- ஹார்மோன் என்பது எந்த மொழி சொல்?
கிரேக்கம்(ஹார்மன்)
- கிரேக்க மொழியில் ஹார்மன் என்பது என்ன பொருள்படும்?
கிளர்ச்சி
- தாவரங்களில் குறைவான செறிவில் உற்பத்தி செய்யப்படும் கரிம மூலக்கூறுகளுக்கு என்ன பெயர்?
தாவர ஹார்மோன்கள்
- எத்தனை வகையான முக்கிய தாவர ஹார்மோன்கள் உள்ளன ?
ஐந்து
- ஐந்து முக்கிய தாவர ஹார்மோன்கள் என்னென்ன?
ஆக்சின்கள், சைட்டோகைனின்கள் ,ஜிப்ரலின்கள்,அப்சிசிக் அமிலம் மற்றும் எத்திலின்
- ஐந்து முக்கிய தாவர ஹார்மோன்களில் தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஹார்மோன்கள் என்னென்ன?
ஆக்சின்கள், சைட்டோகைனின்கள் &ஜிப்ரலின்கள்
- எந்த தாவர ஹார்மோன்கள் தாவர வளர்ச்சியை தடை செய்கின்றன?
அப்சிசிக் அமிலம் மற்றும் எத்திலின்
- தாவர ஹார்மோன்களில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டவை?
ஆக்சின்கள்
- ஆக்சின் என்ற சொல்லை அறிமுகம் செய்தவர் யார்?
கால் மற்றும் ஹாஜன் ஸ்மித்(1931)
- ஆக்சின்கள் தாவரத்தின் எந்தப் பகுதியில் உற்பத்தி செய்யப்படுகின்றன?
வேர் மற்றும் தண்டின் நுனி பகுதி
- சார்லஸ் டார்வின்(1880) எந்த தாவரத்தில் முளைக்குருத்து உறையானது ஒளியின் திசை நோக்கி வளர்வதையும் வளைவதையும் கண்டறிந்தார்?
கேனரி புல் (ஃபலாரிஸ் கனாரியன்ஸிஸ்)
- முளைக்குருத்து உரையின் நுனியிலிருந்து அடிப்பகுதிக்கு ஒருவிதமான ஆதிக்க பொருள் கடத்தப்படுகிறது என்ற முடிவுக்கு வந்தவர் யார்?
சார்லஸ் டார்வின்
- சார்லஸ் டார்வின் கூறிய ஆதிக்கப் பொருள்தான் ஆக்சின் என பின்னர் எந்த அறிஞரால் அடையாளம் காணப்பட்டது/பெயரிடப்பட்டது?
ஃபிரிட்ஸ் வார்மால்ட் வெண்ட்
- எந்தத் டச்சு நாட்டு உயிரியல் அறிஞர் தாவரங்களில் ஆக்சின் இருப்பதையும் அதன் விளைவுகளையும் விளக்கினார்?
ஃபிரிட்ஸ் வார்மால்ட் வெண்ட்
- ஆக்சின் என்பதற்கு என்ன பொருள் ?
வளர்ச்சி
- ஆக்சின்கள் எத்தனை வகைப்படும் ?
இரண்டு :இயற்கை ஆக்சின்கள் மற்றும் செயற்கை ஆக்சின்கள்
- தாவரங்களில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சின்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
இயற்கை ஆக்சின்கள்
- இயற்கை ஆக்சின்களுக்கு எடுத்துக்காட்டு?
இன்டோல்- 3-அசிட்டிக் அமிலம்
- ஆக்ஸின்களை ஒத்த பண்புகளைக் கொண்ட செயற்கையாக தயாரிக்கப்படும் ஆக்ஸின்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
2-4 D( டைகுளோரோ பீனாக்சி அசிட்டிக் அமிலம் )
- தாவரத்தின் தண்டு மற்றும் முளைக்குருத்தின் நீட்சியை ஊக்குவித்து அவற்றை வளரச் செய்வது எது ?
ஆக்சின்கள்
- குறைந்த செறிவில் ஆக்சின்கள் எது உருவாதலை தூண்டுகின்றன?
வேர்
- அதிக செறிவில் ஆக்சின்கள் எது உருவாதலை தடை செய்கின்றன?
வேர்
- நுனி மொட்டுகளில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சின்கள் பக்கவாட்டு மொட்டுகளின் வளர்ச்சியை தடை செய்கின்றன இதற்கு என்ன பெயர்?
