- தாவரங்களின் வேர்கள் மூலம் உறிஞ்சப்பட்டு நீர் மற்றும் கனிம உப்புக்கள் எதன் வழியாக அனைத்து உறுப்புகளுக்கும் செல்கின்றன?
சைலம்
- தாவரங்களின் இலைகள் மூலம் தயாரிக்கப்பட்ட உணவுகள் எதன் வழியாக அனைத்து உறுப்புகளுக்கும் செல்கின்றன?
புளோயம்
- தாவரங்களில் பொருட்கள் மொத்தமாக கடத்தும் திசுக்களின் மூலம் கடத்தப்படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தாவரங்களில் கடத்துதல்
- ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களை எடுத்துச் செல்வதற்கு என்ன பெயர் ?
கடத்துதல்
- செல்களின் உள்ளே மற்றும் வெளியே பொருட்கள் கடத்தப்படுவது என்ன முறையில் நடைபெறுகின்றன?
இரண்டு: பரவல் மற்றும் ஆற்றல் சார்ந்த கடத்துதல்
- திட திரவ வாயு பொருட்கள் செறிவு அதிகம் உள்ள பகுதியிலிருந்து செறிவு குறைவான பகுதிக்கு எவ்வித ஆற்றலின் உதவியின்றி கடத்தப்படும் நிகழ்ச்சிக்கு என்ன பெயர்?
பரவல்
- கடத்து புரதங்கள் எந்த கடத்தலில் ஈடுபடுகின்றன?
ஆற்றல் சார்ந்த கடத்துதல் அல்லது செயல்மிகு கடத்தல்
- புரதங்கள் ஆற்றலைப் பயன்படுத்தி சவ்வின் வழியாக மூலக்கூறுகளை கடத்துவதால் இந்த புரதங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
உந்திகள்
- ஒரு தாவர செல்லைக் ஹைப்பர்டானிக் கரைசலில் வைக்கும் போது செல்லிலிருந்து நீர் வெளியேறுவதால் புரோட்டோபிளாசம் செல் சுவரை விட்டு விலகி சுருங்கிவிடுகிறது இந்நிகழ்விற்கு என்ன பெயர்?
பிளாஸ்மா சிதைவு
- உயிரற்ற தாவர பொருட்கள் நீரில் வைக்கப்படும்போது நீரினை உறிஞ்சி உப்புகின்ற நிகழ்ச்சிக்கு என்ன பெயர்?
உள்ளீர்த்தல்
- வேர்த்தூவியின் மூலம் உறிஞ்சப்பட்ட நீரானது வேரின் உட்புற அடுக்கிற்கு எந்தெந்த வழிகளில் செல்கின்றன?
இரண்டு வழிகளில் அப்போபிளாஸ்ட் வழி மற்றும் சிம்பிளாஸ்ட் வழி
- எந்த வழியில் நீரானது முழுக்க முழுக்க செல் சுவர் மட்டும் செல் இடைவெளியின் வழியாக செல்கிறது ?
அப்போபிளாஸ்ட் வழி
- எந்த முறையில் நீரானது செல்லின் வழியாக செல்கிறது? சிம்பிளாஸ்ட் வழி
- தாவஇரத்தின் புற உறுப்புகளில் இருந்து குறிப்பாக இலையின் புறத்தோல் துளை வழியாக நீரானது ஆவியாக வெளியேறுவதற்கு என்ன பெயர்?
நீராவிப்போக்கு
- ஒவ்வொரு இலைத்துளையும் எத்தனை காப்பு செல்களால் சூழப்பட்டுள்ளது?
இரண்டு
- மிக விரைவாக இடம்பெயரும் தனிமங்கள் எவை?
பாஸ்பரஸ்,சல்பர்,நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம்
- எந்த தனிமம் எளிதில் இடம்பெயர்வது இல்லை?
கால்சியம்
- வேர்களின் மூலம் உறிஞ்சப்பட்ட நீர் மற்றும் கனிமங்கள் மேல்நோக்கிய கடத்தல் மூலம் தாவரங்களின் பிற பகுதிகளுக்கு செல்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சாறேற்றம்
- சாறேற்றம் என்னென்ன படிநிலைகளில் நடைபெறுகிறது? வேர் அழுத்தம் 2. நுண்துளை ஈர்ப்பு விசை ( தந்தி குழாய் விசை) 3. நீர் மூலக்கூறுகளின் கூட்டிணைவு மற்றும் ஒட்டிணைவு 4. நீராவிப் போக்கின் இழுவிசை
- நீர் அல்லது எந்த ஒரு திரவமும் நுண்துளை குழாய்களில் இயற்பியல் விசையின் காரணமாக மேலேறுகிறது. இதற்கு என்ன பெயர்?
நுண்துளை ஈர்ப்பு விசை
- நீர் மூலக்கூறுகளுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசை எவ்வாறு அழைக்கப்படும்?
