10TH BIOLOGY STUDY NOTES |தாவர செயலியல் | TNPSC GROUP EXAMS

 


  1. கனிகங்கள் என்ன பணியில் ஈடுபடுகின்றன?

உணவு உற்பத்தி மற்றும் சேமிப்பு

  1. எத்தனை வகையான கணிகங்கள் உள்ளன?

மூன்று :பசுங்கணிகம் ,வண்ணக்கணிகம்,வெளிர்கணிகம்

  1. பச்சை நிறமுடைய கணிகம் எவ்வாறு அழைக்கப்படும் ?

குளோரோபிளாஸ்ட்

  1. மஞ்சள் சிவப்பு ஆரஞ்சு நிறமுடைய கணிகம் எவ்வாறு அழைக்கப்படும்?

குரோமோசோம்

  1. நிறமற்ற கணிகம் எவ்வாறு அழைக்கப்படும்?

லியூக்கோபிளாஸ்ட்

  1. பசுங்கணிகம் எவ்வளவு விட்டம் உடையது?

2 முதல் 10 மைக்ரோ மீட்டர்

  1. பசுங்கணிகம் எவ்வளவு தடிமன் கொண்டது?

 1 முதல் 2 மைக்ரோ மீட்டர்

  1. பசுங்கணிகத்தின் வடிவம் என்ன ?

ஒரு நீள் உருண்டை வடிவ செல் நுண்ணுறுப்பு

  1. பசுங்கணிகத்தின் சவ்வின் உட்புறம் மேட்ரிக்ஸ் என அழைக்கப்படும் என்ன பகுதி உள்ளது?

ஸ்ட்ரோமா

  1. ஸ்ட்ரோமா புரதச் சேர்க்கைக்கு தேவையான எவற்றை உள்ளடக்கியுள்ளது?

DNA,70s ரைபோசோம் மற்றும் பிற மூலக்கூறுகள்

  1. ஸ்ட்ரோமாவில் இடைவெளியுடன் கூடிய பைப்போன்ற தட்டு வடிவ அமைப்புக்கு என்ன பெயர் ?

தைலக்காய்டு

  1. தைலக்காய்டுகள் ஒன்றன் மீது ஒன்றாக நாணயம் போன்று அடுக்கி வைக்கப்பட்டுள்ளது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 கிரானம்

  1. பல கிரானாக்கள் ஒன்றோடு ஒன்று எவற்றால் இணைக்கப்பட்டுள்ளது?

கிரானா லேமெல்லா அல்லது ஸ்ட்ரோமா லேமெல்லா

  1. பசுங்கணிகத்தின் பணிகள் என்னென்ன?
  2. ஒளிச்சேர்க்கை 2.தரசம் சேமித்தல் 3.கொழுப்பு அமில உற்பத்தி 4. லிப்பிடுகள் சேமிப்பு 5.பசுங்கணிகம் உருவாக்கம்
  3. தாவரங்கள் மற்றும் பச்சை நிறமிகளைக் கொண்ட பாக்டீரியங்கள் போன்றவை சூரிய ஒளியைப் பயன்படுத்தி தமக்கு வேண்டிய உணவைத் தாமே தயாரித்துக் கொள்ளும் நிகழ்ச்சிக்கு என்ன பெயர்?

ஒளிச்சேர்க்கை

  1. ஒளிச்சேர்க்கை நிகழ்ச்சியில் கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீரின் உதவியால் சூரிய ஒளியின் முன்னிலையில் பச்சையத்தில் என்ன தயாரிக்கப்படுகிறது ?

கார்போஹைட்ரேட்

  1. ஒளிச்சேர்க்கையில் வெளியேற்றப்படும் வாயு எது? ஆக்சிஜன்
  2. பசுந்தாவரங்களில் ஒளிச்சேர்க்கையானது எந்த உறுப்புகளில் நடைபெறுகிறது ?

இலைகள் ,பசுமையான தண்டுகள் மற்றும் மலர் மொட்டுகள்

  1. ஒளிச் சேர்க்கையில் ஈடுபடும் நிறமிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

ஒளிச்சேர்க்கை நிறமிகள்

  1. எத்தனை வகையான முக்கிய நிறமிகள் உள்ளன?