நுனி ஆதிக்கம்
- எவற்றை தெளிப்பதால் கருவுறுதல் நடைபெறாமல் விதையில்லா கனிகள் உருவாக்க தூண்டப்படுகிறது?
ஆக்சின்கள்
- உதிர்தல் அடுக்கு உருவாதலை தடை செய்வது எது?
ஆக்சின்கள்
- இயற்கை ஆக்சின்களுக்கு எடுத்துக்காட்டு?
பினைல் அசிட்டிக் அமிலம் மற்றும் இண்டோல் 3 அசிடோ நைட்ரைல்(IAN)
- செயற்கை ஆக்சின்களுக்கு எடுத்துக்காட்டு?
இண்டோல்-3 பியூட்ரிக் அமிலம்(NAA),நாப்தலின் அசிடிக் அமிலம் மற்றும் 2,4,5-T(2,4,5- டிரை குளோரோ பினாக்ஸி அசிட்டிக் அமிலம்)
- தாவர செல்களில் செல்பகுப்பு அல்லது சைட்டோகைனசிஸ் நிகழ்வை ஊக்குவிக்கும் தாவர ஹார்மோன்கள் எது ?
சைட்டோகைனின்கள்
- சைட்டோஸ் என்றால் என்ன பொருள்?
செல்
- சைனஸிஸ் என்றால் என்ன பொருள்?
பகுப்பு
- சைட்டோகைனின்கள் முதலில் எதில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டன?
ஹெர்ரிங் மீனின் விந்து செல்கள்
- சியா மெய்ஸ் (மக்காச்சோளம்) தாவரத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட சைட்டோகைனின் எது?
சியாட்டின்
- சைட்டோகைனின் எதில் அதிகமாக காணப்படுகிறது?
தேங்காயின் இளநீரில்
- ஆக்சின்கள் இருக்கும்போது சைட்டோகைனின்கள் எவற்றை தூண்டுகின்றன ?
செல்பகுப்பு
- செல்களை நீட்சி அடைய செய்ய பயன்படுவது எது ?
சைட்டோகைனின்கள்
- திசு வளர்ப்பு முறையில் காலஸில்லிருந்து புதிய உறுப்புகள் தோன்ற எவை தேவைப்படுகின்றன?
ஆக்சின்கள்& சைட்டோகைனின்கள்
- நுனி மொட்டு இருக்கும்போதே பக்கவாட்டு மொட்டின் வளர்ச்சியை எவை ஊக்குவிக்கின்றன ?
சைட்டோகைனின்கள்
- என்ன ஹார்மோன்களை பயன்படுத்தும்போது தாவரங்கள் முதுமை அடைவது தாமதப்படுத்துகிறது ?
சைட்டோகைனின்கள்
- சைட்டோகைனின்களை பயன்படுத்தும்போது தாவரங்கள் முதுமை அடைவதுத் தாமதப்படுத்துகிறது. இதற்கு என்ன பெயர் ?
ரிச்மாண்ட் லாங்க் விளைவு
- அதிக அளவு காணப்படும் தாவர ஹார்மோன்கள் எது?
ஜிப்ரலின்கள்
- நெல் பயிரில் பக்கானே நோய் அல்லது கோமாளித்தன நோயை கண்டறிந்தவர் யார்?
குருசோவா(1926)
- நெல்லின் கணுவிடை பகுதியின் இத்தகைய நீட்சி எந்த பூஞ்சையால் ஏற்பட்டது?
ஜிப்ரில்லா பியூஜிகுராய்
- தாவரங்களின் மீது எவற்றை தெளிக்கும் போது கணுவிடை பகுதியின் அசாதாரண நீட்சியை தூண்டுகிறது?
ஜிப்ரலின்கள்
- நெருங்கிய இலையடுக்கம் கொண்ட தாவரங்களின் மீது ஜிப்பரலின்களை தெளிக்கும் போது திடீரென தண்டு நீட்சிய டைவதும் அதன் தொடர்ச்சியாக மலர்தலும் நிகழ்கின்றன இதற்கு என்ன பெயர் ?
போல்டிங்
- இருபால் இணைந்த தாவரங்களில் ஆண் மலர்கள் தோன்றுவதை ஊக்குவிப்பது எது?
ஜிப்ரலின்கள்
- உருளைக்கிழங்கின் உறக்க நிலையை நீக்கும் ஹார்மோன் எது?
