- அதிக மகசூல் தரும் பயிர் வகைகள் மற்றும் நவீன விவசாய நுட்பங்கள் மூலம் உணவு உற்பத்தியை அதிகரிக்கும் செயல் முறைக்கு என்ன பெயர் ?
பசுமை புரட்சி
- பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
டாக்டர் நார்மன் போர்லாக்
- நார்மன் போர்லாக் எந்த நாட்டைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி?
அமெரிக்கா
- டாக்டர் நார்மன் போர்லாக் எந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார் ?
1970
- டாக்டர் போர்லாகுடன் இணைந்து இந்தியாவில் மெக்சிகன் கோதுமை வகைகளை அறிமுகம் செய்து பசுமை புரட்சியை கொண்டு வந்தவர் யார்?
டாக்டர் மா.சா சுவாமிநாதன்
- இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார் ?
மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன்
- மெக்சிகோவின் அதிக மகசூல் பெறும் அரைக்குள்ள உயரமுடைய கோதுமை வகைகள் இருந்து என்ன கோதுமை வகைகள் உற்பத்தி செய்யப்பட்டன?
சோனாலிகா மற்றும் கல்யாண் சோனா
- எந்த நாட்டைச் சேர்ந்த சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் ஐ ஆஅ 8 (அதிசய அரிசி) என்ற அதிக மகசூல் தரும் அரைக்குள்ள நெல் வகையை உற்பத்தி செய்தது?
பிலிப்பைன்ஸ் நாடு
- ஐ ஆர் 8 எந்த ஆண்டு முதன் முதலில் பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டது ?
1966
- ஐ ஆர் 8 எந்த நெல் வகைகள் இணைந்து உருவான கலப்பினம் ?
இந்தோனேசியாவின் பீட்டா மற்றும் சீனாவின் டீ-ஜியோ-வூ-ஜென்
- கோ.நம்மாழ்வாரின் காலகட்டம் என்ன?
1938- 2013
- கோ நம்மாழ்வார் உருவாக்கிய அறக்கட்டளை எது?
நம்மாழ்வார் -உயிர் சூழல் நடுவம், உலக உணவு பாதுகாப்பிற்கான பண்ணை ஆராய்ச்சி மையம்
- எந்த கோதுமை ரகம் இலை மற்றும் பட்டை துரு நோய் ,ஹில்பண்ட் முதலிய நோய்களுக்கு எதிரான எதிர்ப்பு தன்மையை பெற்றுள்ளது?
ஹிம்கிரி
- எந்த காலிஃபிளவர் ரகம் கருப்பு அழுகல் நோய்களுக்கு எதிரான எதிர்ப்பு தன்மையை பெற்றுள்ளது?
பூசா சுப்ரா,பூசா பனிப்பந்து K-1
- எந்த தட்டைப்பயறு ரகம் பாக்டீரிய கருகல் நோய்களுக்கு எதிரான எதிர்ப்பு தன்மையை பெற்றுள்ளது?
பூசா சுப்ரா,பூசா பனிப்பந்து K-1
- எந்த கடுகு ரகம் உறிஞ்சி உண்ணும் பூச்சியான அசுவினி முதலிய பூச்சி/தீங்குயிரிகளுக்கு எதிர்ப்புத் தன்மை பெற்றுள்ளது?
பூசா கவுரவ்
- எந்த அவரைக்காய் ரகம் இலைத்தத்துப்பூச்சி, அசுவினி ,கனி துளைப்பான் முதலிய பூச்சி/தீங்குயிரிகளுக்கு எதிர்ப்புத் தன்மை பெற்றுள்ளது?
பூசா செம்-2,பூசா செம்-3
- எந்த வெண்டை ரகம் தண்டு மற்றும் கனித்துளைப்பான் முதலிய பூச்சி/தீங்குயிரிகளுக்கு எதிர்ப்புத் தன்மை பெற்றுள்ளது?
பூசா சவானி ,பூசா A4
- விரும்பத்தக்க ஊட்டச் சத்துக்களான வைட்டமின்கள் ,புரதங்கள் மற்றும் கனிமங்கள் நிறைந்த பயிர் தாவரங்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் அறிவியல் முறைக்கு என்ன பெயர்?
உயிரூட்டச்சத்தேற்றம்
- உயிரூட்டச்சத்தேற்றம் மூலம் லைசின் மற்றும் அமினோ அமிலம் செறிந்த கலப்பின மக்காச்சோள ரகங்கள் என்னென்ன?
புரோட்டினா, சக்தி மற்றும் ரத்னா
- உயிரூட்டச்சத்தேற்றம் மூலம் புரதம் செரிந்த கோதுமை ரகம் எது?
அட்லஸ் 66
- அதிக மகசூல் தரும் தாவர வகைகளில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அறிமுகம் செய்யப்படும் தாவரங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
அயல் இனங்கள்
- புறத்தோற்றத்தை அடிப்படையாகக்கொண்டு சிறந்த தாவர ரகங்களை தாவர கூட்டத்திலிருந்து பிரித்தெடுக்கும் பழம்பெரும் முறைக்கு என்ன பெயர் ?
தேர்வு செய்தல்
- எத்தனை வகையான தேர்வு முறைகள் உள்ளன?
மூன்று: கூட்டு தேர்வு முறை, தூய வரிசைத் தேர்வு முறை போத்துத் தேர்வு முறை(குளோனஸ் தேர்வு முறை)
- கூட்டுத் தேர்வுமுறை செயல்முறை எத்தனை தலைமுறைகளுக்கு தொடர்ந்து செய்யப்படுகிறது?
ஏழு அல்லது எட்டு தலைமுறைகள்
- தனி உயிரியில் இருந்து தற்காப்பு மூலம் பெறப்பட்ட சந்ததி எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
தூய வரிசை
- தூய வரிசை வேறு எவ்வாறு அழைக்கப்படு?
தனித் தாவரத் தேர்வு
- ஒரு தனி தாவரத்திலிருந்து உடல இனப்பெருக்கம் அல்லது பாலில்லா இனப்பெருக்கத்தின் மூலம் உருவாக்கப்பட்ட தாவரங்களின் கூட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
குளோன்கள்
- உடலப் பெருக்கத்தின் மூலம் உருவான பல் வகைத் தாவரங்களின் கூட்டத்திலிருந்து விரும்பத்தக்க போத்துக்களை தேர்வு செய்யும் முறைக்கு என்ன பெயர்?
போத்து தேர்வு முறை
- பாலினப் பெருக்கம் செய்யும் தாவரங்களின் உடல செல்களில் இரண்டு முழுமையான தொகுதி குரோமோசோம்கள் உள்ளன ?
இரண்டு
- இரண்டு முழுமையான தொகுதி குரோமோசோம்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
இரட்டை மயம்
- இன செல்களில் ஒரே ஒரு தொகுதி குரோமோசோம் மட்டும் உள்ளது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஒற்றை மயம்
- இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதி குரோமோசோம்களைக் கொண்ட உயிரினம் என்று அழைக்கப்படும்?
பன்மயம்
- ஒரு உயிரினத்தின் டிஎன்ஏவின் நியூக்ளியோடைடு வரிசையில் திடீரென ஏற்படும், பாரம்பரியத்துக்கு உட்படும் மாற்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சடுதி மாற்றம்
- சடுதி மாற்றத்திற்கு உட்படும் உயிரினம் எவ்வாறு அழைக்கப்படும்?
சடுதி மாற்றமுற்ற உயிரினம்
- இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அணுசக்தி ஆற்றலை பயிர் முன்னேற்றத்திற்காக பயன்படுத்தும் ஒரு கருத்தாக்கம் எது?
காமாத் தோட்டம் அல்லது அணுப் பூங்கா
- காமாத் தோட்டம் அல்லது அணுப் பூங்கா என்பது என்ன வகையான பயிர் பெருக்க முறையாகும்?
தூண்டப்பட்ட சடுதிமாற்றப் பயிர் பெருக்க முறை
- எந்த தனிமத்தில் இருந்து வரும் காமா கதிர்கள் பயிர் தாவரங்களில் விரும்பத்தக்க சடுதி மாற்றங்களை கொண்டுவரப் பயன்படுத்தப்பட்டன?
கோபால்ட் 60 அல்லது சீசியம்- 137
- சடுதி மாற்றத்தை தூண்டும் காரணிகள் எவ்வாறு அழைக்கப்படும்?
மியூடாஜென்கள் அல்லது சடுதி மாற்றத் தூண்டிகள்
- இயற்பியல் சடுதி மாற்றம் தூண்டிகள் என்னென்ன?
எக்ஸ் கதிர்கள், ஆல்பா, பீட்டா, காமா கதிர்கள், புற ஊதாக் கதிர்கள் மற்றும் வெப்பநிலை
- சடுதி மாற்றத்தை தூண்டும் வேதிப்பொருட்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
வேதியியல் சடுதி மாற்றத் தூண்டிகள்
- வேதியியல் சடுதி மாற்றம் துண்டிகளுக்கு எடுத்துக்காட்டு?
கடுகு வாயு மற்றும் நைட்ரஸ் அமிலம்
- எந்த கோதுமை ரகத்திலிருந்து காமாக்கதிர்களை பயன்படுத்தி சர்பதி ஸொனாரா என்ற கோதுமை ரகம் உருவாக்கப்பட்டது?
ஸொனாரா-64
- சடுதி மாற்ற பயிர் பெருக்கத்தின் மூலம் உவர் தன்மையைத் தாங்கும் திறன் மற்றும் தீங்குயிரி எதிர்ப்புத் தன்மை பெற்ற அரிசி ரகம் எது?
அட்டாமிட்டா 2
- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வகைத் தாவரங்களை கலப்பு செய்து அவற்றின் விரும்பத்தக்க பண்புகளை கலப்புயிர் என்ற ஒரே சந்ததியில் கொண்டு வரும் செயல் முறைக்கு என்ன பெயர்?
கலப்பினமாக்கம்
- மனிதன் உருவாக்கிய முதல் கலப்பின தானியம் எது?
டிரிட்டிக்கேல்
- டிரிட்டிக்கேல் எவற்றைக் கலப்பு செய்ததால் கிடைக்கப்பெற்றது?
கோதுமை (டிரிட்டிகம் டியூரம்) மற்றும் ரை(சீகேல் சிரியேல்)
- ஒரே சிற்றினத்திற்குள்ளே, ஒரு பொது மூதாதையரிடமிருந்து தோன்றிய விலங்குகளின் குழு எவ்வாறு அழைக்கப்படும்?
இனம்
- சில சிறப்பான பண்புகளை கொண்ட வெவ்வேறு வகையான பெற்றோர்களை கலப்பு செய்து அத்தகு விரும்பத்தக்க பண்புகள் அடுத்த சந்ததிக்கு கடத்தப்படுவதற்கு என்ன பெயர் ?
இனக்கலப்பு
- ஒரே இனத்தை சேர்ந்த தொடர்புடைய விலங்குகளுக்கு இடையே நடைபெறக்கூடிய கலப்பை எவ்வாறு அழைக்கப்படும்?
உட்கலப்பு
- தொடர்பற்ற உயிரினங்களை கலப்பு செய்வதற்கு என்ன பெயர் ?
வெளிக்கலப்பு
- பஞ்சாபை சேர்ந்த ஹிஸ்ஸர்டேல் என்ற புதிய செம்மறி ஆட்டினை எவற்றை கலப்பினம் செய்து உருவாக்கப்பட்டது?
பிக்கானரின் (மாக்ரா) மற்றும் ஆஸ்திரேலியாவின் மரினோ
- தொடர்ச்சியாக ஒரு இனத்தின் தொடர்புடைய விலங்குகளிடையே ஒரு கலப்பு செய்வது அதன் பாலின வளத்தையும் மற்றும் உற்பத்தித் திறனையும் பாதிப்புக்குள்ளவதற்கு என்ன பெயர் ?
உட்கலப்பு வீழ்ச்சி
- கலப்பின சேர்க்கை மூலம் உயர்தர பண்புகளை உடைய கலப்பின உற்பத்தி செய்வது எவ்வாறு அழைக்கப்படும்?
ஹெட்டிரோசிஸ் அல்லது கலப்பின வீரியம்
- ஜீன்களை நாம் விரும்பியபடி கையாள்வதும் புதிய உயிர்களை உருவாக்க ஜீன்களை ஒரு உயிரியிரிலிருந்து மற்றொரு உயிரிக்கு இடம்மாற்றுதலும் எவ்வாறு அழைக்கப்படும்?
மரபுப் பொறியியல்
- மரபுப் பொறியியல் நிகழ்வில் உருவாகும் புதிய டிஎன்ஏ எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சேர்க்கை டிஎன்ஏ
- மரபுப் பொறியியல் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மறுசேர்க்கை டி.என்.ஏ தொழில்நுட்பம்
- டிஎன்ஏ இழையினை குறிப்பிட்ட இடங்களில் துண்டிக்க பயன்படுவது எது?
ரெஸ்ட்ரிக்ஸன் நொதிகள்
- மூலக்கூறு கத்திரிக்கோல் என அழைக்கப்படுபவை எவை?
ரெஸ்ட்ரிக்ஸன் நொதிகள்
- துண்டிக்கப்பட்ட டிஎன்ஏ துண்டுகளை இணைக்க பயன்படுத்தப்படுவது எது?
லைகேஸ் நொதி
- பாக்டீரியா செல்லின் சைட்டோபிளாசத்தில் காணப்படும் குரோமோசோம் சாராத ,சிறிய ,வட்ட வடிவ இரண்டு இலைகளாலான டிஎன்ஏ எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பிளாஸ்மிடு
- ரெஸ்ட்ரிக்ஸன் நொதிகள் கார வரிசையில் உள்ள எந்தப் பிணைப்புகளைத் துண்டிப்பதன் மூலம் டிஎன்ஏவை துண்டிக்கிறது?
பாஸ்போடைஎஸ்டர் பிணைப்புகள்
- ஒரு உயிரினத்தின் நகல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
குளோன்
- மரபு ஒத்த உயிரிகளை பிரதிகளாக உற்பத்தி செய்யும் முறைக்கு என்ன பெயர் ?
குளோனிங்
- டாலி எப்போது குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டது?
ஜூலை மாதம் 1996
- டாலி குளோனிங் முறையில் யாரால் உருவாக்கப்பட்டது ? ஸ்காட்லாந்து நாட்டு ரோசலின் நிறுவனத்தைச் சார்ந்த டாக்டர். அயான் வில்மட் மற்றும் அவரது குழு
- டாலி செம்மறி ஆடு எத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்ந்தது?
ஆறரை ஆண்டுகள் (2003ஆம் ஆண்டு நுரையீரல் நோயினால் இறந்தது)
- rDNA தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள மருத்துவ பொருட்கள் என்னென்ன?
ரத்த சர்க்கரை நோய் சிகிச்சைக்கான இன்சுலின் , வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகளின் குறைபாட்டினை நீக்கும் மனித வளர்ச்சி ஹார்மோன், ஹீமோஃபீலியா என்ற ரத்தம் உறைதல் குறைபாட்டு நோய் க்கட்டுப்பாட்டிற்கான ரத்த உறைதல் காரணிகள் ,திசு பிளாஸ்மினோஜன் தூண்டி ரத்தக் கட்டிகளை கரைத்து இதய அடைப்பை தவிர்க்க, ஹெப்பாடிடிஸ் B மற்றும் வெறிநாய்க்கடி நோயைத் தடுக்கும் தடுப்பூசிகள்
- மனிதனில் குறைபாடுள்ள ஜீன்களுக்கு பதிலாக திருத்தப்பட்ட, செயல்படும் ஜீன்களை இடமாற்றி மரபு நோய்களையும்,குறைபாடுகளையும் சரி செய்வதற்கு என்ன பெயர்?
ஜீன் சிகிச்சை
- ஜீன் சிகிச்சை எந்த ஆண்டு வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்பட்டது?
1990
- உடல செல்களில் திருத்தப்பட்ட ஜீன்கள் இடம் மாற்றப்படுதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
உடல செல் ஜீன் சிகிச்சை
- கருநிலை அல்லது இனப்பெருக்க செல்களில் திருத்தப்பட்ட ஜீன்கள் இடம் மாற்றப்படுதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இன செல் அல்லது கருநிலை செல் ஜீன் சிகிச்சை
- மாறுபாடு அடையாத அல்லது சிறப்பு செல் வகைகளாக மாற்றமடையாத செல்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
குருத்தணுக்கள்
- எந்த வகை செல்கள் உடலின் எவ்வகை செல்லாகவும் மாற்றம் அடையும் திறன் பெற்றவை?
கருநிலை குருத்தணுக்கள்
- கருநிலை குருத்தணுக்கள் எங்கிருந்து பெறப்படுகின்றன?
கருக்கோளத்தின் உட்புறம்
- பிறந்த பச்சிளம் குழந்தைகளின் உடலிலும் பெரியவர்களின் உடலிலும் காணப்படும் குருத்தணுக்கள் எவை?
முதிர் குருத்தணுக்கள் அல்லது உடலக் குருத்தணுக்கள்
- முதிர் குருத்தணுக்களின் மூலங்களாக விளங்குபவை எவை?
தொப்புள் கொடி மற்றும் எலும்பு மஜ்ஜை
- நமது உடலின் செல்கள் திசுக்கள் மற்றும் உறுப்புகள் ஜீன்களின் கோளாறுகளினாலோ, நோய்களாலோ அல்லது விபத்தினாலோ நிரந்தரமாக சேதம் அடையும் பொழுது அந்த குறைபாடுகளை சரிசெய்ய என்ன சிகிச்சை பயன்படுகிறது ?
குருத்தணு சிகிச்சை
- பார்க்கின்சன் நோய் மற்றும் அல்சீமர் நோய் போன்ற நரம்பு சிதைவு குறைபாடுகளை குணப்படுத்த என்ன சிகிச்சை பயன்படுகிறது?
நரம்பு குருத்தணுக்கள்
- மனித ஜீனோம் எத்தனை கார இணைகளைக் கொண்டது ?
3 பில்லியன்
- இரு நபர்களின் மரபியல் வேறுபாடுகளை ஒப்பிட என்ன தொழில்நுட்பம் பயன்படுகிறது ?
டிஎன்ஏ விரல்ரேகை தொழில்நுட்பம்
- டிஎன்ஏ விரல்ரேகை தொழில்நுட்பத்தை வடிவமைத்தவர் யார் ?
அலக் ஜெஃப்ரே
- VNTRsன் விரிவாக்கம் என்ன?
Variable Number Taandem Repeat Sequences
- மனிதரில் பொதுவாக எத்தனை டிஎன்ஏ வரிசை தொடர்கள் அனைவருக்கும் பொதுவாக காணப்படும் ?
99% டி.என்.ஏ
- மனிதர்களில் பொதுவாக காணப்படும் 99% டி.என்.ஏ எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
மொத்த ஜீனோமிகா டிஎன்ஏ
- மனிதரில் வேறுபடும் ஒரு சதவீத டிஎன்ஏ எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
சாட்டிலைட் டி.என்.ஏ
- டி.என்.ஏ விரல் ரேகை தொழில்நுட்பம் எவற்றிற்கு பயன்படுகிறது?
குற்றவாளிகளை கண்டுபிடிக்க ,ஒரு குழந்தையின் தந்தையை அடையாளம் காண ,ஒரு உயிரின தொகையின் மரபியல் வேறுபாடுகள் பரிணாமம் மற்றும் இடம் ஆகியவற்றை அறிய
10TH BIOLOGY STUDY NOTES |இனகலப்பு & உயிரிதொழில்நுட்பம்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services