TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE
- மூலப் பொருட்களை எளிதில் பயன்படுத்தக் கூடிய பொருட்களாக மாற்றுவதில் ஈடுபட்டுள்ள எந்த ஒரு மனிதன் நடவடிக்கையும் நிறைவேற்றும் இடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தொழிற்சாலை
- தொழிற்சாலைகள் எந்த வகைகளில் வகைப்படுத்தப்படுகிறது?
பயனர்கள், பயன்படுத்தப்படும் உள்ளீடுகளின் வகை, நிறுவன உரிமையாளர்கள் ,அளவு
- வெளியீடுகளை இறுதி நுகர்வோர் பயன்படுத்தினால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நுகர்வோர் பண்டங்கள் துறை
- வெளியீடுகள் மற்றொரு உற்பத்தியாளரால் பயன்படுத்தப்பட்டால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மூலதன பண்டங்கள் துறை
- சிறிய நிறுவனங்களின் தொகுப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
தொழிற்துறை தொகுப்புகள்
- இங்கிலாந்தில் உலோகம் மற்றும் நெசவுத் தொழிலில் ஈடுபட்ட சிறிய நிறுவனங்களின் செயல்பாடுகளின் தொகுப்பினை புரிந்துகொள்ள 1920களில் முயற்சி செய்த பொருளாதார அறிஞர் யார் ?
ஆல்பிரட் மார்ஷல்
- தொழில்துறை மாவட்டம் என்ற பிரபலமான கருத்தை வெளியிட்டவர் யார்?
ஆல்பிரட் மார்ஷல்
- 1980களில் தொழில்துறை மாவட்டம் என்ற கருத்து எங்கு வெற்றிபெற்றது?
இத்தாலி
- தீப்பெட்டி தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு பின்னர் பட்டாசு உற்பத்தி மற்றும் அச்சுத் தொழிலுக்கு முக்கிய மையமாக மாறிய இடம் எது?
சிவகாசி
- தோல் உற்பத்தி தொழிலானது எந்தப் பகுதிகளில் நடைபெற்றது ?
திண்டுக்கல், வேலூர், ஆம்பூர்
- ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும் ரயில் பெட்டி தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது?
சென்னை
- கொதிகலன் மற்றும் விசையாழிகள் தயாரிப்பதற்காக பாரத கனரக மின்சாதன நிறுவனம் மத்திய அரசால் எங்கு நிறுவப்பட்டுள்ளது ?
திருச்சிராப்பள்ளி
- போர் தளவாடங்கள் தயாரிக்க கனரக வாகன தொழிற்சாலை எங்கு அமைக்கப்பட்டுள்ளது ?
ஆவடி
- எந்த ஆண்டில் சேலம் இரும்பு எஃக்கு ஆலை அமைக்கப்பட்டது ?
1973
- 1970 மற்றும் 80 களில் எந்த பகுதியில் விசைத்தறி நெசவு தொழில் தொகுப்புகள் தொடங்கப்பட்டது ?
கோயம்புத்தூர்
- பின்னலாடைத் தொழில் தொகுப்புகள் விரிவாக்கம் எங்கு நடைபெற்றது?
திருப்பூர்
- வீட்டு அலங்கார பொருட்கள் தொழில் தொகுப்புகள் எங்கு உருவாக்கப்பட்டது?
கரூர்
- தமிழகத்தின் 13 மாவட்டங்களில் எத்தனை தொழில் தொகுப்புகள் பரவியிருக்கின்றன?
27
- ஆசியாவின் டெட்ராய்ட் என அழைக்கப்படுவது எது?
சென்னை
- தமிழகத்தில் எந்த பகுதிகள் சுமைதூக்கும் வாகன முழுபாக கட்டமைப்பிற்கான தொழிற்சாலைகளுக்கு பெயர் பெற்ற இடங்கள்?
நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு பகுதிகள்
- “தென்னிந்தியாவின் மான்செஸ்டர்” என்று அழைக்கப்படுவது எது ?