கூட்டிணைவு
- பல்வேறு வகையான மூலக்கூறுகளுக்கு இடையே காணப்படும் ஈர்ப்புவிசை எவ்வாறு அழைக்கப்படும்?
ஒட்டிணைவு
- தாவரங்களில் நீராவிப் போக்கின் வீதம் குறையும் போது உறிஞ்சப்படும் நீர் தாவஇரத்தின் வேரில் ஒரு அழுத்தத்தை உருவாக்கும் இந்த அதிகப்படியான நீர் தாவர இலைகளின் விளிம்புகளில் நீராக வடிகிறது இதற்கு என்ன பெயர் ?
நீர்வடிதல்(Guttation)
- நீர்வடிதல் நிகழ்வானது ஒரு சிறப்பான துளை வழியாக வெளியேறுகிறது இந்த துளைக்கு என்ன பெயர் ?
நீர் சுரப்பி அல்லது ஹைடதோடு
- இலைத்துளையின் வழியாக நடைபெறும் நீராவிப் போக்கின் காரணமாக ஒரு வெற்றிடம் உருவாகி அதனால் ஒரு விசை உண்டாகும் இந்த விசைக்கு என்ன பெயர்?
நீராவிப் போக்கின் இழுவிசை
- இரத்தம் சிவப்பு நிறம் கொண்ட எந்த திசு?
திரவ இணைப்பு திசு
- மனிதனின் உடல் சுற்றோட்டத்தின் முக்கிய ஊடகம் எது?
இரத்தம்
- இரத்தம் எத்தனை முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது?
பிளாஸ்மா எனும் திரவ பகுதி மற்றும் அதனுள் மிதக்கும் ஆக்க கூறுகளையும் (இஇரத்த செல்கள்)
- இரத்தத்தில் எத்தனை சதவீதம் பிளாஸ்மா உள்ளது?
55%
- பிளாஸ்மா என்ன தன்மை உடையது?
சிறிதளவு காஇரத்தன்மை
- உயிரற்ற செல் பொருட்களைக்கொண்டு உள்ள இரத்தத்தின் பகுதி எது?
பிளாஸ்மா
- பிளாஸ்மா எவற்றை உள்ளடக்கியுள்ளது?
கரிம பொருட்களான புரதங்கள் ,குளுக்கோஸ் ,யூரியா ,நொதிகள் ,ஹார்மோன்கள், தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள்
- இரத்த அணுக்கள் எத்தனை வகைப்படும்?
மூன்று வகைப்படும்: இஇரத்த சிவப்பணுக்கள், இஇரத்த வெள்ளை அணுக்கள், இரத்தத் தட்டுகள்
- இரத்த சிவப்பணுக்கள் வேறு எவ்வாறு அழைக்கப்படும்?
எரித்ரோசைட்
- இரத்த வெள்ளை அணுக்கள் வேறு எவ்வாறு அழைக்கப்படும்?
லியூகோசைட்டுகள்
- இரத்தத் தட்டுகள் வேறு எவ்வாறு அழைக்கப்படும்?
திராம்போசைட்டுகள்
- மனித உடலில் அதிக அளவில் காணப்படக்கூடிய இரத்த செல்கள் எது?
இரத்த சிவப்பணுக்கள்
- இரத்த சிவப்பணுக்கள் சிவப்பு நிறத்துடன் காணப்படுவதற்கு காரணம் என்ன ?
சுவாச நிறமியான ஹீமோகுளோபினை கொண்டுள்ளதால்
- எந்த இஇரத்த அணுக்களில் செல் நுண்ணுறுப்புகள் மற்றும் உட்கருக்கள் காணப்படுவதில்லை?
இரத்த சிவப்பணுக்கள்
- இரத்த சிவப்பணுக்கள் என்ன வடிவம் உடையவை?
இருபுறமும் குழிந்த தட்டு வடிவம்
- இரத்த சிவப்பணுக்களின் வாழ்நாள் எவ்வளவு?
120 நாட்கள்
- இரத்த சிவப்பணுக்களின் பணி என்ன?
ஆக்சிஜனை நுரையீரலில் இருந்து திசுக்களுக்கு கடத்துவதில் பங்கேற்கிறது
- இரத்த சிவப்பணுக்கள் குழிந்த அமைப்பைப் பெற்றுள்ளக் காரணம் என்ன ?
அதிக அளவு ஆக்சிஜன் இணைவதற்கான மேற்பரப்பை பெறுவதற்காக
- இரத்த சிவப்பணுக்களில் எது இல்லாது இருப்பதனால் அதிக அளவு ஆக்சிஜனை திசுக்களுக்கு கடத்துவதை அனுமதிக்கிறது ?
