- 1860ல் விஞ்ஞானிகளால் எத்தனை தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன?
60 தனிமங்கள்
- 1912 ஆம் ஆண்டு எந்த பிரிட்டன் விஞ்ஞானி ஆவர்த்தன வரிசைப்படுத்தலுக்கு அணு எண் என்பது சிறந்த அடிப்படை என்ற உண்மையைக் கண்டறிந்தார்?
ஹென்றி மோஸ்லே
- தனிமங்களின் கிடைமட்ட வரிசைகள் எவ்வாறு அழைக்கப்படும்?
தொடர்கள்
- ஆவர்த்தன அட்டவணையில் மொத்தம் எத்தனை தொடர்கள் உள்ளன?
ஏழு
- ஆவர்த்தன அட்டவணை தொடரில் மிகச்சிறிய தொடர் எது?
முதலாம் தொடர்
- முதலாம் தொடர் என்ன அணு எண்களைக் கொண்டிருக்கும்?
அணு எண் 1 மற்றும் 2
- முதலாம் தொடரில் என்ன தனிமங்கள் உள்ளன?
ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்
- இரண்டாம் தொடரில் என்ன அணு எண்கள் உள்ளன?
அணு எண் 3 லிருந்து 10 வரை
- இரண்டாம் தொடரில் எத்தனை தனிமங்கள் உள்ளன?
லித்தியம் முதல் நியான் வரை 8 தனிமங்கள்
- மூன்றாம் தொடரில் என்ன அணு எண்கள் உள்ளன?
அணு எண் 11 லிருந்து 18 வரை
- மூன்றாம் தொடரில் எத்தனை தனிமங்கள் உள்ளன?
சோடியம முதல் ஆர்கான் வரை 8 தனிமங்கள்
- நான்காம் தொடரில் என்ன அணு எண்கள் உள்ளன?
அணு எண் 19 லிருந்து 36 வரை
- நான்காம் தொடரில் எத்தனை தனிமங்கள் உள்ளன?
பொட்டாசியம் முதல் கிரிப்டான் வரை 18 தனிமங்கள்
- நான்காம் தொடரில் எத்தனை சாதாரண தனிமங்களும் இடைநிலைத் தனிமங்கள் உள்ளன?
8 சாதாரண தனிமங்கள் 10 இடைநிலைத் தனிமங்கள்
- ஐந்தாம் தொடரில் என்ன அணு எண்கள் உள்ளன?
அணு எண் 37 லிருந்து 54 வரை
- ஐந்தாம் தொடரில் எத்தனை தனிமங்கள் உள்ளன?
ரூபிடியம் முதல் ஸெனான் வரை 18 தனிமங்கள்
- ஐந்தாம் தொடரில் எத்தனை சாதாரண தனிமங்களும் இடைநிலைத் தனிமங்கள் உள்ளன?
8 சாதாரண தனிமங்கள் 10 இடைநிலைத் தனிமங்கள்
- ஆறாம் தொடரில் என்ன அணு எண்கள் உள்ளன?
அணு எண் 55 லிருந்து 86 வரை
- ஆறாம் தொடரில் எத்தனை தனிமங்கள் உள்ளன?
சீசியம் முதல் ரேடான் வரை 32 தனிமங்கள்
- ஆறாம் தொடரில் எத்தனை சாதாரண தனிமங்களும் இடைநிலைத் தனிமங்கள் உள்ளன?
8 சாதாரண தனிமங்கள் ,10 இடைநிலைத் தனிமங்கள் மற்றும் 14 உள் இடைநிலைத் தனிமங்கள் (லாந்தனைடுகள்)
- ஏழாம் தொடரில் என்ன அணு எண்கள் உள்ளன?
அணு எண் 87 லிருந்து 118 வரை
- ஆவர்த்தன அட்டவணையில் மேலிருந்து கீழாக வரிசைப்படுத்தப்பட்ட தனிமங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
தொகுதிகள்
- லாந்தனைடு மற்றும் ஆக்டிணைடுகள் எவ்வாறு அழைக்கப்படும்?
உள் இடைநிலைத் தனிமங்கள்
- கார உலோக தனிமங்களின் இணைதிறன் என்ன?