ஜிப்ரலின்கள்
- விதைகள் அற்ற கனிகளை தூண்டுவதில் ஆக்சின்களை விட திறன் மிக்கவை எது?
ஜிப்ரலின்கள்
- தாவரங்களில் உதிர்தல் மற்றும் உறக்க நிலையை ஒழுங்குபடுத்தும் வளர்ச்சி அடக்கி ஹார்மோன் எது?
அப்சிசிக் அமிலம்
- இறுக்க நிலை ஹார்மோன் என அழைக்கப்படுவது எது?
அப்சிசிக் அமிலம்
- அப்சிசிக் அமிலம் தாவரங்களில் எதில் காணப்படுகிறது?
பசுங்கணிகம்
- இலைகளின் பச்சையத்தை இழக்கச் செய்து மூப்படைவதை ஊக்குவிப்பது எது?
அப்சிசிக் அமிலம்
- குளிர் காலங்களில் போது பிர்ச் போன்ற மரங்களில் மொட்டு உறக்கத்தை தூண்டுவது எது?
அப்சிசிக் அமிலம்
- வாயு நிலையில் உள்ள தாவர ஹார்மோன் எது?
எத்திலின்
- எந்த ஹார்மோன் பொதுவாக கனிகள் முதிர்ச்சியடைவதிலும் பழுப்பதிலும முக்கிய பங்காற்றுகிறது?
எத்திலின்
- கனிகள் பழுப்பதை ஊக்குவிக்கும் ஹார்மோன் எது? எத்திலின்
- இரு விதையிலைத் தாவரங்களில் வேர் மற்றும் தண்டு நீட்சியடைவதை தடை செய்யும் ஹார்மோன் எது ?
எத்திலின்
- இலைகள் மற்றும் மலர்கள் முப்படைவதை விரைவுபடுத்தும் ஹார்மோன் எது?
எத்திலின்
- மொட்டுகள் மற்றும் விதைகளின் உறக்கத்தை நீக்கும் ஹார்மோன் எது?
எத்திலின்
- விலங்கினங்களில் பொதுவாக எத்தனை வகையான சுரப்பிகள் காணப்படுகின்றன?
நாளமுள்ள சுரப்பிகள், நாளமில்லா சுரப்பிகள்
- நாளமில்லா சுரப்பிகள் சுரப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன ?
ஹார்மோன்கள்
- ஹார்மோன்கள் எதன் மூலம் உடலின் தொலைதூர பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகின்றன?
ரத்தம்
- நாளமில்லா சுரப்பி மண்டலம் மற்றும் அதன் செயல்பாடுகளை பற்றிய உயிரியல் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
எண்டோகிரைனாலாஜி
- நாளமில்லா சுரப்பி மண்டலத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
தாமஸ் அடிசன்
- ஹார்மோன் என்ற சொல் முதன் முதலில் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
1909
- ஹார்மோன் என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் யார்?
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த W.H.பேய்லிஸ் மற்றும் E.H.ஸ்டார்லிங்
- H.பேய்லிஸ் மற்றும் E.H.ஸ்டார்லிங் முதன் முதலில் கண்டறிந்த ஹார்மோன் எது ?
செக்ரிட்டின்
- நாளமுள்ள சுரப்பிகளுக்கு எடுத்துக்காட்டு?
உமிழ்நீர் சுரப்பிகள், பால் சுரப்பிகள் ,வியர்வை சுரப்பிகள்
- மனிதரிலும் பிற முதுகெலும்பிகளிலும் காணப்படும் நாளமில்லா சுரப்பிகள் எவை?
பிட்யூட்டரி சுரப்பி ,தைராய்டு சுரப்பி,பாரா தைராய்டு சுரப்பி ,கணையம்(லங்கார்ஹன் திட்டுகள்) அட்ரீனல் சுரப்பி (கார்டெக்ஸ் மற்றும் மெடுல்லா), இனப்பெருக்கச் சுரப்பிகள் (விந்தகம் மற்றும் அண்டச் சுரபி), தைமஸ் சுரப்பி
- பிட்யூட்டரி சுரப்பி என்ன வடிவம் உடையது?
பட்டாணி
- பிட்யூட்டரி சுரப்பி எங்கு உள்ளது ?
