- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வினைபடு பொருட்கள் இணைந்து ஒரு சேர்மம் உருவாகும் வினை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சேர்க்கை வினை அல்லது கூடுகை வினை
- சேர்க்கை அல்லது கூடுகைவினை வேறு எவ்வாறு அழைக்கப்படும்?
தொகுப்பு வினை அல்லது இயைபு வினை
- வினைபடு பொருளின் தன்மையை பொருத்து சேர்க்கை வினைகள் எத்தனை வகையாக பிரிக்கலாம் ?
மூன்று வகை: தனிமம் +தனிமம் -சேர்மம் ,சேர்மம்+ தனிமம்- சேர்மம், சேர்மம்+ சேர்மம் -சேர்மம்
- இயற்கையில் நிகழும் பெரும்பாலான சேர்க்கை வினைகள் எவை?
வெப்ப உமிழ் வினைகள்
- பிணைப்புகளை உடைய பயன்படுத்தப்படும் ஆற்றலின் இயல்பைப் பொறுத்து சிதைவு வினைகள் எத்தனை வகையாகப் பிரிக்கப்படுகின்றன?
1.வெப்பச் சிதைவு வினைகள் 2.மின்னாற் சிதைவு வினைகள் 3.ஒலிச்செறிவு வினைகள்
- சுவற்றில் வெள்ளை அடிக்க பயன்படும் நீற்றுச் சுண்ணாம்பு கரைசல் எது?
கால்சியம் ஹைட்ராக்சைடு
- கால்சியம் ஆக்ஸைடு காற்றில் இருக்கும் கார்பன்டை ஆக்சைடு டன் வினைபுரிந்து எவற்றை உருவாகிறது?
கால்சியம் கார்பனேட்
- சுண்ணாம்புக்கல்லின் வேதி வாய்பாடு என்ன?
CaCO3
- மெர்குரி ஆக்சைடு வெப்பத்தினால் சிதைவுற்று மெர்குரி மற்றும் ஆக்சிஜன் வாயுவாக மாற்றப்படுகிறது இது என்ன வினைக்கு எடுத்துக்காட்டு?
வெப்ப சிதைவு வினை
- சோடியம் குளோரைடு கரைசலில் மின்னாற்றலை செலுத்தும்போது சோடியம் குளோரைடு சிதைவுற்று உலோக சோடியம் மற்றும் குளோரின் வாயு உருவாகின்றது. இந்நிகழ்வுக்கு என்ன பெயர்?
மின்னாற்பகுப்பு
- சில்வர் புரோமைடு மீது ஒளி படும்போது அது சிதைவுற்று சில்வர் உலோகத்தையும் புரோமின் வாயுவையும் தருகிறது இந்நிகழ்வுக்கு என்ன பெயர் ?
ஒளிச்சிதைவு
- இரண்டு சேர்மங்கள் வினைபுரியும் பொழுது அவற்றின் அயனிகள் பரிமாறிக் கொள்ளப்படுமானால் அவ்வினை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இரட்டை இடப்பெயர்ச்சி
- ஒரு நேர் அயனி மற்றொரு நேர் அயனியால் இடப்பெயர்ச்சி செய்யப்படுவதற்கு என்ன பெயர் ?
மெட்டாதிஸிஸ் வினை
- ஒரு இரட்டை இடப்பெயர்ச்சி வினை நிகழ்வதற்கு வினைவிளைப் பொருளில் ஒன்று என்னவாக இருக்கவேண்டும்?
வீழ்படிவாக அல்லது நீராக
- எத்தனை வகையான இடப்பெயர்ச்சி வினைகள் உள்ளன?
வீழ்படிவாக்கல் வினை, நடுநிலையாக்கல் வினை
- இது சேர்மங்களின் நீர்க்கரைசலை கலக்கும் பொழுது அவை வினைபுரிந்து நீரில் கரையாத ஒரு வினைபொருளும் ,நீரில் கரையும் ஒரு வினை பொருளும் தோன்றினால் அவை எவ்வாறு அழைக்கப்படும்?