ஒன்று
- எந்தத் தொகுதி தனிமங்கள் நிலையான எலக்ட்ரான் அமைப்பை வெளிக்கூட்டில் பெற்றிருப்பதால் வினையுறாத் தன்மையைப் பெற்றிருக்கும்?
பூஜ்ஜிய தொகுதி தனிமங்கள்
- தொகுதி எண் 1ல் உள்ள குடும்பம்?
கார உலோகங்கள்
- தொகுதி எண் 2ல் உள்ள குடும்பம்?
கார மண் உலோகங்கள்
- தொகுதி எண் 3 முதல் 12 வரை உள்ள குடும்பம்?
இடைநிலை உலோகங்கள்
- தொகுதி எண் 13 இல் உள்ள குடும்பம்?
போரான் குடும்பம்
- தொகுதி எண் 14ல் குடும்பம் ?
கார்பன் குடும்பம்
- தொகுதி எண் 15 இல் உள்ள குடும்பம்?
நைட்ரஜன் குடும்பம்
- தொகுதி எண் 16ல் உள்ள குடும்பம்?
ஆக்ஸிஜன் குடும்பம் அல்லது கால்கோஜன் குடும்பம்
- தொகுதி எண் 17 என்பதிலுள்ள குடும்பம்?
ஹேலஜன்கள்
- தொகுதி எண் 18 இல் உள்ள குடும்பம் ?
மந்த வாயுக்கள்
- தனிம வரிசை அட்டவணையில் உள்ள தனிமங்களின் பண்புகள் குறிப்பிட்ட சீரான இடைவெளிக்குப்பிறகு மீண்டும் ஒரே மாதிரி இருக்கும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
ஆவர்த்தன பண்பு
- ஒரு அணுக்கருவின் மையத்திற்கும் இணைத்திற எலக்ட்ரான் உள்ள வெளிக்கூட்டிற்கும் இடையேயான தூரம் எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?
அணுவின் ஆரம்
- அணு ஆரம் என்பது தொடர்புடைய அணுக்களுக் இடையே உள்ள பிணைப்பின் தன்மையைப் பொறுத்து எவ்வாறு அழைக்கப்படும்?
சகப்பிணைப்பு ஆரம் அல்லது ஆரம்
- அருகருகே உள்ள இரண்டு உலோக அணுக்களின் உட்கரு களுக்கு இடையே உள்ள தூரத்தின் பாதி எவ்வாறு அழைக்கப்படும்?
உலோக ஆரம்
- உலோகமற்ற தனிமங்களில் உள்ள அணு ஆரம் எவ்வாறு அழைக்கப்படும்?
சகபிணைப்பு ஆரம்
- ஒற்றை சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ள இரண்டு ஒத்த அணுக்களின் அணுக்கருக்களுக்கு இடையேயான தொலைவின் பாதி அளவு எவ்வாறு அழைக்கப்படும்?
சகபிணைப்பு ஆரம்
- தனிம வரிசை அட்டவணையில் தொடரில் இடது புறத்திலிருந்து வலது புறமாக செல்லும்போது தனிமங்களின் அணு ஆரங்கள் என்னவாகும்?
குறையும்
- தனிம வரிசை அட்டவணையில் தொகுதியில் மேலிருந்து கீழாக இறங்கும்போது அணு ஆரங்கள் என்னவாகும்?
அதிகரிக்கும்
- ஒரு அயனியின் கரு மையத்திற்கும் அவ்வயனியின் எலக்ட்ரான் திரள் முகில் மீது அதன் கருவால் கவர்ச்சி விசை செலுத்த இயலும் தூரத்திற்கும் இடையேயான தொலைவு எவ்வாறு அழைக்கப்படும்?
அயனி ஆரம்
- எலக்ட்ரான் இழக்கும் அணு,நேர்மின் சுமை பெற்று எவ்வாறு அழைக்கப்படும்?
நேர்மின் அயனி
- எலக்ட்ரானை ஏற்கும் அணு எதிர் மின்சுமை பெற்று எவ்வாறு அழைக்கப்படும்?
எதிர்மின் அயனி
- நேர்மின் அயனியானது அதன் தொடர்புடைய அணுவைவிட உருவ அளவில் எவ்வாறு காணப்படும்?
சிறியதாக
- எதிர்மின் அயனியானது அதன் தொடர்புடைய அணுவைவிட உருவ அளவில் எவ்வாறு காணப்படும்?
பெரியதாக
- அடி ஆற்றல் நிலையில் உள்ள நடுநிலை தன்மையுடைய தனித்த வாயு நிலை அணு ஒன்றின் இணைதிறன் கூட்டிலிருந்து இலகுவாக பிணைக்கப்பட்டுள்ள ஒரு எலக்ட்ரானை நீக்கி நேர்மின் அயனியாக மாற்றுவதற்கு தேவைப்படும் குறைந்தபட்ச ஆற்றல் எவ்வாறு அழைக்கப்படும்?
அயனியாக்கும் ஆற்றல்
- அயனியாக்கும் ஆற்றல் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அயனியாக்கும் என்தால்பி
- அயனியாக்கும் என்தால்பியின் அலகு என்ன?
KJ/mol
- தனிம வரிசை அட்டவணையில் தொடரில் அணு ஆரம் இடது புறத்திலிருந்து வலது புறமாக செல்கையில் குறைவதால் எலக்ட்ரானை நீக்க எவ்வளவு ஆற்றல் தேவைப்படும்?
அதிக ஆற்றல்
- தனிம வரிசை அட்டவணையில் தொகுதியில் மேலிருந்து கீழாக இறங்குகையில் அணுவின் உருவளவு அதிகரிப்பதாலும் இணைதிற எலக்ட்ரான்கள் இலகுவாகப் பிணைக்கப்பட்டிருப்பதால் அயனியாக்கும் ஆற்றல் எவ்வளவு தேவைப்படுகிறது?
மிக சிறிதளவு
- ஒரு தனித்த நடுநிலை உடைய வாயு நிலைய அணு ஒன்றின் இணைதிறன் கூட்டில் ஒரு எலக்ட்ரானை சேர்த்து அதன் எதிர் மின்சுமை உடைய அயனியை உருவாக்கும் போது வெளிப்படும் ஆற்றல் எவ்வாறு அழைக்கப்படும்?
எலக்ட்ரான் நாட்டம்
- எலக்ட்ரான் நாட்டத்தின் அலகு என்ன?
KJ/mol
- எலக்ட்ரான்களை ஏற்கும் தன்மை அற்றவை எது?
மந்தவாயுக்கள்
- சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ள மூலக்கூறில் உள்ள ஒரு அணுவானது சகப்பிணைப்பில் பங்கிடப்பட்டுள்ள எலக்ட்ரான் இணையினை தன்னை நோக்கி வரும் கவரும் பண்பு எவ்வாறு அழைக்கப்படும்?
எலக்ட்ரான் கவர் திறன்
- எலக்ட்ரான் கவர்தன்மையை கணக்கிடுவதில் என்ன அளவீடு பெரும் பங்களிக்கின்றது?
பாலிங் அளவீடு
- புளோரின் எலக்ட்ரான் கவர் தன்மை என்ன?
4.0
- குளோரினின் எலக்ட்ரான் கவர் தன்மை என்ன?
3.0
- புரோமின் எலக்ட்ரான் கவர் தன்மை என்ன?
2.8
- அயோடின் எலக்ட்ரான் கவர் தன்மை என்ன?
2.5
- ஹைட்ரஜன் எலக்ட்ரான் கவர் தன்மை என்ன?
2.1
- சோடியம் எலக்ட்ரான் கவர் தன்மை என்ன?
1
- எப்பொழுது அணுக்களுக்கு இடையேயான பிணைப்பு 50% அயனித்தன்மையும் 50% சகப்பிணைப்பு தன்மையையும் பெற்றிருக்கும்?
இரு அணுகளுக்கு இடையே உள்ள எலக்ட்ரான் கவர் தன்மை வித்தியாசம் 1.7
- இரு அணுக்களுக்கு இடையே உள்ள எலக்ட்ரான் கவர் தன்மையின் வித்தியாசம் 1.7ஐ விட குறைவாக இருந்தால் அப்பிணைப்பு என்ன பிணைப்பு?
சகப்பிணைப்பு
- இரு அணுக்களுக்கு இடையே உள்ள எலக்ட்ரான் கவர் தன்மையின் வித்தியாசம் 1.7ஐ விட அதிகமாக இருந்தால் அப்பிணைப்பு என்ன பிணைப்பு?
அயனிப்பிணைப்பு
- தனிம வரிசை அட்டவணையில் தொடரில் இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கமாக செல்லும்போது எலக்ட்ரான் கவர் தன்மை என்னவாகும்?
அதிகரிக்கும்
- அணுக்கரு மின் சுமை அதிகரிக்கும் போது எலக்ட்ரானின் கவர்ச்சி விசை என்னவாகும்?
அதிகமாகும்
- தனிம வரிசை அட்டவணையில் தொகுதியில் மேலிருந்து கீழாக இறங்குகையில் எலக்ட்ரான் கவர் தன்மை என்னவாகும் ?
குறைகிறது
- உலோகவியலின் செயல்பாடுகள் எத்தனை படிநிலைகளைக் கொண்டது?
மூன்று:தாதுக்களை அடர்பித்தல் ,உலோகத்தை உருவாக்கல் ,உலோகத்தை தூய்மையாக்கல்
- எக்கனிமத்திலிருந்து உலோகமானது எளிதில் சிக்கனமாக பெரிய அளவில் பிரித்தெடுக்க முடிகிறதோ அதுவே____ எனப்படும்.
தாது
- அலுமினியத்தின் கனிமங்கள் எவை?
பாக்சைட் ,களிமண்
- அலுமினியத்தின் தாது எது ?
பாக்சைட்
- அலுமினியத்தின் கனிமம் எது ?
களிமண்
- உலோகக் தாதுப்பொருட்களோடு கலந்துள்ள மண் மற்றும் பாறைத் ன மாசுக்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
காங்கு அல்லது தாதுக்கூளம்
- தாது உடன் உள்ள மாசுக்களை உருகிடும் சேர்மமாக மாற்றி அதை நீக்கிட தாதுவுடன் சேர்க்கும் பொருள் எவ்வாறு அழைக்கப்படும்?
இளக்கி
- உலோகத்தை பிரித்தலில் இளக்கி தாதுக்கூளத்துடன் வினைபுரிந்து உருவாக்கும் வினை பொருளுக்கு என்ன பெயர்?
கசடு
- வறுத்த உலோக ஆக்சைடை, உலோகமாக உருகிய நிலையில் ,மாற்றும் ஒரு ஒடுக்கவினைக்கு என்ன பெயர்?
உருக்கி பிரித்தல்
- தாதுக்களின் இயல்பை பொறுத்து அவற்றின் உலோகத்தை பிரித்தெடுக்கும் முறையானது எத்தனை வகைப்படும்?
நான்கு வகைப்படும்: புவியீர்ப்பு முறையில் பிரித்தல், காந்த முறை பிரித்து உரை மிதப்பு முறை விதிமுறை
- ஆக்சைடு தாதுக்கள் என்ன முறையால் தூய்மையாக்க படுகின்றன?
புவியீர்ப்பு முறையில் பிரித்தல்
- தாதுக்களும் தாதுக் கூளங்களுக்கும் இடையில் உள்ள அடர்த்தி வேறுபாடு எந்த முறையின் அடிப்படையாகும்?
புவி ஈர்ப்பு முறையில் பிரித்தல்
- தாதுவோ அல்லது தாது கூளமோ காந்தத் தன்மை பெற்றிருப்பின் எந்த முறை செயல்படுத்தப்படுகிறது?
காந்த முறை பிரிப்பு
- பைன் ஆயிலின் மூலம் தாதுக்களையும், நீரின் மூலம் தாதுக்கூளங்களையும் எந்த அளவிற்கு எளிதில் ஈரப்பதம் ஏற்றமுடிவது எந்த முறையின் தத்துவமாகும்?
நுரைமிதப்பு முறை
- எவை நுரைமிதப்பு முறையில் பிரிக்கப்படுகிறது?
லேசான தாதுக்களான சல்பைடு தாதுக்கள்
- மிகத் தூய நிலையில் உள்ள தாதுக்களை அடர்பித்தலுக்கு எந்த முறை பயன்படுத்தப்படுகிறது?
வேதிமுறை
- ஆக்சைடு தாதுக்கள் என்னென்ன?
பாக்சைட் ( Al2O3.2H2O),குப்ரைட்(CU2O) ,ஹேமடைட்(Fe2O3)
- கார்பனேட் தாதுக்கள் என்னென்ன?
மார்பிள்(CaCO3) ,மாக்னசைட்(MgCO3), சிட்ரைட்(FeCO3)
- ஹேலைடு தாதுக்கள் என அழைக்கப்படுபவை?
கிரையோலைட்(Na3ALF6)ஃப்ளுர்ஸ்பார்(CaF2), பாறைஉப்பு(NaCl)
- சல்பைடு தாதுக்கள் என அழைக்கப்படுபவை?
கலீனா(PbS), இரும்பு பைரைட்(FeS2),ஜிங்க ப்ளன்ட்(ZnS)
- தமிழ்நாட்டில் சுண்ணாம்புக்கல் தாதுக்கள் கிடைக்கும் இடம்?
கோவை, கடலூர் ,திண்டுக்கல்
- தமிழ்நாட்டில் ஜிப்சம் தாதுக்கள் கிடைக்கும் இடங்கள் எவை?
திருச்சி, கோவை
- தமிழ்நாட்டில் டைட்டானிய கனிமங்கள் கிடைக்கும் இடங்கள் எவை?
கன்னியாகுமரி ,நெல்லை மற்றும் தூத்துக்குடி
- தமிழ்நாட்டில் குரோமைட் தாதுக்கள் கிடைக்கும் இடங்கள்?
கோவை ,சேலம்
- தமிழ்நாட்டில் மேக்னடைட் தாதுக்கள் கிடைக்கும் இடங்கள்?
தர்மபுரி, ஈரோடு ,சேலம் திருவண்ணாமலை
- தமிழ்நாட்டில் டங்ஸ்டன் தாது கிடைக்கும் இடங்கள் ?
மதுரை ,திண்டுக்கல்
- எந்த உலோகங்களை தவிர மற்ற அனைத்து உலோகங்களும் அறை வெப்பநிலையில் திட நிலையில் இருக்கும்?
மெர்க்குரி மற்றும் காலியம்
- எந்த உலோகங்கள் கத்தியால் வெட்ட இயலும் மென்மை பெற்றவை?
சோடியம் ,பொட்டாசியம்
- உலோகங்களில் அதிக அடர்த்தி பெறாதவை?
சோடியம் மற்றும் பொட்டாசியம்
- உலோக ஆக்சைடுகளிலிருந்து உலோகத்தை பிரித்தல் எத்தனை வகைப்படும் ?
மூன்று: அதி வினைபடும் உலோகங்கள், சாதாரணமாக வினைபடும் உலோகங்கள், குறைவாக வினைபடும் உலோகங்கள்
- அதி வினைபடு உலோகங்கள் எவை?
Na,K,Ca,Mg,Al
- சாதாரணமாக வெளிப்படும் உலோகங்கள் எவை?
Zn,Fe,pb,Cu
- குறைவாக வெளிப்படும் உலோகங்கள் எவை?
Ag,Hg
- உலோக ஆக்சைடுகள் பொதுவாக என்ன தன்மை உடையது ?
காரத்தன்மை
- புவி ஓட்டில் மிக செறிந்து காணப்படும் உலோகம் எது?
அலுமினியம்
- அலுமினியத்தின் தாதுக்கள் என்னென்ன?
பாக்சைட்(Al2O3.2H2O),கிரையோலைட்(Na3AlF6),கொரண்டம்(Al2O3)
- பாக்சைட்டை அலுமினாவாக மாற்றம் செய்வது என்ன வழிமுறை ?
பேயர் முறை
- அலுமினாவை மின்னாற்பகுத்தல் மூலம் ஒடுக்கம் செய்வது என்ன முறை?
ஹால் முறை
- அலுமினியத்தின் உருகுநிலை என்ன?
660 டிகிரி செல்சியஸ்
- எந்த வெப்பநிலையில் அலுமினியம் காற்றுடன் வினைபுரிந்து ஆக்சைடு மற்றும் நைட்ரேட்டுகளை உருவாக்கும்?
800 டிகிரி செல்சியஸ்
- எவற்றுடன் அலுமினியம் வினைபுரியாது?
