- மக்கள் வாழ்க்கையையும் வளர்ச்சியையும் பராமரிப்பதற்காக சாப்பிடும் மற்றும் அருந்தும் எந்த ஒரு பொருளும் எவ்வாறு அழைக்கப்படும்?
உணவு
- உணவு பாதுகாப்பு என்பது எதை குறிக்கும் ?
ஒரு நபர் போதுமான அளவு சாப்பிடுவதையும் சுறுசுறுப்பாக இருப்பதையும் ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்துவதையும் குறிப்பது
- ” எல்லா மக்களும், எல்லா ,நேரங்களிலும் போதுமான ,பாதுகாப்பான மற்றும் சத்தான உணவுக்கான உடல், சமூக மற்றும் பொருளாதார அணுகுமுறையை கொண்டிருக்கும்போது ,அவர்களின் உணவு தேவைகளையும் சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உணவு விருப்பங்களையும் பூர்த்தி செய்வதில் உணவு பாதுகாப்பு இருக்கிறது என உணவு பாதுகாப்பை வரையறுத்தது எது?
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு
- ஊட்டச்சத்து பாதுகாப்பு என்பது “சரிவிகித உணவு, பாதுகாப்பான குடிநீர், சுற்றுச்சூழல் சுகாதாரம் ,ஆரம்ப சுகாதார பராமரிப்பு மற்றும் ஆரம்ப கல்வி ஆகியவற்றின் உடல் பொருளாதார மற்றும் சமூக அணுகல்” என்பது யாருடைய கருத்து?
விவசாய விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதன்
- உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின் மூன்று அடிப்படைக் கூறுகள் என்னென்ன?
கிடைத்தல் மற்றும் உறிஞ்சுதல்
- விரும்பிய அளவுகளில் உணவு இருப்பு இருப்பது எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
உணவு கிடைத்தல்
- முதன்மையாக ,வாங்கும் திறன் பற்றிய கூற்று எவ்வாறு குறிப்பிடப்படுகிறது ?
உணவுக்கான அணுகல்
- உட்கொள்ளும் உணவை உயிரியல் ரீதியாக பயன்படுத்துவதற்கான திறன் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
உணவினை உறிஞ்சுதல்
- 1960 களின் முற்பகுதியில் அமெரிக்கா தனது எந்த சட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு உதவி வழங்கியது?
பொது சட்டம் 480 (பி.எல்.480)
- அமெரிக்கா இந்தியாவுக்கு வழங்கிய உதவியின் நிலைமை பிரபலமாக எவ்வாறு அழைக்கப்பட்டது?
கப்பலுக்கு வாயில் இருப்பு (Ship to mouth)
- சுதந்திர காலத்திற்கும் தற்போதைக்கும் இடையில் இந்தியாவின் உணவு தானியங்களின் விளைச்சல் எவ்வளவு அதிகரித்துள்ளது ?
நான்கு மடங்கு
- ஒரு பயிரின் சாகுபடியில் பல்வேறு செலவுகளை கருத்தில் கொண்டு ஒரு குறிப்பிட்ட பயிருக்கு ஒரு விலை நிபுணர் குழுவினால் நிர்ணயிக்கப்படுகிறது இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
குறைந்தபட்ச ஆதரவு விலை
- சுதந்திர காலத்திற்கும் 2000களின் இடையில் இந்திய நாட்டின் பால் உற்பத்தி எத்தனை மடங்கு அதிகரித்துள்ளது?
எட்டு மடங்கு
- சுதந்திர காலத்திற்கும் 2000களின் இடையில் இந்திய நாட்டின் முட்டை உற்பத்தி எத்தனை மடங்கு அதிகரித்துள்ளது?
40 மடங்கு
- சுதந்திர காலத்திற்கும் 2000களின் இடையில் இந்திய நாட்டின் மீன் உற்பத்தி எத்தனை மடங்கு அதிகரித்துள்ளது?
13 மடங்கு
- தமிழ்நாட்டில் என்ன பொது வழங்கவ் முறை நடைமுறையில் உள்ளது?
உலகளாவிய பொது வழங்கல் முறை(universal PDS)
- இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் என்ன வழங்கல் முறை செயல்பாட்டில் இருந்தது ?
இலக்கு பொது வழங்கல் முறை
- தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் இந்திய நாடாளுமன்றத்தால் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது ?
2013
- தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் எத்தனை சதவீதம் நகர்ப்புற குடும்பங்கள் மற்றும் கிராமப்புற குடும்பங்களை உள்ளடக்கியுள்ளது?
50% நகர்ப்புற குடும்பங்கள் 75 சதவீதம் கிராமப்புற குடும்பங்கள்
- தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி ஒரு குறிப்பிட்ட அளவுகோலின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
முன்னுரிமை குடும்பங்கள்
- தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி மத்திய அரசினால் அரிசி கிலோவிற்கு எந்த விகிதத்தில் வழங்கப்படுகிறது?
