TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE
- 2011ன் படி இந்திய மக்கள் தொகை எவ்வளவு?
1210.19 மில்லியன்கள்
- ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஒரு நாட்டில் வசிக்கின்ற மொத்த மக்களின் எண்ணிக்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஒரு நாட்டின் மக்கள் தொகை
- அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உலகில் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
இரண்டாவது
- உலகின் மொத்த நிலப்பரப்பில் இந்தியா எத்தனை சதவீதத்தைக் கொண்டுள்ளது ?
2.4 சதவீதம்
- உலக மக்கள் தொகையில் இந்தியா எத்தனை சதவீதத்தைக் கொண்டுள்ளது?
17.5%
- உலகில் உள்ள எத்தனை நபர்களில் ஒருவர் இந்தியராக உள்ளார்?
6 நபர்களில் ஒருவர்
- எந்த ஆறு நாடுகளின் மொத்த மக்கள் தொகை இந்திய மக்கள் தொகைக்கு சமமாக உள்ளது ?
அமெரிக்கா இந்தோனேஷியா பிரேசில் பாகிஸ்தான் வங்கதேசம் மற்றும் ஜப்பான்
- ஒரு நாட்டின் வரையறுக்கப்பட்ட பகுதி அல்லது முழு பகுதியில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் உள்ள மக்களின் பொருளாதார மற்றும் சமூக புள்ளி விவரங்களை சேகரித்து தொகுத்து மற்றும் பகுப்பாய்வு செய்து மக்களை பற்றிய விவரங்களை அளித்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மக்கள் தொகை கணக்கெடுப்பு
- மக்கள் தொகை கணக்கெடுப்பு எத்தனை வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது?
10 வருடங்கள்
- இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது ?
1872
- இந்தியாவின் முழுமையான முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது ?
1881
- இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 ஆம் ஆண்டு எத்தனையாவது மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடைபெற்றது?
15ஆவது
- புவியின் மேற்பரப்பில் மக்கள் எவ்விடைவெளியில் உள்ளார்கள் என்பதைக் குறிக்கும் சொல் எது ?
மக்கள்தொகை பரவல்
- நாட்டின் மக்கள் தொகை பரவலை பாதிக்கும் முக்கிய காரணிகள் என்னென்ன?
நிலப்பரப்பு காலநிலை மண் நீர்ப்பரப்பு கனிம வளங்கள் தொழிலகங்கள் போக்குவரத்து மற்றும் நகரமயமாக்கல்
- இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் எது?
உத்தரபிரதேசம் 199.5 மில்லியன்
- எந்த ஐந்து மாநிலங்கள் இந்திய நாட்டின் மக்கள் தொகையில் பாதியை கொண்டுள்ளன?
உத்தரபிரதேசம் மகாராஷ்டிரா பீகார் மேற்கு வங்கம் மற்றும் ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசம்
- எந்த மாநிலங்களில் மட்டும் நாட்டின் மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதி வாழ்கின்றனர்?
உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா
- இந்தியாவில் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் எது?
சிக்கிம் (0.61 மில்லியன்)
- யூனியன் பிரதேசங்கள் இடையே அதிக மக்கள் தொகையுடன் முதலிடம் வகிக்கும் யூனியன் பிரதேசம் எது?
புதுடெல்லி (16.75 மில்லியன்)
- ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையை குறிக்கும் சொல் எது ?
மக்கள் தொகை அடர்த்தி
- 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் சராசரி மக்கள் தொகை அடர்த்தி என்ன?
382
- இந்தியாவில் மிக அதிக மக்கள் அடர்த்தி கொண்ட மாநிலம் எது ?
பீகார் (1106 பேர் /சதுர கிலோமீட்டர்)
- மிகக் குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட மாநிலம் எது?
அருணாச்சலபிரதேசம் (17 பேர் /சதுர கிலோமீட்டர்)
- யூனியன் பிரதேசங்களில் அதிக மக்கள் அடர்த்தி கொண்ட இடம் எது ?
புதுடில்லி (11320 பேர் / சதுரகிலோமீட்டர்)
- யூனியன் பிரதேசங்களில் குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட இடம் எது ?
அந்தமான் நிக்கோபார் தீவுகள், (46 பேர்/ சதுர கிலோமீட்டர்)
- தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி என்ன ?