இரண்டு: முதன்மை நிறமிகள் மற்றும் துணை நிறமிகள்

  1. சூரிய ஆற்றலை அதிகம் கவர்ந்திழுக்கும் தன்மை கொண்ட நிறமி எது?

முதன்மை நிறமி

  1. முதன்மை நிறமி எது?

பச்சையம் a

  1. எந்த நிறமி வினைமையம் என அழைக்கப்படுகிறது ? பச்சையம் a
  2. பச்சையம் a நிறமியானது சூரிய ஆற்றலை வேதி ஆற்றலாக மாற்றுவதால் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

வினைமையம்

  1. துணை நிறமிகள் என அழைக்கப்படுபவை எவை?

 பச்சையம் b மற்றும் கரோட்டினாய்டு

  1. முதன்மை நிறமி மற்றும் துணை நிறமிகள் இரண்டும் சேர்ந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

ஒளித்தொகுப்பு

  1. ஒளிச்சேர்க்கையின் முழு நிகழ்ச்சியும் எதனுள்ளே நடைபெறுகிறது?

 பசுங்கணிகம்

  1. ஒளி சார்ந்த வினை அல்லது ஒளி வினை பசுங்கணிகத்தின் எதில் நடைபெறுகிறது ?
SEE ALSO  10TH BIOLOGY STUDY NOTES |இனகலப்பு & உயிரிதொழில்நுட்பம்| TNPSC GROUP EXAMS

கிரானா

  1. ஒளி சாராத வினை அல்லது இருள்வினை பசுங்கணிகத்தின் எதில் நடைபெறுகிறது?

ஸ்ட்ரோமா

  1. ஒளிசார்ந்த வினை அல்லது ஒளி வினை வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

ஹில்வினை

  1. ஒளிசார்ந்த வினை அல்லது ஒளி வினை எப்போது யாரால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது?

ராபின் ஹில் (1939)

  1. ஒளிசார்ந்த வினை சூரிய ஒளியின் முன்னிலையில் எதில் நடைபெறுகிறது?

தைலகாய்டு

  1. ஒளிசார்ந்த வினையின போது ஒளிச்சேர்க்கை எருமைகள் சூரிய ஆற்றலில் இருந்து எவற்றை உருவாக்குகின்றன?

ATP மற்றும் NADPH2

  1. ATP மற்றும் NADPH2 இவை இரண்டும் எந்த வினைக்கு பயன்படுகின்றன?

இருள் வினை

  1. உயிர் பொருள் உற்பத்தி நிலை என அழைக்கப்படுவது எது?

ஒளிசாரா வினை அல்லது இருள் வினை

  1. இந்த வினையின் போது ஒளி சார்ந்த வினைகள் உண்டான ATP மற்றும் NADPH2 உதவியுடன் கார்பன்-டை-ஆக்சைடு ஆனது கார்போஹைட்ரேட் ஆக ஒடுக்கம் அடைகிறது?

ஒளிசாரா வினை அல்லது இருள் வினை

  1. ATP மற்றும் NADPH2 உதவியுடன் கார்பன்-டை-ஆக்சைடு ஆனது கார்போஹைட்ரேட் ஆக ஒடுக்கமடைவது வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

கால்வின் சுழற்சி

  1. ATP ன் விரிவாக்கம் என்ன?

அடினோசின் ட்ரை பாஸ்பேட்

  1. ADP ன் விரிவாக்கம் என்ன?

அடினோசின் டை பாஸ்பேட்

  1. NAD ன் விரிவாக்கம் என்ன?

நிகோடினமைடு அடினைன் டை நியூக்ளியோடைடு

  1. NADP ன் விரிவாக்கம் என்ன?

நிகோடினமைடு அடினைன் டை நீயூக்ளியோடைடு பாஸ்பேட்

  1. மெல்வின் கால்வின் எந்த நாட்டைச் சேர்ந்த உயிர் வேதியியலாளர் ?

அமெரிக்கா

  1. மெல்வின் கால்வின் ஒளிச்சேர்க்கையின் வேதியியல் நிகழ்வுகளை கண்டறிந்தால் எந்த ஆண்டு அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது?

1961

  1. செயற்கை ஒளிச்சேர்க்கை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஹைட்ரஜன் எரிபொருளை உற்பத்தி செய்தவர் யார்?