மைட்டோகாண்ட்ரியா
- எது இல்லாது இருப்பதனால் இரத்த சிவப்பணுக்கள் மெல்லிய இஇரத்த தந்துகிகளுக்குள் அதிக மீளும் தன்மை பெற்று இரத்த சிவப்பணு எளிதாக ஊடுருவுகிறது?
எண்டோபிளாச வலைப்பின்னல்
- எந்த இரத்த அணுக்கள் நிற மற்றவை?
இரத்த வெள்ளை அணுக்கள் அல்லது லியூகோ சைட்டுகள்
- இரத்த வெள்ளை அணுக்களில் எது காணப்படுவதில்லை?
ஹீமோகுளோபின்
- உட்கரு கொண்ட இரத்த அணுக்கள் எது?
இரத்த வெள்ளை அணுக்கள்
- இரத்த வெள்ளை அணுக்கள் உடலில் எங்கு காணப்படுகின்றன?
எலும்பு மஜ்ஜை , மண்ணீரல் , தைமஸ் மற்றும் நிணநீர் முடிச்சு
- அமீபா போன்ற நகரக்கூடிய இரத்த அணுக்கள் எவை?
இரத்த வெள்ளை அணுக்கள்
- இஇரத்த வெள்ளை அணுக்கள் எத்தனை வகைப்படும் ?
இரண்டு : துகள்கள் உடைய செல்கள் ,துகள்கள் அற்ற செல்கள்
- துகள்கள் உடைய செல்கள் எத்தனை வகைப்படும்?
மூன்று : நியூட்ரோஃபில்கள்,ஈசினோஃபில்கள் ,பேசோஃபில்கள்
- துகள்கள் உடைய செல்களில் அளவில் பெரியது எது?
நியூட்ரோஃபில்கள்
- நியூட்ரோஃபில்கள் உட்கரு எத்தனை கதுப்புகளைக் கொண்டுள்ளது?
இரண்டு முதல் ஏழு கதுப்புகள்
- மொத்த வெள்ளை அணுக்களில் எத்தனை சதவீதம் நியூட்ரோஃபில்கள் காணப்படுகின்றன?
60 முதல் 65 சதவீதம்
- எந்த சூழ்நிலையின் போது நியூட்ரோஃபில்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது ?
நோய்த்தொற்று மற்றும் வீக்கத்தின் போது
- ஈசினோபில்களின் உட்கரு எத்தனை கதுப்புகளை கொண்டுள்ளது?
இரண்டு கதுப்புகள்
- மொத்த வெள்ளை அணுக்களில் எத்தனை சதவீதம் ஈசினோபில்கள் உள்ளன?
2 முதல் 3 சதவீதம் வரை
- எந்த சூழ்நிலையின் போது ஈசினோஃபில்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது ?
ஒட்டுண்ணி தொற்று மற்றும் ஒவ்வாமை ஏற்படும் போது
- ஈசினோபில்களின் முக்கிய பணி எது ?
நச்சுக்களை அழித்தல் மற்றும் நச்சு முறிவினை ஏற்படுத்துவது
- மொத்த வெள்ளை அணுக்களில் பேசோஃபில்கள் எத்தனை சதவீதம் வரை உள்ளன?
0.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை
- பேசோஃபில்கள் எந்த சூழ்நிலையின் போது வேதிப் பொருள்களை வெளியேற்றுகின்றன?
வீக்கங்கள் உண்டாகும்போது
- துகள்களற்ற செல்கள் எத்தனை வகைப்படும்?
இரண்டு: லிம்போசைட்டுகள் &மோனோசைட்கள்
- மொத்த வெள்ளையணுக்களின் லிம்போசைட்டுகள் எத்தனை சதவீதம் வரை உள்ளன ?
20 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை
- வைரஸ் மற்றும் பாக்டீரியா நோய்த்தொற்றுகளின் போது எவை எதிர்ப்பு பொருளை உருவாக்குகின்றன?
லிம்போசைட்டுகள்
- லியூகோசைட்டுகளிலேயே மிகப் பெரியவை எவை?
மோனோசைட்டுகள்
- மோனோசைட்டுகள் என்ன வடிவம் கொண்டவை?
அமீபாய்டு
- மொத்த வெள்ளை அணுக்களில் மோனோசைட்கள் எத்தனை சதவீதம் உள்ளது?
5 முதல் 6 சதவீதம்
- பாக்டீரியாவை விழுங்கும் செல்கள் எவை?
மோனோசைட்கள்
- விழுங்கு செல்கள் என அழைக்கப்படுபவை எவை ?
மோனோசைட்கள்
- இரத்த தட்டுகள் என்ன நிறமுடையவை?
நிறமற்றது
- இரத்தத் தட்டுகள் ஒரு கன மில்லி மீட்டர் இரத்தத்தில் எவ்வளவு இருக்கும்?
2,50,000 முதல் 4,00,000 வரை
- இரத்த தட்டுகளின் வாழ்நாள் எவ்வளவு?