மூளையின் அடிப்பகுதியில் டயன்செபாலோன் கீழ்ப்புறத்தில் ஹைபோதாலமசுடன் பிட்யூட்டரி தண்டின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது
- பிட்யூட்டரி சுரப்பி எத்தனை கதுப்புகளை கொண்டுள்ளது?
இரண்டு கதுப்புகள்
- பிட்யூட்டரியின் முன்புறக் கதுப்பிற்கு என்ன பெயர் ?
அடினோ ஹைப்போபைசிஸ்
- பிட்யூட்டரியின் பின்புறக் கதுப்பிற்கு என்ன பெயர்?
நியூரோஹைபோபைசிஸ்
- தலைமை சுரப்பி என அழைக்கப்படுவது எது?
பிட்யூட்டரி சுரப்பி
- பிட்யூட்டரியின் முன் கதுப்பு சுரக்கும் ஹார்மோன்கள் என்னென்ன?
வளர்ச்சி ஹார்மோன்(GH) ,தைராய்டைத் தூண்டும் ஹார்மோன்(TSH), அட்ரினோ கார்ட்டிக்கோட்ராபிக் ஹார்மோன் / அட்ரீனல் புறணியை தூண்டும் ஹார்மோன்(ACTH), கொனாடோட்ராபிக் ஹார்மோன்(GTH),ப்ரோலாக்டின்(PR)
- தசைகள் குருத்தெலும்பு மற்றும் எலும்புகளின் வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் எது ?
வளர்ச்சி ஹார்மோன்
- செல்களின் வளர்ச்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்தும் ஹார்மோன் எது?
வளர்ச்சி ஹார்மோன்
- வளர்ச்சி ஹார்மோன் குழந்தைகளில் குறைவான சுரப்பின் காரணமாக என்ன நிலை காணப்படுகிறது?
குள்ள த்தன்மை
- குள்ள தன்மையின் அறிகுறிகள் என்னென்ன?
குன்றிய வளர்ச்சி ,எலும்புகள் உருவாவதில் தாமதம் மற்றும் மனவளர்ச்சி குறைபாடு
- குழந்தைகளில் வளர்ச்சி ஹார்மோன் அதிகமாக சுரத்தல் காரணமாக இருக்கும் நிலை என்ன ?
அசுரத் தன்மை
- பெரியவர்களில் அதிகப்படியான வளர்ச்சி ஹார்மோன் சுரத்தல் காரணமாக உள்ள நிலை எது?
அக்ரோமெகலி
- என்ன ஹார்மோன் தைராய்டு சுரப்பியின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி அதன் செயல்களையும் ஹார்மோன் சுரத்தலையும் ஒருங்கிணைக்கிறது ?
தைராய்டைத் தூண்டும் ஹார்மோன்
- அட்ரினல் சுரப்பியின் புறணியை பதூண்டி ஹார்மோன்களை சுரக்கச் செய்யும் ஹார்மோன் எது?
அட்ரினோ கார்ட்டிக்கோட்ராபிக் ஹார்மோன் / அட்ரீனல் புறணியை தூண்டும் ஹார்மோன்(ACTH)
- எந்த இரு கொனடோட்ரோபிக் ஹார்மோன்கள் இயல்பான இனப்பெருக்க உறுப்பு வளர்ச்சிக்கு காரணமாகின்றன?
ஃபாலிக்கிள் செல்களைத் தூண்டும் ஹார்மோன் மற்றும் லூட்டினைசிங் ஹார்மோன்
- எந்த ஹார்மோன் ஆண்களின் விந்தகங்களின் எபிதீலியத்தைத் தூண்டுவதன் மூலம் விந்தனுக்கள் உருவாக்கத்திற்கும், பெண்களின் அண்டச் சுரப்பியினுள் அண்டச் செல்கள் வளர்ச்சி அடைவதை ஊக்குவிப்பதற்கும் காரணமாகிறது?
ஃபாலிக்கிள்களைத் தூண்டும் ஹார்மோன்
- லூட்டினைசிங் ஹார்மோன் ஆண்களின் எந்த செல்கள் தூண்டப்படுவதன் மூலம் ஆண் இனப்பெருக்க ஹார்மோனான டெஸ்டோஸ்டீரோனை சுரக்க காரணமாகிறது ?
லீடிக் செல்கள்
- பெண் இனப்பெருக்க ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரான் உருவாக்கத்திற்கு காரணமாக உள்ள ஹார்மோன் எது?