கோயம்புத்தூர்
- திருப்பூர் நாட்டின் பருத்தி பின்னலாடை ஏற்றுமதியில் எத்தனை சதவீத பங்கினை கொண்டுள்ளது?
80 சதவீதம்
- வாகன கட்டுமான தொழிலமைப்பைத் தவிர மேசைத்துணி, திரைச்சீலைகள் ,படுக்கை விரிப்புகள் மற்றும் துண்டுகள் போன்ற வீட்டு அலங்கார பொருட்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய மையமாக விளங்கும் இடம் எது?
கரூர்
- உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு தரை விரிப்புகளை உற்பத்தி செய்யும் முக்கிய மையங்களாக திகழ்வது எது ?
பவானி மற்றும் குமாரபாளையம்
- பட்டு மற்றும் கைத்தறி புடவைகளுக்கான பிரபலமான பாரம்பரிய கைவினை தொகுப்புகள் உள்ள இடங்கள் எது ?
மதுரை மற்றும் காஞ்சிபுரம் போன்றவை
- தமிழ்நாடு இந்தியாவின் எத்தனை சதவீத தோல் பதனிடும் உற்பத்தித் திறனை பெற்றுள்ளது ?
60%
- தமிழ்நாடு இந்தியாவின் தோல் காலணிகள் மற்றும் தோல் உதிரிபாகங்கள் அதனை சார்ந்த பொருட்களின் உற்பத்தியில் எவ்வளவு சதவீதத்தைக் கொண்டுள்ளது?
38%
- தோல் உற்பத்தி மற்றும் பதனிடும் வசதியை கொண்டுள்ள இடங்கள் என்னென்ன ?
வேலூர் அதனைச் சுற்றியுள்ள ராணிப்பேட்டை, ஆம்பூர் ,வாணியம்பாடி போன்றவை
- தோல் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே முதன்மை மாவட்டமாக திகழ்வது ?
வேலூர்
- தமிழ்நாட்டில் எங்கு தோல் பதனிடுதல் மற்றும் உற்பத்தி தொழிற்சாலைகளில் தொகுப்பு காணப்படுகிறது?
திண்டுக்கல் மற்றும் ஈரோடு
- இந்தியாவில், பட்டாசு உற்பத்திக்கு சிவகாசியின் எத்தனை சதவீத பங்களிப்பு உள்ளது ?
90 சதவீதம்
- சிவகாசி இந்தியாவின் பாதுகாப்பான தீப்பெட்டி உற்பத்திக்கு எவ்வளவு சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது ?
80 சதவீதம்
- சிவகாசி இந்தியாவின் அச்சுப்பணி தேர்வுகளுக்கு எவ்வளவு சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது ?
60 சதவீதம்
- Elcot நிறுவனம் எத்தனை இடங்களில் (ITகுறிப்பிட்ட பொருளாதார சிறப்பு மண்டலங்களை நிறுவியுள்ளது)?
எட்டு இடங்கள்
- Elcot நிறுவனத்தின் 8 பொருளாதார சிறப்பு மண்டலங்கள் என்னென்ன ?
சென்னை- சோழிங்கநல்லூர் ,கோயம்புத்தூர்- விளாங்குறிச்சி ,மதுரை- இலந்தைகுளம், மதுரை -வடபழஞ்சி, கிண்ணிமங்கலம் ,திருச்சிராப்பள்ளி- நவல்பட்டு ,திருநெல்வேலி- கங்கை கொண்டான் ,சேலம் -ஜாகிர் அம்மாபாளையம், ஓசூர் -விஸ்வநாதபுரம்
- தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது ?
1971
- SIPCOTன் விரிவாக்கம் என்ன?
State industries promotion corporation of Tamilnadu
- தமிழ்நாடு மாநில சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
1970
- TANSIDCOன் விரிவாக்கம் என்ன?