8 முதல் 10 நாட்கள்
- இரத்தம் உறைதலில் முக்கிய பங்கு வகிக்கும் இரத்த அணுக்கள் எது?
ரத்தத் தட்டுகள்
- இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
லியூக்கோசைட்டோசிஸ்
- இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அனீமியா
- இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
லியூக்கோபினியா
- இரத்த தட்டுகளின் எண்ணிக்கை குறைதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
திராம்போசைட்டோபினியா
- உடலின் வெப்பநிலை மற்றும் pHஐ ஒழுங்குபடுத்தும் தாங்கு ஊடகமாக செயல்படுவது எது?
இரத்தம்
- சுவாச வாயுக்கள், செரிமானமடைந்த உணவுப் பொருட்கள், கழிவு பொருட்கள் முதலியவற்றை கடத்தும் ஊடகமாக செயல்படுவது எது?
ரத்தம்
- ரத்தத்தை கடத்த கூடிய கிளைத்த வலைப்பின்னல் அமைப்புடைய குழாய்கள் எவ்வாறு அழைக்கப்படும் ?
ரத்தநாளங்கள்
- ரத்த நாளங்கள் எத்தனை வகைப்படும்?
மூன்று: தமனிகள் ,சிரைகள், இரத்தநாளங்கள் (தந்துகிகள்)
- தடித்த மீளும் தன்மை பெற்ற இரத்தகுழாய்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
தமனிகள்
- இரத்தத்தை இதயத்திலிருந்து பல்வேறு உறுப்புகளுக்கு எடுத்துச் செல்லும் பணியை மேற்கொள்வது எவை?
தமனிகள்
- எந்த தமனியை தவிர மற்ற அனைத்து தமனிகளும் ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எடுத்து செல்கின்றன ?
நுரையீரல் தமனி
- எந்தத் தமனி மட்டும் ஆக்சிஜன் குறைந்த ரத்தத்தை நுரையீரலுக்கு எடுத்துச் செல்கிறது?
நுரையீரல் தமனி
- மெல்லிய சுவரால் ஆன மீள் தன்மையற்ற இரத்தத்குழாய்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
சிரைகள்
- பல்வேறு உறுப்புகளில் இருந்து இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு வரும் பணியை மேற்கொள்வது எது?
சிரைகள்
- எந்த சிரையினை தவிர மற்ற அனைத்து சிரைகளும் ஆக்சிஜன் குறைந்த ரத்தத்தை எடுத்து செல்கின்றன?
நுரையீரல் சிரை
- எந்த சிரை மட்டும் ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை நுரையீரலிலிருந்து இதயத்திற்கு எடுத்து வருகிறது ?
நுரையீரல் சிரை
- கிளைத்த மெல்லிய நுண் தமனிகள் இணைந்து எவற்றை உருவாக்குகின்றன ?
குறுகிய ரத்தநுண்நாளங்கள்
- குறுகிய இரத்த நாளங்கள் ஒன்றிணைந்து எவற்றை உருவாக்குகின்றன?
வெனியூல்கள் மற்றும் சிரைகள்.
- இரத்த நுண் நாளங்கள் எவ்வளவு விட்டமுடையவை?
8μm
- இரத்த நாளங்கள் எந்த செல்களால் ஆனவை?
ஒற்றை அடுக்காலான எண்டோதீலிய செல்கள்
- வழங்கும் இரத்தக் குழாய்கள் என அழைக்கப்படுபவை?
தமனிகள்
- பெறும் இரத்தக்குழாய்களின் அழைக்கப்படுபவை?
சிரைகள்
- தமணி என்ன நிறம் உடையது ?
இளஞ்சிவப்பு
- சிரை என்ன நிறம் உடையது?
சிவப்பு
- எந்த இரத்தக் குழாய்கள் உடலின் ஆழ்பகுதியில் அமைந்துள்ளது?
தமனி
- எந்த இரத்தக் குழாய்கள் உடலின் மேற்குபகுதியில் அமைந்துள்ளது?
சிரை
- உள்ளீடு வால்வுகள் எந்த இரத்தக்குழாய்களில் கிடையாது?
தமனி
- உள்ளீடு வால்வுகள் எந்த இரத்தக்குழாய்களில் உண்டு?
சிரை
- விலங்குகள் எத்தனை வகையான சுற்றோட்ட மண்டலத்தை கொண்டுள்ளன?
இரண்டு: திறந்த வகை மற்றும் மூடிய வகை
- திறந்த வகை இரத்த ஓட்டங்கள் எவற்றில் காணப்படுகிறது ?
கணுக்காலிகள், மெல்லுடலிகள் ,அசிடியன்கள்
- இரத்த சுற்றோட்டம் நாளங்கள் மூலம் உடல் முழுவதும் சுற்றி வருவதற்கு எந்த வகை?