வீழ்படிவாக்கல் வினை
- பொட்டாசியம் அயோடைடு மற்றும் லெட் நைட்ரேட்டின் தெளிவான கரைசல்களை கலக்கும்போது பொட்டாசியமும் லெட் உலோகமும் ஒன்றையொன்று இடப்பெயர்ச்சி செய்துகொண்டு என்ன சேர்மத்தை தருகின்றன?
மஞ்சள்நிற லெட் அயோடைடு
- ஒரு அமிலமும் காரமும் வினைபுரிந்தால் எவை கிடைக்கும் ?
உப்பும் நீரும்
- ஒரு அமிலமும் காரமும் வினைபுரிந்து உப்பும் நீரும் உருவாகும் வினைக்கு என்ன பெயர்?
நடுநிலையாக்கல் வினை
- எந்த வினையில் வினைபடு பொருள் மிகவும் விரைவாக ஆக்சிஜனுடன் சேர்ந்து எரிந்து ஒன்று அல்லது பல ஆக்சைடுகளையு வெப்ப ஆற்றலையும் தருகின்றன ?
எதிர்வினை
- எரிதல் வினை வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வெப்ப உமிழ் ஆக்ஸிஜனேற்றம்
- வினை விளை பொருள்களை வினைபடு பொருளாக மாற்ற முடியும் வினைக்கு என்ன பெயர் ?
மீள் வினைகள்
- ஒரு வினையில் வினைபடு பொருட்களை மீண்டும் பெற இயலாத வினைக்கு என்ன பெயர்?
மீளா வினை
- ஓரலகு நேரத்தில் ஏதாவது ஒரு வினைபடு பொருள் அல்லது வினைபொருள்களின் அளவு அல்லது செறிவில் ஏற்படும் மாற்றம் எவ்வாறு அழைக்கப்படும்?
ஒரு வேதி வினையின் வேகம்
- துருப்பிடித்தல் நீரில் நடை பெறுவதை விட வேகமாக எதில் நடைபெறும்?
அமிலம்
- வினையின் வேகத்தை பாதிக்கக்கூடிய முக்கிய காரணிகள் என்னென்ன ?
வினைபடு பொருள்களின் தன்மை ,வெப்பநிலை ,வினையூக்கி, அழுத்தம் ,வினைபடு புறப்பரப்பளவு
- ஹைட்ரோக்குளோரிக் அமிலத்துடன் சோடியம் என்ன வேகத்தில் வினைபுரியும்?
விரைவாக
- அசிட்டிக் அமிலத்துடன் சோடியம் என்ன வேகத்தில் வினைபுரியும்?
மெதுவாக
- வினைபடு பொருட்களின் செறிவு அதிகரிக்கும் போது வினை வேகம் என்னவாகும்?
அதிகரிக்கும்
- வெப்பநிலை உயரும் போது வினையின் வேகம் என்னவாகும் ?
அதிகரிக்கும்
- வாயு நிலையில் உள்ள வினைபடு பொருள்களில் அழுத்தம் அதிகரிக்கும்போது வினையின் வேகம் என்னவாகும்?
அதிகரிக்கும்
- வினையில் நேரடியாக ஈடுபடாமல் வினையின் வேகத்தை அதிகரிப்பது ?
வினையூக்கி
- பொட்டாசியம் குளோரைடு சூடுபடுத்தும் போது ஆக்சிஜன் வெளியேறும் வேகம் அதிகரிக்க என்ன பொருள் சேர்க்கப்படுகிறது?
மாங்கனீசு டை ஆக்சைடு
- முன்னோக்கு வினையின் வேகமும் பின்னோக்கு வினையின் வேகம் சமமாக இருக்கும் போது வினை
விளை பொருள்கள் உருவாகாது இந்த நிலைக்கு என்ன பெயர் ?
சமநிலை
- ஒரு நீர் மூலக்கூறிலிருந்து ஒரு புரோட்டான் மற்றொரு நீர் மூலக்கூறுக்கு மாற்றப்பட்டு என்ன அயனிகள் உருவாகின்றன?
ஹைட்ராக்சைடு அயனி
- நீரின் சுய அயனியாதல் பண்பினால் எல்லாம் நீர்க்கரைசல்களும் என்ன அயனிகளை கொண்டிருக்கும் ?
ஹைட்ரஜன் மற்றும் ஹைட்ராக்ஸில்
- pH அளவுகோல் ஒரு கரைசலின் எந்த அயனி செறிவை அளக்க உதவும் ஒரு அளவீடு ஆகும்?
ஹைட்ரஜன்
- pH என்ற குறியீட்டில் p என்பது என்ன சொல்லைக் குறிக்கும்?
Potenz(ஜெர்மானிய சொல்)
- Potenz என்றஸஜெர்மானிய சொல்லின் பொருள் என்ன?
Power
- pH என்பது எந்த ஆண்டு யாரால் அறிமுகம் செய்யப்பட்டது ?
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த உயிரிவேதியியல் விஞ்ஞானி S.P.L சாரன்சன், 1909
- pH என்பது எத்தனை எண்களைக் கொண்ட அளவீடு?
0 முதல் 14 வரை
- அமிலங்களின் pH மதிப்பு எவ்வளவாக இருக்கும்?
7ஐ விடக் குறைவாக
- காரங்களின் pH மதிப்பு எவ்வளவாக இருக்கும்?
7ஐ விடக் அதிகமாக
- நடுநிலைக் கரைசலின் pH மதிப்பு எவ்வளவாக இருக்கும்?
7க்கு சமமாக
- HCL(4%) pH மதிப்பு என்ன?
0
- வயிற்றில் (இரைப்பை ) உள்ள அமிலத்தின் pH மதிப்பு என்ன?
1
- எலுமிச்சை சாற்றின் pH மதிப்பு என்ன?
2
- வினிகர் (அசிட்டிக் அமிலம்) pH மதிப்பு என்ன?
3
- ஆரஞ்சுப்பழத்தின் pH மதிப்பு என்ன?
3.5
- சோடா நீர்,திராட்சை pH மதிப்பு என்ன?
4
- புளித்த பால் pH மதிப்பு என்ன?
4.5
- தூய பால் pH மதிப்பு என்ன?
5
- மனிதனின் உமிழ்நீரின் pH மதிப்பு என்ன?
6-8 (6.5-7.5)
- தூயநீரின் pH மதிப்பு என்ன?
7
- தக்காளி சாற்றின் pH மதிப்பு என்ன?
4.2
- காஃபி pH மதிப்பு என்ன?
5.6
- இரத்த பிளாஸ்மா pH மதிப்பு என்ன?
7.4
- முட்டை வெள்ளைக்கரு pH மதிப்பு என்ன?
8
- கடல்நீர் pH மதிப்பு என்ன?
8
- சமையல் சோடா pH மதிப்பு என்ன?
9
- அமில நீக்கி pH மதிப்பு என்ன?
10
- அமோனியா நீர் pH மதிப்பு என்ன?
11
- சுண்ணாம்பு நீர் pH மதிப்பு என்ன?
12
- வடிகால் சுத்தமாக்கும் பொருள் pH மதிப்பு என்ன?
13
- எரிசோடா(4% NaOH) pH மதிப்பு என்ன?
14
- மெக்னீசியா பால்மம் pH மதிப்பு என்ன?
10
- மனித உடலின் pH மதிப்பு என்ன?
7.0-7.8
- மனித இரத்தத்தின் pH மதிப்பு என்ன?
7.35-7.45
- நமக்கு பற்களின் மேற்புறம் படலமானது எந்தக் கடினமான பொருளால் ஆனது ?
கால்சியம் பாஸ்பேட்
- சிட்ரிக் அமிலம் கொண்ட பழங்கள் எந்த மண்ணில் விளையும் ?
காரத்தன்மை
- நெல் எந்த மண்ணில் விளையும்?
அமிலத்தன்மை
- கரும்பு எந்த மண்ணில் வளரும் ?
நடுநிலைத்தன்மை
- மழைநீரின் pH மதிப்பு என்ன?
7
- அறை வெப்பநிலையில் தூய நீரின் pH மதிப்பு என்ன?
7
10TH CHEMISTRY STUDY NOTES |வேதிவினைகள்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services