 C.N.R ராவ்

  1. ஒளிச்சேர்க்கையினை பாதிக்கும் உட்புற காரணிகள் என்னென்ன?
  2. நிறமிகள் 2.இலையின் வயது 3.கார்போஹைட்ரேட்டின் சரிவு 4.ஹார்மோன்கள்
  3. ஒளிச்சேர்க்கையை பாதிக்கும் வெளி காரணிகள் என்னென்ன?

 1.சூரிய ஒளி2.கார்பன்-டை-ஆக்சைடு3.வெப்பநிலை4. நீர்5. கனிமங்கள்

  1. செல்லில் காணப்படும் இலை போன்ற அல்லது துகள் போன்ற சைட்டோபிளாச நுண்ணுறுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

 மைட்டோகாண்ட்ரியா

  1. மைட்டோகாண்ட்ரியா எப்போது யாரால் கண்டுபிடிக்கப்பட்டது ?

1857, கோலிக்கர்

  1. கோலிக்கர் எந்த செல்களில் கண்டறிந்தார்?

வரித்தசை செல்களில்

  1. மைட்டோகாண்ட்ரியா எவ்வாறு அழைக்கப்படுகிறது ? ஆற்றல் நாணயம்
  2. எது மைட்டோகாண்ட்ரியாவில் உற்பத்தியாவதால் மைட்டோகாண்ட்ரியா செல்லின் ஆற்றல் நாணயம் என அழைக்கப்படுகிறது?

 ATP

  1. மைட்டோகாண்ட்ரியாவின் அளவு என்ன?

0.5μm to 2.0μm

  1. மைட்டோகாண்ட்ரியா எவற்றை உள்ளடக்கியுள்ளது?

புரதம், ,லிப்பிடுகள் ,RNA ,DNA மற்றும் கனிமங்கள்

  1. மைட்டோகாண்ட்ரியாவில் எத்தனை சதவீதம் புரதம் உள்ளது ?
SEE ALSO  10TH BIOLOGY STUDY NOTES |தாவரங்கள் & விலங்குகளின்  சுற்றோட்டம் | TNPSC GROUP EXAMS

60 முதல் 70 சதவீதம்

  1. மைட்டோகாண்ட்ரியாவில் எத்தனை சதவீதம் லிப்பிடுகள் உள்ளது ?

 25 முதல் 30 சதவீதம்

  1. மைட்டோகாண்ட்ரியாவில் எத்தனை சதவீதம் RNA உள்ளது?

5 முதல் 7 சதவீதம்

  1. மைட்டோகாண்ட்ரியாவின் சவ்வு எவ்வளவு தடிமன் உடையது?

 60° A -70°A

  1. மைட்டோகாண்ட்ரியாவின் எந்த சவ்வு வழவழப்பானது?

வெளிப்புறச் சவ்வானது

  1. மைட்டோகாண்ட்ரியாவின் வெளிப்புற சவ்வில் உள்ள எது வெளி மூலக்கூறுகள் செல்வதற்கு கால்வாயாக செயல்படுகிறது?

போரின் மூலக்கூறுகள் ( புரத மூலக்கூறுகள்)

  1. மைட்டோகாண்ட்ரியாவின் எந்த சவ்வு பல மடிப்புகளுடன் காணப்படுகிறது ?

உட்புற சவ்வு

  1. மைட்டோகாண்ட்ரியாவின் உட்புற சவ்வில் எத்தனை சதவீதம் புரதம் உள்ளது?

 80 சதவீதம்

  1. மைட்டோகாண்ட்ரியாவின் உட்புறத்தில் காணப்படும் விரல் போன்ற நீட்சிகள் எவ்வாறு அழைக்கப்படும்?

கிரிஸ்டே

  1. கிரிஸ்டாவில் பல நுண்ணிய டென்னிஸ் ராக்கெட் வடிவ துகள்கள் காணப்படுகின்றன இவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

ஆக்ஸிசோம்கள் அல்லது F1 துகள்கள்

  1. புரதம் மற்றும் லிப்பீடுகளைக் கொண்ட ஒரு சிக்கலான கலவை எது?

