000 மீட்டர் உயரத்திற்கு குறையும் வெப்ப நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இயல்பு வெப்ப வீழ்ச்சி
- இந்தியாவின் கால நிலையை பாதிக்கும் மிக முக்கிய காரணி எது ?
பருவக்காற்று
- ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள வளிமண்டலத்தின் தன்மையை குறிக்கும் சொல் எது?
வானிலை
- ஒரு குறிப்பிட்ட பகுதியில் சுமார் 30 முதல் 35 ஆண்டு சராசரி வானிலையை குறிக்கும் சொல் எது ?
காலநிலை
- வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் குறுகிய பகுதிகளில் வேகமாக நகரும் காற்றுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஜெட் காற்றுகள்
- ஜெட் காற்றோட்ட கோட்பாட்டின்படி உப அயன மேலை காற்றோட்டம் வடபெரும் சமவெளிகளில் இருந்து திபெத்திய பீடபூமியை நோக்கி இடம் பெயர்வதால் என்ன காற்று உருவாகின்றது?
தென்மேற்கு பருவக்காற்று
- மான்சூன் என்ற சொல் எந்த சொல்லிலிருந்து பெறப்பட்டது?
மௌசிம் என்ற அரபுச் சொல்
- மௌசிம் என்ற அரபுச் சொல்லின் பொருள் என்ன ?
பருவகாலம்
- பூமியிலேயே மிக வறண்ட பகுதி எது?
அட்டகாமா பாலைவனம்
- இந்திய காலநிலையில் குளிர்காலம் எந்த மாதம் முதல் எந்த மாதம் வரை உள்ளது?
ஜனவரி முதல் பிப்ரவரி வரை
- இந்திய காலநிலையில் கோடை காலம் எந்த மாதம் முதல் எந்த மாதம் வரை உள்ளது?
மார்ச் முதல் மே வரை
- இந்திய காலநிலையில் தென்மேற்கு பருவக்காற்று காலம் அல்லது மழை காலம் என்பது எப்போது?
ஜூன் முதல் செப்டம்பர் வரை
- இந்திய கால நிலையில் வடகிழக்கு பருவக்காற்று காலம் என்பது எப்போது?
அக்டோபர் முதல் டிசம்பர் வரை
- எந்த இடியுடன் கூடிய மழையானது கேரளா மற்றும் கர்நாடக கடற்கரைப் பகுதிகளில் விளையும் மாங்காய்கள் விரைவில் முதிர்வதற்கு உதவுகிறது?
மாஞ்சாரல்
- ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வடமேற்கு திசையில் வீசும் காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நார்வெஸ்டர் அல்லது கால் பைசாகி
- எந்த உலகளாவிய காலநிலை நிகழ்வானது தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது ?
எல்நினோ
- தென்மேற்கு பருவக்காற்று தொடங்குவதற்கு முன் வட இந்தியாவில் வெப்பநிலையானது எவ்வளவு வரை உயர்கிறது?
46 டிகிரி செல்சியஸ்
- தென்மேற்கு பருவக்காற்றின் இடி மற்றும் மின்னலுடன் கூடிய துவக்கம் தென்னிந்தியாவில் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
பருவமழை வெடிப்பு
- தென்மேற்கு பருவக்காற்று இந்தியாவின் தென் முனையை அடையும் பொழுது எத்தனை கிளைகளாக பிரிகிறது?
இரண்டு அரபிக் கடல் வழி கிளை மற்றும் வங்காள விரிகுடா வழி கிளை
- தென்மேற்கு பருவக்காற்றின் அரபிக்கடல் கிளை வடக்கு நோக்கி நகர்ந்து எந்த மலையால் தடுக்கப்பட்டு வட இந்தியா முழுவதும் கனமழை தோற்றுவிக்கின்றது ?
இமயமலை
- தென்மேற்கு பருவக்காற்றின் வங்காள விரிகுடா கிளை எந்த மலைகளால் தடுக்கப்பட்டு மேகாலயாவில் உள்ள மௌசின்ராமில் மிக கனமழை தருகிறது?
காசி காரோ ஜெயந்தியா குன்றுகள்
- தென்மேற்குப் பருவக்காற்றால் இந்தியாவின் ஒட்டுமொத்த மழைப்பொழிவில் இந்தியா பெரும் மழை பொழிவு எவ்வளவு ?
75%
- உலகில் மிக அதிக அளவு மழை பெறும் பகுதி எது?
மௌசின்ராம் மேகாலயா 1141 செ.மீ
- இந்தியாவில் ஆண்டு சராசரி மழையளவு என்ன?
118 செ.மீ
- இந்தியாவின் எந்தப் பகுதியில் 200 சென்டி மீட்டருக்கு அதிகமான மழை பொழிவை பெறுகின்றன ?
