- தொடக்கூடிய பொருள்களை பொருளியல் அறிஞர்கள் எவ்வாறு அழைக்கின்றனர்?
பண்டங்கள்
- சேவை நடவடிக்கைகளைப்போன்றவைகள் தொட்டு உணரக் கூடியது அல்ல ஆனால் இது போன்று அனுபவிக்கக்கூடிய நடவடிக்கைகளை பொருளியல் வல்லுநர்கள் எவ்வாறு அழைக்கின்றனர்?
பணிகள்
- ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற அனைத்து பண்டங்கள் மற்றும் பணிகளின் அங்காடி மதிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)
- அங்காடியில் விற்கக்கூடிய பண்டங்கள் மற்றும் பணிகளின் விலை எவ்வாறு அழைக்கப்படும் ?
அங்காடி மதிப்பு
- ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற பண்டங்கள் மற்றும் பணிகளை அளவிடுவது எது?
மொத்த உள்நாட்டு உற்பத்தி
- நுகர்வுக்காக அல்லது பயன்பாட்டுக்காக உள்ள பண்டங்கள் மற்றும் பணிகள் எவ்வாறு அழைக்கப்படும் ?
இறுதிநிலை பண்டங்கள் மற்றும் பணிகள்
- எந்தப் பண்டங்கள் மற்றும் பணிகள் மற்றொரு பண்ட பணிகளை உற்பத்தி செய்ய பயன்படுகிறதோ மற்றும் மற்ற பண்ட பணிகளை உற்பத்தி செய்ய ஒரு பகுதி ஆகிறதோ அது எவ்வாறு அழைக்கப்படும்?
இடைநிலை பண்டங்கள்
- இடைநிலை பண்டங்கள் என்ற கூற்றை கூறியவர்கள் யார்?
டைலர் கோவன் மற்றும் அலெக்ஸ் டாபர்ராக்
- மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கிட எந்த பண்டங்கள் மட்டும் சேர்க்கப்படுகிறது ?
இறுதிநிலை பண்டங்கள்
- இடைநிலை பணத்தின் மதிப்பை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்த்தால் அதன் விளைவு எவ்வாறு அழைக்கப்படும்?
இருமுறை கணக்கிடுதல்
- ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு எவ்வாறு அழைக்கப்படும்?
நாட்டு வருமானம்
- நாட்டு வருமானம் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மொத்த நாட்டு உற்பத்தி (GNP) அல்லது நாட்டு வருமான ஈவு
- ஒரு நாட்டு மக்களால் ஒரு வருடத்தில் (ஈட்டிய வருமானம்) உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடுகளின் மதிப்பை குறிப்பது எது ?
மொத்த நாட்டு உற்பத்தி(GNP)
- மொத்த நாட்டு உற்பத்தியின் சமன்பாடு என்ன?
GNP=C+I+G+(X-M)+NFIA
(C-நுகர்வோர்,I- முதலீட்டாளர் ,G-அரசு செலவுகள் ,X-M-ஏற்றுமதி-இறக்குமதி ,NFIA-வெளிநாட்டிலிருந்து ஈடப்பட்ட நிகர வருமானம்)
- ஒரு ஆண்டில் நாட்டின் புவியியல் எல்லைக்குள் உள்ள உற்பத்தி காரணிகளினால் உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடுகளின்(பண்டங்கள் மற்றும் பணிகள்) மொத்த மதிப்பு எவ்வாறு அழைக்கப்படும்?
மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP)
- மொத்த நாட்டு உற்பத்தியில் இருந்து மூலதன தேய்மானத்தின் மதிப்பை நீக்கியபின் கிடைக்கும் பணமதிப்பு எவ்வாறு அழைக்கப்படும்?
நிகர நாட்டு உற்பத்தி (NNP)
- நிகர நாட்டு உற்பத்தியின் சமன்பாடு என்ன?
மொத்த நாட்டு உற்பத்தி -தேய்மானம்
- மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து தேய்மானத்தை கழித்த பின் கிடைப்பது எது?
நிகர உள்நாட்டு உற்பத்தி (NDP)
- நிகர உள்நாட்டு உற்பத்தியின் சமன்பாடு என்ன?
மொத்த உள்நாட்டு உற்பத்தி- தேய்மானம்
- நாட்டு வருமானத்தை மக்கள்தொகையில் வகுப்பதன்மூலம் எது பெறப்படுகிறது?