Tamilnadu small industries development corporation
- சிறுதொழிற்பிரிவின் புதிய நிறுவனங்களுக்கு மானியம் மற்றும் தொழில்நுட்ப உதவிகளையும் எந்த நிறுவனம் வழங்குகிறது?
தமிழ்நாடு மாநில சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO)
- தமிழ்நாடு தொழில் துறை மேம்பாட்டு கழகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
1965
- TIDCOன் விரிவாக்கம் என்ன?
Tamilnadu industrial development corporation
- தமிழ்நாட்டில் தொழில் தோட்டங்களை நிறுவுவதற்கும் தொழிற்சாலைகளை மேம்படுத்துவதற்கும் உதவும் மற்றொரு அரசு நிறுவனம் எது ?
தமிழ்நாடு தொழில் துறை மேம்பாட்டு கழகம்
- தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
1949
- TIIC ன் விரிவாக்கம் என்ன?
Tamilnadu industrial investment corporation limited
- நாட்டில் ஏற்றுமதிக்கு இடையூறு இல்லாத சூழலை கருத்தில் கொண்டு சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைப்பதற்கான ஒரு கொள்கை எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
ஏப்ரல் 2000
- பல்நோக்கு உற்பத்தி சிறப்பு பொருளாதார மண்டலங்கள் திருநெல்வேலியில் எங்கு அமைந்துள்ளது?
நாங்குநேரி
- அனல் மின் திட்டம் வயலூர் எந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ளது?
எண்ணூர்
- தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் எந்த பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ளது?
கோயம்புத்தூர் சிறப்பு பொருளாதார மண்டலம்
- தானியங்கி பொறியியல் மின்னணுவியல் விண்வெளி மற்றும் பாதுகாப்பு முதலியவை எங்கு அமைந்துள்ளது?
ஓசூர் சிறப்பு பொருளாதார மண்டலம்
- பல்நோக்கு உற்பத்தி எங்கு அமைந்துள்ளது ?
பெரம்பலூர் சிறப்பு பொருளாதார மண்டலம்
- தானியங்கிகள்/ தானியங்கி உதிரிபாகங்கள் (திருவள்ளூரில் அமைந்துள்ளது) எந்த பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ளது?
தானியங்கி நகரம் சிறப்பு பொருளாதார மண்டலம்
- IT/ITE’s மின்னணு வன்பொருள் ,தளவாடங்கள் மற்றும் கிடங்குகள் -திருவள்ளூர் மாவட்டங்களில் அமைந்துள்ளவை எந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ளது?
இந்தியா -சிங்கப்பூர் சிறப்பு பொருளாதார மண்டலம்
- மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு ,விஷ கட்டுப்பாட்டு மையம் மைய மீள் உருவாக்க மருத்துவம் ,மருத்துவ ஆராய்ச்சி போன்றவை எந்த மண்டலத்தின் அமைந்துள்ளது?
உயிரி மருந்துகள் சிறப்பு பொருளாதார மண்டலம்
- மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மையம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
1984
- மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மையத்தின் தலைமையகம் எங்குள்ளது?
சென்னையை அடுத்த தாம்பரம் ஜிஎஸ்டி சாலை
- தமிழ்நாடு சிறுதொழில் கழகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
1965
- TANSIன் விரிவாக்கம் என்ன?
Tamil Nadu small industries corporation limited
- சிறுநிறுவனங்களுக்காக நிறுவப்பட்ட முதல் தொழில்துறை நிறுவனம் எது?
தமிழ்நாடு சிறுதொழில் கழகம்(TANSI)
- ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
ஜனவரி 16, 2016
- ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் நோக்கம் என்ன?
தொழில் தொடங்குவதற்கான தொடக்க முயற்சிகளை ஏற்படுத்துதல், வேலைவாய்ப்பு உருவாக்குதல் மற்றும் வளங்களை உருவாக்குதல்
- ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் எப்போது தொடங்கப்பட்டது ?
ஏப்ரல் 5, 2016
10TH ECONOMICS STUDY NOTES |தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services