(555 பேர்/ சதுர கிலோமீட்டர்)
- மக்கள்தொகை வரலாற்றில் பெரும் மக்களியல் பிளவு ஆண்டு என அழைக்கப்படுவது எது?
1921
- மக்கள் தொகை வளர்ச்சியை தீர்மானிப்பது எது?
பிறப்பு விகிதம் ,இறப்பு விகிதம் மற்றும் இடப்பெயர்வு
- ஒரு வருடத்தில் ஆயிரம் மக்கள் எண்ணிக்கையில் உயிருடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை எவ்வாறு அழைக்கப்படும்?
பிறப்பு விகிதம்
- ஒரு வருடத்தில் ஆயிரம் மக்கள் தொகையில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வாறு அழைக்கப்படும்?
இறப்பு விகிதம்
- ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு மக்கள் இடம்பெயர்ந்து செல்வதற்கு பெயர் என்ன?
இடப்பெயர்வு
- இடப்பெயர்வு எத்தனை வகைப்படும்?
இரண்டு: உள்நாட்டு இடப்பெயர்வு மற்றும் சர்வதேச இடப்பெயர்வு
- 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் எத்தனை கோடி மக்கள் இடம்பெயர்ந்தவர்கள்?
45 கோடி
- 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 37 சதவீத இடப்பெயர்வில் எத்தனை சதவீதம் பெண்கள் மற்றும் ஆண்கள் உள்ளனர்?
48% பெண்கள்& 52% ஆண்கள்
- ஒரு நாட்டின் மக்கள் தொகையில் உள்ள பல்வேறு வயது பிரிவினர் எண்ணிக்கையை குறிப்பது?
வயது கலவை
- பல்வேறு பண்புகளான வயது பாலினம் திருமண நிலை சாதி மதம் மொழி கல்வி தொழில் போன்றவற்றை உள்ளடக்கியது எது ?
மக்கள் தொகை கலவை
- இந்திய நாட்டின் மக்கள்தொகை வயதின் அடிப்படையில் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது ?
மூன்று பிரிவுகள் 15 வயதிற்கு குறைவானவர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மீதமுள்ளோர்
- இந்தியாவில் 15 வயதிற்கும் குறைவானவர்கள் எத்தனை சதவீதம் உள்ளனர்?
29.5 சதவீதம்
- இந்தியாவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் எத்தனை சதவீதம் உள்ளனர்?
8%
- இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் உழைக்கும் மக்களின் தொகை எவ்வளவு?
62.5 சதவீதம்
- மக்கள் தொகையில் 1,000 ஆண்களுக்கு உள்ள பெண்களின் எண்ணிக்கையை குறிப்பது ?
பாலின விகிதம்
- பொருளாதார செயல்பாடுகளில் ஈடுபடுவோர் மற்றும் பொருளாதார செயல்பாடுகளில் ஈடுபடாதோருக்கும் இடையேயான விகிதம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சார்ந்திருப்போர் விகிதம்
- 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு எவ்வளவு உள்ளது?
940 பெண்கள்
- இந்தியாவின் அதிக பாலின விகிதம் கொண்ட மாநிலம் எது?
கேரளா [1084 பெண்கள்]
- இந்தியாவில் அதிக பாலின விகிதம் கொண்ட யூனியன் பிரதேசம் எது ?
புதுச்சேரி [1038 பெண்கள்]
- இந்தியாவில் குறைந்த பாலின விகிதம் கொண்ட யூனியன் பிரதேசம் எது?
டையூ டாமன் 618
- மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி எத்தனை வயதுக்கு அதிகமான ஒருவர் ஏதாவது ஒரு மொழியை புரிந்து கொண்டு எழுத படிக்க தெரிந்தால் அவர் எழுத்தறிவு பெற்றவராவார்?
ஏழு வயது
- 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகை எழுத்தறிவு விகிதம் எவ்வளவு?
74.04 சதவீதம்
- இந்தியாவில் ஆண்களின் எழுத்தறிவு சதவீதம் எவ்வளவு ?
82.14 சதவீதம்
- இந்தியாவில் பெண்களின் எழுத்தறிவு சதவீதம் எவ்வளவு?
65.46 சதவீதம்
- இந்தியாவில் ஆண் மற்றும் பெண் எழுத்தறிவு வீதத்தில் உள்ள வித்தியாசம் எவ்வளவு ?