தலா வருமானம்
- 1867-68 இல் முதன்முதலாக யார் தனிநபர் வருமானத்தை பற்றி கூறியுள்ளார் ?
தாதாபாய் நவரோஜி
- தாதாபாய் நவரோஜி தன்னுடைய எந்த புத்தகத்தில் தனிநபர் வருமானத்தை பற்றி முதன்முதலாக கூறியுள்ளார்?
இந்தியாவின் வறுமை மற்றும் ஒரு பிரிட்டிஷ்யில்லா ஆட்சி
- நேர்முக வரி விதிப்பதற்கு முன் தனி நபர்கள் மற்றும் ஒரு நாட்டின் குடும்பங்களின் மூலம் அனைத்து ஆதாரங்களில் இருந்து பெறப்படுகின் வருமானம் எவ்வாறு அழைக்கப்படும்?
தனிப்பட்ட வருமானம்
- தனிப்பட்ட வருமானத்தின் சமன்பாடு என்ன?
நாட்டு வருமானத்தில் பெருநிறுவனங்களின் வருமான வரி -பெருநிறுவனங்களின் பகிர்ந்தளிக்கப்படாத வருவாய் -சமூக பாதுகாப்பு பங்களிப்பு +மாற்று வருவாய்
- தனிநபர்கள் மற்றும் குடும்பங்களில் உண்மையான வருமானத்தில் நுகர்வுக்கு செலவிடப்படுகின்ற வருமானம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
செலவிட தகுதியான வருமானம்
- செலவிட தகுதியான வருமானத்தின் சமன்பாடு என்ன ?
தனிப்பட்ட வருமானம் -நேர்முக வரி
- இந்தியாவின் ஜிடிபி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
இரண்டு வகை :காலாண்டு மற்றும் ஆண்டுதோறும்
- இந்தியாவின் நிதியாண்டு எத்தனை காலாண்டுகளாக GDP மதிப்பிடப்படுகிறது?
நான்கு கால் ஆண்டுகள்
- முதல் காலாண்டு எவ்வாறு குறிக்கப்படுகிறது மற்றும் அதன் காலம் என்ன?
Q1 :ஏப்ரல், மே, ஜூன்
- இரண்டாம் காலாண்டு எவ்வாறு குறிக்கப்படுகிறது மற்றும் அதன் காலம் என்ன?
Q2 : ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர்
- மூன்றாம் காலாண்டு எவ்வாறு குறிக்கப்படுகிறது மற்றும் அதன் காலம் என்ன?
Q3 : அக்டோபர் நவம்பர் டிசம்பர்
- நான்காவது காலாண்டு எவ்வாறு குறிக்கப்படுகிறது மற்றும் அதன் காலம் என்ன?
Q4 : ஜனவரி பிப்ரவரி மார்ச்
- மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சமன்பாடு என்ன?
GDP=C+I+G+(X-M) (C-நுகர்வோர் ,I-முதலீட்டாளர் ,G-அரசு செலவுகள் ,X-M ஏற்றுமதி-இறக்குமதி)
- GDPன் நவீன கருத்து முதன் முதலில் யாரால் உருவாக்கப்பட்டது ?
சைமன் குஸ்நட் (1934)
- மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கணக்கீட்டு முறைகள் என்னென்ன ?
செலவின முறை ,வருமானம் முறை, மதிப்பு கூட்டு முறை
- எந்த முறையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்த அனைத்து இறுதி பண்டபணிகளுக்கு மேற்கொள்ளும் செலவுகளின் கூட்டுத்தொகை ஆகும்?
செலவினை முறை
- செலவின முறையின் சமன்பாடு என்ன?
Y=C+I+G+(X-M)
- எந்த முறையில் பண்டங்கள் மற்றும் பணிகளின் உற்பத்தி செய்வதில் ஈடுபட்டுள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் வருமானத்தை கணக்கிட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியை கூறுகிறது?
வருமான முறை
- வருமான முறையின் சமன்பாடு என்ன?
வருமானம்= கூலி+ வாரம்+வட்டி+லாபம்
- எந்த முறையில் உற்பத்தியில் பயன்படுத்தப்பட்ட அனைத்து இடைநிலை பண்டங்களின் மதிப்பை சேர்க்கும் பொழுது பொருளாதாரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட இறுதி பண்டங்களின் மொத்த மதிப்பு கிடைக்கிறது?