லூட்டினைசிங் ஹார்மோன்
- மெலட்டோனின் என்ற ஹார்மோன் எங்கு சுரக்கிறது?
பினியல் சுரப்பி
- கால தூதுவர்கள் என அழைக்கப்படும் ஹார்மோன் எது? மெலட்டோனின்
- லாக்டோஜனிக் ஹார்மோன் என அழைக்கப்படும் ஹார்மோன் எது ?
புரோலாக்டின்
- பிட்யூட்டரியின் பின் கதுப்பு சுரக்கும் ஹார்மோன்கள் என்னென்ன?
வாசோபிரஸ்ஸின் அல்லது ஆன்டிடையூரிட்டிக் ஹார்மோன் (ADH) மற்றும் ஆக்சிடோசின்
- சிறுநீரக குழல்களில் நீர் மீள உறிஞ்சப்படுவதை அதிகரிக்கும் ஹார்மோன் எது?
வாசோபிரஸ்ஸின் அல்லது ஆன்டிடையூரிட்டிக் ஹார்மோன் (ADH)
- சிறுநீர் பெருக்கெதிர் ஹார்மோன் என அழைக்கப்படுவது எது?
வாசோபிரஸ்ஸின் அல்லது ஆன்டிடையூரிட்டிக் ஹார்மோன் (ADH)
- ADH குறைவாக சுரப்பதால் நீர் மேல உறிஞ்சப்படுவது குறைவதால் அதிகப்படியான சிறுநீர் வெளியேறும் நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பாலியூரியா
- அதிகப்படியான சிறுநீர் வெளியேறும் நிலை என்பது என்ன குறைபாடு ?
டயாபட்டீஸ் இன்சிபிடஸ்
- பெண்களின் குழந்தைப் பேற்றின் போது கருப்பையை சுருக்கியும் விரிவடையச் செய்தும் குழந்தை பெற்ற பிறகு பால் சுரப்பிகளில் பாலை வெளியேற்றுவதற்கும் காரணமாக இருக்கும் ஹார்மோன் எது?
ஆக்சிடோசின்
- தைராய்டு சுரப்பி எங்கு அமைந்துள்ளது ?
மூச்சுக்குழலில் இருபுறமும் பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு கதுப்புகளாக அமைந்துள்ளது
- தைராய்டு சுரப்பியின் இரண்டு கதுப்புகளும் இணைக்கப்பட்டுள்ள மெல்லிய திசுக்கற்றைக்கு பெயர் என்ன?
இஸ்துமஸ்
- தைராய்டு சுரப்பியின் நுண் உறுப்புகளின் உள்ளே என்ன கூழமப் பொருள் நிரம்பியுள்ளது?
தைரோகுளோபுலின்
- தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்கு எவை காரணமாகின்றன?
டைரோசின் என்னும் அமினோ அமிலம் &அயோடின்
- தைராய்டு சுரப்பியில் சுரக்கும் ஹார்மோன்கள் என்ன?
ட்ரைஅயோடோ தைரோனின், டெட்ராஅயோடா தைரோனின் அல்லது தைராக்சின்
- ஆளுமை ஹார்மோன் என அழைக்கப்படுவது எது?
தைராய்டு ஹார்மோன்
- எந்த ஆண்டு முதன்முறையாக தைராக்சின் ஹார்மோன் படிகநிலையில் பிரித்தெடுக்கப்பட்டது?
1914
- 1914 ஆம் ஆண்டில் முதன்முறையாக தைராக்ஸின் ஹார்மோனை படிக நிலையில் தனித்து பிரித்தெடுத்தவர் யார்?
எட்வர்ட் சி.கெண்டல்
- தைராக்ஸின் ஹார்மோனின் மூலக்கூறு அமைப்பை 1927 ஆம் ஆண்டில் கண்டறிந்தவர்கள் யார் ?
சார்லஸ் ஹாரிங்டன் மற்றும் சார்ஜ் பார்ஜர்
- ஒவ்வொருநாளும் தைராய்டு சுரப்பியானது தைராக்சின் சுரக்க எவ்வளவு அயோடின் தேவைப்படுகிறது?
120µg
- தைராய்டு சுரப்பி இயல்பான அளவு ஹார்மோன்களை சுரக்காத நிலைக்கு என்ன பெயர் ?
தைராய்டு குறைபாடு
- தைராய்டு சுரப்பியின் குறைபாடுகள் என்னென்ன ?