16.68 சதவீதம்
- இந்தியாவில் கேரள மாநிலம் எழுத்தறிவில் எத்தனை சதவீதம் பெற்று இந்தியாவில் முதல் மாநிலமாக உள்ளது ?
93.9 சதவீதம்
- இந்தியாவில் குறைந்த எழுத்தறிவு பெற்ற மாநிலமாக விளங்குவது?
பீகார் 63.82 சதவீதம்
- மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் பெறப்படும் தகவலின் அடிப்படையில் பொருளாதார நடவடிக்கையில் பங்கு பெறுபவர்கள் எவ்வாறு அழைக்கின்றோம் ?
தொழிலாளர்கள்
- தொழிலாளர்கள் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன?
மூன்று: முதன்மை தொழிலாளர்கள் ,பகுதி நேர தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் அல்லாதோர்
- மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ஒரு ஆண்டின் பெரும்பகுதி நாட்களில் பணியாற்றுபவர்கள் எவ்வாறு் அழைக்கப்படுகின்றனர்?
முதன்மை தொழிலாளர்கள் (குறைந்தபட்சம் 6 மாதம் அல்லது 183 நாட்கள்)
- இந்தியாவில் வேலையில் பங்கேற்போர் விகிதம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
39.7 9%
- இந்தியாவில் வேலையில் பங்கேற்போர் விகிதத்தில் ஆண்கள் மற்றும் பெண்களின் சதவீதம் என்ன ?
ஆண்கள் 5325 சதவீதம் & பெண்கள் 25.51 சதவீதம்
- மக்கள்தொகை அளவு மற்றும் அதன் பண்பு மாற்றங்கள் தொடர்பான காரணிகள் குறித்து கற்கும் ஒரு துறைக்கு பெயர் என்ன?
மக்கள்தொகை இயக்கவியல்
- கிராமப்புற சமுதாயம் நகர்ப்புற சமுதாயமாக மாறுவதற்கு என்ன பெயர்?
நகரமயமாக்கம்
- 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நகர்ப்புற மக்கள் சதவீதம் எவ்வளவு?
31.16%
- இந்தியாவில் எந்த மாநிலம் மிகுந்த நகரமயமாக்கப்பட்ட பகுதியாக உள்ளது?
கோவா மாநிலம் 62.17 சதவீதம்
- இந்தியாவில் குறைந்த நகர மயமாக்கப்பட்ட பகுதியாக உள்ள மாநிலம் எது?
இமாச்சல் பிரதேசம் 10.04 சதவீதம்
- யூனியன் பிரதேசங்களிடையே மிகுந்த நகர மயமாக்கப்பட்ட பகுதியாக உள்ளது எது?
புதுடெல்லி ,97.50 சதவீதம்
- மிகுந்த நகரமயமாக்கப்பட்ட பகுதிகளில் மாநிலங்களில் இரண்டாவதாக திகழ்வது எது?
தமிழ்நாடு
- நகரங்களில் மக்கள் தொகை ஒரு மில்லியனுக்கு மேல் இருந்தால் அந்நகரங்கள் எவ்வாறு அழைக்கப்படும் ?
மில்லியன் நகரங்கள்
- மக்கள் தொகையில் பத்து மில்லியனுக்கும் மேலான மக்கள் தொகை உடைய நகரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன ?
மெகா நகரங்கள்
- “மனிதவள மேம்பாடு என்பது கல்வி உடல்நலம் வருமானம் அதிகாரம் போன்றவைகளில் மக்களுக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும் ஒரு செயல்முறையாகும்” எனக் கூறியவர் யார்?
டாக்டர் மெகபூப்-உல்-ஹ்க்
- மனிதவள மேம்பாடு என்பது எத்தனை அடிப்படை பரிமாணங்களைக்ஈ கொண்ட கூட்டுக் குறியீடாகும்?
மூன்று :ஆரோக்கியம் ,கல்வி மற்றும் வருமானம்
- குறைந்த மனிதவள மேம்பாட்டின் குறியீடு என்ன?
0.550
- மிதமான மனித வள மேம்பாட்டின் குறியீடு என்ன?
0.550-0.699
- அதிக மனித வள மேம்பாட்டின் குறியீடு என்ன?
0.700-0.799
- மதிப்பீடுகள் எதற்கு மேல் இருந்தால் மிக அதிக மனிதவள மேம்பாட்டை குறிக்கும்?
0.800
- பயணிகள் மட்டும் சரக்குகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதற்கு என்ன பெயர்?
போக்குவரத்து
- உலகின் பிரதான போக்குவரத்து வகைகள் எத்தனை வகைப்படும் ?
மூன்று: நிலம், நீர் ,வான்வெளி
- இந்திய சாலைகள் உலகின் எத்தனையாவது நீண்ட சாலை வலைப்பின்னல் அமைப்பை பெற்றுள்ளது ?
இரண்டாவது
- சாஹி (ராயல் ) சாலையை சிந்துப் பள்ளத்தாக்கில் இருந்து மேற்கு வங்கத்தில் உள்ள சோனார் பள்ளத்தாக்கு வரை அமைத்தவர் யார்?
ஷெர்சா சூரி
- ஷெர்சா சூரி அமைத்த சாலை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் என்னவாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது?
கிராண்ட் டிரங்க் சாலை
- கிராண்ட் டிரங்க் சாலை தற்போது எது வரை நீட்டிக்கப்பட்டுள்ளது ?
அமிர்தசரஸில் இருந்து கொல்கத்தா வரை
- கிராண்ட் டிரங்க் சாலை எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
இரண்டு டெல்லியில் இருந்து அமிர்தசரஸ் வரை NH1 மற்றும் டெல்லியில் இருந்து கொல்கத்தா வரை NH2
- இந்தியாவில் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை எது?
NH44 (முன்பு NH7 என அழைக்கப்ட்டது)
- NH44 தேசிய நெடுஞ்சாலை எதனை இணைக்கிறது?
உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசியில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி வரை? 2,369 கிலோ மீட்டர் நீளம்
- மிகக் குறைவான நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை எது?
NH47A
- NH47A தேசிய நெடுஞ்சாலை எதனை இணைக்கிறது ?
எர்ணாகுளத்தில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கொச்சின் துறைமுகத்தை (வில்லிங்டன் தீவு)
- மாவட்ட சாலைகள் யாரால் பராமரிக்கப்படுகிறது ?
மாநிலத்தின் பொதுப்பணித்துறை
- இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
1995
- எல்லைப்புற சாலைகள் நிறுவனம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
1960
- உலகிலேயே உயரமான எல்லைப்புற சாலை எங்கு உள்ளது?
லடாக்கில் உள்ள லேவில் இருந்து சண்டிகர் வரை
- தங்க நாற்கர சாலைகள் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1999
- தங்க நாற்கரச் சாலைகளின் நீளம் என்ன?
5846
- தங்க நாற்கர சாலைகள் திட்டம் எந்த நான்கு பேரும் இந்திய நகரங்களை இணைக்கிறது?
புதுடில்லி கொல்கத்தா சென்னை மும்பை
- வட -தென் பகுதிகளை இணைக்கும் சாலைகள் ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரையும் தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரியையும் எவ்வளவு கிலோ மீட்டர் நீளத்தை கொண்ட சாலைகள் மூலம் இணைக்கிறது?
4076 கி.மீ
- கிழக்கு மேற்கு பகுதிகளை இணைக்கும் சாலைகள் அசாம் மாநிலத்தில் சில்சரையும் குஜராத்தில் உள்ள துறைமுக நகரான போர்பந்தரையும் எவ்வளவு கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது?
3640 கி.மீ
- வட-தென் மற்றும் கிழக்கு – மேற்கு பகுதிகளை இணைக்கும் சாலைகள் எந்த இடத்தில் சந்திக்கின்றன?
ஜான்சி
- இந்தியாவில் உள்ள முக்கியமான விரைவுச் சாலைகள் என்னென்ன?
மும்பை -பூனா விரைவுச்சாலை,கொல்கத்தா- டம் டம் விமான நிலையம் விரைவு சாலை, துர்காபூர்- கொல்கத்தா விரைவுச்சாலை , புதுடில்லி மற்றும் ஆக்ரா இடையேயான யமுனா விரைவுச்சாலை
- எந்த மாநிலத்தில் சாலைகளின் அடர்த்தி மிக அதிகமாக உள்ளது ?
கேரளா
- எந்த மாநிலத்தில் சாலைகளில் அடர்த்தி மிக குறைவாக உள்ளது?
ஜம்மு-காஷ்மீர்
- ஆசியாவிலேயே மிகப்பெரிய ரயில் போக்குவரத்து அமைப்பு கொண்ட நாடு எது?
இந்தியா
- இந்திய ரயில் போக்குவரத்து அமைப்பு உலக அளவில் எத்தனையாவது பெரியதாகும்?
இரண்டாவது
- இரயில்களின் இயக்கம் மற்றும் மேலாண்மைக்காக இந்திய ரயில்வே துறை எத்தனை ரயில்வே மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது?
17
- வடக்கு ரயில்வேயின் தலைமையிடம் எது?
புதுடெல்லி
- வடமேற்கு இரயில்வே மண்டலத்தின் தலைமையிடம் எது?
ஜெய்ப்பூர்
- வட மத்திய ரயில்வேயின் தலைமையிடம் எது?
அலகாபாத்
- வடகிழக்கு ரயில்வேயின் தலைமையிடம் எது?
கோரக்பூர்
- வடகிழக்கு எல்லை இரயில்வேயின் தலமையிடம் எது?
கௌகாத்தி
- கிழக்கு ரயில்வேயின் தலைமையிடம் எது?
கொல்கத்தா
- கிழக்கு கடற்கரை ரயில்வேயின் தலைமையிடம் எது?
புவனேஸ்வர்
- கிழக்கு மத்திய ரயில்வேயின் தலைமையிடம் எது?
ஹசிப்பூர்
- மேற்கு மத்திய ரயில்வேயின் தலைமையிடம் எது ?
ஜபல்பூர்
- மத்திய ரயில்வேயின் தலைமையிடம் எது?
மும்பை (சத்ரபதி சிவாஜி முனையம் )
- மேற்கு ரயில்வேயின் தலைமையகம் எது?
மும்பை (சர்ச்கேட்)
- தெற்கு ரயில்வேயின் தலைமை இடம் எது?
சென்னை
- தென் மத்திய ரயில்வேயின் தலைமை இடம் எது?
செகந்திராபாத்
- தெற்கு ரயில்வேயின் தலைமையகம்?
கொல்கத்தா
- தென் மேற்கு ரயில்வேயின் தலைமை இடம் எது?
ஹூப்ளி
- தென் கிழக்கு மத்திய ரயில்வேயின் தலைமையிடம் எது ?
பிலாஸ்பூர்
- கொங்கன் ரயில்வே தலைமையிடம் எது?
நவி மும்பை
- இந்தியாவின் முதல் ரயில் போக்குவரத்து எந்த நகரங்களுக்கிடையே தொடங்கப்பட்டது?
மும்பை மற்றும் தானே, 1853
- எந்த ஆண்டு ரயில்வேயானது இந்தியன் ரயில்வே என்ற பெயருடன் தேசியமயமாக்கப்பட்டது ?
1952
- இந்தியன் ரயில்வேயின் தலைமையகம் எது?
புதுடெல்லி
- இந்திய ரயில்வே துறை இருப்புப் பாதையின் அகலத்தை அடிப்படையாகக் கொண்டு எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது?
நான்கு வகைகள்: அகலப்பாதை, மீட்டர் பாதை, குறுகிய பாதை, குறுகிய தூக்குப் பாதை
- அகலப் பாதையின் அளவு என்ன?
1.676 மீட்டர் அகலம்
- மீட்டர் பாதையின் அளவு என்ன?
1.00 மீட்டர் அகலம்
- குறுகிய பாதையின் அளவு என்ன?
0.762 மீட்டர் அகலம்
- குறுகிய தூக்குப் பாதை அளவு என்ன?
0.610 மீட்டர் அகலம்
- இந்தியாவின் முதல் புறநகர் ரயில் போக்குவரத்து எங்கு எப்போது தொடங்கப்பட்டது?
மும்பை 1925
- இந்தியாவின் மிக அதிவேக ரயில் வண்டி எது?
காத்திமன் அதிவிரைவு
- கொங்கன் ரயில்வே எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
1998
- இந்தியாவில் எத்தனை பெரு நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை வழங்கப்படுகிறது?
8 கொல்கத்தா (மேற்கு வங்கம்) ,சென்னை (தமிழ்நாடு), புது டெல்லி, பெங்களூரு (கர்நாடகா),குர்கயோன்( ஹரியானா), மும்பை (மகாராஷ்டிரா), ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்) மற்றும் கொச்சி (கேரளா)
- இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் சேவை எங்கு தொடங்கப்பட்டது?
கொல்கத்தா
- எந்த மாநிலத்தில் ரயில் போக்குவரத்து இல்லை ?
மேகாலயா
- இந்தியாவின் முக்கிய குழாய் போக்குவரத்து அமைப்புகள் என்னென்ன?
அசாமில் உள்ள எண்ணெய் வயலில் இருந்து கான்பூர் வரை, குஜராத்தில் உள்ள சலாயா பகுதியிலிருந்து பஞ்சாபிலுள்ள ஜலந்தர் வரை ,குஜராத்தில் உள்ள ஹிஜிராவிலிருந்து, உத்திரபிரதேசத்தில் உள்ள ஜெகதீஷ்பூர் வரை
- இந்தியாவில் எத்தனை வகையான நீர்வழி போக்குவரத்து காணப்படுகிறது?
இரண்டு வகை: உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து மற்றும் கடல்வழி போக்குவரத்து
- எந்த ஆண்டு உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் தொடங்கப்பட்டது?
1986
- தேசிய நீர்வழி போக்குவரத்து 1 எந்த வழி தடத்தில் செயல்படுகிறது ?
ஹால்தியா மற்றும் அலகாபாத் இடையே 1620 கிலோ மீட்டர் நீளத்தை கொண்டு கங்கை-பாகிரதி-ஹுக்ளி
- தேசிய நீர்வழி போக்குவரத்து எண்2 எந்த வழி தடத்தில் இயங்குகிறது?
பிரம்மபுத்திரா ஆற்றில் துபிரி மற்றும் காடியாவிற்கிடையே 891 கிலோ மீட்டர் நீளம்
- தேசிய நீர்வழி போக்குவரத்து எண் 3 எந்த வழி தடத்தில் செயல்படுகிறது?
கேரள மாநிலத்தின் கொல்லம் மற்றும் கோட்டபுரம் இடையே
- 24 மணி நேரமும் செயல்படும் போக்குவரத்து வசதியை அளிக்க கூடிய இந்தியாவின் முதல் தேசிய நீர்வழி போக்குவரத்து எது?
தேசிய நீர்வழி போக்குவரத்து எண் 3
- இந்தியாவில் எத்தனை துறைமுகங்கள் உள்ளன ?
13 பெரிய துறைமுகங்கள் & 200 நடுத்தர மற்றும் சிறிய துறைமுகங்கள்
- கிழக்கு இந்திய கடற்கரையில் அமைந்துள்ள முக்கிய துறைமுகங்கள் என்னென்ன?
கொல்கத்தா ,ஹால்தியா,பாரதீப் ,விசாகப்பட்டினம், சென்னை ,எண்ணூர் மற்றும் தூத்துக்குடி
- மேற்கிந்திய கடற்கரையில் அமைந்துள்ள முக்கிய துறைமுகங்கள் என்னென்ன?
காண்டலா,மும்பை, நவசேவா (ஜவகர்லால் நேரு துறைமுகம்), மர்மகோவா, நியூமங்களூர் மற்றும் கொச்சின்
- இந்தியாவில் உள்ள நான்கு முக்கிய கப்பல் கட்டுமான தளங்களில் எவை ?
ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் -விசாகப்பட்டினம் ,கார்டன்ரீச் கப்பல் கட்டும் தொழிற்சாலை -கொல்கத்தா ,மசாகான் கப்பல் கட்டும் தொழிற்சாலை- மும்பை, கொச்சி கப்பல் கட்டும் -தளம்
- இந்தியா கப்பல் கட்டும் தொழிலில் ஆசியாவில் எத்தனையாவது இடத்தைப் பெற்றுள்ளது?
இரண்டாவது இடம்
- இந்தியா கப்பல் கட்டும் தொழிலில் உலகளவில் எத்தனையாவது இடத்தைப் பெற்றுள்ளது?
16வது இடம்
- முதல் இந்திய விமான போக்குவரத்து எப்போது தொடங்கப்பட்டது?
1918 என்று ஹென்றி பிக்யூர் என்பவரால் அலகாபாத்தில் இருந்து நைனிக் என்ற இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
- எந்த ஆண்டு நாட்டில் செயல்பட்டு வந்த 8 பல்வேறு விமான நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்பட்டு தேசியமயமாக்கப்பட்டது?
1953
- உள்நாட்டு விமான சேவைகளை வழங்கும் இந்திய அரசாங்கத்தின் நிறுவனம் எது?
இந்தியன் ஏர்லைன்ஸ்
- வெளிநாட்டு விமான சேவைகளை வழங்கும் இந்திய அரசாங்கத்தின் நிறுவனம் எது?
ஏர் இந்தியா
- இந்தியாவில் தற்போது எத்தனை சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன?
19
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் எங்கு உள்ளது ?
கொல்கத்தா
- இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் எங்கு உள்ளது ?
புதுடில்லி
- சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் எங்கு உள்ளது ?
மும்பை
- சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் எங்கு உள்ளது ?
அகமதாபாத்
- ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் எங்கு உள்ளது ?
ஹைதராபாத்
- பெட்ரோலிய நிறுவனங்களான ஓஎன்ஜிசி எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் மற்றும் கடல் சார்ந்த பணிகளுக்கு வானுலங்கு சேவையை அளிக்கும் நிறுவனம் எது?
பவன் ஹான்ஸ் வானூர்தி நிறுவனம்
- பவன் ஹான்ஸ் வானூர்தி நிறுவனத்தின் தலைமையிடம் எது ?
புதுடில்லி
- இந்திய விமான நிலைய பொறுப்பு ஆணையம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
1995
- தகவல்கள் எண்ணங்கள் மற்றும் கருத்துக்களின் பரிமாற்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தகவல்தொடர்பு
- தகவல் தொடர்புகள் எத்தனை பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன?
தனிமனித தகவல் தொடர்பு ,பொது தகவல் தொடர்பு
- இந்திய அஞ்சல் துறை எத்தனை அஞ்சல் நிலையங்களை கொண்டுள்ளது?
155000
- இந்திய அஞ்சல் சேவை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?
1857
- இந்தியாவின் முதல் அஞ்சல் வில்லை எங்கு எப்போது வெளியிடப்பட்டது?
கராச்சி, 1852
- இந்திய அஞ்சல் துறை விரைவு அஞ்சல் சேவையை எந்த ஆண்டு அறிமுகம் செய்தது?
1975
- அஞ்சல் குறியீட்டு எண் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
1972
- இந்திய வானொலி ஒலிபரப்பு சேவை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1923, மும்பை வானொலி சங்கம் மூலமாக
- இந்திய வானொலி ஒலிபரப்பு சேவை எந்த ஆண்டில் அகில இந்திய வானொலி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது ?
1936
- அகில இந்திய வானொலி எந்த ஆண்டு ஆகாசவாணி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது ?
1957
- இந்தியாவில் தொலைக்காட்சி வலையமைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தூர்தர்ஷன்
- உலக அளவில் இணைய பயன்பாட்டில் இந்தியா எத்தனாவது இடத்தில் உள்ளது ?
இரண்டாம் இடம்
- எந்த ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்டது?
1969
- எந்த ஆண்டு இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு நிறுவப்பட்டது?
1983
- இன்சாட் 1B தகவல் தொடர்புக்காக ஏவப்பட்ட முதல் இன்சாட் வரிசை செயற்கைக்கோள் எப்போது ஏவப்பட்டது ?
ஆகஸ்ட் 30 1983
- ஏற்றுமதியாகும் பொருட்களின் மதிப்பு இறக்குமதியாகும் பொருட்களின் மதிப்பைவிட அதிகமாக இருந்தால் அதை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சாதகமான வணிக சமநிலை
- ஏற்றுமதியாகும் பொருட்களின் மதிப்பு இறக்குமதியாகும் பொருட்களின் மதிப்பை விட குறைவாக இருந்தால் அதற்கு என்ன பெயர் ?
பாதகமான வணிக சமநிலை
- பொதுவாக வணிகம் எத்தனை வகைப்படும்?
இரண்டு :உள்நாட்டு வணிகம் பன்னாட்டு வணிகம்
10TH GEOGRAPHY STUDY NOTES |இந்தியா -மக்கள்தொகை,போக்குவரத்து ,வணிகம்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services