₹.3 (கோதுமை கிலோவிற்கு ₹.2 திணை கிலோவிற்கு ₹.1)
- இந்தியாவில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் தொடங்கப்பட்டு எத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் துவங்கப்பட்டது?
மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், நவம்பர் 1, 2016
- இந்தியாவில் எத்தனை அடுக்கு அமைப்புகளில் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன?
மூன்று அடுக்கு
- தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்து நியாயவிலை கடைகளில் சுமார் எத்தனை சதவீதம் கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன?
94%
- உணவு தானியங்கள் சமூகத்தில் ஏழ்மையான பிரிவினருக்கு சந்தை விலையைவிடக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த விலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வெளியீட்டு விலை
- தற்போது எத்தனை நியாய விலை கடைகள் இயங்குகின்றன ?
33,222
- 33,222 நியாயவிலை கடைகளில் எத்தனை கடைகள் கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படுகின்றன?
31,232
- எத்தனை நியாயவிலை கடைகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தால் நடத்தப்படுகின்றன?
1394
- ஒரு அலகு பணம் வாங்கக்கூடிய பொருட்கள் அல்லது சேவைகளின் அளவின் அடிப்படையில் வெளிப்படுத்தப்படும் நாணயத்தின் மதிப்பு எவ்வாறு அழைக்கப்படும்?
வாங்கும் திறன்
- வாங்கும் திறனை பாதிக்கும் காரணிகள் என்னென்ன?
அதிக மக்கள்தொகை, அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்தல், பொருட்களுக்கான தேவை ,பொருட்களின் விலை நாணய மதிப்பை பாதிக்கிறது ,பொருட்களின் உற்பத்தி மற்றும் அளிப்பு, வறுமை மற்றும் சமத்துவமின்மை
- இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் என்ன?
1000க்கு 1.7
- பொருட்களுக்கான தேவை அதிகரிக்கும் போது பொருட்களின் விலை என்னவாகும்?
அதிகரிக்கும்(வாங்கும் சக்தி பாதிக்கப்படும்)
- விலை அதிகரிக்கும் போது வாங்கும் திறன் என்னவாகும்?
குறையும் (இறுதியாக நாணயத்தின் மதிப்பும் குறையும்)
- பொருட்களின் உற்பத்தி மற்றும் அளிப்பு குறையும் பொழுது பொருட்களின் விலை என்னவாகும்?
அதிகரிக்கும்
- ஒரு பொருளின் விலையுடன் சரி செய்யப்பட வேண்டிய தொகையை மதிப்பிடும் வாங்கும் சக்தி தொடர்பான ஒரு கருத்து எது?
வாங்கும் சக்தி சமநிலை
- PPPன் விரிவாக்கம் என்ன?
Purchasing Power Parity)
- சமீபத்தில் (2019)வாங்கும் சக்தி சமநிலையின் அடிப்படையில் இந்தியா எத்தனையாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது?
மூன்றாவது (தேர்வுக்கு முந்தைய நடப்பு நிகழ்வுகளில் சரிபார்த்துக் கொள்ளவும்)
- விவசாய பொருட்களின் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட புதிய விவசாயக் கொள்கை எந்த ஆண்டு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது?
2018
- இந்தியாவின் விவசாய கொள்கையின் முக்கியமான குறிக்கோள்கள் என்ன?
உள்ளீடுகளின் உற்பத்தித்திறனை உயர்த்துதல் ,ஒரு ஹெக்டேருக்கு மதிப்பு கூட்டப்பட்டவை, ஏழை விவசாயிகளின் நலன்களை பாதுகாத்தல்,விவசாயத்துறையை நவீனமயமாக்கல் ,சுற்றுச்சூழல் சீரழிவு ,அதிகாரத்துவ தடைகளை நீக்குதல்
- பல பரிமாண வறுமை குறியீடு யாரால் தொடங்கப்பட்டது?
ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முனைவு
- பல பரிமாண வறுமை குறியீடு எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?
2010
- என்ன காரணிகளால் பல பரிமாண வறுமை உருவாகிறது ?
உடல்நலம், கல்வி ,வாழ்க்கைத்தரம், வருமானம் ,அதிகாரமளித்தல் ,பணியின் தரம் மற்றும் வன்முறையினால் அச்சுறுத்தல் போன்ற ஏழை மக்களின் அனுபவத்தை விளக்கும் பல காரணிகள்
- இந்தியாவின் பல பரிமாண வறுமை குறியீடு 2018 இன் படி இந்தியா தனது வறுமை விகிதத்தை பத்தாண்டுகளில் எவ்வளவாக குறைத்துள்ளது?
55 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக
- இந்தியாவின் பல பரிமாண வறுமை குறியீடு 2018ம் படி 2015 -16 ஆம் ஆண்டுகளில் வறுமையால் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட மிக ஏழ்மையான மாநிலமாக இருந்தது எது?
பீகார்
- எந்த நான்கு ஏழ்மையான மாநிலங்கள் இன்னும் 196 மில்லியன் பலபரிமாண வறுமை குறியீடு உள்ள ஏழை மக்களை கொண்டுள்ளது?