மூடிய வகை சுற்றோட்ட மண்டலம்
- மூடிய வகை சுற்றோட்ட மண்டலத்திற்கு எடுத்துக்காட்டு?
முதுகெலும்பிகள்
- நவீன உடற்செயலியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
வில்லியம் ஹார்வி
- மூடிய இரத்த ஓட்ட மண்டலத்தை கண்டறிந்தவர் யார்?
வில்லியம் ஹார்வி
- இதயம் என்ன சிறப்பு தசையால் ஆனது?
கார்டியாக் தசை
- இதயம் இரண்டு அடுக்கினாலான என்ன உரையால் சூழப்பட்டுள்ளது ?
பெரிகார்டியல் உறை
- பெரிகார்டியல் உறையின் இடைவெளியில் நிரம்பியுள்ள திரவம் எது?
பெரிகார்டியல் திரவம்
- இதயத்துடிப்பின் போது ஏற்படும் உராய்வு மற்றும் இயக்கத்தினால் ஏற்படும் காயங்களில் இருந்து பாதுகாக்கும் உயவுப் பொருளாக உள்ளது எது ?
பெரிகார்டியல் திரவம்
- மனித இதயம் எத்தனை அறைகளைக் கொண்டது?
நான்கு அறைகள்
- மெல்லிய தசையால் ஆன இதயத்தின் மேல் அறைகள் இரண்டும் எவ்வாறு அழைக்கப்படும்?
ஆரிக்கிள்கள் அல்லது ஏட்ரியங்கள்
- இதயத்தின் தடித்த தசையால் ஆன கீழ் அறைகள் இரண்டும் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வெண்ட்ரிக்கிள்கள்
- இதயத்தின் மேல் மற்றும் கீழ் அறைகளைப் பிரிக்கின்ற இடை சுவருக்கு என்ன பெயர் ?
செப்டம்
- இரண்டு ஆரிக்கிள்களும் என்ன சுவரால் பிரிக்கப்பட்டுள்ளன?
ஆரிக்குலார் இடைத்தடுப்பு சுவர்
- வலது மற்றும் இடது ஆரிக்கிள்களில் எது சிறியது ?
இடது ஆரிக்கிள்
- வலது ஆரிக்கிள் எதன் மூலம் உடலில் இருந்து ஆக்சிஜன் குறைந்த இரத்தத்தினை பெறுகிறது?
மேற்பெருஞ்சிரை ,கீழ் பெருஞ்சிரை மற்றும் கரோனரி சைனஸ்
- வலது மற்றும் இடது வென்ட்ரிகிள்கள் என்ன தடுப்புச் சுவரால் பிரிக்கப்பட்டுள்ளன?
இடை வெண்ட்ரிக்குலார் தடுப்புச்சுவர்
- இடது வென்ட்ரிகிள் சுவர் வலது வென்ட்ரிகிளைவிட எத்தனை மடங்கு தடிமனானது ?
மூன்று மடங்கு
- உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை அளிப்பது எது?
பெருந்தமனி
- இதய தசைகளுக்கு ரத்தத்தை அளிப்பது கரோனரி?
தமனி
- இதயம் எத்தனை விதமான வால்வுகளை கொண்டது?
மூன்று: வலது ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் வால்வு, இடது ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் வால்வு, அரைச்சந்திர வால்வு
- முக்கோண வடிவிலான மூன்று மெல்லிய இதழ் தசை மடிப்புகளால் ஆனது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மூவிதழ் வால்வு
- வால்வின் இதழ் முனைகள் எந்த தசை நீட்சிகளால் வெண்ட்ரிக்கிள்களின் பாபில்லரி தசைகளோடு பொருத்தப்பட்டுள்ளன?
மூவிதழ் வால்வு
- ஈரிதழ் வால்வு அல்லது மிட்ரல் வால்வு என அழைக்கப்படுவது எது?
இடது ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் வால்வு
- ஈரிதழ் வால்வு எங்கு அமைந்துள்ளது?
இடது ஆரிக்கிள் மற்றும் இடது வென்ட்ரிகிள்களுக்கு இடையில்
- இரண்டு இதய அறைகளுடைய முதுகெலும்பிகள் எவை?
மீன்கள்
- மூன்று இதய அறைகளுடைய முதுகெலும்பிகள் எவை?
இருவாழ்விகள்
- முழுமையுறா நான்கு இதய அறைகளுடைய முதுகெலும்பிகள் எவை?
ஊர்வன
- நான்கு இதய அறைகளுடைய முதுகெலும்பிகள் எவை?
பறவைகள் ,பாலூட்டிகள் மற்றும் முதலை (ஊர்வன)
- வென்ட்ரிகிள்களுக்குள் ரத்தம் பின்னோக்கி செல்வதை தடுக்கும் வால்வு எது?
அரைச்சந்திர வால்வுகள்
- சுற்று ஓட்டத்தின் வகைகள் என்னென்ன?