மைட்டோகாண்ட்ரியாவின் மேட்ரிக்ஸ்

  1. மைட்டோகாண்ட்ரியாவின் மேட்ரிக்ஸ் எவற்றை உள்ளடக்கி உள்ளது?

 கிரப் சுழற்சிக்கு தேவையான நொதிகள்,70s ரைபோசம்,tRNAக்கள் மற்றும் DNA

  1. செல்லின் கால்சியம் அயனிகளை சமநிலையை பாதுகாப்பது மற்றும் செல்லின் வளர்சிதைமாற்ற செயலில் பங்கு கொள்வது எது ?

மைட்டோகாண்ட்ரியா

  1. உயிரினங்களுக்கும் வெளிச்சூழலுக்கும் இடையே நடைபெறும் வாயுப் பரிமாற்ற நிகழ்ச்சி எது?

சுவாசித்தல்

  1. தாவரங்கள் வளிமண்டலத்தில் இருந்து ஆக்சிஜனை பெற்றுக் கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகின்றன இந்த வாயு பரிமாற்றத்திற்கு என்ன பெயர்?

வெளி விசுவாசம்

  1. செல்லுக்குள்ளே உணவானது ஆக்ஸிகரணம் அடைந்து ஆற்றல் பெறும் உயிர்வேதியியல் நிகழ்ச்சிக்கு என்ன பெயர்?

செல் சுவாசம்

  1. காற்று சுவாசத்தின் படிநிலைகள் என்னென்ன?

கிளைக்காலிஸிஸ்,கிரப் சுழற்சி, எலக்ட்ரான் கடத்தும் சங்கிலி அமைப்பு

  1. ஒரு மூலக்கூறு குளுக்கோஸானது இரண்டு மூலக்கூறு பைரவிக் அமிலமாக பிளக்கப்படும் நிகழ்ச்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

கிளைகாலிசிஸ்

  1. எந்த நிகழ்ச்சியானது காற்று மற்றும் காற்றில்லா சுவாசம் இரண்டிற்கும் பொதுவானது?

 கிளைக்காலிஸிஸ்

  1. எந்த நிகழ்ச்சி மைட்டோகாண்ட்ரியாவின் உட்புறத்தில் நடைபெறுகிறது ?

கிராப் சுழற்சி

  1. இரண்டு மூலக்கூறு பைரவிக் அமிலம் முழுவதும் ஆக்ஸிகரணம் அடைந்து கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் நீராக மாறும் நிகழ்ச்சிக்கு என்ன பெயர்?

கிரப் சுழற்சி அல்லது ட்ரை கார்பாக்சிலிக் அமில சுழற்சி

  1. எங்கு கிளைகாலிசிஸ் மற்றும் கிராப் சுழற்சியின் போது உண்டான NADH2 மற்று FADH2வில் உள்ள ஆற்றலானது இங்கு வெளியேற்றப்பட்டு அவை NAD+ மற்றும் FAD+ ஆக ஆக்ஸிகரணமடைகின்றன?

 எலக்ட்ரான் கடத்தும் சங்கிலி

  1. NAD+ மற்றும் FAD+ ஆக ஆக்ஸிகரணமடையும் பொழுதுவெளியான ஆற்றல் ADP ஆல் எடுத்துக்கொள்ளப்பட்டு ATPஆக உருவாகிறது இதற்கு என்ன பெயர்?
SEE ALSO  8TH POLITY STUDY NOTES |நீதித்துறை| TNPSC GROUP EXAMS

ஆக்ஸிகரண பாஸ்பேட் சேர்ப்பு

  1. காற்றில்லா சுவாசத்தில் குளுக்கோஸ் அளவு என்னவாக மாற்றப்படுகிறது?

 எத்தனால் (தாவரங்களில்) மற்றும் லேக்டோஸ் (பாக்டீரியா)

  1. சுவாசித்தலின் போது வெளியேற்றப்பட்ட கார்பன் டை ஆக்ஸைடின் அளவிற்கும் எடுத்துக்கொள்ளப்பட்ட ஆக்சிஜன் அளவிற்கும் இடையேயுள்ள விகிதம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

சுவாச ஈவு


10TH BIOLOGY STUDY NOTES |தாவர செயலியல் | TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

 

 

Leave a Comment

error: