- கொடூரமான ,வன்முறையான ,தீங்கு விளைவிக்கின்ற அல்லது காயம் ஏற்படுத்துகின்ற தாக்குதலுக்கு ஒருவரை மற்றொருவர் உள்ளாக்குவது எவ்வளவாறு அழைக்கப்படும்?
தவறான பயன்பாடு
- போக்சோ சட்டம் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
2012
- Pocsoன் விரிவாக்கம் என்ன?
Protection of children from sexual offences
- குழந்தை உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது ?
2007
- NCPCRன் விரிவாக்கம் என்ன?
National Commission for Protection of Child Rights
- எந்த சட்டத்தின் கீழ் குழந்தை உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம் அமைக்கப்பட்டது குழந்தை உரிமைகள் சட்டம்?
(CPCR) 2005
- ஒரு நபரின் உடல் மனம் ஆகியவற்றின் செயல்பாடுகளை உற்சாகப்படுத்துவதன் மூலமோ, மனச்சோர்வு அல்லது தொந்தரவுக்கு உள்ளாக்குவதன் மூலமோ,அந்நபரின் உடல் உயிரியல், உளவியல் அல்லது சமூக ரீதியிலான நடத்தையை மாற்றி அமைக்கும் மருந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?
போதை மருந்து
- சில வகையான மருந்துகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
மனோவியல் மருந்துகள்
- மூளையின் மீது செயல்பட்டு அவற்றின் செயல்பாடுகளான நடத்தை உணர்வறிநிலை ,சிந்திக்கும் திறன், அறிநிலை ஆகியவற்றை மாற்றி அமைக்க மருந்துகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
மனநிலை மாற்றும் மருந்துகள்
- மருந்துகளை உட்கொண்டு முழுவதுமாக அம்மருந்துகளை சார்ந்துள்ள நபர்களால் மருந்துகள் இன்றி உயிர் வாழ இயலாது இந்நிலையானது எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
மருந்தினைச் சார்ந்திருத்தல்
- மருந்துகளின் தவறான பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தல் மீதான சர்வதேச நாள் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
ஜூன் 26
- எந்த ஆண்டில் போதையூட்டும் மருந்துகள் மற்றும் மனோவியல் மருந்துகள் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது ?
1985
- எந்த ஆண்டு உலக சுகாதார நிறுவனம் மருந்துகளின் போதை அல்லது மருந்துகளின் தவறான பயன்பாடு என்ற வார்த்தைக்கு பதிலாக மருந்துகளை சார்ந்திருத்தல் என்ற வார்த்தையை பயன்படுத்த ஆலோசனை வழங்கியது?
1984
- புகையிலையானது எந்த புகையிலை தாவரங்களிலிருந்து பெறப்படுகிறது?
நிக்கோட்டியானா டொபாக்கம் மற்றும் நிக்கோட்டியானா ரஸ்டிகா
- புகையிலையில் இருக்கும் என்ன ஆல்கலாய்டு புகையிலைக்கு ஒருவர் அடிமையாதலை ஏற்படுத்துகிறது?
நிக்கோட்டின்
- புகை பிடித்தலின் போது வெளிப்படும் புகையில் என்ன புற்றுநோய்க் காரணிகள் நுரையீரல் புற்றுநோயை உண்டாக்குகின்றன?
பென்சோபைரின் மற்றும் பாலி சைக்கிளிக் ஹைட்ரோகார்பன்கள்
- புகைப்பிடித்தலினால் தொண்டை மற்றும் மூச்சுக்குழலில் ஏற்படும் வீக்கம் எதற்கு வழிவகுக்கிறது?
மூச்சுக்குழல் அழற்சி(bronchitis) மற்றும் நுரையீரல் காசநோய்(pulmonary tuberculosis)
- நுரையீரலின் மூச்சு சிற்றறைகளில் ஏற்படும் வீக்கம் வாய் பரிமாற்றத்திற்கான மேற்பரப்பை குறைத்து என்ன நோயை உண்டாக்குகிறது?
எம்பைசீமா
- புகை பிடித்தலின் போது உண்டாகும் புகையில் உள்ள எது ரத்த சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபினுடன் பிணைப்பை ஏற்படுத்தி அதன் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் திறனை குறைகிறது?
கார்பன் மோனாக்சைடு
- ஆக்சிஜன் எடுத்தும் செல்லும் திறன் குறைவதால் உடல் திசுக்களில் என்ன நோயை உண்டாக்குகிறது?
ஹைப்பாக்சியா
- எந்த ஆண்டு உலக சுகாதார நிறுவனம் போதை என்ற வார்த்தையை பயன்படுத்த ஆலோசனை வழங்கியது?
1984
- புகையிலை எதிர்ப்பு சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது ?
மே 1 2004
- உலக அளவில் ஆண்டுக்கு எவ்வளவு அளவில் புகையிலை இறப்பினை ஏற்படுத்துவதாக எதிர்பார்க்கப்படுகிறது?
10மில்லியன்
- உலகப் புகையிலை எதிர்ப்பு நாளாக கருதப்படுவது?
மே 31
- மதுவினால் கல்லீரலில் அதிக அளவு கொழுப்பு சேமிக்கப்பட்டு என்ன நோயை உண்டாக்குகிறது ?
சிரோசிஸ் மற்றும் நார்திசுக்கள் உருவாதல்
- டயாபட்டீஸ் மெல்லிடஸ் என்பது எந்த மொழிச்சொல்?
கிரேக்கம்
- டயாபடீஸ் என்ற கிரேக்க வார்த்தையின் பொருள் என்ன? ஓடுகின்ற
- மெல்லிட்டஸ் என்ற வார்த்தையின் பொருள் என்ன?
இனிப்பு
- IDDMன் விரிவாக்கம் என்ன?
Insulin Dependent Diabetes Mellitus
- நீரிழிவு நோயாளிகளில் எத்தனை சதவீதம் பேர் வகை ஒன்று இன்சுலின் நோயைச் சார்ந்தவர்கள்?
10%-20%
- குழந்தைகள் மற்றும் இளம் வயதினரிடையே ஏற்படும் நீரிழிவு நோய் எது ?
வகை ஒன்று இன்சுலின் சார்ந்த நீரிழிவு நோய்
- வகை1 இன்சுலின் சார்ந்த நீரிழிவு நோய் எதன் காரணமாக ஏற்படும்?
கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் அழிவதன் காரணமாக
- போதுமான அளவு இன்சுலின் சுரக்காமல் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிப்பதற்கு பெயர் என்ன ?
ஹைப்பர்கிளைசீமியா
- வகை1 இன்சுலின் சார்ந்த நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு காரணங்கள் என்னென்ன?
மரபணு மரபுவழி மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள்(வைரஸ் காரணமாக தொற்றுகள், கடுமையான மன அழுத்தம்)
- வயதானோரின் நீரிழிவு நோய் என அழைக்கப்படுவது எது?
வகை 2 இன்சுலின் சாராத நீரிழிவு நோய்
- NIDDMன் விரிவாக்கம் என்ன?
Non insulin dependent Diabetes mellitus
- கணையத்தில் சுரக்கப்படும் இன்சுலின் அளவு போதுமானதாக இருந்து, அதன் செயல்பாடு குறைவாக உள்ளதாக காணப்பட்டால் உருவாகும் நீரிழிவு நோய் எது?
வகை 2 இன்சுலின் சாராத நீரிழிவு நோய்
- வகை 2 இன்சுலின் சாராத நீரிழிவு நோய்க்கான காரணங்கள் என்னென்ன?
வயது அதிகரித்தல் ,உடல் பருமன், உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை, அளவுக்கு அதிகமாக உண்ணுதல், உடல் செயல்பாடுகள் இல்லாமை
- இந்தியாவில் எத்தனை பேரில் ஒருவர் நீரிழிவு நோயாளி?
8 பேரில் ஒருவர்
- உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரப்படி 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் எவ்வளவு நீரிழிவு நோயாளிகள் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது?
57.2 மில்லியன்
- இந்தியாவில் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான சராசரி வயது என்ன?
40
- பிற நாடுகளில் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான சராசரி வயது என்ன?
55
- 2030ல் இழப்பை ஏற்படுத்துகின்ற காரணிகளில் நீரிழிவு நோய் எத்தனையாவதாக திகழுமென உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது?
ஏழாவதாக
- நீரிழிவு நோய்க்கான முக்கிய அறிகுறிகள் எவை ?
ஹைபர்களைசீமியா,பாலியூரியா,பாலிடிப்சியா,கிளைகோசூரியா,பாலிபேஜியா, சோர்வு மற்றும் எடை இழப்பு
- ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரித்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
ஹைபர்களைசீமியா
- அதிகளவு சிறுநீர் வெளியேறுதல் மற்றும் அதனால் ஏற்படும் நீர் இழப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
பாலியூரியா
- நீரினால் ஏற்படும் தாகம் மற்றும் அதனை தொடர்ந்து அதிக அளவு நீர் பருகுதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பாலிடிப்சியா
- அதிகப்படியான குளுக்கோஸ் சிறுநீரில் வெளியேற்றப்படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது? கிளைகோசூரியா
- அதிகப்படியான குளுக்கோஸ் சிறுநீரில் வெளியேறுவதன் காரணமாக ஏற்படும் அதிகப்படியான பசியை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
பாலிபேஜியா
- உலக சுகாதார நிறுவன அளவீட்டின்படி உணவு உண்ணா நிலையில் இரத்த குளுக்கோசின் அளவு எதனை விட அதிகமாக இருந்தால் டயாபட்டீஸ் கண்டறிந்து உறுதிப்படுத்துதல் அவசியமானதாகும்?
140 மிகி / டெசிலி
- உலக சுகாதார நிறுவன அளவீட்டின்படி உணவு உண்ணா நிலையில் சீரற்ற இரத்த குளுக்கோசின் அளவு எதனை விட அதிகமாக இருந்தால் டயாபட்டீஸ் கண்டறிந்து உறுதிப்படுத்துதல் அவசியமானதாகும்?
200 மிகி/டெசிலி
- நீரிழிவு நோயை தடுக்க மற்றும் கட்டுப்படுத்த மொத்த கலோரி மதிப்பில் எத்தனை சதவீத அளவு கார்போஹைட்ரேட் மூலம் பராமரிக்கப்பட வேண்டும்?
50- 55%
- நீரிழிவு நோயை தடுக்க மற்றும் கட்டுப்படுத்த மொத்த கலோரி மதிப்பில் எத்தனை சதவீத அளவு அத்தியாவசியமான அமினோ அமிலங்களை புரதம் மூலம் பெற வேண்டும்?
10-15%
- நீரிழிவு நோயை தடுக்க மற்றும் கட்டுப்படுத்த மொத்த கலோரி மதிப்பில் எத்தனை சதவீதம் கொழுப்பை கொண்டிருக்கவேண்டும்?
15 -25%
- கரையாத நார்ச்சத்து கொண்ட ஆளி விதைகள் ,கொய்யா ,தக்காளி மற்றும் கீரைகள் எதனை குறைப்பதில் உதவுகின்றன?
ரத்த சர்க்கரை அளவு
- அளவுக்கதிகமாக உண்ணுகின்ற ஒவ்வொரு 7 கலோரி உணவிலும் எத்தனை கிராம் கொழுப்பு உடலில் சேகரமாகிறது?
ஒரு கிராம்
- அடிப்போஸ் திசுக்களில் அதிகமாக சேரும் கொழுப்பு உடல் எடையை எத்தனை சதவீத அளவுக்கு கூட்டுகிறது?
20-25%
- சராசரி உடல் எடையைவிட எத்தனை சதவீதத்திற்கும் அதிகமான எடை கொண்டவர்கள் அதிக எடை உடையோர் என அழைக்கப்படுகின்றனர்?
10 சதவீதம்
- சராசரி உடல் எடையைவிட எத்தனை சதவீதத்திற்கும் அதிகமான எடை கொண்டவர்கள் உடல் பருமன் என அழைக்கப்படுகின்றனர்?
10 சதவீதம்
- உடற்பருமன் குறியீடு எவ்வாறு அளவிடப்படுகிறது ?
BMI=எடை(கிகி)/ உயரம்(மீ²)
- உடல் பருமனுக்கான காரணிகள் என்னென்ன?
மரபியல் காரணிகள் ,உடல் உழைப்பின்மை, உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் நாளமில்லா சுரப்பி காரணிகள்
- இதயக் இரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் படிவதால் ஏற்படும் நோய் எது?
இதய குழல் நோய் (கரோனரி இதய நோய்)
- கொழுப்பு படிதலானது பெரிய மற்றும் நடுத்தர அளவுடைய தமனிகளைச் சுருங்க செய்வதன் மூலம் என்ன நோய்க்கு வழிவகுக்கிறது?
ஆர்த்ரோஸ்கிளிரோசிஸ்
- இதயத் தசைகளுக்கு குறைவான ரத்த ஓட்டம் செல்லுவது எவ்வாறு் அழைக்கப்படும் ?
இஸ்கிமியா
- இந்தியர்களின் ரத்தத்தில் இருக்க வேண்டிய விரும்பத்தக்க கொழுப்பின் அளவு எவ்வளவு?
200 மிகி/டெசிலி
- ரத்தத்தில் கொழுப்பின் அளவு 200 லிருந்து எவ்வளவு அதிகரிக்கும்போது இதயகுழல் நோய்காண ஆபத்தும் அதிகரிக்கிறது?
300 மிகி/டெசிலி
- இதய நோய்க்கான முக்கிய காரணம் மற்றும் பங்களிப்பு காரணிகளாக இருப்பவை?
ஹைபர்கொலஸ்டீரோலீமியா மற்றும் மிகை ரத்த அழுத்தம்
- அதிக அடர்த்தி கொண்ட லிப்போ புரதம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
(HDL)நல்ல கொலஸ்ட்ரால்
- இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கும் லிப்போ புரதம் எது ?
குறை அடர்த்திக்கொண்ட லைப்போ புரதம்(LDL)
- உலக அளவில் ஆண்டுதோறும் எத்தனை மில்லியன் மக்கள் புற்றுநோய் காரணமாக இருக்கின்றனர்?
4 மில்லியன்
- புற்றுநோய் என்ற சொல்லுக்கு லத்தீன் மொழியில் என்ன பொருள்?
நண்டு
- புற்றுநோய் பற்றி படிக்கும் படிப்பின் பெயர் என்ன? ஆன்காலஜி
- ஆன்காலஜி என்னும் சொல்லில் ஆன்கோ என்பதன் பொருள் என்ன?
கட்டி
- கட்டுப்பாடற்ற அபரிமிதமான செல் பிரிதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
புற்றுநோய்
- புற்று செல்கள் உடலில் தொலைவிலுள்ள பாகங்களுக்கும் இடம் பெயர்ந்து புதிய திசுக்களை அழிக்கின்றன .இந்நிகழ்வுக்கு என்ன பெயர் ?
மெட்டாஸ்டாசிஸ்
- மெட்டாஸ்டாசிஸ்ஸினால் அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாகும் உறுப்புகள் என்னென்ன?
நுரையீரல், எலும்புகள், கல்லீரல் ,தோல் மற்றும் மூளை
- உலகப் புற்றுநோய் நாள் எது?
பிப்ரவரி- 4
- தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள் எது?
நவம்பர் 7
- எபிதீலியல் மட்டும் சுரப்பிகளின் திசுக்களில் உருவாகும் புற்றுநோய் எது?
கார்சினோமா
- கார்சினோமா புற்றுநோய் எந்த உறுப்புகளில் ஏற்படும்?
தோல் ,நுரையீரல், வயிறு மற்றும் மூளை
- புற்றுநோய்கள் சுமார் எத்தனை சதவீதம் கார்சினோமா புற்றுநோய் வகையைச் சார்ந்தவை?
85%
- இணைப்பு மற்றும் தசை திசுக்களில் உருவாகும் புற்றுநோய் எந்த வகையைச் சார்ந்தது?
சார்கோமா
- சார்கோமா புற்றுநோய் உடலில் எந்தப் பகுதிகளில் ஏற்படலாம்?
எலும்பு, குருத்தெலும்பு, தசைநாண்கள்,அடிப்போஸ் திசு மற்றும் தசைகள்
- புற்றுநோயில் எத்தனை சதவீதம் சார்கோமா வகையைச் சார்ந்தவை?
1%
- உறுப்புகளுக்கு உள்ளாகவே பாதிப்பை ஏற்படுத்தும் உடலின் மற்ற பாகங்களுக்கு பரவாத கட்டி எது?
தீங்கற்ற அல்லது மேலிக்னன்ட் வகை அல்லாத கட்டிகள்
- பெருக்கமடைந்த செல் குழுக்கள் வேகமாக வளர்ச்சியடைந்து சுற்றியுள்ள இயல்பான திசுக்களில் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்துவது?
மேலிக்னன்ட் கட்டிகள்
- எலும்பு மஜ்ஜை மற்றும் நிணநீர் முடிச்சுகளில் இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது என்ன வகை புற்றுநோய் ?
லியூகேமியா
- லியூகேமியா என்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இரத்த புற்றுநோய்
- இரத்த புற்று நோய் பொதுவாக எத்தனை வயதுக்கும் குறைவான குழந்தைகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது?
15 வயது
- புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கார்சினோஜென்கள் அல்லது புற்றுநோய் காரணிகள்
- அதிகளவு புகைபிடித்தலினால் என்ன புற்றுநோய் உண்டாகிறது?
நுரையீரல் ,வாய் ,தொண்டை மற்றும் குரல்வளை
- வெற்றிலை மட்டும் புகையிலை மெல்லுதல் என்ன புற்றுநோயை ஏற்படுத்துகிறது?
வாய்ப் புற்றுநோய்
- தோலின் மீது படும் அதிக சூரிய ஒளியினால் என்ன புற்றுநோய் ஏற்படுகிறது?
தோல் புற்றுநோய்
- என்ன வேதியியல் காரணிகள் புற்று நோய் தூண்டுகின்றன?
புகையிலை, காஃபின், நிலக்கரி மற்றும் எண்ணெய் ஆகியவற்றை எரிப்பதால் உருவாகும் பொருட்கள் ,பூச்சிக்கொல்லிகள், கல்நார் ,நிக்கல் சில சாயங்கள் & செயற்கை இனிப்பூட்டிகள்
- புற்றுநோயை உண்டாக்கும் வைரஸ்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
ஆன்கோஜெனிக் வைரஸ்கள்
- புற்றுநோய் மருந்துகளை உள்ளடக்கிய புற்றுநோய் சிகிச்சையின் பெயர் என்ன?
கீமோதெரபி
- உயிரியல் துலங்கல் மாற்றிக்களான் எவை தடைக்காப்பு மண்டலத்தை தூண்டுவதன் மூலம் கட்டிகளை அழிக்கின்றன?
இன்டர்பெரான்கள்
- எச்ஐவி ஆராய்ச்சி மற்றும் சிகிச்சையின் முன்னோடி யார்?
டாக்டர். சுனிதி சால்மோன்
- டாக்டர் சுனிதி சாலமன் சென்னையில் எப்போது எய்ட்ஸ் ஆராய்ச்சிகளுக்கான முதல் தன்னார்வ சோதனை மற்றும் ஆலோசனை மையங்களை ஏற்படுத்தினார்?
1980 களில்
- எந்த ஆண்டு இந்தியாவில் முதன்முதலில் எச்.ஐ.வி தொற்றுக்கான ஆதாரத்தை ஆவணப்படுத்தினார்கள்?
1985
- இந்தியாவின் முதல் எய்ட்ஸ் நோயாளி எந்த நகரத்தைச் சேர்ந்தவர்?
சென்னை
- எய்ட்ஸ் நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?
நோய் எதிர்ப்பாற்றல் குறைதல், நிணநீர் முடிச்சுகள் வீக்கம், மூளைச் சேதம், நினைவாற்றல் குறைவு ,பசியின்மை, எடை குறைதல் காய்ச்சல், நீடித்த வயிற்றுப்போக்கு, இருமல் ,சோம்பல் ,தொண்டை வலி ,வாந்தி, நுண்கிருமிகளால் நோய்த்தொற்று மற்றும் தலைவலி
- எச்ஐவி வைரஸை எந்த சோதனை மூலம் உறுதிப்படுத்தலாம்?
எலைசா மற்றும் வெஸ்டர்ன் பிளட்
- உலக எய்ட்ஸ் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
டிசம்பர் 1
10TH BIOLOGY STUDY NOTES |உடல்நலம் & நோய்கள்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services