சிஸ்டமிக் அல்லது உடல் இரத்த ஓட்டம், நுரையீரல் இரத்த ஓட்டம், கரோனரி சுற்றோட்டம்
- உடலின் பல பகுதிகளுக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எடுத்து சென்று மீண்டும் ஆக்சிஜன் குறைந்து ரத்ததினை கொண்டு வருவதற்கு என்ன பெயர்?
சிஸ்டமிக் அல்லது உடல் ரத்த ஓட்டம்
- வலது வெண்டிரிக்கிளிலிருந்து நுரையீரல் வழியாக ரத்தம் மீண்டும் இடது வெண்டிரிக்கிளிலிருந்து சென்றடைவதற்கு என்ன பெயர்?
நுரையீரல் ரத்த ஓட்டம்
- இதய தசைகளுக்கு ரத்தம் செல்வது எவ்வாறு அழைக்கப்படும்?
கரோனரி சுழற்சி
- இதய தசைகளுக்கு ஆக்சிஜன் மிகுந்த இரத்தம் எதன் மூலமாக பெறப்படுகிறது?
கரோனரி தமனி
- ஒரு முழு சுழற்சியின் போது இரத்தமானது இதயத்தின் வழியாக இருமுறை சுற்றி வருவது எவ்வாறு் அழைக்கப்படும்?
இரட்டை இரத்த ஓட்டம்
- ஆக்சிஜன் மிகுந்த ரத்தமும் ஆக்சிஜன் குறைந்து ரத்தமும் ஒன்றுடன் ஒன்று கலந்து இதயத்தினுள் ஒருமுறை மட்டுமே சில உயிரினங்களில் சென்றுவரும் இத்தகைய சட்டம் எவ்வாறு அழைக்கப்படும்?
ஒற்றை ரத்த ஓட்டம்
- ஒற்றை ரத்த ஓட்ட சுற்றோட்டத்திற்கு எடுத்துக்காட்டு எது?
மீன்கள், இருவாழ்விகள் மற்றும் சில ஊர்வன
- இதயத்தின் ஆரிக்கிள்கள் மற்றும் வெண்ட்ரிக்கிள்கள் முழுமையாக ஒரு முறை சுருங்கி விரிவடையும் நிகழ்விற்கு என்ன பெயர் ?
இதயத்துடிப்பு
- இதயம் சுருங்குவதற்கு என்ன பெயர்?
சிஸ்டோல்
- இதயம் விரிவடைவதற்கு என்ன பெயர்?
டையஸ்டோல்
- மனித இதயமானது சராசரியாக ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை துடிக்கிறது?
72 -75
- நரம்புத் தூண்டலினால் எந்த இதயத்துடிப்பு உருவாகிறது?
நியூரோஜனிக் இதயத்துடிப்பு
- எந்த இதயத் துடிப்பானது மாறுபாடு அடைந்த சிறப்புத்தன்மை வாய்ந்த இதய தசை நார்களால் தூண்டப்படுகிறது?
மையோஜெனிக் நாடித்துடிப்பு
- மனித இதயம் எந்த வகையைச் சேர்ந்தது?
மயோஜெனிக்
- இதயத் தசையில் காணப்படும் சிறப்பு பகுதியான எது இதயம் சுருங்குவதை துவக்குகிறது?
சைனோ ஏட்ரியல் கணு
- சைனோ ஏட்ரியல் கணு எங்கு காணப்படுகிறது?
வலது ஏட்ரிய சுவரில் உள்ள மேற்பெருஞ்சிரைத் துளையின் அருகில்
- இதயத்தின் பேஸ்மேக்கராக செயல்படுவது எது ?
சைனோ ஏட்ரியல் கணு
- எது இதயத்துடிப்புகளுக்கான மின் தூண்டலை தோற்றுவித்து இதய தசைகளின் சுருக்கத்தை தூண்டுகிறது?
சைனோ ஏட்ரியல் கணு
- சைனோ ஏட்ரியல் கணுவிலிருந்து மின் தூண்டல் அலைகள் எதற்கு பரவுகிறது?
ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் கணு
- ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் கற்றைகளை கண்டறிந்தவர் யார்?
ஹிஸ்
- இரத்தம் ஒவ்வொரு முறையும் தமனிகளுக்குள் உந்தப்படும் போது தமனிகள் விரிவடைவதை எவ்வாறு அழைக்கின்றோம்?
நாடித்துடிப்பு
- மனிதனின் இயல்பான நாடித்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு எத்தனை அளவு?
70 முதல் 90 முறைகள்
- ஓர் இதயத்துடிப்பு துவங்குவதற்கும் முடிவடைவதற்கும் இடைப்பட்ட வரிசைக்கிரமமாக நிகழ்வுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இதய சுழற்சி (கார்டியாக் சுழற்சி)
- ஒவ்வொரு இதய சுழற்சியும் எத்தனை வினாடிகளில் முடிவடையும்?