உலர்ந்த காற்று மற்றும் நீர்
- நீர்த்த மற்றும் அடர் Hcl அமிலத்துடன் அலுமினியம் வினைபுரிந்து என்ன வாயுவை வெளியிடுகிறது?
H2
- அலுமினியம் நீர்த்த சல்பியூரிக் அமிலத்துடன் என்ன வாயுவை வெளியிடுகிறது ?
ஹைட்ரஜன்
- அலுமினியம் அடர் சல்பியூரிக் அமிலத்துடன் என்ன வாயுவை வெளியிடுகிறது?
சல்பர்-டை-ஆக்சைடு
- அலுமினியம் பவுடரும் ,இரும்பு ஆக்சைடும் கொண்ட கலவையை சூடாக்கும் போது இரும்பு ஆக்சைடு இரும்பாக ஒடுக்கப்படுகிறது.இவ்வினைக்குஎன்ன பெயர்?
அலுமினிய வெப்ப ஒடுக்க வினை
- அலுமினியத்தின் பயன்கள் என்னென்ன?
வீட்டு பாத்திரங்கள் செய்ய ,மின்கம்பி செய்ய ,விமானம் மற்றும் தொழில் இயந்திரங்களின் பாகங்கள் செய்யப்பயன்படுகிறது
- யாரால் தாமிரம் குப்ரம் என அழைக்கப்பட்டது? ரோமானியர்கள்
- தாமிரம் எந்த தீவில் இருந்து எடுக்கப்பட்டது?
சைப்ரஸ் தீவு
- தாமிரத்தின் தாதுக்கள் என்னென்ன?
காப்பர் பைரைட்(CuFeS2),குப்ரைட் அல்லது ரூபி காப்பர்(Cu2O) காப்பர் கிளான்ஸ் (Cu2S)
- காப்பரின் முக்கிய தாது எது?
காப்பர் பயிரைட்
- எத்தனை சதவீதம் தாமிரம் காப்பர் பயிரைட் தாதுவிலிருந்து பெறப்படுகிறது?
76%
- கொப்புள காப்பரில் எத்தனை சதவீதம் காப்பர் உள்ளது?
98% காப்பர் 2% மாசுக்கள்
- தாமிரம் என்ன நிறம் உள்ள உலோகம்?
செம்பழுப்பு
- தாமிரத்தின் உருகுநிலை என்ன?
1356 டிகிரி செல்சியஸ்
- தாமிரம் கார்பன்டை ஆக்சைடு மற்றும் ஈரப்பதத்துடன் வினைபுரிந்து என்ன படலத்தை உருவாக்குகிறது?
பச்சை நிற காப்பர் கார்பனேட் படலம்
- வெவ்வேறு வெப்பநிலைகளில் தாமிரம் ஆக்சிஜனுடன் வினைபுரிந்து என்ன ஆக்சைடுகள் உருவாகும் ?
குப்ரிக் ஆக்சைடு,குப்ரஸ் ஆக்சைடே
- குப்ரிக் ஆக்சைடு என்ன நிறம்?
கறுப்பு நிறம்
- குப்ரஸ் ஆக்சைடு என்ன நிறம்?
சிவப்பு நிறம்
- தாமிரம் காற்றில்லா சூழ்நிலையில் எந்த அமிலங்களுடன் வினைபுரியாது?
நீர்த்த HCL & H2SO4
- தாமிரம் நீர்த்த HNO3உடன் வினைபுரிந்து என்ன வாயுவை வெளியேற்றுகிறது?
நைட்ரிக் ஆக்சைடு
- தாமிரம் குளோரின் உடன் வினைபுரிந்து எவற்றை தருகின்றது ?
காப்பர் (II) குளோரைடு
- தாமிரத்தின் பயன்கள் என்னென்ன?
மின் கம்பிகள்& மின் உபகரணங்கள் தயாரிக்க,, மின் முலாம் பூசப் பயன்படுகிறது மற்றும் நாணயங்கள் அணிகலன்கள் உருவாக்க பயன்படுகிறது
- அலுமினியத்தை அடுத்து மிக அதிகமாக காணப்படும் உலோகம் எது?
இரும்பு
- இரும்புவின் தாதுக்கள் என்னென்ன?