மேற்கு கடற்கரை, மேகாலயாவின் தென்பகுதி ,திரிபுரா ,நாகாலாந்து ,அருணாச்சலபிரதேசம்
- நேரடியாகவோ மறைமுகமாகவோ மனித உதவி இல்லாமல் இயற்கையாக வளர்ந்துள்ள தாவர இனத்தை குறிக்கும் சொல் எது?
இயற்கைத் தாவரம்
- அயன மண்டல பசுமை மாறா காடுகளில் ஆண்டு மழை பொழிவு எத்தனை சென்டி மீட்டருக்கு மேல் இருக்கும்?
200
- அயன மண்டல பசுமை மாறாக் காடுகளின் வெப்பநிலை எவ்வளவு அதிகமாக இருக்கும்?
22 டிகிரி செல்சியஸ்
- அயன மண்டல பசுமை மாறாக் காடுகளின் ஈரப்பதம் எத்தனை சதவீதத்திற்கு மேல் உள்ள பகுதிகளில் இவ்வகை காடுகள் காணப்படுகின்றன?
70 சதவீதம்
- அயன மண்டல பசுமை மாறாக் காடுகள் காணப்படும் பகுதிகள் என்னென்ன ?
கேரளா கர்நாடகா மகாராஷ்டிரா அந்தமான் நிக்கோபார் தீவுகள் அசாம் மேற்கு வங்கம் நாகாலாந்து திரிபுரா மிசோரம் மணிப்பூர் மற்றும் மேகாலயா
- அயன மண்டல பசுமை மாறா காடுகளில் காணப்படும் மரங்கள் என்னென்ன?
இரப்பர் எபனி,ரோஸ் மரம், தென்னை, மூங்கில் ,சின்கோனா, சிடார்
- அயன மண்டல இலையுதிர் காடுகள் பெறும் ஆண்டு சராசரி மழைப்பொழிவு என்ன?
100 சென்டிமீட்டர் முதல் 200 சென்டிமீட்டர் வரை
- அயன மண்டல இலையுதிர் காடுகளில் சராசரி வெப்பநிலை எவ்வளவு?
27 டிகிரி செல்சியஸ்
- அயன மண்டலக் இலையுதிர்க் காடுகளில் காணப்படும் சராசரி ஒப்பு ஈரப்பதம் எவ்வளவு?
60 முதல் 70%
- அயன மண்டல இலையுதிர் காடுகளில் காணப்படும் முக்கிய மரங்கள் எது ?
தேக்கு மற்றும் சால்
- அயன மண்டல இலையுதிர் காடுகளில் காணப்படும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரங்கள் எவை?
சந்தனமரம் ,ரோஸ் மரம்,குசம்,மாகு,பாலாங்,ஆம்லா, மூங்கில் ,சிசம் மற்றும் படாக்
- அயனமண்டல வறண்ட காடுகள் பெரும் ஆண்டு மழை பொழிவு எவ்வளவு?
50 சென்டிமீட்டர் முதல் 100 சென்டிமீட்டர் வரை
- அயன மண்டல வறண்ட காடுகள் எந்தவகை காடு?
இடைநிலை வகை காடு
- அயனமண்டல வறண்ட காடுகளில் காணப்படும் முக்கிய மரவகைகள் எது?
இலுப்பை ,ஆலமரம் ,ஆவாரம் பூ மரம் ,பலா ,மஞ்சக்கடம்பு ,கருவேலம் மற்றும் மூங்கில்
- பாலைவன மற்றும் அரைப் பாலைவன தாவரங்களை உடைய காடுகளை எவ்வாறு அழைப்பார்கள்?
முட்புதர் காடுகள்
- பாலைவன மற்றும் அரை பாலைவனத் தாவரங்களின் காடுகள் பெறும் ஆண்டு சராசரி மழைப்பொழிவு என்ன?
50 சென்டிமீட்டருக்கும் குறைவாக
- பாலைவன மற்றும் அரை பாலைவன காடுகளின் முக்கிய மரங்கள் என்னென்ன?
கருவேலம் ,சீமை கருவேலமரம் ,ஈச்சமரம்
- கிழக்கு இமயமலை காடுகள் பெறும் மழை பொழிவு எவ்வளவு ?
200 சென்டிமீட்டருக்கும் அதிகம்
- கிழக்கு இமயமலைக் காடுகள் எவ்வளவு உயரம் உள்ள பகுதிகளில் காணப்படும்?
1,200 -2400 மீ
- கிழக்கு இமயமலைக் காடுகளில் 1200-2400மீ உயரத்தில் காணப்படும் மரங்கள் என்னென்ன?