0.8 வினாடி
- ஒரு இதய சுழற்சி எந்தெந்த நிகழ்வுகளை உள்ளடக்கியது?
ஏட்ரியல் சிஸ்டோல்,வெண்ட்ரிக்குலார் சிஸ்டோல்,வெண்ட்ரிக்குலார் டயஸ்டோல்
- ஏட்ரியல் சிஸ்டோல் எத்தனை வினாடிகளில் நடைபெறும்?
0.1 வினாடி
- வெண்ட்ரிக்குலார் சிஸ்டோல் எத்தனை வினாடிகளில் நடைபெறும் ?
0.3 வினாடி
- வெண்ட்ரிக்குலார் டயஸ்டோல் எத்தனை வினாடிகளில் நடைபெறும் ?
0.4 வினாடி
- இதயத்தில் முதலில் ஏற்படுவது மற்றும் நீண்ட நேரத்திற்கு ஒலிக்கும் ஒலி எது?
லப்
- லப் ஒலி எதனால் உண்டாகிறது?
வென்ட்ரிகுலார் சிஸ்டோலின் ஆரம்ப நிலையில் மூவிதழ் மற்றும் ஈரிதழ் வால்வுகள் மூடுவதால்
- இதயத்தில் இரண்டாவதாக குறுகிய நேர காலமே ஒலிக்கும் ஒலி எது?
டப்
- அரைச்சந்திர வால்வுகள் மூடுவதால் ஏற்படும் ஒலி எது?
டப்
- தமனிகளின் வழியே ரத்தம் ஓடும் போது அத்தமனிகளின் பக்கவாட்டு சுவர் மீது ரத்தம் ஏற்படுத்தும் அழுத்தம் எவ்வாறு அழைக்கப்படும்?
ரத்த அழுத்தம்
- ரத்த அழுத்தம் எவ்வாறு் குறிப்பிடப்படுகிறது?
சிஸ்டோலிக் அழுத்தம் மற்றும் டயஸ்டோலிக் அழுத்தம்
- இடது வென்ட்ரிகிள் சுருங்கும்போது ரத்தம் பெருந்தமனிக்குள் மிக வேகமாக செலுத்தப்படுகிறது இந்நிகழ்வின் போது ஏற்படும் மிகை அழுத்தம் எவ்வாறு அழைக்கப்படும்?
சிஸ்டாலிக் அழுத்தம்
- இடது வென்ட்ரிகிள் விரிவடைதன் காரணமாக அழுத்தம் குறைவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
டயஸ்டாலிக் அழுத்தம்
- ஒரு ஆரோக்கியமான மனிதரில் ஓய்வாக உள்ள நிலையில் சிஸ்டாலிக் மட்டும் டயஸ்டாலிக் அழுத்தம் எந்த அளவில் காணப்படும்?
120mmHg/80mmHg
- தொடர்ந்து அல்லது அடிக்கடி இரத்த அழுத்தம் அதிகரித்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஹைபர்டென்சன் (உயர் இரத்த அழுத்தம்)
- குறைவான இரத்த அழுத்தம் நிலை எவ்வாறு அழைக்கப்படும்?
ஹைப்பொடென்ஷன் குறை அழுத்தம்
- மனித உடலின் உள்ளுறுப்புகள் ஏற்படுத்தும் ஒலிகளை கண்டறிய என்ன கருவி பயன்படுத்தப்படுகிறது?
ஸ்டெத்தாஸ்கோப்
- இரத்த அழுத்தத்தை கண்டறிய உதவும் மருத்துவ உபகரணம் எது ?
ஸ்பிக்மோமானோ மீட்டர்
- இரத்த வகைகளைக் கண்டறிந்தவர் யார் ?
காரல் லேண்ட்ஸ்டீனர்(1900)
- காரல் லேண்ட்ஸ்டீனர் எந்த ரத்த வகைகளை அடையாளம் கண்டறிந்தார்?
A,B மற்றும் O
- AB இரத்த வகையை கண்டறிந்தவர் யார்?
டிகாஸ்டிலோ மற்றும் ஸ்டய்னி(1902)
- மனித ரத்தத்தில் சில தனிச்சிறப்பு வாய்ந்த எவை காணப்படுகின்றன?
அக்ளூட்டினோஜென் அல்லது ஆன்டிஜென் மற்றும் அக்ளுட்டின் (அ) எதிர்ப்பொருள் ( ஆன்ட்டிபாடிகள்)
- இரத்த சிவப்பணுக்களின் மேற்பரப்பில் காணப்படுபவை?
ஆன்டிஜென்கள்
- ஆன்டிஜென் மட்டும் எதிர்ப்பொருள்கள் காணப்படுவதன் அடிப்படையில் மனித இரத்தத்தினை எத்தனை வகையாக பிரிக்கலாம்?