மதிப்பு கூட்டு முறை
- மொத்த உள்நாட்டு உற்பத்தியின் குறைபாடுகள் என்னென்ன?
GDPயில் பல முக்கிய பண்டங்கள் மற்றும் பணிகள் சேர்க்கப்படவில்லை ,GDP அளவை மட்டும் அளவிடுகிறது தரத்தை அல்ல ,GDPயில் நாட்டு வருமான பகிர்ந்தளிப்பு பற்றி கூறவில்லை ,GDPமக்கள் வாழும் வாழ்க்கை முறையை பற்றி கூறவில்லை
- GDP சம்பந்தப்பட்ட ஆவணங்களைப் பாதுகாப்பது எது?
புள்ளியியல் துறை அமைச்சரவையின் கீழ் உள்ள மத்திய புள்ளியியல் அமைப்பு (CSO)
- மத்திய புள்ளியியல் அமைப்பு தொழில்துறை உற்பத்தியை ஆண்டு கணக்கெடுப்பு நடத்தி என்ன குறியீடுகளை வெளியிடுகிறது?
தொழில்துறை உற்பத்தி குறியீடு(IIP), நுகர்வோர் விலைக் குறியீடு(CPI) போன்றவைகள்
- இந்திய பொருளாதாரம் பரவலாக எத்தனை துறைகளாக பிரிக்கப்படுகிறது?
மூன்று : முதன்மை துறை(விவசாயத்துறை) இரண்டாம் துறை (தொழில்துறை), மூன்றாம் துறை (பணிகள் துறை)
- வேளாண்மை துறை வேறு எவ்வாறு அழைக்கப்படும் ?
முதன்மைத் துறை
- வேளாண் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் மூலப் பொருட்களை உற்பத்தி செய்யும் துறை எது ?
முதன்மை துறை
- இரண்டாம் துறை வேறு எவ்வாறு அழைக்கப்படும்?
தொழில்துறை
- மூலப்பொருட்களை மாற்றியமைப்பதன் மூலம் பண்டங்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்யப்படுவது எந்த துறை?
இரண்டாம் துறை
- மூன்றாம் துறை வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பணிகள் துறை
- மூன்றாம் துறை சார்ந்த தொழில்கள் என்னென்ன?
அரசு ,அறிவியல் ஆராய்ச்சி ,போக்குவரத்து ,தகவல் தொடர்பு ,வர்த்தகம், தபால் மற்றும் தங்கி ,கல்வி , பொழுதுபோக்கு ,சுகாதாரம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்றவர்கள்
- இந்தியாவின் மிகப்பெரிய துறை எது?
பணிகள் துறை
- நடப்பு விலையில் மொத்த மதிப்பு கூடுதல் பணிகள் (GVA) துறைகள் 2018- 2019ல் எவ்வளவு மதிப்பிடப்பட்டுள்ளன?
92.26 லட்சம் கோடி
- இந்தியாவில் மொத்த மதிப்பு கூடுதலில்(2018-19) பணிகள் துறையின் பங்கு எவ்வளவு சதவீதம் ?
54.40சதவீதம்
- இந்தியாவில் மொத்த மதிப்பு கூடுதலில்(2018-19) தொழில் துறையின் பங்கு எவ்வளவு சதவீதம் ?
29.74சதவீதம்
- இந்தியாவில் மொத்த மதிப்பு கூடுதலில்(2018-19) வேளாண்மை துறையின் பங்கு எவ்வளவு சதவீதம் ?
15.87சதவீதம்
- விவசாய பண்டங்களின் உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது பெரிய நாடாகும் ?
இரண்டாவது
- உலகின் மொத்த விவசாய பொருட்களின் வெளியீட்டில் எத்தனை சதவீதம் இந்தியாவினால் வெளியிடப்படுகிறது?
7.39 சதவீதம்
- உலக அளவில் இந்தியா தொழில்துறையில் எத்தனாவது இடத்தில் உள்ளது?
8வது இடம்
- உலகளவில் இந்தியா பணிகள் துறையில் எத்தனாவது இடத்தில் உள்ளது?
6வது இடம்
- ஒரு பொருளாதாரத்தில் ஒரு பகுதி, தொழில் அல்லது துறையில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மதிப்பு எவ்வாறு அழைக்கப்படும் ?