ஹைபோதைராய்டிசம், எளிய காய்ட்டர், கிரிட்டினிசம், மிக்ஸிடிமா, ஹைப்போ தைராய்டிசம்
- தைராய்டு ஹார்மோன்களின் குறைவான சுரப்பின் காரணமாக என்ன நிலை ஏற்படுகிறது ?
ஹைபோதைராய்டிசம்
- உணவில் தேவையான அளவு அயோடின் இல்லாததால் கழுத்துப் பகுதியில் குறிப்பிடத்தக்களவு தைராய்டு சுரப்பி வீங்கி காணப்படும் இந்நிலைக்கு என்ன பெயர் ?
எளிய காய்ட்டர்
- குழந்தைகளில் குறைவான தைராய்டு ஹார்மோன் சுரப்பால் என்ன நிலை ஏற்படுகிறது?
கிரிட்டினிசம்
- குள்ளத்தன்மை, குறைவான மன வளர்ச்சி, குறைபாடான எலும்புகள் வளர்ச்சி உள்ளவர்களை எவ்வாறு அழைப்பார்கள்?
கிரிட்டின்கள்
- பெரியவர்களின் தைராய்டு ஹார்மோன் குறைவாக சுரப்பதால் ஏற்படும் குறைபாடு ?
மிக்ஸிடிமா
- தைராய்டு ஹார்மோன்களின் அதிகரித்த சுரப்பின் காரணமாக என்ன நோய் பெரியவர்களில் உண்டாகிறது?
கிரேவின் நோய் ( எக்ஸாப்தல்மியா)
- கிரேவின் நோய் அறிகுறிகள் என்னென்ன ?
துருத்திய கண்கள், வளர்ச்சிதை மாற்ற வீதம் அதிகரித்தல், மிகை உடல் வெப்பநிலை,மிகையாக வியர்த்தல், உடல் எடை குறைவு ,நரம்பு தளர்ச்சி
- தைராய்டு சுரப்பியின் பின்புறத்தில் நான்கு சிறிய வட்ட வடிவிலான என்ன சுரப்பிகள் அமைந்துள்ளன?
பாராதைராய்டு சுரப்பிகள்
- பாராதைராய்டு சுரப்பியின் முதன்மை செல்கள் என்ன ஹார்மோனை சுரக்கின்றன?
பாராதார்மோன்
- மனித உடலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன் எது?
பாராதார்மோன்
- பாரா தைராய்டு சுரப்பியில் சுரக்கும் ஹார்மோன் குறைவாக சுரப்பதால் உண்டாகும் குறைபாடுகள் என்னென்ன?
தசை இறுக்கம்(டெட்டனி), தசை பிடிப்பு
- கணையம் எவற்றிற்கு இடையில் காணப்படும் சுரப்பியாகும்?
இரைப்பைக்கும் ,டியோடினத்திற்கும் இடையில் மஞ்சள் நிறத்தில் நீள்வாட்டத்தில் காணப்படும்
- நாளமுள்ள மற்றும் நாளமில்லா சுரப்பியாக இரு வழிகளிலும் பணிபுரியும் உறுப்பு எது?
கணையம்
- கணையத்தின் நாளமுள்ள பகுதி எதை சுரக்கிறது ?
கணையநீர்
- கணையத்தின் நாளமில்லா சுரப்பு பகுதியானது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
லங்கார்ஹன் திட்டுகள்
- மனித இன்சுலின் ஹார்மோன் முதன்முதலில் எந்த ஆண்டு கண்டறியப்பட்டது?
1921
- மனித இன்சுலின் ஹார்மோனை கண்டறிந்தவர்கள் யார்?
பிரெட்ரிக் பாண்டிங், சார்லஸ் பெஸ்ட் மற்றும் மெக்லாட்
- எந்த ஆண்டு முதன் முதலில் நீரிழிவு நோயைக் குணப்படுத்துவதற்காக இன்சுலின் பயன்படுத்தப்பட்டது ?
ஜனவரி 11, 1922
- லாங்கர்ஹான் திட்டுகள் எந்த இரண்டு வகை செல்களை கொண்டுள்ளன?
ஆல்ஃபா செல்கள் மற்றும் பீட்டா செல்கள்
- ஆல்ஃபா செல்கள் எந்த ஹார்மோனை சுரக்கின்றன?