நான்கு:A,B,AB & O
- A வகை ரத்தத்தின் RBCயின் மேற்பரப்பில் காணப்படும் ஆன்டிஜென் எது ?
ஆன்டிஜென் A
- A வகை இரத்தத்தில், இரத்த பிளாஸ்மாவில் காணப்படும் ஆன்டிபாடி எது?
ஆன்டிபாடி B
- B வகை ரத்தத்தின் RBCயின் மேற்பரப்பில் காணப்படும் ஆன்டிஜென் எது ?
ஆன்டிஜென் B
- B வகை இரத்தத்தில், இரத்த பிளாஸ்மாவில் காணப்படும் ஆன்டிபாடி எது?
ஆன்டிபாடி A
- AB வகை ரத்தத்தின் RBCயின் மேற்பரப்பில் காணப்படும் ஆன்டிஜென் எது ?
ஆன்டிஜென் A&B
- A வகை இரத்தத்தில், இரத்த பிளாஸ்மாவில் காணப்படும் ஆன்டிபாடி எது?
ஆன்டிபாடி காணப்படாது
- O வகை ரத்தத்தின் RBCயின் மேற்பரப்பில் காணப்படும் ஆன்டிஜென் எது ?
ஆன்டிஜென் A மற்றும் B காணப்படாது
- O வகை இரத்தத்தில், இரத்த பிளாஸ்மாவில் காணப்படும் ஆன்டிபாடி எது?
ஆன்டிபாடி A மற்றும் B
- A இரத்தவகையினர் தங்களது ரத்தத்தை யாருக்கு வழங்கலாம்?
A மற்றும் AB
- A இரத்தவகையினர் யாரிடம் இருந்து ரத்தத்தை பெற்றுக்கொள்ளலாம்?
A மற்றும் O
- B இரத்தவகையினர் தங்களது ரத்தத்தை யாருக்கு வழங்கலாம்?
B மற்றும் AB
- A இரத்தவகையினர் யாரிடம் இருந்து ரத்தத்தை பெற்றுக்கொள்ளலாம்?
B மற்றும் O
- AB இரத்தவகையினர் தங்களது ரத்தத்தை யாருக்கு வழங்கலாம்?
AB
- AB இரத்தவகையினர் யாரிடம் இருந்து ரத்தத்தை பெற்றுக்கொள்ளலாம்?
A B,AB மற்றும் O (அனைவருக்கும்)
- O இரத்தவகையினர் தங்களது ரத்தத்தை யாருக்கு வழங்கலாம்?
A B,AB மற்றும் O
- O இரத்தவகையினர் யாரிடம் இருந்து ரத்தத்தை பெற்றுக்கொள்ளலாம்?
O மட்டும்
- பொருத்தமில்லா ஒரு ரத்த வகையை ஒருவர் பெறுவதினால் அவருக்கு என்ன ஏற்பட்டு அவர் இறக்க நேரிடலாம்?
இரத்தத் திரட்சி
- அனைவரிடமிருந்தும் ரத்தம் பெறுவோர் வகை என அழைக்கப்படும் இரத்த வகை எது?
ABஇரத்தம்
- இரத்தக் கொடையாளி என அழைக்கப்படும் ரத்த வகை எது?
O இரத்த வகை
- ரீசஸ் இனக் குரங்கின் ரத்தத்தை முயலின் உடலுக்குள் செலுத்தி உற்பத்தியான ஆன்டிபாடிகளை கொண்டு Rh காரணியை கண்டறிந்தவர்கள் யார்?
லேண்ட்ஸ்டீனர் மற்றும் வீனர் (1940)
- நிணநீர் மண்டலம் எவற்றை உள்ளடக்கி உள்ளது?
நிணநீர், நிணநீர் தந்துகிகள், நிணநீர் நாளங்கள், நிணநீர் முடிச்சுகள் மற்றும் நிணநீர்க் குழாய்கள்
- நிணநீர் முடிச்சுகள் என்ன வடிவம் உடையவை?
சிறிய முட்டை அல்லது பேரிக்காய் வடிவம்
- நிணநீர் தந்துகிகளின் செல் இடைவெளியில் என்ன காணப்படுகிறது?
நிணநீர்
- நிணநீர் எவற்றைக் கொண்டுள்ளது?
குறைந்த அளவு புரதம், மிகக் குறைந்த அளவு ஊட்டப்பொருட்கள், ஆக்சிஜன் கார்பன் டை ஆக்சைடு நீர் மற்றும் இரத்த வெள்ளை அணுக்கள்
- நிணநீரின் பணி என்ன?
இரத்தம் எடுத்துச் செல்ல இயலாத பகுதிகளுக்கு ஊட்டப் பொருட்களையும் மற்றும் ஆக்சிஜனையும் வழங்குகிறது
10TH BIOLOGY STUDY NOTES |தாவரங்கள் & விலங்குகளின் சுற்றோட்டம் | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services