மொத்த மதிப்பு கூடுதல்(GVA)
- தேசிய கணக்குகளில் மொத்த மதிப்பு கூடுதலின் வெளியீட்டை கழித்தால் கிடைப்பது என்ன ?
இடைநிலை நுகர்வு
- GVAன் சமன்பாடு என்ன?
=GDP+மானியம் (வரிகள் நேர்முக வரி -விற்பனை வரி)
- “பொருளாதார வளர்ச்சி என்பது பொருளாதார முன்னேற்றத்தின் ஓர் அம்சமாகும்” எனக் கூறியவர் யார் ?
பொருளியல் அறிஞர் அமர்த்தியா சென்
- “பொருளாதார வளர்ச்சி என்பது வாழ்க்கைத்தரம் உயர்தல் அல்லது ஒட்டுமொத்த வளர்ச்சியில் கவனம் செலுத்துதலாகும்” எனக் கூறுவது எது?
ஐக்கிய நாடுகள் சபை
- ஒரு பொருளாதாரத்தின் உண்மையான முன்னேற்றத்தை குறிப்பதற்கு எந்தக் குறியீடு சரியானது?
மனிதவள மேம்பாட்டு குறியீடு
- இந்தியாவில் பிறப்பின் போது எதிர்பார்க்கப்பட்ட ஆயுட்காலம் எவ்வளவு?
65 ஆண்டுகள்
- இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட எத்தனை சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுடன் உள்ளனர்?
44%
- இந்தியாவில் 15 வயதும் அதற்கு மேலும் உள்ள மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பேர் கல்வி அறிவு பெற்றவர்களாக உள்ளனர்?
63%
- இந்தியாவில் 35 வயதிற்குட்பட்ட உழைக்கும் வயதில் வேகமாக வளரும் மக்கள் தொகையில் எவ்வளவு உள்ளனர்?
700 மில்லியன்
- மனித வள மேம்பாட்டு குறியீடு என்பது எந்த ஆண்டு யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
1990 ,பாகிஸ்தானின் முகஹப்-உல் ஹிக் என்ற பொருளியல் அறிஞரால்
- உள்நாட்டு வேளாண்மை மற்றும் வெளிநாட்டு வேளாண்மை ,இறக்குமதி பொருட்கள் பற்றிய அரசின் முடிவுகளையும் நடவடிக்கைகளையும் பற்றியது எது?
வேளாண் கொள்கை
- மொத்த தேசிய மகிழ்ச்சி என்பது எந்த நாட்டில் இருந்து பெறப்பட்ட ஒரு தத்துவமாகும்?
பூட்டான்
- (GNH) மொத்த தேசிய மகிழ்ச்சி என்பது பூட்டான் அரசியலமைப்பால் எப்போது சட்டப்பூர்வமாக்கப்பட்டது?
18 ஜூலை ,2008
- மொத்த தேசிய மகிழ்ச்சி என்ற வார்த்தையை உருவாக்கியவர் யார்?
பூட்டான் அரசர் ஜிகமே சிங்கயே வாங்ஹக் (1972)
- எப்போது ஐக்கிய நாடுகள் சபை வளர்ச்சிக்கான ஒரு முழுமையான அணுகுமுறை மகிழ்ச்சி என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது?
2011
- GNHன் நான்கு தூண்கள் என அழைக்கப்படுபவை எவை ?
நிலையான மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சி ,சுற்றுச்சூழல் பாதுகாப்பு ,கலாச்சாரத்தை பாதுகாப்பதும் மேம்படுத்துவதும் மற்றும் நல்ல ஆட்சி
- GNHன் 9 களங்களாக கருதப்படுபவை எவை?
உளவியல் நலன், உடல்நலம் ,நேரம் பயன்பாடு, கல்வி ,கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் பின்னடைவு ,நல்ல ஆட்சி ,சமூகத்தின் உயர்வு, சுற்றுச்சூழல் பன்முகத்தன்மை மற்றும் பின்னடைவு மற்றும் வாழ்க்கை தரம்
- இந்தியாவின் தாராளமயமாக்கல் ,தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் மாதிரி என அழைக்கப்படும் புதிய பொருளாதாரக் கொள்கை எது?
1990 பொருளாதாரக் கொள்கை
10TH ECONOMICS STUDY NOTES |மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி ஓர் அறிமுகம்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services