ஹேமடைட் (Fe2O3) ,மேக்னடைட்(Fe3O4), இரும்பு பைரைட்(FeS2)
- இரும்பின் முக்கிய தாது எது?
ஹேமடைட்
- இரும்பு காற்றுடன் வினைபுரிந்து எவற்றை உருவாக்குகிறது?
இரும்பு ஆக்சைடு
- இரும்பானது ஈர காற்றுடன் வினை புரிவதால் என்ன உருவாகிறது ?
பழுப்புநிற ,நீரேறிய பெர்ரிக் ஆக்சைடை
- பழுப்புநிற ,நீரேறிய பெர்ரிக் ஆக்சைடை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
துரு
- செஞ் சூடேற்றிய இரும்பின் மீது நீராவியை பாய்ச்சும்போது என்ன ஆக்ஸைடு உருவாகிறது?
மேக்னடிக் ஆக்சைடு
- இரும்பு குளோரினுடன் வினை புரிந்தால் என்ன உருவாகும்?
ஃபெரிக்குளோரைடு
- இரும்பு நீர்த்த HCL மற்றும் H2SO4 அமிலங்களுடன் வினைபுரிந்து என்ன வாயுவை வெளியேற்றுகிறது?
H2
- நீர்த்த நைட்ரிக் அமிலத்துடன் இரும்பு குளிர்ந்த நிலையில் வினைபுரிந்து எவற்றை உருவாக்குகின்றது ?
பெரஸ் நைட்ரேட்
- அடர் கந்தக அமிலத்துடன் இரும்பு வினைபுரிந்து எதை உருவாக்கும்?
ஃபெரிக் சல்பேட்
- அடர் நைட்ரிக் அமிலத்தில் இரும்பை அமைக்கும்போது எது உருவாகிறது?
இரும்பு ஆக்சைடு படலம்
- வார்ப்பிரும்பு எத்தனை சதவீதம் கார்பன் உடையது?
2 சதவீதம் முதல் 4.5 சதவீதம் வரை
- எஃகு எத்தனை சதவீதம் கார்பன் உடையது?
0.25 சதவீதம் முதல் 2 சதவீதம் வரை
- தேனிரும்பு எத்தனை சதவீதம் கார்பன் உடையது?
0.25 சதவீதத்திற்கும் குறைவாக
- வார்ப்பிரும்பு எதை உருவாக்க பயன்படுகிறது ?
ஸ்டவ்கள்,கழிவுநீர் குழாய்கள், ரேடியேட்டர்கள்,கழிவுநீர் சாக்கடை மூடிகள்,இரும்பு வேலிகள்
- எஃகு என்னென்ன தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது?
கட்டிடக் கட்டுமானங்கள்,எந்திரங்கள், மின்கடத்துக்கம்பிகள் ,டிவி கோபுரங்கள் மற்றும் உலோக கலவைகள்
- தேனிரும்பு எவை செய்ய பயன்படுகிறது ?
கம்பிச்சுருள் ,மின்காந்தங்கள் மற்றும் நங்கூரம்
- பாதரசத்துடன் உலோகம் சேர்ந்த கலவைக்கு என்ன பெயர் ?
ரசக்கலவை
- எந்த ரசக்கலவை பற்குழிகள் அடைக்க பயன்படுத்தப்படுகிறது?
சில்வர் டின் ரசக்கலவை
- எந்த உலோகங்களை உருக்கி சேர்த்தல் மூலம் பித்தளை உருவாக்கப்படுகிறது?
ஜிங்க் மற்றும் காப்பர்
- இரும்பின் பங்கை பொறுத்து உலோகக் கலவையை எத்தனை வகையாக பிரிக்கலாம்?
இரண்டு: ஃபெரஸ் உலோகக்கலவை& ஃபெரஸ் இல்லா உலோகக் கலவை
- இரும்பின் எந்த உலோகக் கலவையில் இரும்பு முக்கிய பங்களிக்கிறது?
ஃபெரஸ் உலோகக்கலவை
- இரும்பின் எந்த உலோகக் கலவையில் இரும்பு முக்கிய பங்களிப்பு இல்லை?