குளுக்கோகான்
- பீட்டா செல்கள் எந்த ஹார்மோனை சுரக்கின்றன ?
இன்சுலின்
- குளுக்கோசை கிளைகோஜனாக மாற்றி கல்லீரலும் தசைகளிலும் சேமிக்கும் ஹார்மோன் எது?
இன்சுலின்
- ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை குறைக்கும் ஹார்மோன் எது?
இன்சுலின்
- கல்லீரலில் கிளைக்கோஜன் குளுக்கோஸாக மாற்றம் அடைய உதவும் ஹார்மோன் எது?
குளுக்கோகான்
- ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கும் ஹார்மோனின் எது ?
குளுக்கோகான்
- இன்சுலின் சுரப்பில் குறைபாடு ஏற்படுவதால் உண்டாவது எது?
டயாபட்டீஸ் மெல்லிட்டஸ்
- ரத்த சர்க்கரை அளவு அதிகரித்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஹைபர்கிளைசீமியா
- சிறுநீரில் அதிகப்படியான குளுக்கோஸ் வெளியேறுதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கிளைக்கோசூரியா
- அடிக்கடி சிறுநீர் கழித்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பாலியூரியா
- அடிக்கடி தாகம் எடுத்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பாலிடிப்சியா
- அடிக்கடி பசி எடுத்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
பாலிஃபேஜியா
- ஒவ்வொரு சிறுநீரகத்தின் மேற்பரப்பிலும் காணப்படும் சுரப்பிகள் என்ன?
அட்ரினல் சுரப்பிகள்
- அட்ரினல் சுரப்பிகள் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சிறுநீரக மேற்சுரப்பிகள்
- அட்ரினல் சுரப்பியின் வெளிப்புற பகுதி எவ்வாறு் அழைக்கப்படுகிறது?
அட்ரினல் கார்டெக்ஸ்
- அட்ரினல் சுரப்பியின் உட்புற பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அட்ரினல் மெடுல்லா
- அட்ரினல் கார்டெக்ஸ் எத்தனை வகையான செல் அடுக்குகளால் ஆனது ?
மூன்று வகை: சோனா குளாமருலோசா,சோனா ஃபாஸிக்குலேட்டா,சோனா ரெடிகுலாரிஸ்
- அட்ரினல் கார்டெக்ஸில் சுரக்கும் ஹார்மோன்கள் எவ்வாறு் அழைக்கப்படும் ?
கார்ட்டிகோஸ்டீராய்டுகள்
- கார்ட்டிகோஸ்டீராய்டுகள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?
குளுக்கோகார்ட்டிகாய்டுகள் & மினரலோக்கார்டிகாய்டுகள்
- சோனா ஃபாஸிக்குலேட்டாவில் சுரக்கும் குளுக்கோகார்ட்டிகாய்டுகள் எவை?
கார்டிசோல் மற்றும் கார்டிகோஸ்டிரான்
- சோனா குளாமருலோசாவில் உள்ளே மினரலோக்கார்டிகாய்டுகள் சுரக்கும் ஹார்மோன் எது?
ஆல்டோஸ்டிரான்
- சிறுநீரக குழல்களில் சோடியம் அயனிகள் மீள உறிஞ்சுதலுக்கு உதவும் ஹார்மோன் எது?
ஆல்டோஸ்டிரான்
- அதிகமான பொட்டாசியம் அயனிகளை வெளியேற்ற காரணமாக ஹார்மோன் எது?
ஆல்டோஸ்டிரான்
- எந்த ஹார்மோன்கள் உடலை உயிர்ப்பு நிலையில் வைத்திருக்கவும் மிகுந்த பாதிப்பு மற்றும் மன அழுத்தங்களில் இருந்து மீண்டு வரவும் உதவுகிறது?
கார்டிசோல்
- உயிர்காக்கும் ஹார்மோன் என அழைக்கப்படும் ஹார்மோன் எது?
கார்டிசோல்
- அட்ரினல் மெடுல்லா என்ன செல்களால் ஆனது?
குரோமாஃபின்
- எத்தனை ஹார்மோன்கள் அட்ரினல் மெடுல்லாவால் சுரக்கப்படுகிறது ?
இரண்டு: எபிநெஃப்ரின் மற்றும் நார் எபிநெஃப்ரின்
- எபிநெஃப்ரின் வேறு பெயர் என்ன?
அட்ரீனலின்
- நார் எபிநெஃப்ரின் வேறு பெயர் என்ன?