சால்,ஓக்,லாரஸ்,அமுரா, செஸ்ட்நட், சின்னமன்
- கிழக்கு இமயமலைக் காடுகளில் 2400மீ-3600மீ உயரத்தில் காணப்படும் மரங்கள் என்னென்ன?
ஓக்,பிர்ச்,சில்வர்,பெர்,பைன்,ஸ்புரூஸ்,ஜுனிப்பர்
- மேற்கு இமயமலைக் காடுகளில் 900 மீட்டர் உயரம் உள்ள பகுதிகளில் வளரும் தாவரங்கள் என்னென்ன?
பாலைவனத் தாவரங்களான சிறு செடிகள் மற்றும் சிறு மரங்கள்
- மேற்கு இமயமலைக் காடுகளில் 900-1800மீட்டர் உயரம் உள்ள பகுதிகளில் எந்த தாவரங்கள் அதிகமாக காணப்படுகின்றன ?
சிர்பைன்
- மேற்கு இமயமலைக் காடுகளில் 900 -1800மீட்டர் உயரம் உள்ள பகுதிகளில் வளரும் தாவரங்கள் என்னென்ன?
சால்,சீமொல்,டாக்,ஜாமுன்,ஜீஜீபி
- மேற்கு இமயமலைக் காடுகளில் 1800-3000 மீட்டர் உயரத்தில் என்ன காடுகள் பரவியுள்ளன?
ஊசியிலைக் காடுகள்
- மேற்கு இமயமலைக் காடுகளில் 1800-3000 மீட்டர் உயரம் உள்ள பகுதிகளில் வளரும் தாவரங்கள் என்னென்ன?
சிர்,தியோதர்,நீலபைன்,பாப்புலர்,பிர்ச் மற்றும் எல்டர்
- அல்பைன் காடுகள் எவ்வளவு உயரத்தில் உள்ள இமய மலைகளின் உயரமான பகுதிகளில் காணப்படுகின்றன?
2400 மீட்டருக்கு மேல்
- அல்பைன் காடுகளின் முக்கிய மர வகைகள் எவை?
ஓக்,சில்வர் பிர்,பைன் மற்றும் ஜுனிபர்
- டெல்டாக்கள் பொங்கு முகங்கள் மற்றும் கடற்கழிமுகப் பகுதிகளில் காணப்படும் காடுகள் எவை?
ஓத அலைக் காடுகள்
- ஓத அலை காடுகள் வேறு எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
சதுப்புநில காடுகள் மற்றும் டெல்டா காடுகள்,மாங்குரோவ் காடுகள்,அலையாத்திக் காடுகள்
- உலகின் மிகப் பெரிய சதுப்பு நிலக் காடுகள் எங்கு உள்ளன ?
கங்கை- பிரம்மபுத்திரா டெல்டா பகுதி
- கடற்கரையோர காடுகள் வேறு எவ்வாறு அழைக்கப்படும் ?
கடற்கரை காடுகள்
- இந்தியாவில் எத்தனை வகையான வனவிலங்குகள் உள்ளன?
81,251
- கலைமான் எந்த மாநிலத்திற்கு மாநில விலங்காக திகழ்கின்றது ?
ஆந்திரா ,அரியானா & பஞ்சாப்
- இந்திய வனவிலங்கு வாரியம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
1952
- எந்த ஆண்டு வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது ?
1972
- இந்தியாவில் எத்தனை தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்கள் உருவாக்கப்பட்டன?
102 தேசிய பூங்காக்கள் & 515 வனவிலங்கு சரணாலயங்கள்
- இந்திய அரசாங்கம் சார்பில் எத்தனை உயிர்க்கோள காப்பகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது?
18
- புலிகள் பாதுகாப்பு திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1973
- இந்தியாவில் உள்ள 18 உயிர்க்கோளக் காப்பகங்களில் எத்தனை காப்பகங்கள் யுனெஸ்கோவின் மனித மற்றும் உயிர்கோள காப்பக திட்டத்தின் கீழ் செயல்படுகின்றன?
11
- யுனெஸ்கோவின் மனித மற்றும் உயிர்கோள காப்பக திட்டத்தின் கீழ் செயல்படும் காப்பகங்கள் என்னென்ன?
மன்னார் வளைகுடா, நந்தாதேவி, நீலகிரி ,நோக்ரேக்,பச்மாரி, சிம்லிபால் ,சுந்தரவனம், அகத்தியமலை ,பெரிய நிக்கோபார் ,கஞ்சன்ஜங்கா மற்றும் அமர்கண்டக்
10TH GEOGRAPHY STUDY NOTES |இந்திய -காலநிலை -இயற்கை தாவரங்கள்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services