ஃபெரஸ் இல்லா உலோகக் கலவை
- ஃபெரஸ் உலோகக்கலவைக்கு எடுத்துக் காட்டு?
துருப்பிடிக்காத இரும்பு, நிக்கல் இரும்பு கலவை
- ஃபெரஸ் இல்லா உலோகக் கலவைக்கு எடுத்துக் காட்டு எது?
அலுமினியக்கலவை & காப்பர் கலவை
- பித்தளையின் பயன்கள் என்னென்ன?
மின் இணைப்புகள் ,பதக்கங்கள் ,அலங்காரப்பொருட்கள், கடின உபகரணங்கள்
- வெண்கலத்தின் பயன்கள் என்னென்ன?
சிலைகள், நாணயங்கள், அழைப்பு மணிகள்
- டியராலுமின் என்பது எவற்றை உள்ளடக்கிய கலவை?
அலுமினியம், மக்னீசியம் ,மாங்கனீசு, காப்பர்
- டியராலுமின் பயன்கள் என்னென்ன?
விமானத்தின் பகுதிகள், பிரஷர் குக்கர்கள்
- மெக்னலியம் எவற்றை உள்ளடக்கிய கலவை?
அலுமினியம், மெக்னீசியம்
- மெக்னலியம் பயன்கள் என்னென்ன ?
விமானத்தின் பகுதிகள் & அறிவியல் உபகரணங்கள்
- துருப்பிடிக்காத இரும்பு எவற்றை உள்ளடக்கிய கலவை?
இரும்பு ,கார்பன் ,நிக்கல் ,குரோமியம்
- துருப்பிடிக்காத இரும்பு பயன்கள் என்னென்ன ?
பாத்திரங்கள் வெட்டும் கருவிகள் ,வாகன உதிரி பாகங்கள்
- நிக்கல் இரும்பு எவற்றை உள்ளடக்கியது ?
இரும்பு, கார்பன், நிக்கல்
- நிக்கல் இரும்பின் பயன்கள் என்னென்ன?
கம்பிகள் ,விமானத்தின் உதிரிபாகங்கள் ,உந்திகள்
- துரு என்பது வேதியல் முறையில் எவ்வாறு அழைக்கப்படும்?
நீரேறிய ஃபெரிக் ஆக்சைடு (Fe2.O3.xH2O)
- ஈரப்பதம் இல்லா நிலையில் நடைபெறும் அரிமான செயல் எவ்வாறு அழைக்கப்படும்?
உலர் அரிமானம்
- ஈரப்பதத்தால் நடைபெறும் அரிமான நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஈரநிலை அரிமானம்
- இரும்பின் மீது துத்தநாக மின்முலாம் பூசுதலுக்கு என்ன பெயர்?
நாக முலாம் பூசுதல்
- ஒரு உலோகத்தை மற்றொரு உலோகத்தின் மேல் மின்சாரத்தின் மூலம் பூசுதல் எவ்வாறு அழைக்கப்படும் ?
மின்முலாம் பூசுதல்
- உலோகத்தின் புறப்பரப்பை மின் வேதிவினைகளின் மூலம் அரிமான எதிர்ப்புள்ளதாய் மாற்றும் நிகழ்வுக்கு என்ன பெயர்?
ஆனோடாக்கல்
- ஆனோடாக்கல் முறைக்கு என்ன உலோகம் பயன்படுகிறது ?
அலுமினியம்
- எளிதில் அரிமானம் அடையும் உலோகத்தை ஆனோடாகவும் பாதுகாக்கவேண்டிய உலோகத்தை கேத்தோடாகவும் கொண்டு மின்வேதி வினைக்கு உட்படும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கேத்தோடு பாதுகாத்தல்
- கேத்தோடு பாதுகாத்தல் வினையில் எளிதில் அரிபடும் உலோகம் எவ்வாறு அழைக்கப்படும்?
தியாக உலோகம்
- இந்தியாவில் திறக்கப்பட்ட முதல் கடல் பாலம் எது?
பாம்பன் பாலம்
- பாம்பன் பாலம் எந்த ஆண்டு திறக்கப்பட்டது?
1914
- பந்த்ராவலி கடல் பாலம் எந்த ஆண்டு திறக்கப்பட்டது?
2010
10TH CHEMISTRY STUDY NOTES |தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services