நார் அட்ரீனலின்
- கல்லீரல் மற்றும் தசைகளில் உள்ள கிளைக்கோஜனை குளுக்கோஸாக மாற்ற ஊக்குவிக்கும் ஹார்மோன் எது ?
எபிநெஃப்ரின்
- இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை அதிகரிக்கும் ஹார்மோனின் எது?
எபிநெஃப்ரின்
- தோலின் அடியில் செல்லும் ரத்த ஓட்டத்தை குறைக்கும் ஹார்மோன் எது?
எபிநெஃப்ரின்
- சுவாச வீதத்தையும் ,கண் பாவையையும் விரிவடைய செய்யும் ஹார்மோன் எது?
எபிநெஃப்ரின்
- இனப்பெருக்கச் சுரப்பிகள் எத்தனை வகைப்படும்?
இரண்டு: ஆண்களில் விந்தகம் மற்றும் பெண்களில் அண்டகம்
- விந்தகம் எவற்றை உள்ளடக்கியுள்ளது?
செமினிப்ரஸ் குழல்கள், லீடிக் செல்கள் மற்றும் செர்டோலி செல்கள்
- விந்தகமத்தில் நாளமில்லா சுரப்பியாக செயல்படுவது எது?
லீடிக் செல்கள்
- லீடிக் செல்கள் எந்த இனப்பெருக்க ஹார்மோனை சுரக்கின்றன?
டெஸ்டோஸ்டீரான்
- ஆண்களில் புரத உற்பத்தியை தூண்டி தசை வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஹார்மோன் எது ?
டெஸ்டோஸ்டிரான்
- பெண் இனப்பெருக்க சுரப்பியான அண்டகம் எங்கு அமைந்துள்ளது ?
அடிவயிற்றில் இடுப்பு எலும்பு பகுதியில்
- அண்டகம் சுரக்கும் ஹார்மோன்கள் என்னென்ன ?
ஈஸ்ட்ரோஜன் &புரோஜெஸ்டிரோன்
- வளர்ச்சியுறும் அண்டத்தின் கிராஃபியன் செல்களினால் சுரக்கப்படும் ஹார்மோன் எது?
ஈஸ்ட்ரோஜன்
- அண்டம் விடுபடும் போது பிரியும் பாலிக்கிள்களால் உருவாகும் கார்ப்பஸ் லூட்டியத்தால் உற்பத்தியாகும் ஹார்மோன்?
புரோஜெஸ்டிரான்
- ஈஸ்ட்ரோஜனின் பணிகள் என்னென்ன?
பருவமடைதலில் உடல் மாற்றங்களை ஏற்படுத்துகிறது, அண்ட செல் உருவாக்கத்தை துவக்குகிறது, அண்ட பாலிக்கிள் செல்கள் முதிர்வடைவதை தூண்டுகிறது,
இரண்டாம்நிலை பால் பண்புகள் வளர்ச்சி அடைய ஊக்குவிக்கிறது
- புரொஜெஸ்ட்ரான் பணிகள் என்னென்ன ?
கருப்பையில் நடைபெறும் முன் மாதவிடாய் கால மாற்றங்களுக்கு காரணமாக உள்ளது, கருபதிவதற்கு கருப்பையை தயார் செய்கிறது, கர்ப்ப காலத்தினை பராமரிக்கிறது, தாய்சேய் இணைப்பு திசு உருவாவதற்கு அவசியமாகிறது
- எந்த சுரப்பி நாளமில்லா சுரப்பியாகவும் நிணநீர் உறுப்பாகவும் செயல்படுகிறது?
தைமஸ் சுரப்பி
- தைமஸ் சுரப்பி எங்கு அமைந்துள்ளது?
மார்பின் மேற்புறத்தில் மூச்சுக்குழலில் கீழ்புறத்தை ஒட்டி
- தைமஸ் சுரப்பி சுரக்கும் ஹார்மோன் எது?
தைமோசின்
- தைமோசின் பணிகள் என்னென்ன?
நோய் தடைக்காப்பு மண்டலத்தின் செயல்பாடுகளைத் தூண்டுகிறது ,லிம்ஃபோசைட்டுகள் உருவாதலையும் வேறுபடுதலையும் தூண்டுகிறது
10TH BIOLOGY STUDY NOTES |தாவர மற்றும் விலங்கு ஹார்மோன் | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services