பீகார், ஜார்கண்ட், உத்திரப்பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம்
- 2006ஆம் ஆண்டில் எந்த மாநிலம் மிகக் குறைந்த ஏழ்மை வட்டாரங்களில் ஒன்றாக இருந்தது ?
கேரளா (நடப்பு நிகழ்வுகளில் தற்போதைய நிலவரத்தை படித்துக் கொள்க)
- கேரளா 2006ஆம் ஆண்டில் பல பரிமாண வறுமை குறியீட்டை எவ்வளவாக குறைந்துள்ளது?
92%
- தமிழ்நாட்டின் பல பரிமாண வறுமை குறியீடு அறிக்கை 2018ன் படி தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் எத்தனையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது?
மூன்று: உயர் வறுமை மாவட்டங்கள், மிதமான ஏழை மாவட்டங்கள் மற்றும் குறைந்த அளவிலான வறுமை மாவட்டங்கள்
- தமிழ்நாட்டின் MPI அதிகமான மாவட்டங்கள் எது?
காஞ்சிபுரம், சென்னை, கடலூர், கோயம்புத்தூர், நாகப்பட்டினம்(நடப்பு நிகழ்வுகளில் சரிபார்த்துக் கொள்க)
- தமிழ்நாட்டின் MPI குறைவான உள்ள மாவட்டங்கள் எது?
தர்மபுரி ,பெரம்பலூர், ராமநாதபுரம் ,விருதுநகர், அரியலூர்
- 2015-16 ஆம் ஆண்டில் எத்தனை சதவீத கிராமப்புற பெண்களும் , நகர்ப்புற பெண்களும் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்கள் அல்லது நீண்டகால ஆற்றல் குறைபாடு உடையவர்கள் என தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பினால் கண்டறியப்பட்டது?
27 சதவீதம் கிராமப்புற பெண்கள் 16 சதவீதம் நகர்ப்புறப் பெண்கள்(15-49 வயது வரை)
- எத்தனை சதவீத கிராமப்புற மற்றும் நகர்ப்புற குழந்தைகள் 2015-16 ஆம் ஆண்டில் ரத்தசோகை உடையவர்கள் என கருதப்பட்டனர்?
60 சதவீதம் கிராமப்புற மற்றும் 56 நகர்ப்புற குழந்தைகள்(6 முதல் 59 மாதங்கள்)
- 2015-16 ஆம் ஆண்டில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற குழந்தைகள் எவ்வளவு சதவீதம் தேவையான உயரம் கொண்டிருக்கவில்லை?
கிராமப்புறம் 41%, நகர்ப்புற 31%
- 2015-16 ஆம் ஆண்டில் சுமார் எத்தனை சதவீத குழந்தைகள் எடை குறைவாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது?
20 சதவீதம்
- ஊட்டச்சத்து குறைபாடுகளை நீக்குவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் என்ன திட்டங்களை செயல்படுத்துகின்றன ?
ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள், மதிய உணவு திட்டம், இனப்பெருக்க மற்றும் குழந்தைகள் சுகாதார திட்டங்கள் மற்றும் தேசிய கிராமப்புற சுகாதார பணி
- தமிழ்நாட்டில் எத்தனை குழந்தை மையங்கள் மூலம் ICDS செயல்படுத்தப்படுகிறது?
54,439
- தமிழ்நாட்டில் எந்த நலத் திட்டத்தில் கீழ் ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு 12,000 நிதி உதவி வழங்கப்படுகிறது?
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நலத்திட்டம்
- முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீடு திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
2011-12
- தமிழ்நாட்டில் உள்ள சில ஊட்டச்சத்து திட்டங்கள் என்னென்ன?
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஊட்டச்சத்து உணவு திட்டம் , ஆரம்பக் கல்விக்கு தேசிய ஊட்டச்சத்து ஆதரவு திட்டம்,பொது ICDS திட்டங்கள் மற்றும் உலக வங்கி உதவியுடன் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள், பிரதம மந்திரி கிராமோதயா யோஜனா திட்டம், தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம் ,மதிய உணவு திட்டம்
- புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஊட்டச்சத்து சத்துணவு திட்டம் கிராமப்புறங்களில் எந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது ?
ஜூலை 1,1982
- புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஊட்டச்சத்து சத்துணவு திட்டம் நகர்ப்புற பள்ளி மாணவர்களுக்கு எந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது ?
1984
- புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஊட்டச்சத்து சத்துணவு திட்டம் ஓய்வூதியதாரர்களுக்கு எந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது ?
1983
- புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஊட்டச்சத்து சத்துணவு திட்டம் கர்ப்பிணி பெண்களுக்கு எந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது ?
1995
- பொது ICDS திட்டங்கள் மற்றும் உலக வங்கி உதவியுடன் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?
1991
- தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம் எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?
1980
10TH ECONOMICS STUDY NOTES |உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services